உடன் பிறவா சகோதரி, சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள். இன்று “No - Tobacco Day” இன்றிலிருந்து புகை இலை/புகைபிடிக்கும் பழக்கத்தை விடுவதற்கு முயற்சி செய்யுங்கள் (அ) குறைத்து கொள்ளவாவது முயற்சி செய்யுங்கள். உங்களின் அன்பானவர்களுக்கு இதனை சொல்லுங்கள்.
புகை எதற்காக பிடிக்கிறீர்கள் என தெரிந்து கொள்ளவும் ஆசை.. அதற்கான சரியான விடை இன்னமும் எனக்கு தெரியவில்லை...பதிப்பை படிக்கும் அனைவரும், அதற்கான விளக்கத்தை இங்கு அளிக்கவும்.. உங்கள் பதிலிலிருந்து நான் என் அடுத்த பதிவை தொடருவேன்..
இந்த பதிப்பை படித்த..அனைவருக்கும்...நன்றி...
Anti-Tobacco Day – ஒரு வேண்டுகோள்..
Labels: சமூகம் 39 Comments
வலைப்பூடேட்டா
வலைப்பதிவர் பெயர்: கவிதா கெஜானனன் & அணில் குட்டி அனிதா
வலைப்பூ பெயர் : பார்வைகள்
சுட்டி(url) : http://www.kavithavinpaarvaiyil.blogspot.com
ஊர்: சென்னை
நாடு: இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: பெயர் வெளியிட, அறிமுகம் செய்தவரின் அனுமதி கிடைக்கவில்லை. & அணில் குட்டியை அனிதாவை அறிமுகம் செய்தவர் -கவிதா
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 04-ஏப்ரல்-2006
இது எத்தனையாவது பதிவு: 16ஆவது பதிவு
இப்பதிவின் சுட்டி(url): http://kavithavinpaarvaiyil.blogspot.com/2006/05/blog-post_29.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: எழுதம் ஆர்வத்தில்..& அணில் குட்டிக்கு எல்லார் கிட்டேயும் பேசி, கலாட்டா பண்ணனும்
சந்தித்த அனுபவங்கள்: நிறைய நல்ல எழுத்தாளர்களும், சமூகம் சார்ந்த நல்லுணர்வு மிக்க நல்ல மனிதர்களையும் பார்க்கிறேன். & அணில் குட்டிக்கு நிறைய சண்டை போட்ட அனுபவம் கிடைச்சிருக்கு
பெற்ற நண்பர்கள்: நிறைய..................& அணில் குட்டிக்கும் நிறைய..
கற்றவை: எதை எழுதக்கூடாது என்பதை..& அணில் குட்டி அதிகமாக வாய் பேசக்கூடாது என்பதை..(சந்தோஷ் சந்தோஷமாப்பா..)
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: சுதந்திரம் நிறைய இருக்கிறது, இன்னுமும் முழுதாக பயன்படுத்திகொள்ளவில்லை. & அணில் குட்டிக்கு அதிகமாக..பேசும் சுதந்திரம் போய்விட்டது.
இனி செய்ய நினைப்பவை: நிறைய எழுதவேண்டும், எழுத்தின் மூலம் ஒரு சிலரையாவது மாற்ற முயற்சி செய்ய வேண்டும்...& அணில் குட்டி கொஞ்சமா பேசியாவது அடுத்தவங்க உயிரை வாங்கனும்..
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: என்னை பற்றி....என் வலைத்தோழர்களை கேட்டால் ஏதாவது திட்டி தீர்ப்பார்கள் என நினைக்கிறேன்....& அணில் குட்டியை பற்றியும் தான்.
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: “மனிதர்களை மனிதர்களாக மதிக்காதவர்களை என் எழுத்தின் மூலமாவது கிழிக்க வேண்டும்..!”
