வீட்டுக்குள் நம்மை பூட்டி வைக்கும் போதே, நம்ம மூளை ஆயிரம் விஷயங்களை அசைப்போடும். வண்டியில் போனால், சிக்னலில் நிற்கும் 1-1.5 நிமிடங்களில் சுற்றி இருப்பதை கவனித்தாலே இன்னும் பல ஆயிரம் விஷயம் தலைக்குள் புகுந்து குடைச்சல் கொடுக்கும்.. வண்டி சர்விஸ் விடும் ஒரு நாள், பஸ்ஸில் தான் போக வேண்டி இருக்கும். அந்த ஒரு நாளில் 10-15 கதைகளோடு வீட்டுக்கு வருவேன். இப்போது தினம் பஸ்ஸில் செல்கிறேன். கேட்கனுமா? குறைந்த காலத்தில், பஸ் பயணம் எரிச்சல் ஊட்டுகிறது. பணம் கொடுத்து நாம் உண்டு நம் வேலை உண்டு என்று தான் சென்று வருகிறோம். ஆனால் சுற்றி நடக்கும் விஷயங்கள் பொறுமையை இழக்க செய்து, கோவமும் எரிச்சலும் தான் மிஞ்சுகிறது. வாயை திறக்காமல் வர ரொம்பவே சிரமப்பட வேண்டி இருக்கிறது.
பார்க்கும் காட்சிகள் :
1. ஆண்களும் பெண்களும் மணிக்கணக்காக செல் ஃபோனில் சத்தமாக பேசி வருவது. இது ஒரு தொடர் நிகழ்வு :(. அதுவும் காதலனும் காதலியும் பேசிக்கொள்ளும் கருமத்தை காதுக்கொடுத்து கேட்கமுடியவில்லை. காதலன்’கள் இப்படி பொதுவெளியில் பேசுவதில்லை (உஷார் மாக்கானுங்களாச்சே!) , பெண்கள் தன் நிலை இழந்து பேசுகிறார்கள். இவர்கள் பேசுவதிலிருந்து எதிர்பக்கம் கொஞ்சுவது காதலன் என்று தெரியவருகிறது. காதலிகளைப் பார்க்க பாவமாக இருக்கிறதே ஒழியே, வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.
2. அலுவலக, வீட்டு பிரச்சனைகளை சுற்றம் பாராது, கத்தி பேசுகிறார்கள். இரண்டு நாளைக்கு முன் ஒரு உயர் அதிகாரி, தன் சக ஊழியரிடம் கோவத்தில் கத்திய கத்தில், பஸ்ஸே டக டக டிகு டிகு ன்னு ஆடியது. அத்தனை முகங்களும் அவரின் குரலுக்கு அலண்டுப்போய் அவரைப்பார்க்க, அவரோ, எதையும் கவனிக்காது கத்துவதை மட்டுமே தொடர்ந்து செய்துக்கொண்டு இருந்தார். :(
3. வேலைக்கு செல்லும் போதும், திரும்ப வரும் போதும், நம்ம ஐ.டி நாயகிகளும் நாயகர்களும் அந்த ஐடி கார்ட் ஐ கழட்டாமல் காட்டும் சீன் இருக்கே ! யப்பா.. .!! :) ஷாப்பிங் காம்பளக்ஸ், சினிமா தியேட்டர், பஸ் நிறுத்தங்கள், கடைகள், பீச், ஹோட்டல் என்று எதுவும் இவர்களுக்கு பாக்கி இல்லை, எங்கு போனாலும் ஐடி கார்ட் டோடு தான் போகிறார்கள்...”கொண்டை” பளீச் ந்னு தெரியுது.! :)
4. நடுத்தரவயது மற்றும் வயதான கணவன் மனைவி வந்தால், மனைவியிடம் பணம் வாங்கித்தான் கணவர் டிக்கட் எடுக்கிறார். மனைவி சொல்லும் இடத்தில் தான் அமருகிறார், எழுந்திருக்கிறார், பேசுகிறார், சிரிக்கிறார். மனைவி சொல்லே மந்திரம். இது பொதுவாக 90% காணமுடிகிறது. பெண்கள் ஆட்டி படைக்கிறார்கள் ! :)
