காலையில் எழுந்தவுடன் மொபைல்'ஐ ஆர்வமுடன் எடுத்து மெஸேஜ் ஏதாவது வந்து இருக்கிறதா என்று பார்த்தேன்.. வேற ஒன்றும் இல்லை "மகளிர் தின" வாழ்த்துக்களுக்குத்தான்.
ஒன்றும் இல்லை. எழுந்து வெளியில் வந்தால், ஹாலில் எப்போதும் போல் நியூஸ் பேப்பர் கையுமாக என்னுடைய வீட்டுக்காரர். சரி அவர் விஷ் பண்ணுவார் என்று எதிர்பார்த்தேன். கண்டுக்கொள்ளவே இல்லை.
பல் விலக்கிவிட்டு திரும்பவும் வந்து அவர் முன்னே நின்றேன்... ம்ஹீம் ஒன்றும் கிடைக்கவில்லை. சரி நாமே சொல்லி நாமே வாழ்த்துக்களை வாங்கிக்கொள்ளலாம் என்று..
"ப்பா இன்னைக்கு விமன்'ஸ் டே"
பேப்பரை விட்டு கண்ணை எடுக்காமலேயே "..ம்ம்..இப்ப அதுக்கு என்ன?.."
"................."
திரும்பவும்..கொஞ்சம் சவுண்டாக.."ப்பா இன்னைக்கு விமன்'ஸ் டே' ன்னு சொல்றேன் இல்ல.."
"அதான் காது கேட்டுச்சே.. அதுக்கு என்ன இப்ப...."..
வெட்கம் மானம் எல்லாம் பார்த்தால் சரி வராது.. "எனக்கு நீங்க விஷ் பண்ணனும்.."
மெதுவாக பேப்பரைவிட்டு என்னை பார்த்தார்... "உனக்கு எதுக்கு விஷ் பண்ணனும்.."
"....விஷ் பண்ணுங்கன்னு கேட்ட பிறகும் ஏன்?.. ன்னு கேட்கறீங்க"..
"ஆமாண்டி அது எல்லாம் விமஸ்"க்கு டீ.." நீ ஏன் விஷ் பண்ண கேக்கற..."
".............."....... ஹாஆன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்...... விமன்ஸ் டே அதுவுமா என்னை காலங்காத்தால அழவச்சிட்டீங்க இல்லை......"
"சரி சரி ரொம்ப அழுவாத... ஹாப்பி வுமன்ஸ் டே.."
*****************
மெஸேஜ் ஒன்று வந்தது.. ஆஹா நிஜமாகவே நாம கேட்காம நம்மை யாரோ விஷ் பண்றாங்க..பாக்கலாம் என்று எடுத்து வாசிக்க...
"Happy Women's Day.......!! ... What special this women are going to do?!! on this day?"
இப்படி ஒரு வாழ்த்தை நான் கேட்டேனா?... அனுப்பியது வேறு யாருமில்லை அலுவலக நண்பர்.
***************
இருப்பினும் நான் கேட்காமல் என்னை நினைவில் வைத்து சிங்கபூரிலிருந்து ஒரு ப்ளாகரும்... இங்கிருந்து ஒரு ப்ளாகரும் வாழ்த்து அனுப்பி வைத்து இருந்தார்கள்.
இன்று சிபியின் வாழ்த்து கிடைத்தது. சிபி அனுப்பிய வாழ்த்து "அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் "
சும்மா இருக்க முடியுமா.. என்ன சிபி "அனைவருக்கும்" னு போட்டு அனுப்பி இருக்கீங்க.. மகளிர் தினம் மகளிர்' க்கு மட்டும் தானே என்று கேட்க...
"ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லும்போது வாழ்த்துக்கள் மகளிர்க்கு மட்டுமா வேண்டும்?" இது சிபி'யின் பதில்...
இப்படித்தான் தாங்க.. மகளிர் தினமும் அதன் வாழ்த்துகளும் போச்சி.."
அணில்குட்டி அனிதா:- ம்ம்.. இதுக்கு தான் அவங்களே வாழ்த்தட்டும் னு பேசாம இருக்கனும்..கேட்டு பல்பூ வாங்கறது கவிக்கு என்ன புதுசா..?!
பீட்டர் தாத்ஸ் :- Woman is the companion of man, gifted with equal mental capacity. -GANDHI
மகளிர் தினம் எப்படி போயிற்று?!!
Posted by : கவிதா | Kavitha
on 12:06
Labels:
பழம்-நீ
Subscribe to:
Post Comments (Atom)
41 - பார்வையிட்டவர்கள்:
//சிபி அனுப்பிய வாழ்த்து "அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் "//
சிபியண்ணே, உங்களுக்கு "மகளிர் தின வாழ்த்துகள்"
//Woman is the companion of man, gifted with equal mental capacity. //
மெண்டல் கெபாசிட்டியா ? அல்லது மெண்டலாக்குற கெபாசிட்டியா?
சமத்துவம் பேசிய அண்ணன் சிபிக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்...
அனைவரும் சார்பாக...
சிபி -க்கு.."மகளிர் தின வாழ்த்துகள்"
:))
//மெண்டல் கெபாசிட்டியா ? அல்லது மெண்டலாக்குற கெபாசிட்டியா?//
இரண்டும் தான் :)
மகளீர் தின வாழ்த்துகள்
ஆமா! யாருக்கு
ஹையோ! மறந்துடுச்சே!
