
இப்போது தங்கியிருக்குமிடத்தில் 'இரை' என்ற சொல்லின் அர்த்தத்தை & தேவையை உணர்த்தியிருக்கு. சுற்றி ஒவ்வொரு உயிரினமும், தான் வாழ, மற்ற உயிரினத்தை அழித்தவாரே இருக்கிறது. அதன் அன்றாட தேவையே 'தனக்கு தேவையான உணவை - இரையை தேடிப்பிடித்து உயிருடனோ, கொன்றோ தின்பது தான்.
Discovery, Animal Planet n National Geo Channels பார்ப்பதை நேரடியாக இங்கே பார்க்கிறேன்.மரங்கள் காற்றுக்கு தலையசைத்து ஆடும் போது கிளம்பும் சத்தமும், பறவைகள் , பூச்சிகள் & தவளை எழுப்பும் ஒலியும் BGM.
என்ன .....புலி சிங்கம் கரடி யானை னு பெரிய விலங்குகள் இல்லை. ஆனால் அவற்றிக்கு சற்றேனும் குறையாத விதவிதமான பறவைகள், பாம்புகள், பூச்சிகள், வண்டுகள், குளவி, தேனி, ஈசல், 10-15 செ.மீ நீளமுள்ள கம்பளிப்பூச்சி, தவளை, தேரை, நத்தை, அட்டை, மண்புழு, எலி, அரணை, ஓனாண் விதவிதமான அளவில் சிலந்திகள், மரவட்டை, பூரான்,கருப்பு பல்லி (இது தோட்டத்தில் மட்டுமே இருக்கிறது,வீட்டிற்குள் வருவதில்லை),தேள், நட்டுவாக்கிலி, செய்யான் பாம்பு நண்டு, மீன், பட்டாம்பூச்சி, தும்பி, கழுகு, பருந்து, கொக்கு, நாரை வகைகள், வெளிநாட்டு பறவைகள், செல் பூச்சி (கறையான்), கரப்பான்பூச்சி, கட்டெரும்பு வகைகள், மயில்கள், உடும்பு, கீரி, ஓநாய், ஆமை.... னு...ஸ்ஸ்ப்பா மூச்சு வாங்குது.. இன்னும் பெயர் தெரியா ஜீவராசிகள், கூடவே பெயர் தெரியாத விதவிதமான செடி கொடிகள் மரங்கள்.

தினப்படி இவற்றில் அநேகமானதை சந்திச்சி, கடிவாங்கி (பொதுவா பூச்சி வகையறாக்கள் தான்), அது பெருசு பெருசா வீங்கி, மருத்துவர் கிட்ட ஓடி, ஊசியப்போட்டுன்னு .... தொடர்ந்து நடந்துக்கிட்டு இருக்கு. ஒரு மனுஷி எத்தன தடவதான் ஊசிப்போட்டுக்கறது அலர்ஜி மாத்திரைய முழுங்கறது? ..சரி என் கதையை அப்புறம் பாக்கலாம். இப்ப இரை'க்கு வருவோம்.
இதுல மேல சொன்ன எல்லாமே ஒன்றை ஒன்று அடிச்சி புடிச்சி கடிச்சி ன்னு தான் உயிர்வாழ்கிறது. அப்படியான ஒரு இயற்கை சுழற்சி அத்தியாவசியமானது. குறிப்பாக மனிதனின் வாழ்வாதாரத்திற்கு மிக மிக அவசியமானது. மனிதனுக்கு இயற்கை ஒரு வரம், இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை அதைவிடப் பெரிய வரம்.



இதுல என்ன சுவாரசியம்னா, எப்படி ஒரு புலியோ, சிங்கமோ மானை துரத்திப்பிடிக்க வெறித்தனத்தோடு ஓடுதோ..அதனிடமிருந்து தப்பிக்க மான் எப்படி உசுர கையில பிடிச்சிட்டு ஓடுதோ.... அந்த வெறித்தனத்தை இங்க ஒவ்வொரு உயிரனமும் அதன் இரையைத்தேடி பிடிக்கும் போது பார்க்கமுடிகிறது. வேகம், வெறித்தனம், விட்டுட்டா நாம பட்டினி, திரும்ப இப்படியொரு வாய்ப்பு கிடைக்காது ங்கற மாதிரி தான் துரத்திப்பிடிக்கின்றன. தன்னை எதிரியிடமிருந்து காத்துக்கொள்ள நினைக்கும் உயிரனங்களும் முடிந்தளவு உயிர் போகும் வரை போராடுகின்றன...


இது போன்ற இயற்கை சுழற்சியில், ஒன்றை ஒன்று சார்ந்த எல்லா ஜீவராசிகளின் இனப்பெருக்குமும் நிச்சயம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அவைக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வரை மனிதனுக்கு இயற்கை சார்ந்த பிரச்சனைகள் வராமல் இருக்கும். இது மனிதனுக்கு சுற்று சூழல் சார்ந்த காவல்.
Picture Courtesy : Thx Google.