வெளிநாடுகளில் நம் குழந்தைகளின் வளர்ப்பு- ஒரு விவாதம் #2

முந்தைய பதிவு => வெளிநாடுகளில் நம் குழந்தைகளின் வளர்ப்பு- ஒரு விவாதம் #1 சென்ற பதிவின் தொடர்ச்சி :

கவிதா :    +Dyno Buoy  அமெரிக்க பெற்றோர், அமெரிக்க கலாசாரத்திற்கு சற்று லேட்டாத்தான் வராங்கங்கறதுக்கு என்ன காரணம் ?

Dyno Buoy  :  நான் ஒரு மாதத்திற்கு முன் கனடா சென்றிருந்தபோது என் கனேடிய நண்பர்களுடன் அதிக நேரம் இதைப்பற்றி விவாதித்தோம். பல விசயங்களை அலசினாலும் நாங்கள் பெரிய காரணம் என்று நினைத்து இதுதான்.

அமெரிக்கா வரும் இந்தியர்கள் இங்கே அசிமிலேட் ஆக அதிக நாள் ஆவதற்கு காரணம் இங்கே உள்ள விசா முறைதான். 90களுக்கு முன்னால் அமெரிக்கா வந்தவர்கள் சீக்கிரமே அசிமிலேட் ஆகிவிட்டிருப்பர், ஏனெனில் அவர்களுக்கு க்ரீன் கார்ட் வெகு விரைவில் கிட்டி இருக்கும். நாம் இங்கேதான் குப்பைக்கொட்டப்போகிறோம் என்று முடிவை சீக்கிரம் எடுத்துவிடுகிறார்கள். அதற்க்கான தயாரிப்புகளை விரைவில் செய்யத்துவங்கிவிடுகிறார்கள். ஆனால் ஹெச்1 விசாவில் வரும் ஒருவர் க்ரீன் கார்ட் என்று யோசிக்கவே 5 வருடம் ஓடி விடுக்கிறது. அதன் பின் 5 வருடம் சிட்டிசன்சிப்பிற்கு. ஹெச்1 பி விசாவில் இந்தியர்கள் மிகவும் அன்-செக்யூர்டாக உணர்கிறார்கள். ஒரு பர்னிச்சர், ஏன் படுக்கை வாங்கக்கூட மாசக்கணக்கில் யோசிப்பார்கள் (even if they could afford a $1000 bed), தரை விரிப்புகளில் தூங்கும் நிலையில் இருப்பார்கள். லான் பர்னிச்சர் (நம்மூர் மடக்கு பெஞ்ச்.சேர்)தான் வாங்குவார்கள். எப்போது வீடு காலி பண்ணிடணும்னே இருப்பாங்க. அந்த இன்-செக்யூரிட்டியில் அசிமிலேஷன் நடப்பதே இல்லை.

எங்களுக்கு தெரிந்த ஒரு நண்பர் எப்போதும் "உங்களுக்கென்ன எல்லாம் செட்டில்டு, நாங்க அப்படியா ஹெச் 1 சிங்கி அடிக்கிறோம்"னு ஒவ்வொரு தடவை மீட் செய்யும் போதும் சொல்வாய்ங்க. Its a matter of mindset னு சொன்னாலும் அவங்க ஆதங்கத்தை புரிஞ்சிக்கிடமுடியுது. ;)))

இன்னொரு கொடுமை (என் அளவில் மிக பெரும் கொடுமை) குழந்தை பெத்துக்கிடக்கூட விசா பாத்து முடிவு செய்யலாம் பாஸ்னு சொல்வாய்ங்க. அடப்பாவிகளே ஊர்ல என்ன பிச்சையா எடுக்கறீங்க... குழந்தை பிறந்தா சமாளிக்க முடியாத அளவா வறுமை. என்ன அதிக பட்சம் 2-3 லட்சம் அதிகமாகும், அதுக்காக குழந்த பெத்துக்கறதே தள்ளி வைக்கறதெல்லாம் எனக்கு டூ மச்சாகப்படும்! வீடு வாங்கறதும் அப்படிதான். சிட்டிசன்சிப் வாங்கீட்டு (குறைந்தபட்சம் க்ரீன் கார்ட்)தான் வீடே பார்க்கத்துவங்குவாய்ங்க. இப்படி ஒரு இன் செக்யூர்ட் லைஃப்.

ஆனா அதே பக்கத்து நாடான கனடாவில் பெரும்பான்மையோர் க்ரீன் கார்ட்டுடன்தான் போகிறார்கள். சட்டென்று அந்த நாட்டு குடிமகன்களைப்போல வாழ்கிறார்கள். நானும் நீயும் ஒன்னு என்று கனேடிய குடிமகனுடன் தோள்கொடுக்க முடிகிறது. இங்கே இந்த ஜாப் பேஸ்டு விசாவினால் கொஞ்சம் அடிமையைப்போல உணருகிறார்கள்!

கவிதா : ம்ம்ம்.. சம்மரியாக - அமெரிக்க பெற்றோருக்கு=> இன்செக்கியூரிட்டி மத்த நாட்டில் இருக்கவங்கள விட அதிகமா இருக்கு...
********
Sriram Narayanan :  பெண் குழந்தை வளர்ப்பு : 13-18 வயசு பொண்ணுங்க, ஜட்டியை விட ஒரு இன்ச் மட்டுமே அதிகமுள்ள சார்ட்ஸ் போட்டுக்கிட்டு போவதை பாக்கும் போது பயம் வரத்தான் செய்யும் - நாளை நம் பெண்ணும் இப்படித்தான் இருக்குமோன்னு...  ஆண் தொடர்பு, pre marital sex இவை இந்தியாவிலும் சகஜமாகிப் போன நிலையில் இப்பயம் எங்கிருந்தாலும் வரத்தான் செய்யும். அட்லீஸ்ட் அமெரிக்காவில் - பஸ்ஸில் தடவுவது, பீச்சில் வைத்து அசிங்கம் பண்ணுவது மிக மிகக் குறைவு

வெண்பூ வெங்கட் : இங்ககுழந்தை பொறந்து ஒரு ருசம் இருந்தோம், யாரும் க்கத்துலஇல்ல‌. ரொம்பநல்லாவே ர்க்கமுடிஞ்சது, இந்தியாவுலபெரியங்கஇல்லாமஷ்டமா இருந்திருக்கும்.

Sriram Narayanan : ஒரே ஒரு நிகழ்வில் வெறுப்பு வரும் - குழந்தைக்கு ஜுரம் அடிக்குதுன்னு டாக்டருக்கு போன் பண்ணா, மூணு நாளைக்க்கு மேல தொடர்ந்து 100டிகிரிக்கு மேல இருந்தா கூட்டிக் கிட்டு வாங்க, அதுவரை பொருத்திருங்கன்னு பதில் வரும். இதுதான் சரின்னு மூளைக்கு புரிந்தாலும், தொட்டதுக்கெல்லாம் Anti Biotic சாப்பிட்ட மனசு கேக்காது

கவிதா : //ஆண் தொடர்பு, pre marital sex இவை இந்தியாவிலும் சகஜமாகிப் போன நிலையில்// ஸ்ரீ... சகஜமா?? ஏங்க ஏன்ன்... செய்திகளை படிச்சிட்டு, சகஜம்னு சொல்லலாமா?

Sriram Narayanan : கவிதா : சென்னை, டில்லி போன்ற பெரு நகரங்களில் சகஜம்தான். உலா வரும் MMS கள் அப்படித்தான் சொல்லுகின்றன.. இது பத்தி உங்க கிட்ட இனியும் பேச முடியாது (pre marital sex) மத்த விசயங்களில் கவனம் செலுத்துகிறேன்.

சாப்பாடு ஒரு மேட்டரே இல்லை - நம்ம புள்ளைங்க இந்திய ஸ்நாக்ஸுக்கு ஈஸியா அடிமையாகிடுதுங்க, வீட்டில் பெரும்பாலும் தென்னிந்திய சமையல்தான், அதைத்தான் சாப்பிட்டு வளருதுங்க

*******
சுசி குணா:   1. இல்லாம போகும்னு நினைச்சதில்ல. ஏன்னா நாங்க இதையெல்லாம் பாதுகாக்கணும் வளர்க்கணும்னு வெளிநாட்டில இருந்திட்டு நினைக்கற அளவுக்கு தாய்நாட்ல இருக்கவங்க நினைக்கலையோன்ற ஒரு எண்ணம் எனக்கு இருக்கு. அதோட இந்த நாட்டவர்கள் எங்களோட கலாச்சாரம், பண்பாடுகளுக்கு மதிப்பும் மரியாதையும் குடுக்கறதோட அவங்க கலாச்சாரம், பண்பாட்டில இருக்கற நல்ல விஷயங்களை நாங்க பின்பற்றுறத விரும்பறாங்க, வரவேற்கிறாங்க.

2.
திட்டம், நடவடிக்கைன்னு எதும் இல்லை.. ஆனா பிள்ளைகள் இப்டித்தான் நான் வளர்ந்தேன் அப்டின்னு அறிந்துகொள்ளும்படியா சொல்லி இருக்கேன். கடைப்பிடிக்கணும்னு கட்டாயப்படுத்தல.

3.
என்னைப் பொறுத்தவரைக்கும் பிள்ளையின் மன நிறைவான வாழ்க்கைக்கு பின்னர்தான் மீதி எல்லாம். எங்கள் தலைமுறையை விட இப்ப இருக்கற, இனி வரப் போற தலைமுறை நோர்வேஜியருக்கு எம்மவர் கலாச்சாரம், பண்பாடு பற்றிய தெளிவு அதிகம் இருக்கறதால எங்க பசங்களுக்கு குழப்பங்கள், பிரச்னைகள் கம்மியா இருக்கும்னு தோணுது.

