நாம் வாழ்ந்த நாட்களில் இப்படியொரு வைரஸ் தாக்குதலால் எப்போதும் இல்லாதளவு, அழிக்க மருந்தில்லாமல் உலகமே தவித்தது என்பதை நாமும் எழுதி வைக்கனும்னு என்ற நினைப்ப இன்று தான் வந்தது.
கொரோனா ஆரம்பித்தவுடனேயே வாட்சப் ஃபார்வேர்ட் பிரச்சனையும் ஆரம்பித்துவிட்டது. கொரோனாவே தேவலைங்கற அளவிற்கு மக்கள் வாட்சப்பில் ஒரு ஆட்டம் ஆடிவிட்டனர்.
அப்படி வந்த வாட்சப் ஃபார்வேர்டுகளில் என் கவனத்தை ஈர்த்தது படத்திலுள்ள இந்த 1914 வருட மருத்துவ புத்தகமும் மருத்துவ குறிப்பும் அதில் கொரோனா என்ற பெயரும்.
உடனே நம்ம கூகுளின் உதவியை நாடினேன்.. தமிழ் வைத்தியப்புத்தகத்தில், 1914 என்று இருந்தாலும், கூகுளில் '1918 ல் கப்பல் வழியாக இந்தியா திரும்பிய ராணுவத்தினர் மும்பையில்
இறங்கினார்கள். இவர்கள் வழியே இந்தியா வந்த அந்த காய்ச்சலால் 1918 ஜூன்
மாதம் பலரும் பலியானார்கள். அதைத் தொடர்ந்து மீண்டும் செப்டம்பர் மாதத்தில்
வேகமாகப் பரவத் தொடங்கிய
இந்தக் காய்ச்சல் தென் இந்திய கடற்கரை முழுவதும் பரவியது. இந்த காய்ச்சலால் இந்தியாவில் சுமார் 1.8 கோடி மக்கள் பலியாகினர். இந்த எண்ணிக்கை முதலாம் உலகப் போரில் உயிரிழந்த நபர்களைவிட அதிகமாகும். இந்திய மக்கள் தொகையில் 6 சதவீதம் மக்கள் உயிரிழந்தார்கள். இதில் ஆண்களை விடப் பெண்களே அதிகம் இறந்தனர்." போன்ற கொரோனாவின் வரலாறு தெரிந்தது.
என்ன பெருமைன்னா, தமிழன் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து அதை பயன்படுத்தி வந்துள்ளான் என்ற அறிய செய்திதான்.
கொரோனா - நான் புரிந்துக்கொண்ட வகையில், சளி, தலைவலி, காய்ச்சலில் ஆரம்பித்து மூச்சு திணறலில் தொடர்ந்து, ஆளை முடக்கிவிடுகிறது.இன்னும் மருந்து கண்டுப்பிடிக்கல, உலகம் முழுக்க மக்கள் உயிர் போய்க்கொண்டே இருக்கிறது, காற்றின் மூலமும், நோயாளிகள் தொட்ட இடங்களை மற்றவர்கள் தொடும் போதும் எளிதாக பரவுகிறது.இப்படியான நோயைப்பற்றிய குறிப்புகுள், அதைத்தொடர்ந்த செய்திகளும், செளக்கிதாரின் பெல் அடித்த, விளக்குப்பிடிச்ச டாஸ்களும் அனைவரும் அறிந்ததே.
இந்த நோயைத்தொடர்ந்து, தமிழர்களின் சில அன்றாட பழக்க வழக்கங்களை குறிப்பிட வேண்டுயுள்ளது.
தினப்படி விடியற்காலை வாசல் பெருக்கி, சாணி கரைத்து தெளித்தல். வீட்டினை சாணியால் மொழுகுதல். காலம் மாற மாற வாசலில் மட்டும் சாணி தெளித்தல் தொடர்ந்தது, சாணி மறைந்தாலும் இன்று வரை , அடுக்குமாடி குடியிருப்பு வாசல்கள் முதற்கொண்டு, காலையில் முதல் வேலையாக தண்ணீரால் சுத்தம் செய்து கோலம் போட்டு வருகிறோம்---இதன் அடிப்படைக்காரணம் கிருமிகளும், அசுத்தங்களையும் வீட்டினுள் வராமல் தடுத்தல். சுற்றுபுரத்தை சுத்தமாக வைத்திருத்தல், இதிலேயே பாதி வியாதிகளை நம்மால் தடுக்கமுடியும்.
