நான் அப்படி என்ன செய்துட்டேன்..??!! :((

என் வீட்டுக்காரருக்கும் பிள்ளைக்கும் நடுவில் மாட்டிக்கிட்டு முழிக்கிறேன் பாருங்க..ஸ்ஸ்ஸ்ப்பாஆ. :( சொல்லி மாளாது. வாங்க வாங்க அடுத்த வீட்டு கதைன்னா நாம் எல்லாம் கேட்காம இருப்பமா.. அப்படி இருந்துட்டா நாடு என்னத்துக்கு ஆகறது..? வந்து அப்படி உக்காந்து கேட்டுட்டு போங்க..

சென்ற வாரத்தில் ஒரு நாள் :-

"டேய் நீ இதையெல்லாம் செய்யறியான்னு அப்பா என்னை கவனிக்க சொன்னாரு, நீ அதையெல்லாம் செய்தியா?" ன்னு நவீன் கிட்ட கேட்டேன்...

அடுத்த நாள் அவன் என்ன செய்தான் செய்யலன்னு வீட்டுக்காருக்கு அப்டேட் செய்யறேன்..அதுக்கு அவரு கேக்கறாரு "ஏண்டி நான் என்ன சொன்னாலும் அவன் கிட்ட சொல்லிடற, இதையெல்லாம் உன் மனசோட வச்சிக்கிட்டு அவனை கவனிக்கனும், அவன் கிட்ட சொல்லிட்டு அவனை கவனிக்க கூடாது.... "

"ஓ அப்படியா சரி.. அப்படியே செய்யறேன்... னு சொல்லிட்டு.. "டேய் அப்பா உன்கிட்ட இதையெல்லாம் சொல்ல வேணாம்னு சொன்னாரு... ன்னு சொல்லிட்டு கவனிக்க ஆரம்பிச்சேன்.

இங்க தான் மேட்டர் ஆரம்பிச்சிது..

நேத்திக்கு அவரோட ஃபோன்........... கால் மணி நேரம்.. ..(முட்டு சந்து நினைவு வரனும் உங்களுக்கு எல்லாம்) பேசி முடிச்சிட்டாரு. எனக்கு குரலே வரல, (ஏன் வரல ன்னு சின்னபிள்ளத்தனமா நீங்க எல்லாம் கேட்கப்பிடாது.. அதான் கோட் வேர்ட் "முட்டு சந்து"ன்னு சொல்லி இருக்கேன் இல்ல அதை வச்சி புரிஞ்சிக்கனும் ஆமாம்), கம்மிய குரலோட நவீன் ஐ கூப்பிட்டு..."அப்பா ..டா..உன் கூட பேசனுமாம்..... "

"என்னவாம் அவருக்குன்னு??!!" சவுண்டு விட்டுக்கிட்டு வந்தான்.. ரிசீவரை அவனிடம் கொடுத்துட்டு ஓரமா கன்னத்துல கைய வச்சி உட்காந்து அவனோட ரியாக்ஷனை பாத்துக்கிட்டே இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமா முகம் மாறுது.....அப்படியே ஒரு அரை மணி நேரம். .. :)) ஸ்ஸ்ஸ்....அப்பாடா ஜாலி...நம்மைவிட ஜாஸ்தி, ...இப்பத்தான் மனசுக்கு குளிர்ச்சியாக இருக்குன்னு நினைச்சி... அவனயே கண் சிமிட்டாம பாத்துக்கிட்டு இருந்தேன். என்ன இருந்தாலும் பெத்த புள்ளையாச்சே பாசம் விடுமா சொல்லுங்க.. ?? (ஃபீலிங்ஸ்..)

அவனும் ஃபோனை வச்சிட்டு ஸ்லோ மோஷன்ல ஒரு வெறியோட என்னை திரும்பி பார்த்தான்.

"என்னடா செல்லம்...? ரொம்ப...ஓவரோ.....வய் ப்ளட்... ?! "

"எல்லாம் உன்னாலத்தான் வரது,.. ஏன்ம்மா இப்படி கத்தராரு? அவருக்கு என்ன 30 வயசு இளைஞன் ன்னு நினைப்பா.. இப்படி கத்தினா உடம்பு என்னதுக்கு ஆகும்? நீ என்ன அரிச்சந்தரனுக்கு தங்கச்சியா (அம்புட்டு கிழவியாவா போயிட்டேன்..சே.. வேற உதாரணமே இவனக்கு கிடைக்கலையா.. ஏன் இப்படி ஓல்ட் ராஜா வை எல்லாம் எனக்கு அண்ணனா ஆக்கறான்.... (திருப்பி ஒரே ஃபீலிங்ஸ்ஸூ....) ஏன் எல்லாத்தையும் அவர் கிட்ட சொல்லி வைக்கிற..???

"ஓ நான் தான் சொன்னேன்னு தெரிஞ்சி போச்சாஆஆ? "

"ஆமா இந்த வீட்டுல ஒரு 10-15 பேர் இருக்கோம்.. உன்னை விட்டா என்னை அவர் கிட்ட வேற யாரு போட்டுக்கொடுப்பா?"

ஆஹா நம்ம புள்ளையும் அறிவாளியா இருக்கே ன்னு மனசுக்குள்ள ஒரே பெருமை.." சரி நான் இப்ப என்ன செய்யனும் சொல்லு..."

"ஏன்ன்ன்ன்ன்ன்??? ஒரு வார்த்தை விடாம அப்படியே போயி அவரு கிட்ட வத்தி வச்சி... அவரு அதுக்கு இன்னொரு அரைமணி நேரம் என் காது கிழிய பேசவா? வேணாம் என்னை பெத்த தாயே... உன் வாயி இருக்கு ப்பாரு வாயி.. அதை எப்பவும் தொறக்காத இந்த வீடு நிஜம்மா நல்லா இருக்கும்...

:((((((( (இப்ப ஓவர் சோக ஃப்லீங்ஸ்..)

இரண்டு பேரும் என்ன சொல்றாங்களோ அதை அப்படியே பிழையில்லாமல் செய்தால் கூட திட்டிக்கிட்டே இருக்காங்கப்பா... . நான் அப்படி என்னத்தான் தப்பா செஞ்சுட்டேன்... .?!! நீங்களே சொல்லுங்க..

அணில் குட்டி அனிதா : //உன் வாயி இருக்கு ப்பாரு வாயி.. அதை எப்பவும் தொறக்காத இந்த வீடு நிஜம்மா நல்லா இருக்கும்...// வீடு மட்டுமா... தெரு, ஊர் , உலகம் எல்லாமே நல்லா இருக்கும்... ஆனா அதை எப்ப செய்ய போறாகன்னு தான் தெரியல.... :(((((

பீட்டர் தாத்ஸ் : “Smile at each other, smile at your wife, smile at your husband, smile at your children, smile at each other -- it doesn't matter who it is -- and that will help you to grow up in greater love for each other.” Mother Teresa


குறிப்பு : முந்திய பதிவு அனானிகளுக்காக போடப்பட்டது, அதை அப்படியே வைத்திருக்க விருப்பமில்லை. அதனால் எடுத்தாகிவிட்டது.

எங்க வீட்டு சமையல் : கொழுக்கட்டை, மெதுவடை & சுண்டல்

இந்த மாதத்தில் எப்படியாவது இதை எழுதிடனும்னு இருந்தேன்.

1. கொழுக்கட்டை

பச்சரிசி மாவு : 3 கப் (நைஸ் ஸாக அரைத்து இருக்கனும், வெண்ணெய் போல் இருக்கனும்)
உப்பு : கால் டீஸ்பூன்

தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து, மாவில் உப்பை கலந்து, கொதித்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி உருண்டை பிடிக்கும் பதத்திற்கு கலந்துக்கொள்ள வேண்டும்.

எள் பூரணம் :

வெள்ளை எள் - 150 கிராம்
வெல்லம் - ஒரு கப்
தேங்காய் - அரை மூடி
ஏலக்காய் - 1

எள் ஐ சுத்தம் செய்து, வெறும் வாணலியில் வெடிக்கும் வரை (அப்போது தான் வாசனை வரும்) வதக்கி , தேங்காய், ஏலக்காய் சேர்ந்து மிக்ஸியில் அடித்துக்கொள்ள வேண்டும். வெல்லப்பாகு எடுத்து மண் இல்லாமல் வடிக்கட்டி அத்துடன் எள், தேங்காய் கலவையை போட்டு நன்கு கிளறி கெட்டியானவுடன் இறக்கிவிடவும்.

இப்போது பச்சரசி மாவில் சொப்பு செய்யவேண்டும். சப்பாத்தி மாவு உருண்டை போல் மாவை செய்து க்கொண்டு, விரல்களில் எண்ணெய் தொட்டு சிறிய பூரிகளாக செய்து உள்ளே பூரணம் வைத்து ஒட்டி, இட்லி பாத்திரத்தில் 5-8 நிமிடங்கள் வைத்து, விண்டு விடாமல் எடுக்கவேண்டும்.

பூரணம் வைக்க ஸ்பூன் பயன்படுத்தவேண்டும். கையால் எடுத்து வைக்கக்கூடாது, கையில் பூரணம் ஒட்டினால், அது சொப்பு செய்யும் போது பச்சரசி மாவிலும் ஒட்டி வெள்ளை கலர் பழுப்பு கலராக ஆகிவிடும். பார்க்க கொழுக்கட்டை நன்றாக இருக்காது.

2. மெது வடை :

உளுந்து - 300 கிராம்
வெங்காயம் - இரண்டு
பச்சைமிளகாய் - 2-3
இஞ்சி - சிறிது
சோம்பு- 1/2 ஸ்பூன்
லவங்கம் -2
கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, தேவைக்கேற்ப எண்ணெய்

செய்முறை:

உளுந்து குறைந்தபட்சம் 2 மணி நேரம் ஊறவைத்து, கிரைண்டரில் லேசாக தண்ணீர் தெளித்து (1 அல்லது 2 முறை) நைஸ்ஸாக அரைத்துக்கொள்ள வேண்டும். பொடியாக நறுக்கிய வெங்காயம் , அரைத்த இஞ்சி, பச்சைமிளகாய், சோம்பு, லவங்கம், உப்பு சேர்த்தும் கருவேப்பிலை கிள்ளி போட்டு, கொத்துமல்லியை பொடியாக நறுக்கி போட்டு, எண்ணெய் காயவைத்து, வடைகளாக தட்டி போட்டு எடுக்க வேண்டும்.

அம்மாவீட்டில் சாமிக்கு படைக்க வெங்காயம் இல்லாமல் செய்வார்கள் (சுத்த சைவர்கள், சமையல் எல்லாமே பிராமணர்கள் போன்றே இருக்கும்), அப்பாவீட்டில் வெங்காயம் சேர்த்து செய்வார்கள்.

3. சுண்டல் :

வெள்ளை, கருப்பு கடலையை கலந்து இரவே ஊறவைக்க வேண்டும்
தேங்காய் துருவியது - 4 ஸ்பூன்
தாளிக்க கடுகு, உளத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்தமிளகாய், கருவேப்பிலை,எண்ணெய், உப்பு

செய்முறை

ஊறவைத்த கடலையை குக்கரில் உப்பு சேர்த்து ஒரு ஸ்டீம் வைத்து வேகவைத்து, எடுத்து வடிக்கட்டி, தாளிக்க சொல்லியுள்ளவற்றை தாளித்து, தேங்காய் துருவலையும் சுண்டலில் கொட்டி கிளரி வைக்கவேண்டும். கொத்தமல்லி பொடியாக நறுக்கி போடலாம்.






ஆயா சொல்லிக்கொடுத்த விநாயகருக்கான பாடல்கள்:-


ஓம் சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்ப்புஜம்
பிரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்நோப சாந்தயே

மூஷிக வாஹன மோதக ஹஸ்த
ஸாமர கர்ண விலம்பித ஸூத்ர
வாமந ரூப மகேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நான்கும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீயெனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா..

தாலிக்கட்டிய மாங்கா மடையன் !

அதாகப்பட்டது இந்த பதிவில் தாலிக்கட்டின.. கட்டாத, மோதிரம் போட்ட, போடாத, திருமணப்பதிவு செய்துக்கொண்ட, செய்யாத "கணவர்" என்ற போஸ்ட் கொண்ட மாங்கா மடையர்கள் அவர்களின் மனைவிகளிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று கற்றுக்கொடுக்கப்படும். எல்லாரும் வந்து அமைதியாக உட்காருங்க பார்க்கலாம். சத்தம் வரப்பிடாது, சத்தம் போட்டா பெண்ணியவியாதிகளுக்கு பிடிக்காது. அமைதியாக வாங்க. ம்ம்ம் ஆச்சா...