4.
என் பிள்ளைகளுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியும். நல்லா பேசுவாங்க. இந்த ஒரு விஷயத்துக்குத்தான் அவங்கள கட்டாயப்படுத்த வேண்டி இருக்கு. மத்தபடி பல விஷயங்களை அவங்க எங்களைப் பாத்து கத்துக்கறாங்க. உதாரணத்துக்கு சாமி கும்பிடுறது குழந்தைப்பருவத்தில சொல்லிக்குடுத்தேன். அப்பறம் விட்டிட்டாங்க. இப்ப கொஞ்ச நாளா அவங்களா ஒரு சக்தி இருக்குன்னு நினைச்சு கும்பிடறாங்க. சங்கீதம் நடனம்னு கத்துக்க வச்சேன். முடியாதுன்னாங்க. விட்டாச்சு. இதே போலத்தான் எல்லாமும். இப்படி ஒண்ணு இருக்குன்னு தெரிய வைத்தால் அது அவங்க மனசில பதிஞ்சிடும். மீதி அவங்க இஷ்டம். பிடிக்குதா தொடரட்டும். இல்லையா விட்டிடட்டும்.

5.
என்னைப் பொறுத்த வரைக்கும் வெளிநாட்டில பெண்குழந்தை ஆண்குழந்தைன்ற வேறுபாடு இல்லை. என் ஃப்ரெண்டோட அம்மா சொன்னது தான் எப்போதும் நினைவு வரும். 2 பொண்ணுங்கள எப்டி வளர்த்து கரை சேர்க்கன்னு நினைச்சாங்களாம். ஆனா 4 பசங்க இருந்தும் யாரும் அவங்க நினைச்சது போல இல்லையாம். தாய்நாட்ல இல்லையா தெருவுல சுத்தற பசங்க?? தாய்நாட்ல இல்லையா பழக்கம் சரி இல்லாத பொண்ணுங்க?? என்ன வெளிநாடுன்னதுமே ஒட்டு மொத்தமாவோ இல்லை அதிகளவிலயோ ஒழுக்கம் பண்பாடுன்னு எதிர்பார்க்கறாங்க. இந்த வகையில பாத்தா தாய்நாட்ல இருக்கற பிள்ளைகள் போல எந்த வகையிலவும் குறைவில்லாம தான் எங்க பிள்ளைகள் வளர்ராங்க. என்னதான் இந்த நாட்டு கலாச்சாரம் கலந்து வளர்ந்தாலும் அவங்களுக்குள்ள தெளிவான கட்டுப்பாடுகள் இருக்கு. கல்யாணம்னு வந்ததும்தான் குறிப்பா பெண் பிள்ளைகள தனியா பாக்கறாங்க. இதனாலயே எனக்குத் தெரிஞ்ச வரை பலர் தாய்நாட்ல இருக்கற பசங்கள கல்யாணம் செய்ய பயப்படறாங்க. எங்களைப் பொறுத்த வரைக்கும் எங்க பிள்ளைகள் நோர்வேஜியரை கல்யாணம் பண்ணினா கூட பறவால்ல. ஏன்னா இவங்க தாய்நாட்டுக்கு போய் இருக்கப் போறதில்ல. யாரா இருந்தாலும் அவங்க வாழ்க்கைய நல்லபடியா கொண்டு போகக்கூடிய ஒரு துணை கிடைத்தால் போதும்.

                                                                                   **********
முகிலன் தினேஷ்:  // பிள்ளைகள் இந்தியா பக்கம் வருவதையே விரும்புவதில்லை. இந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் என்று சொல்லமுடியாத அளவிற்கு அவர்களின் உடல் வளர்ச்சியும் வித்தியாசமாகவே உள்ளது. அதிக உயரம், அகன்ற உடல்வாகு. (Girl or a Boy heavy built),  அதே குடும்பத்தில் இங்கு பிறந்து வளர்ந்த குழந்தைகள் அப்படியில்லை.//

80
களின் இங்கு வந்தவர்களுக்கு அந்தக் காலகட்டத்தில் உடல்நலம் பற்றிய பெரிய பயம் என்பது இல்லை. அதனால் ஜங்க் ஃபுட் என்றழைக்கப்படும் துரித உணவுகள் அதிக உண்டதால் அந்த கூடுதல் எடை. இப்போது அந்த பயம் வந்துவிட்டது. எனக்குத் தெரிந்து பெரும்பாலான பெற்றோர் ஜங்க் ஃபுட் கொடுப்பதைத் தவிர்க்கிறார்கள்.

ஆனால், அதே சமயம் இந்தியாவில் ஜங்க் ஃபுட் சாப்பிடும் - கே.எஃப்.சி, மெக்டொனால்ட்ஸ் - பழக்கம் வந்திருக்கிறது. அதனால் இனி இந்தியாவில் வளரும் குழந்தைகள் ஹெவி பில்ட்டாகவும், அமெரிக்காவில் வளரும் குழந்தைகள் லைட் வெயிட்டாகவும் தெரியும் வாய்ப்புகள் அதிகம்.

சுசி குணா உடற்பருமன் அதிகம் என்ற பிரச்சனை பொதுவாவே இருக்குதுதான். எம்மவர் மட்டும்னு இல்லை. ஆனால் டீனேஜ் பருவம் வந்ததுமே 90% பிள்ளைகள் உடற்பருமனில் கவனம் எடுத்துடறாங்க. அதனால அடையாளம் அழியாதுன்னு நினைக்கறேன்.. 
  
Dyno Buoy  : அதாவது நாமாக, இந்தியர்களாக/தமிழர்களாக  பார்வைக்கு கூட நம் வருங்கால சந்ததியினர் இருப்பார்களா?

டிபென்ட்ஸ் ஆன் 2 திங்க்ஸ்!

1. வருங்காலம் என்பது எத்தனை நாள்
2. எத்தனை க்ராஸ் போலினேஷன்ஸுக்கு பிறகு.

இதற்கு பதிலாக இப்போதைய சென்வ்விந்தியர்களை உதாரணமா எடுத்துக்கலாம். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் சிலருக்கு அந்த ஃபீச்சர்ஸ் இருக்கு. ஜெனிட்டிக்கலி 1/16, 1/32 ன்ட் நேடிவ் அமேரிக்கன்ஸ்னு கூட இருக்கு. (அதை வச்சி அவர்களுக்கு நில உரிமை உட்பட்ட சில சலுகளும் அமெரிக்காவில் இருக்கு).  இந்தியர்களிலேயே ரெண்டு தலைமுறைக்கி மும்பய்ல செட்டிலானவிங்க முகத்தோற்றம் வெகுவாய் மாறியதை பார்த்திருக்கேன்.
 *******
O.R.B Rajaகவிதா, இந்த ப்ளஸ்ஸுக்கு நான் இன்னும் 10-15 வருடங்கள் சென்று வரேனே? :))
இப்போதைக்கு:
1.
கண்களை விற்றும் நிறைய அருமையான சித்திரங்கள் வாங்கலாம்.
2.
ஒரு கண்ணை விற்றும் சில அருமையான சித்திரங்கள் வாங்கலாம்.
3.
எனக்கு கண்கள்தான் முக்கியம்.
4.
எனக்குச் சித்திரங்கள்தான் முக்கியம்.

அவங்கவங்களுக்குப் பிடித்ததை, முக்கியத்துவம் கொடுப்பதை ஃபாலோ செய்யலாம். மேலே இருப்பதில், சித்திரங்கள் எவை என்பதில் இரண்டு அல்லது மேற்பட்ட மாறுபட்ட கருத்துகள் உண்டு :))
                                                   ===========================
விவாதத்தைப்பற்றிய என் கருத்து : பொதுவாக, நம் (இந்திய) கலாசாரம் என்பது => சங்கீதம், நடனம் கற்றுக்கொடுப்பது என்ற ஒரேமாதிரியான தகவலை நண்பர்கள் பகிர்ந்தது..... கொஞ்சம் ஆயாசத்தை தருகிறது.  இந்தியாவிலேயே வடமாநிலங்களில் இருந்துவிட்டு, பிடிக்கவில்லை என்று சென்னைக்கு ஓடிவந்துவிட்ட நண்பர்கள் சிலரை எனக்கு தெரியும். கேரளாவை, மலையாள திரைபடங்களின் மூலம் பார்த்து, லயித்து, அந்த பச்சை பசேலுக்கு ஆசைப்பட்டு அங்கு சென்றப்பிறகு தான் தெரிந்தது, சினிமா பச்சை வேறு, நேரில் காணும் பச்சை வேறென. எனக்கு மட்டுமல்ல என் பிள்ளைக்கும் அங்கு பிடிக்காமல் போக சென்னைக்கு ஓடிவந்தோம். இந்தியாவிற்குள்ளேயே இப்படி என்றால், வெளிநாடுகளில் சொல்லவே வேண்டியதில்லை. ஓ.ஆர்.பி.ராஜா சொன்னதைப்போன்று, இது தனிநபர் சம்பந்தப்பட்ட விசயமாகவே பார்க்கவேண்டியுள்ளது. அவரவரின் தேவை, எதிர்பார்ப்புகள், சூழ்நிலைகளுமே வெளிநாட்டில் நாம் வாழ்வதும் நம் குழந்தைகளை வளர்க்க முடிவு செய்வதும் நிர்ணயிக்கப்படுகின்றன.  
                                                                                                                                                                                                    .............. 2/2
                                                                      ==================================

அணில் குட்டி : அம்மணி பேச ஆரம்பிச்சாவே, அடிச்சி வாயமுட வைக்கனும். அவங்க பிரண்டுங்க எல்லாமும் அப்படித்தான் போல. .யப்பா எம்புட்டு பேசி இருக்காங்க. .படிக்கறதுக்குள்ள. .கண்ணக்கட்டுதே....  ஒரு ஜோடா ப்ளீஸ்...

