நீ பெண், நீ இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லி சொல்லி ரொம்பவும் கட்டுப்பாட்டோடு வளர்த்தார்கள். உடை இப்படித்தன் இருக்க வேண்டும். இப்படித்தான் பேசவேண்டும், பார்க்கவேண்டும், நடக்கவேண்டும், சிரிக்கவேண்டும் என்று ஒவ்வொன்றும் சொல்லிக்கொடுப்பார்கள். எதையுமே என் இஷ்டத்திற்கு செய்ததாக நினைவில்லை. ஆயாவிற்கு நான் செய்வது தவறு என்று நினைத்தால் போதும் அப்படியே விட்டு விடமாட்டார்கள், திட்டி திட்டி திட்டி, அடித்தும் கூட மாற்றுவார்கள். சத்தம் போட்டு சிரிக்கவே கூடாது.. அதுவும் தாத்தா அப்பா இருக்கும் போது சத்தமே வரக்கூடாது. பூமி அதிராமல் மெதுவாக நடக்கவேண்டும், பூமாதேவிக்கு வலிக்கும் ?! என்பார்கள். உட்காருவது பாதங்களில் இரு பக்கங்களில் வடுக்கள் வரவே கூடாது. (கீழே உட்காரும் போது தேய்ந்து தேய்ந்து கருமை நிறம் படரும்).
இதை எல்லாம் விட கொடுமை, அதிகாலை 4 மணிக்கு "பாப்பா" என்று ஒன்று அல்லது இரண்டு முறை என் தலை அருகே வந்து மெதுவாக அழைப்பார்கள், எழுந்துவிட வேண்டும். அதுவும் சத்தமே வரக்கூடாது அண்ணன்கள், அப்பா எழுந்து விடக்கூடாதாம். இரண்டு முறைக்கு மேல் கூப்பிட்டும் நான் எழவில்லை என்றால், தட்டி எழுப்பி சத்தம் வராமல் இருக்க ஒரு விரலை வாயின் மேல் வைத்து காட்டி...என்னை வெளியில் அழைத்து சென்று அதிகாலையிலே அர்ச்சனை கிடைக்கும் அதுவும் பெண் எப்படி இருக்கவேண்டும் என்ற அறிவுரை வழங்கப்படும்.. "ஆமா நீ ஏன் இப்படி ராத்திரியில நீயும் ஏன்ச்சி என்னையும் எழுப்பி உயிரை வாங்கற..என்ன தூங்க விடேன்.." என்று சொல்லுவேன்.. ஆனா ஆயா ஏன் என்னை எழுப்புகிறார்கள் என்பதற்கு திரும்பவும் ஒரு லக்சர் கொடுப்பார்கள்.. அவங்க லக்சரை கேட்பதற்கு பதில் 4 மணி என்ன 2 மணிக்கு கூட எழுந்து வேலை செய்யலாம் என்று தோன்றும்.
உடைக்கு வருகிறேன். அரைப்பாவாடை என்பது முழுங்காலுக்கு கீழ் இருக்கும் படி அளவு வைத்து தைப்பார்கள். "ஆயா எல்லாரும் அழகா முட்டி வரை போட்டு இருக்காங்க எனக்கு மட்டும் முக்கா பாவாடை தைத்து தரீங்க.. எனக்கு பிடிக்கலை " என்பேன்." "முட்டிக்கு கீழ் தான் பாவாடை போட வேண்டும். ஆசிரியர் கிட்ட வேணும்னா நான் வந்து பேசறேன்..அடம் பிடிக்காத இதை பழகிக்கோ..." என்பார்கள். ஆனா எனக்கு ஸ்கர்ட் முட்டிக்கு மேல் போட்டுக்கொள்ள ரொம்ப ஆசையாக இருக்கும். போடுபவர்களை பார்க்க பார்க்க பொறாமையாக இருக்கும்.
