மயக்கம்' என்னுடனேயே பலவருடங்களாக தொடர்ந்து பயணம் செய்து வருகிறது. எல்லாவிதமான மயக்கமும் அத்துபடி.
முதல் மயக்கமே எனக்கு பசி மயக்கமாக இருந்ததால் இன்றளவும் அதை மறக்க முடியவில்லை. சென்னை பல்கலைகழகம் அருகில் நடை பாதையில் நடந்து கொண்டு இருக்கும் போது விழுந்தேன்.தொடர்ந்து சாப்பிடாமல் இருந்தால் மயக்கம் வரும் என்பதை அறிந்துக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்ததுன்னு நினைச்சிக்கலாம். :)
பிறகு இதே போன்று ஒரு முறை திநகர் ரங்கநாதன் தெருவில் மயக்கம் வர, விழுந்து மானம் போகாமலிருக்க, ஓடிச்சென்று ஒரு கடை வாசலில் உட்கார்ந்துக்கொண்டேன். எப்போது தெளிந்ததோ, நானாகவே எழுந்து வந்துவிட்டேன். மயக்கம்' இரண்டாவது முறையே பழகிவிட்டது..
அடுத்து, உடல் சார்ந்த மயக்கங்கள். மாதாந்திர தேதிகளில் முதல் இரண்டு நாளில் ஏதோ ஒரு நாளில் கண்டிப்பாக மயக்கம் அடித்து விழுவேன். இரத்த சோகையே இதற்குப்பெரிய காரணம். இது தெரிந்ததால், பலவாறு என்னை பாதுக்காப்பாக வைத்துக்கொள்வேன் என்றாலும், சில நேரம் விழுந்து விடுவது உண்டு. அதிகமான மன உளைச்சலோடு அலுவலகம் சென்று, எனையறியாமல் மயக்கம் அடித்து விழுந்து, கூட்டம் கூடி,அது அலுவலக முதல்வர் வரை சென்று பெரிய விஷயமானது. அலுவலகத்தில் விழுந்த இடம் அப்படி !
இது தவிர்த்து, மருத்துவமனை மயக்க மருந்து கொடுக்கும் போது வரும் மயக்கம். கை நரம்பில் ஊசிப்போடும் போது, 1, 2 சொல்ல சொல்லுவார்கள். 4-5 வரை எண்ணியிருந்தால் அதுவே அதிகம் என்று நினைக்கிறேன். அவ்வளவு தான் தெரியும், சுற்றி இருப்பது எதும் தெரியாது, ஏதோ சத்தங்கள் மட்டும் மிக லேசாக கேட்கும், மிக அடர்த்தியான அடர் ஆரஞ்சு நிறம் நிரம்பிய ஒரு பெரிய குழாய் அல்லது அது போன்ற ஏதோ ஒன்றில் அதி வேகமாக நுழைந்து 300-400கிமீ வேகத்தில் சென்றுக்கொண்டே இருப்பது போல இருக்கும்.. எவ்வளவு நேரம் என்று தெரியாது, ஆரஞ்சு நிறம் தெரியும் வரை பார்த்துக்கொண்டிருப்பேன், வேகமாக செல்வதை உணர்வேன்..பிறகு அதும் காணாமல் போய் ஆழ்ந்த நித்திரைக்கு செல்வேன் என்று நினைக்கிறேன். ..அப்படி ஒரு நாளில்.......
******
ஆப்ரேஷன் தியேட்டரிலிருந்து அறைக்கு வந்துவிட்டதாக நினைவு. படிக்கையில் கிடத்துகிறார்கள். போர்வையால் என் உடல் தெரியாமல் போர்த்தி விடுகிறார்கள். யாரெனத்தெரியவில்லை. நேரம் செல்கிறது... (செல்வதாக நினைத்துக்கொள்கிறேன்).

