அணில் குட்டி அனிதா:- கவிதா 6 நாளில் எடைகுறைத்த நிஜத்தை எழுதபோவது நான் தேன்..வேற யாரு?? அம்மணி எவ்வளவு மிரட்டியும் இந்த ரகசியத்தை உங்கக்கிட்ட சொல்லாம விடறது இல்லைன்னு கலத்துல இறங்கிட்டேன்ங்க.........அம்மணியின் சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாத நெஞ்சம் படைத்த அசிங்கம்..ச்சே..ச்சே........சிங்கம்” இந்த “அணில்குட்டி” ன்னு சொல்லி, இந்த கதையல்ல நிஜத்தை எழுதுகிறேன்...
கவிதாவுக்கு எப்பவும் மார்கண்டேயினி'ன்னு நெனப்பு... அவங்க பையன் குழந்தையா இருக்கும் போது.........கவிதாவ எல்லாரும் அவனுக்கு “அம்மா” ன்னு சொன்னாங்க..பையன் கொஞ்சம் பெரிசா ஆனதும், பையனுக்கு “அக்கா” ன்னு சொன்னாங்க.. அதனால இப்போ அவங்க பையனுக்கு “தங்கச்சி” ன்னு சொல்ல வைக்கனுமாம்?!!!. ம்ம் ஆசை யாரைவிட்டது..அதுவும் இது பேராசை..யாராவது ரோடுல பார்த்து..என்னங்க உங்க பையன் வளர்ந்துகிட்டே போறான்..நீங்க..இன்னும் அப்படியே இருக்கீங்கன்னு சொல்லிட்டா போதும்..அம்மணிக்கு தலக்கால் புரியாது,..அன்னைக்கு பூரா..சீனோ சீன் தான்... என்ன நவீனோட “பாப்பா” ன்னு (அவங்க சொல்லல இவங்களே சொல்லிக்குவாங்க) சொன்னாங்கன்னு, பில்டப் பண்ணி சொல்லிக்குவாங்க..(ரொம்ப over தான், பீப்பா மாதிரி இருந்துக்கிட்டு பாப்பா ன்னா?) என்னத்த பண்ண, எனக்கு தங்கச்சி” ன்னு சொல்லாத வரைக்கும் நான் பிழைச்சேன்.
பீப்பாவின் sorry sorry ! பாப்பாவின் எடையை குறைக்க என்ன வழின்னு யோசிச்சி, gym க்கு போலாம்னு முடிவு பண்ணாங்க. ஆனா வீட்டுல ஆத்துகாரர் சரின்னு சொல்லனுமே?! நைசா matter ஐ ஆரம்பிச்சாங்க.. அவரோ ஒரு super look விட்டுட்டு, “உனக்கு அவசியம் தானா.. சும்மா இருக்கும் போதே அங்க கொடையது, இங்க குத்துதுன்னு சொல்லுவ..gym எல்லாம் உனக்கு சரிவராது, படுத்துடுவ..ன்னு” சொல்லிட்டு விட்டா பரவாயில்லையே.. “உனக்கு என்னமா.. இப்பவும் கல்யாணம் பண்ணப்ப எப்படி இருந்தியோ அப்படியே தான் இருக்க “ என்றார்.
ம்ம்..இதுக்கு நீ குண்டாத்தான் இருக்கேன்னு நேரடியா சொல்லியிருக்கலாம். புருஷன்காரன் சொல்லி எந்த மகராசியாவது கேட்டதா சரித்தம், பூகோளம் இருக்கா?! நம்ம கவிதாவும் அப்படிதான்.. விடறதா இல்லை, “அப்படின்னா நான் தினமும் 2 வேலைதான் சாப்பிடுவேன், ஒரு வேலை பட்னி இருப்பேன்” னாங்க. அவரோ.. “நீ 3 வேலை சாப்பிடாம இருந்தாலும் பரவாயில்ல gym க்கு போகக்கூடாது” ன்னு சொல்லிட்டாரு. அம்மணி, விடல, நச்சறிச்சு, உண்ணாவிரதம் இருந்து, கடைசியில “என்ன பிரச்சனை வந்தாலும் என்னை (அவரை) தொந்தரவு செய்ய கூடாதுன்னு”சொல்லி, பர்மிஷன் குடுத்தாரு.
