எனக்கு வயது 6, திருச்சி பொன்மலையில் இருந்தோம்.
அம்மா ஊரில் இல்லாத நாட்களில், நானும் சின்ன அண்ணாவும் சாப்பிட, ஒரு ஹோட்டலில் அப்பா ஏற்பாடு செய்திருந்தார். அப்பா உடன்வர வேண்டிய அவசியமில்லை, அண்ணன் கையை பிடிச்சிட்டு போவேன், காஃபியில் ஆரம்பித்து, என்ன பிடிக்கிறதோ சாப்பிட்டு விட்டு, அப்பா பெயரில் கணக்கு எழுதி வச்சிட்டு வந்துடுவோம். விலை சலுகைகள் ஏதுமில்லை என்றாலும், குழந்தைகள் என்ன கேட்டாலும் தரனும், நன்றாக கவனிக்க வேண்டுமென்பது அப்பாவின் வேண்டுகோள்.
பிரதி உபகாரமாக ஹோட்டலுக்கு குடி தண்ணீர் சப்ளை எங்கள் வீட்டிலிருந்து செல்லும். நாங்கள் அப்போது இருந்தது ஃபோர்மேன் குவாட்டர்ஸ் பங்களா. அதன் பின் பக்கம் இரண்டு அவுட் ஹவஸ் வீடுகளில் வேலையாட்கள் தங்கியிருப்பாங்க, அவங்க பயன்படுத்த வெளியில் ஒரு குடிதண்ணீர் குழாய் இருக்கும், அதிலிருந்து, ஹோட்டலிருந்து ஒரு அண்ணன் வந்து இரண்டு குடங்களில் தண்ணீர் நிரப்பி சைக்கிளில் கட்டி எடுத்துட்டு போவார். அந்த அண்ணனுக்கு ஒரு கண் இருக்காது, இமை மூடி தைத்தே இருக்கும், என்ன காரணமென்று எனக்கு நினைவில்லை, அந்த அண்ணனின் முகம் இன்னமும் நினைவில் இருக்கு..
பங்களா என்று சொன்னேன் அல்லவா? தெருவில் இருந்து எங்கள் வீட்டை அடையவே 500 மீட்டருக்கு மேல் நடக்கவேண்டியிருக்கும், வீட்டை கடந்து தோட்டத்து வழியாக பின்னால் சென்று தண்ணீர் பிடித்துவர எப்படியும் 15-20 நிமிடங்கள் பிடிக்கும். ஒற்றைக்கண் அண்ணன், தெருவில் சைக்கிளை விட்டுட்டு, குடத்தோடு குழாயடிக்குச் சென்று வருவதற்குள் சின்ன அண்ணன் (7 1/2 வயசு), அந்த சைக்கிளை எடுத்து குரங்குப்பெடல் அடித்து ஓட்ட முயற்சி செய்வார். ஒரு வாரம், 10 நாட்களுக்குள் சைக்கிள் நன்றாகவே ஓட்டக்கற்றுக்கொண்டார்.
நான் இதை வேடிக்கைப்பார்க்கவும், ஒற்றைக்கண் அண்ணன் தண்ணீர் குடத்தோடு வந்தால், "கார்த்தீஈஈஈஈ...... அண்ணா வந்துட்டாங்க...வா"ன்னு குரல் கொடுக்கவும் மெயின் கேட்டில் நிற்பேன்.
சின்ன அண்ணன் ஓசியில் சைக்கிள் ஒட்டக்கற்றுக்கொண்டு, எனக்கு லேடிஸ் சைக்கிள் வாடகைக்கு எடுத்து, (ஒரு மணி நேரம் 50பைசா) கிரவுண்டுக்கு அழைத்துச் சென்று கற்றுக்கொடுத்தது. அண்ணனின் விடா முயற்சியில் 1-2 நாட்களில் கற்றுக்கொண்டேன்..
இருவருக்கும் நன்றாக சைக்கிள் ஓட்டத்தெரிந்தாலும், அண்ணன் சம்பாதிக்க ஆரம்பித்தப்பிறகு அவருக்கென ஒரு சைக்கிள் வாங்கினார். எனக்கு, நவீனுக்கு 2 வயதாகும் போது தான் சைக்கிள் சொந்தமாக கிடைத்தது. அதுவரையில் நமக்கென்று சொந்தமாக ஒரு சைக்கிள் இல்லை என்ற ஏக்கம் இருக்கதான் செய்தது. என் வயதை ஒற்ற, என் அத்தை மகளுக்கு சைக்கிள் பள்ளிப்பருவத்திலேயே வாங்கிக்கொடுத்தார்கள். அதைப்பார்த்து வீட்டில் எவ்வளவு கேட்டும் சைக்கிள் வாங்கித்தரல...எப்பவும் நடராஜா சர்வீஸ் தான்..
