எங்க வீட்டு சமையல் - மக்ரோனி மட்டர் மசாலா

தேவையானவை :

மக்ரோனி - ஒரு பாக்கெட் (200 (அ) 250 கிராம்)
பச்சை பட்டாணி - 100 கிராம்
வெங்காயம் - பெரியது ஒன்று
தக்காளி - பெரியது ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - 1.5 டீஸ்பூன் (இத்துடன், சோம்பு 1/4 ஸ்பூன், லவங்கம் 2 சேர்த்துக்கொண்டேன்)
தாளிக்க : சோம்பு, லவங்கம், பட்டை, பட்டைஇலை
மிளகாய் தூள் : 3/4 ஸ்பூன்
பச்சைமிளகாய் : ஒன்று (நீட்டில் வெட்டவும்)
முட்டை - இரண்டு
கொத்தமல்லி : சிறிது
எண்ணெய் , உப்பு : தேவையான அளவு

செய்முறை : மக்ரோனியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு போட்டு வேகவைத்து , வடிக்கட்டி வைத்துக்கொள்ளவும்.  ஒன்றோடு ஒன்று ஒட்டிக்காமல் வேகவைக்கனும். அவனில் 9 நிமிடங்கள் வைத்து எடுத்தேன்.

வாணல் வைத்து, எண்ணெய் ஊற்றி, லவங்கம், சோம்பு, பட்டை, பட்டைஇலை போட்டு தாளிக்கவும், பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி சிவந்தவுடன், இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய்  சேர்த்து வதக்கி, கடைசியாக பட்டாணி , தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, மிளகாய் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து 5 நிமிடம் வேக வைக்கவும். தண்ணீர் நன்கு சுண்டியவுடன் முட்டை உடைத்து ஊற்றி கிளரி, கடைசியாக வேகவைத்துள்ள மக்ரோனி சேர்த்து உப்பு த்தேவைப்பட்டால் சேர்த்து கலந்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி போட்டு இறக்கவும்.

மக்ரோனி எப்படி செய்தாலும் சூடாக சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கும். 

நூடுல்ஸ், மக்ரோனி, பாஸ்தா போன்ற உணவுகள் எதுவுமே எங்க வீட்டு சமையல் இல்லைதான். ஒரே ஒரு முறை கூட எங்க வீட்டில் இவையெல்லாம் செய்ததில்லை. காலத்திற்கு தகுந்தார் போன்றும், குழந்தைக்காகவும் சமைக்க கற்றுக்கொண்டவை. நிச்சயமாக எங்க வீட்டு பாரம்பரிய சமையல் இல்லை.

அணில் குட்டி : ஹி ஹி.. உங்க வீட்டு ஸ்பெஷல் இதுன்னு எதாது ஒன்னு உங்களுக்கு செய்யத்தெரியுமா.. எப்பவும் சும்மாவே ஓவர் பில்டப்பூஊ......

பீட்டர் தாத்ஸ் : A good cook is a certain slow poisoner, if you are not temperate”

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்...2



* படங்களை க்ளிக்கி பெரிதாக்கி பார்க்கவும் 

வரைந்தது பெயின்ட் பிரஷ். அதிகமாக ரெடிமேட் ஷேப்ஸ் வைத்தே வரைந்தேன். அதே ஓல்ட் ஸ்டோரி தான், கை பழகல, பேப்பர்லியோ, தெருவிலோ கோலம் போட்டு அதை ஸ்கேன்/ ஃபோட்டோ எடுத்தோ பதியனும், அது ரியலா இருக்கும்னு நினைக்கிறேன். இது முடிந்தவரை முயற்சி.  தொடர்ந்து செய்யாமல் இருப்பதால், முன்ன மாதிரிக்கூட ஃப்ரி டிசைன்ஸ் வரைய முடியல.

அதிகமாக/ பொதுவாக ஆண்டு முழுதும்,தேடி பார்க்கப்படும் பதிவு "ரங்கோலி கோலங்கள்" அப்படின்னு ப்ளாகர் ஸ்டேடஸ் சொல்லுது. .