பீட்டர் தாத்ஸ்: “Having a good discussion is like having riches”

பின் குறிப்பு: இந்த விவாதத்தை என்னுடைய வலைத்தளத்தில் பதிவு செய்ததில், எனக்கு கிடைக்கவிருக்கும் பணம், பதவி, விரைவில் எதிர்பார்க்கப்படும் வலைத்தளத்தில் மிகச்சிறந்த எழுத்தாளர் என்ற  'பட்டம்',  பாராட்டுகள், அதற்கான விழாக்கள் இன்னும் இத்தியாதி இத்தியாதிகள் அனைத்தையும் முழுமையாக   "இளா" விற்கு சமர்பிக்கிறேன்.

வெளிநாடுகளில் நம் குழந்தைகளின் வளர்ப்பு- ஒரு விவாதம் #1

ஜி+ ல் நண்பர்களுடன் மேற்கண்ட தலைப்பில் நடந்த ஒரு விவாதத்தை இங்கு பகிர்கிறேன். இது வெளிநாடு செல்லும் பெற்றோருக்கும்,  NRI'களுக்கும் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன். விவாதத்தில் கலந்துக்கொண்ட நண்பர்கள் பாஸ்டன் ஸ்ரீராம், முகிலன் தினேஷ், வெண்பூ,டைனோ, சுசிகுணா, ஓ.ஆர்.பி ராஜா & இளா.  

கவிதா : வெளிநாடுகளில் குழந்தை வளர்ப்பு, அதில் உள்ள பிரச்சனைகள். அநேகமாக நாம் இங்கு வளர்ந்தவிதம், பழக்கவழக்கங்கள், மொழி, கல்வி, வாழ்க்கை முறை, நம்பிக்கைகள், கலாசாரம் என எல்லாமே நம் குழந்தைகளுக்கு வேறுபடுகின்றன. வெளிநாடுகளில் பிறந்து/தங்கி வளரும் பிள்ளைகள் இந்தியா பக்கம் வருவதையே விரும்புவதில்லை. அந்நியர்களாகவே உள்ளனர். கடவுளை பிராத்தனை செய்வது முதல், சாப்பிடுவது, பேசுவது, பழகுவது வரை எல்லாவிதத்திலும் அவர்கள் அந்நியப்பட்டு இருக்கின்றனர். நம் குடும்பத்தை சார்ந்தவர்கள் என்று சொல்லமுடியாத அளவிற்கு அவர்களின் உடல் வளர்ச்சியும் வித்தியாசமாகவே உள்ளது. அதிக உயரம், அகன்ற உடல்வாகு. (Girl or a Boy heavy built), அதே குடும்பத்தில் இங்கு பிறந்து வளர்ந்த குழந்தைகள் அப்படியில்லை. இப்படியான மாற்றங்கள் நாளடைவில் இந்திய வம்சாவழி என்ற வார்த்தையே அவர்களிடமும் காணாமல் போகும், இதை வரவேற்கிறீர்களா? அல்லது மாற்றம் தேவை என்பதனை நியாப்படுத்துகிறீர்களா? நாம் வேற்று நாட்டிற்கு சென்று அவர்களாகவே மாறிவிடுவதில்லை...ஆனால் நம் குழந்தைகள் மாறிவிடுகிறார்கள் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா? 

பல செய்திகளிலும், சர்வேக்களிலும் இந்திய கலாசாரம், குடும்பம், நம்பிக்கைகள், போன்றவற்றிற்காகவே நம்மை வேற்றுநாட்டவர்கள் விரும்புகிறார்கள். அவை 
 1. நம் சந்ததியினரால் இல்லாமல் போகும் என்று நினைத்ததுண்டா.. ?! 
2 இவற்றை எப்படி சமாளிக்கிறீர்கள், சமாளிப்பது எப்படி என திட்டம் ஏதும் உள்ளதா? 
3. குழந்தைகளிடம் (கல்வி, வசதிவாய்ப்புகள் தவிர்த்து) மற்றவற்றில் இந்தியப் பெற்றோரின் நிலை என்ன? 
4. நம் மொழி, கலாசாரம் பழக்கவழக்கங்கள் போன்றவற்றின் தேவைகள் எந்தளவில் தரமுடிகிறது, தேவையில்லை நம்மோட அது முடியட்டும் என்ற நிலையிலும் இருக்கிறீர்களா? 
5. பெண் குழந்தைகள் வளர்ப்பு, அந்த நாட்டில் அவர்களின் எதிர்காலம் குறித்த பயம்/கவலை இருக்கிறதா?  

வெண்பூ வெங்கட் ; ஒரு ப‌க்க‌ம் க‌ஷ்ட‌மாத்தான் இருக்கும். ஆனா டிஸ்அட்வான்டேஜ‌ஸை விட‌ அட்வான்டேஜ‌ஸ் அதிக‌ம். ப‌ச‌ங்க‌ இன்டிபென்ட‌ன்ட்டா இருக்க‌ க‌த்துக்குவாங்க‌, ல‌ஞ்ச‌ம் மாதிரி க‌ர‌ப்ட‌ட் சொசைட்டி இல்லை மாதிரி நிறைய‌ இருக்கு. இந்தியாவில் இருக்குற‌தை விட‌ இங்க‌ என் பைய‌ன் ச‌ந்தோச‌மாவே இருப்பான்னு நினைக்குறேன், அதைத்த‌விர‌ வேறென்ன‌ வேணும்?  

கவிதா : வெண்பூ நீங்க இங்கு இருந்ததைவிட, உங்க பையன் அங்க சந்தோஷமாக இருப்பார்னு நம்பறீங்க.. சரியா..? (எனக்கு விபரம் தெரியாததால், என்ன நீங்க இழந்தீர், என்ன உங்க பிள்ளை பெற்றார் எனபதைப்போல கேக்கறேன்)
  
 முகிலன் தினேஷ்: 1. நம் சந்ததியினரால் இல்லாமல் போகும் என்று நினைத்ததுண்டா.. ?! இல்லை 2 இவற்றை எப்படி சமாளிக்கிறீர்கள், சமாளிப்பது எப்படி என திட்டம் ஏதும் உள்ளதா? இல்லை என்று நினைப்பதால் சமாளிக்கவோ, சமாளிப்பது எப்படி என்பதற்கோ திட்டம் ஏதும் இல்லை. 3. குழந்தைகளிடம் (கல்வி, வசதிவாய்ப்புகள் தவிர்த்து) மற்றவற்றில் இந்தியப் பெற்றோரின் நிலை என்ன? என் நிலை, Be roman at Rome. நம் நாட்டை விட்டு பிற நாட்டுக்கு வந்துவிட்டோம். இங்கு வந்து நம் பழக்க வழக்கங்களையும், கலாச்சாரத்தையும் சொல்லிக் கொடுக்கிறேன் என்ற பெயரில் குழந்தைகளை அவர்கள் பயிலும், பழகும் இடங்களில் தனித்துத் தெரிய வைத்து ஒரு தாழ்வுமனப்பான்மையை வளர்த்துவிடுவது தவறு என்ற எண்ணம் கொண்டவன் நான். ABCD - American Born Confused Desi என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இவர்கள் அப்படிப்பட்ட பெற்றோருக்குப் பிறந்து இந்தக் கலாச்சாரத்தையும் முழுதும் தெரியாமல், அந்தக் கலாச்சாரத்தோடும் முழுதும் சேராமல் தனித்து நிற்பவர்கள். இப்படி ஒரு நிலை என் பிள்ளைகளுக்கு வரக்கூடாது என்று நினைக்கிறேன். 4. நம் மொழி, கலாசாரம் பழக்கவழக்கங்கள் போன்றவற்றின் தேவைகள் எந்தளவில் தரமுடிகிறது, தேவையில்லை நம்மோட அது முடியட்டும் என்ற நிலையிலும் இருக்கிறீர்களா? வீட்டுக்குள் இருக்கும்போது மட்டும் தமிழனாக இருந்தால் போதும். கண்டிப்பாத தமிழைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காக 14 வருடத் திட்டமிருக்கிறது. கண்டிப்பாக என்னோடு முடியட்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் என் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு அதைக் கற்றுக் கொடுக்கவேண்டும் என்று வற்புறுத்த மாட்டேன். 5. பெண் குழந்தைகள் வளர்ப்பு, அந்த நாட்டில் அவர்களின் எதிர்காலம் குறித்த பயம்/கவலை இருக்கிறதா?  

முகிலன் தினேஷ் : //கடவுளை பிராத்தனை செய்வது முதல், சாப்பிடுவது, பேசுவது, பழகுவது வரை எல்லாவிதத்திலும் அவர்கள் அந்நியப்பட்டு இருக்கின்றனர்// அந்நியப்பட்டு தெரிவதென்பது அவர்கள் (எப்போதாவது) இந்தியாவுக்கு வரும்போதுதான். அவர்கள் பெரும்பாலான நாட்களைக் கழிக்கும் நாட்டில் அவர்கள் வித்தியாசமாகத் தெரிந்தால் நன்றாக இருக்குமா? யோசித்துப் பாருங்கள்!  

Sriram Narayanan : இழப்புன்னு பாத்தா, சொந்தங்கள் - தாத்தா பாட்டியின் அருகாமையின்மை சொல்லலாம். நீண்ட நாட்களுக்கு நம்மால் பெற்றோர்களை இங்கு வைத்துக் கொள்ள முடியாது - குழந்தை பிறந்து ஓரிரு வருடங்களுக்கு சப்போர்ட் சிஸ்டம் இல்லாமல் குழந்தையை வளர்ப்பது சிரமமாக இருக்கும்  

முகிலன் தினேஷ் : அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு இந்தியா பிடிக்காமல் போவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிப் பேசினால் குழந்தை வளர்ப்பு என்ற இந்த ப்ளஸ்ஸின் நோக்கம் மாறிவிடும்.  

