அதிகமாக
குளிரூட்டப்பட்ட அந்த அறையில், கைப்பிடித்து மெதுவாக அழைத்துச்
செல்லப்பட்டேன். அறை வெளிச்சம் குறைவாக இருட்டாக இருந்தது. "நகையெல்லாம்
கழட்டி கொடுத்திட்டியா? " வெற்றாக இருக்கும் என்னை இன்னும் ஒருமுறை
சரிப்பார்த்துக்கொண்டாள் அவள் ..!!
உள்ளே ஒரே ஒருவர் இருந்தார், வேக வேகமாக பெரிய பெரிய ட்ரே போல் எதையோ எடுத்து வைத்துக்கொண்டிருந்தார். ஏன் இத்தனை அவசரமாக இந்த வேலையை செய்யவேண்டும்? தெரியவில்லை...
என்னை சற்றே உயரமான ஒரு படுக்கையில் படுக்க வைத்தார்கள். என் கைகளை உடலோடு வைத்து கட்டிப்போட்டார்கள். திமிரவோ கத்தவோ முடியவில்லை. அவர்கள் அறியாமல் அசைந்து பார்த்தேன்..ம்ஹூம்.. ஒன்றும் நடக்கவில்லை. மிக அழுத்தமாக கட்டப்பட்டிருக்கிறேன், நம் வேலை இங்கு பலிக்காதுன்னு தெரிந்துக்கொண்டேன்.
வேகமாக அந்த இளைஞன் பெங்காலியில் ஆரம்பித்து, நான் முழிப்பதை கவனித்து..அதே வேகத்தில்.... "அச்சா" என்று ஹிந்தியில் மாற்றி ஏதோ சொல்லிக்கொண்டே போனான். என்னை கட்டிப்போட்டுவிட்டு "பேச்சப்பாரு பேச்சை"ன்னு அவன் சொல்வதை சரியா கவனிக்கல..... இன்னும் என்னை என்ன செய்யப்போறாங்களோ? தனியா வந்து இதுங்கக்கிட்ட இப்படி சிக்குவேன்னு நினைச்சிக்கூட பாக்கலையே...ன்னு சிந்தனை வேறெங்கோ இருந்தது.
ஹிந்தியில் சொல்லி முடிக்கும் போது, என் இடது கையில், எதையோ திணித்தான்.. ரப்பர் பந்து போல உணர்ந்தேன். இப்போது திறந்திருந்த என் கண்களை மூட சொன்னார்கள். "கண்ண திறக்கக்கூடாது சரியா...." என ஹிந்தியில் பயமுறத்தப்பட்டேன். தலையில் ஹெல்மெட் போல ஏதோ ஒன்றை மாட்டி அப்படி இப்படி என் தலையை திருப்ப முடியாமல் லாக் செய்தனர்..லாக் செய்யும் முன்னர் காதுகளும் அடைக்கப்பட்டன. அடேய் அப்பரெண்டீஸுகளா..." மூக்கும், வாயும், இன்னும் பாக்கி இருக்குடா..அதிலும் எதையாச்சும் வச்சி அடச்சிட்டா.." வேல சீக்கிரம் முடிஞ்சிடும், காசையும் வாங்கிட்டு, வீட்டுக்கும் நல்ல தகவலை சொல்லிடலாம் நீங்க" ன்னு .....ஹிஹி.. சொல்லல. .நினைச்சிக்கிட்டேன்.
இதுவரை நடப்பதைப்பார்த்தேன். இப்போது உணர ஆரம்பிக்கிறேன்.
என்னை ஏதோ ஒரு குகைக்குள் தள்ளுகிறார்கள்... உடல், தலை இரண்டையுமே அசைக்க முடியல..ஆர்வத்தில் டகால்னு கண்ணைத்திறந்து பார்த்து மூடிக்கொண்டேன். குகைக்குள் வெளிச்சம் இருந்தது. ஆனால் இதுல என்னத்த தெரிஞ்சிக்க முடியும்? ,,,நடப்பது நடக்கட்டும்னு அமைதியாக படுத்துக்கிடந்தேன். வேற வழியும் இல்லை என்பதே உண்மை.
நான் இருந்த படுக்கை..குகைக்குள் செல்ல ஆரம்பித்தது.. "செத்துப்போயிட்டா.. உடலை இப்படி தள்ளி த்தான் எரிப்பாங்க போல" ன்னு நினைக்கும் போதே..."அடடே..நாம இன்னும் சாகலையே" ன்னும் தோணியது.