அணில் குட்டி : ம்ம் அப்புறம்???? !  தொடர்ந்து வரைஞ்சிட்டா மட்டும்... ?  என்னா பில்டப்பூஊஊ ...

பீட்டர் தாத்ஸ் : Usually I begin with a small line, so a lot of lines are coming out in the Kolam. But even then, I still allow for and want to make changes.

க்ளிக்..க்ளிக்...க்ளிக்...

 பெசென்ட் நகர் பீச் , சாலையோர மரம்

 நல்லா உத்து பாருங்க.... பெசென்ட் நகர் பீச்..

 பின்னாடி வீட்டு தேங்காய் , மழையில் நனைந்த போது எடுத்தது..

 குன்றத்தூர் கோயில், உட்கார்ந்து பிரசாதம் சாப்பிட்டுக்கிட்டு இருக்கும் போது என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து பிரசாதம் தருவேனான்னு பார்த்துச்சி.. :(.

பஸ்ஸில் முன் சீட்டு குழந்தை, குட்டி குட்டி முடி, அதுல எப்படியோ இறுக்கி இரண்டு பக்கம் இரண்டு குடுமி,  குடுமியில் பூ, நீட்டு கறுப்பு பொட்டு, கீழ சந்தனம். அப்பாக்கூட தனியா வந்திருந்த குழந்தை. என் பயணத்தை அழகாக்கிய குழந்தை. :)

கீச்சுகளின் கதம்பம்

=> TPKD / TBCD : அடி மாடா இருந்தால் பசுவையும் கொல்லலாம் என்று சொல்லிருக்காம் ! RT @kavi_rt: Beef eating in ancient india http://www.jstor.org/pss/3516533

=> senthazalravi புல்லட் மணி Verified  :  ட்விட்டரில் ஆணாதிக்கம் கொடிகட்டி பறக்கிறது. இந்த பூனைகளுக்கு மணி கட்ட ஒருத்தன் / தி வருவானா / ளா ? 

=> vivaji  :  பில்லா-2 TITLE TRACK யார் நடனம் அமைப்பது என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது # Dance Master தேவையோ? #Walking Master போதாதா?

=> sowmya : ஆக்குதல் வெகு சுலபம்! அழித்தல் (முடித்தல்) வெகு சிரமம்!! #உப்புமா

=> விஜி  :  நண்பன்ல இலியானாவுக்கு எதுக்கு ஒரு கோடி?

=> பேயோன் :   பத்து வார்த்தைகள் பொடி வைத்து எழுதினால் அதில் நான்கிற்குத்தான் தும்முகிறார்கள். #புள்ளிவிவரம்

=> sowmya பட்டாடை அணிந்து சைவம் பற்றி சிலாகிப்பது ஜீவகாருண்யமாகாது

=> சுட்டி விகடன் ஆசிரியர்: ‘‘வேடந்தாங்கலுக்கு வர்ற பறவைங்க எங்கிருந்து வருது?’’ மாணவன்: ‘‘முட்டையில் இருந்துதான் சார்!’’

=> GiRa :  பத்தினியைச் சந்தேகப்பட்டது ஒரு காவியம். பரத்தையைப் பத்தினியாக்கி, பத்தினியைப் பகவதியாக்கியது சிலப்பதிகாரம். சிலம்பு சிறப்பு.

=> Guru :  ரெண்டு 10வது படிக்குற பொண்ணுங்க தாவணி கட்டிகிட்டு ஸ்கூல் போறாங்க..என்னன்னு கேட்டா மாறுவேஷ போட்டியாம்!!
 
=> TPKD / TBCD :  RT @ayyanar: @Sowmi_ இன்று the so called குடும்ப பெண்களுக்கு சமூகத்தால் அதிக துன்பம் நேராமைக்கு பாலியல் பெண்கள்தாம் உண்மையான காரணம்     

=> புதுகை.அப்துல்லா :  நக்கீரரே... நீர் பெரிய ஆளுய்யா... அதிமுக காரங்க கையாலேயே ஜெயலலிதா படத்தை எரிக்க வெச்சிட்டியேய்யா?...

=> Kavitha Gajananan  :பணக்கார பெண்களுக்கு சமூக சேவை என்பது ஒரு பொழுதுப்போக்கு.
 