வாலிபால் குழுவில் இருக்கும் போது விக்கரவாண்டி'க்கு ஒரு முறை அழைத்து சென்றார்கள், குட்டி ஸ்கர்ட் போட்டால் தான் தடுக்காமல் விளையாட முடியும், ஆனால் என்னிடம் இல்லை, தோழி ஒருத்தியிடம் கேட்டு நீலக்கலர் குட்டி ஸ்கர்ட் வாங்கி வைத்துக்கொண்டேன். குறிப்பாக இந்த குட்டி ஸ்கர்ட் போடுகிறேன் என்று தெரிந்தால் விளையாடவே அனுப்ப மாட்டார்கள். வயது வந்த பெண்ணை வெளியூர் அனுப்ப எல்லாம் வழியே இல்லை. வீட்டில் யாருக்கும் தெரியாது. தாத்தா'விற்கும் அப்பாவிற்கும் நான் வாலிபால் ஆடுவது தெரிந்தாலும் இப்படி ஸ்கர்ட் போட்டு ஆடுகிறேன் என்று தெரியவே தெரியாது. வெளியூர் என்றால் விடமாட்டார்கள். ஆயாவிடம் மட்டும் ப்ர்மிஷன் வாங்கிவிட்டேன்..அப்பாவிற்கும், தாத்தாவிற்கு தெரியாமல் ஆயா பார்த்துக்கொள்வார்கள். எப்படியும் இரவு்க்குள் திரும்பி வந்துவிடலாம்.
வாங்கி வைத்திருந்த ஸ்கர்ட் விக்கரவாண்டியில் நாங்கள் தங்க அனுமதித்த பள்ளியில் சென்று மாற்றினேன். எனக்கு ரொம்பவும் பிடித்துபோனது. "எவ்வளவு அழகாக இருக்கு ஏன் போட விடுவதில்லை..ஒரே ஆதங்கம் எனக்கு" விளையாட்டில் இருந்த கவனத்தை விட அந்த நீல நிற ஸ்கர்ட் மீது அதிக கவனம் இருந்தது. தோழிகள் அனைவரிடமும் போய்"ஏய் ஸ்கர்ட் நல்லா இருக்கா" என்று கேட்டு அசடு வழிந்தது இப்பவும் நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.
அவர்கள் வீட்டில் எல்லாம் எங்கள் வீட்டை போல் கட்டுப்பாடு இல்லை. அதனால் நான் இப்படி கேட்பதை அல்ப விஷயமாக பார்த்தார்கள். எனக்குமே அது தெரிந்திருந்தாலும் ஆர்வ கோளாரு என்ன செய்வது :) சின்ன பிள்ளைதானே.. :)
ஆனால் இந்த கொடுமை எல்லாம் இப்பவும் தொடருகிறது. நான் என்ன உடை போட வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்பதை என் கணவர் கூட பரவாயில்லை என்று சொல்லுவேன் என் மகன் முடிவு செய்கிறான். என் இஷ்டம் போல இருக்க நேரம் ஆகாது ஆனால் எனக்கு எந்த உடை நன்றாக இருக்கிறது என்று நான் உணர்வதை விட, என்னை சுற்றி இருப்பவர்கள் பார்த்து எபப்டி இருக்கிறேன் எது எனக்கு அழகாக இருக்கிறது என்று சொல்லும் போது அப்படி விட்டுவிடத்தான் நினைக்கிறேன். அடம் அதிகம் பிடிப்பதில்லை என்றாலும் "என்னை பேண்ட் போட விடுவதில்லை, Full skirt போட விடுவதில்லை, தலை முடியை வெட்ட விடுவதில்லை, இந்த வீட்டில் எனக்கு சுதந்திரம் இல்லை.. " என்று சொல்லி சொல்லிக்காட்டி கொண்டே இருக்கிறேன்.
அணில் குட்டி அனிதா:- என்னாது.. .அம்மணிக்கு சுதந்திரம் இல்லையா? என்ன கொடுமை மக்களா இது?! இதை பெரிய அளவுல நாம எல்லாருமே சேர்ந்து எடுத்துக்கிட்டு போயி அவங்க புள்ளக்கிட்ட சொல்லி இந்த ப்ளாக் எழுதறதையும் அப்படியே நிறுத்த சொல்லிட்டா.. நாம எல்லாரும் பர்மெனன்ட்டா நிம்மதியா இருக்கலாம்.. என்ன நான் சொல்றது.. ஓகே வா... மீட்டிங் புள்ளையோட வச்சிடலாமா?
