பேதை பெண்... யாரோ ஒரு ரேடியோ ஜாக்கியிடன் தன் வாழ்க்கையை நிர்ணயம் செய்ய கேட்கிறாள். இந்த ரேடியோ ஜாக்கி ஒன்றும் குறிப்பிட்ட துறை சார்ந்தவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றி இரவு பாட்டு கேட்டுக்கொண்டு படுத்திருந்தேன்.. பாட்டுக்கு நடுநடுவே தொலைப்பேசியில் அழைத்து நம் பிரச்சனைகளை சொன்னால் அந்த ரேடியோ ஜாக்கி அந்த பிரச்சனைகளுக்கான தீர்வை சொல்லுவார். அப்படி கேட்கும் 10 தொலைபேசி கால்களில் 9 தொலைபேசி கால்கள் கண்டிப்பாக காதல் பிரச்சனைகளை பற்றி இருக்கும்... இவர்களும் நல்லவிதமான தீர்வுகளை சொல்லித்தருவார்கள். :) அப்படி அழைக்கும் காதலர்கள் அத்தனை பேரும் ஊடல், கூடல், மாடல் பற்றி பேசுவார்களே அன்றி நம்மை பெற்று வளர்த்து ஆளாக்கிய சிலர் நம் வீட்டில் இருக்கிறார்களே அக்கறையோடும் பாசத்தோடும் அவர்களை பற்றியும் சற்றே நினைப்போம் என்று நினைப்பாரில்லை.
இப்படி கேட்டு கொண்டு இருக்கும் போது ஒரு பெண், தன் கணவர் டவுரி அதிகம் கேட்டு தன்னை வீட்டை விட்டு துறத்திவிட்டார் என்றும் தான் இப்போது அம்மா வீட்டில் இருப்பதாகவும், அதற்கு அவர் முழு காரணம் இல்லையென்றாலும் மாமியார், நாத்தனார் சொல்லுவதை கேட்டு த்தான் அப்படி நடந்துக்கொள்கிறார்.. என்று சொல்லிவிட்டு கடைசியாக அந்த பெண் கேட்ட கேள்வி "நான் அவரோடு வாழவா?"
பேதை பெண்ணே!! இது உன் வாழ்க்கை, உன் கணவருடன் வாழ்ந்தவள் நீ, உன் மாமியார், நாத்தானார் பற்றி உனக்கு தான் தெரியும், அதை எல்லாம் விட அம்மா வீட்டு சுழ்நிலை, உன் படிப்பு, உன்னால் சுயமாக தனியாக இருக்க முடியுமா? இல்லை வேறு வாழ்க்கைக்கு நீ தயாரா? உன் பொருளாதார நிலைமை, இதை எல்லாவற்றையும் விட உன் கணவர் மேலும் உன் குடும்பத்தின் மேலும் நீ வைத்திருக்கும் அன்பு... என்று இதை எல்லாமே யோசித்து நிச்சயம் செய்ய வேண்டியது நீ.. !!
யாரோ ஒரு மூன்றாம் மனிதரிடம் ஒரு நிமிடத்தில் முடிவு செய்ய வேண்டிய விஷயமா இது?! கேட்கும் கேள்வி பைத்தியக்காரத்தனமாக இல்லையா? துறை சார்ந்தவர் என்றாலும் அலோசனை மட்டும் கேட்கலாம் ஆனால் முடிவு நம்முடையதாக மட்டுமே இருக்கவேண்டும்.
நீ அவரோடு சேர்ந்து வாழவேண்டும் என்று நினைத்துவிட்டால் போதும் நீ வாழ்ந்து விடுவாய், அல்லது வேண்டாம் என்று நீ முடிவு செய்தால் அவர் உன்னை இழந்துவிடுவார் என்பது கூட உனக்கு தெரியாதா? உன் வாழ்க்கையின் முடிவை அடுத்தவர் நிர்ணயம் செய்வதா? கணவன் மனைவிக்குள் மூன்றாவது ஒரு ஆள் நுழைந்து விட்டாளே அங்கு பிரச்சனை தான். எத்தனை பெரிய பிரச்சனை வந்தாலும் இது நம் வாழ்க்கை நாம் தான் அதை முடிவு செய்ய வேண்டும் என்று நிதானமாக யோசித்து முடிவு செய்ய வேண்டும். சொல்லுபவர்களுக்கு என்ன அவர்கள் பாட்டுக்கும் சொல்லிவிட்டு சென்று விடுவார்கள். ஆனால் அது பாஸிட்டிவாக இருந்தாலும் நெகட்டிவாக இருந்தாலும் அனுபவித்து நாமே.
