தேவையானவை :
தோசை மாவு : 4 கப்
முளைக்கட்டிய தானியங்கள் : ஒரு கப் (எல்லா தானியங்களும் கலந்தது கிடைக்கிறது)
தக்காளி : 3
வெந்தயக்கீரை : 1 கப்
உப்பு
செய்முறை :
வெந்தயக்கீரை ஆய்ந்து, சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சிறிது வதக்கிக்கொள்ளவும், முளைக்கட்டிய தானியங்களை ரவை பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும், தக்காளியை நறுக்கி அதையும் நன்கு அரைத்துக்கொள்ளவும், இவை அனைத்தையும் உப்பு சேர்த்து தோசை மாவோடு கரைத்து, தோசைகள் சுடலாம். இந்த தோசையை ஆப்பத்திற்கு மேல் பக்கம் மூடி வேக வைப்பது போல, வேகவைத்து, திருப்பி போடனும். ஓரங்களில் லேசாக எண்ணெய் ஊற்றி சுடவேண்டும்.
மிகவும் எளிமையான, மிருதுவான, ருசியான தோசை தயார். இதற்கு தொட்டுக்கொள்ள கார சட்னி நன்றாக இருக்கும். கொஞ்சம் காரமாக தக்காளி சட்னியும், கத்திரிக்காய் கொத்ஸ்த்தும் செய்திருக்கிறேன்.
இதையே தக்காளி மட்டும் தவிர்த்துவிட்டு அடை மாவிலும் கலக்கி சுடலாம். தக்காளி சேர்க்காமல் செய்வதால், வெந்தயக்கீரையின் அளவை 1/2 கப் ; பாக குறைத்துக்கொள்ளவும். அடை மாவில் எப்போதுமே, எதாது ஒரு தானியத்தை ஊறவைத்து அரைத்துக்கொள்வேன். சோயா ச்சங்க்ஸ்' 4-5 சேர்ப்பேன். கீரையென்றால் வெந்தையக்கீரை மட்டுமே. வெந்தயக்கீரை தனி ருசியை தரும்.
கத்திரிக்காய் கொஸ்து செய்முறை : வாணலில் எண்ணெய் ஊற்றி, வடவம், கருவேப்பிலை தாளித்து, பூண்டு, சின்ன வெங்காயம் தட்டி சேர்த்து சிவந்தவுடன், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, கடைசியாக பொடியாக நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து வதக்கி, மஞ்சத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மூடிவிடவும். கத்திரிக்காய் நன்று வெந்தவுடன், அடுப்பிலிருந்து இறக்கி கரண்டியால் நன்கு மசித்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து பரிமாறவும்.
Thanks : Google Images
அணில்குட்டி : எங்கவீட்டு சமையல்னு தலைப்பு போட்டுட்டு, இவங்க புதுசா செய்யற உணவெல்லாம் எழுதறாங்க.. இவங்களுக்கு சமையல் சொல்லிக்கொடுத்த இவங்க ஆயா மட்டும் இதையெல்லாம் படிச்சா? "ஆமா இதெல்லாம் யார் வீட்டு சமையல்னு" கேப்பாங்க..
பீட்டர் தாத்ஸ் : “One cannot think well, love well, sleep well, if one has not dined well.” ― Virginia Woolf
11 - பார்வையிட்டவர்கள்:
சத்துள்ள சமையல் குறிப்புகள்... நன்றி...
தின்னவேலில ஹோட்டல்ல நவதானியத் தோசைன்னு ஒண்ணு சாப்பிட்டேன், ரொமப் சுவையா இருந்துச்சு. சர்வர்கிட்ட ரெஸிப்பி கேட்டா (அவ்வ்வ்) எல்லா பயறும் போட்டு செஞ்சதுன்னு சொன்னார், நம்ப முடியலை. ஆனா, அது பார்க்க இதுமாதிரி இல்லை. (நீங்க தோசை மாவுல கலந்து செஞ்சிருக்கீங்க; அவர் பயறுகளை ஊறவச்சு உளுந்தோட அரைச்சதாச் சொன்னார்)
@ தி.த: நன்றி
@ ஹூஸைனம்மா : நீங்க சொல்றது சரியா இருக்கலாம். கேழ்வரகு தோசை நானும் உளுந்துடன் சேர்ந்து தான் செய்வேன். ஆனா இதுல முளைக்கட்டிய எல்லா தானியங்களும் ஒரே மாதிரி தன்மை கிடையாது இல்லையா... அதனால கல்லில் ஒட்டிக்குமோன்னு (ஒரு தொலைநோக்கு சிந்தனையோட) தோசைமாவில் கரைச்சிட்டேன் :)
/ஒரு தொலைநோக்கு சிந்தனையோட//
ஆஹா.. ஆஹாஹா.. இங்க நிக்குறீங்க நீங்க!!
சரி, என்ன பயறுலாம் போட்டீங்க, தனித்தனியா பேர் சொல்லுங்க! (ம்க்கும்... உடனே செஞ்சிடுற மாதிரிதான்..)
ஹூஸைனம்மா : நான் ரெடிமேட் பாக்கெட் வாங்கினேப்பா.. பதிவில் முதல்ல ஒரு படம் இருக்கு பாருங்க..அது தான்.. நிறைய தானியத்தோட பேரே எனக்குத்தெரியாது :))
குத்து மதிப்பா சொல்றேன் : கோதுமை, கேழ்வரகு, வெந்தயம், பச்சைப்பயிறு, அதிலேயே இன்னொரு டார்க் வெரைட்டி, சோயா & ராஜ்மா வெரைட்டீஸ், கடலை கருப்பு & வெள்ளை - அவ்ளோதான் எனக்குத்தெரியும்.
அதுல சப்ப சப்பையா இருக்கே அதெல்லாம் என்னான்னே தெரியல.. :)
கத்திரிக்காய் கொத்ஸ்சும்...
தானியத் தோசையும்
அருமையான குறிப்பு...
@சே.குமார். நன்றி
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்
வலைச்சர தள இணைப்பு : இவர்கள் எல்லாம் இருக்கும் வரை தமிழ் அழியாது!!
@தி.த : பார்த்தேன். நன்றி
நவதானியம் சேர்த்து சத்தான தோசை.
பகிர்ந்தமைக்கு நன்றி.
@வெங்கட் நாகராஜ் : நன்றி
Post a Comment