இந்தப்பதிவை
படிக்கும் முன், சோனா
கஞ்ச் பற்றி 2010 ல், எழுதிய பதிவை
படித்துவிட்டு, தொடர்ந்து
படித்தால் எளிதாக புரியும்.
சோனா கஞ்ச்,
கொல்கத்தாவின் மத்திய
பகுதியில், பழமை
மிகுந்த, மக்கள்
மிகவும் அதிகமாக புழங்கும்
இடத்தில் உள்ளது. கொல்கத்தாவில்
மிக புகழ்பெற்ற பல காலங்களாக
அவர்களின் பாரம்பரிய உணவின்
ருசி மாறாமல், பலகாரங்கள் விற்பனை செய்து
வரும் 'மித்ரா'
உணவகத்தின், பின்
வாசல் இருக்கும் சாலையில்
தொடங்குகிறது.
T வடிவில்
சாலைகள், ஒவ்வொன்றும்
அதிகபட்சம் 500 மீ
இருக்கலாம், பிரதான
சாலையிலிருந்து, இந்த
இடத்தின் வழியாக பலர் கடந்து
அந்தப்பக்கம் இருக்கும்
வேறொரு பிரதான சாலைக்கு
செல்கின்றனர். அதனால்
இது ஒரு பொதுவழியாகவே
எனக்குப்பட்டது. மக்கள்
நடமாட்டம் அதிகமுள்ள,
கடைத்தெருவாகவும்
இருக்கிறது. உள்ளே
மிகச்சிறிய சிறிய சாலைகள்
பிரிந்து சென்றன, நெடுக
நெருக்கமான அடுக்குமாடி
குடியிருப்புகள். (படத்தில்
பார்க்கலாம்).
அந்த
சாலைகளில், அந்த
மக்களுடன் நடக்க ஆரம்பித்தவுடன்,
இதுவும் ஒரு சாதாரண
இடம் என புரிந்துவிடுவதால்,
நமக்குள் இருக்கும்
தயக்க நிலை மறைந்து சகஜ நிலைக்கு
தானாக வந்துவிடமுடிகிறது.
T சாலையின் நடுமுக்கில்
நின்று மூன்று பக்கமும்
திரும்பி புகைப்படும்
எடுத்துக்கொண்டேன். அப்போது,
என் கணவர் காதோரம்
"போலீஸ்"
என்றார். பதட்டமில்லாமல்
திரும்பிபார்த்தேன், T
சாலையின் மத்தியில்
சாலை ஓரமாக பெஞ்சில் ஒரு
போலிஸ் தேமே'வென
உட்கார்ந்திருந்தார்.
பிரச்சனை எதும்
வரக்கூடாது/வந்தால்
சமாளிக்க இவர் இருக்கிறார்
என கூடுதல் தகவலையும் கணவர்
சொல்லவும், நான்
நடுரோட்டில் நின்று புகைப்படும்
எடுத்தும் காவலர் கண்டுக்கொள்ளாமல்
இருந்ததாலும், தைரியம்
அதிகம் வர, மொபைலை
மறைக்காமல், சுற்றும்
முற்றும் கவனித்துவாரே ஃபோட்டோ
எடுத்துபடி மெதுவாக நடந்தேன்.
இந்தியாவில்
மிகப்பெரிய அளவில் பாலியல்
தொழில், அரசின்
அங்கீகாரத்தோடு நடத்தப்படும்
ஒரு இடமாக அறியப்படுவது சோனா
கஞ்ச். இந்தியாவில்
அதிகளவில் எய்ட்ஸ் நோயாளிகள்
அறியப்பட்டதும் இங்கே தான்.
தொடர்ந்து
எழுதுவதற்கு முன், இப்படியான
ஒரு இடத்திற்கு, தன்
மனைவியை அழைத்து செல்கிறோம்,
அவளை மற்றவர்கள்
எப்படிப்பார்ப்பார்கள்?
என்ன நினைப்பார்கள்
என்ற எந்தவித சிந்தனையும்
எண்ணங்களும் இன்றி தைரியமாக,
நான் ஆசைப்பட்டேன்
என்பதற்காக அழைத்து சென்ற
என் கணவருக்கு என் மனமார்ந்த
நன்றியை சொல்லிக்கொண்டு
தொடர்கிறேன்.
ஒரு ஆண்
இங்கு செல்வதற்கும், அவனுடைய
மனநிலைக்கும், என்னுடைய
மனநிலைக்கும் அதிக வேறுபாடு
உண்டு. அவனுக்கு
இருக்கும் படப்படப்பு,,
குற்ற உணர்வு இத்தியாதிகள்
எனக்கில்லை. அந்த
இடத்தை நான் பார்ப்பதற்கும்
ஒரு ஆண் பார்ப்பதற்கும்
நிச்சயம் அதிக வித்தியாசம்
உண்டு.
என் முந்தய
பதிவில் 65000 பாலியல்
தொழிலாளிகள் இங்கு இருப்பதாக
எழுதியிருக்கிறேன். நேரில்
அப்படியிருக்க வாய்ப்பில்லை.