//இழப்புன்னு பாத்தா, சொந்தங்கள் - தாத்தா பாட்டியின் அருகாமையின்மை சொல்லலாம்.// உண்மை. //நீண்ட நாட்களுக்கு நம்மால் பெற்றோர்களை இங்கு வைத்துக் கொள்ள முடியாது - குழந்தை பிறந்து ஓரிரு வருடங்களுக்கு சப்போர்ட் சிஸ்டம் இல்லாமல் குழந்தையை வளர்ப்பது சிரமமாக இருக்கும்//// சப்போர்ட் சிஸ்டம் இல்லாதது சிரமம் தான். ஆனால் இந்த நாட்டுக்கு ஏற்றபடி வளர்க்க வேண்டுமென்றால் தாத்தா பாட்டி பக்கத்தில் இல்லாமல் இருப்பதே நல்லது.   

Sriram Narayanan: வெண்பூ சொன்னா மாதிரி Positives weigh over negatives. எனக்கு அமெரிக்காவின் கல்வி முறை பிடிச்சிருக்கு சுதந்திரமா சிந்திக்க விடும் வளர்ப்பு முறை பிடிச்சிருக்கு கடிவாளம் போட்ட குதிரை மாதிரி இஞ்சிநியரிங், பொட்டி தட்டி சம்பாதித்தல் இப்படி இல்லாமல், விருப்பப் பாடத்தை படிக்கலாம், எத்துறையில் இருந்தாலும் முன்னேறலாம். Corrupted environment இல்லாமை இப்படி பல
 ***********
Dyno Buoy : கவிதாஜி கலாச்சாரத்தை காக்கணும்னு இங்க பெரிய பாகீரத பிரயத்தனமே நடக்கும். நான் பார்த்தவரை எத்தனைதான் கலாச்சாரத்தை கைகால் கட்டி வாயில் பால் கிண்ணத்தை கொண்டு ஊட்டினாலும் ஹை-ஸ்கூலுக்கு பிறகு அவர்கள் சுயமாய் இருக்கவே விரும்புவர். அமெரிக்காவில் கொஞ்சம் லேட்டாகும். கனடா மற்றும் ஐரோப்பிய நண்பர்கள் அவர்கள் குழந்தைகள் சற்று விரைவாகவே assimilate ஆகிவிடுவதாக கூறுகிறார்கள். காரணம் அமெரிக்க பெற்றோர் அவர்களே அமெரிக்க கலாச்சாரத்திற்கு சற்று லேட்டாகத்தான் அசிமிலேட் ஆகிறார்கள்!

 பாஸ்டனில் இருக்கும் என் உறவினருக்கு மூன்று பெண் குழந்தைகள். கலாச்சாரத்தை அப்படி கட்டிக்காத்த குடும்பம். பாட்டு, இசை, நாட்டியம், வீட்டு பாடம் எல்லாம் வீட்டிற்கு ஆள் வந்து சொல்லிக்கொடுப்பார்கள். ஒரே அவுட் சைட் இன்டராக்‌ஷன் பள்ளி (அவ்வப்போது இந்திய வம்சாவழி நிகழ்ச்சிகள்). அதெல்லாம் அவர்கள் கல்லூரி முடிக்கும்வரைதான். இன்று மூன்று பெண்களில் மூத்தவள் பாஸ்டனிலேயே இருக்கிறார். தன் அப்பா வீட்டில் இருந்து 35 மைல் தொலைவில் பாஸ்டனில் தனி அப்பார்ட்மென்ட். இரண்டாமவள் நியூ யார்க்கில் அதுவும் மான்ஹாட்டனில் தனி அப்பார்ட்மென்ட். மூன்றாவது பெண் படித்துவிட்டு அடுத்த மேற்படிப்பிற்கு வேறு மாநிலம் போக முயற்சித்தாள். அப்பாவின் உடல்நிலைக்காக பாஸ்டனிலேயே இருக்கிறார். இந்த மூவரும் குடும்பத்தினரோடு சேர்ந்து உணவருந்தி ஒன்றரை வருடங்கள் இருக்கும். இதுதான் இங்கு வாழ்க்கை. இதை ஏற்று பழகிக்கொள்ளவேண்டும். 

இதைப்போலவே வீட்டிலேயே அடைத்து வளர்ந்த பெண் நிஜெவில் 18வது வயதில் மூன்று நாள் காணாமல் போன கதை நிஜெ நண்பர்களுக்குத்தெரியும்!

 நாம் என்னதான் கலாச்சாரம் என்றெல்லாம் நினைத்தாலும் இது அவர்கள் கலாச்சாரம் அதை ஏற்று அவர்கள் வாழ நாம்தான் பழக்கிக்கொள்ளவேண்டும்! தியாகப்பிரம்மத்தின் கதை கீதங்களையும், பரதநாட்டியத்தையும், மிருதங்கம் கஜல் எல்லாம் 13-14 வயது வரை சொல்லிக்கொடுத்து பார் எப்படி இந்தியனாய் இருக்கிறான் என்று நண்பர்களிடம் பெருமை பேசலாம். அதன் பிறகு அவர்கள் மாறிவிடுவார்கள். ஸ்போர்ட்ஸ், ஹையர் எஜுகேஷன் என்று அவர்கள் தடம் வேறாகிவிடும். உண்மையில் இந்தியாவிலும் அப்படித்தான். ஆனால் அங்கே அந்த குழந்தைகள் வெளியே பழகும் ஆட்களும் அதே கலாச்சாரத்தோடு இருப்பதால் நாமும் மாறிக்கொள்கிறோம். ஆனால் அயல் கலாச்சாரத்தில் வளர்ந்த நமக்கு அது கடினமாகத்தான் இருக்கும்.

 நான் பல முறை யோசித்ததுண்டு. இப்போது தகிரியமாக இங்கே குழந்தைகளோடு வந்து விட்டோம். பிள்ளைகள் எல்லாம் தனியாக போனபின்பு இங்கு இருப்பது கொடுமையானதாகவே இருக்கும். அதற்க்கான தயாரிப்புகளை 40 வயதிலேயே துவங்கிவிடவேண்டும். அல்லது அந்த வயதுடையோர் சேர்ந்து ஒரே இடத்தில் (அல்லது சட்டென்று சென்று மீட் செய்யும் அளவு) செட்டில் ஆக வேண்டும்!

 1. நம் சந்ததியினரால் இல்லாமல் போகும் என்று நினைத்ததுண்டா.. ?
 ஆம், அவர்களை நம் சந்ததியினராய் வளர்க்கவே முடியாது. அதற்க்காக முன்னரே, குறைந்தது 40வது வயதிலேயே தயார் செய்துகொள்ளவேண்டும். வீட்டில் இருக்கும் பெண்கள் என்றால் கண்டிப்பாக மகனோ மகளே கல்லூரிக்கு செல்லும்முன் ஏதாவது வேலையில் சேர்ந்துவிடுவது நலம். இல்லாவிட்டால் ennui கொன்றேவிடும்!

2. இவற்றை எப்படி சமாளிக்கிறீர்கள், சமாளிப்பது எப்படி என திட்டம் ஏதும் உள்ளதா? குழந்தைகள் 6 வயதிலேயே அவர்களுக்கான தேர்ந்தெடுப்பு உரிமைகளை வழங்கிவிடுங்கள். எமோசனல் ப்ளாக் மெயில் செய்யவே செய்யாதீர்கள் (உம்மாச்சி கண்ணு குத்தும், பாட்டிகிட்ட ஃபோன்ல பேசலை அப்புறம் நின்டென்டோ பிடுங்கிடுவேன்). முடிந்தவரை கலாச்சார விசயங்களை (நாட்டியம் இசை) கற்றுக்கொடுக்கலாம், ஆனால் அவர்கள் அதில் சோர்வு காட்ட ஆரம்பித்தவுடன் நிறுத்திவிடுங்கள்.கூடியவரை அவர்களை இந்த கலாச்சாரத்தை அசிமிலேட் செய்ய உதவுங்கள். (பால் கேம், பாஸ்கட் பால் கேம், ஐஸ் ஹாக்கி, மூவி அழைத்து செல்லுங்கள். மற்ற குழந்தைகளுடன் ஸ்லீப் ஓவர், ப்ளே டேட் அரேஞ்ச் செய்யுங்கள்). 

3. குழந்தைகளிடம் (கல்வி, வசதிவாய்ப்புகள் தவிர்த்து) மற்றவற்றில் இந்தியப் பெற்றோரின் நிலை என்ன?   Never force cultural behavior but never give up on discipline. இதான் என் நிலை. 

