ஒரு நாட்டின், இடத்தின் உணவு
என்பது அங்கு அமையும் விவசாயத்தை பொறுத்தது. விவசாயம் அவ்விடத்தின்
தட்பவெப்ப சூழ்நிலையை சார்ந்து அமைகிறது, தவிர மண் மற்றும் நீரின் தன்மை,
வளத்தையும் பொறுத்தது,
ஆதிமனிதன் காலத்தில் இருந்த உணவு பழக்கத்தை கடைப்பிடிக்கனும்னு சொன்னால் ?!! அதே மண் வளமும் நீர் வளமும் இப்பவும் நம்மிடம் இருக்கா? காய்கறி முதலில் இயற்கையானதாக கிடைக்கிறதா? அவன் பல கிமீ நடந்தான், மரங்களில் ஏறினான், தாவினான், மலைகளில் ஏறினான், நீந்தினான், அவனின் உடல் உழைப்பு நமக்கு இருக்கிறதா? முதலில் நீங்க காலையில் சாப்பிட சொல்ற கிலோ கணக்கு பாதாம் பெற, அவன் பாதாம் மரங்களை வளர்த்தானான்னு எனக்கு மண்டை காய்ச்சலாக இருக்கு....
குஜராத்தில் விளையும் உருளைக்கிழங்கு, கேரட், முள்ளங்கியை ஒரு போதும் தமிழ்நாட்டில் உள்ள அதே காய்கறியோடு ஒப்பிடவே முடியாது. இங்கு பச்சைமிளகாய் இரண்டை நீட்டு வாட்டில் நறுக்கி உப்புமாவிற்கு சேர்ப்பேன், ஆனால் குஜராத்தில் 5 மிளகாய் போட்டால் கூட காரம் இருக்காது. பச்சையாக நம்மூர் முள்ளங்கியை சாப்பிட முடியாது...அதன் சுவை அப்படி. சற்றே காரமும் இருக்கும். அதுவே குஜராத்தில் முள்ளங்கியை நறுக்கி வெள்ளரிக்காய் போல் சாப்பிடமுடியும்.நீர்வடிந்து, லேசான தித்திப்போடு சுவையாக இருக்கும். உருளைக்கிழங்கு இல்லாமல் இவர்களின் சப்ஜி இருக்காது, ஆனால் நம்மூர் உருளைக்கிழங்கை இப்படிதொடர்ந்து நம்மால் சாப்பிட முடியாது.
இடத்திற்கு இடம் காய்கறியின் தன்மை, நிலம், நீர், மண், வெப்பம், மழை சார்ந்து மாறுகிறது. குளிர் பிரதேசதங்களில் செரிமானம் சார்ந்தும் உணவு பழக்கம் அமைகிறது. இதில் கோதுமையை பற்றியும் அதை தொடர்ந்து சாப்பிடுவதால் சொரியாஸிஸ் வியாதி வருவதாகவும் படித்தபோது.. நிஜமாகவே ஆச்சரியமாக இருக்கிறது. பஞ்சாப்'பில். கோதுமை தவிர வேறு விளைச்சல் ஆதாரம் இல்லை, என்ன சாப்பிடுவார்கள்? நூற்றாண்டுகளாக வீரம் & வலிமை மிக்க மக்கள். நீங்கள் சொல்லும் தோல் வியாதி சாத்தியமெனில், காலங்காலமாக கோதுமை சாப்பிட்டு வரும் பஞ்சாப் மற்றும் வட மாநிலத்தவர் அத்துனைப்பேரும் சொரியாஸிஸ் அல்லது வேறு தோல் வியாதியால் அவதிப்படுவது வெளிவந்திருக்குமே.. ?!