உட்காந்துட்டீங்களா. அது.. !! (அந்த பயம் எப்பவும் இருக்கனும்) இப்ப ஆரம்பிக்கலாம்.

1. முதல்ல கல்யாணம் என்றால், தாலிய பெண் கழுத்தில் கட்டக்கூடாது, வேணும்னா அவன் கழுத்தில் பெண்'ணை தாலிக்கட்ட சொல்லல்லாம். மெட்டி, நெற்றியில் பொட்டு இத்தியாதிகள் எல்லாமே ஆணிற்கு பெண் செய்ய வேண்டும். அது தான் இனி நடைமுறையாக்க ப்படவேண்டும். அதற்கான சட்டம் முதல்ல கொண்டு வரனும்.அதை ஆல் மாங்கா மடையன்ஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

2. அடுத்து, தாலிக்கட்டிக்கிட்ட மாங்கா மடையன் செய்ய வேண்டியது, பெண் வீட்டுக்கு வரும் போது பெரிய சொம்பை சீதனமாக எடுத்துக்கிட்டு வரனும். கூடவே, ஒரு உட்காரும் மனை, மனைவி உட்காரும் போது எல்லாம் மனையை பின்னால் வைக்க வேண்டும், இதை சம்பராதயமாக கடைப்பிடிக்க வேண்டும். இது மனைவி மேல் உள்ள மரியாதை நிமித்தம் மாங்கா மடையன் செய்ய வேண்டும். அப்பத்தான் தன்னை கட்டிய மனைவிக்கு மரியாதை கொடுப்பதாக இருக்கும்.அந்த சொம்பு சொன்னேன் இல்லையா, அதை தினமும் விம் போட்டு விளக்கி, வெள்ளையாக பளிச் ன்னு வச்சிக்கும், அப்பத்தான் மனைவி எப்ப அதை தூக்க சொல்றாங்களோ தூக்க வசதியாக இருக்கும்.

3. அது மட்டும் இல்லாம, சமைக்கறது, துவைக்கறது, வீட்டை சுத்தமாக வச்சிக்கறது, குழந்தை குட்டியை பாத்துக்கறது, அதுங்களுக்கு சாப்பாடு கொடுக்கறது, படிப்பு சொல்லி தருவது, வேலைக்கு போயி மனைவி சம்பாதிக்கறத்துக்கு மேல 1 ரூ அதிகமாக சம்பாதிப்பது, வீட்டுக்கு விருந்தாளி வந்தால் அவங்களை கவனிக்கறது, நாலு தெரு தள்ளி இருக்கிற குழாயில் போயி தண்ணீர் தூக்கிக்கிட்டு வந்து வீட்டில் மேல் மாடியில் உள்ள டேக்ங்கில் நிரப்பி வைக்கறது போன்ற வேலைகளை இந்த மாங்கா மடையன் சொம்பை கீழே வைக்காமல் செய்ய வேண்டும்.

4. மனைவி சொல்லே மந்திரம், அவள் என்ன சொன்னாலும் தலைய.. அப்படியே மாடு மாதிரி ஆட்டனும், கையில இருக்க சொம்பை தரையில் வைத்துவிட்டு, கைக்கட்டி "சரிங்க ஆபிசர்" ன்னு சொல்லிட்டு திருப்பி சொம்பை கையில எடுத்துக்கனும்

5. மாங்கா மடையோட அம்மா, அப்பா, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, உற்றார் உறவினர் அப்படி யாரும் வீட்டுப்பக்கம் தலைவச்சி படுக்கக்கூடாது, ஆனால், அதே மனைவியோட வீட்டிலுருந்து ஒரு புழு, பூச்சி வந்தால் கூட அவங்களை உபசரித்து, அனுசரித்து சமைத்து வைத்து, கவனிச்சி அவங்க மனம் கோணாமல் நடந்துக்கனும். மீறி பேசினால், வரதட்சனை கொடுமை ன்னு சொல்லி உள்ள வச்சி முட்டிக்கு முட்டி தட்டி தனி தனியா உடம்பை பேத்து எடுத்துடுவோம். ஜாக்கிறதை !

6. அடுத்து, மனைவி சம்பளம் அவங்க இஷ்டத்திற்கு செலவு செய்ய விடனும், ஆனா மாங்கா மடையன் சம்பாதிக்கிற எல்லாம் விட்டுக்கு வரனும், ஒரு நயாபைசா விடாம கணக்கு சொல்லனும். சொல்லாமல் போனால் மாங்கா மடையனுக்கும் அவனின் பெற்றோருக்கும் தொடர்பு இருக்குன்னு சொல்லி அதுக்கும் உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி தட்டுவோம்.

7. மனைவியை மரியாதையாக வாங்க போங்கன்னு கூப்பிடனும், மாங்கா மடையனை அவங்க எப்படி கூப்பிட்டாலும் அது பரவாயில்லை, அது நாட்டு நடப்பு, ஆணும் பெண்ணும் சரி சமம், ஆணை போலவே அதே உடம்பு, உயரம், வேகம், வீரம் எல்லாம் பெண்ணுக்கும் இருக்கு, அதை நாங்க எல்லாம் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்ல, என்ன சொன்னாலும் ஒரே பதில் "சரிங்க ஆபிசர்" ன்னு சொல்லனும், மீறி பேசினால், உடனே அது பெண்ணிற்கு எதிராக நடக்கும் வன்கொடுமை ன்னு கத்தி ஆர்பாட்டம் செய்து மாங்கா மடையன் வாயை, அடுத்து திறக்காதமாதிரி செய்துடுவோம். பஞ்சாயத்து கூட்டுவோம் அதிலும் பெண் சார்ந்தவர்கள் மட்டும் இருப்பாங்க. மாங்கா மடையன் தனி ஆளாக நின்னு, திருப்பியும் சொம்பை கையில் எடுத்து குனிந்து மரியாதையாக "சரிங்க ஆபிசர்" அப்படின்னு சொல்லனும்.

8. மனைவி எந்த நேரத்தில் வெளியில் பொறுக்கினாலும் கேள்வி கேட்க க்கூடாது, அதே சமயம் மாங்கா மடையனான நீங்க, சரியான நேரத்திற்கு வீட்டுக்கு வந்து, புள்ளைக்கு சாப்பாடு கொடுத்து, வீட்டு வேலையெல்லாம் முடிச்சி, நல்ல புள்ளையா தூங்கிடனும்.

9. இதுல ஒன்னு சொல்ல மறந்துட்டேன், புள்ள கூட நீங்க தான் பெத்துக்கனும், நாங்க என்ன புள்ள பெத்துக்கிற மிஷனா? அப்படின்னு அறிவே இல்லாம கேள்வி கேட்போம்.. ஆனா அதையும் பொறுத்துக்கிட்டு, சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, புள்ள பெத்துக்கற வழிய பாக்கனும். இல்லன்னா ஒரு புள்ள பெத்துக்க லாயிக்கி இல்லாதவன் சொல்லி டைவர்ஸ் பண்ணிடுவோம்.

10. மொத்தத்தில் வருங்காலத்தில் நீங்கள் "மாங்கா மடையனாக" இருக்க விரும்பினால் மட்டுமே உங்களுக்கு திருமணமே நடக்கும், இல்லன்னா கட்ட பிரம்மச்சாரி நமஹ தான்!!

மேல் சொன்னபடி ஒரு ஆண் இருந்தால் - எல்லாரும் கொஞ்சம் ப்ராக்கிட்டிக்கலாக யோசிச்சி பாருங்க, எழுதின எனக்கே ஆண்களை நினைத்தால் பாவமாக இருக்கு, மேலும் இப்படி எல்லாம் ஒரு ஆண் இருந்தால்...................... அவன் ஆம்பளையாக இருக்க .00000000001% கூட சான்ஸ் இல்ல.. :). அது அறிவியல் சார்ந்த உண்மை.

சில சமயங்களில் பெரிய பிரச்சனைகளில், என்னுடைய ஆற்றாமை, கோபம், இயலாமை போன்றவைகளை கட்டுப்படுத்த முடியாமல் அழும் போது, என் குழந்தை நான் அழுவது தாங்காமல் என்னுடன் சேர்ந்து அழுவான். அவன் கண்களில் கண்ணீர் வருவதை என்னால் சகித்துக்கொள்ளவே முடியாது. அவன் என்னுடைய குழந்தை என்ற பாசம் ஒருபக்கம் இருந்தாலும், அவன் "ஆண்" அவன் கண்களில் கண்ணீர் வரக்கூடாது, எதையும் தாங்கும் இதயம் அவனுக்கு வேண்டும், என்னுடன் சேர்ந்து அவன் அழுவதை விடவும், என்னை சமாதானம் செய்பவனாக அவன் இருக்க வேண்டும் என்று நினைப்பதோடு மட்டும் இல்லாமல், என்னை போன்று இளகிய மனம் உனக்கு வேண்டாமடா நீ ஆண் குழந்தை, இப்படி இருக்கக்கூடாது என்றே சொல்லி க்கொடுப்பேன்.

ஒரு தாயாக, பெண்ணாக, என் குழந்தையும், என் கணவரும், என் (ஆண்) நண்பர்களும் - எந்த சந்தர்ப்பத்திலும் ஆண்களாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அடிமையாக இருப்பவன் ஆண் ' ணாக இருக்கமாட்டான், ஆண்' ணாக இருப்பவன் பெண்ணை அடிமையாக நடத்தவும் மாட்டான். பெண்ணை அடக்கி வைத்து ஆள்பவன் தான் ஆண், அது தான் குடும்பத்திற்கும், அவளால் வளர்க்கப்படும் குழந்தைகளுக்கும் நல்லது.

இதில் "அடக்கி ஆள்பவன்" என்பதை தவறாக அர்த்தம் செய்து க்கொள்ள வேண்டாம், பெண் அவளின் இயல்பை விட்டு, குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பிரச்சனை தரக்கூடியவளாக, பிரச்சனையை வளர்க்க கூடியவளாக இருக்கும் பட்சத்தில் அவள் அடக்கப்படவேண்டியவளே. ஒரு ஆணால் இந்த சமூகம் கெட்டுபோகும் சாத்தியக்கூறுகளை விட, ஒரு பெண்ணால் அதிகம், அதானாலேயே அவளுக்கு கட்டுபாடுகள் உள்ளன. இதற்கும் அவளுடைய தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் சம்பந்தம் இல்லை. புரிந்துக்கொள்பவர்கள் சரியாக இதனை புரிந்துக்கொள்வார்கள்.

இதை தாண்டி யதார்த்தில் எல்லா குடும்பத்திலும் சின்ன சின்ன முதல், பெரிய பெரிய பிரச்சனைகள், நம் தலையை மீறும் பிரச்சனைகள் வரத்தான் செய்யும், அது தான் வாழ்க்கை, பிரச்சனைகளே இல்லாமல், சுயநலமாக நம் விருப்பபடி வாழ்க்கை அமைய வேண்டும் என்று நினைப்பவர் எவரும் வாழ்க்கையை சந்தோஷமாகவோ, இயல்பாகவோ நடத்திவிட வாய்பில்லை. அவர்களின் சுயநலத்தால் வரும் பிரச்சனைகளே அவர்களை ஒன்றுமில்லாமல் செய்துவிடும்.

திருமண சடங்குகள், பெண்ணிற்கு போடப்படும் நகை, கொடுக்கப்படும் பாத்திரம் பண்டம் போன்றவை அனைத்திற்கும் காரண க்காரியங்கள் இருக்கின்றன. என் திருமணத்தின் போது இதை எல்லாம் நான் கேட்டு தெரிந்து க்கொண்டு தான் திருமணம் செய்துக்கொண்டேன். ஒரு பெண்ணியவியாதியாக இதை கேட்கவில்லை, என் குடும்ப சூழ்நிலை, சீர்வரிசை, நகை, பணம் என ஆடம்பரமாக செய்ய கூடிய சூழல் இல்லை,நான் உரிமையாக பெற்றுக்கொள்ள என்னை பெற்றவர்கள் எனக்காக செய்ய இல்லை, ஆயா தனியாக செய்ய நேர்ந்த போது அவர்கள் ஏன் இப்படி சிரமப்பட வேண்டும் என்பதற்காக கேட்டு தெரிந்துக்கொண்டவை.

1. ஆணின் ஊதியத்தை நம்பி பெண்ணை திருமணம் செய்து தருகிறார்கள். ஒரு வேளை அவனுக்கு வருமானத்தில் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில், (வாழ்க்கை ஒரே மாதிரியாக இருக்காது) பெண்ணிற்கு போட்ட நகை, பாத்திரம் பண்டம் போன்றவை நெருக்கடி தேவைக்கு பயன்படுத்தவே கொடுக்கிறார்கள்.

