"ஹல்லோ.. சொல்லுடா…"
"கொரானா முடிஞ்சி, தியேட்டர்ஸ் திறக்க ஆரம்பிச்சிட்டாங்க. சினிமாக்கு போலாம் வரியா.. வீட்ல வேற, எங்கேயாவது வெளியில் போலாமானானு கேட்டுட்டே இருக்காங்க. ஃபேமிலியோட போலாம்… என்ன சொல்ற.."
"என்னாது ஃபேமலியோட சினிமாவா? எங்கூட்டம்மா கண்டிஷனுக்கு எல்லாம் எந்த தியேட்டரிலும் சீட் கிடைக்காது என்னாலையும் அந்தம்மாவ கூட்டிட்டு வரமுடியாது.… ஆள விடு சாமி.. நீ போயிட்டு வா…"
"டேய்..என்னடா இப்படி சொல்ற.. சிஸ்டர் அப்படி என்ன கன்டிஷன் போடறாங்க.. சொல்லு கேப்போம்.."
"ஞாயித்துக்கிழமை சினிமாக்கு போகனும்னா.. ஞாயித்துக்கிழமை காலையில் தான் சொல்லுவாங்க.. அதுல.. சீட் நம்பர் A-E வரைக்கும் தான் இருக்கனும்.."
"ஓ..அது ஏன்"
"அந்த தூரத்தில் இருந்து பாத்தாதான் கண்ணுக்கு நல்லதாம். அதுக்கு கீழ இருந்தா வேணாம்னு சொல்லிடுவாங்க. 10 நிமிசம் முன்னாடி போய் சீட்ல உக்காந்துக்கனும், லேட் ஆகக்கூடாது, லைட் ஆஃப் ஆகி விளம்பரம் ஓடிட்டு இருந்தாக்கூட நான் செத்தேன்…"
"சினிமா தான் ஆரம்பிக்கலையே அப்பவுமா கோவப்படுவாங்க.."
"அவங்க பிரச்சன சினிமா ஆரம்பிக்கறதை பத்தி இல்ல… லைட் ஆஃப் பண்ண பிறகு போனா,, உக்காந்து இருக்கவங்கள தொந்தரவு செய்து உள்ள போய் உக்காரனும், பின்னாடி இருக்கவங்களுக்கு மறைக்கும்.. அப்புறம் நடக்கும் போது சீட்ல உக்காந்து இருக்கவங்க மேல இடிக்காம நடந்து போகனும்.. உட்கார்ந்து இருப்பவங்க காலை மிதிச்சிட்டு நடக்கனும்.. இதெல்லாம் அவங்களுக்கு பிடிக்காது…"
"டேய்..சிஸ்டர் சொல்ற எல்லா விசயமும் கரெக்ட் டா.. இதுக்கா அவங்கள சினிமாவுக்கு கூட்டுட்டு போகமாட்டேன்னு சொல்ற? அராஜகம் டா. "
"அடப்போடா.. அதுக்காக நம்மள ஊருக்கு முந்தி கிளம்ப சொல்லுவாங்க.. கொஞ்சம் லேட் டா ஆனாலும் ..போற வழியெல்லாம் சீக்கிரம் சீக்கிரம் னு உசுற வாங்குவாங்க.. ஜாலியா போனோமா படம் பாத்தோமான்னு இருக்காதுடா.. "
"அவங்க சொல்ற பாயின்ட்ஸ் எல்லாம் கரெக்ட் தான். நீ தான் தேவையில்லாம ரியாக்ட் பண்ற. நான் டிக்கட் புக் பன்றேன், நீ அவங்கள கூட்டிட்டு வர வழிய மட்டும் பாரு.. " டோக் ஃபோனை கட் பண்ணிட்டான்.
'சுஜா..சுஜா..எங்க இருக்க.. மோகன் குடும்பத்தோட படத்துக்கு போறானாம். நம்மையும் கூப்பிட்டான் நான் ஒக்கே'ன்னு சொல்லிட்டேன்.
"என்ன படம்? ரிவியூ படிக்காம நான் படத்துக்கு வரமாட்டேன்னு உங்களுக்கு தெரியாதா..? ஆமா.. ஏந்த தியேட்டர்? சவுண்டு சிஸ்டம் எல்லாம் சரியா இருக்குமா?. ஏசி’ய பாதியில் நிறுத்தாம இருப்பாங்களா..? கண்ட தியேட்டரில் நான் சினிமா பாக்க மாட்டேன்.'
அடக்கடவுளே!…இந்த ரிவியூ, ஏசி, சவுண்டு பத்தியெல்லாம் அவன்’ட்ட சொல்லலியே… அய்யோ... முதல்ல ஃபோனை போடுறா என் சிப்சு…..இல்லனா உனக்கு ஊதிடுவாங்கடா சங்கு......
பீட்டர் தாத்ஸ்; Conditions differ in life. Some extent it makes sense, some extent it annoys.