வெளிநாடுகளில் ஆய் துடைக்க பேப்பர் பயன் படுத்துகின்றனர். தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நம்நாட்டில் ஏன் இப்பவும் நாம் தண்ணீர் பயன்படுத்துகிறோம்?. உணவு பழக்கமே காரணம், பேப்பரால் துடைத்து போடும் அளவுக்கு தான் அவர்கள் உண்கிறார்கள். அப்படி அவர்கள் உண்ண அந்த நாட்டின் புவியியல், தட்பவெப்பநிலை மட்டுமே காரணம். பிரான்ஸ்'ஸில் மாட்டையும், பன்றியையும் முதன்மை உணவாக எடுக்கின்றனர். அத்துடன் பேக் செய்யப்பட்ட ரொட்டி வகைகள், பச்சை காய்கறி. மாடு, பன்றியை அவர்கள் அதிகமாக சாப்பிடக்காரணம் உடல் உஷ்ணத்திற்காக.. உடல் உஷ்ணம் அந்நாட்டின் காலநிலைக்கு தேவை, இல்லாவிடல் அன்றாட வாழ்க்கை சாதாரணமாக அமையாது.
இங்கு நமக்கு இருக்கும் சூட்டிற்கு தொடர்ந்து கோழியையும், அசைவ உணவுகளையும் எப்படி சாப்பிட முடியும்?! அதற்கு சமமாக நெய்யை கிலோ கணக்கில் சாப்பிட சொல்லலாம். எதை ஒன்றையுமே முற்றிலுமாக நிறுத்திவிட்டு, அதற்கு மாற்றாக வேறு ஒன்றை தொடர்ந்து சாப்பிடுவது சரியான முறையாக எப்படியாகும்?
நாம் உடுத்தும் உடைக்கூட மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. கேரளத்தின் மழைக்கு துணிகள் காயாது, கனமான துணிகள் காயாமல் துர்நாற்றம் வீசும்.அதனாலேயே அவர்கள் ஆண் பெண் வித்தியாசம் இன்றி வேட்டியை உடுத்துக்கின்றனர்.. வெயிலும் அங்கு அதிகம். ஆக இரண்டு பருவத்திற்கும் ஏற்றது அந்த ஆடை. அப்படியே உச்சிக்கு போனால் கம்பளிஆடை, வயிற்றில் நெருப்பு கட்டிக்கொண்டு வாழும் காஷ்மீர், ஹிமாச்சலபிரதேச மக்கள். எப்படி நமக்கு ஒரே மாதிரி உணவும், உடையும் சாத்தியப்படும்? மாநிலத்திற்கு மாநிலம் இடத்திற்கு தகுந்தார் போன்று மாறுபடும் தானே?
ஐயா, இப்போது நமக்கு கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் , தானியவகைகள், பால், முட்டை,தயிர் எதாது ஒன்று இயற்கையாக கிடைக்கிறதா? பால் தரும் மாடு பேப்பர்களை தின்று வளர்கிறது.?!??! ஆதிமனிதன் காலத்தில் இப்படிதான் மாடுகள் இருந்தனவா? இன்றையக்கால கட்டத்தில் கோழிகள் எப்படி வளர்க்கப்படுகின்றன??? ஊசி மூலம் வளர்கின்றன. நீங்கள் பரிந்துரைக்கும் சிக்கன் நாட்டு கோழி மட்டுமா? அப்படியென்றால், அவை என்ன சாப்பிட்டு உடலை வளர்க்கின்றன? கடலிலிருந்து கிடைக்கும் மீன்கள் சுத்தமானது தான் என்று உங்களால் சொல்லமுடியுமா? பிடித்தவுடன் அதை 1-2 நாளாவது ஐஸ்பெட்டியில் வைத்து தான் நமக்கு வந்து சேர்கிறது. அதைத்தான் சாப்பிடுகிறோம். உரம், பூச்சி மருந்து இல்லாமல் காய்கறிகள், பழங்கள் உள்ளனவா?
முருங்கக்கீ்ரை எடுத்துக்கோங்க..தினம் வீட்டு தோட்டத்திலிருந்து உடைத்து, ஆய்ந்து கழுவாமல் சமையல் செய்வாங்க. அதே வீட்டுத்தோட்டத்தில் அந்த கீரையை இப்போது எடுத்து கழுவாமல் செய்யமுடிவதில்லை.காரணம் அதில் காற்றில் கலந்து வந்து படியும் தூசியும் பெட்ரோல் புகையும்.... கழுவினால்..அதிலிருக்கும் விட்டமின் சக்தி தண்ணீரோடு சென்றுவிடும் என்பதே அந்தக்கீரையை கழுவாமல் செய்யக்காரணம், இப்போது கழுவாமலும் சாப்பிடமுடியாது, கிடைக்கும் வரை சக்தி கிடைக்கிட்டும் என்றே செய்கிறோம். அப்படிதான் நமக்கு கிடைக்கும் எல்லா காய்கறி, தானிய, பழ வகைகளும்.
