இது தான் செம்போத்து = செண்பகப்பறவை (Greater Coucal) -> இத்தன வருச
காலமாக இதைத்தான் குயில்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். இது எப்படி சத்தம்
எழுப்புதுன்னா...ஒரு மாதிரி.... வாயத்தொறக்காம "ம்ம் ம்ம் ம்ம்க்கும்..
ம்ம் ம்ம் ம்ம் க்கும்" னு சத்தம் எழுப்புது. வாயத்தொறக்கவும்
மாட்டேங்குது. அமுக்கியாட்டும் சத்தம் போடுது. தனியா வேற வீட்டில் இருக்கேனா..இந்த சத்தம் ஒருவித பயம்மா இருக்கும்.
கேரளாவில் வீட்டு வாசலில் வந்து உட்கார்ந்திருக்கும். குயில் காக்கா மாதிரி இருக்கும்னு சொல்லிக்கேட்டதால் இதை குயில் னு நானே கெஸ் பண்ணிக்கிட்டேன். இங்கவந்தும்.. தொடர்ந்துச்சி.. ஆனா இது தான் வாயத்தொறக்காம 'ம்ம் ம்ம் ம்ம் ம்க்கும்' னு சத்தம் எழுப்புதா? எனக்கு ஒரே கன்ஃபூஷன்..
முதலில் அது ஏதோ உடல்நிலை சரியில்லாம அப்படி செய்யுதுன்னு நினைச்சேன். வூட்டுக்கார கூப்பிட்டு.. அதுக்கு நான் தான் டாக்டர் மாதிரி.. "பாருங்க அந்த குயிலுக்கு உடம்பு சரியில்ல எப்படி வாயத்தொறக்க முடியாம கஷ்டப்படுதுன்னு" பில்டப் வேற... :))
அவரும் நம்பி ஃபோட்டோவெல்லாம் எடுத்தாரு. :)
அப்பவும் இது குயில் இல்லன்னு என் அறிவுக்கு எட்டல... பெண் குயில் போலன்னு ஜஸ்ட்டிஃபை செய்துக்கிட்டேன். (என் ஜெனரல் நாலேஜ்ஜில் மண்ணெண்ணெய ஊத்தித்தான் கொளுத்தனும்).
சரி...அப்புறம் எப்படிதான் குயில கண்டுப்பிடிச்சேன்னா..?! ஒரு நாளில் 14 மணி நேரமாவது இங்க வீட்டை சுத்தி குயில் கூவிக்கிட்டே இருக்கு.. அடர்ந்த மரங்கள் என்பதால், கண்ணில் மட்டும் படாது. இதையே குயில்னு நினைத்ததில் கூகுள் ஆண்டவர் பக்கமே நான் போகல. சென்ற வாரம் இலையுதிர் காலம் ஆரம்பம் ஆகி..2-3 நாள்ல பூரா மர இலையும் கொட்டிப்போச்சி...
இப்ப என்ன செய்யும் அந்த குயில்?! ஒழுங்கா மரியாதையா வெத்து கிளையில் உட்கார்ந்து கூவிக்கிட்டு இருந்துச்சி... அட்லாஸ்ட், குயில் எப்படியிருக்கும்னு எனக்கு தெரிஞ்சிப்போச்சி... :)
இப்ப குயில் கதைக்கு வருவோம். எந்த குயிலுமே தனியா சும்மா கூவுவதேயில்லை.
இங்க ஒரு குயில் கூவினால், எசப்பாட்டு தொலைவில் எங்கிருந்தோ கேட்கும்.
அதுக்கு உடனே இவரு எசப்பாட்டு இங்கிருந்து பாடுவாரு.. உடனே அங்க.. இப்படி
மாறி மாறி பாடிக்கிட்டே இருக்காங்க. இவங்க பறந்து வேற இடத்துக்கு போறவரை
இந்த எசப்பாட்டுகள் தொடரும். கேரளாவில் வீட்டு வாசலில் வந்து உட்கார்ந்திருக்கும். குயில் காக்கா மாதிரி இருக்கும்னு சொல்லிக்கேட்டதால் இதை குயில் னு நானே கெஸ் பண்ணிக்கிட்டேன். இங்கவந்தும்.. தொடர்ந்துச்சி.. ஆனா இது தான் வாயத்தொறக்காம 'ம்ம் ம்ம் ம்ம் ம்க்கும்' னு சத்தம் எழுப்புதா? எனக்கு ஒரே கன்ஃபூஷன்..
முதலில் அது ஏதோ உடல்நிலை சரியில்லாம அப்படி செய்யுதுன்னு நினைச்சேன். வூட்டுக்கார கூப்பிட்டு.. அதுக்கு நான் தான் டாக்டர் மாதிரி.. "பாருங்க அந்த குயிலுக்கு உடம்பு சரியில்ல எப்படி வாயத்தொறக்க முடியாம கஷ்டப்படுதுன்னு" பில்டப் வேற... :))
அவரும் நம்பி ஃபோட்டோவெல்லாம் எடுத்தாரு. :)
அப்பவும் இது குயில் இல்லன்னு என் அறிவுக்கு எட்டல... பெண் குயில் போலன்னு ஜஸ்ட்டிஃபை செய்துக்கிட்டேன். (என் ஜெனரல் நாலேஜ்ஜில் மண்ணெண்ணெய ஊத்தித்தான் கொளுத்தனும்).
சரி...அப்புறம் எப்படிதான் குயில கண்டுப்பிடிச்சேன்னா..?! ஒரு நாளில் 14 மணி நேரமாவது இங்க வீட்டை சுத்தி குயில் கூவிக்கிட்டே இருக்கு.. அடர்ந்த மரங்கள் என்பதால், கண்ணில் மட்டும் படாது. இதையே குயில்னு நினைத்ததில் கூகுள் ஆண்டவர் பக்கமே நான் போகல. சென்ற வாரம் இலையுதிர் காலம் ஆரம்பம் ஆகி..2-3 நாள்ல பூரா மர இலையும் கொட்டிப்போச்சி...
இப்ப என்ன செய்யும் அந்த குயில்?! ஒழுங்கா மரியாதையா வெத்து கிளையில் உட்கார்ந்து கூவிக்கிட்டு இருந்துச்சி... அட்லாஸ்ட், குயில் எப்படியிருக்கும்னு எனக்கு தெரிஞ்சிப்போச்சி... :)
அணில் குட்டி : இந்த அம்மணிக்கு 7 கழுத வயசாச்சி.. குயில் எப்படியிருக்கும்னு இபப்த்தான் தெரிஞ்சிருக்கு... ஒரு புள்ளைய பெத்து, வளத்து... அதுக்கு எந்த லட்சணத்தில் படிப்பு சொல்லி தந்திருப்பாங்கன்னு இப்ப கிரஸ்ட்டல் கிளையரா தெரிஞ்சிப்போச்சி.....
பீட்டர் தாத்ஸ் : They are my Morning alarm. With a cup of coffee I started my day with them. They dont bother me, They speak, fight n play with one other,fly fast, ask me food, I talk with them, give them food. Cukoo sings I listen n sing back.
3 - பார்வையிட்டவர்கள்:
குயில் பாட்டு நல்லாயிருக்கு...
வாழ்த்துக்கள்.
குயில் பாட்டு நல்லாயிருக்கு...
வாழ்த்துக்கள்.
சிறந்த பகிர்வு
தொடருங்கள்
Post a Comment