செப்டம்பர் மாதம் இங்கு வந்தோம். டிசம்பர் 20 தேதி ஆகுது. சென்னையிலேயே
ரொம்ப வெளியில் எல்லாம் போகமாட்டேன்.. இங்க சொல்லவே வேணாம். மொழி
தெரியாது.. கடைக்கு எப்பவும் வூட்டுக்கார் கைய பிடிச்சிட்டு போயிட்டு,
அவரோட வாயாலேயே பேசி..தேவையானதை வாங்கிட்டு வந்துடுவேன்.
இதுல வூட்டுக்கார் உதவி இல்லாமல் தத்து பித்துன்னு எதையோ பேசி சேர்ந்து, தொடர்ந்து போயிட்டும் வரது டான்ஸ் க்ளாஸ் மட்டும் தான். ஜிம்'மும் வூட்டுக்கார் தான் சேர்த்துவிட்டாரு.. ஆனா அங்கவும்.. கடகடன்னு என்னிடம் பெங்காலில் பேசுவோரிடம் திரு திரு'ன்னு முழுச்சி.. "மவளுங்களா..நானும் இப்படி தமிழ் பேசினா ஒரு மண்ணும் உங்களுக்கு புரியாது" ன்னு மனசுக்குள்ள செம கடுப்பா சொல்லிக்கிட்டு, வெளியில் சிரிச்சிக்கிட்டே "முஜே பெங்காலி மாலும் நய்,ஹிந்தி பி குச் குச் மாலும், அங்ரேஜி சல்தா.. .மே யூ ப்ளீஸ் டாக் இன் இங்லீஷ் " னு சொல்லின்னா போதும்.. அப்படியே தெறிச்சி ஓடிடுவாளுங்க !! ம்ம்ம்ம் அது! அந்த பயம் இருக்கனும் !!! யார்கிட்ட' ன்னு எஸ் ஆகி ....என் வேலைய நான் பாத்துட்டு வந்துடுவேன்.
இப்படியான தினப்படி வாழ்க்கையில், சுற்றி நடப்பவற்றை, அவர்களின் வாழ்க்கைமுறை, வரலாறுன்னு பார்க்கும் போது ..இந்தியாவில் "பெங்காலி" கள் தான் எல்லாவற்றிலும் முதன்மையானவர்கள், சிறந்தவர்கள்னு எண்ண வைக்கிறது. எந்த புதிய விசயத்தையும் இவர்கள் தான் ஆரம்பிக்கிறார்கள் அறிமுகம் செய்கிறார்கள் என்றும் தெரிகிறது.
ஆங்கிலம் மட்டுமே இவர்களுக்கு வேற்று மொழியில்லை. ஹிந்தியும் இவர்களுக்கு பிடிப்பதில்லை. தாய்மொழி ஒன்றை வைத்துக்கொண்டு பல விசயங்களை இவர்களால் சாதிக்க முடிகிறது என்பது இவர்களின் வலிமை.
அந்தமான் சிறையை எத்தனைப்பேர் பார்த்திருக்கிறீர்கள்..?!
அங்கு சிறையில் அடைக்கப்பட்ட இந்தியர்களில் அதிகபட்சமானோர் பெங்காலை
சேர்ந்தோர். நாட்டுக்காக எத்தனை துன்பத்தை அனுபவித்திருப்பார்கள் என்று
சொல்லவேண்டியதேயில்லை. இப்போதும் சென்னை தவிர்த்து கல்கொத்தாவிற்கும்
அந்தமானுக்கும் தினசரி விமானப்போக்குவரத்து உள்ளது. இந்த சிறையில் இந்திய
கைதிகள் பெயர் பட்டியலில் மிக பொறுமையாக நான் தமிழர்களின் பெயர்களை
தேடியதில் மூவரின் பெயர் கிடைத்தது. யார்னு கேக்கப்பிடாது. ஃபோட்டோ
எடுக்கல.. பெயரும் நினைவில்லை. 3 பேர் மட்டும்னு தலையில் நல்லா
பதிஞ்சியிருக்கு..!!
