தற்போது வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகும் ஐ.டி கம்பெனிகளின் ஆட்குறைப்பு மற்றும் சம்பளம் குறைப்பு காரணமாக புதிதாக திருமணம் ஆனவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளி போடுவதாக செய்தி வருகிறது. மிகவும் வேதனையான விஷயம், தவறா சரியா என்று கேட்டால், நேரடியாக மிக தவறான முடிவு என்றே சொல்லலாம்.
குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று நினைக்கும் இவர்கள் செய்யும் மற்ற ஒரு வேதனைக்குறிய விஷயம், கருக்கலைப்பு. கருக்கலைப்பு என்று எழுதும் போதே நெஞ்சு படப்படக்கிறது, உள்ளே இருப்பது ஒரு உயிர், வேண்டாம் என்று முடிவு செய்து க்கொள்ள எல்லாவித உரிமையும் இருந்தாலும், குழந்தைக்கு எந்த வித பிரச்சனையும் இல்லாத போது பொருளாதார கஷ்டங்கள் கருதி, திட்டமிட்டு கருக்கலைப்பு செய்வது மிகவும் கொடுமையான விஷயமாக படுகிறது.
அடுத்து திருமணம், திருமணம் என்பது பொருளாதாரம் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயமா என்றால் இல்லை என்றே சொல்லுவேன். பணம் நமக்கு அத்தியாவசிய அன்றாட தேவை என்றாலும் வரும் வருமானத்திற்கு தகுந்தார் போன்று குடும்பம் நடத்த இயலும். திருமணம் சரியான வயதில் செய்வதற்கு சில முக்கிய காரணங்களாக சொல்லப்படுவது
1. நல்ல திடக்காத்திரமான குழந்தைகள்
2. பிரச்சனை இல்லாத மகப்பேறு
2. நம் வயதிற்கும் நம் குழந்தைவயதிற்கும் உள்ள வயது இடைவெளி. அதாவது குழந்தையை வளர்த்து, படிக்கவைத்து, அந்த குழந்தை வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வரும் வரையிலும் நம் ஆயுள் இருக்கவேண்டும்.
3. நம்மை நம்பி திருமணம் செய்து கொண்டவருக்கு (இரு பாலாரும்) கடைசிவரை துணையாக இருப்பது. இதற்கும் நம் வயது ரொம்பவும் முக்கியம், அதுவும் இப்போதைய வாழ்க்கை முறையில் எதையும் திடமாக சொல்லிவிட முடிவதில்லை.
இவை எல்லாம் யோசித்து தான் முன்னவர்கள் ஆண், பெண் திருமணவயதை நிர்ணயித்து இருக்கிறார்கள். ஆனால் சம்பளம் குறைந்துவிட்டது, வேலை நிரந்தரம் இல்லை என்ற காரணங்களை வைத்துக்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்வதையும், திருமணத்தை தள்ளி போடுவதை சரியான முடிவாக எடுத்துக்கொள்ளவே முடியாது.
தன்னம்பிக்கை இருக்கும் யாரும் இப்படி ஒரு முடிவை எடுக்க மாட்டார்கள். இது தான் வாழ்க்கையின் முடிவு என்று யாரும் சொல்லிவிட முடியாது, எத்தனை கதவுகள் மூடப்பட்டாலும் கண்டிப்பாக ஒரு கதவு நமக்காக திறக்கும், அப்படி திறக்காவிட்டால், திறக்க வைக்க முடியும் என்ற தன்னம்பிக்கை நமக்கு வேண்டுமல்லவா?
ஐ.டி வேலை மட்டும் தான் உங்களின் வாழ்க்கையை நிர்ணயம் செய்கிறதா? இதை நினைத்து சிரிப்பதா அழுவதா தெரியவில்லை... ?! :(
* குறிப்பு :- தலைப்பில் இளைஞர்கள் என்று சொல்லியிருந்தாலும், இப்படிப்பட்ட முடிவுகளை எடுப்பவர்களுக்கு மட்டுமே இந்த பதிவு பொருந்தும். :)
அணில் குட்டி அனிதா :- ம்ம்....வந்துட்டாங்கடா.. அறிவுரை அல்லி!! எல்லாரும் ஒன்னு செய்யுங்க...சம்பளம் வாங்கினாலும் வாங்காகாட்டியும், வேலை இருந்தாலும் இல்லாட்டியும் கல்யாணம் மட்டும் முதல்ல பண்ணிக்கோங்க, புள்ள குட்டி பெத்துக்கோங்க... அப்புறம் அம்மணி வீட்டு அட்ரஸ் கேட்டு, சைலன்ட்டா வந்து செட்டில் ஆயிடுங்க... ஹி ஹி.... உங்களையும் உங்க குடும்பத்தையும் அம்மணி பாத்துக்குவாங்க..!!
பீட்டர் தாத்ஸ் :- The real measure of your wealth is how much you'd be worth if you lost all your money.