=> அதிஷா @ LawyerSundar : பத்திரிகை சுதந்திரம் என்பது கலைஞரை என்னவேண்டுமானாலும் அவதூறாக பேசுவது.. ஜெவைப்பற்றி பேசாமல் இருப்பது ;-) 
 
=> vivaji  : ஆண்களிடத்தில் விட்டுக்கொடுக்கும் தன்மை மட்டும் இல்லாதிருந்தால் ஒருத்தருக்கும் கல்யாணம் நிலைத்திருக்காது

=> shruti haasan   : say it to my face say it behing my back only if words have truth and meaning do they have an effect.#byebyenegativety
 
=> Kavitha Gajananan : //ஆன்மிக ஆர்வலர்களுக்காக ஃபேஸ்புக்கில் விடிய விடிய 'வைகுண்ட ஏகாதசி' - சக்தி விகடனின் சிறப்பு கவரேஜ்! //இதெல்லாம் ரொம்ப ஓவர் ! :)

=> வைரமுத்து  : “மனதின் உயரமே மனிதன் உயரம்” இது என் கையொப்ப வாசகம்(ஆட்டோகிராஃப்) நீங்கள் எழுதினால்...?

=>Ma Sivakumar  : RT 1330 குறளையும் டுவீட்டுகளாக இங்கே பாருங்கள் @THIRUKURAL1330

=> Rohan Joshi  : Lok Sabha = School. Rajya Sabha = Alumni Group. Lokpal = New statue on campus. Very shiny, but does nothing to improve quality of education
 
=> கார்க்கி :  இதாண்டா செல்ஃப் சூசைட். நான் தேடும் செவ்வந்தி பூவிது, ராஜாஆஆஆஆஆ #rajaconcert

=> vivaji :  என் வாரிசுகளை நான் கொஞ்சும்போது தெரிகிறது என் தந்தைக்கும் எனக்குமான பாசமும்.

=> ihatequotes™  : Cry as hard as you want to. But make sure, when you stop crying, you'll never cry for the same reason again. #ihatequotes
 
=>shruti haasan  :  Its always sad saying goodbye to a character you've enjoyed becoming being and loving:( but they're out there forever
   
=> என். சொக்கன் :  மனைவியாருக்கும் அவரது அண்ணியாருக்கும் இடையே நிகழும் ஃபோன் உரையாடல்களில்தான் மாறி மாறி எத்தனை உள்குத்துகள்! #அப்ஸர்வேஸன்

=> Dev  : பேர் தெரியாத போதும் பூ குழந்தை இரண்டுமே நம்மில் புன்னகையை வரவழைக்கும் வல்லமை பெற்றவையாக இருக்கின்றன
 
=> Vel Ravimohan  @BalaramanL: : சொறகள அனைததும தமிழாக இருநதால மெயயெழுதது இலலாமலும படிககலாம. உஙகளால இதைப படிகக முடிநதால இதை மீளகீசசவும்.”

=> Dev  : எதோ ஒரு நம்பிக்கையின் அடித்தளம் கொண்டு தான் வாழ்க்கையின் சந்தோஷங்கள் நிர்மாணிக்கப்படுகினறன

=> வைரமுத்து  : எனக்குப் படித்த பொன்மொழி:- ஒரு பறவை தலையில் எச்சமிடுவதைத் தடுக்கமுடியாது; ஆனால் தலையில் அது கூடுகட்டாமல் தடுக்கமுடியும்.

    Note : Sorry  I didnt get permission from the authors to post their twits. I really dont know how to get it from all :(. People whom I follow are not following me was also a reason.

    அவளின் பயணம் ..

    விடியற்காலை 6 மணிக்கு சென்னை -பெங்களூர் சதாப்தி ரயில். இங்கிருந்து குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் முன்னர் கிளம்பினால் தான் சரியாக இருக்கும். முதல் நாளே, கிண்டி சென்று, வண்டியை அங்கே நிறுத்திவிட்டு, ரயிலில் செல்வதாக திட்டம். காலை எழுந்தது என்னவோ 4.15 மணிக்கு. ஆனால் எப்படி எதனால் தாமதமாகியது என தெரியவில்லை. இருவரும் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு தான் கிளம்பினோம். கதவை தாழிடும் போது 5.30 ஆகியிருந்தது. எனக்கு அப்போதே டென்ஷன் ஆரம்பித்தது.