5. டாஸ்மாக் கடையில் ஒரு பெண், ஒரு சின்ன பாட்டில் வாங்கி, அதை ரவிக்கைக்குள் வைத்துக்கொண்டு, பார் என்று அம்புக்குறி போட்டு இருந்த சந்தில் நுழைந்து சென்றார். குடிக்கத்தான் உள்ளே செல்கிறார் என்றால், ஏன் பாட்டிலை ரவிக்கைக்குள் ஒளிக்க வேண்டும் ?! (கூகுல் பஸ் ஸில் இதை மட்டும் பதிவிட்டேன்)
6. பள்ளி மாணவர்கள் 5-10 வகுப்புக்குள் இருக்கும், எல்லா வயது பிள்ளைகளும் மிகச்சரளமாக தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளும் பேசுகிறார்கள் ! :((((((((( எங்கே சென்றுக்கொண்டு இருக்கிறோம் என்று புரியவில்லை. :(((((. அதாவது, அந்த வார்த்தைகளை கோவத்திலோ, சண்டை போடும் போதோ பயன்படுத்தவில்லை (நான் அப்படி பேசுபவர்களை தான் பார்த்திருக்கிறேன்) இயல்பாகவே அவர்களின் மொழியே அப்படித்தான் இருக்கிறது. :((
7. எப்போதுமே எனக்கு இந்த சந்தேகம் உண்டு. பெண்களுக்கு எப்படி மேக்கப் செய்ய இத்தனை நேரம் கிடைக்கிறது? அதுவும் காலை வேலை பரப்பரப்பில்..? பொறாமை' என்று சொல்லமுடியாது, எனக்கு மேக்கப் என்பதே 100% இவர்களை பார்க்கும் போது தான் நினைவுக்கே வருகிறது. சிலர், 1 இன்ச்’க்கு 2 கோட் வீதம் பூசிக்கொண்டு வருகிறார்கள் . ... கொஞ்சம் பயம் வரத்தான் செய்கிறது!
8. பல அழகான பெண்களை பார்க்க முடிகிறது. மிகவும் லட்சணமாக , சாந்தமாக இருக்கும் பெண்களை பார்க்கும் போது ஏனோ ஒரு அமைதி மனதுக்குள் நிலவுவதை தடுப்பதற்கு இல்லை.
9. ஸ்லீவ் லெஸ் அணியும் பெண்கள் கையைத்தூக்கும் வரை அழகாகத்தான் இருக்கிறார்கள். பேரூந்தின் ஆட்டத்தில் மேலே பிடிக்க கையை தூக்கினார்கள் என்றால்..... கடவுளே... ! :((((( என்ன கொடுமை இது ?!! :(. வீட்டில் கையைத்தூக்கி கண்ணாடியில் ஒரு முறை இவர்களே இவர்களை பார்த்தால் மற்றவர்களின் நலன் பாதுக்காக்கப்படும். !! இந்த கொடுமையை பஸ் ஸை தவிர ஜிம் மில் அதிகமாக அனுபவித்து இருக்கிறேன். நானாவது தள்ளி தூரப்போய் விடலாம். ட்ரைனர்களின் நிலைமை ரொம்பவே பாவம். சிலர் சகிக்கமுடியாமல் ஒன்றும் பாதியுமாக சொல்லிக்கொடுத்துவிட்டு தலைத்தெறிக்க ஓடி வந்துவிடுவதும் உண்டு.
10. நடத்துனர் சிலரிடம், சில்லறை திருப்பிப்பெற போராட்டமே நடத்தவேண்டி இருக்கிறது. சில்லறை திருப்பி க்கேட்கும் போது அவர்களுக்கு வரும் கோவத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. 50 பைசா நிச்சயமாக திரும்பி வருவதில்லை. அதிகபட்சமாக 5 ரூ வரை மனசாட்சியே இல்லாமல் ஆட்டையை போடுகிறார்கள். இந்தியா நன்றாகவே வளர்ந்துக்கொண்டு வருகிறது. !