வெகுவாக இந்த தொழில்
இங்கே குறைந்துக்கொண்டே
வருகிறது என்றும் கொள்ளலாம்.
அதிகபட்சமாக 30-40
பெண்களை பார்த்திருப்பேன்.
நாங்கள் சென்றது பகல்
நேரம், ஒருவேளை
இரவாக இருந்திருந்தால் இந்த
எண்ணிக்கை மாறலாம், இருப்பினும்
65000 இருக்க வாய்ப்பேயில்லை.
20-30 நிமிடங்களில்
நடந்து சென்றாலே முடிந்துவிடுமளவு
சுற்றளவு கொண்ட இடம். மிக
சாதாரணமாக மக்கள் இங்கே
அவர்களின் அன்றாட வேலைகளை
செய்துவருகிறார்கள். ஆண்கள்
மிக இயல்பாக தங்கள் வேலையைப்பார்த்து
கொண்டு இருக்கின்றனர்.
கடை வைத்திருப்பவர்கள்,
உட்பட இவர்கள் அனைவரும்
பெண்களுக்கு வேண்டப்பட்டவர்களாக,
தரகர்களாகவும்
இருக்கலாம். அல்லது
அவர்களுக்கு சம்பந்தமில்லாத,
அங்கு வசிப்பவர்களாகவும்
இருக்கலாம். ஒரு
sensitive ஆன இடத்தில்
நான் இருக்கிறேன் என்ற எண்ணமே
எனக்கு வரவில்லை.
கொல்கத்தாவின்
மற்ற தெருக்களில் எப்படி
நடந்தேனோ அப்படிதான் இங்கும்
நடந்தேன், உணர்ந்தேன்.மற்ற
இடங்களில் வேற்று மாநிலத்தவளாக
என்னை எப்படி வித்தியாசமாக
பார்த்தார்களோ அப்படியே தான்
இங்கும் என்னை பார்த்தனர்.
பாலியல்
தொழிலாளிகள் பற்றி :-
பாலியல் செய்யும் பெண்களை, சமூகம் இங்கே தனியாக ஒதுக்கிவைக்கவில்லை. சாதாரண மக்களோடு கலந்தே இருக்கின்றனர்.
மீன் விற்கும் ஒரு பெண்ணோ, காய்கறி விற்கும் ஒரு பெண்ணோ நமக்கு எப்படி தெரிவார்களோ, அப்படிதான் எனக்கு இவர்களும் தெரிந்தனர்.
மற்ற வேலைகள் போலவே, வருமானத்திற்காக, வாடிக்கையாளர்களை எதிர்ப்பார்த்து காத்திருந்தனர்.
பெண்களின் முகத்தில் எந்த ஒரு சங்கடமோ, கஷ்டமோ, சலனமோ தெரியவில்லை. பழகி இருக்கலாம், எளிதான தொழிலாகவும் இருக்கலாம்.
மிக அழகானவர்களிலிருந்து, மிக சுமாரான அழகுடைய பெண்களும், வயதான, மிகவும் குண்டான, குள்ளமான பெண்களும் கலந்திருந்தனர்.
அத்தனை கூட்டத்திலும், இவர்கள் தான் உடல் சேவை செய்து, சம்பாதிக்கிறார்கள் என்பதை, பெண்ணான எனக்கே புரியமளவிற்கு தங்களை அழகு செய்துக்கொண்டிருந்தனர்.
ஆண்களின் தேவையறிந்து, அவர்களுக்காக மட்டுமே இந்த தொழில் செய்வதால், அவர்களை கவரும்படியான உடைகள் அணிந்திருந்தனர். மார்பகங்கள் தெரியும்படியாக Low Neck, உள்ளாடை பட்டைகள் தோள்களில் தெரியும்படியான கையில்லாத, மிக இறுக்கமான மேல் சட்டைகளையே (T-shirt type) அணிந்திருந்தனர், கூடுதலான முகப்பூச்சி, அலங்காரம், இத்தியாதிகள். சிலர் புடவைக்கட்டி இருந்தாலும், உடல் தெரியும்படியான மெல்லிய புடவைகள் கட்டி சிலைகளைப்போல நின்றிருந்தனர்.
திருமணம் ஆனவர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நெற்றி வகிட்டில் நீண்ட செந்தூரம் இட்டுக்கொண்டு இருந்ததால், தனியாக தெரிந்தனர்.
T சாலையில், ஒரு பக்க சாலையில் நின்ற பெண்கள் எல்லோரது கையிலும் சின்னதாக ஒரு கைப்பை இருந்தது, ஆக, வாடிக்கையாளர் கிடைத்ததும், அவருடன் வெளியில் செல்ல தயாராக இருந்தனர். மற்றொரு தெருவில் இருந்தவர்களுக்கு அங்கேயே இதற்கான வசதி இருக்கும் போல. மிகக் குறுகிய வாயில்களைக்கொண்ட, சின்ன சின்ன வரிசை அடுக்கு மாடி வீடுகளே இருந்தன. (படத்தில் பார்க்கலாம்).