2. ஆண், பெண் குழந்தைகளுக்கு தகப்பன் சொத்தில் சரிசமமாக பங்கு இருக்காது, அதனை ஈடுக்கட்ட பெண் குழந்தைகளுக்கு நகைகள் செய்து கொடுப்பதும், சீர் செய்து பெற்ற பிள்ளைகளிடம் பாகுப்பாடு இல்லாமல் நடந்து க்கொள்வதும் வழக்கம்.

இதனை சிலர் கேட்காமல் கொடுத்தோ, கேட்டு கொடுத்தோ திருமணத்தை அவரவர் வசதிக்கேற்ப முடிப்பார்கள். தாய்மாமன், அத்தை, நாத்தனார், மாமியார், இவர்களால் நெற்றியில் கட்டப்படும் காசு, பட்டை இவற்றிக்கு கூட தனிக்கதை உண்டு. பெரியவர்கள் செய்துவைத்த ஒவ்வொரு விஷயத்திற்கும் அதனை சார்ந்த பலன்களும், அர்த்தங்களும் நிறைய உண்டு. அவர்கள் அறிவில்லாத மூடர்கள் ஒன்றும் இல்லையே.

இவை எதுவுமே இல்லாமல் திருமணம் செய்ய முடியும். அது அவரவரின் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்ததே தவிர, எல்லோரும் அப்படியே இருக்கவேண்டும் என்ற கருத்தை திணிப்பதும், அதை கிண்டல், கேலி, நக்கல் செய்து தான் புத்திசாலி என்று நீருபிக்க முயல்வதும், தன் தனிப்பட்ட காழ்புணர்ச்சியையும், தன் சொந்த அனுபவங்களால் ஏற்பட்ட மன பாதிப்புகளின் வெளிப்பாடே ஒழிய, சமுதாய நோக்கிலான பார்வை ஆகாது. தனிப்பட்ட பிரச்சனைகளும் விருப்பங்களும் வெறுப்புகளும் நான்கு சுவற்றிற்க்குள் வைத்துக்கொள்ளவோ, தீர்த்துக்கொள்ளவோ வேண்டுமே அன்றி பொதுவில் வைத்து நம் பாரம்பரிய கலாச்சாரத்தையும், பழக்கவழக்கங்களையும் கிண்டல் செய்வதாகாது. அது நல்ல முடிவினையும் தராது.

பின்குறிப்பு : இப்படி ஒரு பதிவை எழுத விருப்பமே இல்லை, இருந்தாலும் , ஒருவர் தேவையில்லாமல் என்னை சீண்டி பார்க்க நினைத்து வார்த்தைகளை பயன்படுத்தினார், அவருக்கு மேல் சொன்னபடி ஒரு மனைவி கிடைத்து, பெரிய சொம்பாக அவர் இருப்பாரா என யோசித்து, இதற்கு பிறகும் என்னிடம் தேவையில்லாத வார்த்தைகளை பயன்படுத்த மாட்டார் என்பதற்காக எழுதிய பதிவு. அவருக்கு இது தனிமடலிலும் அனுப்பி வைக்கப்படுகிறது.

அணில் குட்டி அனிதா: செய்ய வேண்டாம்னு சொன்னால் அதை செய்வேன் ன்னு செய்யற இந்த அம்மணி ய என்ன செய்யறது... ???!! இவங்கள திருத்த யாராச்சும் இருந்தா வாங்கப்பா.. என்னால முடியல...

பீட்டர் தாத்ஸ் : A journey is like marriage. The certain way to be wrong is to think you control it.

A successful marriage requires falling in love many times, always with the same person.

Before marriage, a girl has to make love to a man to hold him. After marriage, she has to hold him to make love to him.

Marriage is nature's way of keeping us from fighting with strangers.

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமீஈஈஈஈஈ......

புரட்சி கல்யாணம் என்று எதை சொல்ல வேண்டும்.. ?!

1. வேறு வேறு சாதியினர் திருமணம் செய்துக்கொள்வதா?

2. வேறு வேறு மதத்தினர் திருமணம் செய்துக்கொள்வதா?

3. கணவனை/மனைவியை இழந்தவரை திருமணம் செய்துக்கொள்வதா?

4. விவாகரத்து ஆனா ஆண்/பெண் ஐ திருமணம் செய்துக்கொள்வதா?

5. நோயாளி/உடல் நலம் (ஏதோ ஒரு விதத்தில்) இல்லாத ஆண்/பெண் ஐ திருமணம் செய்து கொள்வதா?

வெயிட்.... நடுவுல ஒரு சின்ன ப்ரேக் * "செய்துக்கொல்வதா" ன்னு கூட படிக்கலாம். உங்க இஷ்டம். இப்ப கன்டிநியூ... பண்ணிக்கோங்க...

6. உடல் ஊனமுற்ற ஆண் /பெண் ஐ திருமணம் செய்துக்கொள்வதா?

7. வயது வித்தியாசம் பார்க்காமல், வயதில் மிகவும் மூத்தவர் அல்லது இளையவரை திருமணம் செய்துக்கொள்வதா?

8. வேற்று நாட்டுக்காரர்களை திருமணம் செய்துக்கொள்வதா?

9. திருநங்கைகளை திருமணம் செய்துக்கொள்வதா?

10. ஆண் ஆணையும், பெண் பெண்ணையும் திருமணம் செய்துக்கொள்வதா?

11. குழந்தையோடு இருக்கும் ஆண்/பெண் ணிற்கு நாம சிங்கிளாக இருந்து திருமணம் செய்துக்கொள்வதா?

12. ஆண்/பெண் இரண்டு பேருக்கும் குழந்தை இருந்து, திருமணம் செய்து க்கொள்வதா?

13. கடைசியாக படத்தில் இருக்கிற மாதிரி நாயை திருமணம் செய்துக்கொள்வதா?

இவை எல்லாவற்றையும் தவிர்த்து,

பூ, தாலி, மஞ்சள், குங்குமம், இசை அல்லது கேவலமான சத்தம் (புதுசா இதை இப்பத்தான் தெரிஞ்சிக்கிட்டேன் அதான்..), செருப்பு, துடைப்பம், பூங்கொத்து, வரிசை, பாத்திரம், பண்டம், இனிப்பு, வாழை இலை, வாழை மரம், தோரணம், பந்தல், மேடை, ஐயர், நெருப்பு, சொந்தம், நண்பர்கள், பல்லு போன அந்த கால கிழடுகள், மந்திரம், புகை, பூ மாலை, நகை, காலில் மெட்டி, நெத்தில் சுட்டி, வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய், வேஷ்டி, சட்டை, புடவை, உள்ளாடைகள், தலைமுடி, கார், பஸ், சைக்கிள், ரயில், வேன், மாட்டுவண்டி, டூவிலர், (இதுல எல்லாம் கல்யாணத்துக்கு வர பயன்படுத்துவாங்க) இன்னும் எல்லாம்..... ஏன் நடந்து கூட கல்யாணத்துக்கு போகலாம், பெருமாள், சிவன், கணேஷன் (இவங்க எல்லாம் சாமிங்க), லைட், பல்பு, ஃபேன், வடை, பாயசம், அப்பளம், ஐஸ்க்ரீம் (அட நடுவுல இது எல்லாம் ஞாபகம் வந்து போச்சிங்க), மூஞ்சி பாக்கற கண்ணாடி, சீப்பு, பவுடர், வீடு, கல்யாண மண்டபம், கோயில், சினிமா தியேட்டர், சாராயக்கடை, (கல்யாணத்துக்கு வரவங்க நைட் ல சில சமயம் சினிமா போவாங்க, தண்ணி பார்ட்டி கண்டிப்பா இருக்கும் அதுக்காக), தாம்பூலம், பன்னீர், சந்தனம், கல்கண்டு, பேரீச்சம் பழம், அரசமரம், மண்பானை, சட்டிகள், விளக்கு, திரி, எண்ணெய், கோலம், சாணி, கோமியம், தயிர், பால், பிரியாணி, கத்திரிக்காய் குழம்பு, (இஸ்லாமியர் திருமணம் ஒன்றிக்கு போன போது சாப்பிட்டது நினைவுக்கு வந்து போச்சி)..இன்னும் என்னென்னவோ.....

14. இப்படி மேல சொல்லியிருக்க எதுவும் இல்லாம... கல்யாணம் செய்தால் அது புரட்சி கல்யாணம் மா?

மனசாட்சியை வெளியில எடுத்து ஹேங்கர் ல மாட்டிட்டு பதில் சொல்லப்பிடாது, மேல இருக்கறதுல உங்களுக்கு தேவையான ஒரு சிலவற்றை மட்டும் சுயநலமா எடுத்துக்கிட்டு மிச்சத்தை தூக்கி போட்டுட்டு, முடியும் னு சொன்னால் அது நியாயமா தர்மமா நீதியா நேர்மையா? ன்னு நானு குரல் எழுப்புவேன்.

இன்னொன்னு கவனிச்சீங்கன்னா.. ஒரு கல்யாணத்துல எத்தன பேருக்கு வேலை கிடைக்குது? குறிப்பா விழுப்புரம் பக்கத்தில் கோலியனூர் ஒரு இடம் இருக்கு, அங்க தான் குயவர்கள் இருப்பாங்க. கல்யாணத்துக்குன்னு சொல்லிட்டா போதும், அதுக்கு தேவையான செட் அழகா செய்து கொடுப்பாங்க.. அவங்க வயிற்று பிழைப்பே இது தான் :) அதுவும் கல்யாண சீசன்ல தான் நிறைய..

அப்புறம் மியூசிக் ட்ரூப்... இவங்களுக்கு கல்யாணத்துல தான் 90% வருமானம்.

சமையல்காரர்கள்

பந்தல் - இதுல நிறைய மேட்டர் இருக்கு..... அப்புறம் கல்யாணவீட்டு சமையல் செய்ய பாத்திரங்கள், நாற்காலி, பெஞ்ச், லைட் ன்னு தனியா பிஸினஸ் செய்து தன் குடும்பத்தை, புள்ள க்குட்டிகளை காப்பத்தறவங்க இருக்காங்க..

சொல்லிக்கிட்டே போகலாம்... உடனே நீங்க தலைப்பை விட்டுட்டு எதை எதை எல்லாம் நான் விட்டுட்டேன் னு யோசிக்காம..

மேல சொன்ன லிஸ்ட் ல எது "புரட்சி கல்யாணம்" ன்னு தெளிவா சொல்லி என்னோட டவுட் டை க்ளியர் பண்ணிட்டு கிளம்புங்க... அப்புறம் ஒரே ஒரு மெஸேஜ்...

எல்லாத்துக்கும் மேல எந்த கல்யாணமா இருந்தாலும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சாலும் புரியாட்டியும் தெரிஞ்சாலும் தெரியாட்டியும் செத்தாலும் உயிரோட இருந்தாலும்.... "விட்டுக்கொடுத்து" வாழாட்டி... எப்பேர் பட்ட கல்யாண உறவும் புட்டுக்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் !! - அப்படின்னு சொல்லி முடிச்சிக்கிறேன்.

அணில் குட்டி அனிதா : இது வேலைக்கு ஆவறது இல்ல.. நான் முதல்ல இடத்தை விட்டு கிளம்பறேன். ...

பீட்டர் தாத்ஸ் : Many people marry for the wrong reasons, among them 1) to overcome loneliness, 2) to escape an unhappy parental home, 3) because they think that everyone is expected to marry, 4) because only "losers" who can't find someone to marry stay single, 5) out of a need to parent, or be parented by another person, 6) because they got pregnant, 7) because "we fell in love," ... and on goes the list.

காமினியின் கண்கள் ! (சவால் சிறுகதை)

சிவா' விற்கு இந்த புது கேஸ், பெரிய சவாலாக இருந்தது.சந்துருவை அழைத்து, "நியூ கேஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணனும், ஃபைல் ஐ கோ த்துரு செய்துட்டு வா.. இப்ப டைம் 10.35 ஆகுது 11.30 க்கு டிஸ்கஷன் ரூமில் இருக்கனும் " என்று பணித்துவிட்டு, கேன்டீன் பக்கமாக நடந்தான்.

நடுவே கடந்த இரண்டு போலிஸ்காரர்கள் சிவாவை பார்த்து விறைப்பாக நின்று சல்யூட் அடித்தனர். கேஸ் யோசனையிலிருந்து வெளிவராமல் புன்னகைத்தவாரே நடந்தான். கேன்டீனில் அமர்ந்து டீ' க்கு ஆர்டர் கொடுத்துவிட்டு,மீண்டும் கேஸ் பற்றிய சிந்தனையில் மூழ்கினான்.