    அவரிடம், "நான் வண்டியை ஓட்டுகிறேன்" என்றேன். டென்ஷனாக இருப்பது தெரிந்து "வேணாம் நானே ஓட்டுகிறேன்" என்றார். வண்டியை தெருவில் இறக்கியபோது,  நேரே சென்ட்ரலுக்கு சென்றுவிடுவதாக முடிவு செய்து கிளம்பினோம்.

    விடியற்காலை, சென்னை சாலைகள்  வெறிச்சோடி இருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாக வண்டிகள். அண்ணாசாலையில் எங்கும் நிற்காமல் வேகமாக செல்ல முடிந்தது. சென்ட்ரலை நெருங்கிய  போது 5.55. இன்னும் 5 நிமிடம் , சென்றுவிடுவோம் ஆனால் வண்டியை பார்க் செய்வது ஒரு பக்கம், வெளியூர் ரயில் நிலையம்  ஒரு பக்கம்.  "சீக்கிரம் சீக்கிரம்" என குடைச்சல் கொடுக்க தொடங்கினேன். வண்டி பார்க்கிங் வந்தவுடன், "நீங்க வாங்க நான் போறேன்" என பைகள் இரண்டையும் தூக்கிக்கொண்டு அவருக்காக காத்திராமல் ஓட ஆரம்பித்தேன்.

    ரயில் நிற்கும் ப்ளாட்ஃபாரம் தேடி நின்றபோது, நிமிடங்கள், நொடிகளாக மாறி இருந்தன.  இவரை காணவில்லை. ஓடும் போதே மூன்று முறை அழைத்துவிட்டேன்,  அவர் பேசியது எனக்கு காதில் விழுவில்லை, என்றாலும் நான் சொல்லுவதை சொல்லிக்கொண்டே இருந்தேன்.

    "நடக்கக்கூடாதுப்பா ஓடி வரணும், ஓடி வாங்க..ஓடிவாங்க.. சிக்னல் போட்டுட்டுடாங்க.. வண்டி எடுக்கப்போறாங்க.." என்று கத்திக்கொண்டு இருந்தேன்.  முதல் பெட்டியின் அருகில் அவர் வரும் வழிப்பார்த்து, ஃபோனும் கையுமாக, கத்துவதுமாக இருந்தேன். வண்டி நகரத்தொடங்கியது....அவரை காணததால் நான் வண்டியில் ஏறவில்லை. அவரிடமிருந்து கால்,

    "எங்க இருந்தாலும் உன் எதிரில் இருக்கும் கம்பார்ட்மென்டில் ஏறு"

    "நீங்க எங்க இருக்கீங்க, நான் தனியா எப்படி போக? ... "

    "நான் ஏறிட்டேன்.. நீ ஏறு .."

    என்னைத்தாண்டி எப்படி சென்றார் என தெரியவில்லை, தட தடவென பைகளை தூக்கிக்கொண்டு, நகரும் வண்டியில் ஏறிவிட்டேன், என் படப்படப்பு குறையுமுன்னே, என் பின்னால் என்னைப்போலவே ஓடி வந்து ஏறிய ஒருவர், ஈஸ் திஸ் சதாப்தி ? என்றார்.. (ஆமாய்யா ஆமா) .."எஸ்.." என்றேன்.

    இவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை, நான் ஏறியது தான் முதல் பெட்டி, அதில் அவரை காணவில்லை, ஏனோ அவர் மேல் சொல்லமுடியாத கோவம் வந்தது ...பைகளை தூக்கிக்கொண்டு வெகுதூரம் ஓடிவந்ததில், கைகள் வலிப்பதை அப்போது தான் உணரத்தொடங்கினேன். படப்படப்பு குறையவில்லை, வியர்த்துக்கொட்டியது. திரும்பவும் அழைத்து, கோவத்தோடு, ...