திருமணம் மற்றும் குழந்தைபேறு தள்ளி போடும் *இளைஞர்கள்
Posted by : கவிதா | Kavitha
on 09:50
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
54 - பார்வையிட்டவர்கள்:
நல்ல விடயம்தாங்க இது
(அணிலு கொஞ்சம் அடங்கு)
anil is right.
not only IT guys, everyone should postpone or use protection. its good to slowdown the rate.
can't a couple live without kids? if they are that desperate adopt a kid & raise him/her like our own.
those who are crazy about biological kids. what? you guys are kings/emperors? to leave your legacy behind. grow up. broaden your thoughts. think outside of the box. way outside.
think about green house effect. every kid me bring into this world, we damage our earth. dont say, how much damage it could be just coz of my one little kid. do the math. we are 1.13 billion already.
keep up the good work IT guys. (only in india, even the educated ones think like bogans)
nan solla vantha karuthu ithu arumaiyana eluthu parvai ... nan puthu mana thambathiyargalukku yendru potta pathivu padichu parunga votta podunga..
unga pathivukku nan manathara athravu tharen .. karanam indirya ilangargal kulanthaiyin arumai theriya villai ... valthukkal
ஞாயமான விடயம்
சம்பள குறைவு, வேலையில் பிரச்சனை காரணமாக தள்ளிப் போடுபவர்கள் ஒரு புறம். ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் போதிய இடைவெளி விட வேண்டும் என்று நினைத்து உருவான குழந்தையை அழிக்கும் பெற்றோர்களும் உண்டு. அதற்கு உருவாகாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளலாமே, ஏன் உருவான குழந்தையை கலைக்க வேண்டும். பெற்றோரின் ஆட்டத்திற்கு குழந்தையை பலியாக்குவது எந்த விதத்தில் நியாம் என்று புரியவில்லை:-(. குழந்தைக்காக ஏங்குறவங்களுக்கு தான் உருவாகும் குழந்தையின் அருமை தெரியும்.
@ ஜமால் நன்றி
@ Desperado - :)
//can't a couple live without kids? if they are that desperate adopt a kid & raise him/her like our own.
//
இருக்கலாம் வாழ்க்கை அர்த்தமற்றதாக இருக்கும். நீங்கள் சொல்லிய தத்து எடுக்கும் முறை சரி, அதை செய்யலாம், ஆனால் அதில் தம்பதியினர் முழு சம்மதம் தேவை மட்டுமல்லாது ஒரு குழந்தையின் வாழ்க்கை அடங்கியுள்ளது. எல்லாவற்றையும் யோசித்து முடிவு செய்ய வேண்டும்.
.. உங்களை போன்று நான் யோசிக்கவில்லை அதனால் மற்ற கருத்துக்களுக்கு நான் பதில் அளிக்கவில்லை... :))
nan puthu mana thambathiyargalukku yendru potta pathivu padichu parunga votta podunga..
//
சரி செய்யறேன்.. :) நன்றி சுரேஷ் !
@ஞான சேகரன் நன்றி
@ராஜ், //குழந்தைக்காக ஏங்குறவங்களுக்கு தான் உருவாகும் குழந்தையின் அருமை தெரியும்.
//
ம்ம்..ஆமாம்.. அதனால் தான் குழந்தை பெற்றுக்கொள்வதை மட்டும் தள்ளி போடவே கூடாது..
முப்பது வயதில் குடும்பத்தைப் பூர்த்தி செய்தால் மட்டுமே குடும்ப வாழ்வில் முழுமைகாண இயலும். கொஞ்சூண்டு சம்பாதிக்கும் திறமை இருந்தாலே போதும் திருமணம் செய்து கொள்ளலாம்.
வளர்ச்சியடைவதற்கும் சம்பாதிப்பதற்கும் பெரிய தொடர்பெல்லாம் ஒன்றும் கிடையாது.
//1. நல்ல திடக்காத்திரமான குழந்தைகள்
2. பிரச்சனை இல்லாத மகப்பேறு
2. நம் வயதிற்கும் நம் குழந்தைவயதிற்கும் உள்ள வயது இடைவெளி. அதாவது குழந்தையை வளர்த்து, படிக்கவைத்து, அந்த குழந்தை வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வரும் வரையிலும் நம் ஆயுள் இருக்கவேண்டும்.//
in that case, what about having 3rd or 4th baby at the age of 38 -40?
these (3rd 4th)kids are not healthy?
they have complications during these (3rd 4th)child births?
do they really considere their age for 3rd or 4th child? no. then why just for first?
why can't we guys have our first baby when we 'suppose' to have our 3rd?
having kids when can't provide them nicely is a big crime.
why would anybody bring somebody into their already miserable life? to make that child's life miserable as well?
only in india, having child is take it for granted.
in western world, they plan.
they ask themselves "can they afford to have a child"?
if not, wait until you accumulate enough to do so.
the points you've mentioned... sorry maam.