காமினி? ரொம்ப இண்டரஸ்டிங்கான கேரக்ட்டராக இருப்பா போல இருக்கே.. ? மீடியாவில் ஏதோ ஒரு சில சமயங்களில் இந்த பெயரை கேட்டது போல் இருக்கு, பார்த்த மாதிரி ஞாபகம் இல்ல.. எப்படி இருப்பா இந்த காமினி?! என காமினி பற்றிய நினைவுகளில் இருக்கும் போது நடுவில் டீ வர... பின்னாலே வந்த சந்துரு, எதிரில் வந்து அமர்ந்தான்.

"நேத்தே பாத்துட்டியா?" சிரித்தான் சிவா.

"எப்படியும் நீங்க காலையில் டீடெயில்ஸ் "கேப்பீங்கன்னு....." இழுத்தான் சந்துரு.

புருவங்களை சுருக்கி டீ யை உறுஞ்சிக்கொண்டே... "ஸ்மார்ட் !! . அப்படித்தான் இருக்கனும்.. ! அவுட் லைன்.....

"எஸ் சார்! தொடர்ந்து.. ரகசிய குரலில் சிவாவிற்கு கேட்கும் படி பேச ஆரம்பித்தான் சந்துரு.. " காமினி, வயது 26, நிஃப்ட் ல பேஷன் டெக்னாலஜி படிச்சிட்டு, பிரைவேட் டிசைனரா கேரியரை ஸ்டார்ட் செய்து, அதுல பெரிய ஆளுங்க தொடர்பு கிடச்சி, டிசைனிங் பரொப்ஷன்ல ரொம்ப சக்ஸஸ்ஃபுல் லா இருக்க லேடி. சிட்டியில பிஸினஸ் மெக்னட்ஸ் மிஸ்டர்.ஆதித்யாவர்மா & மிஸ்டர்.பரந்தாமன் இவங்களோட க்ளைன்ட், அவங்களோட கார்மென்ட்ஸ் பிசினஸ்'க்கு டிசைன்ஸ் செய்து தருவது இவங்கதான். அது மட்டும் இல்லாம முன்னனி நடிகர், நடிகைகளுக்கு காஸ்ட்டியூம் டிசைனிங் செய்து தராங்க. பணக்கார வட்டத்தில் பிரபலமான, புத்திசாலி, அழகு, விவேகம், வேகம் நிறைந்த . இது வரைக்கும் இவங்க பெயர் சஸ்பீஷியஸாக இரண்டு கேஸ் ல வந்து இருக்கு, நம்ம டிபார்ட்மென்ட் ஆளுங்களுக்கே அவங்க பேர் எப்படி ரெக்கார்ட் ல வந்துதுன்னு டவுட் இருக்கு...

"ஸ்கிப் காமினி........."

"சார்..!!, உளவு துறையிலிருந்து நமக்கு வந்த தகவல், வெளிநாட்டுலிருந்து மும்பை வழியாக விலை மதிக்கமுடியாத வைரங்கள் கடத்தப்பட இருக்கிறது. எங்க இருந்து எப்படி, எப்போது வருதுங்கற தகவல்..எல்லாம்.."

"வெல், சந்துரு....கண்ணால் ப்ரைவசியை சுட்டிக்காட்டி, உரையாடலை அத்தோடு முடித்தான் சிவா., .......டீ'யில் கடைசி சிப்புடன் வந்த டீத்தூள் நாக்கில் பட்டவுடன், கப்பின்னுள் ஒரு முறை பார்வையை செலுத்திவிட்டு, கப்பை கீழே வைத்த சிவா, விரிட்டென்று எழுந்தான். சந்துரு சொன்னதில் "புத்திசாலி, அழகு, விவேகம், வேகம் நிறைந்த பெண்... " இது மட்டும் ரிவைண்ட் ஆகி திரும்ப திரும்ப காதுகளில் விழுந்து கொண்டே இருந்தது. எத்தனை வேலை பளுவிலும் பெண்கள் என்று வந்து விட்டால் அணுஅணுவாக ரசிக்கும் குணம் கொண்ட சிவாவிற்கு, காமினி'யை பார்க்க ஆவல் எழுந்ததில் கொஞ்சமும் வியப்பில்லை!

"கம் ஆன் லெட்ஸ் கோ........ போட்டோஸ் எல்லாம் கலெக்ட் செய்தாச்சா...?"

பின்னாலேயே வேகமாக தொடர்ந்தான் சந்துரூ......"எஸ் ஸார், ஃபைல் ல ஹார்ட் காப்பி இருக்கு, ஆபிஸ் சிஸ்டம் அன்ட் உங்க லேப்பில லோட் செய்துட்டேன்"

************

காமினி, 5.6" உயரம், பொட்டில்லாமல் க்ளீனாக இருந்த சிறிய நெற்றி, மை இடாத மிக அழகான பெரிய கண்கள், கூரிய நாசி, லேசாக லிப்சிட்க் போட்ட உதடுகள், ஸ்லிம், டைட் ஃபிட்டிங் குர்தாவில் வளைவுகள் தெரிந்தன. மேட்சாக லெங்கின்ஸ். ஹை ஹீல்ஸ், நடுநடுவே கலர் செய்யப்பட்டு யூ கட் செய்யப்பட்ட தலைமுடி, முகத்தை மறைக்கும் சன் க்ளாஸ், லேப் டாப் லெதர் பேக், கூடவே தொங்கும் குட்டி லெதர் ஹேன்ட் பேக் சகிதமாய் சில்வர் நிற பென்ஸ் பி&டபில்யூ வை மிக லாவகமாய் பார்க்செய்து விட்டு, அவளின் அந்த சின்ன நேர்த்தியான அலுவலகத்துள் நுழைந்தாள்.

ரூமில் நுழைந்த 10 ஆவது நிமிடம் செக்கரட்டிரி இண்டர்காமில் அழைத்தாள்."மேடம், குட் மார்னிங்! ப்ரீவியஸ் அப்பாய்ன்ட்மென்ட் இல்ல, மிஸ்டர். சிவா, ஏசிபி, சென்னை & மிஸ்டர்.சந்துரு ஹிஸ் அசிஸ்ட்டென்ட் உங்களை பார்க்க வந்து இருக்காங்க...."

இரண்டு வினாடித்துளிகள் யோசித்து, "கெஸ்ட் ரூம்'மில் உட்காரச்சொல், அங்க வந்து பார்க்கிறேன்." என்றாள்

ஹேன்ட்பேக் திறந்து, கைக்கு அடக்கமான முகக்கண்ணாடியை எடுத்து ஒரு முறை பார்த்து, சிகையை சரிசெய்துக்கொண்டு கெஸ்ட் ரூம் சென்றாள் காமினி.

**********

"ஹல்லோ மிஸ்டர்.சிவா, ஐ அம் காமினி, ஹல்லொ மிஸ்டர். சந்துரு.. !! " சிரிப்போடு இருவருக்கும் கைக்குலுக்கினாள்.

அசந்துபோனான் சிவா... இவளா ?!! என்று ஒரு சராசரி ஆணாக யோசித்த போதே...சந்துரு, சிவாவின் மன ஓட்டம் அறிந்து, சார்.. என்று குரல் கொடுக்க... விழித்துக்கொண்டான்.

"ஹல்லோ ..ஐம் சிவா..! ஏசிபி சென்னை. ஜஸ்ட் உங்களை பார்த்து சில டவுட்ஸ் க்ளையர் செய்துக்கலாம்.னு"

"யெஸ்.. "

"2008 ல் நடந்த பிரான்ஸிஸ் கேஸ் ல உங்க பேர் இன்க்ளூட் ஆகி இருக்கு... .."

இடைமறித்தாள் காமினி. "கேஸ் க்ளோஸ்ட் மிஸ்டர்.சிவா. என்னோட பேரை எடுக்க சொல்லி கோர்ட் உத்தரவு அதில் இருந்து இருக்கனுமே.. இஃப் யூ வான்ட் ஐ கேன் ப்ரோட்டூயூஸ் எ காப்பி..."

"யப் நாங்களும் பாத்தோம்.. இருந்தாலும் எப்படி உங்க பேர் அதுல வந்து இருக்குன்னு.."

"சி மிஸ்டர்.சிவா.. உங்க ஃபைல் ல அந்த கேஸ் விஷயமாக எல்லா டீடெட்டெயில்ஸ் நீங்க படிச்சி இருப்பீங்க.. கேஸ் முடிஞ்சி இரண்டு வருஷம் ஆச்சி, அதை பற்றி பேசி இரண்டு பேரோட நேரத்தை வீணடிக்காம, இப்ப என்ன விஷயமா வந்து இருக்கீங்கன்னு நேரடியாக பேசலாமே...

"ம்ம்ம் ஸ்மார்ட்! மனதுக்குள் சொல்லிக்கொண்டான் சிவா! "ஜஸ்ட் அதை பத்தி பேசத்தான் வந்தோம்..நந்திங் எல்ஸ்... சந்த்ரூ கிளம்பலாம். சிவா எழுந்தான். உடன் சந்துருவும்..

"தாங்க்ஸ் மிஸ். காமினி."

".. மை ப்ளஷர்.. !"

*************

அன்றிலிருந்து, மிக ரகசியமாக காமினியை கவனிக்க செய்ய செழியன் நியமிக்கப்பட்டான். ராஜாராம் காமினியின் பி.ஏ வை கவனிக்கவும், காமினி ஆபிஸ்'ஸில் புதிதாக சேர்ந்த ஆறுமுகம் போலிஸால் அனுப்பப்பட்டும் இருந்தான். மூவரும் சந்துருவுடன் 24 மணி நேரமும் தொடர்பில் இருந்தனர். அவ்வப்போது கிடைக்கும் எல்லா தகவல்களும் சேகரிக்கப்பட்டு, சிவாவின் பார்வைக்கு தினம் இரவு கொண்டு செல்லப்பட்டது.

சரியாக 52 ஆவது நாள் காமினி யின் மும்பை பயணம் பற்றிய தகவல் கிடைத்தது. மும்பையில் நடக்கும் ஒரு ஃபேஷன் ஷோ'விற்கு காமினி தான் உடைகள் டிசைன் செய்கிறாள் என்றும் அது சம்பந்தமாக செல்வதாகவும் தெரிந்தது. பயணம் பற்றிய தகவல் கிடைத்த நாளிலிருந்து, சரியாக 6 ஆம் நாள், காமினி மும்பையில் 5 நாட்கள் தங்க ஏற்பாடு ஆகி இருந்தது.

சிவாவும், சந்துருவும், அவர்களால் கண்காணிக்க படலாம் என்பதால், அவர்களின் மும்பை பயணம் மிக ரகசியமாக வைக்கப்பட்டு இருவரும், வேலை சம்பந்தமாக கேரளா சென்றிருப்பதாக காமினி புறப்படும் இரண்டு தினங்கள் முன்னதாகவே இவர்கள் புறப்பட்டு விட்டதாக தகவல் பரப்பப்பட்டது.

சிவா, சந்துரு இருவரும் வேறு வேறு தேதிகளில் மும்பை செல்ல எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. சிவா இப்போது காமினியை நேரடியாக ஃபாலோ செய்ய ஆரம்பித்து இருந்தான். மும்பையில் காமினியின் உடை மேலும் கீழும் ஏகத்துக்கு குறைந்து, மிகவும் கவர்ச்சியாக இருந்தாள். ஒரு அழகான பெண்ணை இத்தனை நெருக்கமாக கண்கானிப்பது எத்தனை இனிமையான அனுபவம்? அதுவே செய்யும் வேலையாகி போனது..ஆஹா..சிவாவின் மனதில் சந்தோஷம் கரைபுரண்டு ஓடியது. அதை தாண்டி, கடமை கண்ணியம் அவனை தடுத்து நிறுத்தி "கடமையை செய்யடா மடையா" என்றது. !

மும்பை சென்ற நான்காவது நாள் இரவு, காமினி வெளியில் கிளம்பினாள். அவள் அறியாமல் தொடர்ந்தான் சிவா. சம்பந்தமில்லாத திசையில் காமினியின் கார் பயணம் செய்தது. சிவா சந்துருவிற்கு அவ்வபோது எங்கிருக்கிறான் என்ற விபரம் சொல்லிக்கொண்டு இருந்தான். மும்பை நகரை விட்டு கோவா செல்லும் பாதையில் வண்டி சென்றது. நடுவே பெட்ரோல் பங்கில் ஒரு முறை நிறுத்தினாள், பின்பு தொடர்ந்தது பயணம். சரியாக 5.30 மணி நேரத்தில் மகாபலீஷ்வர்'ஐ அடைந்தது.