(நன்றி தரண்) & அணில் குட்டி :- இப்பவெல்லாம் நல்ல taste ஆன கொய்யாபழம் கிடைக்கமாட்டேங்குது....
Labels: கதம்பம் 11 Comments
கூந்தலும்-கணவனும் குறும்பு கவிதை
முழுக்க மொட்டை அடிக்க முடியாது
முற்றிலும் உன்னை துறந்திடவும் முடியாது
அழுக்கு ஆயிரம் இருப்பினும், அடுத்தவர் அறியாது
அழகாய் சீவி அடுக்குமல்லி சூடிடுவாள் !
அங்கும் இங்கும் ஆடி ஆர்ப்பாட்டம் செய்யும்
தாங்காத பாரமாய் தலைவலிக்கும்
ஆனாலும் அன்பாய் ஆசையாய் அரவணைத்து
இழுத்து இறுக்கி முடித்திடுவாள் !
நெற்றியை வறுடி, கன்னத்தில் தவழ்ந்து
கழுத்தில் பரவி, இடுப்பையும் எட்டிப்பார்த்து
அடிக்கடி சூடாகி அடம்பிடிக்கும் குறும்பை
சலிப்பும், பொருமையுமாய் தாங்கிடுவாள் !
சிக்கல் சேர்ந்து சினம் காட்டும்
முகம் கோணி முரண்டு பிடிக்கும்
மிருதுவாய்த் தலைகோதி சிக்கல் தீர்த்து
சிலிர்ப்பை அடக்கி சிரிக்கவைப்பாள் இல்லாள் !
அணில் குட்டி அனிதா: அம்மனி என்ன?!..அங்க இங்கன்னு கடைசியில வூட்டுகாரர் மேலேயே கைய வைச்சிட்டீங்க..?!! அதுவும் அவரை தலை முடியோட உவமை படுத்திட்டீங்க..?!! இது உங்களுக்கே கொஞ்சம் over ஆ தெரியல..பாவம் அந்த மனுஷன்......ரொம்ப கஷ்டம்தான்...! .
பின்குறிப்பு:- ஓவியம் நம்ம கவிதாவோடது தாங்க..ஏதோ கொஞ்சம் இந்த மாதிரி கிறுக்கறது..அவங்களுக்கு பழக்கமா போச்சு..இந்த படம் அவங்க friend காக வரைந்தது..கூந்தலுக்கு matching matching ஆ இருக்குன்னு..நான் தான் attach பண்ணிட்டேன்.. எப்படி நம்ம idea?!!
Labels: கவிதை 38 Comments
மார்பகங்கள் இல்லா பெண்ணின் மன உளைச்சல்...
பெண்ணிற்கு மார்பகங்கள், குழந்தைக்கு உயிர்பாலூட்ட இறைவன் கொடுத்த அற்புதம் என்பதை தவிற அழகு, கவர்ச்சி என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தானே?. மார்பக புற்று நோய் மற்றும் கட்டி காரணங்களுக்காக பெண்கள் சிலர் மார்பகங்களை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள். திருமணத்திற்கு பிறகு இது நிகழ்ந்தால் அவசியம் என புரிந்து கொள்ளும் ஆண்கள், திருமணமாகத பெண்களை புரிந்து கொள்வது இல்லை, இப்பெண்கள் ஆண்களால் ஒதுக்கபடுவது வேதனையாக இருக்கிறது.
மற்றவர்களை போன்று நாம் இல்லையே என்ற தாழ்வு மனப்பான்மை ஒருபுறமும் , ஆண்களால் ஒதுக்கபடுவது மற்றொரு புறமும் எத்தனை மன அழுத்தத்தையும், பாரத்தையும் கொடுக்கிறது. செயற்கையாக இதற்காக தயாரிக்கப்படும் உள்ளாடைகள் அவர்களின் அழகை வேண்டுமானால் வெளிபார்வைக்கு சரிசெய்யலாம். ஆனால் உள்ளுணர்வுகளையும், வேதனையையும் சரிசெய்ய முடியுமா..?.
