மேற்கு வங்காளத்தில் ஒரு சிறிய நகரம் "கல்யாணி"
நாங்கள் சென்ற நேரம், துர்கா பண்டிகை நெருங்கும் நேரமாக இருந்ததால், ஆங்காங்கே துர்கா சிலைகளும், விநாயகர் சிலைகளும், அது சம்பந்தப்பட்ட பல்வேறு சிலைகளும் மிக வேகமாக செய்துக்கொண்டிருந்தனர். இந்த பொம்மைத்தொழில் ஒரு குடிசைத்தொழிலாகவே செய்யப்பட்டு வருகிறது. படத்தை க்ளிக்கி பெரிதாக்கி பார்க்கவும்.
இன்று பார்க்கும் பொம்மைகள் அடுத்த நாள் அந்த கடையில் இருப்பதில்லை. கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 50 க்கும் மேற்பட்ட ஆள் உயர சிலைகள் முழுமையாக செய்யப்பட்டு விற்கப்படுவதாக கணக்கிட்டேன். என் கணிப்பு சரியா என்றும் தெரியவில்லை.
அவர்களின் அனுமதியோடு சிலைகளை புகைப்படும் எடுத்தும், அவர்கள் சிலைகளை செய்யும் முறையையும் பார்த்தேன். பொதுவாக களிமண் சிலைகள் சூலையில் இட்டு வேகவைப்பார்கள் என்றே நினைத்திருந்தேன். விநாயர் சதுர்த்தசி சிலைகள் வேறு, அவை தண்ணீரில் கரைக்கப்படுவதால், அவற்றை சூலையில் இட அவசியமில்லை. மற்றவை சூலையில் இட்டால் தானே அபிஷேகம் & மழைத்தாங்கும்?, ஆனால் துர்கா பூஜைக்கான எந்த சிலையும் அப்படி செய்வதாக தெரியவில்லை.
பொம்மைகள் செய்ய அவர்கள் அடிப்படை மூலப்பொருளாக "வைக்கோல்" பயன்படுத்துகின்றனர், அதன் பிறகே களிமண்.
=> வைக்கோல் கொண்டு எந்த உருவ பொம்மை வேண்டுமோ அதை உருவாக்குக்கின்றனர்.
=> கைகள் தனியாக வைக்கோலால் செய்யப்பட்டு சேர்க்கப்படுகின்றன
=> அதற்கு மேல் கல் நீக்கப்பட்ட நைசான களிமண் குழைத்து பூசப்பட்டு சிலைகளாக வடிவமைக்கப்படுகின்றன.
=> களிமண்ணை தண்ணீரில் குழைத்து, மெல்லிய துணிக்கொண்டு வடிக்கட்டி எடுக்கின்றனர். இப்படி எடுக்கப்பட்ட களிமண் கூழ், சிலைக்கு கடைசியாக மெருகேற்ற பயன்படுத்தப்படுகின்றன.
=> தலைகள் முழுக்க முழுக்க களிமண்ணால் தனியாக செய்யப்பட்டு கடைசியாக உடலோடு இணைக்கப்படுகிறது.
இப்படி செய்யப்பட்ட சிலைகள் உலரவைக்கப்பட்டு, நன்கு உலர்ந்தவுடன் வர்ணம் பூசப்பட்டு விற்கப்படுகின்றன.
துர்கா பூஜை' பற்றி எனக்கு எதுவும் தெரியாததால், இந்த சிலைகள் பூஜை முடிந்தவுடன் என்ன ஆகும் என்றும் தெரியவில்லை. கூகுள் ஆண்டவர் உதவியில் தெரிந்துக்கொள்ளலாம் என்றால், என் கண்ணில் எதுவும் படவில்லை.
அணில் குட்டி : ஒரு ஊருக்குப்போன, போனமா வந்தமான்னு இல்லாம, வேல செய்யற இடத்தில் உள்ளப்போய் நொய் நொய்ன்னு தெரியாத மொழிக்காரங்கக்கிட்ட, தெரியாத மொழியில் ஒன்னும் பாதியுமா ஆக்ஷனில் பேசி இம்சை செய்து ஃபோட்டோ எடுத்து........ ....இதுக்கு தான் பெத்தப்புள்ளையே... அம்மணிய வச்சி சமாளிக்க முடியாதுன்னு ஃபரான்ஸ் பக்கம் வரவேக்கூடாதுன்னு சொல்லியிருக்கான் போல...
பீட்டர் தாத்ஸ் : If art is to nourish the roots of our culture, society must set the artist free to follow his vision wherever it takes him. -John F. Kennedy