இப்படியாகவே என் சின்ன வயசு சொந்த சைக்கிள் கனவு, ஏக்கத்தோடு கரைந்தது. இன்று அனைவரும் வித விதமான கார் கனவுகளோடு வேகமாக முன்னேறிக்கொண்டிருக்க எனக்கென்னவோ சைக்கிள் வாங்கதான் ஆவல். பல வருடங்கள் கழித்து, 1992-94க்கு பிறகு, திரும்பவும் சைக்கிள் வாங்கி ஓட்டி வருகிறேன்.
புது சைக்கிள் தான் வாங்கனும்னு வீட்டில் ஒரே கெடுபிடி. மாதக்கணக்கில் அடம்புடிச்சி...உபயோகப்படுத்திய சைக்கிள் தான் வேண்டுமென ஒருவழியாக வாங்கிட்டேன்.. :)
கொஞ்ச நாள் ஆனா சரியாகிடும்னு நம்பறேன். இல்லையா எங்கையாச்சும் விழுந்து வாரி சில்லறை பொறுக்கி சைக்கிள் ஓட்டறதை நிறுத்தவும் சொல்லிடுவாங்களோன்னு லேசாக உள்ளுக்குள் பயம் இருக்கதான் செய்து... பார்க்கலாம்...
என்னோட Black Bird ஐ விட, சைக்கிள் ரொம்பவே பிடிச்சியிருக்கு..
அணில் குட்டி : அந்த சைக்கிள் என்ன பாவம் பண்ணுச்சோ... .படாதபாடுப்படுது .... :((((
பீட்டர் தாத்ஸ் : Life is a Cycle.. :)
மிதிவண்டி வரலாறு : நன்றி விக்கி
பதினேழாம் நூற்றாண்டில் பிரான்ஸில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் கோம்டி மீடி டீ ஷிவ்ராக் (Comte Mede De Sivrac) என்பவர் பொழுது போக்காக வீட்டிற்கு தேவையான அலங்காரப் பொருட்களை தயாரிப்பதில் ஈடுபட்டார். ஒருநாள் மரதுண்டுகளை செதுக்கிக் கொண்டிருக்கும்போது தற்செயலாக அவரது சிந்தனையில் தோன்றிய வடிவம் தான் மிதிவண்டி. 1791-ஆம் ஆண்டு முழுக்க முழுக்க மரத்துண்டுகளால் செய்யப்பட்ட சைக்கிள் ஒன்றை வடிவமைத்தார். இந்த சைக்கிளை ஓட்டுபவர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு காலால் தரையை உந்தித்தள்ளி சைக்கிளை முன்னோக்கி உருளச்செய்ய வேண்டும். ‘The Celerifere’ என்று அழைக்கப்பட்ட இந்தவகைமிதிவண்டியில் திசைமாற்றி, மிதிஇயக்கி, தடை, என எதுவும் கிடையாது. பிரான்ஸ் நாட்டிலுள்ள Palais Royal என்ற இடத்தில் 1794-ஆம் ஆண்டு அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தனது கண்டுபிடிப்பு பற்றி ஷிவ்ராக் விளக்கிக்காட்டினார். [2]இந்த நிகழ்வு மிதிவண்டி உருவாவதற்கு காரணமாக இருந்தது. தொடர்ந்து படிக்க

என்ன... இன்னும் ஓட்டுவதற்கு பேலன்ஸ் சரியா வரல..நம்ம சாலைகள் வேற சூப்பரா
இருக்கறதால.. கொஞ்சம் திணறதான் செய்கிறேன். அதேப்போல இரவு நேரங்களில் விளக்கு
இல்லாத தெருவில் ஓட்ட மேடுபள்ளம் சுத்தமா கண்ணுத்தெரியல.. :) மொத்தத்தில்
எனக்கு முன்னால், பின்னால் வரும் வண்டிக்காரர்கள் நான் ஓட்டுவதைப்பார்த்து
பயப்படுவது அப்பட்டமாக தெரிகிறது.
கொஞ்ச நாள் ஆனா சரியாகிடும்னு நம்பறேன். இல்லையா எங்கையாச்சும் விழுந்து வாரி சில்லறை பொறுக்கி சைக்கிள் ஓட்டறதை நிறுத்தவும் சொல்லிடுவாங்களோன்னு லேசாக உள்ளுக்குள் பயம் இருக்கதான் செய்து... பார்க்கலாம்...