//in that case, what about having 3rd or 4th baby at the age of 38 -40?
these (3rd 4th)kids are not healthy?
they have complications during these (3rd 4th)child births?
//
நல்ல கேள்விகள் - தெரிந்தவரை பதில் சொல்கிறேன்..
1. முதல் குழந்தை என்பது பிரச்சனை இல்லாமல் இருந்தால் அடுத்த அடுத்த குழந்தைகளுக்கு பிரச்சனை வராது. நாம் ஏதோ காரணத்திற்காக தள்ளிபோட அதுவே பிரச்சனையானால் ?! அவஸ்தை படுவதும் நாமே.. அப்படி பலரை நான் பார்த்து இருக்கிறேன்.. :(
2. 38-40 வயதிற்கு மேல் உடலில் ஆயிரம் பிரச்சனைகள் வரும் , சர்க்கரை, உப்பு, அதிக/குறைந்த ரத்த அழுத்தம், இது தவிர்த்து இரத்த சோகை, அதன் காரணமாக கை கால் வீக்கம், சரியான முறையில் மாதவிடாய் இருக்காது, உடலில் அந்த வயதிற்கு தகுந்தார் போன்று தான் சக்தி இருக்கும், அதன் பாதிப்பு கண்டிப்பாக குழந்தைக்கு இருக்கும். என் வீட்டிலேயே என் அப்பாவையும் என் கடைசி சித்தாப்பவையும் ஒப்பிட்டு பேசுவார்கள். என் அப்பா அளவிற்கு என் கடைசி சித்தப்பா உடல் அளவில் வலுவாக இல்லை. அதற்கு காரணம் ஆயாவின் 35 வயதிற்கு பிறகு பிறந்த குழந்தை. :)
//having kids when can't provide them nicely is a big crime.
//
இந்த "nicely" என்பதற்கு ஏதாவது அளவு வைத்து இருக்கிறீர்களா? :) இருந்தால் சொல்லுங்கள் அதற்கு பிறகு அந்த கேள்விக்கு பதில் சொல்கிறேன்.
the points you've mentioned... sorry maam.
//
I dont mind my dear !! u could use my points.. :)
//
* குறிப்பு :- தலைப்பில் இளைஞர்கள் என்று சொல்லியிருந்தாலும், இப்படிப்பட்ட முடிவுகளை எடுப்பவர்களுக்கு மட்டுமே இந்த பதிவு பொருந்தும். :)//
:))
நீங்க சொல்ல வந்த விசயம் சரி. ஆனால் முடிந்தால் இன்னும் கொஞ்சம் விரிவா சந்திக்கவும்!
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....
இவன்
உலவு.காம்
//இன்னும் கொஞ்சம் விரிவா சந்திக்கவும்!
//
சிவா புரியல.. :(((( oops!!
எனக்கு மே மாதம் ஆன்வல் லீவ்!
//
எனக்கு மே மாதம் ஆன்வல் லீவ்!
//
அபிஅப்பா எனக்கு புரியல.. இல்லன்னா வேறு யாருக்கும் போடற பின்னூட்டம் மாற்றி இங்கே போட்டுடீங்களா?
இதெல்லாம் பத்தி யோசிக்க நமக்கு இன்னும் வயசிருக்குபா.
ஆனா, பெத்தவங்க கண்ணுல இந்த பதிவு படாம பாத்துக்கணும். ஏன்னா நீங்க சொல்ற விஷயத்தைதான் அவங்களும் சொல்றாங்க. சில வார்த்தை கூட அப்படியே இருக்குபா.
ஆனா, நாம எதிர்பார்க்கும் வாழ்க்கைத்தரத்தை அடைந்தபிறகு திருமணம் செய்கிறது நல்லது. கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த பொன்னையும் சேர்ந்து கஷ்டப்பட வெக்ககூடாதில்ல
Hi,
The message in this post is very much applicable for IT, ITeS and BPO sectors based employees..
I would like to share some of my own experiences here..
1) One of my cousin, green card holder in US, big shot in #1 Chip maker.. His wife is also in the same company.. Both did M.S., Ph. D. etc in US.. Settled in US.. and
now they regret that they don't have any children. Both are above 40's now..
2) Another cousin of mine, again green card holder, but his wife is
Indian, big shot in a MNC bank in chennai.. My cousin wanted to have children, his wife said NO.. Since, carrier came first.
3) Friend of mine(know him from childhood days), big shot in a MNC company in Bangalore, married for 5 years.. Yet to have children.
He postponed, since he wanted to save money by going to US.. He did that.. Later, health problems for him..
In all the above cases, the respective parents, whom I know from my childhood are just craving for grandchildren.. "Before my death, will I see a grandson or granddaughter?." All of them have same question, no answer.
Infact, parents related to (2) used to show my first son (I have 2 sons) as an exhibit to their daughter-in-law.. telling, you should also have a son like this..
The above stories are real, from my own life.. I used to shout at my mother, Why are you encouraging this exhibition of my son?. Later, I understood the plight of those oldies..