    'தனியா நிக்கறேன்.. எந்த சீட் தெரியல, இது எந்தப்பெட்டின்னு (பெயர்) தெரியல, நான் முதல் பெட்டியில் ஏறினேன்.. நீங்க எங்க இருக்கீங்க?

    ரயில் சத்தத்தில் அவர் பேசியது துளியும் எனக்கு காதில் விழவில்லை. என் ஃபோன் சவுண்டு அடிக்கடி போயிட்டு வரும் பிரச்சனை வெகு நாட்களாக உள்ளது, அதை தூக்கிப்போட்டு புதுசு வாங்கச்சொல்லி பலமுறை இருவரும் சொல்லியும், மாற்றாமல் இருப்பது என் பிடிவாதம். அவர் பேசுவது காதில் விழாததில், அவர் ரயிலில் தான் இருக்கிறாரா ? விட்டுவிட்டு ஏறிவிட்டோனோ? சுற்றி கண்களை சுழட்டி அவரை தேடும் போது கறுப்பு கோட் போட்ட டிடிஆர் கண்ணில் பட டிக்கட் நினைவு வந்தது, டிக்கட் என்னிடம் இல்லை, அவரிடம் தான் உள்ளது.  டென்ஷன் அதிகமாகி, திரும்பவும் நானே அழைத்தேன். அவருக்கு என் மொபைல் நிலை  புரிந்துவிட்டது..

    "நீ எங்க இருக்கியோ அங்கவே இரு, நான் வரேன்"  கத்தினார்.

    ஃபோனை  நிறுத்திவிட்டு, காத்திருந்தேன். அவரும் கோபமாகவே வந்தார், அவர் பேசியதை காதில் வாங்காமல் திரும்ப திரும்ப அழைத்தது கோவமாக இருக்கும், நான் என்ன செய்யமுடியும், என் ஃபோன் பிரச்சனை அது. எனக்கு வியர்த்துக்கொட்டுவதை பார்த்து லேசாக பயந்தது தெரிந்தது.  எதுவும் மேற்கொண்டு இருவருமே பேசிக்கொள்ளவில்லை.  பையை என்னிடம் இருந்து வாங்கியவர், பிறகு என்னைத்தூக்கவே விடவில்லை. நானும் அவர் வெயிட் எடுக்கக்கூடாதே என பின்னால் நடந்துவாறே பிடிங்கியும் பார்த்தேன்.

     "வேணாம், முதல்ல நீ உக்காரு"  என சீட்டை தேடி இருவரும் அமர்ந்தோம்.

    இதயத்துடிப்பின் வேகம் குறையவில்லை, பளுவாக இருந்தது.

    " தண்ணீ வேணும்.. "

    சொல்லிக்கொண்டு இருக்கும் போதே,  ரயிலில் உணவு கொடுக்கும் ஊழியர் ஒரு தட்டில் 2 சாக்லெட், 2 பிஸ்கெட் , 1 தண்ணீர் பாட்டிலை வைத்துவிட்டு போனார். தண்ணீரை பிரித்து குடித்தேன். இதயத்துடிப்பு நிதானத்திற்கு வந்திருந்தது. வலி குறைந்த லேசான உணர்வு. அன்னிச்சையாக, அவருடைய கைகள் இரண்டையும் தடவி திருப்பி திருப்பி பார்த்த்தேன். வீக்கமொன்றுமில்லை. விரல்களில் என் விரல்களை கோர்த்து அழுத்தி "வலிக்குதாப்பா?  "

    "நீதான பையத்தூக்கிட்டு வந்த....."

    "ஆமா... நான் தான் தூக்கிட்டு வந்தேன்.  பெருமூச்சு விட்டு நிம்மதியாக சிரித்தேன்.  "பசிக்குது.. இந்த ட்ரைன்ல எப்ப சோறு போடுவாங்க?"

    "ஹா ஹா ஹா. .ஆரம்பிச்சிட்டா (இனி இவள பெங்களூர் வரை சமாளிக்கனும்)  டீ வரும்ம்மா வெயிட் பண்ணு.. "

    "அப்புறம் ?"

    "டிபன் ஆர்டர் செய்து இருக்கேன் வரும்."

    "அப்புறம் ?"