என்னோட Black Bird ஐ விட, சைக்கிள் ரொம்பவே பிடிச்சியிருக்கு..
பெட்ரோல் செலவு மிச்சம், உடற்பயிற்சியும் ஆச்சி...
அணில் குட்டி : அந்த சைக்கிள் என்ன பாவம் பண்ணுச்சோ... .படாதபாடுப்படுது .... :((((
மிதிவண்டி வரலாறு : நன்றி விக்கி
பதினேழாம் நூற்றாண்டில் பிரான்ஸில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் கோம்டி மீடி டீ ஷிவ்ராக் (Comte Mede De Sivrac) என்பவர் பொழுது போக்காக வீட்டிற்கு தேவையான அலங்காரப் பொருட்களை தயாரிப்பதில் ஈடுபட்டார். ஒருநாள் மரதுண்டுகளை செதுக்கிக் கொண்டிருக்கும்போது தற்செயலாக அவரது சிந்தனையில் தோன்றிய வடிவம் தான் மிதிவண்டி. 1791-ஆம் ஆண்டு முழுக்க முழுக்க மரத்துண்டுகளால் செய்யப்பட்ட சைக்கிள் ஒன்றை வடிவமைத்தார். இந்த சைக்கிளை ஓட்டுபவர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு காலால் தரையை உந்தித்தள்ளி சைக்கிளை முன்னோக்கி உருளச்செய்ய வேண்டும். ‘The Celerifere’ என்று அழைக்கப்பட்ட இந்தவகைமிதிவண்டியில் திசைமாற்றி, மிதிஇயக்கி, தடை, என எதுவும் கிடையாது. பிரான்ஸ் நாட்டிலுள்ள Palais Royal என்ற இடத்தில் 1794-ஆம் ஆண்டு அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தனது கண்டுபிடிப்பு பற்றி ஷிவ்ராக் விளக்கிக்காட்டினார். [2]இந்த நிகழ்வு மிதிவண்டி உருவாவதற்கு காரணமாக இருந்தது. தொடர்ந்து படிக்க
16 - பார்வையிட்டவர்கள்:
ரசிக்க வைத்தது சைக்கிள் அனுபவம்...!
என் சைக்கிள் ஓட்டும் ஆசை இதுவரை நிறைவேறவில்லை.
ஓட்டக் கற்றுக் கொடுக்க ஆள் யாருமில்லை .
வீட்டிலும் என்கரேஜ் பண்ணலை.
பொண்ணுதானேன்னு .
நானும் திருச்சியில் தான் படித்தேன் . உங்கள் பதிவு பழைய நினைவுகளை முன் நிறுத்தியது.
@தி.த : நன்றி
@அபயாஅருணா : இதுவரை தானே ..முடியல... இனிமே நிறைவேறும்.. முயற்சி செய்ங்க.. :)
என் சைக்கிள் கனவும் நிறைவேறவில்லை. அண்ணன் சொல்லிக் கொடுத்தார்.
வாடகை சைக்கிள் கடைக்கு போய் சைக்கிள் வாங்கி வந்து ஓட்டி விட்டு நேரம் முடிந்தவுடன் கொண்டு போய் கொடுக்கும் வரை தான் என் சைக்கிள் கனவு நனவானது. போக்குவரத்து மிகுந்த சாலை கவனம் வேண்டும் பெண்பிள்ளை அப்படி, இப்படி என்று சைக்கிள் வாங்கி தர மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள்.
உங்கள் மிதிவண்டி அனுபவம் நன்றாக இருக்கிறது.
@கோமதிஅரசு : எனக்கும் அந்தமாதிரி கட்டுப்பாடுகள் இருந்துச்சிம்மா, ஆனா சைக்கிள் மட்டுமில்ல, டூவிலர் கியர் வண்டி முதற்கொண்டு சின்ன அண்ணன் எல்லாவற்றையும் எனக்கு சொல்லிக்கொடுத்துடுச்சி.. :)
சைக்கிள் அனுபவம் ரசிக்க வைத்தது...
@சே.குமார் : நன்றி
ம்ம்ம்... ரெண்டு நாளா உங்கள நெனப்பு.. மெயில் பண்ணனும்னு நெனச்சிட்டிருந்தேன்.. பதிவே போட்டு கூட்டு வந்துட்டீங்க.. Think of the devil, And there it is... ஹி..ஹி.. என் இனமன்றோ நீங்களும்!!