பிட்டர் தாத்ஸ் :- All women's dresses, in every age and country, are merely variations on the eternal struggle between the admitted desire to dress and the un-admitted desire to undress
அரை பாவாடை (Half Skirt)
Posted by : கவிதா | Kavitha
on 14:54
Labels:
பழம்-நீ
Subscribe to:
Post Comments (Atom)
43 - பார்வையிட்டவர்கள்:
"மாற்றம் ஒன்றுதான் மாறாதது" ...உங்கள் வீட்டில் உங்கள் ஆடை தீர்மானிப்பவர்கள் மாறி இருக்கிறார்கள் ..ஆடை தான் மாறவில்லை போலும்.
வணக்கம்.நீங்க பத்தி பத்தியா சொல்ற விசயங்களை அணில் குட்டி ரெண்டு வரியிலே சொல்லி பரிசை தட்டிகிட்டுப் போயிடுது எப்பவுமே:)
//மாற்றம் ஒன்றுதான் மாறாதது" //
வாங்க சுபாசு..அருமையான வரிகள் :)
ஆமாம் தீர்மானிப்பவர்கள் மாறிவிட்டார்கள்.. :)
------------------------
வாங்க ராஜ நடராஜன்.
நீங்களுமா.?!! அணில் கூட சேர்ந்துட்டீங்களா...? அணில் கடைசியா வருவதால் தப்பிச்சேன்.. இல்லன்னா முதல்ல அதை படிச்சிட்டு நான் எழுதுறத படிக்காம எல்லாரும் ஜூட் விட்டுடுவிங்க :)
மாற்றம் ஒன்றுதான் மாறாதது\\
சிறந்த வார்த்தை ...
\\பூமி அதிராமல் மெதுவாக நடக்கவேண்டும்\\
அணிலு உண்மைய சொல்லு
இது முடியற காரியமா
\\அவங்க லக்சரை கேட்பதற்கு பதில் 4 மணி என்ன 2 மணிக்கு கூட எழுந்து வேலை செய்யலாம் என்று தோன்றும்.\\
ROTFL!
\\என்னாது.. .அம்மணிக்கு சுதந்திரம் இல்லையா? என்ன கொடுமை மக்களா இது?! இதை பெரிய அளவுல நாம எல்லாருமே சேர்ந்து எடுத்துக்கிட்டு போயி அவங்க புள்ளக்கிட்ட சொல்லி இந்த ப்ளாக் எழுதறதையும் அப்படியே நிறுத்த சொல்லிட்டா.. நாம எல்லாரும் பர்மெனன்ட்டா நிம்மதியா இருக்கலாம்.. என்ன நான் சொல்றது.. ஓகே வா... மீட்டிங் புள்ளையோட வச்சிடலாமா?\\
போனப்போடுங்க மருமகனுக்கு
//போனப்போடுங்க மருமகனுக்கு//
எப்ப எப்ப ன்னு காத்துக்கிட்டு இருப்பாங்க போல..
கூட்டமாத்தான் கிளம்பறாங்கப்பா.. !! :(
ம்...
அ...
சரி..
நல்ல பதிவு..
வாழ்த்துக்கள்..
\\admitted desire to dress and the un-admitted desire to undress\\
அருமை ...
அணிலு உண்மைய சொல்லு
இது முடியற காரியமா//
ஜமால் அப்படி நடக்கலன்னா.. நம்ம உடம்பை அதிர வச்சிடுவாங்க வீட்டுல.. :) துடைப்பம் தான் முதல் ஆயுதமே.. !! :)
\\கூட்டமாத்தான் கிளம்பறாங்கப்பா.. !! :(\\
இன்னும் கூட்டத்த காணோம் ...
\\ஜமால் அப்படி நடக்கலன்னா.. நம்ம உடம்பை அதிர வச்சிடுவாங்க வீட்டுல.. :) துடைப்பம் தான் முதல் ஆயுதமே.. !! :)\\\
ஹா ஹா ஹா
ன்னு சிரிக்கதோனுது
ஆனாலும்! எவ்வளவு பெயினா சொல்லியிருக்கீங்க
//ஹா ஹா ஹா
ன்னு சிரிக்கதோனுது
ஆனாலும்! எவ்வளவு பெயினா சொல்லியிருக்கீங்க//
அட டா நீங்க சிரிங்க இதுக்கு எல்லாம் நான் அசந்து போற ஆளா ?