11. சில நடத்துனர்கள் பள்ளியில் குழந்தைகளை நடத்துவது போன்றே பிரயாணம் செய்பவர்களையும் நடத்துகிறார்கள். நேராக போயி வலது பக்கம் திரும்பி இடது பக்கம் பார்த்து நிற்கவும், இங்கே நிற்கக்கூடாது அங்கே நிற்கக்கூடாது என ஓவர் இன்ஸ்ட்ரக்ஷ்னஸ் ரூல்ஸ் யுவர் ஆனர்.. முடியவில்லை ! அவர்கள் சொல்லுவதை காதில் வாங்காமல் இருந்தால், பஸ்ஸில் இருப்போர் அத்தனை பேர் காதில் விழும்படி கத்தி கூப்பாடு போடுகிறார்கள்.
12. சந்தோஷமான ஒரே விஷயம் கைக்குழந்தைகளும், குட்டி குட்டி சிட்டுகளும், மொட்டுகளும் செய்யும் சேஷ்டைகளும், மழலையில் கொஞ்சி, அழுது, அடம் பிடித்து கத்தி ஆர்பாட்டம் செய்வதும் பார்க்க பார்க்க கண் ஆயிரம் வேண்டும்.
13. பக்கத்தில் உட்காரும் ஆண்களின் உடல் மொழி.. :) இயல்பாக இருக்கமுடியாமல் ஏன் இப்படி தவிக்கிறார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். ஒன்று அட்டென்ஷன், இல்லைன்னா ஓவர் ஸ்டேன்ட் அட் ஈஸ்.. இது இரண்டுக்கும் நடுவில் ஒரு நிலைபாடு இருக்கிறது என்பது இவர்களுக்கு தெரியவே தெரியாதா என்பது எனக்கு தெரியவில்லை.
14. தினம் பார்க்கும் முகங்கள், சிலர் அறிமுகமானதில் (பார்த்துக்கொள்வதை வைத்தே) சிரிக்கிறார்கள். பலர் கண்டுக்கொள்வதில்லை. அவர்களில் நானும் ஒருத்தி. சிரித்தால் திரும்ப சிரித்தும், முறைத்தால் திரும்ப முறைத்தும் ... :)
15.கடைசியாக, போக்குவரத்து நெரிசல். தொடர்ந்து தினப்படி போக்குவரத்து நெரிசல் நான் செல்லும் வழியில் அதிகமாக இருக்கும் பகுதி : கிண்டி - சின்னமலை - ஹால்டா ஜக்ஷனை சொல்லலாம். மாலை நேரத்தில் எப்போதுமே அங்கு நெரிசலோ நெரிசல். அதை அடுத்து திருமங்களம். இங்கு காலநேரமின்றி நெரிசல் காரணம் மெட்ரோ ரயில்.
அணில் குட்டி : இன்னும் என்னென்ன வெளியில் வரப்போகுதோ.. வூட்டுக்குள்ள பூட்டி வைங்கன்னா கேட்டா த்தானே.. அவங்க கஷ்டம் அவங்களுக்கு... பாவம்.. தாக்குப்பிடிக்க முடியலப்போல... :((
பீட்டர் தாத்தா : A bus is a vehicle that runs twice as fast when you are after it as when you are in it”

19 - பார்வையிட்டவர்கள்:
பேருந்து ல பரூந்து கணக்கா கவனிச்சிருக்கீங்க.. :))
நீங்க கவனிக்கிற கவனிப்பால் தான் அந்த உடல்மொழியா இருக்கலாம்..
