பெண் இல்லாமல்
பூமிக்கு வந்துவிட்டதாக
நினைக்கும்
ஆணவக்காரர்களே!
பெற்றத்தாயையும்
உடன் பிறந்த தமக்கையும்
உன்னை நம்பிய துணைவியும்
உனக்கு பிறந்த பெண்ணும்
உனக்காக எதையும் செய்யும் உன் தோழியும்
எப்போதும்
வேண்டும் உங்களுக்கு…
அடித்துக்கொண்டு
சாகும்போதும் கூட .......??
ஆம் வேண்டுமே….
ஆத்தா..அம்மா’ வென்று
அன்புடன் அழைக்க……………
பெண் வேண்டுமே…!!
உங்களின்
வீரத்தை(??)க்காட்ட
வீட்டு பெண்கள்
அத்தனை பேரையும்
வீதிக்கு இழுங்கள்
ஆம்
ஒருவரையும்-
விட்டு விடாதீர்கள்
அவன் வீட்டு பெண்ணை
நீ நிர்வாணமாக்கு
உன் வீட்டு பெண்ணை
அவன் நிர்வாணமாக்கட்டும்
உங்களையே
உலகமென்று நம்பும்
ஒரு பெண்ணை க்கூட
நீங்கள்
விட்டுவிடக்கூடாது -
அடித்துக்கொண்டு சாகும்
ஆணவக்காரர்களே…
உங்களின் வீரத்திற்கு ??!!
பின்னால் கூட
பெண் வேண்டுமா????…….
வெட்கமாயில்லை…………..?????????
குறிப்பு :- வீரம் அதிகமாகி என்னிடம் வந்துவிடாதீர்கள்… அய்யோ!!முடிந்தால் எந்த ஒரு பெண்ணை’யும் வீதிக்கு இழுக்காமல் சண்டையிட்டு செத்து மடிந்துத்தான் போங்களேன்….
உங்களை-
பெற்றவள் பெருமிதம் கொள்வாள்,
கட்டியவள் நிம்மதி பெருமூச்சு விடுவாள்
உடன் பிறந்தவளும் ஒழிந்தான் இன்றோடு என்று விழா எடுப்பாள்,
தோழிகள் மட்டுமே துக்கப்படுவார்கள்–(கடைசிவரை இவனை திருத்தவே முடியவில்லையே என்று)-
அணில் குட்டி அனிதா:- ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஹா………….நான் எஸ்கேப்பு… .. அம்மணி ரெம்ப சூடா இருக்காங்கோ………….நான் எஸ்ஸ்ஸ்ஸ் ஆயிக்கிறேன்ன்ன்ன்னுங்க….நீங்களாச்சு, அவங்களாச்சு…..
பீட்டர் தாத்ஸ்:- The scars you acquire by exercising courage will never make you feel inferior.
அடித்துக்கொண்டு சாகுங்கள் ஆணவக்காரர்களே!!
Posted by : கவிதா | Kavitha
on 11:55
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
48 - பார்வையிட்டவர்கள்:
akka nan solla vanthathu ungala tension agama iruka solli:)
இவ்வளவு கோபப்படுகிறீர்கள்.
முன்கதைச் சுருக்கம் தெரியாததால் குழம்புகிறேன்.
என்ன நடந்தது?
ஒரு ஆணையே உலகம் என்று நம்பி இருக்கும் பெண்ணை நாம் கண்டிக்க வேண்டுமேயல்லாது, “உன்னையே நம்பி இருப்பவளிடம் இப்படி நடந்து கொள்ளலாமா” என்று ஆணிடம் மடிப்பிச்சை கேட்க கூடாது. ஏனெனில் ஒரு பெண் தன்னை சார்ந்து நிற்கும் துணிவு இல்லாத வரை அவளுக்கு கிடைப்பது நிச்சயம் உரிமைகளாக இருக்காது. ஆணாதிக்கத்தின் முகத்தில் அறையும் அருமையான வரிகள், வாழ்த்துக்கள் கவிதா.
தோழமையுடன்
ஸ்டாலின்
கவிதா ஒரு ரெண்டு மூனு நாள் தமிழ்மணத்தில் இருந்து லீவ் எடுத்துக்குங்க.
பதிவுக்கு உள்ள என்ன கருமத்தை வேண்டுமானாலும் எழுதட்டும். தலைப்பையும் இப்படியே வைக்கிறானுங்க. அதனால் நான் ரெண்டு நாள் லீவ்.