அறிவுகாலில் மஞ்சள் பூசி, குங்குமம் வைப்பாங்க. - மஞ்சளைத்தாண்டி எந்தக்கிருமியும் வராது, பூச்சிப்பொட்டு எதும் அண்டாது.
வீட்டை செவ்வாய் , வெள்ளி, அமாவாசை, கிருத்திகை, பண்டிகைகள் என தொடர்ந்து கழுவி சுத்தம் செய்தலை தொடர் பழக்கமாக இன்றுவரை அனைவரும் கடைப்பிடிக்கிறோம். ---- குஜராத், மும்பை, கொல்கத்தா, கேரளா இப்படி பல மாநிலங்களில் வேலை சம்பந்தமாக வருடக்கணக்கில் தங்கியிருக்கிறோம். யாருக்கும் இப்படியான பழக்கங்கள் இல்லை. குறிப்பாக வட இந்தியாவில் கோயில்கள் கூட கால் வைக்க வழங்காது.
சாமி கும்பிட ஏற்றும் தீபம், சாம்ப்ரானி, மா- இலை தோரணம் இத்தியாதிகள் என அனைத்து செயல்களுக்கும் ஒரு மருத்துவக் காரணம் இருக்கவே செய்கிறது.
தமிழன், அந்த காலத்திலேயே சுகாதாரமான, சுத்தமான வாழ்க்கைமுறையை கடைப்பிடித்தது, இதுப்போன்ற நோய் தொற்றுலிருந்து தன்னை காத்துக் கொள்ளவும், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவுமே என்பது தெள்ளத்தெளிவு.
இதுப்போலவே தமிழனின் உணவு பழக்கம், விரதம் இருந்தல், எந்த நேரத்தில் எதை சாப்பிடனும், எந்த உணவோடு எதை சாப்பிடக்கூடாது, எதில் எதிர்ப்பு சக்தி அதிகம், எதை அறவே ஒதுக்க வேண்டும், வாழையிலை சாப்பாடு, சாப்பாட்டிற்கு பிறகு தாம்பூலம் என சொல்லிக்கிட்டே போகலாம்.
இதில் இந்த வாசல்கால் மஞ்சள் பூசுதல் மட்டும், எனக்கு திருமணமாகி எங்களின் வீடு என வந்தப்பிறகு தேவையில்லாத ஆணி, பார்க்க நல்லாயில்லயென செய்ததேயில்லை. இனி, இதை செய்ய வேண்டுமென நினைத்திருக்கிறேன்.
கொரோன;- உலகம் முழுக்க அனைவரும் -தனித்திருத்தல், விலகியிருத்தல், முகக்கவசம் அணிதல், மொத்தமாகவே அலுவலகம் அத்தனையும் மூடப்பட்ட நிலை, வீட்டிலிருந்தபடி வேலைப்பார்ப்பது, ரயில், பேருந்து , விமானம் என எந்த வாகனங்களும் ஓடாமல் இருப்பது என எல்லாமே புதுசு, இத்தனை ஆண்டுகளில் அனுபவப்படாதது, ஆச்சரியம் & பயம், ஆயாசம்.
தவிர, பறவைகள், விலங்குகள், மனிதனைத்தவிர மற்ற உயிர்கள் அனைத்தும் சுதந்தரமாக உலாவருகின்றன. உலகம் முழுதும் வாகனப்புகை இல்லாமல் ஓசோன் ஓட்டையே அடைய ஆரம்பித்திருக்கிறது போன்ற செய்திகள் சிரமாம சூழலில் சந்தோஷத்தை தந்ததாலும், திரும்ப மனித நடமாட்டம் வந்தவுடன், இந்த பறவைகளும், விலங்குகளும் நிலை குலைந்து போகுமே என்ற எண்ணம் மனதை பிசைகிறது.
அன்றாடம் பொருளீட்டி அதில் சாப்பிடும் மக்களின் நிலையும், ஆதரவற்றோர் இல்லங்களில் வசிக்கும் குழந்தைகள் முதியோரின் நிலையும் கேள்விக்கிடமாக இருப்பதும் வேதனை அளிக்கிறது.
சில பல வருடங்களாகவே மத்திய மாநில அரசுகளின் போக்கு, இதுப்போன்ற தருணங்களில் இதுவரை மற்றவர்களுக்கு உதவியதுப்போல இப்போது உதவ தோணவில்லை. இவ்வரசுகளின் மேலுள்ள வெறுப்பு, மேலும் இவ்வரசுகளால் நமக்கும் நாளை என்ன கதியாகுமோ.... என்ற ஒருவித பதட்டத்தோடே நாட்கள் நகருகின்றன.