சிம்பு'வின்
பீப் பாடலை கேட்டவுடன்.. பக்'கென்றது என்னவோ உண்மை...ஓரே காரணம் நம்
வீட்டு குழந்தைகள் தான். ஒரு வருசம் கூட ஆகாத குழந்தைகள் சினிமா பாடல்களைப் பாட
ஆரம்பித்துவிட்ட காலத்தில் இருக்கிறோம்..
வீட்டில்
குழந்தைகள் இந்த பாடலைப் பாட ஆரம்பித்துவிட்டால்.. தயவு செய்து
இதைப்படிப்போர் அவங்கவங்க வீட்டில் உள்ள குழந்தைகள் இந்த பாடலை பாடி
ஆடுவதைப்போல கற்பனை செய்து பாருங்கள்.... ....... எப்படியிருக்கு????
அடுத்து சூப்பர் சிங்கரில் இந்த பாடலை குழந்தைகள் பாட.. அதற்கு நடுவர்கள்... அந்த' வார்த்தையில் ண்' க்கு சரியாக அழுத்தம் கொடுக்கல.. இன்னும் சரியா பாடனும்.. னு சொன்னால் எப்படி இருக்கும்?
இதே பாடலை நடன நிகழ்ச்சிகளில் ஆடும் போது "அந்த வார்த்தைக்கு எப்படியான அங்க அசைவுகளை செய்வார்கள்?....
அடுத்து சூப்பர் சிங்கரில் இந்த பாடலை குழந்தைகள் பாட.. அதற்கு நடுவர்கள்... அந்த' வார்த்தையில் ண்' க்கு சரியாக அழுத்தம் கொடுக்கல.. இன்னும் சரியா பாடனும்.. னு சொன்னால் எப்படி இருக்கும்?
இதே பாடலை நடன நிகழ்ச்சிகளில் ஆடும் போது "அந்த வார்த்தைக்கு எப்படியான அங்க அசைவுகளை செய்வார்கள்?....
இப்படியாக பாட்டைக்கேட்ட மாத்திரத்தில் வேக வேகமாக என் கற்பனை எங்கோ போய்க்கொண்டிருந்தது.....
இதெல்லாம் கூட பரவாயில்லை போல... அந்த வார்த்தைக்கு நம்ம பதிவுலக எழுத்தாளர்கள் கொடுக்கும் தமிழ், வரலாற்று, இலக்கிய, பிற நாட்டு மொழிகளில் அர்த்தங்களை விவரமாக விளக்கி எழுதியுள்ள பதிவுகளை படிக்கும் போது தலைசுற்றி மயக்கமே வருகிறது..
என்னமா தனித்தனியா எழுத்துக்களை பி்ரித்து, ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் சொல்றாங்க..முடியலப்பா சாமிகளா...சிலதெல்லாம் சத்தியமா என் அறிவுக்கு எட்டவேயில்ல...
குஜராத்தில் இருந்து போது சில தமிழ் கெட்ட வார்த்தைகளை என்னிடம் சொல்லி, "பெகன்..இந்த வார்த்தை உங்க ஊர்ல கெட்ட வார்த்தை தானே?ன்னு" கேட்டு சிரிப்பாங்க... எனக்கு வெட்கமாகவும் அவமானமாகவும் இருக்கும். தமிழில் எத்தனையோ நல்ல வார்த்தைகள் இருக்க..அதெல்லாம் சொல்ல வராத இவர்களுக்கு கெட்ட வார்த்தைகள் மட்டும் மாநிலங்கள் தாண்டி வந்திருக்கிறதே.. எளிதாக கற்றுக்கொள்ள கூடியதாக இருக்கிறதே என்று ஆயாசப்படுவேன்..
மேற்கு வங்கம் வந்த புதிதில், ஒரு முறை வாடகை காரில் பயணம் செய்த போது பெங்காலி பாடல்கள் ஒலித்து வந்ததற்கு நடுவே திடீரென "நாக்கு முக்க" பாடல் ஒலித்தது. சற்றே யோசியுங்கள், ஹிந்தி தவிர்த்து வேற்று மொழி பாடல்களை நம்மூரில் எங்காவது கேட்க முடியுமா? அதும் இதுப்போன்ற மக்களிடம்? அந்த ஓட்டுனரிடம்..."தம்பி இந்தப்பாட்டு எங்க நாட்டு பாட்டு, எப்படி உங்களிடம்??" ... "ஓ இது உங்க பாட்டா? (அவருக்கு என்ன மொழின்னு கூட தெரியல) இந்தப்பக்கம் வர லாரி டிரைவர்களிடமிருந்து பரவிடுத்து"...என்றார்...
சிம்பு பாட்டு வந்தவுடன் இந்த நிகழ்வும் நினைவுக்கு வந்து.. ஆகா.. பீப் பாடலும் மிக எளிதாக இந்தியா முழுக்க அர்த்தம் தெரியாவிட்டாலும் பரவிவிடுமே...