ஆயா விடம் அடி வாங்கிட்டே அழுதுக்கிட்டே.. நல்லா அடி நீ எவ்வளவு துடைப்பத்தால் அடிக்கறயோ அவ்வளவு பணக்காரியா ஆவேன் னு சொல்லுவேன்.. :) அவங்க இன்னும் டென்ஷன் ஆவாங்க.. :))))))
\\ஆயா விடம் அடி வாங்கிட்டே அழுதுக்கிட்டே.. நல்லா அடி நீ எவ்வளவு துடைப்பத்தால் அடிக்கறயோ அவ்வளவு பணக்காரியா ஆவேன் னு சொல்லுவேன்.. :) அவங்க இன்னும் டென்ஷன் ஆவாங்க.. :))))))\\
அட எனக்கு தான் பல்பா!
// All women's dresses, in every age and country, are merely variations on the eternal struggle between the admitted desire to dress and the un-admitted desire to undress
//
நிறைய தத்துவார்த்தமான புத்தகங்கள் படிப்பீங்க போல..
தத்துவாயினி
அக்கா
வாழ்க ...
//இதை பெரிய அளவுல நாம எல்லாருமே சேர்ந்து எடுத்துக்கிட்டு போயி அவங்க புள்ளக்கிட்ட சொல்லி இந்த ப்ளாக் எழுதறதையும் அப்படியே நிறுத்த சொல்லிட்டா.. நாம எல்லாரும் பர்மெனன்ட்டா நிம்மதியா இருக்கலாம்.. என்ன நான் சொல்றது.. ஓகே வா... மீட்டிங் புள்ளையோட வச்சிடலாமா?//
முழுமையாக வரவேற்கிறேன்!
//நீ பெண், நீ இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லி சொல்லி ரொம்பவும் கட்டுப்பாட்டோடு வளர்த்தார்கள். உடை இப்படித்தன் இருக்க வேண்டும். இப்படித்தான் பேசவேண்டும், பார்க்கவேண்டும், நடக்கவேண்டும், சிரிக்கவேண்டும் என்று ஒவ்வொன்றும் சொல்லிக்கொடுப்பார்கள்.//
அய்யோ பாவம்..
//ஆயாவிற்கு நான் செய்வது தவறு என்று நினைத்தால் போதும் அப்படியே விட்டு விடமாட்டார்கள், திட்டி திட்டி திட்டி, அடித்தும் கூட மாற்றுவார்கள்.//
உங்கள் ஆயாதான் உங்கள் சிறுவயதில் வில்லி என்று நினைக்கிறேன்.. சரியா?
எனக்கு ஒரு சந்தேகம்..
கண்டிச்சு வளர்த்தே நீங்க இப்போ இந்த ஆட்டம் போடுறீங்களே..
இதுவே.. சுதந்திரமா..யாரும் கண்டிக்காம வளர்த்திருந்தா என்னா ஆட்டம் போடுவீங்க...?!
வாழ்க உங்கள் ஆயா..!
வளர்க அவர்களது பணி..!!
//எனக்கு ஒரு சந்தேகம்..
கண்டிச்சு வளர்த்தே நீங்க இப்போ இந்த ஆட்டம் போடுறீங்களே..
இதுவே.. சுதந்திரமா..யாரும் கண்டிக்காம வளர்த்திருந்தா என்னா ஆட்டம் போடுவீங்க...?!//
முதல்ல - என்ன ஆட்டம் போட்டேன்னு சொல்லு. ..
சுதந்திரம் நிறைய கொடுத்தாங்க.. கொடுக்க வேண்டிய விஷயத்திற்கு.. :) எல்லாமே நான் தனியாக செய்ய என்னை பழக்கி வைத்திருந்தார்கள். அது போதும் இல்லையா.. சொன்ன உடை விஷயம் எல்லாம் அல்ப விஷயங்கள்.. தானே.. :)
நல்லாவே புரியுது உங்கள் வலி.
என்ன செய்வது
நமக்கும் இந்த மாதிரி சேம் ப்ளட் இருக்குது.
அடடா அமித்தும்மா.. என்ன இது எனக்கு வலி எல்லாம் இல்லவே இல்லை... எனக்கு என் ஆயா என்றால் உயிர்... அவங்க என்ன செய்தாலும் என் நன்மைக்கு ன்னு எனக்கு ஒரு தீவர நம்பிக்கை..