ஆனாலும் உங்களுக்கு கொஞ்சம் தில்லு கூடத்தான்.. பாட்டியாகப் போகிற வயசுல சைக்கிளா!!
என்ன சொன்னாலும், தைரியமான(!!!!), ஆரோக்கியமான முடிவுக்கு வாழ்த்துகள்!! :-))))
எனக்கும் இதுவரை சைக்கிள், டூ வீலர் ஓட்டத் தெரியாது!! (ஷேம்... :-( ) வீட்டில, டூ வீலர் கேட்டதுக்கு, ஆட்டடோ வாங்கி டிரைவரோடு வீட்டு வாசல்ல நிறுத்திட்டாங்க!!
ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும், ஆட்டோ செலவு எகிறிக் கொண்டு வருவதால், இந்த முறைதான் டூ வீலர் ஓட்டப் படிக்கணும்னு நெனச்சேன். (ஹி..ஹி.. பாட்டி வயசுலாம் இல்லை எனக்கு) அதுக்குள்ள லீவு முடிஞ்சிடுச்சு நல்லவேளை!! (டிராஃபிக்கைப் பாத்தா குலை நடுங்குது!!) :-))))
//இந்த முறைதான் டூ வீலர் ஓட்டப் படிக்கணும்னு நெனச்சேன். (ஹி..ஹி.. பாட்டி வயசுலாம் இல்லை எனக்கு)//
நல்ல விசயம்..எப்படியாச்சும் கத்துக்கோங்க..
//பாட்டியாகப் போகிற வயசுல சைக்கிளா!!
//
கொள்ளுப் பேரப்பிள்ளைகள் வரும் வரைக்கும் ஒருவேளத் தெரியாத்தனமா உயிரோடு இருந்தாலும் இதெல்லாம் செய்வேங்க...
தவிர சைக்கிள் ஓட்டறதுக்கு எல்லாமாங்க வயசு.??! பெண்கள் தான் பெண்களுக்கு எதிரின்னு சொல்றதை உண்மையாக்கிடுவீங்க போலவே.. ?!! :))
எனக்கும் சைக்கிள் ஒட்டத் தெரியாது இன்னும் இங்க வந்து பார்த்த போதுதான் தெரிந்தது என்னைப் போல நிறைய பேர் இருக்காங்கன்னு ஆனா ஒரு விஷ்யம் இங்க ஒட்டத் தெரியாது என்று சொன்னவங்க எல்லாம் பெண்கள் இதில் நான் மட்டும்தான் ஆண் ஹும்ம்ம்ம்ம்ம்ம்
@அவர்கள் உண்மைகள் : உங்க கமெண்ட்டை பார்த்து நினைவுக்கு வந்த நிகழ்வு..
தனராஜ் தாத்தா, ஆயாவின் சித்தப்பா மகன். எங்க போனாலும் எவ்ளோ தூரம்னாலும் நடந்தேப்போவாரு. எங்கப்போனாலும்னு சொல்றதை விட எவ்ளோ அவசரமான விசயமானாலும் வேக்கு வேக்குன்னு நடந்துவருவாரு... "ஏன் தாத்தா.. சைக்கிள் எடுத்துட்டு வரக்கூடாதான்னு " கேட்டப்ப தான் தெரிஞ்சிச்சி.. அவருக்கு சைக்கிள் ஓட்டத்தெரியாதாம். :)
ஆண்களிலும் சிலர் இருக்கதான் செய்கிறார்கள்..இப்படி எனக்கு ஓட்டத்தெரியாதுன்னு சொல்றதே பெரிய விசயங்க. நீங்க சைக்கிள் ஓட்டக்கத்துக்கோங்க.. எளிது தான்.. :)
//பெண்கள் தான் பெண்களுக்கு எதிரின்னு சொல்றதை //
யக்கோவ், சும்மா உங்களைக் கலாய்க்கிறதுக்காகச் சொன்னா... எதிரியாக்குறீங்க?? ஏன்.. ஏன்... என்ன கோபம்?
இனிய அனுபவம்.....
தில்லி வந்த பிறகு சைக்கிள் ஓட்டுவதில் பெரிய இடைவெளி. நெய்வேலியில் இருந்தவரை சைக்கிள் தான் எங்கு செல்ல வேண்டுமென்றாலும்!
@ஹூசைனம்மா : ச்சே சே கோவமா? ஸ்மைலி போட்டு இருக்கேனே பாக்கலையா?
@வெங்கட் நாகராஜ் : டில்லியிலும் முடிஞ்சா ஓட்டுங்க..
Post a Comment