கேரளாக்கு போனால் அவர்களின் தண்ணீர் பழக்கத்திலிருந்து எல்லாமே வேறு, சீரகம் சேர்ந்து காய்ச்சிய தண்ணீர்தான் குடிப்பாங்க. காரணம் அவங்களுக்கு அவர்களின் தண்ணீரின் தன்மை தெரியும். ஏன் இங்கே கொல்கத்தாவில் ஒரு டம்ளரில் தண்ணீர் பிடித்து ஒருநாள் வைத்திருந்தால் போதும், கருப்பு நிறத்தில் மிக மெல்லிய வண்டல் படியும் , அதில் ஏகப்பட்ட நச்சுத்தன்மை மிகுந்த Arsenic Elements இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கு அநேக வயதானோர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், பல ஆண்டுகளாக தொடர்ந்து அதையே அருந்திவருவதால், இதை தவிர வேறு நோய்களும் தாக்கப்படுவதாக சொல்கிறார்கள்.
இப்போது உங்களின் பேலியோ டயட்டில் குடிக்கும் தண்ணீருக்கு என்ன மாற்று நீரை பரிந்துரை செய்வீர்கள்.?
இஸ்லாமியர்களை எடுத்துக்கோங்க, பிரியாணி செய்யும் போது புதி்னா சட்னி ஒன்னு செய்வாங்க, தயிரோடு பச்சையாக அரைத்து சேர்க்கப்பட்ட புதினா... (முழு சமையல் குறிப்பு தெரியாது) இது செரிமானத்திற்காக. குஜராத்தில் காலையில் டிபனுக்கு ஒரு தட்டு நிறைய ஜிலேபி வைத்து சாப்பிடுவார்கள். ஆனால் பச்சையாக வெங்காயம், முள்ளங்கி, எலுமிச்சை, பச்சைமிளகாய் ஒரு கிண்ணம் வைத்தும் சாப்பிடுவார்கள்.
ஒவ்வொரு இடத்திலும் நம் உணவுமுறை மிக சரியாகதான் அமையப்பெற்றிருக்கிறது. அளவைத்தாண்டி நாம் அதிகாக உண்ணும் போதும், உடல் உழைப்பு இல்லாத போதும் அது நமக்கு பிரச்சனையாகிறது. எத்தனைப்பேர் இங்கே ஜிம் போறீங்க? ஒர்க் அவுட் செய்யும் முன் எடையை பாருங்கள், செய்து முடித்தப்பின் எடையை பாருங்க. 1 லிருந்து 1.5 கிலோ குறைந்திருக்கும். நாம் அன்றாடும் உண்ணும் உணவிற்கு தகுந்தார் போன்று தகுந்த உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்துவந்தாலே கொழுப்பு , சர்க்கரை கூடாமல் இருக்கும்.
ஃபாஸ்ட் ஃபுட் கூடாது, எண்ணெய் உணவுகள் கூடாது, பேக்கரி ஐட்டம்ஸ் கூடாது, பெப்ஸி, கோலா போன்ற செயற்கை பானங்கள் கூடாது..... இதுப்போல நிஜமாகவே உடலுக்கு கேடு விளைவிக்கும் பழக்கங்களை வேண்டாம் என்று சொல்லுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. நல்ல விசயமே.. அதே சமயம்....
கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கிறது என்ற ஒரு காரணத்திற்காக கோதுமை, தானியங்கள், அரிசி , சில காய்கறிகள் ஒவ்வாது என்று சொன்னாலும் பரவாயில்லை...சொரியாஸிஸ் வரும்..என்று சொல்வது எல்லாம் ரொம்பவே அதிகமாக தெரிகிறது. எனக்குத்தெரிந்து என் முன்னோர்கள் அரிசி உணவை மட்டுமே சாப்பிட்டு வந்தவர்கள், யாருமே தோல் வியாதியால் அவர்கள் சாகும் வரை அவதிபடவில்லை என்று உறுதியாக சொல்லமுடியும். நெல் பயிர் வேரிலிருந்து அதன் உமி வரை நம் உடலுக்கு பல விதத்திலும் பயன் தரக்கூடியது. நம் நாட்டு வைத்தியத்தில் இதன் நற்பயன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

முடிவாக :
1. உடல் இளைக்க வேண்டி தற்காலிகமாக பேலியோ உணவை எடுத்துக்கொண்டால் சரி...