ஒரு காலக்கட்டத்தில் அவங்க இல்லைன்னா வாழ்க்கையே எனக்கு இல்லைன்னு கூட நினைத்ததுண்டு..
நமக்கு பிடித்தவர்கள் நமக்கு எது செய்தாலும் அது நம் நன்மைக்கே..
சத்தியமா வலி எல்லாம் இல்லைங்க.. நீங்க தவறாக புரிஞ்சிக்காதீங்க ப்ளீஸ்..
நான் அடிவாங்கியதை எல்லாம் பதிவாக முன்னமே போட்டு இருக்கேங்க.. ச்சும்மா ஒழுங்கா சொன்ன பேச்சு கேட்டு இருந்தா ஏன் அடி விழுது.. சொன்ன பேச்சு கேட்காததால நிறைய அடி கிடைச்சிருக்கு... :)
//எல்லாமே நான் தனியாக செய்ய என்னை பழக்கி வைத்திருந்தார்கள். அது போதும் இல்லையா.. சொன்ன உடை விஷயம் எல்லாம் அல்ப விஷயங்கள்.. தானே.. :)//
//சுதந்திரம் நிறைய கொடுத்தாங்க.. கொடுக்க வேண்டிய விஷயத்திற்கு.. :) //
இது அருமை
//இதை எல்லாம் விட கொடுமை, அதிகாலை 4 மணிக்கு "பாப்பா" என்று ஒன்று அல்லது இரண்டு முறை என் தலை அருகே வந்து மெதுவாக அழைப்பார்கள், எழுந்துவிட வேண்டும்.//
எழுந்து என்ன செய்வீங்க?!
//"என்னை பேண்ட் போட விடுவதில்லை, Full skirt போட விடுவதில்லை, தலை முடியை வெட்ட விடுவதில்லை, இந்த வீட்டில் எனக்கு சுதந்திரம் இல்லை.. " என்று சொல்லி சொல்லிக்காட்டி கொண்டே இருக்கிறேன்.//
ராம் சேனாவின் தலைமை இயக்கம் உங்க வீட்டுலேதான் இருக்கோ?!
juz kidding..ஆனா இது கொடுமைதான்!
அணில் குட்டி அனிதா சொல்லுறது என்னமோ சரின்னு படுது :):).
மீட்டிங் போட்டு யோசிக்க வேண்டியதுதான்
//ஆனால் இந்த கொடுமை எல்லாம் இப்பவும் தொடருகிறது. நான் என்ன உடை போட வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்பதை என் கணவர் கூட பரவாயில்லை என்று சொல்லுவேன் என் மகன் முடிவு செய்கிறான். என் இஷ்டம் போல இருக்க நேரம் ஆகாது ஆனால் எனக்கு எந்த உடை நன்றாக இருக்கிறது என்று நான் உணர்வதை விட, என்னை சுற்றி இருப்பவர்கள் பார்த்து எபப்டி இருக்கிறேன் எது எனக்கு அழகாக இருக்கிறது என்று சொல்லும் போது அப்படி விட்டுவிடத்தான் நினைக்கிறேன். அடம் அதிகம் பிடிப்பதில்லை என்றாலும் "என்னை பேண்ட் போட விடுவதில்லை, Full skirt போட விடுவதில்லை, தலை முடியை வெட்ட விடுவதில்லை, இந்த வீட்டில் எனக்கு சுதந்திரம் இல்லை.. " என்று சொல்லி சொல்லிக்காட்டி கொண்டே இருக்கிறேன்//
உங்கள் மகனிடம் கற்றுக்கொள்ள நிறைய விசயம் உள்ளது.
உடை அணிவதன் பயன் .......?
சுதந்திரம் என்பது...?
http://kalaaythal.blogspot.com/2009/03/half-trowser.html
//அணில் குட்டி அனிதா:-
என்னாது.. அம்மணிக்கு சுதந்திரம் இல்லையா? என்ன கொடுமை மக்களா இது?!