Come-on, let's be practical.
It's great to be a father or mother, your children are your greatest assets.. No point in minting money..
I do not know how many of you have read Mr. Gurumoorthy's article in Thuglak. If you read, one thing will be very much visible..
Indians and chinese, they have the traditional family architecture.. And the economy thrives due to that. Why our own Indians go to US or Saudi or Singapore/Malay?.
For the sake of money, for their family.. For marriage of sisters, education of brothers, home loan or whatever. That family architecture is what makes us different. That family binding is
what will enable us to live our life, as we should be.
Believe me, I have travelled to hell-a-lot of countries.. Not to US, predominantly to European and Asian.. (15+ countries).. Except India and China, rest of the countries are westernized... They have almost lost the family culture..
For your life, for your family, what you need is what you need to worry. Remember that your own parents, if they thought like this, you would have not been here.
Biological kids or adapted, decision is individual's. I agree.
But, do not go against children.
Money alone cannot decide your child's future.. It's good to have a bank balance, but it's not mandatory one...
From my side, I grew up 2 of my nieces from their babyhood, I grew up my first son and currently, my second.
I used to tell my wife, let us teach these children, good habits, good manners and provide them good education. That alone is sufficient, becoz, they will come up on their own.. They do not need to have a bank balance from us, to grow.
In today's world, money minting is one aspect. Other aspect, we do not even know our own neighbour's right?. We can talk via mobile, chats, SMS.. How much we go outside?.
Last but not the least, you can be all alone in this planet one fine day, without your next generation.
I am sorry, if I hurt anybody's feelings. My intention is not to educate or advice, just to share.
Suddi.
@வாழவந்தான்.. உங்கள் வீட்டில் ஒருவராகத்தான் நானும் சொல்கிறேன்ன். :) இத்தனைக்கு பிறகும் தன்னம்பிக்கை இல்லாமல் நீங்கள் பேசுவதாகவே தெரிகிறது. :(
Suddi....
ரொம்ப விவரமாக எடுத்துக்காட்டுகளுடன் நன்றாக சொல்லி இருக்கிறீர்கள், ரொம்பவும் சந்தோஷமாக இருக்குங்க.. பின்னூட்ட நீங்கள் எடுத்துக்கொண்ட நேரத்திற்கு நன்றி சொல்லிக்கிறேன்.
//I am sorry, if I hurt anybody's feelings.//
நீங்க எதுவும் தவறாக சொல்லலியே..!! யாரும் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் !! :)
வருகைக்கும், நல்ல தகவல்கள் கொடுத்தமைக்கும் மனமார்ந்த நன்றி :)
//The real measure of your wealth is how much you'd be worth if you lost all your money.//
கையில் ஒரு பைசா இல்லாதபோதும், நண்பர்கள் கூடவே இருந்து கோழி பிரியாணி வாங்கிதராங்களே, அப்ப நான் நல்லவளா! அவ்வ்வ்வ்வ்வ்....
haha.. jokes apart.
பதிவு சமுதாய கண்ணோட்டத்துடன் எழுதப்பட்டுள்ளது அருமை!:)
எதை தள்ளி போட்டாலும் குழந்தை பேற்றை தள்ளி போடக்குடாது.இப்போது கல்யாணம் முன்னமாதிரி 18 அல்லது 20 வயதில் எந்த பெண்களுக்கும் நடப்பதில்லை .மேலும் பெரும்பாலான பெண்களுக்கு சிறு வயதிலேயே கர்ப்பபையில் கட்டி அதனால் குழந்தை பெரும் வாய்ப்பு தள்ளி போய்விடுகிறது .கரு கலைப்பு மிகவும் ஆபத்தானது .முதல் முதலில் உண்டாகும் கருவை கலைப்பதால் திரும்பா தரிப்பதற்கான வாய்ப்பு ரொம்ப குறைவு இதை எல்லா மருத்துவர்களும் அறிவுறுத்துகிறார்கள் .காற்றுள்ள போதே தூற்றிக்கொள் கதவுள்ள போதே அடைதுக்கொள் என்று சொல்வார்கள்
நல்ல பதிவு கவிதா..
குடும்ப சூழ்நிலை காரணமாக ஓரளவு தான் குழந்தை பேரை தள்ளி போடலாம்..
பிரச்சனை இல்லாத மனிதர்கள் உண்டா..அப்படி எல்லாம் பார்த்தால் இந்த காலத்தில் குழந்தை பெற்று கொள்ள முடியாது..
ரஜினியின் எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ பாடல் தான் நினைவிற்கு வருகிறது :-)
ரொம்ப நன்றி, நீங்களும் வீட்டுல ஒருவர்தான். ஆனால் அக்கா தன்னம்பிக்கை எல்லாம் நல்லாத்தான் இருக்கு. நான் அடுத்த வருஷம் தான் வயசுல குவாட்டர் செஞ்சுரியே அடிக்கபோறேன். வீட்டுல பேச்சுலர் வாழ்க்கைக்கு ரெண்டு வருஷ வாலிடிடி போதும்னு சொல்றாங்க நமக்கு ஒரு நாலு வருஷமா அதை அதிகரிச்சா போதும். அதுக்கு தான் பெத்தவங்க கண்ணுல இது படக்கூடாதுன்னு சொன்னேன்.