அதனால் யாருமே தன் வாழ்க்கையை தானே முடிவு செய்தல் நலம். உடனடியாக முடிவு எடுக்கும் நிலையில் நம் மனமும், சூழ்நிலையும் இல்லை என்றால் சிறிது காலம் கிடப்பில் போட்டு சிந்திக்கும் திறன் வந்த பிறகு முடிவு செய்யலாம்.. ஆனால் எக்காரணம் கொண்டும் மற்றவர் சொல்லுவதை கேட்டு நம் வாழ்க்கையை நாம் முடிவு செய்ய க்கூடாது.
அணில் குட்டி அனிதா:- கவிக்கு ஆர்.ஜே'ஸ் கண்டாலே பொறாமை.. வேற ஒன்னுமே இதுல மேட்டர் இல்ல.. ...சர்ரி என்னக்கு பசிக்குது சாப்பிட ஏதாச்சும் கிடைக்குமா.. கூல்..லா... வெயிலுக்கு இளநீர், ஜூஸ்'ஸூ.. ஏதாச்சும்... எனி படி ஸ்பான்ஸரிங்...?!
பிட்டர் தாத்ஸ் :- Like the elephant, we are unconscious of our own strength. When it comes to understanding the power we have to make a difference in our own lives, we might as well be asleep. If you want to make your dreams come true, wake up. Wake up to your own strength. Wake up to the role you play in your own destiny. Wake up to the power you have to choose what you think, do, and say.
நான் அவரோடு வாழவா?
Posted by : கவிதா | Kavitha
on 13:36
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
23 - பார்வையிட்டவர்கள்:
me the firsta?
@ மிஸஸ் டவுட் , டவுட்டே வேண்டாம் நீங்களே தான் :)
//அதனால் யாருமே தன் வாழ்க்கையை தானே முடிவு செய்தல் நலம். உடனடியாக முடிவு எடுக்கும் நிலையில் நம் மனமும், சூழ்நிலையும் இல்லை என்றால் சிறிது காலம் கிடப்பில் போட்டு சிந்திக்கும் திறன் வந்த பிறகு முடிவு செய்யலாம்.. ஆனால் எக்காரணம் கொண்டும் மற்றவர் சொல்லுவதை கேட்டு நம் வாழ்க்கையை நாம் முடிவு செய்ய க்கூடாது.//
நல்லா சொன்னீஙக...
நாம் மத்தவங்களுக்காக வாழ்ந்தே பழகிட்டொம்.
அதான் அடுத்தவங்க பேச்சுக்கே நம் வாழ்க்கைய பணயம் வெக்குறாங்க.
வேணாம்பா.. மாத்திக்கங்க.. நல்லா இருங்க..
நன்றி கவி
ரங்கன்.
வணக்கம்
ம்ம்ம்
\\உன் வாழ்க்கையின் முடிவை அடுத்தவர் நிர்ணயம் செய்வதா? கணவன் மனைவிக்குள் மூன்றாவது ஒரு ஆள் நுழைந்து விட்டாளே அங்கு பிரச்சனை தான். எத்தனை பெரிய பிரச்சனை வந்தாலும் இது நம் வாழ்க்கை நாம் தான் அதை முடிவு செய்ய வேண்டும் என்று நிதானமாக யோசித்து முடிவு செய்ய வேண்டும்.\\
நியாயம்தான், ஆனா யாறுக்கு அதப்பத்தி தெளிவான எண்ணம் இருக்கின்றது
நம் சமூகம் எண்ணத்தில் தெளிவில்லாத அச்சுக்களையே உருவாக்குகின்றது.
நன்றி
இராஜராஜன்
////அதனால் யாருமே தன் வாழ்க்கையை தானே முடிவு செய்தல் நலம். உடனடியாக முடிவு எடுக்கும் நிலையில் நம் மனமும், சூழ்நிலையும் இல்லை என்றால் சிறிது காலம் கிடப்பில் போட்டு சிந்திக்கும் திறன் வந்த பிறகு முடிவு செய்யலாம்.. ஆனால் எக்காரணம் கொண்டும் மற்றவர் சொல்லுவதை கேட்டு நம் வாழ்க்கையை நாம் முடிவு செய்ய க்கூடாது.//
நெத்தியடி அடிச்சிட்டீங்க..