அங்கே சென்றதும் ஹை'வே யை விட்டு கார் வளைந்து நெளிந்து எங்கோ செல்ல, இடைவெளி விட்டு தொடர்ந்தான் சிவா. உள்ளே ஒரு இரண்டு கிலோமீட்டர் சென்றவுடன் ஒரு ரிசார்ட்டினுள் அவளின் கார் நுழைந்தது. வெளியில் சற்று தொலைவில் காரை நிறுத்தி, சந்துருவிற்கு விபரம் சொல்லி காத்திருந்தான். சரியாக பத்து நிமிடங்கள், இருபத்து ஐந்து நொடிகளில் அதே ரிசார்ட்டில் அவள் தங்கியிருக்கும் இடத்திற்கு நேர் எதிராக உள்ள தனி காட்டேஜ் ஜில் இடம் புக் செய்து சிவாவிற்கு தகவல் சொல்ல. சிவா காரை ஸ்டார்ட் செய்து உள்ளே நுழைந்து, வேகமாக புக்கிங் வேலையை முடித்து, ரூமிற்குள் தஞ்சம் புகுந்து, அவளின் காட்டேஜ் ஐ ஜன்னல் வழியாக கண்கானிக்க ஆரம்பித்தான்.

விடியற்காலை சரியாக 3.20 க்கு காமினி, ஜீன்ஸ் பேன்ட், இடுப்பு வெள்ளையாய் நடுவில் தெரிய டைட் டிஷர்ட், தலைமுடியை சுழட்டி இறுக்கி மேல் வைத்து க்ளிப் போட்டு, மொபைலை ஹெட் ஃபோனில் கனெக்ட் செய்து காதில் மாட்டிக்கொண்டு, ஸ்போர்ட் ஷூ சகிதம் வெளியில் வந்தாள். பாதி தூங்கியும் தூங்காமலும் இருந்த சிவா, துள்ளி எழுந்தான். வேக வேகமாய் முகத்தை தண்ணீரால் அடித்து, துடைத்துக்கொண்டு,பிஸ்டல் இருக்கிறதா என்பதை ஒரு முறை கன்பாஃர்ம் செய்துக்கொண்டு, பின் கதவின் வழியே வெளியில் வந்து, அவளை தொடர்ந்தான்.

நடையின் ஊடே யாருடனோ போனில் பேசியபடி போவதாக சிவாவிற்கு பட்டது. அவளை நடையோடு பின் தொடர மிகவும் சிரமப்பட்டு, சந்துருவுக்கு ஃபோன் செய்ய,அவன்"நான் என்ன செய்ய பாஸ்? வேணும்னா நீங்க போய் தூங்குங்களேன்" என்று கிண்டல் செய்துக்கொண்டே அவள் செல்லும் வழியை கூகுல் மேப்பில் தேடி, எங்கே செல்கிறது என்று சொல்லிக்கொண்டே வந்தான். பக்கதில் ஒரு ஸ்போர்ட்ஸ் க்ளப், ஒரு ஆஸ்பித்திரி'யும் இருப்பதாக சொன்னான். பாதை பள்ளத்தாக்கில் இறங்கி, குண்டு குழியுமாக சென்றது. காமினி நன்றாக வழித்தெரிந்தவள் போல் நடந்து சென்றாள். தட்டு தடுமாறி சிவா அவளை பின் தொடர்ந்தான். அந்த பாதை பிரியும் போது எதிர்ப்பார்காத தருணத்தில் வேகமாக ஓடிவந்த ஒரு கருப்பின பெண், காமினியை மோதிவிட்டு, பிரிந்து சென்ற மற்ற பாதையில் ஓடி இருட்டில் மறைந்தாள்.

காமினியோ அந்த பெண் மோதிய அதிர்ச்சி எதையும் காட்டாமல் தொடர்ந்து நடக்க, சிவாவிற்கு சந்தேகம் வந்து, வேகமாய் பின் தொடர்ந்தான், நெருக்கமான காலடி சத்தத்தில் உஷாரான காமினி, பாதையிலிருந்து விலகி பள்ளத்தாக்கில் இருட்டில் இறங்கி ஓட ஆரம்பித்தாள். சந்துருவிடம் சொல்லிக்கொண்டே சிவாவும் ஓட, சந்துரு "அப்படியே சென்றால் பக்கத்தில் ஆஸ்பித்திரி இருக்கும் என நினைக்கிறேன் கண்டிப்பாக வேறு வழி அங்கு இல்லை, ஆஸ்பித்திரியை அடைந்தால் ஒரு வேளை மாற்று பாதை கிடைக்கும்" செல்லுங்கள் என்றான். அவளும் ஆஸ்பித்திரியை நோக்கி ஓட, இவனும் அவள் கண்களை விட்டு விலகிவிட்டாலும் அங்கு தான் சென்றிருக்கக்கூடும் என உத்தேசித்து... ஓட ஆரம்பித்தான்.

காமினி அந்த ஆஸ்பித்திரியில் ஏதோ ஒரு வாசல் வழியே நுழைந்து வேகவெகமாய் நடந்தாள். நடுநடுவே கருப்பினபெண் கையில் செருகிவிட்டு சென்ற டைம்ன்ட்ஸ் ஐ பேன்ட் இடுப்பு பாக்கெட்டில் அழுத்திவிட்டது இருக்கிறதா என்பதை தடவி பார்த்துக்கொண்டாள். மறைந்து கொள்ள இடம் தேடினாள். ஆள் நடமாட்டம் இல்லை, நர்ஸ் ஒருவர் நடுவே ஒரு அறையிலிருந்து வெளிப்பட்டார், அவளிடமிருந்து மறைய மற்றோர் அறைக்குள் காமினி நுழைய, பேச்சு சத்தம் கேட்க ஆரம்பித்தது. ஒரு வேளை அந்த நர்ஸ்'சிடம் டாக்டர் யாராவது பேசிக்கொண்டு இருக்கக்கூடும். அறையில் வெளிச்சத்தில் திரும்பி பார்த்தாள். நால்வர் இருக்கும் அறை. நடு நடுவே ஸ்கீரின் போடப்பட்டு இருந்தது. இரண்டு நோயாளிகள் தூங்கிக்கொண்டு இருந்தனர், முதலாமவர் சற்று சீரியசாக இருப்பதாக அவளுக்குப்பட்டது. மூன்றாவது பெட் ஐ விட்டு விட்டு, நாலாவது பெட்டில் ஏறி படுத்து, அங்கு கழட்டி வைக்கப்பட்டு இருந்த மாஸ்க்கை முகத்தில் மாட்டி பக்கத்திலிருந்த மிஷினில் இருந்த வயர்களை எல்லாம் கை, கால்களில் ஒட்டி, கனெக்ஷன் கொடுத்து, கீழிருந்த வெள்ளை போர்வையை எடுத்து, உடை தெரியாமல் போர்த்திக்கொண்டு படுத்துக்கொண்டாள்.

உள்ளே நுழைந்தவர்கள் பேச்சு சத்தம் முதல் பெட் அருகே கேட்டு க்கொண்டு இருந்தது, டாக்டராகத்தான் இருக்கக்கூடும், டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

அங்கும் இங்கும் ஒடி காமினியை தேடிக்கொண்டு இருந்த சிவாவிற்கு, அவள் குதிக்கும் சத்தம் மெதுவாக கேட்க, சத்தம் கேட்ட திசை நோக்கி பூனை போல் நடந்துவந்தான். காமினியே தான், அவள் அறியாமல் முதுகுப்பக்கமாக வந்து " “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

அவள் சற்றும் அசராமல், "மிஸ்டர். சிவா நீங்களா? இங்க எப்படி?" என்று காமக்கண்களோடு அவன் அருகில் வர நினைக்க, அவன் துப்பாக்கியை நழுவ விடாமல் அவள் கண்களை கவனித்து கொஞ்சம் கொஞ்சமாக கண்களை இறக்கி கழுத்துக்கீழ் பார்க்க எத்தனித்த அதே நோடியில், ஒரே அடியில் துப்பாக்கியை தட்டி விட்டு மீண்டும் ஓடி இருட்டில் மறைந்தாள் காமினி.

சென்னை. ஈசிஆரில் ஒரு ப்ரைவேட் ரிசார்ட்.

ஆதித்யாவர்மா, காமினி, மற்றும் பரந்தாமன் மூவரும் பார்ட்டியில் இருந்தார்கள். ஆடல், பாடல் என பார்ட்டி மிக விமர்சயாய் நடந்துக்கொண்டு இருந்தது. இந்த மூவரின் சிரிப்பு சத்தம் அந்த இடத்தையே கிழித்தது.

"காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

ஆராரோ..யார் யாரோ .. நான் யாரோ நீ யாரோ..

எங்க வீட்டு தாலாட்டு பாடல்கள் பற்றி ஒரு பதிவு போடனும்னு ரொம்ப வருடமாக யோசனை.... இப்பத்தான் முடிந்தது. எல்லாமே ஆடியோ ரிக்கார்ட் செய்து பதிவிட்டு இருக்கிறேன். கேட்டு மகிழுங்கள். ரொம்ப ஹோம் ஒர்க் எல்லாம் செய்யலை, சும்மா அப்படியே பாடினது, தாளம் சரியில்ல, ராகம் சரியில்ல.. ஸ்பெல்லிங் மிஸ்டேக் க்கு........ அது இதுன்னு வந்தீங்க. .கடிச்சி துப்பிடுவேன். சொல்லிட்டேன்.

என்னோட நவீன் குட்டி'க்கு பாடினது

Get this widget | Track details | eSnips Social DNA



தாலாட்டு பாடல்கள்.. ன்னு ஏதோ ட்ரை செய்து இருக்கேன்...

Recording (2).mp3


Recording (6).mp3


அணில் குட்டி அனிதா: பார்றா.. மனசாட்சியே இல்லாம கேட்டு மகிழுங்கள் ன்னு சொல்லி இருக்காங்க... ம்ம்ம்... காது ஜவ்வு கிழிந்து நம்ம காதுல ரத்தம் வரது பத்தாம நம்ம வூட்டு புள்ளைங்களுக்கு எல்லாம் காது செவிடாக வழி வகுக்கறாங்க.. ம்ம்ம்... .. உங்க குடும்பம் நல்லா இருக்கனும்னாமக்கா வீட்டுல ஸ்பீக்கர் ல மட்டும் போட்டு இந்த ஆடியோவை கேக்காதீங்க, ஸ்டிர்க்ட்டா சொல்லிட்டேன்.. !! அப்புறம் நஷ்ட ஈடூ கேட்டு இந்த பக்கம் யாரும் வந்தா...நானே சும்மா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்.. !!

பீட்டர் தாத்ஸ் : I must be careful not to get trapped in the past. That's why I tend to forget my songs.

நன்றி :
http://thalatu.blogspot.com
கோபிநாத் :)
.

க்ளிக்..க்ளிக்..க்ளிக்...

சென்னை - திருப்பதி ரயில்.....

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானை....
மழைவரும் மாலை நேரம்....@ நவிமும்பை..

:) இதை பார்க்கும் போது எல்லாம் "குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்" ன்னு..... @ "காட்பாடி

செருப்பு விளம்பரம்..... செருப்போடு விளக்கேற்றும் ???!!!! பெண்.. @ மதுரை

.....ம்ம்...ம்ம்..ம்ம் நடக்கட்டும்.. :) பஸ்'சில் பக்கத்து சீட்டில் இருந்த குழந்தை... @மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மதில் சுவரில் உட்கார்ந்து முறைக்கிறார்...

எனக்கு நீதி வேண்டும்..!!

ஆண்களின் பிடியில் சிக்கி தவிக்கின்ற என்னை போன்ற பெண்களுக்கு, வலையுலக நண்பர்கள் தவிர (ஓசியில் மங்களம்) யார் உதவி செய்வார்கள்? யார் நீதி கொடுப்பார்கள்? அதனால் உங்களிடம் என் பிரச்சனையை மனம் விட்டு சொல்லி, என் வாழ்க்கையை எத்தனை மன உளைச்சளோடு நான் வாழ்ந்து கொண்டு வருகிறேன் என்பதை உங்களுக்கு புரிய வைக்கிறேன். ஒரு பாவப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்!!