//ஒரு ஆணையே உலகம் என்று நம்பி இருக்கும் பெண்ணை நாம் கண்டிக்க வேண்டுமேயல்லாது//
:) ஆணை எல்லா நேரத்திலும் சார்ந்து இருப்பவள் தான் பெண், ஆணிலில்லாமல் அவளும் உலகத்துக்கு வந்துவிட முடியாது... இல்லையா.. ?? பெண்ணின் ஒவ்வொரு பருவத்திலும் பெண் யாரோ ஒரு ஆணை சார்ந்து தான் இருக்கிறாள்.
//உன்னையே நம்பி இருப்பவளிடம் இப்படி நடந்து கொள்ளலாமா” என்று ஆணிடம் மடிப்பிச்சை கேட்க கூடாது. //
இது மடிப்பிச்சை இல்லை - உண்மை, யதார்த்தம்..
//ஏனெனில் ஒரு பெண் தன்னை சார்ந்து நிற்கும் துணிவு இல்லாத வரை அவளுக்கு கிடைப்பது நிச்சயம் உரிமைகளாக இருக்காது.//
துணிவு என்பது எப்போது ஒரு பெண்ணுக்கு?.. அந்த துணிவுக்கும் ஏதோ ஒரு வகையில் ஒரு ஆணின் துணை தேவை இருக்கிறது.. இதோ நீங்கள் என்னை ஊக்குவிப்பது போன்று.
சார்ந்து இருத்தல் என்பதற்க்கும் துணிவுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று தெரியவில்லை. நான் துணிவாக இருப்பதால் ஒருவரை சார்ந்து இருக்க கூடாது என்று அர்த்தம் இல்லையே...
//ஆணாதிக்கத்தின் முகத்தில் அறையும் அருமையான வரிகள், வாழ்த்துக்கள் கவிதா.//
நன்றி... :)
நன்றி கோவி கண்ணன்,
நன்றி குசும்பன், லீவு எடுத்தாக்கூட மெயில் அனுப்பி விஷயத்தை புரிய வைக்கறாங்க........... :(
கவிதா அக்கா,
நல்லதைச் சொல்லவும் பெண் வேண்டும் என்பதை பதிவின்(கோபத்தின்) மூலம் அழகாக உணர்த்தியுள்ளீர்கள்………(ரொம்பத்தான் கோபப்படுகின்றீர்…)
சில மதிகெட்ட மாந்தர்களுக்கு அம்மாவும், அக்காவும், மனைவியும், தங்கையும், மகளும் பெண்னென்பது சில வேளைகளில் புரிவதில்லை..(புரியாதது போல் நடிக்கின்றார்கள்;.)
//வெட்காமாயில்லை…………..?????????//
இதுக்கு மேல எப்படி கேக்கறது?.
சம்பந்தப் பட்டவங்களுக்கு உறை(தை)ச்சா சரி.
கவிதா அருமையா எழுதி இருக்கீங்க.. ஹும் ... வேறென்ன சொல்ல இந்த நேரத்துல :(
:-!
:-O
:-(
:-X
(மேல இருக்க ஸ்மைலி எதுவுமே உங்க இடுகைக்கு இல்லை).
:-X :-X :-X :-X :-X
கோபி, எனக்கு புரியல...
என்னான்னு சொல்லிடுங்க..
முத்துலெட்சுமி, மருதமூரான், விஜயன்...அனைவருக்கும் நன்றி !
\ அய்யனார் said...
கவிதா
நிம்மதியாயிருக்க சில வழிகள்
தேன்கூட்ட பிளாக் பண்ணிடுங்க..தமிழ்மணம் பக்கம் அநாவசியமா வரவேனாம்..முடிஞ்சா கூகுல் ரீடர் பயன்படுத்துங்க...இல்லன்னா எதையும் படிக்க வேணாம்..ரொம்ப நாள் பெண்டிங் வேலையெல்லாம் இப்ப முடிங்க
:)\\
ரீப்பிட்டேய் :(
அருமையான கவிதை கவிதா. ஆனால் பலனெதுவுமிருக்குமென்று எனக்குத் தோன்றவில்லை.
கோபிநாத், நன்றி -முயற்சிக்கிறேன்..!!
லக்ஷ்மி...
//அருமையான கவிதை கவிதா. ஆனால் பலனெதுவுமிருக்குமென்று எனக்குத் தோன்றவில்லை. //
ம்ம்..நன்றாக தெரியும்,..பலன் இருக்காது என்றாலும், என் மன பாரமாவது குறையுமில்லையா?...
:-! = ஆச்சர்யம் (என்ன நடக்குது?)
:-O = ஐய்யைய்யோ (இதான் நடக்குதா)
:-( = வருத்தமா இருக்கு (அடிச்சிக்கறாங்க).