அந்த ரேடியோ ஜாக்கி வாய்ஸ் நல்லா இருக்கும்.
ஆனா என்னமோ அவங்கள தீர்க்கதரிசி மாதிரி நினச்சிட்டு அவுங்க கிட்ட பெர்சனல் விஷயத்தெல்லாம் சொல்லி, அறிவுரை கேக்குறது டூ மச்.
//அப்படி கேட்கும் 10 தொலைபேசி கால்களில் 9 தொலைபேசி கால்கள் கண்டிப்பாக காதல் பிரச்சனைகளை பற்றி இருக்கும்... இவர்களும் நல்லவிதமான தீர்வுகளை சொல்லித்தருவார்கள். :)//
வெளங்கிடும். சுயமா முடிவெடுக்கத் தெரியாம என்ன ____க்கு காதலிக்கணும்ன்னேன்.
//அதனால் யாருமே தன் வாழ்க்கையை தானே முடிவு செய்தல் நலம்.//
ஹ்ம்ம் நானும் அப்படி தான் முடிவெடுத்தேன். அதுல எங்க அப்ஸுக்கு பெருமை தான். ஒரு நாள் அவங்க நண்பர் கிட்டே பேசுறப்போ "என் புள்ளை காலேஜ்ல படிக்கிறப்போ என்ன டிபார்ட்மெண்ட் எடுக்கணும்ன்னு அவனே தான் முடிவெடுத்தான், படிச்சிட்டு எங்கே வேலைக்கு போறதுன்னும் அவனே முடிவெடுத்தான். கல்யாணத்திலே கூட எனக்கு வேலையே வைக்கல, அவனே முடிவெடுத்துட்டான்"ன்னு ஒரு உள்குத்து வச்சாங்க. நாம சும்மா இருப்போமா, "படிப்புல, வேலைல எல்லாம் நல்லா தானே இருக்கேன், அதே மாதிரி இதுவும் நல்லபடியா தான் இருக்கும், லூஸ்ல விடுங்க"ன்னு சொன்னேன்.
:-) ம்ம்ம் நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்!!No further arguments
ஷோக்கா சொல்லி இருக்கீங்க
@ ரங்கு... நன்றி :)
---------------------------
@ இராஜஇராஜன் - கருத்துக்களுக்கு நன்றி, தொப்பியுடான் உங்க புகைப்படம் நல்லா இருக்குங்க.. :)
----------------------------
//அந்த ரேடியோ ஜாக்கி வாய்ஸ் நல்லா இருக்கும்.//
வாங்க செய்யது, ம்ம்!! ஆமா சூப்பரா இருக்கும்.. அப்படியே சொக்கிடுவாங்க கேட்கறவங்க.. :)
//படிப்புல, வேலைல எல்லாம் நல்லா தானே இருக்கேன், அதே மாதிரி இதுவும் நல்லபடியா தான் இருக்கும், லூஸ்ல விடுங்க"ன்னு சொன்னேன்.
//
ராஜா அது உங்களின் தன்னம்பிக்கை.. அப்படியே நடந்தும்விட்டது.. ஆனால் எல்லோருக்கும் அப்படி அமைவது இல்லை என்பது யதார்த்தம். :)
-------------------------------
:-) ம்ம்ம் நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்!!No further arguments
புனித்து, என்ன இதூஊஊஊ..?!! என்னவோ நீங்களும் சொல்லிட்டீங்க.. சோ No further arguments :)
--------------------------------
//ஷோக்கா சொல்லி இருக்கீங்க//
சிவா.. ஷோக்கா???? அப்படின்னா?
--------------------------------
இத படிச்சதும் நான் கிறுக்குன இந்த பதிவு
ஞாபகம் வந்தது.
//
துறை சார்ந்தவர் என்றாலும் அலோசனை மட்டும் கேட்கலாம் ஆனால் முடிவு நம்முடையதாக மட்டுமே இருக்கவேண்டும்.
//
ரொம்ப சரியா சொன்னீங்க
இதை தான் தலைவர் 'உன் வாழ்கை உன் கையில்' னு சொன்னாரு
கவிதா,
ரேடியோ ஜாக்கிகிட்ட பேசணும். அவ்வளவு தான். போன் பண்ற மக்களோட விருப்பம். அதுக்கு இப்படி ஏதாவது ஒரு interesting கதை சொல்லுவாங்க. ஆனா, உங்களோட பதிவுல சொல்லி இருக்கும் மையக்கருத்தோட உடன்படறேன்.
