மேலுள்ளவைகளை வரைவதற்கு முன் அவற்றின் படங்கள் :
பென்சில் சீவி எடுத்த மிச்சத்தை வைத்து எதையோ செய்ய போனேன்...அதை செய்து முடிக்கும் போது...இதிலிருந்து ஏதாவது உருவம் செய்யலாம் போலவே'ன்னு யோசனை வர கூகுளில் தேடினேன்..நிறைய ஐடியா கிடைச்சது.. அதையும் பயன்படுத்திக்கிட்டேன்..நானும் கூட சிலதை வரைந்துப்பார்த்தேன்... பிறகு புகைப்படங்கள் எடுத்து அவற்றை MSpaint டில் கற்பனைக்கேற்ற படங்களாக வரைந்தேன். டிசைன்ஸ் நல்லாவே வந்தது.... (நாமே சொல்லாட்டி எப்படி?)
உங்களுக்கும் பென்சில் சீவலிலிருந்து புதுசா டிசைன் வரைய ஐடியா கிடைத்தால் சொல்லுங்க .. வரைந்துப்பார்ப்போம்!. உங்க வீட்டு குட்டீஸ்'க்கு காட்டுங்க, அவர்களிடம் நிறையவே ஐடியா கிடைக்கும்.. அவற்றை இங்கே பகிரவும்...
அணில் குட்டி : ம்க்கும்...இதை செய்யறேன் அதை செய்யறேன்னு, பென்சிலை சீவி சீவிப்போட்டு, அது பாட்டுக்கும் ஃபேன் காத்தில் பறந்து அங்க இங்கன்னு வீடுப்பூராவும் ஒரே குப்பை....அம்மணி அதையெல்லாம் கண்டுக்காம தீவிரமா படம் வரைய..பாவம் அவங்க வூட்டுக்காரு.. பொறுக்கமுடியாம ஒவ்வொன்னா எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டுக்கிட்டு இருந்தார்.... இதையெல்லாம் இந்தம்மா வெளியில் சொல்ல மாட்டாங்களே... ??!!
பீட்டர் தாத்ஸ் : “Art doesn’t have to be pretty. It has to be meaningful.” ~Duane Hanson
Thx : Google.
14 - பார்வையிட்டவர்கள்:
அற்புதமான கலைவண்ணங்கள்
மிகவும் ரசித்தோம்
பதிவாக்கித் தந்தமைக்கும்
தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
அஞ்சு வயசுல விளையாட வேண்டிய விளையாட்டை, அம்பது வயசுல விளையாடிகிட்டு இருக்கீங்க..ம்ம்... ‘குழந்தை மனசு’!! :-)))
@ரமணி எஸ்.: நன்றி
@ ஹூஸைனம்மா : தெரிந்தவர்கள் தெரியாவதர்கள் என யார் கேட்டாலும் பட்டுன்னு 55-58 க்குள் எதாது ஒரு வயதை சொல்லுவேன். :). நீங்க அதில் 5-8 வருஷத்தை அநியாயத்துக்கு குறைச்சிட்டீங்கன்னு ஒரு சின்ன வருத்தம்.. :(
நல்ல கற்பனை
ஆஹா... அழகு.
குட்..சூப்பர் ;))
\\பொறுக்கமுடியாம ஒவ்வொன்னா எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டுக்கிட்டு இருந்தார்.... \\
ரைட்டு ;))) வேற வழி ;)))
@கடைசிபென்ச் : நன்றி
@சே.குமார்: நன்றி
@கோபிநாத் : :) நன்றி
எல்லாமே அழகா இருக்கு..... பாராட்டுகள்...
@வெங்கட் நாகராஜ் : நன்றி
நல்ல கற்பனை.. பாராட்டுகள்...
@ அ. அ : நன்றிங்க. :)
அல்லாம் படா சோக்கா கீதும்மே...
@முட்டா நைனா : நன்றி
பொருள் எதுவா இருந்தா என்ன...கலைஞன் கைப்பட்டால் அது அற்பமும் அற்புதம் ஆகிவிடும்..வாழ்த்துகள்.
Post a Comment