முதல் நாள் போனாங்க.. exercise எப்படி செய்யனும், எவ்வளவு நேரம் செய்யனும்னு சொல்லி கொடுத்தாங்க. வேகாதி வேகமா செய்ய ஆரம்பிச்சாங்க.. அம்மணி உள்ள போனதும், fan போட்டுக்கிட்டு தான் exercise பண்ணுவாங்க. ஆனா அந்த gym ஆளுங்க fan எல்லாம் போடக்கூடாது, வியர்வை வராதுன்னு சொல்லிடாங்க. அப்புறம் தான் அம்மணிக்கு பிரச்சனை நம்ம அண்ணன் “கொசு” மூலமா வந்தது. அம்மணிக்கு கொசுன்னாவே அலர்ஜி, bus, train ல போகும் போது கூட கொசுவத்தி ஏத்தி வச்சிகிட்டு போற கேசு.. இங்க ஒன்னும் முடியில.. கொசுவ விரட்டுவாங்களா?..வேக வேகமா exercise பண்ணுவாங்களா.?? பாக்க கொஞ்சம் பாவமா இருந்தது.. போன 2 -3 நாள்ல அவங்களுக்கு நின்னுடலாம்னு ஆயிடுத்து............
ஆனா ஆத்துக்காரரும், பையனும் கிண்டல் பண்ணுவாங்களேன்னு போய் வந்துக்கிட்டு இருந்தாங்க..3 ஆவது நாள் முடிந்த நிலையில்.. இராத்திரி தூங்கும் போது “உம்” கொட்ட ஆரம்பிச்சிட்டாங்க.. “அப்பவும்..இதெல்லாம் உன் உடம்புக்கு சரிவராது..நிறுத்திடுன்னு, அவங்க வீட்டுல வூட்டுக்காரரும், பையனும் சொல்லி பாத்தாங்க…. ம்ம்.. இவங்க எங்க...!! எப்படியும் ஒரு 5 கிலோ குறைச்சிட்டு தான் நிறுத்துவேன்னு சொல்லிடாங்க.. 4வது..நாள்...இராத்திரி.. பூரா உடம்பு வலியில தூக்கம் வராம கஷ்டப்பட்டாங்க.........ஆனாலும் எங்க கவிதா யாரு? விடுவாங்களா.. .5..நாள்..உடம்பை யாரோ முறுக்கி எடுக்கிற மாதிரி வலி, அப்புறம் லேசா சுரம் வந்துவிட்டது.. இராத்திரி ஒரு 1.30 மணி இருக்கும்..அம்மணிக்கு ஜன்னியே வந்துடுத்து.. இவங்க அனத்தறது தாங்கமுடியாம, இவங்க hubby என்னாச்சுன்னு தொட்டு பார்த்தா..?!! fever எகுறுது...105 டிகிரி....... அவரு அப்ப கோவத்தை காட்டமுடியாம..அர்த்த இராத்திரியில ஆஸ்பித்திரிக்கு கூட்டிட்டு போனாரு..
இவங்க வீட்டு பக்கதுல..ஒரு super டாக்டர் “தம்பதி” சகிதமா ஆஸ்பித்திரி நடத்தி ஓஹோன்னு சம்பாதிக்கறாங்க. 24 மணி நேர ஆஸ்பித்திரி என்பதால் அங்க கூட்டிட்டு போனாங்க.. எப்படா பேஷண்டு வருவாங்க அட்மிட் பண்ணலாம்னு ஒரு கும்பலே அங்க காத்துக்கிட்டு இருந்தது.. ஒரு நர்ஸ் அக்கா, அம்மணி போட்ட சீனை பார்த்துட்டு..”இவங்க ரொம்ப சீரியஸ்ஸா இருக்காங்க.!! டாக்டர எழுப்பி கூட்டிட்டு வரோம்னு போனாங்க.. ம்ம்! வந்தாங்க டாக்டர் அம்மா, அவங்கள பார்த்தவுடனே அம்மணி சுரம் இன்னும் ஒரு டிகிரி ஜாஸ்தியாயிடுத்து........பின்ன என்னங்க,..அர்த்த இராத்திரியில பூதம் மாதிரி நைட்டீன்னு ஒன்ன மாட்டிக்கிட்டு..தல நிறைய (தூங்கறதுக்கு முன்னாடி வைச்சிருப்பாங்க போல) பூ வைச்சிக்கிட்டு...நெத்தி நிறைய பெரிய ரவுண்டு ஸ்டிக்கர் பொட்ட வைச்சிக்கிட்டு வந்தா.. பாக்கறவங்களுக்கு கதி கலங்கி போகாதா..?!!