:-X = வாயை ப்ளாஸ்திரி போட்டு ஒட்டனும் (எனக்கு சம்பந்தமில்லாததை பேசாம இருக்கனும்)
எல்லாமே இப்போ நடக்கும் நிகழ்வுகளால் எனக்கு அதே வரிசையில் வந்த உணர்வுகள். உங்கள் இடுகைக்கு தொடர்புள்ள ஸ்மைலீஸ். அதே சமயத்தில் இடுகைக்கான ஸ்மைலீஸ் அல்ல..
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பாஆஆ. இப்பவே கண்ணக் கட்டுதே...
இப்படி பின்னூட்டத்துக்கு விளக்கம் கேட்டு, குடுத்துக்கிட்டு இருந்தா எப்படி... நான் கொஞ்ச நாள் வலைப்பதிவுக்கு லீவு போட்டுட்டு போய் வேற வேலையப் பாக்கலாம்னு நெனைக்கறேன்.
"ஆணா"வக்காரர்களே! - புகுத்திய பிழை பொருளை இருமடங்கு உயர்த்துகிறது - நன்று
மக்களே இப்ப தமிழ்மணத்திலேயும், தேன்கூட்டிலேயும் நடக்கிற அசிங்கமான கூத்துகளைப் பார்க்கும்போது எனக்குத் தோனறதெல்லாம் - "படிப்பு மட்டுமே ஒருத்தருக்கு நாகரீகத்தைக் கொடுக்காது" என்பதுதான். எங்க கிராமத்தில படிக்காதவங்க கூட (அட ஒரு போக்கிரி கூட!) சொல்லக்கூசும் வார்த்தைகளை இவிங்க சர்வசாதரணமா சொல்லறாங்க. இவிங்க ஒரு கோஷ்டியா (ஒரு முடிவோடு!!) ஒரு ஆளைத்தாக்க, அந்தப் பக்கம் அதைவிட மோசமான எதிர்வினை.
எங்க ஊர்ல சொல்லுவாங்கா "ரெண்டு நல்லவங்க எதிர்க்க எதிர்க்க வந்தா மூனு பாதை, ஒரு நல்லவன் ஒரு மோசமானவன் எதிர்க்க எதிர்க்க வந்தா ரெண்டு பாதை, ரெண்டு மோசமானவங்க எதிர்க்க எதிர்க்க வந்தா ஒரே பாதைதான்" அப்படினு.
மேலே சொன்ன பழமொழிய வச்சுப் பார்த்தால் இங்க ஒரே பாதையில் ரெண்டு கோஷ்டி அல்லாடுற மாதிரி தெரியுது.
பெரியார் ஒருமுறை சொன்னதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். (எனது நியாபகத்திலிருந்து) பெரியாரைப் பற்றி ஒருவர் தவறாகப் பிரசாரம் செய்துகொண்டிருந்தாராம், பெரியார் தொண்டர்கள் அது பற்றி பெரியாரிடம் சொல்லி, நீங்கள் அதற்கு மறுப்பு சொல்லவேண்டும் என்று கேட்டனராம். அதற்கு பெரியார் "எனக்கு பிட்டத்தில் சிரங்கு என்று எவனாவது சொன்னால் நான் அப்படி இல்லை என்று ஒவ்வொருத்தரிடமும் சென்று தூக்கிக் காட்டிக்கொண்டிருக்கமுடியாது - கண்டுக்காம நாம நம்ம வேலையைப் பார்ப்போம்" என்று சொன்னாராம்.
எதிர்ப்பு வேண்டியத்துதான், ஆனால் இப்படியா? "ஒரு முட்டாளுடன் விவாதம் செய்யாதே, அப்புறம் யார் முட்டாள் என்று தெரியாமல் போய்விடும்" என்பது இந்தப் படித்த மேதைகளுக்குத் தெரியாமல் போய்விட்டது.
ம்! ஹய்யோ! ஹய்யோ!!
100 க்கு 100 தங்கள் கருத்திற்கு எனது ஆதரவு.