கவிதைகள், கலை, கலாச்சாரம், கல்வி,
கடவுள் என எல்லாவற்றிலும் முதன்மையானவர்களாக இருக்கிறார்கள். ரவீ(பி)ந்தரநாத்
தாகூர், நேதாஜி, விவேகானந்தர் போன்றோர் சில உன்னத எடுத்துக்காட்டுகள். எத்தனை
நாகரீகம் வந்துவிட்ட போதிலும், பொருளாதாரத்தில் அனைத்து நிலையிலுள்ள
மக்களும் அவர்களின் சொந்தக் கலாச்சாரத்தை தொலைக்காமல் இருக்கிறார்கள்,
தொடர்கிறார்கள் என்பது அழுத்தமாக பதியப்பட வேண்டிய விசயம். !
இப்படியான இந்த பூமியில் -
புனித நதியான கங்கை
- பெங்காலின் பல பகுதிகளில் வளைந்து நெளிந்து "வருடம் முழுக்க வற்றாமல்"
கரைக்கு கரைத்தொட்டு ஓடிக்கொண்டிருந்துக்கிறது. 1.5 -2 கிமி தொலைவு
அகலமுடையதாக (மனக்கணக்கு) இடத்திற்கு இடம் இந்த அகலம் கூடும் குறையும்.
இந்த நதியைப்பார்க்க பார்க்க பார்க்க ஆனந்தம்.. "யப்பாஆ...எவ்ளோ தண்ணீ.." ன்னு
என்னை பிரம்மிக்க வைக்கிறது. ஒவ்வொரு முறை இந்நதியை பார்க்கும்
போதெல்லாம்...இந்த இரண்டு கண்கள் போதவில்லை இதை ரசிக்க...இன்னும் கூடுதலாக கண்கள் இருந்தால் என்ன என நினைக்கிறேன்.
ஒரு நாட்டுக்கு தேவையான முக்கிய மூலதனத்தில் "நீர்" முதன்மை.. அந்த நீர் ஆதாரத்தை கையில் வைத்துக்கொண்டு ...எப்போதும் "வேலையில்லா பிரச்சனை", "வறுமை" என பேசி வருவதோடு, வேலைக்காக கூலிகளாக வேற்று மாநிலத்தை தேடி செல்கின்றனர்.
இப்படி வளமான ஒரு பூமியின், இவர்களின் வாழ்வியல் பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணம் "கம்யூனிசம்" என்றால்................
அணில் குட்டி : எப்படி முடிச்சியிருக்காங்க பாத்தீங்களா? எப்பவும் எல்லாந்தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி சீன்...!! .. ஆனா அம்மணிக்கு கம்யூனிசம் பத்தி ஒன்னும் தெரியாது..அதான்.. அப்ரப்ட்டா அப்படியே நிறுத்தியிருக்காங்க...
பீட்டர் தாத்ஸ் : “The river is everywhere.” ― Hermann Hesse, Siddhartha
Gangai : My clicks
Rest images : Courtesy Google : Thx.
இதுல வூட்டுக்கார் உதவி இல்லாமல் தத்து பித்துன்னு எதையோ பேசி சேர்ந்து, தொடர்ந்து போயிட்டும் வரது டான்ஸ் க்ளாஸ் மட்டும் தான். ஜிம்'மும் வூட்டுக்கார் தான் சேர்த்துவிட்டாரு.. ஆனா அங்கவும்.. கடகடன்னு என்னிடம் பெங்காலில் பேசுவோரிடம் திரு திரு'ன்னு முழுச்சி.. "மவளுங்களா..நானும் இப்படி தமிழ் பேசினா ஒரு மண்ணும் உங்களுக்கு புரியாது" ன்னு மனசுக்குள்ள செம கடுப்பா சொல்லிக்கிட்டு, வெளியில் சிரிச்சிக்கிட்டே "முஜே பெங்காலி மாலும் நய்,ஹிந்தி பி குச் குச் மாலும், அங்ரேஜி சல்தா.. .மே யூ ப்ளீஸ் டாக் இன் இங்லீஷ் " னு சொல்லின்னா போதும்.. அப்படியே தெறிச்சி ஓடிடுவாளுங்க !! ம்ம்ம்ம் அது! அந்த பயம் இருக்கனும் !!! யார்கிட்ட' ன்னு எஸ் ஆகி ....என் வேலைய நான் பாத்துட்டு வந்துடுவேன்.