ட்ர்ர்ர்ர்ட்டக்க் ட்ர்ர்ர்ர்ட்டக்க்.....ன்னு சென்று நின்றுவிட்டது. மயான அமைதி.. லேசாக கண்ணைத்திறக்க முயற்சி செய்தேன். பயமாகவும் இருந்தது. முகத்துக்கு நேரே எதாச்சும் வந்து நின்னு..அதைப்பார்த்து பயந்து..ஹார்ட் அட்டாக் வந்துட்டா? இதுவே பெரிய தண்டனையா இருக்கு.. இதுக்கும் மேல நாமே எதையும் இழுத்து விட்டுக்க வேணாம்னு , ரொம்ப முயற்சி செய்து கண்ணை த்திறக்காமல் கட்டுப்படுத்திக்கிட்டேன்.
அப்போது தான், என் வலது கை எதன் மேலோ உரசுவதை உணர்ந்தேன். அட அப்ரண்டீஸூகளா? கை தோல் உறிஞ்சிட போகுது..கட்டிப்போட்டீங்களே.. கைய ஒழுங்கா வச்சி கட்டலையான்னு....."... எனக்குள் நானே கேட்டுக்கிட்டு..கை உரசாதவாறு என் உடலோடு, அதாது..படுத்தபடி ஒரு கை மட்டும் சற்றே உயர தூக்கி க்கொண்டேன். சிறுது நேரத்தில் எந்த பிடிமானமும் இல்லாததால் கை வலிக்க ஆரம்பித்தது. கட்டப்பட்ட நிலையில் இதற்கு மேல் என்னால் கையை மேலே கொண்டு வர முடியவில்லை. கீழே கொண்டு சென்றால் எதன் மீதோ உரசி பயமுறுத்தியது.. ஆக வலியைப்பொறுத்துக்கொண்டேன்...
நான் சற்றும் எதிர்பாராத விதமாக... பலவிதமான அளவுகளினால் ஆன சுத்தியல்' கொண்டு, மாற்றி மாற்றி என் தலையில் அடிக்க ஆரம்பித்தார்கள். மூளை பிய்த்துக்கொண்டு வெளியில் வந்து, எதால் அடிக்கிறார்கள் எனப்பார்த்துவிடும் போல இருந்தது. சத்தம் தாங்காமல் காது கிழிந்துவிடும் போல இருந்தது..ஆனால் அடி என்னவோ....என் தலையில் படுவதாக தெரியவில்லை.
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்டக்...ட்டாக்டக் ட்டாக்டக் ...ட்ர்ர்ர்ர்ர்ர் க்ர்ர்ர்ர்ர்ர் ட்டாக்டக்க் ட்டாக்க்க்டக்...ஜட்ட்ட்ட்ட்ஜட்ட் ஜட்ட்ட் ஜட்ட்ட்.. வீவ்வ்வ்வ்ர்ர்ர்ர்ர்ர் வீவ்வ்வ்ர்ர்ர்...ட்டாக்டக் ட்டாக்டக்..டர்ர்ர்ர்ர்ர்ட்ஷ்ஷ்.. டார்ர்ர்ஷ்ஷ்...
இப்படியான தொடர் ஒலிகள்...இடைவிடாது மிக சத்தமாக கேட்க ஆரம்பித்தது...நிற்காமல் தொடர்ந்துக்கொண்டே இருந்தது..
ஒலி நிற்கும் போது குகைக்குள் மேலும் கீழுமாக நான் தள்ளப்பட்டேன்.
கட்டை அவிழ்த்துக்கொண்டு எகிறி குதித்து தெறிச்சி ஓட வேண்டும் போல இருந்தது. ஆனால்....அப்போது தான் உணர்கிறேன்..... மூச்சுக்கூட என்னால் சரியாக விட முடியவில்லை...
அதீத சத்தத்தை கிரகிக்க முடியாமல், அதிலிருந்து தப்பிக்க முடியாமல், கத்தவும் முடியாமல்.. தொண்டை வரண்டு, இரும ஆரம்பித்தேன். ஆனால் மூச்சே சரியாக விடமுடியாமல் இருந்த எனக்கு இ்ருமவும் முடியவில்லை, எச்சில் கூட முழுங்க முடியவில்லை... மூச்சு விட கடினமாக....ஆக....என் பயம் அதிகமானது.
என்னை நானே அசுவாசப்படுத்த முயன்றேன். சத்தத்தினை கவனிக்காமல் என் மூச்சை கவனித்து மெதுவாக மூச்சை இழுத்து விட ஆரம்பித்தேன். இருமவும் முயற்சி செய்து உடல் தலை கட்டியிருப்பதால் முடியாமல் லேசாக வாய்த்திறக்காமல் இருமினேன்.
கையில் கொடுத்த ரப்பரை அழுத்தலாமான்னு நினைத்து, வேண்டாம்.... என்ன தான் நடக்கிறது பார்ப்போம், எவ்வளவு தான் என்னால் சமாளிக்க முடிகிறது என, திரும்பவும் சத்தத்தினை கவனிக்க ஆரம்பித்தேன்...