கவிதா, நான் பதிக்க இருந்ததைப் பதிவிட முடியாமல் தங்கள் பதிவில் இட்டேன். இப்போது திரட்டியில் வந்துவிட்டது. தங்களுக்கு விருப்பமிருந்தால் பதிப்பியுங்கள்
சொத்து தகராறா
சொந்தபந்த தகராறா
விளைநிலத்தில் தகராறா
விற்பனையில் தகராறா
எந்த தகராறுன்னு
கச்சகட்டி வந்தீக
என்ன சொல்லனும்னு
இம்புட்டு தூரம் வந்தீக
ஆத்தாள திட்டனுமா
பெத்தவள திட்டனுமா
பிறந்தவள திட்டனுமா
பேரு வச்சவள திட்டனுமா
சண்டைக்கு வந்தீகளே
சந்திக்கு வந்திட்டீக
சண்டை நின்னபுறம்
சாதிச்சத சொல்லுமைய்யா
இருக்குற சண்டைக்கெல்லாம்
ஆத்தாவ திட்டனுமா
கிடைக்கிற சாக்கிலெல்லாம்
பிறந்தவள திட்டனுமா
பேசிவிட்ட வார்த்தையெல்லாம்
போய்விடுமா வாயவிட்டு
வீசிவிட்ட நாத்தமெல்லாம்
கழுவிவிட்டா போயிடுமா
புண்ணாக போனப்புறம்
மருந்தாக வருவீரா
மண்ணாக போனப்புறம்
மணத்தோடு வருவீரா
சொன்னாக்க கேட்பேன்னு
சொல்லிபுட்டேன் உன்கிட்ட
வில்லாக புறப்பட்ட
விசனத்தை நிறுத்திக்கைய்யா -
தியாகு
கலக்கல் கவிதா..கலக்கல்...
தாய்குலம் சார்பில போட்டதுக்கு நன்றி
அம்மாக்களை, சகோதரிகளை சந்திக்கு இழுத்து சண்டையிட்டுக் கொண்டிருக்கும் ஆணவக்காரர்களுக்கு - தங்களின் கவிதை ச(சா)வுக்கு அடி.
வீரமுள்ள 'ஆண்' மகன்கள் வீதியில் அடித்துக் கொண்டு புரளட்டுமே, அப்பாவி அம்மாக்கள் என்ன செய்வார்கள் ?
Thnx Kovi
அன்புள்ள கவிதா,
இந்த இடுகைக்கு இப்படி ஒரு பின்னூட்டம் போடுவது ஒருவேளை உங்களுக்கு எரிச்சலைத்தரலாம். இருந்தாலும் எனக்கு சொல்ல வேண்டும் என்று தோன்றியதால் சொல்கிறேன். பெரும்பாலும் கெட்டவார்த்தைகள் பெண்களை இழிவுபடுத்துவதாகவே இருக்கின்றன. இதற்கு ஆதங்கப்பட்டே நீங்கள் இந்த இடுகையை எழுதியிருக்கிறீர்கள் என்பது எனக்குப் புரிகிறது. இந்த இடுகைக்கு வந்த பெரும்பான்மையான பின்னூட்டங்கள் இதை ஆணாதிக்கம், பெண்களை வெறும் போகப்பொருட்களாகப் பார்க்கும் போக்கு என்று விமர்சித்து வருகின்றன. எனக்குத்தோன்றுவது என்னவென்றால் இதுபோன்ற கெட்டவார்த்தைகளை பயன்ப்டுத்துவது ஆண்கள் மட்டும்தானா? பெண்களும் நிறைய பயன்படுத்துகிறார்களே. இன்னும் சொல்ல்ப்போனால் ஆண்களின் சண்டைகள் பெரும்பாலும் இரண்டு மூன்று கெட்டவார்த்தைகளோடு அடிதடிக்கு மாறிவிடும். பெண்களின் சண்டைகள் இரண்டு மூன்று மணிநேரமானாலும் இத்தகைய அர்ச்சனைகளாகவே இருக்கும். வெறும் ஆணாதிக்கம் பெண்களை போகப்பொருட்களாக பார்க்கும் போக்கு என்று தட்டையான காரனங்களைச் சொல்லி விமர்சிப்பது வெறும் மேம்போக்கான விமர்சனம் என்று எனக்குப் படுகிறது. பாலுறவு என்பது ஆணுக்கு பெருமை தரக்கூடிய வெற்றியாகவும், பெண்ணுக்கு அவமானம் தரக்கூடிய தோல்வியாகவும் பார்க்கும் போக்கு இங்கு மட்டுமல்ல உலகம் முழுவதுமே நிலவுகிறது. அத்தகைய மனப்போக்குதான் ஆணாதிக்கத்திற்கே அடிப்படை என்று நான் நினைக்கிறேன். உடலுறவில் பெண்ணின் பங்கு ஒன்றும் அத்தகைய அவமானம் தரக்கூடிய ஒன்றல்ல என்ற நினைப்பு மக்களிடம் வருமானால் பெரும்பாலான ஆணாதிக்ககூறுகள் உடைபடக்கூடும். இப்போது சில பதிவுகளை வாசிக்கும்போது தோன்றுவது என்னவென்றால் பிரச்சினையே அங்குதான் ஆரம்பித்திருக்கிறது போலிருக்கிறது.