4. நம் மொழி, கலாசாரம் பழக்கவழக்கங்கள் போன்றவற்றின் தேவைகள் எந்தளவில் தரமுடிகிறது, தேவையில்லை நம்மோட அது முடியட்டும் என்ற நிலையிலும் இருக்கிறீர்களா?  அவர்கள் நம்மை பார்த்து கற்றுக்கொள்ளட்டும். எதையும் வலிய ஃபோர்ஸ் செய்வதில்லை. வழிபாடு முதல் உணவு வரை கம்ப்ளீட் ஃப்ரீடம். பட் மற்ற விசயங்கள் - நோ வேஸ்டேஜ், நோ லையிங், நோ லேசினெஸ், ஹோம் வர்க் இதிலெல்லாம் எந்த கன்செஷனும் கிடையாது. கலாச்சாரம் பொருத்தவரை நம்மோடு முடிந்தால்கூட பரவால்லை என்ற மனோபாவம் வளர்த்துக்கொண்டேன். Whatever they learn is an added bonus. :)) 

5. பெண் குழந்தைகள் வளர்ப்பு, அந்த நாட்டில் அவர்களின் எதிர்காலம் குறித்த பயம்/கவலை இருக்கிறதா? அமெரிக்க இந்தியர்கள் பலர் தாய்நாடு திரும்ப செல்ல சொல்லும் ஒரு முக்கிய காரணம் "எனக்கு பொம்பளை பிள்ளை இருக்கு, இங்க வளர்க்க முடியாது". ஆனால் என் கண்ணோட்டம் வேறு. இங்கிருப்பதைபோல பெண் சுதந்திரம், கான்பிடன்ஸ் கண்டிப்பாக இந்தியாவில் இல்லை. பல சமயம் அது ஒரு ரேஸிஸ்ட் மென்டாலிட்டி. என் பொண்ணு ஒரு கருப்பரையோ லத்தினோவையோ இழுத்துகிட்டு வந்துடுவாங்கற மனோபாவம் (அதே பணக்கார பேங்கர் ஜூயு, லாயர் இட்டாலியன்ன்னா ப்ரச்சனை இல்லை). I just hate those people and their attitude. ரெண்டு காரணங்கள் - 1. உன் பெண்மேல் உனக்கே நம்பிக்கை இல்லைன்னா உன் வளர்ப்புதான் சரியில்லை, 2. ரேஸிஸ்ட் மன்ப்பான்மையோட இந்த ஊரில் இருப்பதைவிட உன் ஊருக்கு திரும்பபோய் களை எடுத்து பிழை. You are fit to live only in a 3rd world country and hope you stay there ங்கறதுதான் அவர்களுக்கான என் கருத்து. உங்களுக்கு டைரியமான செல்ஃப் ரிலையன்ட் பெண் வேண்டுமானால் முன்னேறிய நாடுகள்தான் தி பெஸ்ட்! 

கவிதா : +Dyno Buoy Nice reply. :) & still //என் பொண்ணு ஒரு கருப்பரையோ லத்தினோவையோ இழுத்துகிட்டு வந்துடுவாங்கற மனோபாவம் (அதே பணக்கார பேங்கர் ஜூயு, லாயர் இட்டாலியன்ன்னா ப்ரச்சனை இல்லை). I just hate those people and their attitude. ரெண்டு காரணங்கள் - 1. உன் பெண்மேல் உனக்கே நம்பிக்கை இல்லைன்னா உன் வளர்ப்புதான் சரியில்லை,//  

ஒரு ஆணோ பெண்ணோ யாரையோ (யாரோவேண்டுமானாலும் இருக்கட்டும்) இழுத்துக்கிட்டு (காதலிப்பது/திருமணம் செய்துக்கொள்வது) வந்துவிடுவது என்பது, வளர்ப்பை சார்த்த ஒரு செயலா? அப்ப, இந்தியாவில் காதலித்து திருமணம் செய்துக்கறவங்களை எல்லாம் சரியா வளர்க்கவில்லையா? இந்த கருத்தில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை.


Sriram Narayanan : கவிதா : நீங்க சரியா புரிஞ்சிக்கலை - அமெரிக்க வாழ் இந்தியப் பெற்றோர்களின் பெருங்கவலையே - பெண் கருப்பனை கல்யாணம் பண்ணிக்கிடுவாளோ என்பதுதான், இதைத்தான் பெரிப்ஸ் சாடுகிறார் . வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்லமாட்டான் என்பது இந்தியர்களின் ஆழ்மன நம்பிக்கை



வெண்பூ வெங்கட் : இப்பஅமெரிக்கவாழ் பையனபெத்தங்களுக்கும் அதே மாதிரி லை ந்துடுச்சி.. ம் பையன் ஒரு பொண்ணை ல்யாணம் ண்ணிக்கணுமேன்னு :)))


கவிதா : :)  புரியுது ஸ்ரீ. .ஆனா அதில் வளர்ப்பு சம்பந்தப்படலன்னு நினைக்கிறேன்.....

முகிலன் தினேஷ் :  //  புரியுது ஸ்ரீ. .ஆனா அதில் வளர்ப்பு சம்பந்தப்படலன்னு நினைக்கிறேன்.....//

தன் மகள்/மகன் தேர்ந்தெடுத்த துணை சரியா இருக்காதுன்னு நீ நினைச்சா, உன் மகனையொ மகளையோ சரியாத் தேர்ந்தெடுக்கிற அளவுக்கு நீ வளர்க்கலைன்னு தானே அர்த்தம்? 

Sriram Narayanan : கவிதா, பெரிப்ஸ் சொன்னது : நான் ஒழுங்காத்தான் வளக்கறேன், ஆனா அமெரிக்கா என் பொண்ணை கெடுத்துடும்னு நெனச்சி இந்தியாவை நோக்கி ஓடுபவர்கள் தவறு செய்கிறார்கள் -
. இந்தியாவிலும் நிலை அப்படி ஒன்றும் பாலாறு தேனாறு ஸ்டைலில் இல்லை
. அமெரிக்காவில் வளர்ந்தாலும் ஒழுங்கா வளர்க்கலாம் - அப்படி இல்லாம போன அது பெற்றோரோட தவறுதான்

Dyno Buoy  :  //நாளைக்கு என் புள்ள ஒரு ஃப்ரன்ச்காரிய கல்யாணம் செய்துட்டு வந்தால், நான் அவனை சரியா வளர்க்கலன்னு அர்த்தமாகுமா?;
கவிதாஜி : நான் சரியா சொல்லைன்னு நினைக்கிறேன். இங்க வளர்ர குழந்தைகளுக்கு அரேஞ்ச்ட் மேரேஜ் செய்யணும்னு எண்ணமிருந்தா இன்னிக்கே ப்ளைட் புக் பண்ணிடணும். :)))  நான் சொன்னது குழந்தையை நம்பிக்கை இல்லாம வையாதீங்க, அப்படி எந்த தப்புன்னு நீங்க நினைச்சாலும் அதுக்கு நீங்களே பொறுப்பேத்துக்கிடணும்னுதான். என்னைப்பொருத்தவரை அவிங்க திருமணம் பர்சனல் வாழ்க்கையில் நாம தலையிடவேக்கூடாது (அவர்களே கேட்டால் கூட)!
 ******** 

விவாதம் தொடரும்...... 1/2

என்னை கவர்ந்த பிரபுதேவா

பிரபுதேவா பிடிக்க ஆரம்பித்தது அவரின் நடனதுக்காக மட்டுமல்ல. நடன இயக்குனராக அவரின் நடனங்கள் மற்ற இயக்குனர்களிடமிருந்து  மாறுபட்டு தெரிய ஆரம்பித்தது தான். அவரின் இயக்கத்தில் வந்த நடனங்களில், ஒவ்வொரு பாடலிலும் ஒரு தொடக்கம், ஒரு முடிவு , இடையில் அழகான சின்னதாய் கவிதைப்போன்ற ஒரு கதை இருக்கும். ஒரு முழு சினிமாவை ஒரு நடனத்தில் அவருக்காகவே பிரத்தியேகமாக நடுநடுவில் கலக்கப்பட்ட  உற்சாக துள்ளல் இசையோடு  கண்டுகளித்த நிறைவு இருக்கும். அவரின் பாடல்களில் மிகவும் ரசித்தவை, ரசிப்பவை...

1. வெண்ணிலவே....வெண்ணிலவே..

இந்த பாடலில் , அந்த பெண்ணிற்குள் தோன்றும் மின்னல் போன்ற அந்த காதல், அதனை ஒரு பாட்டில், நடன அசைவுகள் மூலம் கொண்டுவந்தது...  உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு என்று முடிக்கும் இடம்.....



2.  சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு..

இந்த பாடல் வெளியானபோது, இந்த பாடலை பாடி ஆடாத குழந்தைகளே இல்லை எனலாம். நடுவில் சின்ன சின்னதாய் சில கிராஃபிக்ஸ் கலந்து தரப்பட்ட இந்த பாடல் ஒரு முழு பொழுதுப்போக்கு மட்டுமல்ல, ஒரு குட்டிகதையும் உள்ள பாடல். இவருடைய பாடல்களில் இன்னுமொரு சிறப்பு அம்சம், எல்லா வயதினைரையும் ஆடவைத்து, அதை ரசிக்கவும் வைத்துவிடுவார்.



3. லாலாக்கு டோல் டப்பிம்மா... கங்கம்மா...

 இடத்திற்கும் வேலைக்கும் தகுந்தார் போன்று அமைக்கப்பட்ட பாடல். "ஹே மொட்டை" என அழைத்து சரத்'ஐயும் ஆடவைத்திருப்பார்.  நடனத்தை வாய்பிளந்து ரசிக்கும் அளவுக்கு வந்தப்பாடல்.



4.காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்...

பாலுஜி' யை ஆடவைத்த பெருமை. அவரின் உடல் எடைக்கு அவரை நிற்கவைத்தே நடன அசைவுகளை செய்ய வைத்திருப்பார்.  அற்புதமான டான்ஸ் கம்போசிங் என நான் நினைக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.  நடுநடுவே பிரபுதேவாவிற்காக சேர்க்கப்பட்ட (ஏ.ஆர்.ஆர்) ஸ்பெஷல் பீட்ஸ்...& நடனம் கலக்கல்ஸ்..




 5. ஹே..கே சரா சரா ... -

புகார் படத்தில் மாதுரி தீட்ஷித்தை சுழற்றி, வளைத்து, நெளித்து ஆடவைத்திருக்கும் பாடலில் இசை, தமிழில் சில்லல்லவா பாடலின் ஹிந்தியாக்கம் தான். 2.46 - 2.52 - கவனியுங்கள், பாடலில் நடுவில் சில சாதாரண அசைவுகளில் தனக்கென்ற முத்திரையை பதித்திருப்பார்.



