1980 களில் ரொம்ப பிரசித்திப்பெற்ற சோப்பு விளம்பரம் "லிரில்" தான். டிவி எல்லோர் வீடுகளிலும் இருக்காது, எல்லாத் திரையரங்களிலும் திரையிடப்படும் இந்த விளம்பரத்தையும், அந்த பெண்ணையும் விரும்பாதோர் இல்லை.
எனக்கும் இந்த விளம்பரம் பிடிக்கும், அந்த சோப்பும் பிடிக்கும். ஆனால் வீட்டில் அதை வாங்கவே மாட்டாங்க. விலை அதிகமான சோப்புகள் என ஒரு பட்டியல் இருக்கும் அவற்றில் முதலில் வருவது "லக்ஸ்" அடுத்து "லிரில்". லக்ஸ் சோப்பிற்கு ஸ்ரீதேவி & ஜெயப்பிரதா விளம்பரப்படத்தில் வருவாங்க. லக்ஸ் சோப்பு பயன்படுத்தினால் ஸ்ரீதேவி போல இருப்போம்னு அநேகப் பெண்கள் நம்பியக்காலம். விலை காரணமாக, லக்ஸ்'ஐ அக்கம் பக்கத்தில் இருப்போர், உறவினர்கள் யாரும் உபயோகித்து பார்த்ததில்லை. ஆனால், நடு அத்தை வீட்டில் லிரில் சோப்பு வாங்குவாங்க. அங்கப்போகும் போது முகம் கழுவிட்டு வீட்டுக்குப் போடின்னு அத்தை சொன்னால், சோப்பை எடுத்து கலரை ரசிப்பேன், பின்னர் முகர்ந்துப்பார்ப்பேன், எலுமிச்சை வாசம் அடிக்கும். லிரில் சோப்பின் வடிவம், மேலுள்ள மஞ்சள், அடற்பச்சை கோடுகள் என்னமோ என்னை மிகவும் கவரும்.
எங்க வீட்டில் எப்பவும் 'ரெக்ஸோனா' சோப்பு தான். ரெக்ஸோனா கிடைக்காத நேரத்தில், எப்போதாவது ஹமாம். இதில் ஆயாவிற்கு மட்டும் மைசூர் சாண்டில். அவங்க ரொம்ப சுத்தம், நாங்க பயன்படுத்திய சோப்பு அவங்களுக்கு பிடிக்காது. இந்த சாண்டில் சோப்பின் வாசமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். "தண்ணி சுடச்சுட இருக்கு, முகம் கழுவிக்கிட்டு போ பாப்பா" ன்னு அவங்க குளிக்கும் போது கூப்பிடுவாங்க. இதான் சாக்குன்னு சோப்பை ஆசைத்தீர முகர்ந்து, முகத்தில் பூசி கழுவுவேன். ஆயாவுடன் தூங்கும் போது, இந்த சந்தன வாசனை ஆயாவிடமிருந்து வீசும், இறுக்கி கட்டிக்கிட்டு தூங்குவேன்.
வீட்டில் தாத்தா கதை எப்பவும் தனிக்கதை. தாத்தாவிற்கு தனி ரூம். எல்லாமே தனி. ஆயாவே பணத்தை பார்த்து பார்த்து சிக்கனமாக செலவு செய்வாங்க. தாத்தா அதைவிட ரொம்ப மோசம், கஞ்சம் என்றே சொல்லனும். அநாவசியமாக ஃபேன் ஓடக்கூடாது, லைட் எரியக்கூடாது. ரேடியோ போடக்கூடாது. தாத்தாவிற்கு பணம் செலவு செய்ய மனசே வராது, அதனால் அவரின் சோப்பு "லைஃப்பாய்". ஒரே ஒரு சோப்பு வாங்கினால், கிட்டத்தட்ட ஒரு வருசத்துக்கு வரும். ஒரு சோப்பு வாங்கி அதை ரொம்ம்ம்ம்பவே கஷ்டப்பட்டு இரண்டாக நறுக்கி, பாதி பாதியாகவே பயன்படுத்துவார். எனக்கு சுத்தமாக பிடிக்காத ஒரு 'ஒவ்வேக்' சோப்பு அது.