    "ஆங்,,,, மதியம் மைசூர் வரைக்கும் அப்படியே போனீன்னா இலப்போட்டு சோறு போடுவாங்க..உக்காந்து சாப்பிட்டுட்டு அப்படியே ஒரு தூக்கம் போட்டுட்டு வா!  10.30 பெங்களூர் போயிடும். .அதுக்குள்ள உனக்கு  இன்னும் என்னவெல்லாம் வேணும் ?"

    "....... ஒன் மோர் டீ ?"

    "தருவாங்க.."

    அவர் சொன்னபடி எல்லாம் வந்தது.. சாப்பிட்டு முடித்து, மொபைலில் பாட்டைப்போட்டு, காதில் ஹெட் ஃபோனை மாட்டிக்கொண்டு, ஒரு காலை மடக்கி, ஒரு பக்கமாக திரும்பி உட்கார்ந்து, அவர் தோள் மேல் முகம் சாய்த்து தூங்கிப்போனேன்.

    எழுந்தபோது , அவரும் தூங்கிக்கொண்டு இருந்தார்.  அவர் தோளில் வெகு நேரம் முகம் அழுத்தி தூங்கி இருக்கிறேன்...   கைகள் மறுத்திருக்கோமோ? ... இரண்டு கைகளையும் பார்த்தேன்...வீக்கமில்லை.... மீண்டும் ஒரு பெருமூச்சு.

    தூக்கம் கலைந்து போயிருந்தது..... அவரை தொந்தரவு செய்யாமல், வேறு பக்கம் திரும்பி அமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்..


    கூகுல்காரா உனக்கு என்னத்தான்யா பிரச்சனை? ..

    ஒரு மட்டு மரியாதை இல்லாம, யாரையும் எதையும் கேக்காம இவங்க இஷ்டத்துக்கு எல்லாத்தையும் மாத்தறாங்க.. மாத்திட்டு

    "இது எப்படி இருக்கு?" ரேஞ்சுல சர்வே எடுக்கறாங்க..

    "அடச்சீ த்தூஊ...கேவலமா இருக்குன்னு"  திட்டி மெயில் அனுப்பினப்பிறகும், எதையும் பழையபடிக்கு மாத்த மாட்டேங்கறாங்க...

    அட மாத்தாட்டின்னா கூட பரவாயில்ல.. மேல மேல நம்மை கன்ஃப்பூயூஸ் செய்யாமையாச்சும் இருக்காங்களா.. ? நம்ம மெயில் பொட்டியில் நமக்கு தெரியாம உள்ளார நுழைஞ்சி கலரு டிசைனு எல்லாத்தையும் மாத்தி விளையாட்டிப்போறாங்க..  எப்ப வராங்க எதுக்கு வராங்க ஏன் வராங்கன்னு தெரிய மாட்டேங்குது...

    என்னதான் ஃப்ரீ சர்வீஸ்னாலும் நாம எல்லாம் இல்லாம இவிங்க சர்வீஸ் நடத்தி காசு சம்பாதிக்கமுடியுமா சொல்லுங்க..  ஒரு நியாயம் நேர்மை நீதி இதுல எதாது ஒன்னு வேணாம்..?.

    அப்படி என்னத்தான் பிரச்சனை எனக்குன்னு கேக்கறீங்களா..

    1.  கூகுல் மெயில் புது டிசைன் ?! :( படு கேவலமான டிசைன் கண்ணு பூத்து போகுது .. பகல்லியே பசுமாடு தெரியாத என்னை மாதிரி ஆளுக்கு, இந்த மெயிலை ஒரே ஒரு நாள் யூஸ் பண்ணா போதும், கண்ணு நொள்ளையாகி கைத்தடி வாங்க வேண்டிய ரேஞ்சுக்கு போயிடும்.. .நானும் விடாம பழைய டிசைனை சேஞ்ச் செய்துக்கிட்டே வரேன். ஆனா முடியலைங்க.. பொழுது விடிஞ்சி பொழுதுபோனா வந்து மாத்திவிட்டுட்டு போயிடாறாங்க.. 