இதை பெரிய அளவுல நாம எல்லாருமே சேர்ந்து எடுத்துக்கிட்டு போயி அவங்க புள்ளக்கிட்ட சொல்லி இந்த ப்ளாக் எழுதறதையும் அப்படியே நிறுத்த சொல்லிட்டா.. நாம எல்லாரும் பர்மெனன்ட்டா நிம்மதியா இருக்கலாம்.. என்ன நான் சொல்றது..
ஓகே வா... மீட்டிங் புள்ளையோட வச்சிடலாமா?//
நாங்க சொல்ல வேண்டியதையெல்லாம் நீங்களே இப்படி சொல்லிக்கிட்டா எப்படிங்க சிஸ்டர்..?
//எழுந்து என்ன செய்வீங்க?!//
இதுக்கு தனி பதிவு போடனும் முல்லை.. :)
அவங்களால எவ்வளவு மேக்ஸிமம் வேலை வாங்கமுடியுமோ.. வாங்கிக்குவாங்க..எல்லாம் முடிஞ்சி பழக்கிவிடறேன் னு சொல்லுவாங்க.. :)
எஸ்கேப் ஆக சான்ஸ் இல்ல.. செய்ய முடியாதுன்னு சொன்னா வயசான காலத்துல அவங்க செய்வாங்க சரி.. கிழவி மண்டைய போட்டுட போகுதுன்னு பயத்துல நானும் செய்வேன்.. :)
//ராம் சேனாவின் தலைமை இயக்கம் உங்க வீட்டுலேதான் இருக்கோ?!
juz kidding..ஆனா இது கொடுமைதான்!//
முல்ஸ் எப்பவும் நாம ஒரு சைட் பார்த்துட்டு முடிவு செய்ய கூடாது.. இரண்டு பக்கமும் பக்கமும் பார்க்கனும்..
நவீன் போடற டிரஸ் ஏதாச்சும் எனக்கு பிடிக்கலன்னு வைங்க.. ஓடிபோய் "ஓவ்வேக்.." க்குன்னு அவன் ட்ரஸ் மேலேயே போய் வாந்தி எடுப்பேன்... இந்த மாதிரி எத்தனை தரம் நான் வாந்தி எடுப்பதை என் குழந்தை பொறுப்பான் சொல்லுங்க...?!! :)
(நோ நோ...முல்ஸ் கன்ரோல் யுவர்செல்ஃப்.. துப்பனும் அவ்வளோதானே. இங்க வேண்டாம்.. என்னோட ப்ளாக்'கை ரொம்ப நீட்டா மெயின்டெயின் பண்ணிக்கிட்டு வரேன்.. இங்க துப்பின்னா அசிங்கமா போயிடும்..
சோ..தனியா அப்பாயிண்ட்டு ஃபிக்ஸ் பண்ணிதரேன்..அங்க வந்து உங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு துப்பலாம்.. )
//மீட்டிங் போட்டு யோசிக்க வேண்டியதுதான்//
யோசிச்சிட்டே இருங்க.. அதுவரைக்கும் என்னால எவ்வளவு எழுத முடியுமோ அவ்வளவு எழுதிடறேன்.. :)
//உங்கள் மகனிடம் கற்றுக்கொள்ள நிறைய விசயம் உள்ளது.
உடை அணிவதன் பயன் .......?
சுதந்திரம் என்பது...?//
ரொம்ப எல்லாம் குழப்பி க்கொள்ள வேண்டாம்ங்க.. நம் பாதுக்காப்புக்கும், நம் நன்மைக்கும் சுற்றி இருக்கவங்க நம் மேல் அக்கறை எடுத்து சொல்லும் சில விஷயங்களை ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாம் எடுத்துக்கொண்டும் நடைமுறை படுத்திக்கொண்டும் போனாலே போதும்.