வலையுலக பிரச்சனைகள் தவிர்த்து குடும்ப பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு கிடைக்குமா என்று தெரியாவிட்டாலும் , கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்காக என் சார்ந்த முக்கிய தகுதிகள் :

தகுதி 1 : நான் ஒரு பெண் பதிவர்
தகுதி 2 : பிரச்சனை கொடுப்பவர் என்னுடைய ஆண் குழந்தை

பிரச்சனைகள் :

1. நல்லபடியாக பிறக்க எல்லாவிதமான சாத்தியக்கூறுகள் இருந்த போதிலும், (அதற்காக மாதமாக இருந்த போது காலை 5 மணியிலிருந்து இரவு 9 மணி வரை நடுவே படுத்து ஓய்வு எடுக்காமல் வேலை செய்து இருக்கிறேன்), 9 மாதங்கங்களில் பிறக்காமல், 11 மாதம் வரை வயிற்றின் உள்ளே உட்கார்ந்து கொண்டு, வெளியில் வராமல் இருந்ததால், என் வயிற்றை கத்தி க்கொண்டு வெட்டி/கிழித்து அவனை வெளி கொண்டு வர வேண்டியாகிவிட்டது. இதனால் நான் பட்ட கஷ்டத்திற்கு அளவில்லை, இவன் பிறக்க வேண்டி முதுகு தண்டில் போட்ட ஊசியால், வெகு நேரம் தொடர்ந்து நிற்க முடியாமல், வலியில் இன்று வரை அவதிப்பட்டு வருகிறேன்.

2. சாப்பாடு ஒழுங்காக சாப்பிடாமல் , மூன்று மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் ஒவ்வொரு முறை உணவு ஊட்டும் போதும் நான் செலவிட வேண்டியதாகி இருந்தது. என் நேரமும், அவனை தூக்கி வைத்துக்கொண்டு ஊட்டியதால், என் உடல் வலியை அவனால் சரிக்கட்ட முடியுமா?

3. எப்படி எப்படியோ கஷ்டப்பட்டு வளர்ந்தாலும், வேலைக்கு சென்ற போது, ஆண் பிள்ளையாக அவனின் சேட்டை மிக அதிகமாக இருந்த காரணத்தால், எந்த நேரத்தில் வீட்டில் என்ன செய்து வைப்பானோ, அவனுக்கு என்ன ஆகிவிடுமோ என்று வேலை நேரங்களில் நிம்மதியாக இருக்க முடியாமல், எந்த நேரமும் இவனை பற்றிய கவலையிலேயே இருந்தேனே! என்னை நிம்மதியில்லாமல், பல வருடங்கள் வைத்துக்கொண்டது இல்லாமல், இப்போதும் அதை தொடர்கிறானே? என் வாழ்க்கையில் ஏன் நான் இவனால் நிம்மதி இல்லாமல் இருக்க வேண்டும்?

4. எவ்வளவு நன்றாக சமைத்தாலும், ஏதோ பரவாயில்லை என்று சொல்வதோடு இல்லாமல், இத்தனை வருடம் சமைக்கிறாயே, எனக்கு பிடித்த சிக்கன் ரோல், பர்கர், கேக், சிக்கன் பஃப், நாந், இவையெல்லாம் செய்ய தெரியவில்லை என்று என்னை மட்டமாக பேசுவது மட்டும் இல்லாமல், அவற்றை எல்லாம் கற்றுக்கொண்டு, விடியற் காலையில் நான் எழுந்து அவனுக்கு செய்து கொடுக்க வேண்டும் என்று கட்டாய ப்படுத்துகிறானே.. நான் என்ன இவனுக்கு சமையல்க்காரியா? இவனுக்காக என் தூக்கத்தை நான் தியாகம் செய்ய வேண்டுமா?

5. என்னை முடி வெட்ட கூடாது என்றும், அப்படியே மீறி வெட்டினால் வீட்டினுள் சேர்க்க மாட்டேன் என்று மிரட்டுவதும், ஜாக்கெட் பின்புறம் நெக், ரொம்ப டீப் நெக் போடக்கூடாது, அப்படியே போட்டால் தைத்துக்கொடுத்த டெயிலரை (அவங்களும் பெண்) வந்து திட்டுவேன் என்றும், ஜீன்ஸ் பேன்ட் போடக்கூடாது, அப்படி போடவேண்டும் என்றால், 50 கிலோ ஐஸ்வர்யா ராய் மாதிரி ஆனப்பிறகு போடு என்று பீப்பா மாதிரி இருக்கும் என்னை குட்டி பாப்பாவாக மாற சொல்லி என்னால் செய்யவே முடியாத விஷயத்தை செய்ய சொல்லி கட்டாயப்படுத்தும் இந்த கொடுமைக்காரனிடமிருந்து எனக்கு விடுதலை கிடைக்காதா?

6. எல்லாவற்றையும் விட கொடுமை, அவன் சாப்பிடும் அளவிற்கு என்னையும் சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்துவதோடு அல்லாமல், என்னால் முடியவில்லை என்று சொன்னால், திட்டி துன்புறுத்தி சாப்பாட்டை திணிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறானே... நான் என்ன அவனுக்கு அடிமையா?

7. உலக நடப்புகளை பார்த்து, இப்போதிலிருந்தே புரட்சி பெண்களிடம் தள்ளி இரு, உனக்கு நம்ம ஊர் பக்கமாக படிக்காத இரட்டை சடை போட்ட அருக்காணியாக பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறேன், அப்போது தான் நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் என்று சொன்னால் கேட்காமல், சட்டை செய்யாமல், வூட்டுக்காரோடு போய் செட்டில் ஆகிற வழியை பார், என் விருப்படிப்படி தான் திருமணம் செய்து க்கொள்வேன், ஃபியூச்சரில், என் பொண்டாட்டி சமைத்து போடாவிட்டால், உன்னை அழைத்துக்கொண்டு போய் என்னுடன் வைத்துக்கொள்வேன், மரியாதையாக சமைத்து போடு என்கிறான். இவனுக்கு சமைத்து போடுவதே தண்டம் என்று நினைக்கும் வேலையில், எதிர்காலத்தில் இவன் மனைவிக்கும் சேர்த்து என்னை வேலை வாங்க இப்போதே திட்டம் தீட்டி வருகிறான் என்பதை இந்த சபையினருக்கு தெரிவித்து கொள்கிறேன். காலம் பூராவும் இவனுக்கும் இவன் குடும்பத்திற்கும் சமைத்துப்போட நான் என்ன இவன் வீட்டு வேலைக்காரியா? இல்லை எனக்கு ஆயுள் தண்டைனையா?

8. இத்தோடு நிற்காமல், என்னுடைய ப்ரசனல் விஷயத்திலும் அத்து மீறுகிறான், என் கணவருடன் நான் தனியாக சினிமா,பீச், ஷாப்பிங் என்று எங்கேயும் போகக்கூடாது என்று தடைவிதிக்கிறான். கேரளாவிற்கு டூர் சென்ற போது ஃபோன் செய்து "அவரோட(என் சொந்த வூட்டுக்காரோட) நீ தனியாக ஊர் சுத்தின என்று தெரிந்தது, உன்னை என்ன செய்வேன் என்றே எனக்கு தெரியாது" என்று மிரட்டுகிறான். என் தனிப்பட்ட சுதந்திரத்தில் இவன் எப்படி தலையிடலாம்.? எப்படி மிரட்டலாம்?

9. இதை எல்லாவற்றையும் விட நான் சொல்கின்ற பேச்சை கேட்காமல், உடை அணிந்து என் மானத்தை வாங்குகிறான். அதாவது, உள் ஆடைக்கு (ஜட்டி) கீழ் பேன்ட் போடுகிறான், ஏண்டா இப்படி? அசிங்கமா இருக்குடா ? ன்னு சொன்னால், "இது நியூ ஸ்டைல், நீ ஒரு கன்ட்ரி உனக்கு தெரியாது, வாயை மூடு" என்கிறான், இப்படி அவன் உடுத்தினால், எத்தனை இளம் பெண்களின் கவனம் சிதறும்?! ஒரு பெண்ணாக என்னால் இதை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. தினம் இதனால் இவனோடு பெரிய சண்டையாக இருக்கிறது. சண்டை போட்டு கத்தும் போது, தொண்டை மிகவும் வலிக்கிறது என்பது கூடுதல் தகவல். !

10. இதை தவிர்த்து தினமும் இவன் பிறந்தது முதல் இவன் துணியை நானே துவைத்து போட வேண்டியுள்ளது. (எப்போதுமெ எங்கள் வீட்டில் வேலையாள் எதற்கும் இல்லை), அவன் சாப்பிட்ட பாத்திரங்கள், அவன் சாப்பிட நான் சமைத்த பாத்திரங்கள் என்று எல்லாவற்றையும் நானே கழுவி வைக்க வேண்டியாக உள்ளது, தன் வேலையை அவனாக செய்ய வேண்டும் என்று பழக்கப்படுத்த அழைத்தால், இது எல்லாம் உன் வேலை, வீட்டில் சும்மாக படுத்து தூங்கிக்கொண்டு தானே இருக்கிறாய்? என்று கேட்டு, என்னை ஒரு டிப்பிக்கல் பெண் ஐ போல் நடத்துவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இப்படி இன்னும் பல பல கொடுமைகள் அவன் செய்து வருவதால், எனக்கு நீதி கேட்கிறேன். இப்படி ஒருவனிடம் சிக்கி என் வாழ்க்கையில் நான் இழந்த நிம்மதியை மீட்டு தர கேட்கிறேன். முதலில் நார்மலாக பிறக்காமல் சிசேரியன் செய்ய வைத்ததன் உள்நோக்கம் என்ன என்பதை கேட்டு சொல்ல கேட்கிறேன். ஒரு அம்மா என்றால் எல்லாவற்றையும் பொறுத்து போக வேண்டுமா என்ன? நான் என்ன இவனின் அடிமையா? இன்னமும் நான் அடிமையாக த்தான் என் வாழ்க்கையை தொடர வேண்டுமா? எனக்கு நியாயம் வேண்டும். எனக்கு நீதி வேண்டும்.. எனக்கு அது வேண்டும்.... இது வேண்டும்.. ..... எல்லாமே வேண்டும் !! ஏன்னா நான் ஒரு பெண்.. !!

ஆன் ரிக்வுஸ்டில் கொடுக்கப்படும் விபரங்கள் : அவன் பிறந்தது பாண்டிசேரி (தமிழ்நாடு இல்லை என்பதை கவனிக்க, இதை வைத்து அவனின் குணம் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் கணித்து அவனை திட்டலாம்), ஜாதி, அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா.. போன்றோரின் வேலை விபரங்கள், என்னுடைய வயது, படிப்பு, அதர் அன்லிமிடட் குவாலிபிகேஷன் போன்றவையும் தரப்படும், அப்போது தான் என்னை எப்படி அவன் கொடுமைப்படுத்தலாம் என்பதை கேட்க உதவும்.

தயவு செய்து எனக்கு நீதி வழங்க யாராச்சும் ஏற்பாடு செய்யுங்கள் ! நான் ஒரு பெண்ணாக இருப்பதால், நான் என்னவெல்லாம் அவனையும், அவன் அப்பாவையும் கொடுமை செய்கிறேன், செய்தேன், செய்வேன் என்பதை மட்டும் நீங்கள் எல்லாம் கேட்க மாட்டீர்கள் என்பது தெரியும் இருந்தாலும் கேட்க க்கூடாது என்பதை மிக அழுத்தமாக சொல்லிக்கொள்கிறேன்.

அணில் குட்டி அனிதா : ஹா ஹா ஹா ஹா......... இந்த அம்மணி சொல்றதை கேட்டு புள்ளக்கிட்ட மட்டும் யாரும் வந்து எதுவும் கேட்டுடாதீங்க.. துப்பறது மட்டும் இல்ல.... அடிச்சி க்கூட விரட்டுவான்.. .அம்புட்டு கடுப்பல இருக்கான் அம்மணி மேல.. .அப்புறம் உங்க இஷ்டம்..