அடுத்து இங்கு பல கடைகளில் நம்மோட கெட்ட வார்த்தை ஒன்றை பெயர் பலகையில் பார்க்க முடிந்தது. குபுக்' னு சிரிப்பு வரும்.. ஆனால் என் வூட்டுக்கார் சீரியஸாக திட்டி, "அவங்களுக்கு ஏதாது புனிதமான அர்த்தமாக இருக்கும். ஏன் சிரிக்கற?" ன்னு எரிந்து விழவும்.. வந்ததும் வராததுமாக கூகுள் ஆண்டவரிடம் அர்த்தம் கேட்க ' Business centre' என்று வந்தது..
நம் மொழியின் கெட்ட வார்த்தைக்கு பெங்காலியில் இப்படியும் ஒரு அர்த்தமான்னு விழிகள் விரிந்தது.
அதைவிட இப்போது பீப் பாடல் குறித்து "அர்த்தம் பாராட்டி" வரும் பதிவுகள், நம் பதிவர்கள் இயக்குனர்களுக்கே தெரியாத கோணத்தில் எழுதும் வித விதமான திரை விமர்சனர்களை விடவும்......சத்தியமா முடியல...
இங்கு இருக்கும் அறிவாளிகளையும் சிந்தனையாளர்களையும், யதார்த்தவாதிகளையும், இலக்கியவாதிகளையும், கடைசியாக பெண்ணியவாதிகளையும், அவர்களைப்பார்த்து பொங்கும் & பாராட்டும் சந்தர்ப்பவாதிகளையும் பார்க்கும் போது...
நானெல்லாம் இந்த ஒலகத்தில் என்னத்த பொறந்து, என்னத்த வளந்து.. என்னத்தத்தான் செய்யறேன்னு ரொம்ப லைட்டா புரிய ஆரம்பிச்சிருக்கு !!
பீட்டர் தாத்ஸ் : “Only on the Internet can a person be lonely and popular at the same time.” ― Allison Burnett.
Image Courtesy : Thx Google
5 - பார்வையிட்டவர்கள்:
வணக்கம் சகோதரி. அலசல் சரிதான், அப்படியே எங்களின் எதிர்ப்புப் பதிவுகளையும் பார்க்க வேண்டுகிறேன் - http://valarumkavithai.blogspot.com/2015/12/blog-post_16.html
இப்போதுதான் உங்கள் தளத்தைப் பார்த்தேன், இனித் தொடர்வேன். நன்றி.
இந்தப் பாட்டை நான் கேட்கவில்லை. கேட்பதாகவும் இல்லை.
இருப்பினும் ஒரு வார்த்தை சொல்லவேண்டும்.
ஒரே வார்த்தையில் அல்லது வாக்கியத்தில் இரு அர்த்தங்கள் தொனிக்கப்படும் பல பாடல்கள் வந்திருக்கின்றன.
வார்த்தையைப் பிரித்தால் இன்னொரு பொருள் இருக்கும்.இருப்பினும் அந்தப் பாடல்களின் உட்பொருள் இன்னொரு உண்மையை விளக்குவதாக இருக்கும்.
திருமந்திரத்தின் பல பாடல்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.
கவிஞ்ர் கண்ணதாசன் அவர்களின் அற்புதப் பாடல் ஒன்று "அத்திக்காய், காய் காய்." இதில் இருக்கும் சொல் நயம் பொருள் நயம் குறித்து இன்னமும் நான் வியந்து கொண்டு இருக்கிறேன்.
இரட்டைக்கிளவி என்று ஒரு இலக்கணம்
ஆனால், இதுவே , ஒரு வார்த்தைக்கு இரு அல்லது பல பொருள் என்பது, மன வக்கிரத்தின் உச்ச நிலையை அடைந்தது போல
இருக்கிறது இந்த பாடல். என்று பலர் எழுதியிருக்கிறார்கள். வேதனை அளிக்கிறது.
நீங்கள் சொல்லும் கோணம் வேறு.
ஒரு மொழியின் ஒரு நல்ல சொல் இன்னொரு மொழியில் கெட்ட வார்த்தை. என்பது நானும் கண்டதொன்றே. இதைத் தவிர்க்க முடியாது. இந்தப் பாடல் அந்த அடிப்படையில் இல்லை.
இந்தப் பாடல் நல்ல வேளை கேட்கவில்லை. இதுவரை.
சுப்பு தாத்தா.
சிலதுகளைக் கண்டும் காணாமல் போயிடணும், அந்த வகை இது. ஆனா, நீங்க இதுக்குப் போய் ஒரு பதிவு எழுதுனது எனக்கு ஆச்சரியம்... இல்லை அதிர்ச்சி!! :-(
நன்றாக அலசி உள்ளீர்கள்
இப்பாடல் பீப் ஒலியல்ல
பலருக்கு
எச்சரிக்கை ஒலி
http://www.ypvnpubs.com/
@ முத்து : நன்றி
@ சுப்பு தாத்தா : பாட்டை கேட்காமலேயே இவ்ளோ சொல்லியிருக்கீங்க கேட்டால்?
@ ஹூஸைனம்மா : ஆக்சுவலி, ரொம்ப வருத்தமும், கோவமும் கலந்து எழதிருக்கனும்.. மாறாக சாதாரணமா எழுதியிருக்கேன்னு தான் நீங்க அதிர்ச்சியடையனும் !! :)))
@ காசிராஜலிங்கம் : நன்றி
Post a Comment