6. என் செல்லப்பேரு ஆப்பில்..

விஜய்' யின் நடனத்திற்காகவே அவரின் பாடல்களை பார்ப்பேன், பிரபுதேவாவும் விஜய்யும் இணைந்து கொடுத்த நடனங்களில் என்னை மிகவும் கவர்ந்த ஒரே பாடல் இது.  3.22-3.37 பிரபுதேவா டச்ச்... :)



7.  மேடை நடனம்..#1

அவரின் அன்றைய மாணவர்கள், இன்றைய நடன இயக்குனர்களுடன் ஆடிய நடனம். அவரவரின் ஸ்டைலில் முதலில் ஆடவைத்து, பின்பு ஒரு அற்புதமான இசையோடு தன்னோடு அனைவரையும் ஐக்கியப்படுத்திக்கொண்டு, தானும் ஆடி அவர்களையும் ஆடவைத்த ஒரு அட்டகாசமான நடனம். அத்தனை இயக்குனர்கள் ஆடி என்ன பிரயோசனம், நிக்கறாரு பிரபுதேவா.. @ 5.19 லிருந்து.... பாருங்க...அசத்தல்.. நடுவில் சின்னதாய், ஒரு பாம்பு நடனத்தை சேர்த்து இருப்பார்...இந்த நடனத்திலும் ஒரு கதை இருக்கும்...



8.  மேடை நடனம் #2

MJ வின் பைத்தியம் நானு.. இந்த பாட்டுக்கு என்ன சொல்ல... நீங்களே பாருங்க.. எல்லா நடனத்தையும் கலந்து ஒரு பஞ்சாமிருதமாக கொடுத்த நடனம்..

 

9. நங்கை நிலாவின் தங்கை

 MJ பாடலில் காப்பி என்றாலும்... பாட்டும் நடன அமைப்பும்... ம்ஹூம்.. ..கூடுவே சேர்ந்து ஆடுவைக்கும் பாடல்......



அணில்குட்டி : அம்மணி ட்ராஃபிட்டில் எப்பவோ சேர்த்து வைத்திருந்ததை எல்லாம் ஒன்னொன்னா ரிலீஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. .இது எங்கப்போயி முடியுமா.. மக்கா வார்னிங்கு.. எல்லாரும் ஓட்டம் பிடிக்க ரெடியா இருங்க..  

பீட்டர் தாத்ஸ் : You must understand the whole of life, not just one little part of it. That is why you must read, that is why you must look at the skies, that is why you must sing and dance, and write poems and suffer and understand, for all that is life. . Thanks : You tube :)

அப்பாவின் சாப்பாடு கேரியர்


அப்பா, தாத்தா இருவருக்கும் சாப்பாடு கேரியர் உண்டு. அப்பாவை விட தாத்தாவின் சாப்பாடு கேரியர் பெரியதாக இருக்கும், ஒரு கிண்ணம் அதிகம். அப்பாவின் கேரியரில் நான்கு அடுக்கு தான். கீழ் அடுக்கில் சாதம், தொட்டுக்கொள்ளும் காய் அதிலேயே வைத்துவிடுவார்கள்,  அடுத்தடுத்த அடுக்குகளில் சாம்பார், ரசம், தயிர் இருக்கும். ஒரு நுனி வாழையிலை சுருட்டி கேரியரின் பிடியில் கிழியாமல் மடங்காமல் செருகிவைத்து தயாராக இருக்கும்.

மதியம் சாப்பாடு நேரம், ஷெட்டிலிருந்து ஆள் வந்து எடுத்துச்செல்வார்கள், ஆள் வராத நாட்களில் வீட்டிலிருந்து யாரேனும் ஷெட்டிற்கு சாப்பாட்டை எடுத்துச் செல்வார்கள். அநேகமாக ஷெட்டிலிருந்து எப்படியும் ஆள் வந்துவிடுவார். ஒரு வேளை,  வெளியூர் வேலையாக சென்றாலும், அந்த ஊருக்கு செல்லும் ரயில், விழுப்புரம் வரும் நேரம் பார்த்து, சாப்பாடு ஸ்டேஷனுக்கு சென்றுவிடும். ட்ரைவரிடம் கொடுத்துவிட்டால், அப்பாவிடம் சேர்த்துவிடுவாங்க. இது அப்பாவை விட தாத்தாவிற்கு தான் அதிகம் நடந்திருக்கிறது. அதற்காகவே சில நேரங்களில் காலை 10 மணிக்குள்ளாக சாப்பாடு தயாராக இருக்கும்.

இருவருமே, முன்கூட்டியே எந்த வண்டி, யாரிடம் சாப்பாடு கொடுக்கனும்னு சொல்லிட்டு போயிருப்பாங்க. அப்போதெல்லாம், ரயில்களுக்கு பெயரில்லை. நம்பர் மட்டுமே. வீட்டில் எல்லோருக்குமே தாத்தாவும் அப்பாவும் செல்லும் ரயில்களின் எண்கள் தெரிந்திருக்கும். நான் குழந்தையாக இருக்கும் போதே தாத்தா ரிடையர் ஆகி இருந்தார். ஆனால் அவர் வேலை செய்த புராணம் எப்போதும் ஓடிக்கொண்டு இருக்கும். ரிடையர் ஆகும் போது  "ஏ" கிரேட் டிரைவராக ரிடையர் ஆனார், பெயர் பலகை, கடிதங்கள் போன்றவற்றில் அவரின் பெயர்க்கு கீழே "ஏ'கிரேட் டிரைவர் என்று எழுதி இருக்கும். அந்த காலத்தில் "ஏ'கிரேட் டிரைவர் என்றால் மிகப்பெரிய வேலை, மத்திய அரசின் வேலை வேறு, 8 ஆம் வகுப்பு வரை படித்திருந்த தாத்தாவிற்கு இந்த வேலைப் பெரிய வேலைதானே. 8 ஆம் வகுப்பே என்றாலும் அவரைப்போல தமிழும், ஆங்கிலும் எங்களுக்கு படிக்கும் காலத்தில் இல்லை.

எனக்கு நினைவு தெரிந்து பெயர் வைத்து வந்த புத்தம் புதிய அதிவேக ரயில் வைகை. அப்பா அப்போது திருச்சியில் வேலையில் இருந்தார். வண்டி இயக்க ஆரம்பித்த சில நாட்களுக்குள் என்னையும், சின்ன அண்ணாவையும், ட்ரைவர் இருக்கும் பெட்டியில் (திருச்சி-விழுப்புரம்) அழைத்துவந்தார். இயக்குவதையும் சொல்லிக்கொடுத்தார், சின்ன அண்ணனுக்கு நினைவிருக்குமா தெரியல, எனக்கில்லை. வைகை ரயில் வருவதற்கு முன், திருச்சி-விழுப்புரம் ராக்ஃபோர்ட் எக்ஸ்ப்ரஸ்ஸில் வருவோம். அப்பாவிற்கு முதல் வகுப்பு பாஸ் இருந்ததால், எப்போதும் ரயிலுக்கு டிக்கெட் எடுத்ததில்லை.  ரயில்வேயில் வேலை செய்யபவர்களுக்கு இது மிகப்பெரிய வசதிதான். திருமணம் ஆனவுடன் ரயிலில் செல்ல டிக்கெட் எடுக்க செல்வது என்னவோ புதுப்பழக்கமாக, தேவையில்லாத வேலையாக தெரிந்தது..  :)

நிற்க, தாத்தாவை தொடர்ந்து அப்பாவும் ரயில்வேயில் வேலை, இருவருக்கேமே நேரங்காலம் இல்லாத வேலை நேரங்கள். என்ன.. தாத்தா ட்ரைவர் வேலைப்பார்த்ததால், முழுநேரமும் நின்றுக்கொண்டே இருக்கவேண்டும். அது புகைவண்டி, ஒரு பக்கம் நெருப்பு எரிஞ்சிக்கிட்டே இருக்கும், வேலைநேரம் முழுக்க அந்த அனலிலேயே நிற்கனும். அதனாலேயே தாத்தாவிற்கு முட்டி வலி நிரந்தர வலியாகிவிட்டதாக சொல்லிக்கொண்டு இருப்பார். அப்பாவிற்கு அப்படியில்லை, ஃபோர்மென், ஷெட்டில் வேலை இருக்கும். தனி அறை, மெதுமெது நாற்காலி, மின்விசிறி,  2-3 தொலைப்பேசி வசதிகள் என கொஞ்சம் வசதியான வேலைதான். இருந்தாலும், இஞ்சின் பழுது, பிரச்சனைகள் வந்தால், உட்கார நேரமில்லாமல் அப்பாவிற்கு முழுநாளும் வேலை இருக்கும். 


இதில் இருவருக்கும், இந்த சாப்பாடு கேரியர்கள் தான் எப்போதும் உதவின. சமீபத்தில் சொந்தக்காரர் ஒருவர் சென்னையில் மருத்துவமனையில் சேர்ந்தபோது, இந்த கேரியரை கொடுத்து அனுப்பினேன். இப்போது எந்த வேலையில் இருந்தாலும், யாரும் இப்படி பெரிய கேரியரில் சாப்பாடு கொண்டுசெல்வதில்லை.  ஏன் என் சாப்பாடு டப்பாவை பார்த்தால், நல்லா சாப்பிடறவங்க தள்ளிப்போய் உட்கார்ந்துக்குவாங்க. அவ்ளோ பெரிசா இருக்கும். அப்பாவிற்கும் தாத்தாவிற்கும் இலையோடு அலுவலகத்திற்கு சாப்பாடு சென்றது இப்போது நினைத்தாலும் அதிசயமான, மிகப்பெரிய வேலையாக தெரிகிறது. 'பரிட்சைக்கு நேரமாச்சி'ன்னு ஒரு சினிமா பார்த்தேன். அதிலும் சிவாஜிசாருக்கு, ஒய்.ஜி.மகேந்திரா இப்படி ஒரு பெரிய கேரியரில் இலையோடு அலுவலகத்திற்கு சாப்பாடு கொண்டு வருவார்.

