இலையுதிர்காலம்



சருகுகள்
என் காலடியில் -
அண்ணாந்து பார்க்கிறேன்....

இலையில்லாமல் நீ
களையிழந்து நிற்கிறாய்....

இன்று
இலைகளை உதிர்ப்பாய்..
நாளை
வளர்ந்து செழிப்பாய்...
பூக்களாக....
காய்களாக......
கனிகளாக........

பிறகொருநாள்
உன்னுடையதாயினும்
வேண்டாமென
கொட்டி தீர்ப்பாய்...

உனக்கு இது வாடிக்கை
உன் பருவங்களை
எளிதாய்
நீ கடக்கிறாய்...


உனை வளர்த்தேனே..
இனி
உனைக்கண்டு
எனை வளர்க்கவோ?? 

ஆனால்.......

நீயோ
மரம் !!
.

தமிழ்மணம் நடுவர் குழுவும் - கூகுல் பஸ் மெஸேஜுகளும்...

பதிவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது என் அறிவுக்கு புரியல. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்புகளோடு நடுவர்களை பற்றிய தங்களது கருத்துக்களை கூகுல் பஸ்ஸில் வைத்திருக்கிறார்கள். பொதுவில் இப்படிப்பட்ட கருத்துக்களை வைத்திருப்பது வருத்தமளிக்கிறது.

தப்பி தவறி இந்த வருடம் என் பெயரும் அந்த லிஸ்ட் ல் வந்துவிட்டதில், எனக்கு என்னவோ. .இவர்களின் பஸ் மெசேஜ், அதிலுள்ள பலரின் கமெண்டுகள் படிக்க வருத்தமாக இருக்கிறது.

எல்லோருக்கும் எல்லோரையும் பிடித்துவிடாது அல்லது எல்லோருக்கும் எல்லோரும் அறிவாளிகளாக, எல்லாம் வல்லவர்களாக, நல்லவர்களாக ஆகிவிடமுடியாது. எல்லோருக்கும் பிடித்த நடுவர்களாக கண்டுபிடித்து தமிழ்மணம் நியமிக்கவும் முடியாது. Unless otherwise they change their selection rules & procedures.

என்னைப்பிடிக்காமல், எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று நினைப்பவர்கள் ஒரு பக்கம் இருக்க, வேறு யாரையோ குறி வைத்து சொல்லி இருந்தாலும், பொதுவில் நடுவர்கள் அனைவரும் குறிப்பிட்டு இருப்பது நெருடலாக உள்ளது.

எனக்கு தெரிந்து பஸ் விட்டு இருப்போர், வித்யா, விஜி & முகிலன். அதில் கமெண்டு போட்டிருப்போர் அனைவரின் பெயரையும் இங்கே குறிப்பிடவில்லை. இருப்பினும்,எனக்கு தெரிந்த ஒருவரை மட்டும் குறிப்பிடுகிறேன்.. ஆதவன். :(

I am not happy about all of your buzz msgs and also on it's comments .. oopss...!! Guys if you all have any clarification on this, you could directly raise the same question to Tamilmanam admin instead writing in general.

Note : Since I am following all the above friends, I came to know these buzz msgs.

Friends, For all of your kind info,

1. தமிழ்மணம் விருது பதிவுகளில் என் பதிவுகளை சேர்க்கவில்லை
2. நடுவராக அழைந்திருந்ததால், எந்த பதிவருக்கும் ஓட்டு அளிக்கவில்லை.
3. 2-3 நாட்கள் அவகாசம் எடுத்து, என்னால் தனிப்பட்ட நட்பு/கோபம் எதுவும் இல்லாமல் நடுநிலைமையாக பதிவுகளை தேர்ந்தெடுக்க முடியுமா என்பதை யோசித்து, முடியும் என்ற நம்பிக்கை வந்த பிறகே, நடுவராக சம்மதம் தெரிவித்தேன்.

உங்களில் யாராவது நடுவராக இருக்க என்ன தகுதி வேணும்னு வந்து சொன்னீங்கன்னா...நல்லா இருக்கும். சத்தியமா எனக்கு தெரியலைங்க. நேர்மையான முறையில் அதை தெரிந்து க்கொள்ள விரும்புகிறேன்.