கவி, இந்த மேட்டர் பேசுவதே இல்லை என்று தீர்மானம், அந்தளவுக்கு வெறுத்துப் போச்சு.
//இப்படி பின்னூட்டத்துக்கு விளக்கம் கேட்டு, குடுத்துக்கிட்டு இருந்தா எப்படி... நான் கொஞ்ச நாள் வலைப்பதிவுக்கு லீவு போட்டுட்டு போய் வேற வேலையப் பாக்கலாம்னு நெனைக்கறேன்.//
கோபி, ஸ்மிலியில இவ்வளவு விளக்கம் இருக்கும்னு நிச்சயமா நான் நினைக்கல.. இப்பத்தான் புரியுது.. இப்படி தெளிவாக சொன்னால் தானே என்னை போன்றவர்களுக்கு புரியும்..?!! :))
லீவு போட்டாலும் நாங்க விடுவோமா? மெயில் அனுப்பி இல்ல அப்டேட் பண்ணுவோம்...
//"ஆணா"வக்காரர்களே! - புகுத்திய பிழை பொருளை இருமடங்கு உயர்த்துகிறது - நன்று //
ரஞ்ஜித், ஒரு தப்புத்தான் பார்த்தீங்களா... பதிவு முழுக்கவே நிறைய தப்பு செய்து இருக்கேன்.. கோபம் தலைக்கு ஏறி எழுதினது, கோபா மட்டும் இல்ல, ஆத்திரம், ஆதங்கம், அருவருப்பு இன்னும் என்ன என்னவோ சொல்லலாம்..அதனால் நிறைய தப்பு... அதுக்காக தமிழ் நான் சூப்பரா எழுதுவேன்னு சொல்ல வரலை.. பிழைய திருத்திவிடுகிறேன்.. நன்றி...
//மக்களே இப்ப தமிழ்மணத்திலேயும், தேன்கூட்டிலேயும் நடக்கிற அசிங்கமான கூத்துகளைப் பார்க்கும்போது எனக்குத் தோனறதெல்லாம் - "படிப்பு மட்டுமே ஒருத்தருக்கு நாகரீகத்தைக் கொடுக்காது" என்பதுதான்//
நன்றி யாரோ ஒருவன்?!! :).
நானும் அடிக்கடி நினைக்கும் கருத்து இது, அசிங்கம் என்று வந்த பிறகு படித்தவர்கள், நாகரீகமானவர்கள் எல்லாம் ஒன்றும் இல்லை, எந்த அளவிற்க்கு வேண்டுமானாலும் இறங்கி செல்வார்கள் என்பதை புரிந்துக்கொள்ள வைத்து இருக்கிறார்கள்.
தியாகு -என்ன சொல்றதுன்னு தெரியல.. உங்கள் கவிதையை படித்து வாயடைத்து போய்விட்டேன்.. மிக நல்ல கவிதை.. மிக்க நன்றி.......!!
வாங்க மங்கைஜி (ஜி--னு கூப்பிட்ட ஒருத்தர் பதிவு போட்டு திட்டறாரு.. ஆனா எனக்கு பழகிவிட்டது..சரி திட்டறவங்க திட்டட்டும் என்ன செய்யறது வாங்கிக்கலாம்..:))
//கலக்கல் கவிதா..கலக்கல்...
தாய்குலம் சார்பில போட்டதுக்கு நன்றி //
ம்ம்..எதுக்கு நன்றி எல்லாம் சொல்றீங்க.. உங்களுடைய சமுதாய பார்வையைவிட எனக்கு ரொம்பவே கம்மித்தான்... :)
//பிறைநதிபுரத்தான் ...
அம்மாக்களை, சகோதரிகளை சந்திக்கு இழுத்து சண்டையிட்டுக் கொண்டிருக்கும் ஆணவக்காரர்களுக்கு -தங்களின் கவிதை ச(சா)வுக்கு அடி. //
நன்றி, உங்கள் பெயர் வித்தியாசமாக இருக்கு .. ஊர் பேரா??
//கவி, இந்த மேட்டர் பேசுவதே இல்லை என்று தீர்மானம், அந்தளவுக்கு வெறுத்துப் போச்சு. //
உஷாஜி, ம்ம்..நீங்க சொல்றது சரிதான், எனக்குமே தெரியும், ஆனாலும் மனசு கேட்கமாட்டேங்குது...:(
Kavitha.. May masam "nizhalaga thodarum ninaivugal"nu oru thodar aramicheengale? nala irundhuche .. adha konjam thodarengalen Pls
//Kavitha.. May masam "nizhalaga thodarum ninaivugal"nu oru thodar aramicheengale? nala irundhuche .. adha konjam thodarengalen Pls //
நித்யா.. என்னங்க ப்ளீஸ் எல்லாம் பண்றீங்க.. இன்னும் ஒரு சிலர் கேட்டுத்தான் இருக்கிறார்கள். சீக்கிரம் எழுதிவிடுகிறேன்... கண்டிப்பாக..