இந்த சுதந்திரம் எல்லாம் பேசி அர்த்தமில்லை.. சுதந்திரம் வேண்டும் என்பதற்காக நம் வாழ்க்கையை நாமே வீணாக்கி கொள்வது எல்லாம் என்னை பொறுத்தைவரை சரியில்லை. :)
//நாங்க சொல்ல வேண்டியதையெல்லாம் நீங்களே இப்படி சொல்லிக்கிட்டா எப்படிங்க சிஸ்டர்..?//
உண்மைத்தமிழன் உங்களுக்கு நேரம் மிச்சம்.. :) அதுவும் மற்றவர்களை போல் இல்லை உங்களின் எழுத்தின் நீளத்திற்கு உங்களுக்கு மற்றவர்களை விட அதிக நேரம் மிச்சம் :)
//நோ நோ...முல்ஸ் கன்ரோல் யுவர்செல்ஃப்.. துப்பனும் அவ்வளோதானே. இங்க வேண்டாம்.. என்னோட ப்ளாக்'கை ரொம்ப நீட்டா மெயின்டெயின் பண்ணிக்கிட்டு வரேன்.. இங்க துப்பின்னா அசிங்கமா போயிடும்..//
:-))))))))))))))))))
இப்படி ஆஃபீஸ்ல அநியாயத்துக்கு சிரிக்க வெக்காதிங்க
கவிதா, நல்ல அனுபவப்பகிர்வு, ஆனா, ஒரே ஒரு சந்தேகம். நான் பாத்தவரைக்கும் சென்னை, செங்கல்பட் அளவில், மாவட்ட, ஸோனல் அது இதுன்னு எல்லாப் போட்டிகள்ளையும் , லூஸ் ஸ்போர்ட்ஸ் பாண்ட்ஸ், இல்லை ஸ்போர்ட்ஸ் விமன் போடுற ஷார்ட்ஸ்தான போட்டுட்டு ஆடுவாங்க, இல்லைன்னா எப்டி ஆட முடியும்? டிரெஸ் கோட் அங்கல்லாம் வேறயா?
உடை விஷயத்தில் பெண்களுக்கு சற்று கட்டுப்பாடு வேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
அப்புறம்.. விக்கரவாண்டி ங்கிற ஊரை படிச்சவுடன், அந்த ஊருல பைபாஸ்ல இருக்கிற ஹோட்டல்தான் ஞாபகம் வந்தது. நாங்க ட்ராவல்ஸ்ல ஊருக்குப் போகும்போது, அங்கதான் நைட் டின்னருக்கு பஸ்ஸ நிறுத்துவாங்க.. யெப்பா.. அங்க சாப்பிடுறதுக்குப் பாதிலா பட்டினியாவே போயிரலாம்.. கொடுமைடா சாமி :-)
@ராப், கபடி டீம் ல இருந்தேன்.. அதுக்கு மட்டும் ஷார்ட்ஸ்.. ஸ்கர்ட்'ஐ ஈசியாக இழுத்து பிடித்துவிடுவார்கள். ஆனா காமெடியா நான் மட்டும் முக்கால் ஷார்ட்ஸ் போட்டுக்குவேன்.. :) (அண்ணாவோடது, இதுவும் வீட்டுக்கு தெரியாமல்) எங்கள் பள்ளியில் வாலிபால், ரிங்பால், த்ரோபால் விளையாட்டுக்குமே ஹாஃப் ஸ்கர்ட் தான். இப்ப மாறிப்போச்சி.. அப்ப எல்லாம் அது தான்.. :)
ஈவன் கோ கோ விளையாட்டுக்கூட ஸ்கர்ட் தான் உட்காரும் போது மிகவும் கஷ்டமாக இருக்கும்.. பாதியாக உட்கார்ந்தால் தான் எழுந்து வேகமாக ஓடமுடியும். ஆனாலும் அதுதான் உடை, பழகிக் கொண்டோம்.
ஹை ஜம்'பில் ஸ்கர்ட் தடுக்கி விழுந்து விரட்டப்பட்டதும் உண்டு :)
//உடை விஷயத்தில் பெண்களுக்கு சற்று கட்டுப்பாடு வேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.//
உண்மை, அதே சமயம் தனிப்பட்டவரையும் பொறுத்தது.
//அங்க சாப்பிடுறதுக்குப் பாதிலா பட்டினியாவே போயிரலாம்.. கொடுமைடா சாமி :-)//
உழவன் கண்டிப்பாக அந்த ரோடு சைட் ஹோட்டலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. :)
@ தமிழன் கறுப்பி - நன்றி :)
இப்படியொரு ஆணாதிக்கமா???
எப்படி இவ்வளவு அழகாக எழுதும் நீங்கள் அந்த அடக்குமுறைகளைத் தாங்கி இருந்தீர்கள், இருக்கிறீர்கள்??
நல்ல பதிவு கவிதா.. இயல்பான நடையில் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
Post a Comment