அணில் குட்டி : ஹை ஜாலி....... ஆமாம்மா.. அது சூட் ஆகலன்னா அடுத்த தபா இந்த பக்கமே அம்மணி தல் வச்சி படுக்க மாட்டாங்க... அதுக்கு நான் கேரன்ட்டி, மக்கா முடிஞ்சா இந்தா தபாவே அம்மணி வேஸ்ட் டு ன்னு சொல்லிட்டு போனா ...ஹி ஹி ஹி... ரெம்ப சந்தோச்ச படுவேன்.. எங்க எல்லாரும் வாங்க ஸ்டார்ட் தி மியூஜிக்..!!

கலைஞரின் "காங்க்கிரீட்" வீடுகள்

அடிக்கடி தொலைக்காட்சியில் இந்த விளம்பரத்தை இப்போது ப்பார்க்க முடிகிறது. "கூரை வீடுகளே இல்லாமல் தமிழகத்தை ஆக்கவேண்டும் என்பதே குறிக்கோள்" என்பதாக.  இதைப்பார்க்கும் போது எல்லாம், கூரையே இல்லாதவர்கள் பற்றிய நினைவுகள் வருவதை தடுப்பதற்கு இல்லை.  கூரையை காங்க்கிரீட் வீடுகள் ஆக்கலாம். கூரைக்கூட இல்லாமல் நடுத்தெருவில் குடித்தனம் நடத்துபவர்களுக்கு.. ? அவர்களின் வாழ்வியல்பு மாறவே மாறாதா.. ??  அதற்காக அரசு எதுவும் செய்யமுடியாதா?  இல்லை அவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லையா?

தெருவோரத்தில் இருக்கும் இவர்களுக்கு எதுவும் திட்டங்கள் வந்தால், நிம்மதியாக இருக்கும். ஒவ்வொரு முறையும் விஜய நகரில் 100 அடி ரோடில் செல்லும் போது,  அங்கே 21 பஸ் நிறுத்தத்தின் அருகில் தெருவோரத்தில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையை கண்டுக்கொள்ளாமல் செல்ல முடிவதில்லை.

எத்தனை குடும்பங்கள் மழை வெயில் என பாராமல் அங்கே வசிக்கிறார்கள். இவர்களின் வீடு என்பது, 3 கற்கள் வைக்கப்பட்ட ஒரு அடுப்பு, ஒரு பெட்டி அல்லது ப்ளாஸ்டிக் கவர்களில் திணிக்கப்பட்ட பொருட்கள், துணிகள், அவற்றை மூட ஒரு ப்ளாஸ்டிக் கவர், அல்லது பெரிய பெரிய பேனர்கள் அவற்றை மூட இருக்கும்.  மேற்கூரை என்று பேச்சுக்கு கூட ஒன்றும் இல்லை. வெட்டவெளி. இரவு நேரங்களில் "அழகி" படத்தில் காண்பித்தது போன்று மூடிய கடை வாசல்களில் சென்று தங்கிக்கொள்வார்கள் என்றே நினைக்கிறேன். அல்லது விஜயநகர் பஸ் நிறுத்தம் பெரியதாக உள்ளது, அங்கும் வந்து படுத்துறங்க வாய்ப்பு உள்ளது. இரவு நேரத்தில் சென்று பார்க்கவில்லை.

இவர்களின் வாழ்க்கை முறை எனக்கு வியப்பளிக்காமல் இல்லை,  வீட்டை கூட்டி பெருக்கி, கழுவி, பூஜை அறை, படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை என்று எதுவும் இல்லை. ஒரே லைன் கட்டிய குடும்பங்கள்,  இவர்களுக்கு சாலையோர பணி என்பது என்னுடைய யூகம், வேறு என்ன வேலை செய்தால் தான் என்ன.. வீடு என்பது அவர்களுக்கு வானமே கூரை, தெருவே பஞ்சு மெத்தை, எத்தனை மனிதர்கள் சுற்றி இருந்தாலும், எல்லோர்க்கும் இடையில் வெட்ட வெளியில் குடித்தனம் நடத்துக்கிறார்கள். "ப்ரைவசி ப்ரைவசி" என்று சொல்கிறோமே அப்படி எதுவுமே இல்லை, அதை ப்பற்றி கூட இவர்களுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை. இவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து அன்னாந்து பார்த்தால் "ஆஆ" வென வாய்பிளக்க செய்யும் பலமாடி குடியிருப்புகள்.!