உங்களுடைய இந்த பதிவு
யூத் விகடனில்
வாழ்த்துகள்
சமூகத்தை சரியான வழியில் நடத்தாமல் இந்தியா கருத்தடை என்ற கொள்கையை முன்வைத்ததும் அதற்கு விட்டில் பூச்சியாய் மக்கள் பலியானதுமே மிகப் பெரிய துயரம்.
//இந்த "nicely" என்பதற்கு ஏதாவது அளவு வைத்து இருக்கிறீர்களா?//
you've got me there. it depends on the individual. (if one can afford kid's needs without much hardship & regret i guess)
//38-40 வயதிற்கு மேல் உடலில் ஆயிரம் பிரச்சனைகள் வரும் //
first kid at 38-40 is too much for women. even i wouldn't suggest that. (weren't we talking about 'ilaingyargal')
for them, first at early -mid 30s is absolutely fine as long as they are healthy & happy.
those who have medical conditions, just go for it. those who are healthy & have confidence they can wait; WAIT.
even these little delays can do greater good to india in so many ways. it is time to follow 'NO BABY YEAR'.
indians live fast forward life, marry early, have kids early, put on weight early, get sick early, die early.
no one wants to live long it seems. why can't people think like, 'even if i have my first kid at 40's (guys), i'll live long enough to see my grandchildren' ?
is it too much to ask, to take care of ourselves, enjoy, save, have just one kid & live longer? i don't understand the hurry
btw from what heard from anil, i didn't expect you would answer this patiently. thanks-ka :)
//I dont mind my dear !! u could use my points.. :)//
yes i can; WAIT :)
anyways, after seeing all these applauding comments for this post, i'm outta here before i get thrashed. even desperado can't do much about it :)
@தமிழ்மாங்கனி நன்றிப்பா !!
@மலர் //
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் கதவுள்ள போதே அடைதுக்கொள் என்று சொல்வார்கள்
//
ம்ம் கதவை அடை பழமொழி இப்பத்தான் கேட்கிறேன்..ம்ம் நல்லா இருக்குங்க உங்க பின்னூட்டம் நன்றி :)
@கிரி - நன்றி
@ வாழவந்தான்...ம்ம்..உங்களுக்கு இன்னும் 2-3 வருடங்கள் போகலாம்..:), அது வரையில் அப்பா அம்மாவை சமாளியுங்கள், அதற்கு மேல் நல்ல பிள்ளையாக இருங்கள், அதுக்கு தான் பயப்படறாங்க போல இருக்கு :)
வேலைக்கு ஆபத்து இல்லை என்றாலும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருமணத்தை தள்ளி போட எண்ணி கொண்டு இருக்கும் வாலிபர்களில் நானும் ஒருவன் .. இதற்கு எனது முதன் முதற் காரணம் தற்போது உள்ள சூழ்நிலையில் வேலையை தக்க வைக்க மிக கடினமாகவும் , மூன்று நபர்கள் செய்யும் வேலையை ஒருவரே செய்ய வேண்டியது உள்ளதாலும் திருமணம் ஏற்பாடு செய்தால் அதற்கு ஒரு மாதம் வரை பணியில் சற்று தொய்வு ஏற்படும் என கருத்திற்கொண்டு எடுத்துள்ளேன்
நல்லவேளை.... கல்யாணமே செஞ்சுக்க வேணாமுன்னு நினைக்குறவங்களுக்கு இங்க எந்த அட்வைசும் இல்ல :-)
//இந்த "nicely" என்பதற்கு ஏதாவது அளவு வைத்து இருக்கிறீர்களா?//
you've got me there. //
Yes!! :)) as you said it depends right.!! we cant fix all this. As per my view, nothing much to spend lavishly until the kid get into school. So we cant say that it is bcz of a new comer to the home..right!! I like to stress here, the child should be healthy. Otherwise….no wonder u should spend.
//it depends on the individual. (if one can afford kid's needs without much hardship & regret i guess)
//
I correct here, how a kid needs itself? we are providing or make it a practice as we wish right!!
//for them, first at early -mid 30s is absolutely fine as long as they are healthy & happy.
//
I too mean the same..below 30 years. :)
//no one wants to live long it seems. why can't people think like, 'even if i have my first kid at 40's (guys), i'll live long enough to see my grandchildren' ?
//
comeon yaar, first kid at 40???? do u the Indian avarage age?
//indians live fast forward life, marry early, have kids early, put on weight early, get sick early, die early. //
True, now we get some awareness about weight so..we will gradually change.. i hope so..!!