"கவிதா காலை தூக்கி வைங்க..." செய்தேனா என்று தெரியவில்லை. அவர்களாக என் காலை தூக்குகிறார்கள், என் கால்கள் தான் ஆனால் எனக்கு ஏதும் தெரியவில்லை. கால்களை நீட்டிவிடுகிறார்கள்... என்ன செய்தார்கள் என தெரியவில்லை. கண்ணை திறக்கமுடியவில்லை. வயிற்றை தடவ முயற்சித்து கையை தூக்குகிறேன்.. கை என் சொல் பேச்சிக்கேளாமல் 'தொப்'பென்று கீழே விழுகிறது.
"ச்சும்மா இரும்மா.. கைய எல்லாம் தூக்காத என்ன வேணும் உனக்கு....
" ............. ட்ரஸ்.........."
"போட்டுத்தான் இருக்கு........ பேசாம தூங்கு...." போர்வை சரிசெய்கிறார்....
கண் விழிக்க முயற்சித்துத் தோற்கிறேன். நினைவுகளிலும் தெளிவில்லை.
"தண்ணி....." நடப்பவற்றை உணர்ந்துக்கொள்கிறேன். பாட்டிலில் நேராக என் வாயில் ஊற்ற முயன்று... எடுத்துவிடுகிறார். . சற்று இடைவெளி.......... இப்போது பாட்டில் மூடி என் உதட்டை தொடுகிறது. வாயைத்திறக்க முயற்சி செய்கிறேன். வாயில் பழச்சாறு ஊற்றப்படுகிறது. இரண்டு முறை வாயை திறந்திருப்பேன்..
"போ.....து...... ..........எ..... குழந்த....."
"வந்துடுவான்...சொல்லி இருக்கேன்...." வாயின் ஓரத்தில் வழிந்த பழச்சாறு துடைக்கப்பட்டது. அதற்கு மேல் நினைவில்லை... ... திரும்ப எவ்வளவு நேரத்தில் எனக்கு நினைவு திரும்பியது என்று தெரியவில்லை. உடனேவாகக்கூட இருக்கலாம்.. நினைவு வரும்போதும், வெளி சத்தம் கேட்கிறது, என்னால் கண்களை திறக்க முடியவில்லை.....
"என் குழந்த ........"
".. ..வந்துட்டே இருக்கான்... ." ...
மிதப்பது போன்ற உணர்வு..... வாய் மட்டும் பேசுவதை நிறுத்தவில்லை, கண் விழிக்காமாலேயே.............. "சாப்...டீங்க.......ளா..?
"இன்னும் இல்ல.."
"அவன் வந்தா........................................... வாங்கித்தர............................................ சொல்லுங்.......................................................... .என்ன தனியா விடாதீங்க............................ .."
".. போகலம்மா... தூங்கு...முடியாம பேசாத.." ..
.இன்னமும் கண்ணை திறக்க முடியவில்லை, மறுபடியும்... ஆழ்ந்த உறக்கம்... நேரம் செல்கிறது....நினைவு வரும் போது, நேரம் சென்றதாக நினைக்கிறேன்... என் குழந்தையின் குரல் கேட்கிறது... கண் திறந்து பார்க்க முடியவில்லை....ஆனால் பார்க்க வேண்டுமென நினைக்கிறேன்..
"ம்ம்மா....." ..................................அம்ம்மாஆ............" ...............................
"ஏன்ப்பா கண்ணைத்தொறக்க மாட்டறாங்க... ? ............ கூப்டாங்கன்னு சொன்னீங்க... ?" "
அவளுக்கு மயக்கம் இன்னும் தெளியலடா..... நடுநடுவுல முழிக்கிறா.. உன்னைத்தான் கேக்கறா........"
அம்ம்மாஆ............"
அம்ம்ம்மாஆ............................."
"ஏய்..............." .................................... "
ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.....நோயாளி... ...................... "
முயன்றும் கண்களை திறக்க முடியவில்லை......................"..ம்ம்......... சாப்டியா...?" நான் பதில் சொன்னது அவனுக்கு கேட்கவில்லை.
"அப்பா நான் கிளம்பறேன்.. கண்ணைக்கூட தொறக்க முடியாம கிடக்கறாங்க..ஏன்ப்பா ..???
"மயக்க ஊசிப்போட்டு இருக்காங்கடா.. மயக்கம் இன்னும் தெளியல... "
"வலி சரியாப்போச்சாப்பா.. .. இனிமே அழமாட்டாங்க இல்லப்பா..."
."ஆமா. ... வலி இனிமே இருக்காதுன்னு தான் நினைக்கிறேன்.. . .கண்ணு முழிச்சி அவளே சொன்னாத்தான் உண்டு.... .."
********
விழிக்கிறேன்.. இன்னமும் மயக்கம் முழுமையாக தெளியவில்லை. தள்ளாட்டம் இருந்தது.
"சாப்பிட்டீங்களா?"
"மணி 4.30 ஆச்சிடி.. சாப்பிடாம இருப்பேனா? உன்னை மாதிரி நினைச்சியா என்னை? டாக்டரை கூப்பிடவா.. நடப்பியா... போலாமா? நீ எழுந்துட்டா போலாம்னு சொன்னாங்க...
"பாத்ரூம் போகனும்ப்பா... . ."
"வா.... "
"நீங்க வேணாம் சிஸ்டர் கூப்பிடுங்களேன்.. "
"வா வா நானே வரேன்.. " கைத்தாங்களாக நடக்கிறேன்.. பாத்ரூம் சென்று...
"நானே போறேன்.. நீங்க வேணாம்.. "
"தள்ளாடற விழுந்துடுவ.. நான் வரேன்.."
"ம்ம்ம்..இல்ல வேணாம்ப்பா..... விழமாட்டேன்.. பிடிச்சிக்கிறேன்"
"கதவை மூடாத.." "சரி.. " திரும்ப வெளியில் வரும் வரை கதவோரம் நிற்கிறார்.
"போலாம்ப்பா.. இங்க வேணாம்.. ! வலிக்குதுப்பா... .நவீனை பாக்கனும் ! "
"ஏண்டி உனக்கே ஓவரா இல்ல. .காலையில தானே வந்தே. .அதுக்குள்ள என்ன ஆயிரம் வாட்டி அவனை பாக்கனும் சொல்ற... "
"போலாம்ப்பா.. இங்க வேணாம்.. ! "
"சரி சரி.. போலாம். .இரு டாக்டரை பார்த்துட்டு வரேன்.. "
தனியே பேசியபடி செல்கிறார். "மயக்கமா இருந்தாலும் விடாம பேசறா.. முழிச்சாலும் பேசிக்கிட்டே இருக்கா..... எப்பத்தான் வாய மூடுவாளோ தெரியல.... :( "
(அவ்ளோவா பேசிட்டேன்.. ????! )

Picture Courtesy : Thx Google.
அணில் குட்டி அனிதா : எல்லாஞ்சரி.. இது எப்ப நடந்தது.. இப்ப பதிவிடறீங்க?

பீட்டர் தாத்ஸ் : When I faint, I feel guilty & Shy. But my husband besides always to give his hand.
0 - பார்வையிட்டவர்கள்:
Post a Comment