அப்பாளிக்கா இன்னொரு மேட்டர், அம்மணி சொல்றாங்கனு நம்பி வாயத்தொறந்தீங்க. .உங்க வாயி உங்க முகத்துல இருக்காது.. ஏன்னா... புள்ளையோட அம்மா ஒரு ரவுடி.. ங்கோஓஓஓஒ !! புள்ளைய ஒரு தரம் கீழ் வீட்டில இருக்கிறவரு திட்டினாரு ன்னு போலிஸ் கம்பளென்ட் கொடுத்து உள்ள தள்ளுவேன் மிரட்டினாங்க. .அந்த அளவுக்கு புள்ளன்னா தெருவில் இறங்கி போராடுவாங்க. .அடுத்து ஒரு முறை, ஸ்கூல் ல சைன்ஸ் மிஸ் அடிச்சாங்கன்னு ஸ்கூல் ஹெட்மாஸ்டர் க்கிட்ட நேராக போயி கம்பளைட் கொடுத்து மிஸ் க்கு வார்னிங் கொடுத்து வேலை விட்டு தூக்கற அளவு செய்த நல்லவங்க... !! சோ பாத்து நீதி வழங்குங்க... உங்க நன்மைக்கு தான் சொல்றேன்

பீட்டர் தாத்ஸ் : A mother is not a person to lean on, but a person to make leaning unnecessary

Our children are our only hope for the future, but we are their only hope for their present and their future

A family is a little world created by LOVE

மயான அமைதியில் மனதின் ஓட்டம்...

ஆழ்ந்த அமைதி
சட்டென்று காணாமல் போன சத்தங்கள் !
கூர்ந்து கவனிக்கிறேன்
ஆமாம்
ஆழ்ந்த அமைதி
அதனுள்ளே நுழைய தயக்கம்
நுழையாமல் இருக்க இயலாத நிலை
தயத்தோடு உள் நுழைகிறேன்

மயான அமைதி
காதடைத்தது
கறுப்பு அப்புகிறது
இருளை கண் பழகியது..
இருள் ..இருள் ..இருள் ..

இழுத்து செல்கிறது பாதை..
மெது மெதுவாய்
வேகம் எடுக்கிறது நடை...
வேகம்...
அதிவேகம்...
ஓட்டமாய் மாறியிருந்தது...
கண்முன் தெரியாத ஓட்டம்
கால் தரையில் நிற்காத ஓட்டம்

ஏதோ ஒன்று
தள்ளிசெல்லுகிறது
வளைந்து நெளிந்து நீளும் பாதை
"ஞொய்" சத்தம் இல்ல.. !

மயான அமைதி
ஓட்டம் நிற்கவில்லை
என்ன இடம்
எங்கே செல்கிறது
எப்படி இங்கே இருக்கிறேன்
ஏன் இருக்கிறேன்
ஏன் ஓடுகிறேன்

கேள்விகள் மட்டுமே
பதில் இல்லை
பதில் விழய ஆளில்லை
எனக்கும் தெரியவில்லை
ஆனால் ஓடுகிறேன்......

கழுகு கண்

தொலைக்காட்சியில் சின்ன வயதில் அதிகமாக பார்த்த விளையாட்டு, கால்பந்து, அடுத்து டென்னிஸ். கால் பந்து என்பது குடும்பத்து விளையாட்டு எனலாம், அப்பா நன்றாக விளையாடுவார், அடுத்து பெரிய அண்ணன். அப்பா, பெரிய அண்ணனுக்கு ஒரு வயதாக இருக்கும் போதே கால்பந்து வாங்கிக்கொடுத்து, தன் விளையாட்டு ஆர்வத்தை அண்ணனிடமும் உருவாக்கியிருந்தார். அப்போதே அண்ணன் அடித்த பந்து வீட்டில் உள்ள பல்புகளை உடைந்தன என்று அப்பா சொல்லி இருக்கிறார். அதற்கு பிறகு நவீன். நவீன் அதிகமாக மேட்சஸ் விளையாடவில்லை என்றாலும், அதற்கான தேர்ச்சி வகுப்புகளுக்கு சென்றும், நேரம் கிடைக்கும் போதும் விளையாடி வருகிறான். அவனுடன் உட்கார்ந்து கால்பந்து பார்ப்பது, கேள்விகேட்டு இம்சை செய்வதும் தொடரும் நிகழ்வு.

இதில் டென்னிஸ் ணிக்கணக்காக அண்ணன்’களுனுடன் உட்கார்ந்து பார்த்திருக்கிறேன். அதில் என்னை கவர்ந்த விஷயம், பந்து வந்து விழுந்த இடங்களை ரீ-ப்ளே காட்டுவார்கள். அதில், பந்து விழந்த இடத்தில் இருந்து அது எப்படி சென்றது என்பதை கிராஃப் போட்டு காண்பிப்பார்கள். நான் வியந்தும் பார்த்த விஷயம் அது தான். டென்னிஸ்’சிற்கு அடுத்து கிரிக்கெட். இதிலும் பந்து சென்ற திசைகள் மிக துள்ளியமாக படம் பிடிக்கப்பட்டு, கணக்கிடப்பட்டு காட்டப்படும். சில சமயங்களில் பந்து விழுந்த இடத்திலிருந்து எப்படி எல்லாம் போகும் என்று பிரடிக்ட் செய்தும் காண்பிப்பார்கள்.

அப்போதே கேமரா எங்கிருக்கிறது, எத்தனை கேமராக்கள் இருக்கின்றன, எப்படி இதை படம் பிடிக்கிறார்கள், படம் பிடித்தபின்னர், கண நேரங்களில் இவற்றை எப்படி (பந்து சென்ற வழித்தடங்களை) கோடுகளாக மாற்றி காண்பிக்கிறார்கள் போன்ற கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கும். பக்கத்தில் இருப்பவர் என் வாயில் துணியை அடைத்துவிட்டு விளையாட்டை கவனித்தால் மட்டுமே அவர்களால் விளையாட்டை ரசிக்க முடியும். அந்த அளவு நொச்சுத்தனமாக என் கேள்விகள் இருக்கும். கேமிராக்கள் எங்கு வைக்கப்பட்டு இருக்கின்றன போன்றவையை தெரிந்துக்கொண்டாலும், அவை எப்படி இப்படி மாற்றப்படுகின்றன என்ற கேள்விக்கு விடை தெரியாமலே இருக்க, போன வருடத்தில் ஒரு நாள், நண்பர் ஒருவர் சிக்கியபோது கேட்டேன். அவரிடம் (கணினியில்) கேட்டுக்கொண்டு இருக்கும் அதே சமயம் நவீனிடமும் கேட்டேன். இருவருமே அப்போது Hawk Eye Technology என்று சொன்னார்கள். எந்த கேள்வி எனக்குள் எழுந்தாலும் அது நவீனுக்கு தெரிந்து இருக்கிறதா என்பதை உடனுக்குடன் தெரிந்துக்கொள்வேன். தெரியாவிட்டால் சொல்லி கொடுக்கலாம் என்றே கேட்பேன். ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடந்துவிடாமல் என் குழந்தை பார்த்துக்கொள்கிறான்.

Hawk Eye Technology என்பது கணினியில் அதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மென்பொருளின் உதவிக்கொண்டு கணக்கிட்டு செய்யக்கூடியது. இதனை Hawk-Eye Innovations Ltd என்ற கம்பெனி ஆரம்பித்து செய்துவருகிறது. இதனை Roke Manor Research Limited சேர்ந்த Romsey, Hampshire என்ற இரண்டு பொறியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். அதற்கான காணொலி செயலி (Video Processor) யை Dr Paul Hawkins and David Sherry என்ற விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.

கழுகு கண் தொழிற்நுட்பம், நான்கு அதி வேக புகைப்பட கருவிகளை வேறு வேறு இடத்தில் வைத்து இயக்கி, அதிலிருந்து பெறப்பட்ட படங்களை முக்கோண உருவாக்கம் (Triangulation) முறைப்படி கணக்கிட்டு பயன்படுத்தக்கூடிய தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட மென்பொருளின் உதவியுடன் பந்துகள் விழுந்த இடத்திலிருந்து எங்கெல்லாம் செல்ல வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை கணக்கிட்டு படங்களாக வெளியிடுகின்றன. படத்தொகுப்புகள் அதி வேக புகைப்பட கருவிகள் மூலம் எடுக்கப்படுவதால், மிகத்துள்ளியமாக பந்து விழுந்த இடத்தை படம் பிடித்துக் கொடுக்கிறது. டென்னிஸ் ஆட்டத்தில் இந்த கழுகு கண் தொழில்நுட்ப முறை பல நேரங்களில் விளையாட்டு வீரர்களுக்கு பந்து கோட்டை தொட்டு சென்றால், அது அவுட்’ டா இல்லையா என்ற சந்தேகத்தில் உதவியுள்ளது. டென்னிஸ்'ஸின் முதன்மை வீரர் ரோஜர் ஃபெடரர் க்கு மட்டும் இந்த தொழில்நுட்பம் அறவே பிடிப்பதில்லை. அமர்வு நடுவர் (Chair Umpire) சொல்லும் முடிவே போதுமானது, இது தேவையில்லை, இதில் பிழை இருக்கிறது என்ற கருத்தை கொண்டுள்ளார். அதனை வெளிப்படையாக தெரிவித்தும் உள்ளார்.

பந்தின் விட்ட அளவை பொருத்தும் இந்த முக்கோண உருவாக்க முறையில் கணக்கீடு செய்வதால், பூச்சிய புள்ளியிடங்களில் பிழை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதும் இதில் உள்ள ஒரு எதிர்மறையான விஷயம். இருந்தாலுமே அந்த பிழையின் அளவு மிக மிக சிறிய அளவில் இருப்பதால், அதை பெரிது படுத்தாமல், மேலும் பல வழிகளில் இது உதவியாகவும், உடனுக்குடன் தேவையான படத்தொகுப்புகளை நடுவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் கொடுப்பதாலும், இதனை தொடர்ந்து பயன்படுத்துவதில் எந்த எதிர்ப்பும் வரவில்லை எனலாம்.

இதனை சேனல் 4 முதன் முதலில் 2001 ஆம் வருடம் இங்கிலாந்திற்கும் பாக்கிஸ்தானிற்கும் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் உபயோகப்படுத்தியது. கிரிக்கெட் டில் பொதுவாக LBW “OUT” கொடுக்கப்படும் இடங்களில் மைதானத்தில் உள்ள நடுவர்களுக்கு சரியான முடிவை அறிவிக்க முடியாதபட்சத்தில், மூன்றாவது நடுவருக்கு அனுப்பட்டு, அவரின் முடிவு இறுதியாக அளிக்கப்படும். மூன்றாவது நடுவர், இந்த கழுகு கண் தொழிற்நுட்ப வசதியுடன் பந்து விழுந்து எகிறி, மட்டை வீச்சாளரின் (BatsMan) கால்களில் பட்டதா, மட்டையில் பட்டதா,பந்து பிட்ச் ஆன இடம், அது சென்று ஸ்டெம்பைத் தாக்குமா என்பது வரையில் துள்ளியமாக கவனித்து ஆட்டக்காரர் ஆட்டத்தை இழந்தாரா இல்லையா என்று அறிவிப்பார். நாம் இதனை "மானிட்டர் பார்த்து" என்று மிக எளிதாக நினைத்துக்கொண்டாலும், இதற்கு பின்னால் கழுகு கண் தொழில்நுட்பமே வேலை செய்கிறது.

பிற்பாடு, கிரிக்கெட், டென்னீஸ் இரண்டு விளையாட்டிலுமே இந்த தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி பிடிக்கும் படங்கள், தனிப்பட்ட முறையில் வீரர்களின் விளையாட்டு திறனை ஆராய்ந்து கொள்ளவும், அவர்கள் செய்யும் தவறுகளை துள்ளியமாக கவனித்து சரி செய்து க்கொள்ளவும் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொழில்நுட்பம் கால்பந்து விளையாட்டுக்கு தேவை இல்லை என்றாலும் கால்பந்துக்காகவும் இதனை பரிந்துரை செய்யப்பட்டதுள்ளது.

இது தவிர்த்து ஸ்னூக்கர் விளையாட்டிலும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நன்றி
படங்கள்கூகுல் ,
விபரங்கள் - கூகுல், http://www.hawkeyeinnovations.co.uk
, விக்கிபிடியா
தெகாஜிஆங்கில தொழிற்நுட்ப வார்த்தைகள் தமிழ் மொழி மாற்றம்

அணில் குட்டி அனிதா: ம்ம்ம்ம் ஒரு வழியா மண்டைய போடறதுக்குள்ள எப்படி இதை செய்யறாங்கன்னு அம்மணி கண்டுபிடிச்சிட்டாங்க.....நமக்கெல்லாம் இதுல ஒரு நல்ல விஷயம் என்னென்னா. .அம்மணிக்கு பல விஷயம் தெரியாம இருக்கறதால. .நாம எல்லாம் தப்பிச்சோம் இல்லன்னா.. இப்படி தினம் ஒரு போஸ்ட் போட்டு ஹாஹா.. எனக்கு இது தெரியும் அது தெரியும் ன்னு சீனை போட்டு நம்மை கொல்லுவாங்க. அதையும் நாம் ஹி ஹி ஹி..ன்னு சிரிச்சிக்கிட்டேஏஏஏ பொறுத்துக்கனும்.. :(

பீட்டர் தாத்ஸ் : A film is never really good unless the camera is an eye in the head of a poet

.

