டிம்மர்
டெவில் (Dimer Devil) மேற்கு வங்கத்தின்
மிக பிரசித்திப்பெற்ற முட்டையில் செய்யப்படும் சிற்றூண்டி.
இங்க
பொதுவாக எதையும் கடையில்
வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து, செய்முறை
தெரிந்துக்கொண்டு, வீட்டில்
செய்து சாப்பிட்டால் நல்லது.
காரணம் ஒன்று சுத்தமின்மை,
இரண்டாவது பலமுறை
பயன்படுத்தப்பட்ட எண்ணெய்.
ஒருமுறை பொரித்து
வைத்ததை நாம் கேட்டவுடன்
இன்னொரு முறை எண்ணெய்யில்
போட்டு சூடாக்கி தருவது
இவர்களின் வழக்கம், அதனால்,
அதிகளவில் அது எண்ணெய்
இழுத்துக்கொண்டு வரும்.
நம்மூர் மாதிரி பச்சக்
கச்சக்னு பேப்பரில் அமுக்கி
எண்ணெய் எடுத்து சாப்பிடமுடியாது.
ஏனென்றால், அநேகமாக
எல்லாமே உருண்டை வடிவில்
இருக்கும், அல்லது
சிக்கன், முட்டை,
மீனில் செய்யப்பட்டவை,
அமுக்கினால்
சாப்பிடமுடியாதளவு விண்டு
தனித்தனியாகவிடும்..
தேவையான
பொருட்கள் :
சீரகம்
: 1/2 ஸ்பூன்
இஞ்சி
பூண்டு விழுது : 1 ஸ்பூன்
மிளகாய்
தூள் 1 ஸ்பூன்
தனியா
தூள் 1 ஸ்பூன்
சீரகப்பொடி
: 1 ஸ்பூன்
மஞ்சள்
பொடி : 1/2 ஸ்பூன்
கரம் மசாலா
: 1 ஸ்பூன்
பச்சை
மிளகாய் : 1
வெங்காயம்:
2
உருளைக்கிழங்கு:
3
முட்டை
: 4
பிரட்
தூள் : ஒரு கைப்பிடி
உப்பு :
தேவைக்கேற்ப
எண்ணெய்
: தேவைக்கேற்ப
கொத்தமல்லி-
பொடியாக நறுக்கியது
ஒரு கைப்பிடிளவு
செய்முறை
:
- வாணலில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் சீரகம் சேர்ந்துபொரிந்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- மிளகாய், தனியா, சீரகம், கரம் மசாலா, மஞ்சள் பொடிகளை சேர்த்து நன்கு கலக்கி வதக்கவும்
- வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கை கொட்டி, உப்பு, கொத்தமல்லி சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி, இறக்கி வைத்துவிடவும்
- 3 வேகவைத்த முட்டைகளை பாதியாக வெட்டிக்கொண்டு அதனை மேற்சொன்ன உருளை மசாலைக்கொண்டு ஒரு லேயர் நிரப்பி உருண்டையாக பிடித்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு தட்டில் மீதமுள்ள ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும்
- பிடித்துவைத்த உருண்டைகளை அதில் பிரட்டி, மற்றொரு தட்டில் பரப்பிவைத்துள்ள பிரட் துகள்களில் பிரட்டி, எண்ணெய் காயவைத்து அதில் போட்டு பொன்னிறாமாக பொரித்து எடுக்கவும்
- தக்காளி சாஸ்ஸாடு சூடாக பரிமாறவும்.
மேற்குவங்கத்தின்
எல்லா உணவுகளிலும் தாளிக்க
சீரகமும், மசாலாவோடு
சீரகப்பொடியும் சேர்க்கிறார்கள்.
தாளிக்க கடுகு
எண்ணெய்யும், மீன்
தயாரிக்கும் முறைகளில் கடுகை
அரைத்து விழுதாகவும்
சேர்க்கிறார்கள். இவை
செரிமானத்திற்கும், உடல்
நலத்திற்கு மிகவும் நல்லது
என்றாலும் நமக்கு கடுகு
எண்ணெய் பழக்கமில்லாததால்,
தாளிக்க நல்லெண்ணெய்யும்
பொரிக்க அவரவருக்கு பிடித்த
எண்ணெய்யும் பயன்படுத்திக்கலாம்.
இதில்
கைவசம் சீரகப்பொடியும்,கரம்
மசாலாவும் இல்லாதததால் அவற்றை
சேர்க்காமல் செய்தேன்.
சுவையில் ஏதும்
வித்தியாசம் தெரியவில்லை.
கலர் & உடலுக்கு
கெடுதியான பொருட்களை கலப்படம் செய்கிறார்கள் என்பதால்
மஞ்சள் பொடி தவிர்த்து,
சமையல் சார்ந்த எந்த
ரெடிமேட் பொடி வகைகளும்
கடையில் வாங்குவதில்லை.
எல்லாமே தேவைக்கேற்ப
மிஷினில் கொடுத்து/மிக்ஸியில் அரைத்து
வைத்துக்கொள்வேன்.
அணில் குட்டி : சாப்பாடே பிரதானம்னு வாழ்ற பெங்காலிகள் இடத்திற்கு வந்து அம்மணியும் நல்லாவே விதவிதமா கட்றாங்க... :)
பீட்டர் தாத்ஸ்: Nothing brings people together like good food