வரும் சத்தம் அதிகமாக இருந்தாலும் அதைக் கோர்வையாக்கி.. ஒரு கோரசாக மாற்றி இசையாக்க முயற்சி செய்தேன்... பிடிப்பட்டது... 2-3 வினாடிகளுக்கு ஒரு முறை இந்த கோரஸ்ஸில் நான் உருவாக்கி பாட ஆரம்பித்த வார்த்தைகள் மாறிக்கொண்டே இருந்தன....
"வீடு வீடு வீடு........./ஜெயா ஜெயா ஜெயா..../வீட்ர்ரு போதும்..விட்ரு போதும்.. / வீடு வீடு வீடு..../டாண்ன்னா டாண்ன்னா டாண்ன்னா டாண்ன்னா /கிர்னீஈஈப் கிர்னீஈஈப்.../வீடு வீடு வீடு.... ஜெயா ஜெயா ஜெயா...வீட்ர்ரு போதும்..விட்ரு போதும்........".. இன்னும் எதேதோ அர்த்தமற்ற வார்த்தைகள்......
வீடு'ன்னா அது தொடர்ந்து 2-3 வினாடிகளுக்கு அல்லது மேலாக ஒலிக்கும்.... பிறகு ஒலி்யின் தன்மை வேறாக மாறும்.. ஜெயா'ன்னு எனக்கு ஒரு தோழி இருக்காங்க , அதனால் ஜெயா சொல்லும் போது தோழியை நினைத்தபடியே சொல்லிக்கொண்டு இருந்தேன்..."விட்ரு போதும்" சத்தம் கோர்வையாக வரும் போதெல்லாம்... இங்கிருந்து தப்பித்தால் போதும் என்ற எண்ணத்தோடே சொல்லிக்கொண்டிருந்தேன். ..
ஆக... ஏதேதோ தமிழில் புதுப்புது வார்த்தைகளை அர்த்தத்தோடும், ஹாரிஸ் பாடல்கள் போல அர்த்தமற்ற ஆரம்பமாகவும் , சத்தத்திற்கு ஏற்றவாறு உருவாக்கி இசையாக்கிக்கொண்டிருந்தேன்....
மல்லக்க ஒரே நிலையில் படுத்து, இறுக்க கட்டப்பட்டு இருந்ததால்.. நடு இடுப்பில் இனம் புரியாத வலி, வலது கை தூக்கியபடி வைத்திருந்த வலி ஒரு பக்கம்....இதில்.. கன்னா பின்னா கடும் சத்தம் ஒரு பக்கம் என..இதைவிட ஒரு பெரிய தண்டனையை இது வரையில் நான் வாழ்க்கையில் அனுவித்தது இல்லை....
சரியாக 45 நிமிடம்.. ?!!!! ஹய்யோ..45 நிமிடம்.?????. நல்ல நினைவோடு, ஒரே இடத்தில் , கட்டிப்போடப்பட்டு, ஏதும் செய்ய முடியாமல் , அசையாமல் என் வாழ்க்கையில் நான் அமைதியாக இருந்த முதல் மறக்க முடியாத திகில் அனுபவம் !!
எவண்டாது இந்த MRI SCAN ஐ கண்டுப்பிடிச்சது...?!! அவன் மட்டும் என் கையில் கிடைச்சான்.. .....
*******
படுக்கை வெளியில் வந்தது.... கட்டுகள் அவிழ்த்து, தலை கவசம் கழட்டப்பட்டது. எழ சொன்னார்கள்... நானும் அவர்கள் சொல்லும் முன் முயற்சி செய்தேன்..."ஹைய்யா.... முடியலையே.. ?!!" அப்படியும் இப்படியுமாக.. இருவர் அலேக்காக என்னைத்தூக்கி உட்கார வைத்தனர்.
இளைஞர் ஹிந்தியில் ஆரம்பித்தார்..."ஆப்கா நாம் க்யாஹே...?" .....
"ஏ கித்தனா? ."
"அடேய்......உடம்பு சரியில்லாத மனுசங்கள, இவ்ளாம் பெரிய மெஷின்குள்ள, இவ்ளோ சவுண்டுல, உசுரோட உள்ள விட்டு எடுத்துட்டு.. .மூள கலங்கி லூசாகி இருப்போம்னு தானே டெஸ்ட் பண்றீங்க..?!"
"டேய் டேய்...நாங்கெல்லாம் மெஷினியே லூசாக்கறவங்க டா....எங்கக்கிட்டவேவா?"..
*********
பீட்டர் தாத்ஸ் : You can create a music in any circumstances, depends on your interest.