இதே போன்று இன்னும் சில இடங்கள், திருவான்மயூர் சிக்னல் அருகில், ஜெமினி மேம்பாலம் கீழ் பகுதியில்,  வேளச்சேரி காமாட்சி ஆஸ்பித்திரி மேம்பாலம் அடியில், காமாட்சி ஆஸ்பித்திரி துரைப்பாக்கம் ரோடில், இடது புறமாக பார்த்துவந்தால், இப்படி கூட்டமாக ஒரு இடத்தில் மக்கள், அதுவும் மழை நேரத்தில், அவர்களை பார்க்க கண்களில் ரத்தம் வராதது மட்டுமே குறை, ஏனென்றால் அங்கே ஒதுங்க கூட இடம் இல்லை, பொட்டல் காடு அது.. :( , அடுத்து விஜிபி கோல்டன் பீச் பார்க்கிங் இடத்தை கடந்தால், அவர்களின் பராமரிப்பின்றி அழிந்துக்கொண்டு இருக்கும் இடத்தில் உள்ள கட்டிடங்களில் தஞ்சம் புகுந்துள்ள சில குடும்பங்கள், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரில் இருக்கும் சாலையின் ஓரத்தில் வேற்று மாநிலத்தை சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள்... இவை எல்லாமே பஸ்ஸில் போகும் போது கண்டவை.  சென்னையில் மக்கள் வாழ இப்படி பல இடங்கள் உள்ளன என்று மட்டும் தெரிகிறது..

இவர்கள் யாருக்குமே கூரை க்கூட இல்லை... .

 வீடு என்ற தலைப்பில் முன்னரே எழுதி இருக்கிறேன்.  இப்போது இருக்கும் வீட்டைத்தவிர்த்து, இன்னொரு வீடு அல்லது மனை வாங்கி தனி வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லாமே வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்தது. அதற்கான தேவை இருப்பதாகவும் தெரியவில்லை.

நிற்க, இப்போது என்னவோ வேறு வீட்டிற்கு போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அவரின் உடல்நிலை முதல் காரணமாக போனதில், மாற்று யோசனை எதுவும் இல்லாமல், வேறு வீடு தேடும் படலம்.. புதிய வீடு பிரஞ்ஞை இல்லாமல் பல வருடங்கள் கடந்து விட்ட நிலையில்,  தீடிரென வீடு தேடும் படலம் ஆரம்பித்துள்ளது. வாடகை அல்லது விலை ????? ம்ஹூம்.. இரண்டுமே "எட்டாத கனி",  என்ற நிலைதான் கண் முன் நிற்கிறது.

நீலாங்கரையில் இடது பக்கம் செல்ல வேண்டாம் என சொல்லியும், இல்லை இந்த பகுதியை நான் பார்த்ததில்லை அழைத்து செல்லுங்கள் என அடம் பிடித்து சென்றேன். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று என்னை கவர, வாட்ச்மேனை கேட்டு பார்த்தேன்.

"வாடகைக்கு இருக்குங்க.. "

'எவ்வளவு வாடகை ? "

"1 லட்சத்து 45 ஆயிரம்.. "

"நான் அட்வான்ஸ் கேக்கலைங்க."

"நானும் அட்வான்ஸ் சொல்லலைங்க.. "

".............."  (நிச்சயமாக பேச்சு வரவில்லை, அதிர்ச்சி என் முகத்தில் தெரியாமல் இருக்க ரொம்ப முயற்சி செய்தேன் னு கண்டிப்பாக சொல்லனும் :)  )

"வாடகைதாங்க 1.45 ஆயிரம்.."

"ம்ம்..அப்ப அட்வான்ஸ் ? "

"ஓனரை த்தான் கேக்கனும்"

*********

"அப்பவே சொன்னேன் கேட்டியா?"