ஆக, அந்த காலத்தில், வீட்டுப்பெண்களுக்கு வேலைக்கு செல்லும் ஆண்களுக்கு, மதிய நேரத்தில் சாப்பாடு கேரியரில் சாப்பாடு அனுப்பி வைப்பது ஒரு வேலையாகவே இருந்தது. இப்போது அதே வேலை காலையோடு முடிந்துவிடுகிறது. அதுவும் அவரவர் கையிலேயே எடுத்துச்சென்று விடுகின்றனர். இப்படியான பெரிய சாப்பாடுக்கேரியர் இப்போது இல்லவும் இல்லை.

அப்பாவின் கேரியர் எப்படி என்னிடம் ?. அப்பாவின் பொருட்கள் மட்டுமல்ல, அம்மா, ஆயா பயன்படுத்திய பொருட்கள் சிலவற்றை, எனக்கு திருமண சீதனங்களோடு சேர்த்து கொடுத்து அனுப்பியிருக்கிறார் ஆயா. இத்தனைக்கும் வீட்டில் ஆண் வாரிசுகள் என் அண்ணன்கள், சித்தப்பா, சித்தப்பா பிள்ளைகள் என நிறையபேர் இருக்க, பெண் வாரிசான எனக்கு இவைக்கிடைத்திருப்பது அதிர்ஷ்டமே. ஆயா மட்டுமல்ல, இப்போது என் கணவரும், எதையும் பத்திரமாக வைத்துக்கொள்வேன் என்பதால், எது வாங்கிவந்தாலும், நவீனுக்கு கொடுப்பதைக்காட்டிலும் எனக்கே முன்னுரிமை கொடுத்து, என்னிடம் கொடுத்துவிடுவார்.  

அணில் குட்டி : ம்க்கும்.. பார்ரா  பெருமைய.... அவரே கொடுக்காட்டியும் இந்த அம்மணி, பெத்தப்புள்ளயாச்சேன்னு கூட விட்டுக்கொடுக்காம,  எப்படியாச்சும் அழுது அடம் பிடிச்சாச்சும் ஆட்டையப்போட்ருவாங்கில்ல....

பீட்டர் தாத்ஸ் : “Our Ancestors things are a treasure. More precious than Gold, it is priceless and never grows old”

A Wife is a Wife is a Wife ...சாவுங்கடா...!

I dont need Google, my wife knows everything..

 


 One million copies of New book sold in Just 2 days  due to typing error of one alphabet in title - "An idea that can change your wife"

******* 
If you are wrong, shut up, you' re wise ;  If you are right, shut up, you're married

********
நிம்மதியாக இருக்கும்போது மனைவியைத் தேடுவதும்... மனைவி வந்தபின் நிம்மதியைத் தேடுவதுமே மனித இயல்பு...!! 
*********

உன் தோழியை பார்த்ததும் உன் பக்கத்தில நெருக்கமா உட்கார்ந்தால், அவள் காதலி !!
 
உன் காதலியைப் பார்த்ததும் புன்னகையுடன் விலகி நடந்தால், அவள் தோழி !!

# நீ யாரையுமே பார்க்காம நடந்தாலும் அங்கே என்ன பார்வைன்னு குமட்டில் குத்தினால், அவள் மனைவி !!

***********

Wives are magicians. ............. They can change anything into an argument

********
I recently read that love is entirely a matter of chemistry. That must be why my wife treats me like toxic waste.
************

When a man steals your wife, there is no better revenge than to let him keep her.

*************

"I don't worry about terrorism. I was married for two years."
*************

The most effective way to remember your wife's birthday is to forget it once... 
**************

A good wife always forgives her husband when she's wrong.
************
 
First Guy (proudly): "My wife's an angel!" ;   Second Guy: "You're lucky, mine's still alive." 
*************

Your dog is barking at the back door, your wife knocking at the front door. Who will you let in first and why? (Hope all husband knows the answer )

*********


Rule # 1. Wife is always right. Rule # 2. If she is wrong, See Rule # 1

************

U can Tell ur Friend  "U r my Best Friend" But

Do u have courage tell to ur Wife
"U r my Best Wife?"

***************
Judge: How can you prove you were not speeding your car?
Man: Sir, I was on the way to bring back my Wife from her mother's home!
Judge: That's all, case dismissed....

*********

Apple is now working to make an
"i-wife"
Slim design, beauty with brain
and, most important, a mute
button...!
.
.
Booking full till 2020 ;)

*********
I met a man who had been married for 66 years.
"Amazing..66 years!" I said.
"What's the secret to such a long, happy marriage?"
"Well, It's like this...The man makes all the big decisions... and the woman just makes the little decisions."
I responded, "Does that really work?"
"Oh, yes" he said proudly..."66 years, and so far, not one big decision!"
*****************

அணில் குட்டி : காலங்காத்தால வூட்டுக்காருக்கிட்ட எல்லாத்தையும் படிச்சிக்காட்டி சிரிப்பா சிரிச்சிக்கிட்டு இருந்தாங்க... அவருப்பாவம் அம்மணிக்காக, வெளியில ஹிஹி..ன்னு சிரிக்கறமாதிரி சிரிச்சிட்டு. .உள்ளுக்குள்ள..குமறி குமறி அழதமேட்டரு எனக்கு மட்டும் தான் தெரியும்.. :((( 

பீட்டர் தாத்ஸ் : "A psychiatrist is a person who will give you expensive answers that your wife will give you for free” 

Thanks to FB, Google & Mangalore Siva 
.

கனவுகள்


தூங்கி எழுந்தவுடன் கனவுகள் பெரும்பாலும் நினைவில் இருப்பதில்லை. நினைவில் இருப்பவையும் கோர்வையாக இருப்பதில்லை. பல நேரங்களில் நண்பர்கள், உறவுகள் கனவில் வருவதுண்டு. சில நண்பர்களிடம் அவர்கள் கனவில் வரும் போது, நினைவு வைத்து சொல்வதுண்டு.

சமீபத்தில் கனவில் ஒரு நண்பர் வர, அதைப்பற்றி அவரிடம் சொன்னேன். கனவில் அவர் ஒரு பெண் டாக்டரிடம் ஜொள்ளுவிடுவதில் பொறுமை இழுந்து, நான் வெளியில் வந்து காத்திருக்க, அவருடைய கார் ஒரு சாய்வான ரோடில் தானாக நகர ஆரம்பிக்க, எனக்கு காரை நிறுத்தத்தெரியாமல், காரை நிறுத்தவேண்டி, உதவிக்கு ரோடில் இருந்தவர்களை "கத்தி கத்தி" அழைக்க என, என் கனவு சென்றதை நண்பரிடம் சொல்லி, எனக்கு கார் ஓட்டத்தெரியாது, அதனால் கனவில் காரை நிறுத்தத்தெரியலன்னு சொன்னேன். அதற்கு அவர், காரை பார்க்கிங் செய்ய, கையால் பிரேக் போடும் வசதி இருக்கு, இனிமே கனவு வரும் போது, அதை ஞாபகம் வச்சி காருக்கு ப்ரேக் போடுங்கன்னு சொன்னார்.  (நம்ம ஃப்ரண்ட் ஆச்சே, வேறு எப்படி இருப்பாங்க?) ஆனால் அதற்கு பிறகு சில மாதங்கள் கழித்து, அதே கனவு திரும்பவும் தொடர, ஒருவழியாக, அந்த டாக்டர் பெண்ணிடம், ஜொள்ளுவிடுவதை நண்பர் நிறுத்திவிட்டு வந்துவிட்டதையும் அவரிடம் சொல்ல,  அந்த டாக்டர் பொண்ணு எப்படி இருந்தாங்க" கேட்டாரு. ரொம்ப ஞாபகப்படுத்தி, "எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் நதியாவிற்கு ஊசிப்போடும் டாக்டர் போல இருந்தார்" என சொல்லியது தான், "அட நதியா இருக்கும் போது எதுக்கு அந்த டாக்டர், நதியாவே போதும்னு" சொல்லிவிட்டு சென்றார்.

ஆக, கனவுகளும் விட்ட இடத்திலிருந்து தொடர்கின்றன. சில கனவுகள் நல்ல திரைகதையோடு, எதிர்பார்க்காத டிவிஸ்ட்களோடு தொடர்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். உறவுகள், நண்பர்கள் வரும் கனவுகள் தவிர்த்து, பொதுவான கனவுகள் எவ்வளவு நினைவுப்படுத்தினாலும் சரியாக நினைவில் இருக்காது. நேற்றிரவு வந்த ஒரு நீண்ட கனவு. இப்படியும் கனவு வருமா என்று யோசிக்க வைத்தக்கனவு. எப்படியும் இதை எழுதி வைத்தே ஆகவேண்டுமென, ரொம்பவும் முயற்சி செய்து நினைவுப்படுத்தி..............

இது ஆங்கிலெயர்கள் நம்மை ஆண்ட காலத்திற்கு என்னைக்கொண்டு சென்று, அங்கு நடந்த ஏதோ ஒரு நிகழ்வு.