8 - பார்வையிட்டவர்கள்:
அனுபவப்பட்டவர்களுக்கு ஆரம்ப வரிகளிலேயே புரிந்து விடும் எதைப் பற்றிச் சொல்லப் போகிறீர்களென:)).
@ ராமலக்ஷ்மி : அடடே.. !!! :)))
//அனுபவப்பட்டவர்களுக்கு ஆரம்ப வரிகளிலேயே புரிந்து விடும் எதைப் பற்றிச் சொல்லப் போகிறீர்களென//
அதைத்தான் நானும் சொல்லவந்தேன்!! :-)
நீங்க தைரியலட்சுமி... முழுசா முடிச்சு வெற்றிக்கொடி நாட்டிட்டீங்க... நானெல்லாம் அவங்களையே காபராவாக்கி ஓடிவந்தவங்க!! :-)
http://hussainamma.blogspot.ae/2013/07/blog-post_17.html
@ ஹூஸைனம்மா : :)) பதிவை ப்படிச்சேன். நீங்க ரெகுலர் விசிட்டர் போல... தெய்வங்க!! இன்னொரு தரம் இந்த மிஷின் குள்ள போகிற ஐடியாவே எனக்கில்ல.. நானா டாக்டரான்னு பாத்துடுவோம்.. !
//
நீங்க தைரியலட்சுமி... முழுசா முடிச்சு வெற்றிக்கொடி நாட்டிட்டீங்க..// ம்ம்க்கும் "எம் ஆர் ஐ" னு எழுதிக்கொடுத்தவுடனே, வெளியில் காத்திருக்கும் போதே, கூகுள் செய்து எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டேன்.. என்ன ரியாக்ட் செய்தாலும் திரும்ப முதலிலிருந்து ஆரம்பிப்பாங்கன்னு தெரியும்.. அத்தோடு.. உள்ள வரத்துக்கு முன்னவே வூட்டுக்கார் வேற , 2 மணி நேரம் விடாது லெக்சர் கொடுத்து அனுப்பிவச்சாரு.. எதாச்சும் அட்டகாசம் செய்துட்டு வெளியில் போனா.. எம் ஆர் ஐ மெஷின் தேவலாம் ங்கற அளவுக்கு திட்டு விழுகும்..லெக்சர் வேற கேட்டுத்தொலைக்கனும்.. .
இதையெல்லாம் முன் கூட்டியே யோசிச்சி..நல்லவளா அமைதிக்காத்தேன்.. :)
ஆனால் ஒரே ஒரு நன்மை என்னான்னா.."ஆடாமல் அசையாமல் அமைதியாக நான் உட்கார்ந்திருந்தாலோ.. படுத்திருந்தாலோ.. வலி சுத்தமாக இல்லை.. வலி இருக்கும் இடமே தெரியலைங்றதை... " புரிஞ்சிக்கிட்டேன். நவீனும் அவரும் நல்லாவே புரிஞ்சிக்கிட்டாங்க. இப்ப சொன்னப்பேச்சு கேட்காம வேல செய்துக்கிட்டு இருந்தால்... "என்ன கட்டிப்போட்டு வைக்கனுமா உன்னை? அப்பதான் அடங்குவையான்னு" கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.. :)
எனக்கு ஆரம்பத்துலயே புரிஞ்சு போச். ஏன்னா, நானும் 45 நிமிஷம் 'உள்ளே' இருந்துட்டு ரிலீசானேன் :-)
சாந்தி மாரியப்பன் : :) ஆல் லேடிஸ் சேம் ப்ராப்ளம்?
/ஆல் லேடிஸ் சேம் ப்ராப்ளம்?//
எமக்கென்னவோ இது கணவன்மார்கள் செய்கீற சதின்னுதான் தோணுது - மனைவிக்கு மூளை எனும் வஸ்து இருக்கிறதா இல்லையா என்று செக் பண்றதுக்காக....
//இன்னொரு தரம் இந்த மிஷின்குள்ள போகிற ஐடியாவே எனக்கில்ல..//
அதுக்குத்தான், என் கஷ்டம் தெரிஞ்சு கடவுளே ”OPEN MRI"னு ஒரு புது மெஷின் பல வருஷத்துக்கு முன்னாடியே அனுப்பி வச்சிருக்காப்புல!! இப்பல்லாம் நின்னுகிட்டே எம்.ஆர்.ஐ. எடுக்கிற மெஷினும் இருக்காம்.... ஆண்டவன் கருணையில் அந்தப் பக்கம் போயி பல வருஷங்களாச்சு! :-)
//மனைவிக்கு மூளை எனும் வஸ்து இருக்கிறதா இல்லையா என்று செக் பண்றதுக்காக....// :)))))) அவங்க நினைச்சத விட ஓவரா இருக்குன்னு தெரிஞ்சிருக்குமே..?!!
Post a Comment