ஏலக்காய் பொடி - ஒரு ஸ்பூன்
ஸ்வீட் கண்டன்ஸ்ட் மில்க் - 3 ஸ்பூன்
உலர்ந்த தேங்காய் துருவல் - 5 ஸ்பூன்
பிஸ்தா பருப்பு & பொடி - 3 ஸ்பூன்
எலுமிச்சை நிற கலர் பொடி- 1/4 ஸ்பூன்
பனீர் தயாரிக்கும் முறை : பாலை காய்த்து, அடுப்பிலிருந்து இறக்கி 1 நிமிடம் ஆறவைத்து, அதில் வடிக்கட்டிய எலுமிச்சை சாற்றை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மெதுவாக கலக்கவும். பால் திரிந்து வந்தவுடன், அதில் பச்சைத்தண்ணீரை ஊற்றி சூட்டைக்குறைக்கவும். இதனால் பனீர் மேற்கொண்டு வேகாமல் இருக்கும். அதிகம் வெந்துவிட்டால், கடினமாக ஆகிவிடும்.
ஒரு வெள்ளைத்துணியை எடுத்து, அதில் இதைக்கொட்டி வடிக்கட்டி, நன்கு பிழிந்து 30நிமிடம் அப்படியே வைத்துவிடவும்.
Chum
Chum செய்முறை : 30 நிமிடம் கழித்து, பனீரை அகன்ற தட்டில்
கொட்டி, பின் உள்ளங்கையால் நன்கு தேய்த்து கட்டிமுட்டி இல்லாமல் 4-5
நிமிடம் தேய்த்து பிசையவும்.. பின்பு உருண்டையாக உருட்டி வைத்து, அதிலிருந்து சின்ன
எலுமிச்சை அளவு எடுத்து இலை வடிவிலும்,டைமன்ட் வடிவிலும், சிலிண்டர்
வடிவிலும் செய்து வைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் அடி கனமான அகலமான பாத்திரம் வைத்து, சர்க்கரையைக்கொட்டி, அதில் 1 1/4 லிட்டர் தண்ணீர் விட்டு அத்துடன் எலக்காய் பொடி, கலர் பொடி இரண்டையும் சேர்த்து கலக்கி, சர்க்கரை கரைந்து கொதித்தவுடன் , தயாராக உள்ள Chum Chum ஐ அதில் போட்டு 15-20 நிமிடம் வேகவைக்கவும். பாகில் போடும் முன் இருந்த அளவைப்போல இரண்டு மடங்காக உப்பி வரும், அப்போது ஜல்லிக்கரண்டிக்கொண்டு எடுத்து ஒரு தட்டில் வைத்து, ஆறவிடவும். இதை மூன்று விதமாக அலங்கரித்து பரிமாறலாம்.
1. உலர்ந்த தேங்காயை இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து தட்டில் கொட்டி, அதில் இலை வடிவ Chum Chum ஐ பிரட்டி, அதன் மேல் கொஞ்சம் பிஸ்தா பொடியைத்தூவி வைக்கவும்.
2.டைமன் வடிவ Chum Chum மில் ஸ்வீட் கண்டன்ஸ்ட் மில்கை நீட்டு வாட்டத்தில் மேல் பக்கத்தில் விட்டு, அதன்மேல் பிஸ்தா வை சிறு துண்டுகளாக்கி தூவி மென்மையாக அது பதியும் படி அழுத்திவிடவும்
3. ஸ்வீட் கண்டன்ஸ்டு மில்க் 2 ஸ்பூன், தேங்காய் துருவல் 2 ஸ்பூன், எலக்க்காய் தூள் 1 சிட்டிகை, பிஸ்தா பொடி 1 ஸ்பூன் சேர்த்து நன்கு கலக்கி, சிலிண்டர் வடிவ Chum Chum மில் நடுவில் கத்தியால் கீறி, இந்த கலவையை அதுனுள் வைக்கவும்.
இதனை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து எடுத்து, பின்னர் அலங்கரித்து உடனே சாப்பிடலாம், அல்லது அலங்கரித்து முடித்து ஃப்ரிஜ்ஜில் வைத்தும் சாப்பிடலாம்.
குறிப்பு :
-> பாகு ரொம்ப கெட்டியாகக்கூடாது. கெட்டியானால் Chum Chum உப்பி வந்தாலும் அமுங்கிடும்.
-> பாகு ரொம்ப கெட்டியாகக்கூடாது. கெட்டியானால் Chum Chum உப்பி வந்தாலும் அமுங்கிடும்.
-> பனீர் வடிகட்டி 30 நிமிடம் துணியிலேயே கட்டி வைத்துவிட்டு , பின்பு எடுத்து செய்தால், மிருதுவாக வரும்.
-> கலரை பனீர் பிசையும் போது கடைசியாக கலந்தும் பிசைந்து வைத்துக்கொள்ளலாம்.
->
கடையில் கிடைக்கும் பனீர் வைத்தும் செய்யலாம். பிசையும் போது அதிக
நேரம் பிசைய வேண்டும், தேவைப்பட்டால் 2 ஸ்பூன் ரவை, அல்லது 2 ஸ்பூன் arrowroot மாவு சேர்த்து பிசைந்து செய்யலாம். மிருதுவாக வரும்.
-> ஷேப் செய்யும் போது விரிசல் இருக்கக்கூடாது. விரிசல் இருந்தால் வேகும் போது பனீர் வெடித்து பிரிந்துவிடும்.
Images : Thx Google.