தாத்தா முதுகு தேய்க்க கூப்பிட்டாலே, வாயடிச்சிக்கிட்டே தேய்ப்பேன். "ஏன் தாத்தா இந்த சோப்புல நுரை வரல, வாசனையும் இல்ல, கரையவே மாட்டேங்குது, இதுக்கு பதிலா ஒரு செங்கல்லை தாங்க தேய்ச்சு விடறேன்" னு சொல்லுவேன். உடனே தாத்தா புராணத்தை ஆரம்பிச்சிடுவாரு. நான் ஒரு ஏழை விவசாயிக்கு பிறந்த பரம ஏழை.. நீ பொறக்கும் போதே உங்கப்பன் ஃபோர்மேன், எனக்கப்படியா, மேல் சட்டைக்கூட இல்லாமல், வெத்து ஒடம்போட, இடுப்புல சின்னதா ஒரு துண்டைக்கட்டிக்கிட்டு, உங்க ஆயா வீட்டு வாசலில், சொந்த மாமங்காரன் கிட்ட, "ஐயா..சாமி, எனக்கொரு வேல வாங்கித்தாங்கன்னு கைக்கட்டி நின்ன ஆளு" உங்களாட்டும் செலவு செய்ய எனக்கு வசதி இல்ல" ன்னு சொல்லுவாரு.
இந்த கதையை 12814 ஆவது தடவையாக காதில் ரத்தம் சொட்ட சொட்டக் கேட்டு, முதுகை ஏனோ தானோவென்று தேய்ச்சிட்டு வருவேன். கதையும் மாறாது தாத்தாவின் பாதி " லைஃபாய்" சோப்பும் மாறாது. இந்த சோப்பையும் விரும்பி எங்கவீட்டில் இன்னொரு ஜீவன் தாத்தாவிற்கு தெரியாமல் திருடி குளிக்கும். அது என் சின்ன அண்ணன். அதை தாத்தாவிடம் போட்டுக்கொடுத்ததில், என்னமோ ஒரு தரம் குளிச்சதில், சொத்தே கரைஞ்சுப் போன மாதிரி, அவர் அண்ணனை ஏகத்துக்கும் திட்ட, அந்த கடுப்பில் அண்ணன், என்னை எவ்ளோ முடியுமோ அவ்ளோ கும்மி கும்மி எடுத்த கதை வேற இருக்கு. (யப்பா என்னா அடி.??!!! அண்ணன்களா அதுங்க.. பிசாசுங்க!! எப்பவாச்சும் அதுங்க அடிவாங்கியிருந்தா தெரியும்.. அடி எவ்ளோ வலிக்கும்னு...:((, நம்ளத்தானே வீட்டில ஒருத்தர் விடாம பின்னி பெடல் எடுத்தாங்க...)
இப்ப ஒரு டிவிஸ்டு. பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு நுழையுது சோப்பு. திருமணம் ஆன நாளிலிருந்து இன்று வரை பழனி ஆண்டவர் பயன்படுத்தும் ஒரே சோப்பு, "சின்தால்" அவரும் மாறமாட்டார், நாங்கள் மாறினாலும், அவருக்கென சின்தால்' தான் வாங்கனும். எனக்கும் சின்தால் சோப்பே பழகியும் போனது. இருப்பதிலேயே, சருமத்திற்கு மிகவும் தரமான சோப்பு சின்தால்' என்பதால், அதுவே தொடர்கிறது. சோப்பு கிடைக்காத நேரத்தில் நீயூ' விலிருந்து ஓல்ட் க்கு வருவோம். ஓல்டிலிருந்து நீயூவிற்கு மாறுவோம். (Cinthol had been rated first with high TFM. http://en.wikipedia.org/wiki/Total_fatty_matter )
நடுவில் நவீன், அவனுக்காக தனியாக விருப்பப்பட்டு வாங்க ஆரம்பித்த சோப்பு, "பியர்ல்ஸ்". ஆனால் ஒன்றிரண்டோடு அதன் கதை முடிந்தது. அவரும் சின்தாலே பயன்படுத்தினார். முகத்தில் கரும்புள்ளிகள் அதிகம் வரவே, மெடிமிக்ஸ்; க்கு மாறினார்.
