ஜார்ஜ்

உங்களின் மரணம்
அதிர்ச்சி இல்லை
ஆழ்ந்த மெளனம்
என்னை சூழ்வதை உணர்கிறேன்
இதயத்தை இறுக்கி பிடித்து
வாழ்க்கை யின் தொலைவை தெளிவுப்படுத்துகிறது..

சென்றவாரத்தில்
உங்களுடன்
சிரித்து பேசியவை
இன்று
நினைவுகளாக...............

அந்த சிரிப்போடும் அன்போடும்
மனைவியையும்
மகனையும்
பற்றி பேசியது
இன்று
நினைவுகளாக....................

அண்ணாசாலை விபத்தில்
ஆஸ்பித்திரியில்
என்னுடன் இருந்து
என்னை கவனித்தது
பொறுமையாக
சிரிப்புடனே
என்னை
சகித்துக்கொண்டவை
நினைவுகளாக ...............

வேலை வேண்டும்
என்று
அனுப்பிய
அத்தனை பேருக்கும்
வேலை
வாங்கிக்கொடுத்தது
நினைவுகளாக.............

யாருக்கு
உதவி வேண்டும்
என்றாலும்
"ஏன் இத்தனை கவலை? ஏன் இத்தனை ரெக்குவஸ்ட்?
நான் செய்கிறேன் "
என்று
முடித்துக்கொடுக்கும்
உங்களின் குணம்
நினைவுகளாக.................


இதற்காகவாவது
அந்த
கடவுள்
உங்களுக்கு
நல்ல ஆயுளை கொடுத்திருக்கலாமே..?!!
இறந்துபோகின்ற வயதில்லையே
இது தான் வாழ்க்கையா?

இனியுமாவது
உங்கள் உயிரான
குழந்தைக்கும்
மனைவிக்கும்
அந்த கடவுள்
இரக்கம் காட்டட்டும்...!!

அப்பாவை
இழந்த
இன்னொரு குழந்தை
இங்கே..
என் கண் முன்னே..

கடவுளே..!!