அணில் குட்டி அனிதா:- எங்க அம்மணி இருக்காங்களே.. ஒன்னு.. ஓவர் சீரியஸ்’ஸா எழுதி இவங்களும் டென்சன் ஆகி, அடுத்தவங்களையும் டென்சன் ஆக்கிடுவாங்க. இல்லையா...சொந்த கத சோகக்கதைய சொல்லி ஒரே அழுவாச்சி...தான் போங்க.சே..சே..சே.சே..தாங்க முடியலைங்க..!! வந்து படிக்கறவங்க எல்லாம் சும்மா அழுதுட்டு போறாங்கன்னு நினைக்கீறீங்களா.. அதான் இல்ல..மூக்கை வேற சிந்தி இங்கனயே போட்டுட்டு போறாங்க.. அத நான் தான் கிளீன் பண்ண வேண்டியதா இருக்கு.... என்னோட ரேஞ்சிக்கு இந்த மாதிரி வேல செய்றது எல்லாம்.. .ரொம்ப கேவலம்.. இருந்தாலும்.. என்ன பண்றது..... அம்மணிக்கிட்ட மாட்டியாச்சி.. ம்ம்..அதுக்கு மேல உங்களுக்கு தெரியும்..

சரி மேட்டருக்கு வரேன்.. திடமான மனசும் , உடம்பும் இருக்கறவங்க மட்டும் இதை படிங்க ..உங்க யாருக்காவது ஏதாவது ஆச்சின்னா நான் பொறுப்பு இல்ல.. ஆமா..சொல்லிப்புட்டேன்....

கவிதா அம்மணி இருக்காங்களே.. அவங்க எழுதறத வச்சி..நீங்க யாரும் அவங்களை தப்பு கணக்கு போடப்பிடாது..... பாவம் புண்ணியம் எல்லாம் பாக்கப்படாது..... உங்க வீட்டு திமிரு எங்க வீட்டு திமிரு இல்லைங்க அம்புட்டு திமிரும் சேந்த ஒரே ஆளு இந்த அம்மணி தான்..

உலக அழகி ஐஸ், சுஷ் ரேஞ்சுக்கு இவிங்க ஆகனும்னு .. என்ன என்னவோ செய்யறாங்க ஆனா எங்க (அதுக்கு எல்லாம் ஒரு மூஞ்சி வேணும் இல்ல).. கடைசியல.. வூட்டல கூட யாரும் இந்த மூஞ்சிய பாக்கறது இல்ல.. ஏதோ என் தல எழுத்து.. சோறு போடறாங்களேன்னு இவிங்க மூஞ்சிய (கொஞ்சம் பயத்தோடத்தான் ) பாத்துக்கிட்டு வரேன்..interact பண்ணிக்கிட்டு வரேன்..

இதுல கொஞ்ச நாளா கண்டிப்பா நான் உலக அழகியா.. ஆகத்தான் போறேன் ன்னு அம்மணி ஜிம்’ ல சேர்ந்துட்டாங்க........ (.அதுவும் எப்ப பாருங்க.....10 கழுத வயசுல.. பர்த்டே வந்தா இவங்களுக்கு எல்லாரும் கைத்தடி” பிரசன்ட் பண்றாங்க.இப்ப போயி..ஜிம்’ க்கு போய்க்கிட்டு ஹய்யோ.. ஹய்யோ..!! நீங்களும் அப்படி ஓரமா போய் சிரிச்சிட்டு வாங்க.. இங்க நின்னு சிரிச்சி..என்னைய மாட்டிவிடாதீங்க..!! ) சரி.. சிரிப்ப அடக்கிகிட்டு, மூஞ்சிய..அட உங்க மூஞ்சிய தாங்க.. ஒன்னுமே தெரியாத மாதிரி வச்சிக்கிட்டு படிக்கணும் சரியா............