"புகுத்திய பிழை" - நீங்கள் அங்கே தெரிந்தே அப்படி மாற்றி தட்டச்சு செய்தீர்கள் என்று நினைத்தேன்.
செல்லா,
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் உதாரணத்தில் கொச்சையான நாத்தெமெடுக்கும் வார்த்தைகள் இல்லைதான் ஆனால் அதில் இருப்பது அருவெறுப்பான அழுகி நாறும் உங்கள் சிந்தனை படிமம். மேலும் மாற்றுக்கருத்துக் கூறும் ஒரு பெண்ணை கற்போடு சம்பந்தப்படுத்தி பேசி உளவியல் ரீதியாக அவள் வாயை மூடுகின்ற முனைப்பும் படுகேவலமான ஆணாதிக்க வக்கிரமும்தான் உங்கள் உதாரணத்திலிருந்து தெரிகிறது. போலியிடம் இருந்த அதே முனைப்பு, டோண்டுவின் பதிவில் பின்னூட்டம் போடுகிறவரின் தாயை, வீட்டு பெண்களை கற்போடு சம்பந்தப்படுத்தி பேசி ஓட வைக்க முயலும் அதே முனைப்பு... இருக்காதா பின்ன இன்று எவரை திட்டிக் கொண்டு திரிகிறீர்களோ நேற்று வரை அவருக்கு அத்தாரிட்டாயா இருந்தவர்தானே நீங்க அவருக்கு இருந்த சிந்தனை ஓட்டம்தானே உங்களுக்கும் இருக்கும்.. இன்னைக்கு உங்கள போலி திட்டின உடனே ஒட்டுமொத்த பதிவர்களையும் ஊறுகாயா சேர்த்துக்கிறீங்க.. இன்னும் கொஞ்சம் தூக்கலா இருக்க பெண்ணுரிமையையும் சேர்த்துக்கிறீங்க. ஆன போலிக்கும் உங்களுக்கும் உமியளவும் வேறுபாடு கிடையாது. கவிதா அடித்துக் கொண்டு சாகுங்கள் என்று எழுதிய கவிதை முழுக்க முழுக்க நியாயமானது. உங்களுடைய ஆணாதிக்க திமிர் தெறிக்கும் இந்த படுகேவலாமான வரிகளை நான் வன்மையாக கண்டிகிறேன்
"அவர்கள் 2, 3 வார்த்தையோடு அடித்துக்கொண்டு செத்து போனால் தான் நிம்மதியாக இருக்குமே..அப்படியா நடக்ககிறது?- கவிதா.
சகோதரி கவிதா நானும் அதையே வழிமொழிகிறேன்.
தியாகுவின் கவிதைக்கு சபாஷ்!
'உங்கள் பெயர் வித்தியாசமாக இருக்கு .. ஊர் பேரா??'- கவிதா
ஆமாம் சகோதரி! என்னுடைய ஊரின் பெயர்தான்.
திரு.காசி ஆறுமுகம் அவர்களுக்கு உங்கள் பின்னூட்டமும், செல்லா அவர்களின் பதிவும் என்னுடைய பதிவின் அர்த்தங்களை திசைதிருப்புகின்றன. அதனால் நான் பிரசூரிக்கவில்லை.
இது இந்த பதிவை பற்றிய பொதுவான தகவல் :-
எல்லோருக்கும் போலிக்கும் எத்தனை பிரச்ச்னை வேண்டுமானாலும் இருக்கட்டும், எனக்கு இதுவரை எந்த பின்னூட்டமும் அசிங்கமாக வரவில்லை என்பது சொன்னதில் என்ன தவறை கண்டு விட்டீர்கள்?.. வரவில்லை என்றால் வரவில்லை என்று தான் சொல்ல முடியும்.. அதற்கு என்ன காரணம் என்று போலியை தான் கேட்க வேண்டும்
இல்லை அசிங்கமான பின்னூட்டம் வரவேண்டும் என்று ஆசை படுகிறார்களா? எனக்கு புரியவில்லை...
சகோதரி கவிதா!
செந்தழல் தன்னுடைய பதிவில்
'சில நாட்களுக்கு முன்னால் விடாது கருப்பு பதிவில் என்னுடைய குடும்பம் பற்றி அவமானகரமான பதிவுகள் மூர்த்தி எழுதியபோது மூர்த்தி பற்றி என்னுடைய பதிவை நீக்குமாறும் அதற்கு பிரதி உபகாரமாக மூர்த்தி அவனுடைய பதிவுகளை நீக்குவான் என்றும் மடல் எழுதி மூர்த்தி பற்றியதான என்னுடைய பதிவை நீக்கவைத்தவர் இந்த கவிதா..' என்று எழுதியிருக்கிறாரே..?