அப்படியே இந்த பெண்கள் திருமண மார்க்கெட்டில் விலைபோக வேண்டும் என்றால், ஏதோ ஒரு விதத்தில் குறையுடைய ஒருவர், மனைவி இழந்த ஆண்கள், தீராத வியாதிக்காரர், அல்லது வயதான ஒரு கிழவருக்கு இரண்டாந்தாரமாக வாழ்க்கை படவேண்டுயுள்ளது. நல்ல படிப்பு, வேலை, நல்ல உடல் நலத்துடன் இருக்கும் எந்த ஆடவரும் இந்த பெண்களை திருமணம் செய்து கொள்ள முன் வருவது இல்லை. இப்படி ஆண்களினால் நிராகரிக்கபடும் பெண்ணின் மன நிலை எப்படி இருக்கும்?. எத்தனை வேதனைப்படும்? தாழ்வுமனப்பான்மை அவர்களை தினம் தினம் கொல்லாதா?.. திருமணமே வேண்டாம் என்ற நிலைக்கு தள்ள படுகிறார்கள்.
சமீபத்தில் ஒரு பெண்கள் பத்திரிக்கையில், இந்த பிரச்சனையை மைய கருவாக கொண்ட திரைப்படத்தின் (கோவா திரைப்பட விழாவில் வெளியிட்டது) கதையை படித்தபோது மிகவும் உருக்கமாக இருந்தது. அந்த பெண் ஒரு ஆடவனால் எத்தனை அவமானத்திற்க்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகிறாள் என்பதை மிக அழுத்தமாக, யதார்த்தமான உணர்வுகளின் மூலம் சொல்லப்பட்டிருந்தது.
உணவு விடுதியில் வேலை செய்து கொண்டு,ஆடவர்களிடமிருந்து அரவே ஒதுங்கி இருக்கும் அந்த பெண், நடன அறையில் ஒரு ஆடவனால் வலிய நடனமாட இழுத்து செல்லப்படிகிறாள். விலகி போக நினைத்தாலும், விடாது அவளை அனைத்துக்கொண்டு நடனமாடுகிறான் அவன். முதன் முதலாக ஒரு ஆடவனின் நெருக்கம், அவனின் முத்தம் எல்லாம் இந்த பெண்ணின் பெண்மையை தூண்டிவிட, அவளது அறைக்கு அவனை அழைத்து செல்கிறாள், அவனின் அவசரத்தை தடுத்து தன் குறையை சொல்ல நினைக்கிறாள். ஆனால் அவனோ ஆவேசத்துடன், அவளை படுக்கையில் தள்ளி அனைக்கிறான், அவள் அதற்கு மேல் அவனை விடாது, தனக்கு புற்று நோய் காரணாமாக மார்பகங்கள் அகற்றுபட்டுவிட்டது என்று சொல்கிறாள்..இதை கேட்ட அடுத்த நொடி, அவளிடம் சாரி என்று, அருவருப்போடு சொல்லிவிட்டு, வேகமாக விலகும் அவன், ஏன் இதனை நான் உன்னை முத்தமிடுவதற்கு முன்பே சொல்லி தொலைக்காமல் விட்டாய், என்று திட்டிவிட்டு செல்கிறான்...