வந்த டாக்டர் அம்மா, உடனே அட்மிட் பண்ணனும், டிரிப்ஸ் ஏத்தனும். ஜுரத்த குறைக்கனும்னு சொல்லி வேக வேகமா எங்க ஓடிட போறாங்களோன்னு ஒரு ரூம்ல போட்டு அடச்சி, டிரிப்ஸ் ஏத்த ஆரம்பிச்சிட்டாங்க...அடுத்த நாள் காலையில ஒரு பெரிய (மாத்திரை, ஊசி, மருந்து) லிஸ்ட் கொடுத்து வாங்கிட்டு வரசொன்னாங்க.. ஊசி மாத்திரமே ஒரு 20 இருக்குங்க.. அப்புறம் ஒரு நர்ஸ அம்மா வந்து, இரத்தம், யூரின் டெஸ்டு எடுக்க எழுதி கொடுத்தாங்க. அதுவும், அவங்க சொல்லற லேப்ல போய்த்தான் எடுக்கனுமாம். பாவம் அவங்க hubby, பெருங்குடியில், ஏதோ ஒரு சந்துல இருந்த அந்த லேப்பை கண்டுப்பிடிச்சி, கொடுத்து, ரிசல்ட் வாங்கி வர்றத்துகுள்ள நொந்து நூடுல்ஸ் ஆகி வந்தாரு,,,,,.
நம்ம கவிதா நிலைமைக்கு வருவோம், காலையில போட ஆரம்பிச்ச ஊசிங்க..நர்ஸம்மா..நிறுத்தல.. இந்த கை, அந்த கை, இந்த இடுப்பு, அந்த இடுப்புன்னு போட்டு தாக்கறாங்க...... எனக்கு சிரிப்பு அடக்க முடியல.........அம்மணிக்கோ வாய திறக்க முடியில. அந்த பக்கம் அவங்க hubby நடக்கறத எல்லாத்தையும் “மவளே வேணான்னு சொன்னேன் கேட்டியா, அனுபவி” ன்னு பார்த்து ரசிச்சிகிட்டு இருந்தாரு.. 3வது நாள் கவிதாவால பேசக்கூட முடியல..தட்டு தடுமாறி அவங்க hubby ஐ கூப்பிட்டு, “பழிவாங்கனும்னு முடிவோடதான் இருக்கீங்களா..படிச்சவரு தானே நீங்க?.. இவ்ளோ ஊசி போடறாங்க.. என்ன என்னவோ மாத்திர தராங்க என்ன ஏதுன்னு கேக்க மாட்டீங்களா?.. இன்னும் ஒரு நாள் இங்க நான் இருந்தா..எனக்கு சங்கு ஊத வேண்டியது தான்..என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுங்க..ப்ளிஸ்..”: கெஞ்ச ஆரம்பிச்சிட்டாங்க........... அவரோ ‘’அப்போ ஒரு நாள் கழிச்சே வீட்டுக்கு போலாம்னு” கூலா சொல்லிட்டு போய்ட்டாரு.. வாழ்க்கையில அவருக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை அவர் தவற விட தயாரா இல்ல.
சரி ..சரி.............சங்கு ஊதனாங்களா...இல்லையான்னு....அடுத்த பதிவுல பார்ப்போம்......
பீட்டர் தாத்ஸ் :- A new attitude invariably creates a new results.
6 நாளில் 5 கி எடை குறைந்த கவிதா-ஒரு உண்மை கதை ..