குழப்பமாக இருக்கிறது...
//எல்லோருக்கும் போலிக்கும் எத்தனை பிரச்ச்னை வேண்டுமானாலும் இருக்கட்டும், எனக்கு இதுவரை எந்த பின்னூட்டமும் அசிங்கமாக வரவில்லை என்பது சொன்னதில் என்ன தவறை கண்டு விட்டீர்கள்?.. வரவில்லை என்றால் வரவில்லை என்று தான் சொல்ல முடியும்.. அதற்கு என்ன காரணம் என்று போலியை தான் கேட்க வேண்டும்
இல்லை அசிங்கமான பின்னூட்டம் வரவேண்டும் என்று ஆசை படுகிறார்களா? எனக்கு புரியவில்லை... //
silaruku athu than aasai pola, silar periya padipugal padithu enna payan avargalin manathil otti kondu irupathu aluku enbathu thaan ithil therikirathu. enna ulagam ada saami ithu thanaku oru kaan pochuna aduthavanuku en inum kaan pogavillai ena sandaipodukira kootam ondru inge alaiyuthada.:(
//சகோதரி கவிதா!
செந்தழல் தன்னுடைய பதிவில்
'சில நாட்களுக்கு முன்னால் விடாது கருப்பு பதிவில் என்னுடைய குடும்பம் பற்றி அவமானகரமான பதிவுகள் மூர்த்தி எழுதியபோது மூர்த்தி பற்றி என்னுடைய பதிவை நீக்குமாறும் அதற்கு பிரதி உபகாரமாக மூர்த்தி அவனுடைய பதிவுகளை நீக்குவான் என்றும் மடல் எழுதி மூர்த்தி பற்றியதான என்னுடைய பதிவை நீக்கவைத்தவர் இந்த கவிதா..' என்று எழுதியிருக்கிறாரே..?
குழப்பமாக இருக்கிறது... //
உதவி செய்தவர்களை எட்டி உதைத்து பார்த்து இருப்பீர்களா? சரி விஷயத்துக்கு வருவோம்.... செந்தழல் ரவி' யின் அம்மாவை அசிங்கமாக பதிவெழுதியது "விடாது கருப்பு", அவருக்கு தான் நான் கடிதம் எழுதினேன். அதை அவருடைய பதிவிலும் வெளியிட்டு இருந்தார். :) அனைவருமே படித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்... லக்கிலுக்கும், செல்லாவுக்கும் கூட மெயில் அனுப்பி அவர்களின் பதிவுகளையும் நீக்குமாறு வேண்டுகோள் அளித்தேன்.... இதை நான் மட்டுமே செய்தேனா என்றால் இல்லை.. இணையத்தில் உள்ள நிறைய நண்பர்கள் விடாது கருப்பு' விடம் இதை பற்றி பேசி எல்லோரையும் அமைதியாக்கினார்கள்.
பாத்திரம் அறிந்து பிச்சைப்போடு என்பார்கள்.. அதை உணர்ந்து கொண்டது இப்போது தான்.. ஏன் போலி டூண்டு என்ற வலைபதிவில் கூட என்னுடைய கடிதம் ஒன்று இருக்கிறது. சில பதிவர்களும் படித்து இருக்கின்றனர்.
எனக்கும் போலி டூண்டுவிற்கும் தொடர்பு இருப்பதாக செல்லாவும், ரவியும் எனக்கு மெயில் அனுப்பி போலிஸ்' க்கு போவதாக மிரட்டி இருக்கிறார்கள். இருவரும் வேண்டுமானல் அந்த கடிதத்தை வேண்டுமானலும் போலிஸ்'ல் காட்டலாம். :) அது நான் அவருக்கு எழுதிய முதல் நன்றி கடிதம்... எனக்கு அவர் ஆபாச பின்னூட்டம் இடாததால் நன்றி கூறி எழுதிய கடிதம்..
போலிஸ்க்கு போக நான் தயார்... :) இவர்களை இங்கே சந்திப்பதை விட அங்கே சந்திப்பது தான் "Wise Decision" என்பது என் கணவரின் எண்ணம். சீக்கிரம் வரட்டும்...:)
இன்னொன்று- நேற்று சீனு' வுக்கு கூட மெயில் அனுப்பினேன்.. ஏன் குழலியின் சாதியை எதிர்த்து கமென்ட் போட்டீர்கள்..அதை நீக்குங்கள் குழலி வேதனை படுவாறே என்று.