    2. கூகுல் தேடலில், முன்ன எல்லாம் படம் டவுன் லோட் செய்தால், நேரா இமேஜ் ஃபைல் ஆ சேவ் ஆகும். இப்ப.. லிங்க்கு போயிடுது, அது ஏதோ நல்ல லிங்கா இருந்துட்டா பிரச்சனையில்லை. .கண்ட கருமத்துக்கு எல்லாம் கூட்டிட்டு போது..  இதயம் பலகீனமான நானெல்லாம் கண்டதையும் பார்த்து வாய் பொளந்தா? வேற என்ன சங்குதான் !  இமேஜ்ஜும் காப்பி செய்து பேஸ்ட் செய்து சேவ் செய்து தொலைக்க வேண்டியதா இருக்கு. எவ்ளோ நேர விரயம் ?! :(. இவிங்களா எந்நேரத்தையெல்லாம் திருப்பிக்கொடுப்பாங்க?

    3. யூ டியூப்... எங்க என்ன நடந்துச்சின்னே தெரியல. .புது டிசைன்ல எந்த ஆப்ஷன் எங்க இருக்குன்னு தெரியல...தேடி கண்டுப்பிடிக்க நேரம் ஆகறத விட,..சில ஆப்ஷன் எங்க தேடியும் இன்னமும் கிடைக்கல..

    4.  புதுசா வந்த G+...  ல , எதாது நல்ல மெசேஜ் இருந்தால்,  ஈமெயில் மூலம் அனுப்பலான்னு பார்த்தா வழியில்ல. நமக்கு யாரும் கமெண்டு போட்டா 7 நாள் கழிச்சி டைம் லைன்ல காட்டுது. .ஆனா நோட்டிஃபிகிஷேனல முதல்ல வந்து தொலைக்குது. அதுல இருந்து கமெண்டு போடலாம்னு பார்த்தா ஒரே கன்ஃபூயூஷன் ஆஃப் கண்றாவியாக இருக்கு..

    5. பிக்காசவில், முன்ன எல்லாம் போட்டோ அப்லோட் செய்து யாருக்கு அனுப்பனுமோ மெயில் ல அனுப்பற வசதி இருந்துச்சி. .இப்ப.. ??? எகொ கூகுல்காரா இது? ஒவ்வொரு முறையும் ஒரு ஜங்கிலை... ம்ம்கும்..இல்லல்ல ஒரு சர்ககிளை கிரியேட் செய்துத்தொலைக்க வேண்டியாதாக இருக்கு.. அது மட்டுமா? ஒருத்தர் ஒருத்தாரா போயி,  என் கூகுல் + ல் படம் போட்டு இருக்கேன் பாருங்க ன்னு தகவல் சொல்ல வேண்டியாதாக இருக்கு.

    6. கூகுல் சேட். ?!????!  யாரக்கேட்டு...இல்ல. தெரியாமத்தான் கேக்கறேன் யாரக்கேட்டு G+ ல இருக்க அத்தனை ப்பேரையும் சேர்த்துவிட்டீங்க? ஒரு பேசிக் டீசன்சி வேணாம்? அட என் சேட்ல ஆட் பண்ண என்னைக்கேக்க வேணாமா? ஓவர் அராஜகமா இருக்கே?

    இன்னுமும் புலம்பல தொடர்ந்தா எனக்கு ஜோடா க்கொடுத்து படுக்க வைக்க வேண்டி இருக்கும்.. அதனால இத்தோட இந்த சொற்பொழிவை நிறுத்திக்கிட்டு..

    இதுக்கெல்லாம் யார் முடிவு கட்டறதுன்னு, உங்களையும் போராட கூப்பிடறேன்.....

    "புறப்படுங்கள் போராடுவோம். கூகுல்காரனுக்கு எதிராக நியாயம் கேட்போம்"

    (பிரபு கல்யாண் ஜிவலர்ஸ் விளம்பரத்தில் கத்தறமாதிரி கர்ர்ர்ர்ர்ர் முர்ர்ர்ர்ர்ர்ர்னு கத்தனும் அப்பத்தான் கூகுல்காரன் காது கிழிஞ்சி ரத்தம் சொட்ட சொட்ட ஓடியாந்து என்னா ஏதுன்னு படிச்சி பார்ப்பான்)

    லேபில் "கூகுல் குரங்கு"ன்னு போடலாம்னு பார்த்தேன்..... அதான் இங்கப்போட்டுட்டேனே.. விடுங்க விடுங்க..