ஜிம்’ல சேந்தாங்களா.. அங்க போய் இவங்க இருக்க வெயிட்டுக்கு ஒவ்வொரு மிஷின் லயும் ஏறினவொடனே.. பாவம் அது என்ன பண்ணும் , ஒரு நாள் தாங்குச்சி, 2 நாள் தாங்குச்சி....அதுக்கு மேல முடியமா.. .. ரிப்பேர் ஆகி போச்சி.. ஜிம்’க்கு சொந்தகாரங்க.. அம்மணி ரேஞ்சுக்கு நிறைய பொம்பளைங்கள பாத்து பழகி இருப்பாங்க போல.. அதனால.. மிஷின.. ரிப்பேர் பண்ண அனுப்பிட்டு.. கவிதாவ பாத்து “மேடம்..ப்ளீஸ் நீங்க இனிமே.. எல்லா மிஷின்’ லியும் work out பண்ணாதீங்க..” எங்களால அடிக்கடி ரிப்பேர் பண்ணமுடியாதுன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க…. அப்ப நீங்க எல்லாரும் அம்மணி மூஞ்சிய பாத்து இருக்கனுமே......... ஹஹஹா.. யப்பா........... தாங்க முடியாம..நான் அங்கேயே சிரிச்சி.வைக்க.. ..அம்மணிக்கு ஆத்திரம் வந்து.. என்னைய நய்ய பொடச்ச கத தனி.....

அங்க வர ஃபிகர் எல்லாம் (அப்படித்தான் சொல்லிக்கறாங்க.. ), ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு சைஸ்.. ..ஆனா..வரது என்னவோ.. சைஸ்’அ குறைக்கன்னு நினைச்சா..... .. வந்து ஒவ்வொருத்தரும் ஒரு மிஷின் ல செட்டாகிட்டு.. பேசுறாங்க பாருங்க கத.. யப்பா.. தாங்கல..

வூட்டுக்கார திட்டாத ஃபிகரே கிடையாது, சரி கல்யாணம் ஆகாத ஃபிகராவது ஏதாவது ஒழுங்கா பேசுதான்னு பார்த்தா.....அவிங்களும் வரப்போற வூட்டுகாரு எப்படி இருக்கனும்’னு கண்டிஷன்.. அடுத்து வேற யாரு.. மாமியாரு மாட்டுவாங்க.. ..அவங்கள கடிச்சி கொதறி துப்பினாத்தான் எல்லாருக்கும் ஒரு திருப்தி.. ஒருத்தர் ஆரம்பிப்பாங்க.. மாமியார்ன்னு.. அது..அப்படியே..கன்டிநியூ ஆகி.. அத்தன் ஃபிகர் மாமியாருரையும் மிஷினா நெனச்சி ஏறி மிதிக்க ஆரம்பிச்சிடாறாங்க..ப்பா..

ஒரு கொலைகாரக் கூட்டத்துக்குள்ள மாட்டிக்கிட்ட feeling எனக்குப்பா.. ஹய்யோ.. பொம்பலைங்களா..இவிங்க எல்லாம்..நம்பமுடியவில்லை நம்பமுடியவில்லை..இல்லை.....இல்லை... !!!

இதுல இன்னோரு சூப்பர் மேட்டர் என்னான்னா....ஜிம்’ க்கு.. மாமியாருக்கு தெரியாம வர ஃபிகர்’ங்க ஜாஸ்தி..

ஒரு நாள் என்ன ஆச்சி, மாமியாருக்கு தெரியமா.. ஒரு ஃபிகர் வர, அதே நேரம் பாத்து மருமகளுக்கு தெரியாம..மாமியாரும் அதே ஜிம்’க்கு வர.. இரண்டு பேரும்.. ஜிம்’ல மீட் பண்ணாங்க.. வாவ்.. அக்கினி நட்சத்திரம் பிரபு/கார்த்திக் மோதினமாதிரி ஒரு அக்னி கிளம்புச்சி அங்க.........இதுக்கு மேல என்ன நடந்து இருக்கும்னு நான் சொல்லனுமா.. நீங்களே.. முடிவு பண்ணுங்க..

அழகு ராணி, அதிரூப சுந்தரி வருங்கால ஐஸ் & சுஷ் கலந்த - கவிதா அங்கன இருந்து என்னைய முறைக்கறாங்க.. நான் வர்ட்ட்ட்டாஆஆஆஆ.....

பீட்டர் தாத்ஸ் :- Laugh at your obstacle and cry at your success.