சுயமரியாதை

இதை பற்றி எழுத வேண்டும் என்ற நினைத்தவுடன் எனக்கு என்னைப்பற்றிய, என்னை சுற்றியுள்ளவர்கள் பற்றிய சிந்தனையும் ஒரு சேர ஆட்கொண்டன. சுயமரியாதை என்பது கேட்டு வாங்குவதா? இல்லை தானாக கிடைப்பதா? இல்லை நமக்கு இருக்கிறது/இல்லை என்று நாமே நினைத்துக்கொள்வதா? அதன் அளவுகோல் தான் என்ன?

முதலில் சுயமரியாதை என்பது என்ன? மிக எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், சுய மதிப்பீடு தான் சுய மரியாதை. நாம் நம்மை எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்து மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. நம்மை பற்றிய சுய விமர்சனங்கள், சுய அலசல்கள் தான் நமக்கு சுயமரியாதையை சொல்லி தருகிறது. சுயமரியாதை இல்லாத மனிதர்கள் இருப்பார்கள் என்று சொல்வதற்கு இல்லை ஆனால் அது தான் என்று தெரியாமல் இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. இதற்குள் தான் ஒருவரின் தன்னம்பிக்கை யும் இருக்கிறது. தன்னை பற்றி நன்கு அறிந்த ஒருவர், இதை நம்மால் செய்ய முடியும், நாம் இதற்கு தகுதியானவர் போன்றவை சுயமரியாதையை குறிக்கும். தனக்கு தகுந்த மரியாதை ஒரு இடத்திலோ, சக மனிதர்களிடமோ கிடைக்காத பட்சத்தில், அதை உணர்ந்தவர்கள், தன் சுயமரியாதை காக்க அவர்களுக்கு தான் யார் என்பதை தன் (நல்ல) செய்கைகள் மூலம் புரிய வைப்பார்கள், அல்லது புறந்தள்ளி, ஒதுங்கி, மற்றவரை காயப்படுத்தாமல், பிரச்சனை செய்யாமல் தன் சுயமரியாதையை காப்பாற்றி கொள்வார்கள். (what ever the decision, it ends with positive result)

பலரை நாம் பார்க்கிறோம், "இதுக்கு எல்லாம் நான் ஒர்த் இல்ல" என்று சொல்லுவார்கள். சுய மதிப்பீடு இருப்பவர்கள் இப்படி சொல்ல வாய்பில்லை, தன்னை சரியாக புரிந்தவர்கள், தன்னால் முடியும் என்று நினைப்பவர்களுக்கு விளையாட்டாக கூட இப்படிப்பட்ட வார்த்தைகள் வராது.

சுயமரியாதை உடைய ஒருவர் அவரை அவர் எந்த அளவு நேசிக்கிறார் என்பதை சுட்டிக்காட்டும். என்னால் முடியும், என்னால் இதை சாதிக்க முடியும் என்ற வைராக்கியம் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். தன்னை நேசிக்க தெரியாத மனிதன் மற்றவர்களை நேசித்து என்ன பலன்..?!

அன்பிற்கும் , பாசத்திற்கும் முன் இந்த சுயமரியாதை என்பது தாக்கு பிடிக்குமா? சிவசங்கரி அம்மா தொலைக்காட்சியில் பேட்டி அளித்துக்கொண்டு இருந்தார்கள், அப்போது அவரை ஒரு 70 வயதானவர் தொலைபேசியில் அழைத்தார், "அம்மா எங்களுக்கு ஒரே மகன், அவனுக்கு 15 வருடங்கள் குழந்தை இல்லை, இப்போது தான் பிறந்து இருக்கிறது, எங்களுக்கு அவனுடனே இருந்து அவனையும் குழந்தையையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவலும் ஆசையும் இருக்கிறது. அவனை விட்டு பிரிந்து இருக்கும் சூழ்நிலையில் இருக்கிறோம். இது எங்களுக்கு இந்த வயதான காலத்தில் மிகுந்த வேதனை அளிக்கிறது ஆனால் என் மருமகளுக்கு என்னை பிடிக்கவில்லை. என்று முடித்தார்.

நம்மை பிடிக்காத ஒரு இடத்தில், பிடிக்காத ஒருவரிடம், நம்முடைய சுயமரியாதையை இழந்து இருக்க வேண்டுமா? ஒரே மகன் தான், ஆனால் அவனுடைய வாழ்க்கை மனைவியை சார்ந்து உள்ளது, பெற்றவர்களை வைத்துக்கொள்ள அவன் ஆசைப்பட்டாலும் மனைவிக்கு பிடிக்கவில்லை.. மனைவியின் பெற்றோர் அவனுடன் இருக்கின்றனர். இதில் அந்த மகனின் நிலையை விட, அவனின் பெற்றோரின் நிலை மோசம் . இப்படிப்பட்ட குடும்ப சூழலில் பிடிக்காத மருமகளிடம் இருப்பதை விட தனியாக இருந்தால் தானே அவர்களின் சுயமரியாதை காப்பாற்றப்படும்?!

பாசத்தையும் நேசத்தையும் விட... ஒரு மனிதனுக்கு சுயமரியாதை முக்கியமாக பல நேரங்களில் இருந்து விடுவது தான் நடைமுறை வாழ்க்கையில் நடந்து வருகிறது..அதை தாண்டி சுயமரியாதை பார்க்காமல் தன்னை இழந்து மற்றவர்களிடம் வளைந்து கொடுத்து அன்பு செலுத்துபவர் யாருமே அவர்களுக்குள் சந்தோஷமாக இருக்கமாட்டார்கள். இது மற்றவர்களுக்காக செய்ய வேண்டிய கடமை யில் ஒன்றாக சேர்ந்துவிடுமே அன்றி தனக்காக வாழ்ந்ததாகிவிடாது.

அணில் குட்டி அனிதா : நான் கடிச்ச அந்த கொய்யாபழம் மேல சத்தியமா.....சொல்றேன்.... எனக்கு எதுவும் பிரியல. .உங்களுக்கு பிரிஞ்சா...கவி ய பிரிச்சி மேஞ்சிட்டு போவீங்களாம்.....

பீட்டர் தாத்ஸ் :
If you want to be respected by others the great thing is to respect yourself. Only by that, only by self-respect will you compel others to respect you

Self-respect is the fruit of discipline; the sense of dignity grows with the ability to say no to oneself.”

Respect your efforts, respect yourself. Self-respect leads to self-discipline. When you have both firmly under your belt, that's real power.”

.

எங்க வீட்டு சமையல் : நீர் உருண்டை

நீர் உருண்டை : -

தேவையான பொருட்கள் :
பச்சரிசிமாவு : 2 கப்
கடுகு : 1/4 டீஸ்பூன்
உளத்தம் பருப்பு: 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு : 1/2 பிடி
இஞ்சி: பொடியாக நறுக்கியது 1 சின்ன துண்டு
பச்சைமிளகாய்: 2 பொடியாக நறுக்கியது
தேங்காய்: 1/2 படி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கியது
நல்லண்ணெய்: 1/2 கரண்டி
கருவேப்பிலை சிறிது
உப்பு தேவையானளவு

செய்முறை :
வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், கடுகு, உளத்தபருப்பு, கடலைபருப்பு போட்டு தாளித்து லேசாக சிவந்தவுடன், இஞ்சி, பச்சைமிளகாய், கருவேப்பிலை போட்டு வதக்கி, கடைசியில் தேங்காய் போட்டு, மாவை உப்பு சேர்த்து கொட்டி வதக்க வேண்டும், கொஞ்சம் வதங்கியபின்பு, தேவையான அளவு தண்ணீர் உற்றி கட்டி இல்லாமல் கிளரிக்கொண்டே இருக்கவேண்டும், மாவு, உருண்டைகள் பிடிக்கும் அளவு கெட்டியானவுடன் இறக்கிவிடலாம்.

இட்லி பாத்திரம் வைத்து, மாவை சிறு உருண்டைகளாக கொழுக்கட்டை போன்றோ, வட்ட வடிவமாகவோ உருட்டி ஆவியில் வேகவைத்து எடுக்கவேண்டும்.

இதற்கு தேங்காய் கார சட்னி தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். எண்ணெய் விட்டு, கடுகு, உளத்தம்பருப்பு, கருவேப்பிலை, காய்ந்தமிளகாய்,பூண்டு
தாளித்து, தேங்காயோடு, புளி, உப்பு சேர்த்து அரைத்தால் கார சட்னி ரெடி.

எண்ணெய் கத்திரிக்காய் காரக்குழம்பு :

தேவையான பொருட்கள் :
கத்திரிக்காய் : 4 (விதையில்லாத)
புளி : சிறிய எலுமிச்சை அளவு
நாட்டு தக்காளி : 1
சின்ன வெங்காயம் : 8
பூண்டு - 8 பல்
வடகம்* : 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை
தேங்காய் அரைத்தவிழுது : 1/2 கப்
மிளகாய் தூள் : 3 ஸ்பூன் (தனியா மிளகாய் சேர்ந்த தூள்)
மஞ்சள் பொடி : சிறிது
உப்பு : தேவையான அளவு
நல்லண்ணெய் : 1/2 கரண்டி

செய்முறை :-
புளி ஊறவைத்து கரைத்து வடிக்கட்டி, அதில் மிளகாய்தூள், மஞ்சத்தூள், உப்பு சேர்த்து வைத்துக்கொள்ளவேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, வடகம் இட்டு பொரிந்தவுடன், நசுக்கிய பூண்டு போட்டு வதக்கவும், சிவந்தவுடன் நறுக்கிய வெங்காயம் போடவும், பிறகு தக்காளியும் போட்டு வதங்கியவுடன் குறுக்கில் + போல் வெட்டிய கத்திரிக்காய், கருவேப்பிலை போட்டு நன்கு வதக்கி, கூட்டிவைத்துள்ள புளிக்கரைசலை அதில் ஊற்றி கொதிக்கவிட வேண்டும். எண்ணெய் மேல் வரும் வரை கொதிக்கவேண்டும். பின் தேங்காய் ஊற்றி இறக்கிவிடலாம்.

வடகம் : இது தாளிப்பதற்காக வருடத்திற்கு ஒரு முறை செய்து வெயிலில் காயவைத்து உருண்டைகளாக்கி வைத்துக்கொள்வார்கள். எங்களது வீட்டில் சாம்பார், காரக்குழம்பு, பொரித்த குழம்பிற்கு இதை போட்டு த்தான் தாளிப்போம். செய்முறை மிகவும் சிரமம். ஒரே நாளில் வருடத்திற்கு தேவையான (5- 10 கி இருக்கும்) வெங்காயம், பூண்டு உரித்து, அதை உரலில் போட்டு உலக்கையால் குத்தி, அத்துடன் கருவேப்பிலை, கடுகு, உளத்தம்பருப்பு, வெந்தயம்,சீரகம் எல்லாம் சேர்த்து பிசைந்து வெயிலில் வைப்பார்கள். இதற்கு நாட்கள் எத்தனை என்று தெரியவில்லை. இது காயந்தவுடன் விளக்கெண்ணெய் ஊற்றி பிடித்து உருண்டையகளாக்கி கத்திரி வெயிலில் 16-21 நாள் வரை தினமும் வைத்து எடுத்து பதப்படுத்துவார்கள்.

இதுவரையில் தனியாக இதை நான் செய்தது இல்லை. காரணம், தவறாமல் வெயிலில் வைத்து எடுக்க வேண்டும், ஒரு நாள் கூட விடக்கூடாது, வேலைக்கு சென்றுக்கொண்டு இதை மட்டும் சரியாக என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லை. அதுவும் உலக்கை, உரல் போன்றவை வீட்டில் இல்லை. அதனால், இன்று வரையில் ஓசி மங்களம் பாடி வருகிறேன். ஆயா இருந்தவரை ஆயா செய்து கொடுத்தார்கள். இப்போது ஓரகத்திகள் செய்து கொடுக்கிறார்கள். அங்கு சென்றால், வெட்க ப்படாமல் 4-5 உருண்டைகள் வாங்கி வந்து விடுவேன்.

அணில் குட்டி அனிதா : சமையலாஆஆஆஆ???? என்ன தீடீர்ன்னு...???? எழுத ஒன்னும் மேட்டர் இல்லையோ அம்மணிக்கு......?!!

பீட்டர் தாத்ஸ் :“Good painting is like good cooking: it can be tasted, but not explained”