நவீன் : கழுதைக்கு எதுக்கு காரூ ? வாங்கி த்தர முடியாது !
கவி : ஆங்ங்ங்ங்.......
************
கவி : (இரவு லைட் எல்லாம் நிறுத்திட்டு படுத்தப்பிறகு, ஒரு 10 நிமிஷம் கழித்து) மொட்டு, இந்த ஜன்னல் பக்கமும்தான் பின்னாடி வீடு கட்டியிருக்காங்க, இந்த ரூம் நல்லா வெளிச்சமாதான் இருக்கு, கிச்சன்
பக்கம் கட்டற பில்டிங் ல அவங்க இதே மாதிரி லைட் கலர் பெயிண்ட் அடிச்சிட்டா
கிச்சனும் வெளிச்சமா இருக்கும். வாட் யூ சே..?!! அம்மா சரியா யோசிக்கிறேனா?நவீன் : தூங்கும் போது..... மூளையயும் தூங்கவச்சிட்டு தூங்கு...... அது தனியா வேல செய்துப்பாரு....
கவி : ஸ்ஸ்ஸ்....
***********
கவி :: அப்பா வரார்டா... அவர் சொன்ன வேலையெல்லாம் முடிச்சிட்டியா?நவீன் : எப்ப வரார்..?
கவி : வெள்ளிக்கிழமை ராத்திரி இங்க இருப்பாரு...
நவீன் : அவர் வரத்துக்குள்ள முடிச்சிடுவேன்.
கவி : அடேய்..2 மாசமா இப்படியே சொல்ற..ஆனா வேல நடக்கல.. அவர் வந்து கேட்டா என்னடா செய்வேன்..?
நவீன் : ஹா ஹா ஹா...எப்படியும் என்னைக்கேக்க மாட்டார், உன்னைக்கேட்டு, உன்னதான் திட்டப்போறாரு... நான் ஏன் கவலப்படனும்...
கவி :.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
************
கவி : (இரவு 9 மணி இருக்கும் ) இந்த நேரத்தில் எங்க கிளம்பர.. இப்ப அவரு ஏன்னு கேப்பாரு, தினம் இப்படிதான் போறானான்னு கேப்பாரு...
நவீன் :உன்னை பாத்துக்க, இன்னைக்கு 'கட்டப்பா இருக்கையில், இந்த பாகுபலி எதற்கு...?! '
கவி: ஸ்ப்பஆ..... ........... ! அவர் ரூமைவிட்டு வரத்துக்குள்ள கெளம்பித்தொல...
நவீன் : அந்த பயம் இருக்கட்டும் !! :)))))))
கவி; ..........
********
கவி; கேமரா சரியில்ல.. கொஞ்சம் சரி செய்து தாயேன்..
நவீன் ; எத்தன மாஸ்டர் வாங்கியிருக்க..
கவி; அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல
நவீன் ; கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு...எத்தன மாஸ்டர்..
கவி : .................
நவீன்; MFT, MBA.....ஹ்ம்ம் ............இன்னொன்னு என்ன..
கவி; Masters in Sociology
நவீன் ; ஆஹான்.. ஆனா நான் ஒரே ஒரு மாஸ்டர் தான்.. உன்னைவிட கம்மியாத்தான் படிச்சியிருக்கேன்..உன்னைவிட அறிவும் கம்மி.... நீயே சரிப்பண்ணிக்கோ...
கவி; போடாங்க...
**********
நவீன் ; குண்டாகிட்டே போறியே உனக்கு வெக்கமா இல்ல
கவி; ம்ம் இருக்கு... ஆனா ஏதோ பிரச்சனை.. ஆப்ரேஷனுக்கு அப்புறம், உடம்பு நான் செய்யற எதுக்கும் ரெஸ்பான்ட் செய்ய மாட்டேங்குது...
நவீன் ; இப்படி சொல்லிக்கிட்டே நல்லா குண்டாகிட்டேப்போ ..ஒரு நாள் வீல் சேர் தான்...
கவி ; ஞே !!!
*******
நவீன் ; அம்மா.. கேமரா வ சரிப்பண்ணிட்டியா...
கவி ; ப்ப்ச்.. இல்ல..அதான் எப்படின்னு படிச்சிக்கிட்டு இருக்கேன்..
நவீன் ; ஹா ஹா ஹா ஹா...படிப்படி... நல்லாப் படி..
கவி; 7.5 ........ கிளம்புடா...
நவீன் : ஹா ஹா ஹா.. டென்ஷன் ஆவறப்போல..
கவி; ஸ்ஸ்ஸ்ஸ்.......
***********
கவி ; மதர்ஸ் டெ' க்கு அம்மாவ எங்க கூட்டிட்டு போகப்போற.......
நவீன் ; திருவாரூர் ;)))))))))))
கவி ; அடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.............. ;))))))))))
***************
கவி ; மதர்ஸ் டெ' க்கு அம்மாவ எங்க கூட்டிட்டு போகப்போற.......
நவீன் ; திருவாரூர் ;)))))))))))
கவி ; அடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.............. ;))))))))))
***************
பீட்டர் தாத்ஸ் ; The eternal love between man and woman really exists! It`s the love between mother and her son.