Posted by : கவிதா | Kavitha
on 15:49
Labels:
அணில் குட்டி
Subscribe to:
Post Comments (Atom)
7 - பார்வையிட்டவர்கள்:
புருஷன்காரன் சொல்லி எந்த மகராசியாவது கேட்டதா சரித்தம், பூகோளம் இருக்கா//
அனி இது ரொம்ப ஓவர் :-))))
ஆனா இந்த தத்துவம் எல்லாம் எங்கிருந்து பிடிக்கிறே?
ஆஸ்பிட்டல் போய்தான் உடம்பு குறைஞ்சுது - ஜிம்முக்கு போய் அல்ல என்று எழுதப்போறயாம்மா.
உடம்பு சுகமில்லாம இருக்கிறவங்கள கிண்டல் பண்ணி.... இந்த அளும்பு ஆவாது.
;-))))))))))
யக்கா கண்ணாடி முன்னாடி இருந்து எழுதுவிங்களா !!! ;-)
//புருஷன்காரன் சொல்லி எந்த மகராசியாவது கேட்டதா சரித்தம், பூகோளம் இருக்கா//
அனி இது ரொம்ப ஓவர் :-))))
ஆனா இந்த தத்துவம் எல்லாம் எங்கிருந்து பிடிக்கிறே? //
உஷாஜி, நானும் அதே தான் சொல்றேன்.. மகராசிங்க புருஷன் சொன்ன பேச்சி கேக்காம இருக்கறது..ரெம்ப ஓவர்ர்ர்ர்ர்ர்ர்ர்..:)))))
தத்துவும் எல்லாம் தானா வருதுங்க.... ரூம் போட்டு யோசிக்கற அளவுக்கு வசதி இன்னும் வரலை.....
//ஆஸ்பிட்டல் போய்தான் உடம்பு குறைஞ்சுது - ஜிம்முக்கு போய் அல்ல என்று எழுதப்போறயாம்மா.//
இல்லீங்கோ...சுல்தாஜி...அம்மணி வூட்டுக்காரு சொன்ன பேச்சி கேக்காததாலத்தான் இவ்ளோ பிரச்சனன்னு எழுது போறேங்கோ...
//உடம்பு சுகமில்லாம இருக்கிறவங்கள கிண்டல் பண்ணி.... இந்த அளும்பு ஆவாது.//
உங்களுக்கு அம்மணிய பத்தி தெரியாதுங்க.. தெரிஞ்சா.. நீங்களும் என்கூட சேந்து அளும்புவீங்க.... கவி'ய ஓட்ட நேரம் கிடைக்கும் போது எல்லாம் சரியா பயன்படித்திக்கனும்.. தெரிஞ்சிக்கோங்க...!!
//;-))))))))))
யக்கா கண்ணாடி முன்னாடி இருந்து எழுதுவிங்களா !!! ;-)
//
கோபி அண்ணே எவ்வளவு கஷ்டப்பட்டு உக்காந்து எழுதுனா...
இது வேறயா??? அம்மணி மூஞ்சிய அவங்களே பாத்து பயந்துபோய் ஜிரம் அதிகமான நிகழ்ச்சி எல்லாம் நிறைய இருக்கு..... அதை எல்லாம் எழுத ஆரம்பிச்சா எனக்கு ஜிரம் வந்துடும்..!!
இதுல கண்ணாடிய பாத்து வேற எழுதறாங்களா..?.. அண்ணே..ஏன் ஏன் ஏன் இப்படி எல்லாம் கேள்விக்கேட்டு என்னைய டென்ஷன் பண்றீங்க...?!!
தருதல அண்ணே......??! நல்லாவா இருக்கு....கவிதாவ பத்தி நல்லா தெரிஞ்சிக்கிட்டு... வந்து இப்படி கமெண்டு போடறது..
நோட் பண்ணி வச்சி, நீதான் அந்த தருதலையான்னு என்னைய வெளுப்பாங்க... கொஞ்சம் நல்ல கமெண்ட்டா போட்டுட்டு போங்கண்ணே.. இல்லாட்டி போடதீங்கண்ணோய்...
அம்மணிக்கிட்ட எப்பவும் கொஞ்சம் உஷாரா இருக்கறது நமக்கு நல்லதுங்கண்ணோய்...
Post a Comment