பல இடங்களில் அடக்கமுடியாமல் சிரிச்சிட்டேன். (இங்க என் வீட்டுக்காரர் இவளுக்கு வேற வேலை இல்ல மானிட்டர் பார்த்து சிரிக்கிறான்னு சொல்றாங்க)
முத்து. : :)))) //இங்க என் வீட்டுக்காரர் இவளுக்கு வேற வேலை இல்ல மானிட்டர் பார்த்து சிரிக்கிறான்னு சொல்றாங்க)// நீங்க பரவாயில்லை, நான் இதுக்காக லூசு ந்னு எல்லாம் திட்டு வாங்கி இருக்கேன்.. :)
//நீங்க கவனிக்கிற கவனிப்பால் தான் அந்த உடல்மொழியா இருக்கலாம்..//
பக்கத்தில் உட்கார்ந்து இருப்பவங்களை எப்படி முத்து பார்க்க முடியும் ?? :))
அவங்க பக்கமே நான் திரும்ப மாட்டேன்.. அவங்க நெளியறதும், அசையறதும் நமக்கு தெரியாத என்ன.. பக்கத்தில் தானே உட்கார்ந்து இருக்கோம்.. :)
என்ன.... ரொம்ப நேரம் அசைவே இல்லைன்னா ஒரு தரம் திரும்பி எப்படி உட்கார்ந்து இருக்காங்கன்னு செக் பண்ணிக்குவேன்.. :) அவங்க எல்லாம் அந்த அட்டன்ஷன் ஆட்கள் ! :)
akkaav, naan bus-la erina udane thoonga aarambichuduven ;)))
neenga ivlo note panni irukkinga :)))
//6. பள்ளி மாணவர்கள் 5-10 வகுப்புக்குள் இருக்கும், எல்லா வயது பிள்ளைகளும் மிகச்சரளமாக தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளும் பேசுகிறார்கள் ! :((((((((( எங்கே சென்றுக்கொண்டு இருக்கிறோம் என்று புரியவில்லை. :(((((.//
இது ஒன்றும் புதிதில்லையே. சமீபத்தில் 1956-57-கல்வியாண்டில் நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதும் அதே நிலைதான். விடலைப்பசங்க எல்லோருமே அப்படித்தான் (எனக்குத் தெரியும், ஏனெனில் நானும்தான் அவர்களில் ஒருவன்).
கெட்ட வார்த்தைகளை பசங்கள் ரொம்ப சீக்கிரம் கற்றுக் கொள்கிறார்கள். அவற்றை வெளிப்படுத்துவதில் ஒரு கிக் ஏற்படுகிறது.
சமீபத்தில் 1880-களில் வெளி வந்த "கமலாம்பாள் சரிதம்" என்னும் நாவலில் (தமிழில் இரண்டாவது நாவல் இது. முதல் நாவல் பிரதாப "முதலியார் சரிதம்"). அதில் பள்ளிக்கூட பசங்கள் பாடிய பாட்டை இப்போது பார்ப்போம்.
"நெடுமால் திரு மருகா
நித்தம் நித்தம் இந்தெழவா
இந்த வாத்யாரும் சாவாரா
என் வவுத்தெரிச்சல் தீராதா".
பார்க்க: http://dondu.blogspot.com/2006/10/blog-post_05.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்னாமே தெரியல 4வது பாயிண்டை படித்தவுடன் ஒருவர் மீது பக்தி இன்னும் அதிகமாகிறது ;-)
//ஒருவர் மீது பக்தி இன்னும் அதிகமாகிறது ;-)//
கோப்ஸ்.. பாத்து முத்திட போகுது... :)
//இங்க என் வீட்டுக்காரர் இவளுக்கு வேற வேலை இல்ல மானிட்டர் பார்த்து சிரிக்கிறான்னு சொல்றாங்க//
“பார்றா, நம்மகிட்டலாம் கர்புர்னு இருப்பா, கம்ப்யுட்டர் ஆன் பண்ணதும் முகத்துல அப்படியே சந்தோஷமும் சிரிப்பும் அள்ளுது பாரு!!” இது எங்கூட்காரர் பெரியவனிடம் வழக்கமா விடும் டயலாக்!! :-((((
//முறைத்தால் திரும்ப முறைத்தும் .//
ஏன், நீங்க சிரிக்கலாம்ல?? :-)))))
//அப்படியே சந்தோஷமும் சிரிப்பும் அள்ளுது பாரு!!” // :)))))))))
//ஏன், நீங்க சிரிக்கலாம்ல?? :-)))))// அவங்க முன்னமே முறைக்கறாங்க.. நாம சிரிச்சி வைக்க கடுப்பாகி கடிச்சிட்டாங்கன்னா :)))) அதான் உஷாரா சிரிக்கறதில்ல..