//btw from what heard from anil, i didn't expect you would answer this patiently. thanks-ka :)
//
ahaa....howcome u trust anil not me?!! :)))
நல்லவேளை.... கல்யாணமே செஞ்சுக்க வேணாமுன்னு நினைக்குறவங்களுக்கு இங்க எந்த அட்வைசும் இல்ல :-)
//
:)) ஆமா இந்த கேசுங்களை கண்டுக்கறதே இல்ல. ஏன்னா இப்படி சொல்றதுங்க தான் முதல்ல கல்யாணத்தை செய்துக்கிட்டு வந்து நின்னு அதிர்ச்சி அடைய செய்யுங்க.. பிள்ளையோட வந்தாலும் ஆச்சரியப்பட வேண்டியத்தில்லை :))
என்னிடம் கேட்டால் இரண்டு குழந்தைகளை மூன்று வருட இடைவெளிக்குள் பெற்றுக்கொள்ளவேண்டும்.
வசந்தசேனன், வேலை மட்டும் தான் உங்களுக்கு பாதுகாப்பா? ஏன் தனியாக தொழில் தொடங்குங்கள் செய்யலாமே. .உழைப்பும், மன உறுதியும் இருந்தால் செய்யலாம், விவசாயம் செய்யலாம்.. எத்தனை பேர் ஐ.டி வேலையை நம்பி வயதான தாய் தந்தையை கிராமங்களில் விவாசாயம் பார்ப்பதை அவர்கள் பொறுப்பில் விட்டுவிட்டு சென்னை போன்ற நகரங்களில் உள்ளனர். என்னுடன் பணிபுரிந்த அதிகபட்ச இளைஞர்கள் விவசாயம் செய்யும் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
எனக்கு எல்லாம் விவசாய நிலம் இருந்தால் போயிடுவேங்க.. :) அதைவிட சிரமம் எல்லாமே எனக்கு தெரியும், அத்தை வீட்டில் நிலங்கள் ஒரு காலத்தில் இருந்தது. அதெல்லாம் இல்லாம இப்படி இங்கே கஷ்டபடறேன்.. :)
வேலை அவசியம்..திருமணமும் அவசியம் .... ரொம்ப யோசிக்காதீங்க... திருமணம் செய்துக்கோங்க..எல்லாமே நல்லபடியாக நடக்கும்.. :)
//என்னிடம் கேட்டால் இரண்டு குழந்தைகளை மூன்று வருட இடைவெளிக்குள் பெற்றுக்கொள்ளவேண்டும்.//
ம்ம்.. இரண்டு குழந்தை இரண்டு வருட இடைவெளியில் ஒகே பாஸ்..!! :)
//சமூகத்தை சரியான வழியில் நடத்தாமல் இந்தியா கருத்தடை என்ற கொள்கையை முன்வைத்ததும் அதற்கு விட்டில் பூச்சியாய் மக்கள் பலியானதுமே மிகப் பெரிய துயரம்.
//
ம்ம்..ராஜநடராஜன் தனியாக பதிவு போட்டு விளக்க முடியுமா ? கருத்தடை ன்னு அரசாங்கம் சொன்னது கன்சீவ் ஆகி கலைக்க சொல்லல்ல... கன்சீவ் ஆகாமல் பாதுகாப்பான உறவுக்கு தான்.. சரிங்களா...?!
ஒவ்வொரு வீட்டிலும் 10, 16 பிள்ளைகள் இருப்பார்கள், அந்த அவேர்னஸ் இல்லன்னா.. அது குறைந்து வீட்டுக்கு 2 குழந்தைகள், 1 குழந்தை என்று கட்டுபாட்டோடு இருந்திருக்க மாட்டோம் இல்லையா?
Friends,
Words of Mr (or Ms) Desperado reproduced here..
in that case, what about having 3rd or 4th baby at the age of 38 -40?
these (3rd 4th)kids are not healthy?
they have complications during these (3rd 4th)child births?
do they really considere their age for 3rd or 4th child? no. then why just for first?
why can't we guys have our first baby when we 'suppose' to have our 3rd?
having kids when can't provide them nicely is a big crime.
why would anybody bring somebody into their already miserable life? to make that child's life miserable as well?
only in india, having child is take it for granted.
in western world, they plan.
they ask themselves "can they afford to have a child"?
if not, wait until you accumulate enough to do so.
Medical stories which I have heard, but do not know whether they are right.. Heard from amma, athai paati, periyamma, chithi etc
1) For men - age is not an issue.
Though the quality of semen generated might come down, still it
can do the needful.
for women - age matters. As age
increases, the insecurity increases. Whether I will be able to give birth or not?.
pelvic joints gets stiffer, reducing possibilities of natural
delivery.
25 is normally peak time for hormones, for women. So this period is usually considered to be right age for child birth.
Many of my golti friends got married at the age of 25 (ofcourse,super dabbu). They now have 2 children, both husband and wife working, grandparents take care of children...
Our friend Desperado spoke about
planning..
Well, westerners plan everything.. Including their vacation, their car, their children etc.,
Remember, they have to do this..