வழி நெடுக, இப்படியான பெண்கள் விதவிதமான கவர்ச்சி உடைகளில் சாலை ஓரமாக நின்றுக்கொண்டோ, நாற்காலிப்போட்டு வரிசையாக அமர்ந்துக்கொண்டோ இருந்தனர்.
சில பெண்களை தேடிவந்த ஆண்களிடம், பண பேரம் நடந்துக்கொண்டு இருந்தது.
கோயில் வாசலில் கடைத்தெருவுகளில் பொருட்கள் விற்க நாம் நடக்க கூடவே தொடர்ந்து வந்து வியாபாரம் செய்வது போல, ஒரு பெண்ணிடம் பேரம் படிந்து, பணத்தைக்கொடுத்து, அவருடன் காரை நோக்கி நடந்துக்கொண்டிருந்த ஒரு வாடிக்கையாளரிடம், இன்னொரு பெண் சென்று, தன்னை அழைத்துசெல்ல கெஞ்சிக்கொண்டே பின் தொடர்ந்தார்.
சோனா கஞ்ச் 'ஐ ஒட்டிய, முக்கிய பிரதான சாலையிலும் பெண்கள் வரிசையாக நின்றுக்கொண்டிருந்தனர். இது வாடிக்கையாளர்களின் வசதிக்காக (அ) வியாபாரத்திறமை ஆக இருக்கலாம்.. உள்ளே வந்து பலர் இருக்குமிடத்தில் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து, தரகர்களுக்கு பணம் கொடுத்துன்னு வாடிக்கையாளர்களின் சிரமத்தை க்குறைக்கவும், வெளியில் நின்றிருந்தால், சீக்கிரம் வேலைக்கிடைக்கும், உள்ளே கார் சென்று திரும்புமளவு பெரிய இடமும் இல்லை, ஆக காரில் வரும் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக பிரதான சாலையில் நின்றிருந்தனர் என ஊகிக்க முடிந்தது. மேலே சொன்ன கார் வாடிக்கையாளரை இங்கே தான் பார்த்தேன்.
கவனித்த வரையில், வெளி மாநிலத்து பெண்கள் இருக்கும் அறிகுறியே இல்லை. குறிப்பாக தென்னிந்திய பெண்கள் யாருமேயில்லை. இதனை அழுத்தி சொல்லக்காரணம், பொதுவாக வடகிழக்கு பகுதி பெண்கள் உயரம் மிகவும் குறைந்தவர்கள், உடல் வாகு, முகம் போன்றவை எல்லாமே வடகிழக்கு பகுதியை சேர்ந்த பெண்களே என சொல்லாமல் சொல்கிறது.
இது அவர்களின் வாழ்க்கை, அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை சுதந்திரமாக முடிவெடுத்து செய்கின்றனர். யாருக்கும் கட்டுப்பட்டு அவர்கள் செய்வதாக எனக்குத்தெரியவில்லை. ஏனென்றால் அந்த இடத்தைவிட்டு வரவேண்டும் என்று நினைக்கும் பெண், சென்ற பதிவில் சொல்லியபடி, மிக எளிதாக வந்துவிட முடியும். கடுமையான கட்டுப்பாடு என்ற ஒன்று அங்கு இருப்பதாக தெரியவில்லை. நானும் அவரும் சாதாரணமாக சுற்றி வந்தோம். வாய்ப்பு கிடைத்திருந்தால்,அங்கிருந்த தேநீர் கடைகளில் அந்த பெண்களோடு சேர்ந்து தேநீர் குடித்திருக்கலாம், பேசியிருக்கலாம். மற்ற தொழில்கள் போலவே ஏதோ ஒரு காரணம், சந்தர்ப்பம், சூழ்நிலை இந்த தொழிலை செய்ய வந்துவிட்டனர். அதனை வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப செய்து சம்பாதிக்கிறார்கள். சந்தோஷமாக இருக்கிறார்கள்.
மற்ற
மாநிலங்களில் திருட்டுத்தனமாக
அதிகளவில் நடக்கும் இத்தொழில்
இங்கு அங்கீகாரத்தோடு வெளிப்படையாக நடக்கிறது
!! அவ்வளவே !!
― Kelley Kenney, Prose and Lore: Memoir Stories About Sex Work
5 - பார்வையிட்டவர்கள்:
அருமையான பதிவு
Thanks :)
mmm wish one day I could be in a similar place ,speaking to those sex workers and just offer ears, in a not judging way. I 'm glad that your Husband took you there to go around and observe.
@Rohini : Thx.. :)
தில்லியில் இருக்கும் இது போன்ற சாலையில் வங்கிகள், அலுவலகங்கள், கடைகள் உண்டு. அப்பகுதி வழியாகச் செல்லும் போது பார்த்திருக்கிறேன். எத்தனை எத்தனை கொடுமைகள் அனுபவிக்கிறார்கள் என்று நினைக்கும்போது வருத்தம் தான்.
Post a Comment