இவளோ அவனிடம் நானாக உன்னிடம் வரவில்லை நீதானே என்னை அழைத்தாய், என்னை தவிக்க விட்டு விட்டு செல்லாதே என கெஞ்சுகிறாள், அழுகிறாள், பின்னால் துரத்தி செல்கிறாள். ஏதோ பிரச்சனை என்று நினைக்கும் அவளின் தோழிகள் அவனை வளைத்து பிடித்து பாய்லர் அறையில் அடைக்கிறார்கள். அவன் அதன் பிறகு எத்தனை கெஞ்சியும் விடாமல் உள்ளேயே அடைத்து வைக்கபடுகிறான். சிறைக்கொடுமை, பசி, தண்ணீர் கூட கிடைக்காத நிலையில் 2 நாட்களுக்கு மேல் அவனால் தாங்க முடியாத அவன், அவளுடன் சேர்ந்து தன் வாழ்நாளை கழிப்பதாக சத்தியம் செய்கிறான், ஆனால் அவனால் அவமானபட்ட அந்த பெண் அவனின் அந்த வார்த்தைக்கு அடிபனியாமல் இன்னமும் 2 நாள் இருக்கட்டும் அப்போது தான் புத்திவரும் என விட்டு விடுகிறாள். ஆனால் அவனோ தொடர்ந்து அன்பே ஆருயிரே என்று அன்பொழக கதர, அவள் இலகி, இப்படி ஒரு அன்பான வாழ்க்கை தனக்கு கிடைக்க போவதை நினைத்து சந்தோஷமும் கொள்கிறாள், அழகாக ஆடை, அலங்காரம் செய்து கொண்டு 6 வது நாள் அவனை திறந்துவிட செல்கிறாள். ஆனால் அவனை சரியான நேரத்திற்கு திறந்து விடாததால் பசியாலும், பாய்லர் சூடு தாங்காமலும் இறந்து போய் கிடக்கிறான். இறுதியில் இறந்த அவனின் உடலை மடியில் கிடத்திக்கொண்டு எனக்கு வாழ்வளிக்கிறேன் என்றாயே, வா போகலாம்..என்று அழுது புலம்புகிறாள்..
திரைபடம்: ஹெட் ஜூயிதே நாடு: நெதர்லாந்து இயக்குனர்:- மார்டின் கூல்ஹோவன்
இந்த பெண்களின் உணர்வுகளையும், அவர்களின் மன போராட்டாங்களையும், தாழ்வு மனப்பான்மையும் ஆண்களால் புரிந்து கொள்ள முடியுமா?..இப்படியுள்ள பெண்களை காமக்கண் கொண்டு பார்க்காமல், காதலுடன் பார்க்க முடியுமா?. உடம்பை தாண்டி அவர்களுக்கும் ஒரு மனம், உணர்வுகள் இருக்கிறது என்பதை உணரமுடியுமா?..
அணில் குட்டி அனிதா:- என்னங்க..? கவிதா நிறைய கேள்வி கேட்டு இருக்காங்க.. எப்பவும் போல நீங்களும் பதில் சொல்றேன் பேர்விழின்னு திட்டி தீருங்க.. என்னவோ பொம்பளைங்களுக்கு தான் மனசு இருக்காமாம், ஆம்பளைங்களுக்கு இல்லையாமாம்..
நாம எல்லாம் சிம்ரன் ரேஞ்சுக்கு பொண்ணு பார்ப்போம்.. நாம தொட்டா ஒட்டிக்கற கலர்ல இருப்போம்...ஆனா..நமக்கு கண் கூசர அளவுக்கு கலரா பொண்ணு பார்ப்போம்... கருப்பா, குண்டா, குட்டையா, பல் சரியா இல்லைனா, எல்லாத்தையும் விட தலை முடி நீட்டா இல்லைனா (தலமுடிகூட த்தானே நாம வாழ போறோம்) பெண்ணை பிடிக்கலைன்னு சொல்லிடுவோம்........அழகு மட்டுமா..நல்லா படிச்சிருக்கனும், வேலைக்கு போய் கை நிறைய சம்பாதிக்கனும்..........hold hold..நான் என்ன கவிதாவுக்கு support பண்ற மாதிரி இருக்கு?!!
