பிரபுதேவா பிடிக்க ஆரம்பித்தது அவரின் நடனதுக்காக மட்டுமல்ல. நடன இயக்குனராக அவரின் நடனங்கள் மற்ற இயக்குனர்களிடமிருந்து  மாறுபட்டு தெரிய ஆரம்பித்தது தான். அவரின் இயக்கத்தில் வந்த நடனங்களில், ஒவ்வொரு பாடலிலும் ஒரு தொடக்கம், ஒரு முடிவு , இடையில் அழகான சின்னதாய் கவிதைப்போன்ற ஒரு கதை இருக்கும். ஒரு முழு சினிமாவை ஒரு நடனத்தில் அவருக்காகவே பிரத்தியேகமாக நடுநடுவில் கலக்கப்பட்ட  உற்சாக துள்ளல் இசையோடு  கண்டுகளித்த நிறைவு இருக்கும். அவரின் பாடல்களில் மிகவும் ரசித்தவை, ரசிப்பவை...

1. வெண்ணிலவே....வெண்ணிலவே..

இந்த பாடலில் , அந்த பெண்ணிற்குள் தோன்றும் மின்னல் போன்ற அந்த காதல், அதனை ஒரு பாட்டில், நடன அசைவுகள் மூலம் கொண்டுவந்தது...  உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு என்று முடிக்கும் இடம்.....2.  சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு..

இந்த பாடல் வெளியானபோது, இந்த பாடலை பாடி ஆடாத குழந்தைகளே இல்லை எனலாம். நடுவில் சின்ன சின்னதாய் சில கிராஃபிக்ஸ் கலந்து தரப்பட்ட இந்த பாடல் ஒரு முழு பொழுதுப்போக்கு மட்டுமல்ல, ஒரு குட்டிகதையும் உள்ள பாடல். இவருடைய பாடல்களில் இன்னுமொரு சிறப்பு அம்சம், எல்லா வயதினைரையும் ஆடவைத்து, அதை ரசிக்கவும் வைத்துவிடுவார்.3. லாலாக்கு டோல் டப்பிம்மா... கங்கம்மா...

 இடத்திற்கும் வேலைக்கும் தகுந்தார் போன்று அமைக்கப்பட்ட பாடல். "ஹே மொட்டை" என அழைத்து சரத்'ஐயும் ஆடவைத்திருப்பார்.  நடனத்தை வாய்பிளந்து ரசிக்கும் அளவுக்கு வந்தப்பாடல்.4.காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்...

பாலுஜி' யை ஆடவைத்த பெருமை. அவரின் உடல் எடைக்கு அவரை நிற்கவைத்தே நடன அசைவுகளை செய்ய வைத்திருப்பார்.  அற்புதமான டான்ஸ் கம்போசிங் என நான் நினைக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.  நடுநடுவே பிரபுதேவாவிற்காக சேர்க்கப்பட்ட (ஏ.ஆர்.ஆர்) ஸ்பெஷல் பீட்ஸ்...& நடனம் கலக்கல்ஸ்..
 5. ஹே..கே சரா சரா ... -

புகார் படத்தில் மாதுரி தீட்ஷித்தை சுழற்றி, வளைத்து, நெளித்து ஆடவைத்திருக்கும் பாடலில் இசை, தமிழில் சில்லல்லவா பாடலின் ஹிந்தியாக்கம் தான். 2.46 - 2.52 - கவனியுங்கள், பாடலில் நடுவில் சில சாதாரண அசைவுகளில் தனக்கென்ற முத்திரையை பதித்திருப்பார்.6. என் செல்லப்பேரு ஆப்பில்..

விஜய்' யின் நடனத்திற்காகவே அவரின் பாடல்களை பார்ப்பேன், பிரபுதேவாவும் விஜய்யும் இணைந்து கொடுத்த நடனங்களில் என்னை மிகவும் கவர்ந்த ஒரே பாடல் இது.  3.22-3.37 பிரபுதேவா டச்ச்... :)7.  மேடை நடனம்..#1

அவரின் அன்றைய மாணவர்கள், இன்றைய நடன இயக்குனர்களுடன் ஆடிய நடனம். அவரவரின் ஸ்டைலில் முதலில் ஆடவைத்து, பின்பு ஒரு அற்புதமான இசையோடு தன்னோடு அனைவரையும் ஐக்கியப்படுத்திக்கொண்டு, தானும் ஆடி அவர்களையும் ஆடவைத்த ஒரு அட்டகாசமான நடனம். அத்தனை இயக்குனர்கள் ஆடி என்ன பிரயோசனம், நிக்கறாரு பிரபுதேவா.. @ 5.19 லிருந்து.... பாருங்க...அசத்தல்.. நடுவில் சின்னதாய், ஒரு பாம்பு நடனத்தை சேர்த்து இருப்பார்...இந்த நடனத்திலும் ஒரு கதை இருக்கும்...8.  மேடை நடனம் #2

MJ வின் பைத்தியம் நானு.. இந்த பாட்டுக்கு என்ன சொல்ல... நீங்களே பாருங்க.. எல்லா நடனத்தையும் கலந்து ஒரு பஞ்சாமிருதமாக கொடுத்த நடனம்..

 

9. நங்கை நிலாவின் தங்கை

 MJ பாடலில் காப்பி என்றாலும்... பாட்டும் நடன அமைப்பும்... ம்ஹூம்.. ..கூடுவே சேர்ந்து ஆடுவைக்கும் பாடல்......அணில்குட்டி : அம்மணி ட்ராஃபிட்டில் எப்பவோ சேர்த்து வைத்திருந்ததை எல்லாம் ஒன்னொன்னா ரிலீஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. .இது எங்கப்போயி முடியுமா.. மக்கா வார்னிங்கு.. எல்லாரும் ஓட்டம் பிடிக்க ரெடியா இருங்க..  

பீட்டர் தாத்ஸ் : You must understand the whole of life, not just one little part of it. That is why you must read, that is why you must look at the skies, that is why you must sing and dance, and write poems and suffer and understand, for all that is life. . Thanks : You tube :)