2. இல்லை இதுவே தான் நம் உணவு, இது பல நற்பயன்களை தருகிறது, பல நோய்களை மருத்துவம் இன்றி தானாகவே குணப்படுத்துவது நிரூபிக்கப்பட்டு வருகிறது, அதனால் தொடர்ந்து எடுத்துக்கொள்வது நல்லது என்று சொன்னால் -
2. குறைந்தபட்சம், 7-8 தலைமுறையாவது ஆணும் பெண்ணும் பேலியோ உணவை மட்டுமே எடுத்து வந்து, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் பிறந்த நாள் முதல் பேலியோ உணவை மட்டுமே கொடுத்து வளர்த்து, குழந்தைகளின் அறிவு, உடல் வளர்ச்சி, இத்தியாதிகள் எல்லாவற்றையும் அறிவியல் மருத்துவ ரீதியாக ஆய்ந்து, பிரச்சனைகள் இல்லை என்றால் மட்டுமே இதனை அன்றாட வாழ்க்கையில் தொடர்ந்து பயன்படுத்துவதற்கான சாத்தியங்களை யோசிக்கவே முடியும்
அதற்கு முன் -
பேலியோ டயட்டில் இருப்பவர்கள், தாராளமாக இருங்கள், ஆரோக்கயமாகவும்,, உடல் மெளிந்து என்றும் 16 ஆகவும் இருங்கள்., உங்கள் உணவின் தன்மை காரணமாக ஏன் உங்களுக்கு இறப்புக்கூட இல்லாமல் இருக்கலாம். ...தொடருங்கள், மனமார்ந்த வாழ்த்துகள்.. பிரச்சனையேயில்லை..

ஆனால், தயவுசெய்து, டயிட்டில் இல்லாதவர்களுக்கு இல்லாது பொல்லாதை சொல்லி ஒரு வாய் சாப்பிட பயப்படும்படி செய்யாதீர்..
அணில் குட்டி : ஒன்னுமில்ல... அம்மணி இடதுகாலில் லைட்டா சொரிஞ்சாங்க.... அந்த சமயம் பாத்து சொரியாஸிஸ் பதிவு கண்ணுலப்பட... ஒருவேள கோதுமை சாப்பிடறதால அவங்களுக்கும் சொரியாஸிஸ் வந்துடுத்தோன்னூ பக்' ன்னு ஆகி.. இவ்ளாம் பெர்ரிய போஸ்ட்....
பீட்டர் தாத்ஸ் : Nothing burns more calories than dancing in 5-inch heels... try it! -Ariana Grande
(G+ ல் பகிர்ந்தது)
7 - பார்வையிட்டவர்கள்:
சிறந்த பகிர்வு
புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/
பல நல்ல தகவல்கள் நன்றி
நல்ல தகவல் பகிர்வு....
வாழ்த்துக்கள்.
@ காசிராஜலிங்கம்
@ ராஜபாட்டை ராஜா
@ சே. குமார்
நன்றி
லேட்டா வந்திருக்கோமே, காரசாரமா ஒரு சண்டை நடந்திருக்கும்னு ஆஆஆவலா வந்தா.... சப்புனு ஆகிடுச்சு!! ;-)
ஹூசைனம்மா.. :)))))) ஏன் இந்த ஆசை.. ?!
பேலியோ குரூப் ல டயட்டை ஆராய்ச்சி செய்த உணவு சார்ந்த மருத்துவர்கள் & ஆராய்ச்சியாளர்கள் எல்லாரும் இருக்காங்க. அவங்களோட நாம சண்டைப்போட்ட்டு செயிக்க முடியுமா?
நல்ல சரியான யோசனை
Post a Comment