என்னையும் சேர்த்து இன்னும் இருவரை ஆங்கிலேய கும்பல் ஒன்று பெரிய நீண்ட
துப்பாக்கிகளோடு, பூட்ஸ் சத்தங்களோடு துரத்தி வருகிறது. ஆளொக்கொரு திசையாக தலைத்தெறிக்க ஓடுகிறோம். அது ஒரு கிராமும் நகரமும் கலந்த  இடம்போல இருந்தது, துணிகள் நிறைய காயவைத்து இருக்கிறார்கள்,  செம்மண் ரோடுகள், ஓடும் போது செம்மண் புழுதி பறக்கிறது, துணிகளுக்கு நடுவில் நுழைந்து, துணிகள் தலையில் அடிக்க ஓடுகிறேன்.  என்னுடன் ஓடி வந்த இரண்டு ஆண்கள், நடுவில் எந்த பக்கம் போய் தொலைந்தார்கள் என எனக்கு த்தெரியவில்லை.

நான் நகரத்தில் உள்ள சில வீடுகளில் நுழைந்து மறைந்து ஒளிந்து கடக்கிறேன். சாலையாக இருந்தால் ஓடுகிறேன், வீடுகளாக இருந்தால் மெது மெதுவாக என்னைப்பின் தொடர்பவர்களை கவனித்தவாறு நகர்கிறேன்.  அப்படி நுழையும் வீடுகளில் விதம் விதமான மனிதர்களை பார்க்கிறேன். அவர்கள் அநேகமாக ஆங்கிலோ இந்தியர்கள், அவர்களின் உடைகள் அப்படிதான் இருந்தன. பஃப் கை வைத்த முழு ஃப்ராக் அணிந்த பெண்கள், கைகளிலும் கால்களிலும் வெள்ளை களுவுஸ் அணிந்திருக்கிறார்கள். ஃப்ராக்கின் கை கால்களில் முடிவில் ஃப்ரில்கள் இருக்கின்றன. ஃப்ரில்கள் எல்லாம் வெள்ளை நிறத்தில் உள்ளன. ஆடைகள் நீல வண்ணம், பச்சை வண்ணம் கலந்த நிறத்தில் இருக்கின்றன. அதில் ஒரு வீட்டில் நுழையும் போது மிகவும் குண்டான, 5.6" இருக்கக்கூடிய உயரமான ஒரு பெண், மேற்சொன்ன ஆடையோடு இருக்கிறார். நான் ஓடி ஒளியும் போது, "என்னை சிலர் துரத்தி வருகிறார்கள், நான் இருப்பதை சொல்லவேண்டாம்" என்கிறேன். அந்த பெண்ணும், துரத்தி வந்தவர்களிடம் "அப்படி யாரும் இந்தப்பக்கம் வரவில்லை" என பதில் சொல்கிறார். அவர்கள் சென்றவுடன், "இந்தப்பக்கம் ஒரு  சின்ன சந்து இருக்கிறது, அதன் வழியாக என் கணவர் சென்றுக்கொண்டு இருக்கிறார், அவர் பின்னால் போனால் நீங்கள் தப்பித்து விடலாம் " என்கிறார். அவர் கணவர் என்று சொன்ன நேரத்தில், அவர் எப்படி இருப்பார் என்ற கற்பனையோடு, அவர் சொன்ன வழியே ஓடுகிறேன், ஆனால் என் கற்பனை தவிடு பொடி ஆகிறது. ஆம், நான் பின்னாலிருந்து பார்க்கும் அந்த உருவம் 4 அடியே இருக்கும் ஒரு சிறிய உருவம். சந்தன நிற பேன்ட்டும், மெல்லிய வண்ணங்கள் பலவும் கலந்த நிறத்தில், முழுக்கையை மடித்துவிட்ட சட்டையும் அணிந்து சாய்ந்து சாய்ந்து நடக்கிறார். அவரை நெருங்கி விட்டேன், அவரிடம் பேசவில்லை, அந்தம்மாவுடைய கணவரா இவர் என்ற சிந்தனையோடு அவரை அவர் நடக்கும் வேகத்தில் தொடர்கிறேன். அந்த சந்து முடியும் போது.....

கொஞ்சம் தொலைவிலிருந்து மற்றொரு காவி உடை அணிந்த கும்பல் ஒன்று (இந்துத்துவா?) வெறித்தனமாக ஓடிவருகிறது. இந்த கும்பலுக்கும், என்னைத்துரத்தி வந்த கும்பலுக்கும் சம்பந்தமில்லை. இவர்கள் என்னை த்துரத்தி வந்த கும்பலை எதிர்த்து போராடுபவர்கள் என்பதை அவர்களின் பேச்சு மற்றும் அணுகுமுறையை வைத்து கணிக்கிறேன். இவர்களிடமும் துப்பாக்கி, கற்கள், கத்தி, கட்டை என என்னென்னமோஇருக்கிறது. என்னைப்போன்று இவர்கள் ஒளிந்து ஓடவில்லை. ஆங்கிலேயர்களை கொன்றே தீருவோம் என கோஷமிட்டுக்கொண்டு எதிர்த்து ஓடி வருகிறார்கள். நடுவில் என்னைக்கண்டு, பிடித்து இழுத்து ஒரு கட்டிடத்தில் ஓடி ஒளியச்சொல்லுகிறார்கள், நானோ, அவர்களை முரட்டுத்தனமாக பயங்கரமாக சண்டையிட வேண்டாம் என சொல்ல நினைக்கிறேன். ஆனால் சொல்வதற்குள் இரண்டு குழுவும் சண்டையிடதுவங்குகிறார்கள்.  துப்பாக்கி வெடிக்கும் சத்தமும், சண்டை சத்தமும் கொஞ்சம் கொஞ்சமாக  குறையும் தொலைவிற்கு நான் வந்து விடுகிறேன். நான் வந்து சேருமிடம், வீடைப்போல இல்லை, ஆனால் கட்டிடம், நிறைய வாசல்கள், வளைந்து வளைந்து செல்லும்படியாக இருக்கின்றன. அந்த கட்டிடத்தில், உட்கார்ந்த நிலையில் கால்களை நீட்டியவாரே நகரும் ஒரு உருவம், அது ஒரு பெண். ஃபிரில் வைத்த முழு ஃப்ராக் அந்த கால்களை மறைக்க, அந்த (காலின்) பகுதி மட்டுமே என் கண்களுக்கு தெரிகிறது. அந்த கட்டிடத்தில், நான் தப்பித்து செல்லும் பல இடங்களில் இந்த உருவமும் என் கண்களில் படுகிறது. என்னை தொடர்வதாக தெரியவில்லை. ஆனால் என்னைப்போன்று ஓடி ஒளியும் நடக்க முடியாத ஒரு பெண் என்பது மட்டும் தெரிகிறது.

இந்த கட்டிடத்தை தாண்டி வெளியில் இறங்கி ஓடுகிறேன். அந்த காலத்து பேரூந்து ஒன்று எங்கோ புறப்படத்தயாராக உள்ளது. இருவர் இருக்கையில் பின் பக்கமாக சென்று ஒளிகிறேன். அவர்கள் கண்டுக்கொண்டு என்னை எழுப்ப முயற்சிக்கிறார்கள். நான் என்னைத்துரத்தும் கும்பலுக்குத் தெரியாமல் ஒளிகிறேன் என்று சொல்வதைக்கேட்டு, என்னை அவர்களே மறைக்கிறார்கள்.

தலை மிகவும் பாரமாக உணர்கிறேன், கண்ணும் ஒரே வலி.... எப்படியும் அந்த இடத்திலிருந்து வந்துவிட முயற்சி செய்து சிரமப்பட்டு வலியை தாங்கிக்கொண்டு கண்விழிக்கிறேன். கனவு கலைந்திருந்தது.  படுத்தவாரே, கனவை ஒரு தரம் ஓட்டிப்பார்த்து, இதில் வந்த உடைகள், செம்மன் புழுதி, கால் மட்டும் தெரிய நகரும் பெண், குள்ளமான மனிதர், அவருக்கு பெரிய உருவத்தில் ஆன மனைவி,  காவி உடுத்திய பயங்கரவாதிகள், என்னைத்துரத்தும் பூட்ஸ் அணிந்த ஆங்கிலேயர்கள், பேருந்தில் என்னைக்காப்பாற்றும் இருவர், யாரென்று தெரியாது ஆனால் என்னைப்போல ஓட ஆரம்பித்த இரண்டு ஆண்கள்.... என நிறையப்பேர்..... ஏன் எனக்கு இந்த கனவு வந்தது என்றேத்தெரியவில்லை. சமீபத்தில் இப்படி ஒரு சினிமா பார்க்கவில்லை. மனிதர்களையும் சந்திக்கவில்லை. .......

கனவுகள் எப்படி வருகின்றன என்பதைப் பற்றிய என்னுடைய இன்னுமொரு பதிவு இதோ கனவுகளை கட்டுப்படுத்துதல்........... [இவளுக்கு இதே வேலையோ? ன்னு நீங்க நினைக்கப்பிடாது, உங்களுக்கும் கனவு வரும்.. இப்படி இழுத்துக்கொண்டு வந்து எழுதாமல் இருப்பீங்களா இருக்கும்... :)]

அணில் குட்டி : அம்மணி எப்ப கனவு வந்தாலும் வூட்டுக்கார ஒக்காரவச்சி, ஒரு வாரம் நகரவிடாம கதை சொல்லுவாங்க... இன்னும் இந்த கனவை அவரிடம் சொல்லல.....  பாவம் மனுசன்.. எப்ப மாட்டாப்போறாரோ... ஆண்டவனே அவரை காப்பாத்து.........

பீட்டர் தாத்ஸ் : “The best thing about dreams is that fleeting moment, when you are between asleep and awake, when you don't know the difference between reality and fantasy, when for just that one moment you feel with your entire soul that the dream is reality, and it really happened.”

படங்கள் : நன்றி கூகுள் ! 
.