தப்பாச்சே...நான் எப்பவும் ஆம்பளைங்களுக்கு தாங்க support... இந்த மாதிரி breast இல்லாத பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா எப்படிங்க..எப்படிங்க..நினைச்சுக்கூட பார்க்க முடியல..உவ்வே...! ஏதாவது நடக்கற விஷயமா கவிதாவ பேச சொல்லுங்க....அம்மனிய நம்மால direct ஆ திட்ட முடியல... வேற யாராவது திட்டினா.. நமக்கு சந்தோஷம் தாங்காதுங்கோ....! ம்ம். ம்ம்..proceed........
Labels: சமூகம் 81 Comments
இந்தியர்கள் இப்படியா?..Hey you Indians..!
வளர்ந்த நாடுகளின் பொருளாதர வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று, மக்கள் தேவையில்லாமல் பேசுவது இல்லை, செயலில் கவனம் செலுத்துகிறார்கள். வாரத்தில் 5 நாட்கள் உழைத்துவிட்டு 2 நாட்கள் வாழ்க்கையை சந்தோஷமாக கழிக்கிறார்கள். மக்கள் பழக்கவழக்கங்கள் நாட்டுக்கு நாடு நிறைய வேறுபாடு, நம்மிடம் இருக்கும் மிக பெரிய குறை பேச்சு, மற்றொன்று ஒழுங்கின்மை, அதற்கடுத்து அனுகுமுறை. பண்நாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை செய்து கொண்டு அமெரிக்கர்கள் அவ்வபோது நம்மை பற்றி சொல்லும் கருத்தை கேட்பதால் இந்த பதிப்பை எழுதுகிறேன். அவர்கள் இந்தியர்களை பற்றிய கருத்தை சொல்லும் போது ஏதோ ஒருவரை தானே சொல்கிறார்கள் என விட்டு விட முடிவதில்லை. சில நேரங்களில் கோபமும், பல நேரங்களில் அவமானமாகவும் இருக்கும். வெளி நாட்டிலிருந்து அலுவலக வேலையாக வரும் வெளிநாட்டு வாழ் தமிழர் அடிக்கடி.. “Hey! you guys are wasting your business hours by talking unnecessary things yaar, this is what India is not developed economically ...you guys should change your attitude” என்பார்.
அவர் அப்படி கூறுவதற்கு பல காரணங்கள் உண்டு, தேவையில்லாமல் அடுத்தவர்களை பற்றிய கதை பேசுதல்,(gossip) திட்டமிடாது வேலைகளை செய்தல், தனக்கென ஒதுக்கப்பட்ட வேலையை கவனிக்காமல் அடுத்தவர்களின் வேலையில் மூக்கை நுழைத்தல், ஆடை & காலணிகளில் போதிய கவனம் செலுத்தாமை, தெரியாத விஷயத்தை தெரியும் என சொல்லிவிட்டு, பிறகு விழிப்பது, நேரத்தை சரியான முறையில் கடைபிடிக்காமை, ஒழுங்கின்மை போன்றவைகளை சொல்லலாம். இவை அலுவலக வேலையை சரி வர முடிக்க முடியாமல் இடையூராக இருக்கின்றன. சிறு சிறு தவறுகள் கூட கவனிக்கப்பட்டு திருப்பி அனுப்பபடுகின்றன.. நான் இதுவரை இந்திய அலுவலகங்களில் பார்த்திராத வேலை நேர்த்தியையும், ஒழுங்கையும் இங்கே கற்றுக்கொள்கிறேன் என்று சொல்ல தயக்கம் இல்லை.
ஏன் இந்தியாவை தேர்தெடுத்து, கம்பெனியை ஆரம்பித்து, நம்மையும் வேலை வாங்கிக் கொண்டு நம்மை குறை கூறவேண்டும் என எனக்கு தோன்றும். இங்கேயே இப்படியென்றால், அமெரிக்காவில் சென்று வேளை பார்க்கும், நம் நாட்டவரை எண்ணிப்பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது. சில பண்நாட்டு நிறுவனங்கள் இங்கேயே அவர்களுக்கு, அமெரிக்கர்களிடம் பழகும், பேசும், சாப்பிடும் (கரண்டி, முள் கரண்டியில் உதவியுடன் உணவருந்துதல்) முறையை கற்று கொடுக்கின்றன.. சிலர் இதையெல்லாம் சரிவர செய்ய தெரியாமல் அந்நிய நாட்டில் எத்தனை அவமானப்படுகிறார்கள்?.