ஒரு நிமிடத்தில் முடிவு எடுக்கற விஷயம் இல்லை நீங்க சொல்ற மாதிரி. ஏதோ அவங்க ஆற்றாமையை கொட்ட ஒரு சந்தர்ப்பம் அவர்களுக்கு. கேட்கறவங்க, இது நம்ம பிரச்னை விட பெரிய பிரச்னை என்று யோசிக்க வைக்கலாம். சில பேருக்கு, ரேடியோ வில் முகமோ, தன்னை பற்றிய வேறு தகவல் கேட்பவருக்கு தெரியாது என்ற தைரியத்தில் பேச தூண்டல் வரும்.
இப்படியெல்லாமா அப்பாவிகள் உலகத்தில் இருக்கிறார்கள்..!
நல்ல வேளை. நான் எஃப் எம் ரேடியோவே கேட்பதில்லை.. தப்பித்தேன்..!
அணில்குட்டி சொல்வதில் உண்மையிருக்கும் என்று நம்புகிறேன்..!
இதெல்லாம் பரவாயில்ல..இன்னும் எதுக்கு எல்லாமோ ஆர்.ஜே கிட்டே ஐடியா கேக்குறாங்க...
EKI...OSI....
@வாழவந்தான்.. - உங்களின் பதிவை படிக்கிறேன்..
@மணிகண்டன்.- இல்லைங்க..இந்த பெண் மிகவும் சீரியஸாகத்தான் கேட்டார்கள். ஏதாவது பேசவேண்டும் என்று நினைப்பது ஆப்போசிட் ஜெண்டர் இடம் இருக்கும் ஆனால் பெண், பெண்ணிடம் பேச கதை சொல்ல நினைப்பார்கள் என்று எனக்க்கு தோன்றவில்லை.
@மாதவன்.. கருத்துக்கு நன்றி..
முருகா..வா முருகா...
//நல்ல வேளை. நான் எஃப் எம் ரேடியோவே கேட்பதில்லை.. தப்பித்தேன்..!..//
ஆமா முருகா பாட்டு கேட்கின்ற நேரம் பக்கம் பக்கமாக எழுதலாமே முருகா.... :)
//இதெல்லாம் பரவாயில்ல..இன்னும் எதுக்கு எல்லாமோ ஆர்.ஜே கிட்டே ஐடியா கேக்குறாங்க...
EKI...OSI....
//
ஹை...தேவ்...!!!எவ்வ்வ்வ்வ்வ்ளோ நாள் (வருஷம்?!! ) ஆயிற்று நீங்க இந்த பக்கம் வந்து?!! சரி எப்படி இருக்கீங்க..?!!
ம்ம்..ஆமாம் தேவ் இவங்க கேட்கற கேள்வி எல்லாம் நாம் கேட்கும் போது நிஜமா தெரிந்து கேட்கிறார்களா? இல்லையான்னு டவுட் வந்துடுது..
அது கூட பரவா இல்லைங்க.... முன்ன பின்ன தெரியாத ரெண்டு பேர ஜோடி சீகுற மாதிரிலாம் ப்ரோக்ராம் பண்றாங்க.... கலி காலமடா!!!!
இத்யாதி.. வாங்க..!! ஆமாம் ஒரு ஒரு பேச்சையும் கேட்டா அபப்டித்தான் நினைக்க தோணுது..!!
கவிதா மேடம் நான் சொல்ல வந்ததும் இத்யாதி சொன்னதும் ஒரே விஷயம்னுதான் நினைக்கிறேன். அப்பறம் அப்பா கையேடு படம் எல்லாம் ஓகே. ஆனா என்ன எழிதியிருந்தாருனு ஒரு பதிவா போட்டா நல்லாயிருக்கும்
வாழவந்தான். .வாங்க கண்டிப்பா எழுதறேன்.. ஸ்கேன் செய்து இருந்தால் தெளிவாக இருந்து இருக்கும்.. முயற்சி செய்யறேன்..
அதில் கதைகள் கட்டுரைகள் எல்லாம் இருக்கு.. அதை அப்படியே பாத்து காப்பி தான் அடுக்கனும். . அடிக்கிறேன்:)
நன்றி!
Post a Comment