இப்படியான தினப்படி வாழ்க்கையில், சுற்றி நடப்பவற்றை, அவர்களின் வாழ்க்கைமுறை, வரலாறுன்னு பார்க்கும் போது ..இந்தியாவில் "பெங்காலி" கள் தான் எல்லாவற்றிலும் முதன்மையானவர்கள், சிறந்தவர்கள்னு எண்ண வைக்கிறது. எந்த புதிய விசயத்தையும் இவர்கள் தான் ஆரம்பிக்கிறார்கள் அறிமுகம் செய்கிறார்கள் என்றும் தெரிகிறது.
ஆங்கிலம் மட்டுமே இவர்களுக்கு வேற்று மொழியில்லை. ஹிந்தியும் இவர்களுக்கு பிடிப்பதில்லை. தாய்மொழி ஒன்றை வைத்துக்கொண்டு பல விசயங்களை இவர்களால் சாதிக்க முடிகிறது என்பது இவர்களின் வலிமை.

கவிதைகள், கலை, கலாச்சாரம், கல்வி,

இப்படியான இந்த பூமியில் -
புனித நதியான கங்கை
ஒரு நாட்டுக்கு தேவையான முக்கிய மூலதனத்தில் "நீர்" முதன்மை.. அந்த நீர் ஆதாரத்தை கையில் வைத்துக்கொண்டு ...எப்போதும் "வேலையில்லா பிரச்சனை", "வறுமை" என பேசி வருவதோடு, வேலைக்காக கூலிகளாக வேற்று மாநிலத்தை தேடி செல்கின்றனர்.
இப்படி வளமான ஒரு பூமியின், இவர்களின் வாழ்வியல் பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணம் "கம்யூனிசம்" என்றால்................
அணில் குட்டி : எப்படி முடிச்சியிருக்காங்க பாத்தீங்களா? எப்பவும் எல்லாந்தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி சீன்...!! .. ஆனா அம்மணிக்கு கம்யூனிசம் பத்தி ஒன்னும் தெரியாது..அதான்.. அப்ரப்ட்டா அப்படியே நிறுத்தியிருக்காங்க...
பீட்டர் தாத்ஸ் : “The river is everywhere.” ― Hermann Hesse, Siddhartha
Gangai : My clicks
Rest images : Courtesy Google : Thx.
13 - பார்வையிட்டவர்கள்:
மொழி தெரியாமல் காலம் தள்ளுவது ஒரு கலை. ‘கன்னடம் கொத்தில்லா’ என இங்கே தமிழையும் ஆங்கிலத்தையும் வைத்தே பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்:).
தொடருங்கள்...
@ ராமலக்ஷ்மி : :))) இங்க ஆங்கிலமும் அந்நியமொழி, அதனால சைகை மொழியையும் விட்டு வைக்கறதில்லை :)
ஓ.... இப்ப கொல்கத்தாவா????
சைகை மொழி பெஸ்ட். எங்க நாட்டுலே இது ஒரு அஃபீஸியல் மொழியும் கூட!
நம்மல்லாம் யாரு.... ஹாங்காங்கில் சைகை மொழியில் பேரம் பேசி தங்கம் வாங்கின ஆளில்லையா?
அதுவும் 33 வருசங்களுக்கு முன்னே:-))
ஆமாம்...ஊர் அணில்குட்டிக்குப் பிடிச்சிருக்கா?
@ துளசிஜி : :))) லாங் டைம் நோ சி? எப்படி இருக்கீங்க?