Since, they do not know, till what time the man and woman will live together. For this, they have invented new way of living together.
I have seen all combinations friends..
Man and woman, man and man, woman and woman.. Enough of this circus, I would say.
Living together concept is more liked, since you do not have any responsibilities right?. If either
partner dislikes, Bye.. Then go back at the next person.
And for this lifestyle, they talk about spending time with family, vacation etc., And Desparado also voices his support for the same?.
Remember what Obama has told recently in America?. That Indian and Chinese children will ourperform American children in US.
And the reason for this is pretty simple - Parents are educated, they
know the importance of education and family, they impart quality education to their children, nurture them properly.
This again fallsback to my previous comment of providing good education.. Nowhere, I am talking about good facilities.
Yes.. Facilities like car, bungalow, you can get anytime in your life.. Any age.. You mint, borrow, steal, work.. whatever.
But you cannot setup a family for your ownself, at the age of 40 or 50. If that's possible, you have to be a NRI or money minting machine.
[ Romba unarchi vasapatana?.
Pesara pechu ellam chinna pulla thanama irukkunu kaipulla solvara?]
Thanks & Bye
Suddi.
கவிதா, அவர்களது பெற்றோர்களை கேட்க்க சொல்லுங்கள். அவர்கள் சொல்வார்கள், இவர்கள் எல்லாம் பிறந்த போது என்ன நிகழ்வுகள் நடந்தவைகள் என்றும். அன்றைக்கு இப்படி எல்லாம் கணக்கு பார்க்காமல் எப்படி இவர்களை அவர்கள் வளர்த்து எடுத்தார்கள் என்றும். வறுமையாகவே இருந்தாதுல் இப்படி சிறப்பாவே வளர வைத்த வித்தையை கற்றுக்கொடுப்பார்கள். எங்கே நம்பில் பலர் பெற்றோர் சொல்வதை எங்கே கேட்கிறோம்.
\\நட்புடன் ஜமால் said...
நல்ல விடயம்தாங்க இது
(அணிலு கொஞ்சம் அடங்கு)\\
ரீப்பிட்டே..!!
ஓகே... அம்மாக்கு இன்னைக்கு நைட் ஒரு கால போட வேண்டியதுதான் ;))
இவை எல்லாம் யோசித்து தான் முன்னவர்கள் ஆண், பெண் திருமணவயதை நிர்ணயித்து இருக்கிறார்கள். ஆனால் சம்பளம் குறைந்துவிட்டது, வேலை நிரந்தரம் இல்லை என்ற காரணங்களை வைத்துக்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்வதையும், திருமணத்தை தள்ளி போடுவதை சரியான முடிவாக எடுத்துக்கொள்ளவே முடியாது.//
அப்படி செய்து இன்று அனுபவிப்பவர்கள் அதிகம்.. நல்ல பதிவு
நம்ம கருத்து கவிதா அக்கா சொல்லிட்டாங்க.. எல்லோரும் கேட்டு நடங்கப்பா :-)
இன்னொரு விஷயம் தெரியுமா? இப்படி ஆள்குறைப்பு, சம்பளக்குறைப்பு காரணமாக, வாடகைத் தாயாக இருக்கவும், தன் கருமுட்டைகளை விற்கவும் திருமணமாகாத பெண்களே இப்போது முன்வருகிறார்களாம்.
//அடுத்து திருமணம், திருமணம் என்பது பொருளாதாரம் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயமா என்றால் இல்லை என்றே சொல்லுவேன்//
நீங்க சொன்ன இதுல, இத்தினியோண்டு தப்பு இருக்கு. திருமணம் என்பது பொருளாதாரம் சம்பந்தபட்டதுதான். ஏனெனில், எல்லா பெற்றோர்களும் தங்கள் அந்தஸ்து, தகுதி இவைகளுக்கு ஏற்ற மாதிரி சம்மாக இருக்கிற இடத்துலதான் சம்பந்தம் பண்ணுறாங்க. ஆனால், அப்படி திருமணம் செய்தாலும், கணவன் மனைவி ஆன பிறகு நாம் வாழ்கிற வாழ்க்கை பணம் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல.
அப்புறம், இந்த கருக்கலைப்பை பற்றி சொன்னீங்க.. குட். ஒரு சின்ன யோசனை சொல்லட்டுமா? கருக்கலைப்புக்கு வருகிற பெண்களை, நேரா அரசமரத்துக்கு கூட்டிட்டு போறோம். அங்க அரசமரத்துல குழந்தை வேண்டி கட்டியிருக்கிற தொட்டில்களை குறைஞ்சது ஒரு மணிநேரமாவது பார்க்கசொல்லனும். அந்த நேரத்தில அங்க அரசமரத்தை சுற்ற வருகிற பெண்களோடு பேசவும் வைக்கனும்,. அப்பதான் குழந்தையின் அருமை தெரியும்.
[ Romba unarchi vasapatana?.