சிறுவயதில், நிறம், வாசனை, விளம்பர மோகத்தில், பொருட்களை வாங்க வேண்டும் என்பது போய், இது தான் நல்லது என எவ்வளவு விலை ஏறினாலும் அல்லது குறைவான விலையில் தரமான பொருளாக கிடைத்தாலும், சில தயாரிப்புகளை , தரம் மற்றும் உடல் நலம் கருதி தொடர்ந்து வாங்குவதென்னவோ உண்மை.
அணில் குட்டி : ம்ம்... அம்மணி அடுத்து என்ன டூத் பேஸ்ட்டா? கோபால் பல்பொடியிலிருந்து ஆரம்பிச்சி எழுதுவீங்களே...............ஹய்யோ கடவுளே.....
பீட்டர் தாத்ஸ் : Let advertisers spend the same amount of money
improving their product that they do on advertising and they wouldn't
have to advertise it.
அந்த லிரில் சுட்டிப் பெண்ணின் பெயர் Prunell ஆகும். இந்த விளம்பரத்துக்கான ஷூட்டிங்கை பிப்ரவரி நடுக்கும் குளிரில் எடுத்ததாக அவர் ஒரு பேட்டியில் கூறினார்.
நம்மவர்களுக்கு ஒரு வழக்கம். இம்மாதிரி பிரபலமானவர்கள் இறந்து விட்டார்கள் என புருடா கிளப்பி விடுவார்கள். அதே போல இவரும் பல மாதங்களுக்கு இறந்தவராகக் கருதப்பட்டு பிறகு கொடுத்த பேட்டியில் அப்படியெல்லாம் இல்லை என்பதை நிறுவினார்கள்.
தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? - பாரதியார்
~~~~~~~~~~~~~~~~~~~~
பார்வைக் கொடுங்கள்
கண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines
பார்வையிடுங்கள்
You have it in you to save a LIFE - Click on the picture to Register Now to get a Donor Card
Reproduction is authorised, provided the source is acknowledged, save where otherwise stated. Where prior permission must be obtained for the reproduction or use of textual and multimedia information (sound, images, software, etc.), such permission shall cancel the above-mentioned general permission and shall clearly indicate any restrictions on use.
14 - பார்வையிட்டவர்கள்:
எத்தனை விதமான சோப்புகள் மார்க்கெட்டுல இருக்கு. இதுல நமக்கு எது நல்லதுன்னு பார்த்து தேர்ந்தெடுக்கறதுக்குள்ள வாயில நுரை தள்ளிரும்.:-))
அருமை:)!
@ அமைதிச்சாரல் : இப்பத்தானே அப்படி, அப்பவெல்லாம் குறைச்சல் தான்.. :)
@ ராமலக்ஷ்மி : நன்றி :)
சவுக்காரம் அப்படின்னா?
அப்போது லிரில் (உண்மையிலே சூப்பரா இருக்கும்ங்க) , இப்போ ஹிமாலயா.... ஆனா விலையெ பாத்தா எல்லாருமே சகட்டு மேனிக்கு ஏத்தி....அளவை மட்டும் குறைச்சிட்டாங்க
nagu
www.tngovernmentjobs.in
@கோபி : http://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
@ நாகு : லிரில் தான் ஹிமாலயாவா?