விமானத்தில் பயணம் செய்யும் போதும், மது வகைகள், உணவு வகைகள் கிடைக்கிறது என்பதற்காக அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவது மட்டுமின்றி பைக்குள் சேமித்து வைத்து கொள்வது போன்ற அநாகரிக அனுகுமுறைகள் அங்கிருக்கும் பணி பெண்களை வெகுவாக எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. ஒரு சிலர் செய்யும் இது போன்ற செயலால் ஒட்டு மொத்த இந்தியாவின் பெயரே அல்லவா கெடுகிறது. அடுத்து, விமானம் நின்ற பிறகு அடித்து , பிடித்து தலை மேல் வைத்திருக்கும் பொருட்களை எடுத்து அடுத்தவர்களுக்கு தொந்தரவு தருவது, எல்லா நாட்டு குழந்தைகளும் அமைதியாக வரும் போது, நம் குழந்தைகள் மாத்திரம் விமானத்தினுள் ஒடி பிடித்து விளையாடுவது போன்றவை பிற நாட்டவர்கள் நம்மையும், நாம் குழந்தை வளர்க்கும் முறையையும் விமர்சனம் செய்யும் படியாக உள்ளது. இது போன்ற செயல்களை நம்மால் கட்டு படுத்த இயலாதா?.
சில நல்ல விஷயங்கள் நான் கற்று கொண்டவை என் வேலையை நானே செய்வது, இந்திய நிறுவனங்களில் எல்லாவற்றிலும் office asst/boy or clerk இருப்பார். நம் அத்தனை வேலைகளையும் நாமே செய்து பழகினால் இந்த வேலைக்கென்று ஒரு ஆள் தேவையில்லாமல் போய்விடும்.
சிறு சிறு விஷயங்களில் நம்மை சரி செய்து கொண்டால் நம்மை குறைவாக யாராவது பேசமுடியுமா?..அதுவும் அந்நிய நாட்டவர். ஏதோ என் வேலையை சரி வர கற்றுக்கொண்டு சரியாக செய்வதால் அந்த அமெரிக்கர் “Hey, you Indians...” என என்னிடம் கதை அளப்பதை நிறுத்தி விட்டாலும், மற்றவர்களிடம் அவர் இன்னமும் “Hey, you Indians...” என பேசுவது காதில் விழத்தான் செய்கிறது..
அணில் குட்டி அனிதா: ஆஹா.....கதை அளக்கறதுல நம்ம அம்மனியை யாரும் மிஞ்ச முடியாதுங்கோ..! அம்மனி கிட்ட மீனம்பாக்கம் எங்க இருக்குன்னு கேளுங்க..முழிப்பாங்க.. இவுக.. என்னவோ மாசத்துக்கு 2 தரம் அமெரிக்கா, லண்டன் போயிட்டு வர ரேஞ்சுக்கு விமானத்தை பத்தி எல்லாம் எழுதறாங்க.. இதுக்கெல்லாம் காரணம்..வேற யாரும் இல்லைங்க..நீங்க தான்............! உடனே comment எழுத போயிட்டீங்களா?. இருங்கப்பா.....அப்படியே screen ல நான் இதை ஒரு 4 தரம் (நீங்க தான்..நீங்க..தான்) திருப்பி சொல்லற மாதிரி கற்பன பண்னுங்க...பண்ணிடீங்களா........ம்ம் போதும் போதும்..இப்போ போய் comment எழுதுங்க...!
Labels: சமூகம் 36 Comments