ஐயா..சீனு... நீங்கள் ஏதாவது செய்ய போகிறீர்களா?????
//silaruku athu than aasai pola, silar periya padipugal padithu enna payan avargalin manathil otti kondu irupathu aluku enbathu thaan ithil therikirathu. enna ulagam ada saami ithu thanaku oru kaan pochuna aduthavanuku en inum kaan pogavillai ena sandaipodukira kootam ondru inge alaiyuthada.:( //
ஆமாம்,அந்த அசிங்கத்தை தான் செல்லா இப்போது நிறைவேற்றி விட்டாறே... நல்லது தான்.... போலிஸ்க்கு அவர் போகும் போது இதுவும் எனக்கு சாதகமாகவே இருக்கும்.. :)
//ஆமாம்,அந்த அசிங்கத்தை தான் செல்லா இப்போது நிறைவேற்றி விட்டாறே... நல்லது தான்.... போலிஸ்க்கு அவர் போகும் போது இதுவும் எனக்கு சாதகமாகவே இருக்கும்.. :) //
hmm oorath therinjikittaen ulagam purinjikittaen kanmani en kanmani
njaanam porandhiruchchu naalum purinjiduchchu kanmani en kanmani paatu than nyapkam varuthu ipo:)
nanum last one year a blogs padichutu varen ingae nadkura arasiyal a paathu siripatha aluvathanu theiryalai.
வேணாம்டா விட்டுடுங்கடான்னு சொன்னா உங்களை கடிச்சுட்டாங்க பார்த்தீங்களா ,
நாய் சண்டையில் தலையிட கூடாது .
அதுவும் இது தெரு நாய் சண்டை .
இந்த செந்தழல் இரவி ஒரு ஆள்காட்டி பய அவன் தான் இவனை தாக்கு இவனை போடுன்னு சொல்லிகொண்டு திரிந்த நபர் .
அப்புறம் அவர்களுக்குள் முட்டிக்கவும் கடிச்சுகிறானுக.
//நியாயவான்கள் கல்லெறியட்டும் // என நீங்கள் கேட்டது நேர்மையான கேள்வி
"உங்களையே
உலகமென்று நம்பும்
ஒரு பெண்ணை க்கூட
நீங்கள்
விட்டுவிடக்கூடாது - "
இந்த வரிகள் ஆணாதிக்க சிந்தனையல்லவா?
hmm ipo sound vittu kondu irukira inthe chella konja nalaiku munna konjikittu thana irunthar thozhar athu ithunu ipo mattum ennavo punithar pola vesam podurar.
http://osaichella.blogspot.com/2007/08/blog-post_12.html
//
சும்மா அதிருதில்ல.... இது என் கமெண்ட்! .. வெல்டன் கருப்பு! ... அப்புறம் யாரவது இந்த க்ட்டுரை பற்றி முருகனடிமை உண்மைத்தமிழன் கிட்ட சொல்லுங்கப்பா! - ஓசை செல்லா//
the above post by chella was made few days after karuppu posted badly abt ravi mother. and the blogger called masila also has thanked karuppu in the comments of the same post.
//
மாசிலா said...
நல்ல பதிவு செல்லா.
விடாது கருப்புவிற்கு நன்றி.
வாரியார் எப்போதுமே எனக்கு ஒரு காமெடியனாகவே தென்பட்டு வந்தார். அந்த கருத்தை இந்த பதிவு மாற்றிவிட்டது.
//
மண் புழுக்களில் ஆண் பெண் இல்லை. உறவு வேண்டும்போது இரண்டு புழுக்கள் சண்டையிடும். வென்றது ஆணாகவும், தோற்றது பெண்ணாகவும் மாறிக்கொள்ளும்.
எனக்கென்னவோ பரினாம வளர்ச்சியில் எங்கோ ஒரு மரபணுவில் இது ஒளிந்திருக்கிறதோ எனத் தோன்றுகிறது.
-----------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.
//////
அடித்துக்கொண்டு சாகும்
ஆணவக்காரர்களே…
உங்களின் வீரத்திற்கு ??!!
பின்னால் கூட
பெண் வேண்டுமா????…….
வெட்கமாயில்லை…………..?????????
////
சவுக்கடி
//////
அடித்துக்கொண்டு சாகும்
ஆணவக்காரர்களே…
உங்களின் வீரத்திற்கு ??!!
பின்னால் கூட
பெண் வேண்டுமா????…….
வெட்கமாயில்லை…………..?????????
////
சவுக்கடி//
பிரபு - நன்றி..!!
Post a Comment