அந்த லிரில் சுட்டிப் பெண்ணின் பெயர் Prunell ஆகும். இந்த விளம்பரத்துக்கான ஷூட்டிங்கை பிப்ரவரி நடுக்கும் குளிரில் எடுத்ததாக அவர் ஒரு பேட்டியில் கூறினார்.
நம்மவர்களுக்கு ஒரு வழக்கம். இம்மாதிரி பிரபலமானவர்கள் இறந்து விட்டார்கள் என புருடா கிளப்பி விடுவார்கள். அதே போல இவரும் பல மாதங்களுக்கு இறந்தவராகக் கருதப்பட்டு பிறகு கொடுத்த பேட்டியில் அப்படியெல்லாம் இல்லை என்பதை நிறுவினார்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
@ ராகவன் சார் : நானும் அவங்க இறந்துட்டாங்கன்னு தான் நினைச்சிட்டு இருக்கேன்.. :(
தகவலுக்கு நன்றி.
நல்ல தொகுப்பு...
ஆனாலும் செங்கலை (லைஃப்பாய்) இப்படி எல்லாம் சொல்லக்கூடாது...
லிரில்க்கு அப்போ இருந்த மவுசு பயங்கரம் தான்! அதன் மனம் தான் அதுக்கு காரணம்ன்னு நினைக்கிறேன்!
சின்னவயசிலிருந்து நான் ரொம்ப காலமா லைபாய்தான் உபயோகிச்சேன்! இப்போ பியர்ஸ் ஜெம்ஷீல்டு! :) :)
ம்ம்.. எங்க வாப்பா சவூதியிலிருந்து கொண்டுவரும் சோப்புகளில் ஒன்றோ, இரண்டோதான் எங்களுக்கு மிஞ்சும் என்பதால், பிறகு ஹமாம்தான். எங்கம்மா சோப்பை ரெண்டா வெட்டி வைப்பாங்க. ஒண்ணும் எதுத்துப் பேசமுடியாது...முணுமுணுத்துகிட்டே அமைதியா இருந்துடணும். காலேஜ் வந்ததுக்கப்புறம் தைரியம் வந்து, இனி வெட்டாதேன்னு கெஞ்சிக் கேட்டுகிட்டேன். :-)))))
கல்யாணமானதும் “சுதந்திரம்” வந்து, ஒவ்வொரு சோப்பாக வாங்கி டெஸ்ட் பண்ணிட்டு, இப்ப மறுபடி சுதேஸியாகிக் கொண்டிருக்கிறேன்!!
//@கோபி : http://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D //
ஏங்க அவர் சவுக்காரம்னா என்னான்னு தெரியாமத்தானே கேட்டார், அதுக்குப் போயி இப்படி வையுறீங்களே!!
@ ஹூசைனம்மா : ஆமா..ஏந்தான் சோப்பை இரண்டா வெட்டறாங்களோ..? ரொம்பத்தான் சிக்கனும் புடிச்சி இருக்காங்க.
தாத்தாவிடம் நான் எவ்ளோ வம்பிழுத்தும், அவரு சோப்பை இரண்டாக்கி தான் உபயோகிப்பாரு. :)
//அதுக்குப் போயி இப்படி வையுறீங்களே!!// அப்பத்தான் திரும்பி இன்னொரு கேள்வி கேக்கமாட்டாங்க :)
gama gamakkuthunga...pathivu.
soap podaamal kulichchaa thaaththa paattilaam irukkaanga.
unga thaaththaa soap podattirukkaangale nu santhosha pattukka vendiyathuthaan.
vaazhthukal..
இரசிகை : என் தாத்தாவும் ஒரு காலத்தில் (அவரு சின்னப்புள்ளையா இருக்கப்ப) சோப்பில்லாமல் குளிச்சவரு தான்.
நன்றி.
Post a Comment