    அடுத்து ஓசி விளம்பரங்காறங்க தொல்லை :  

     ஓசி விளம்பரம் சங்கமம் # 1:

    ஓசியில் போனாப்போவுதுன்னு விளம்பரம் கொடுக்கும் போதே, என்னோட புகழையும் வளர்ச்சியும் கண்டு பொறாமை கொண்ட   சங்கமத்து ஓனர்  அடிக்கடி வந்து திட்டிட்டு போறாரு... முதல்ல ஏன் திட்டறாருன்னு விளங்கல. அப்புறம் ஒரு நாள் இதுக்குன்னே உக்காந்து தீவிரமாக ஆராய்ச்சி செய்து பார்த்தப்பத்தான்,  என் அதீத வளர்ச்சியைக்கண்டு (சைட்ல வளரத பார்த்தான்னு யாராச்சும் கேட்டா ..பிச்சி பிச்சி)  அவரால சகிச்சிக்க முடியில.. எங்க அவர் போர்ட்டலுக்கு அவருக்கே தெரியாமல், நான் ஓனர் ஆயிடுவேனோன்னு பயத்தில், "நீ போர்ட்டல் நடத்தறியா இல்ல நான் நடத்தறேனா?  சங்கமத்துக்கு "நான் தான் ஓனர், நான் தான் ஓனர்" னு அடிக்கடி சொல்லிக்கறாரு... :)) ஹிஹி.. பாவம் அமெரிக்காவில் குளிர் காலத்தில் இப்படி ஒரு வியாதி வரும் போல. .விடுங்க விடுங்க..அவரு இன்னும் அதிகமாக சட்டைய கிழிச்சிக்கிட்டு சுத்தறமாதிரி நீங்க எல்லாம் எனக்கு ஆதரவு கொடுத்து சங்கமம் www.isangamam.com சேர்ந்து அவருக்கு என் அருமை பெருமை எல்லாம் விளக்குவீங்களாம்  :))

    ஓசி விளம்பரம் அதிதம் #2 :

    இவங்க போஸ்ட்ர் தீடீர் தீடீர் ன்னு காணாமப்போது. எங்கங்க காணலன்னு அதீதம் ஓனரோட நண்பர் கிட்ட கேட்டால், நீங்க காசு க்கேட்டதனால காணாமப்போச்சி.. (அடப்பாவிகளா என் பேரை சொல்லி வேற யாரும் ஆட்டைய ப்போடறாங்களோ?) வேணும்னா இன்னொரு தரம் அதீதம் எங்கேன்னு கண்ணாடிப்போட்டுக்கிட்டு தேடிப்பாருங்களேன்னு" சொல்றாரு!  நாங்க கண்ணாடிப்போடறது இருக்கட்டும்,  முதல்ல ஏன் காணாமப்போச்சி ன்னு சொல்லுங்க, அப்புறமா தேடறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். இன்னைக்கு வந்து பார்க்கிறேன், http://www.atheetham.com/அழகா சைட் பார்ல வந்து உக்காந்துக்கிட்டு இருக்கு.! எகொஅஇ !

    இணையத்தில் ஓசி விளம்பரம் கொடுக்கறவங்க எல்லாருமே இப்படித்தானோ? நல்ல வேள உடான்ஸ் காரங்க யாரும் இன்னும் கிளம்பல ...

    அணில்குட்டி : இதைப்படிச்சிட்டு கூகுல்காரன் இவிங்க அக்கவுண்டை மட்டும் புடுங்கிவிட்டா போதும்.. நாடும் நாட்டு மக்களும் நிம்மதியா இருப்பாங்க. .கூடவே நானும் ரெம்ப நிம்மதியா இருப்பேன்.

    சங்கமத்து ஓனரும் அதீதத்து ஓனரும் உன் விளம்பரமே எங்களுக்கு வேணாம்னு சொல்லி, திரும்பி பார்க்காமல் ஓட வைக்காம விடமாட்டாங்க ப்போலவே.. :)))
    .