ஆக்சுவலி கொல்கத்தா இல்லை.. கொல்கத்தாவிலிருந்து ஒரு 50 கிமி தள்ளி குக்/குக்குமில்லாத கிராமம் மாதிரியான ஒரு சின்ன ஊர் "கல்யாணி" யில் இருக்கோம்.. பிடிச்சிருக்கு..
***துளசி கோபால் said...
ஓ.... இப்ப கொல்கத்தாவா????
சைகை மொழி பெஸ்ட். எங்க நாட்டுலே இது ஒரு அஃபீஸியல் மொழியும் கூட!
நம்மல்லாம் யாரு.... ஹாங்காங்கில் சைகை மொழியில் பேரம் பேசி தங்கம் வாங்கின ஆளில்லையா?
அதுவும் 33 வருசங்களுக்கு முன்னே:-))***
:-)))
அங்கே உங்கள டீல் பண்ணிய ஹாங்காங் காரன், உடனே போயி எதுக்கு வம்புனு தமிழ் கத்துக்கிட்டானாம். அது தெரியுமா உங்களுக்கு? :)))
----------------
I was stuck with whole bunch of Bengali people for a while. I had good time. There will be lots of politics among themselves but they still "get together" very often and have lots of fun. BTW, they cant eat food without fish. My friend used to say, "டேய் அவனுக மீன்காரணுகடா மீன் இல்லாமல் (மீனை வாழவிடாமல்) அவனுகளால வாழமுடியாது." I realized how true what he said was when I was with this Bengali community in US for a while! :)
@ வருண் : ஒரு நாட்டின் (இந்தியாவின் விதவிதமான மாநிலங்கள் எனக்கொள்க) உணவு என்பது - அங்கு அருகில் கிடைக்கும் அதிகமான மூலப்பொருளைக்கொண்டும் / அங்கு நிலவும் தட்பவெப்ப சூழ்நிலை/மண் வளம்/நீர்வளம் இவற்றைக்கொண்டு தான் நிர்ணயிக்கப்படுகின்றன. இதுவே அடிப்படை!
இதேதான் உடைகளுக்கும். கேரளாவின் உடைக்குறித்த என் சந்தேகங்கள் அங்கு சென்று அவர்களோடு சில ஆண்டுகள் வாழும் போதுதான் புரிந்தது. அவங்க ஏன் இரண்டு வேளை குளிக்கறாங்கன்னு கூட அங்கு இருக்கும் போது தான் தெரிந்தது.. காரணம் நானும் குளித்தேன். துர்நாற்றம்.. நம் நாற்றம் நமக்கே தாங்காது. இரவு குளிக்காவிட்டால் தூங்கமுடியாது அபப்டியோரு துர்நாற்றம் நம் உடலிலிருந்து வரும் ! :) அதையே பனி அதிகம் பொழியும் வடகிழக்கு, வடமேற்கு மாநிலங்களின் கம்பளி உடைகளும், அவர்களின் வயிற்றில் எந்நேரமும் கட்டிக்கொண்டு திரியும் நெருப்பும் எப்போதோ ஒருமுறை செல்லும் நமக்கு புரியாது, மிகவும் பளுவாகவும் தெரியும்!
இங்கு மீன் என்பது மிக அருகில், வருடம் முழுக்க, எளிதாக, விலைக்குறைவாக கிடைக்கும் ஒரு உணவு. இது அவர்களின் அன்றாட தொழில். நாங்களுமே இங்கு வந்த 2 மாதங்களில் சிக்கனை விட்டுவிட்டு, மீன் சாப்பிட ஆரம்பித்திருக்கிறோம். :)
அருமையான படங்கள்.....
சில பெங்காலி நண்பர்கள் தில்லியிலும் உண்டு. ஹிந்தியையும் பெங்காலி போன்று பேசி கொல்வார்கள்! :)
@ வெங்கட் நாகராஜ் : :) நன்றி
படங்கள் அருமை...
நல்ல பகிர்வு.
சே.குமார் : நன்றி
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரி...
சே. குமார் : நன்றிங்க.. உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !! :)
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
Post a Comment