"நிஜம்மாவே இவ்வளவு வாடகை கொடுத்து குடும்பங்கள் இருக்குமா? ஆபிஸ், அல்லது ஆபிஸ் கெஸ்ட் ஹவுஸ் இருந்தால் சரி.. குடும்பங்களும் இப்படியா? "

"ம்ம்ம்.. சினிமாக்காரர்கள் இருக்க வாய்ப்பு இருக்கும்மா.. '

"ஹோஒ.... .." (அதற்கு மேல் வாடகையை லட்சங்களில் கொடுத்து வாழ்க்கை நடத்தும் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை பற்றிய யோசனையில் ஆழ்ந்தேன், இவர்களுக்கு மாத வருமானம் கோடிகளில் இருக்குமோ?!! )
**********

திரும்பி வரும் போது மீண்டும் விஜய் நகரில் சாலையோரத்து மக்களை நோக்கி என் கண்கள் செல்லாமல் இல்லை...  அவர்களுக்கும் இவர்களுக்கும் எத்தனை வித்தியாசம்.. ???? .......... நடுவில் நாமும்...இப்போது கலைஞரின் காங்க்கிரீட் வீடுகளும்....

அணில் குட்டி அனிதா : மக்கா புரியுதா????? வீடு தேடறாங்க.. கலைஞர் வீடு கொடுக்கறாரு.. .இவங்களுக்கு அதுல ஒன்னு தேத்தலாம்னு  அதைப்பத்தியே பேசிக்கிட்டு இருக்காங்க.. விடுங்க விடுங்க.. .அம்மணிய நேத்திக்கு இன்னைக்கா பாக்கறோம்....?!!

பீட்டர் தாத்ஸ் : A house must be built on solid foundations if it is to last. The same principle applies to man, otherwise he too will sink back into the soft ground and becomes swallowed up by the world of illusion.

எங்க வீட்டு சமையல் - இடியாப்பம்

பொதுவாக இடியாப்பம் என்பது செய்ய கஷ்டமான உணவு என்று நினைப்பார்கள். அப்படி எல்லாம் ஒன்றும் பெரிய கஷ்டமில்லை, செய்முறையை எளிதாக்கிக்கொள்ள வேண்டும் அவ்வளவே.. !  அடிக்கடி எங்கள் வீட்டில் காலை உணவில் இடியாப்பம் இருக்கும்.

தேவையான பொருட்கள் :  பச்சரசி கழுவிக்காயவைத்து, அரைத்த மாவு 3 கப், நன்றாக கொதித்த தண்ணீர், கொஞ்சம் உப்பு, தேங்காய் துருவல், சர்க்கரை.

செய்முறை : அகன்ற பாத்திரத்தில் (அ) பேசினில் மாவை க்கொட்டி, உப்பு சேர்த்து கலந்துக்கொண்டு, நன்கு கொதித்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மாவை கெட்டியாக கலந்துக்கொள்ளவும்.  இட்லி தட்டில், இடியாப்பம் (மர அச்சு)* அச்சுவை க்கொண்டு மாவை பிழிந்து, இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுக்கவும். 2-3 நிமிடங்களில் வெந்துவிடும்.  பிழியும் போது அழுத்த ரொம்ப கடினமாக இருந்தால், மாவில் லேசாக நீர் தெளித்து இளகுவாக்கிக்கொண்டு பிழியலாம்.

துருவிய தேங்காய்,  சர்க்கரை தூவி பரிமாறவும்.

*மர அச்சு'வில் தான் துளைகள் சிறியதாகவும் நெருக்கமாகவும் இருக்கும். இன்டோலியம், எவர்சில்வர் அச்சுகளில் பெரிய துளைகளாக இருக்கும். அதில் இடியாப்பம் பிழிந்தால், நூடுல்ஸ் சைஸ்'சில் இருக்கும். மெல்லிய இழைகளாக  வராது. அதனால், இடியாப்பத்திற்கு மட்டும் மர அச்சு' வை பயன்படுத்தவும். 

மாவு, செய்முறை, பதம் எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தாலும் பெரிய துளைகள் உள்ள அச்சுவில் செய்யும் இடியாப்பத்தின் சுவை நன்றாக இருக்காது.

அணில் குட்டி : ம்ம்ம். .வருஷத்தின் ஆரம்பமே சிக்கலா... ??? நல்லா இருங்க அம்மணி... .!

பீட்டர் தாத்ஸ் : “Food is an important part of a balanced diet.”
.