நீங்க வேற, அப்படியெல்லாம் சிரிச்சாலும், சில பேர் திரும்ப சிரிக்க மாட்டாங்க.. நமக்கு தான் அசிங்கமா போயிடும்.. அதிலும் எனக்கு அனுபவம் இருக்கு.. :))
கல்லூரியில் படிக்கும் போது திருச்சி யிலிருந்து தஞ்சைக்கு பஸ்ஸில் போனேன். எல்லா சீட்டும் புல். ஒரே ஒரு பெண்மணி மட்டும், ஐந்தாறு வயது பெரியவர், மூன்று பேர் உட்காரக்கூடிய சீட்டில் ஜன்னலோரம் உட்கார்ந்திருந்தார். வேறு இடமில்லாமல், பெரியவங்க தானேன்னு, நான் போய் aisle சீட்டில் உட்கார்ந்தேன். நடுவில் ஒரு ஆள் உட்காரும் இடம் காலி. திடீர்ன்னு பின்னாடி ஒருத்தன் கத்தறான் 'எவன்டா என் பொண்டாட்டி பக்கத்தில உட்கார்ரதுன்னு'. உடனே எழுந்திரிச்சுட்டேன் அடி விழுந்திருமோன்னு. அந்த ஆள நீங்க உங்க மனைவி கிட்ட உட்காருங்க, நான் உங்க சீட் க்குப் போறேன்னா முறைக்கிறான். நண்பர்கள் கூட இருக்கும் போது மனைவி பக்கத்தில் அமர்வது கேவலமாம். ஒன்னேகால் மணி நேரம் நின்றே பயணம் அன்னிக்கி. அடி வாங்காத வரைக்கும் சந்தோசம். Conductor was helpless.
@ ராகவன் சார், ஓலை, இம்சை அரசி உங்க 3 பேரோட கமெண்டு ஸ்பேன்க்கு போயிடுச்சி.. இப்பத்தான் பார்த்தேன்.
@ இம்சை அரசி : எனக்கு தூக்கமே வராது. ரொம்ப உடம்பு சரியில்லாமல் இருந்தால், வெகுதூர பயணம் என்றால் தூங்குவேன்.அதுவும் அரைகுறையா இருக்கும்.. எப்பவும் மைன்ட் ரெஸ்ட்லெஸ் ஆ இருக்கும் ! :( அதான் பிரச்சனை :(
@ ராகவன் சார் : :)) //சமீபத்தில் 1956-57-கல்வியாண்டில் , சமீபத்தில் 1880-களில் // ஹா ஹா ஹா :))))))))))))) சமீபத்தை விடமாட்டிங்க போல :))))
அப்ப கெட்டவார்த்தை சகஜம் னு சொல்லுங்க. ...:)
@ ஓலை
//'எவன்டா என் பொண்டாட்டி பக்கத்தில உட்கார்ரதுன்னு'. // அப்படியே "பக்" ன்னு ஆயிருக்குமே? !:)) :))))))))
//சமீபத்தில் கி.மு. 399-ல் காலமான சாக்ரட்டீஸ்//
ராகவன் சார். .இங்க போட்ட சமீபம் எல்லாம் கொஞ்சம் தான்..உங்க பதிவில் இருந்த மேற்கண்ட சமீபம்.... இருக்கே.... முடியல :))))))))
உங்க பதிவை படிச்சிட்டேன்.. :)))
Blogger acts so sometimes. It has happened in my blog as well.
I moderate comments not directly from my gmail inbox but go to the blogger's comments moderation page. There is a tab for scam in that page and indicates the number of scam comments if any.
Regards,
Dondu N. Raghavan
nalla kavanichu irukkinga...
அது சரிங்க. அப்புறம் தலைப்பு மட்டும் ஏன் பேரூந்து.. சென்னை trafficல மெதுவா போறதை பேர்ஊர்ந்து சொல்ல வர்றீங்களோ?
@ சே.குமார் : தாங்ஸ்
//அது சரிங்க. அப்புறம் தலைப்பு மட்டும் ஏன் பேரூந்து.. சென்னை trafficல மெதுவா போறதை பேர்ஊர்ந்து சொல்ல வர்றீங்களோ?//
:) ம்ம் நீங்களும் ஊர்ந்து ஊர்ந்து வந்தீங்க போலவே? எப்பவோ போட்ட போஸ்ட்ங்க.. :)
ஆனா நீங்க சொல்ற “எது சரிங்க?”
Post a Comment