Pesara pechu ellam chinna pulla thanama irukkunu kaipulla solvara?]
//
Suddi, டவுட் வேறவா? ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டுடீங்க.. அதனால் என்ன பரவாயில்லை என்னை விட குறைவு தான் :)))
கைப்பூ இந்த பக்கம் வரதே இல்ல இப்ப எல்லாம் :)
*******************
@ பனிமலர் - நன்றி.. நல்ல கருத்து சொல்லியிருக்கீங்க. .பெற்றோர் சொல்வதை கேட்டா ஏன் இந்த பிரச்சனை. ??
*******************
@ Choco, நன்றி
********************
@ ஜீ - இது நல்ல புள்ளைக்கு அழகு!! :) சோ ஸ்வீட்.. !!
***************************
@ ஜாக்கிசேகர் - நன்றி
***************************
@ உழவன் நன்றி
************************
//
அது வரையில் அப்பா அம்மாவை சமாளியுங்கள், அதற்கு மேல் நல்ல பிள்ளையாக இருங்கள், அதுக்கு தான் பயப்படறாங்க போல இருக்கு :)
//
அவங்க ஏன் பயப்படனும்?
அதான் ஒரு மூணு வருஷம் முடிஞ்சு வீட்டுல இந்த மேரேஜ் பிராசஸ்(பெண் தேடல் உட்பட) ஆரம்பிச்சாக நல்லது! நானும் நிச்சயம் நல்ல பிள்ளையா நடந்துகறேன்.
ஹை! யூத்விகடனில் இந்த பதிவா?
வாழ்த்துக்கள் கவிதா அக்கா!!
ஜமால் சார் இது ஏப்ரல் பூல் இல்லையே?
Hi Suddhi,
nowhere i mentioned about live together :) i didn't ask anybody to follow their life style either. all i meant was, can't we just take the good things from it?
//Suddi, டவுட் வேறவா? ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டுடீங்க..//
repeateiiiiiiiii :)
Mr.D
//ahaa....howcome u trust anil not me?!! :)))//
coz,anil often speaks our heart
:)))))
//Suddi, டவுட் வேறவா? ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டுடீங்க.. அதனால் என்ன பரவாயில்லை என்னை விட குறைவு தான் :)))//
since you asked, i trust you here :)))
//ம்ம்....வந்துட்டாங்கடா.. அறிவுரை அல்லி!! எல்லாரும் ஒன்னு செய்யுங்க...சம்பளம் வாங்கினாலும் வாங்காகாட்டியும், வேலை இருந்தாலும் இல்லாட்டியும் கல்யாணம் மட்டும் முதல்ல பண்ணிக்கோங்க, புள்ள குட்டி பெத்துக்கோங்க... அப்புறம் அம்மணி வீட்டு அட்ரஸ் கேட்டு, சைலன்ட்டா வந்து செட்டில் ஆயிடுங்க... ஹி ஹி.... உங்களையும் உங்க குடும்பத்தையும் அம்மணி பாத்துக்குவாங்க..!!//
ஏங்க..பெங்களூர் முழுக்க உங்களைதான் தேடுறாங்க.
அட்ரஸ் எப்போ தரப்போறீங்க..?
கருக்கலைப்பு என்பது கண்டிப்பாக கண்டிக்கதக்கது!
உங்கள் கருத்துகள் அனைத்தும் ஏத்துக்கதக்கது, அதோடு
குழந்தைகளை அவவோடு பெற்றுக்கொள்வது நாட்டும் விட்டுக்கும்
நல்லது. அதே சமயம் குழந்தை பெற்றுகொள்வது மட்டும் தான்
வாழ்கை என்றால் அதை ஏத்துக்க முடியாது.
அணில் குட்டி அனிதா கலக்கல் :)
நல்ல விஷயம் , நானும் பல பேரிடம் சொல்லும் செய்திதான் , ஆனால் எல்லோராலும் இதை பின்பற்ற முடியாது என்பதும் உண்மை , என்னை எடுத்து கொண்டால் , என்னுடைய தங்கையின் திருமணத்திற்காக நான் waiting , ஆமாம் கவிதா உங்களுக்கு திருமணம்ஆகிவிட்டதா
//ஆமாம் கவிதா உங்களுக்கு திருமணம்ஆகிவிட்டதா
//
சமுதாய துப்புரவாளன்..!! ஆமாம், ரொம்ப அவசியமாக நீங்க தெரிந்துகொள்ள வேண்டும் !!
எனக்கு திருமணம் ஆகி, குழந்தைகள் பெற்று, பேர குழந்தைகளும் பெற்றுவிட்டேன். எனக்கு வயது 53 ஆகிவிட்டது. இந்த தகவல் போதுமாங்க?!!
@ வாழவந்தான், ஜீவன் மிக்க நன்றி :)
எனக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது
எனக்கு வயது 29 அவங்களுக்கு24
குழந்தையை ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் தள்ளிப் போடலாமா சரியா தவறா
Post a Comment