காலையில் எழுந்தவுடன் மொபைல்'ஐ ஆர்வமுடன் எடுத்து மெஸேஜ் ஏதாவது வந்து இருக்கிறதா என்று பார்த்தேன்\\
எத்தனை மணிக்கு! :)
\\சரி சரி ரொம்ப அழுவாத... ஹாப்பி வுமன்ஸ் டே.\\
ஹா ஹா ஹா
அழததுனால சொன்னாரோ :)
\\ம்ம்.. இதுக்கு தான் அவங்களே வாழ்த்தட்டும் னு பேசாம இருக்கனும்..கேட்டு பல்பூ வாங்கறது கவிக்கு என்ன புதுசா..?! \\
யக்கோவ்! எங்களுக்கும் பல்பூ வேணும் எல்லாத்தையும் நீங்களே எடுத்துகுனா எப்படி ...
\\இருப்பினும் நான் கேட்காமல் என்னை நினைவில் வைத்து சிங்கபூரிலிருந்து ஒரு ப்ளாகரும்... இங்கிருந்து ஒரு ப்ளாகரும் வாழ்த்து அனுப்பி வைத்து இருந்தார்கள்.\\
நல்லவங்களா இருக்கும் ...
\"ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லும்போது வாழ்த்துக்கள் மகளிர்க்கு மட்டுமா வேண்டும்?" இது சிபி'யின் பதில்... \\
சி.பி அண்ணே
சமம் - இப்படி இருக்கத்தான் ஆசைப்படுகிறோம்
எல்லோரும் சமம் என்றால் பெண்ணுக்கு மட்டும் என்ன தனி தினம்
தினம் தினம் தான் வாழ்த்தனும்
வாங்கிக்கனும் கொடுத்துக்கனும்
//யக்கோவ்! எங்களுக்கும் பல்பூ வேணும் எல்லாத்தையும் நீங்களே எடுத்துகுனா எப்படி ...//
உங்களுக்கு எல்லாம் கொடுக்கனும்னு தான் எனக்கு ஆசை ஜமால்.. ஆனா என்ன செய்யறது.. எல்லாமே எனக்கே கிடைக்குது.. :((
//நல்லவங்களா இருக்கும் ...//
ஆமா என்னை பற்றி தெரிந்தும் அனுப்பறாங்களே அப்ப நல்லவங்க தான்.. :)
//ஹா ஹா ஹா
அழததுனால சொன்னாரோ :)//
அழுது மட்டும் சீன் போடலன்னா.. கண்டிப்பா வாழ்த்து கிடைத்து இருக்காது.. :)
//மகளீர் தின வாழ்த்துகள்
ஆமா! யாருக்கு
ஹையோ! மறந்துடுச்சே!//
எல்லாம் இந்த சிபியோட வேலை.. எப்படி கன்ஃபியூஸ் பண்ணிட்டாரு ?!
//எல்லோரும் சமம் என்றால் பெண்ணுக்கு மட்டும் என்ன தனி தினம்//
அதானே?!! ஆமா இந்த கேள்வி சிபிக்கு தானே?!!
//ஆமாண்டி அது எல்லாம் விமஸ்"க்கு டீ.." நீ ஏன் விஷ் பண்ண கேக்கற..."//
யக்கோவ், மாமாவுக்கு காமெடி நல்லா வருதே. அவருக்கு என் வாழ்த்துகள சொல்லிடுங்க...:)
உங்களுக்கும் என் மகளிர் தின வாழ்த்துகள்:)
WELCOME BACK jamal :-)
\\அதானே?!! ஆமா இந்த கேள்வி சிபிக்கு தானே?!!\\
அவருக்கே தான்
கேட்டாக்கா என்ன சொல்வார் தெரியுமா
ஹையோ! நான் சொல்ல மாட்டேன் ...
\\ KVR said...
WELCOME BACK jamal :-)\\
பின்னாடில்லாம் வரமாட்டோம்
//\\ KVR said...
WELCOME BACK jamal :-)\\
பின்னாடில்லாம் வரமாட்டோம்//
:-))))
//"ஆமாண்டி அது எல்லாம் விமஸ்"க்கு டீ.." நீ ஏன் விஷ் பண்ண கேக்கற...//
இத்தனை வருஷம் குடும்பம் நடத்தி கரெக்டா புரிஞ்சி வெச்சிருக்காரு!
:)
//\ KVR said...
WELCOME BACK jamal :-)\\
பின்னாடில்லாம் வரமாட்டோம்//
"LoL"
இப்படி போட்டாத்தான் சந்தனமுல்லைன்னு ஒத்துக்குவோம்!
//சமம் - இப்படி இருக்கத்தான் ஆசைப்படுகிறோம்
எல்லோரும் சமம் என்றால் பெண்ணுக்கு மட்டும் என்ன தனி தினம்//
பஸ்ல கூடத்தான் மகளிர்க்குன்னு இருக்கைகள் ஒதுக்கப் பட்டிருக்கு! அங்கே ஏன் தனியா ன்னு கேட்டமா! அந்த மாதிரி இதுவும்!
மகளிர்க்கென்று ஒரு தினம்!
மத்ததெல்லாம்..........ஹிஹி!
கொளுத்திப் போட்டாச்சு!
//கொளுத்திப் போட்டாச்சு!//
சிபி உங்களுக்கு வேற வேலையே இல்லையா.. இப்படி கொளுத்தி போட்டே காலத்தை ஓட்டுங்க.. ம்ம். .நல்லாயிருங்க.. !!
\\
"LoL"
இப்படி போட்டாத்தான் சந்தனமுல்லைன்னு ஒத்துக்குவோம்!\\
ஆமா! ஆமா!
"LoL"
இப்படி போட்டாத்தான் சந்தனமுல்லைன்னு ஒத்துக்குவோம்!//
"rofl" லை விட்டுட்டீங்களே?!!
\\பஸ்ல கூடத்தான் மகளிர்க்குன்னு இருக்கைகள் ஒதுக்கப் பட்டிருக்கு! அங்கே ஏன் தனியா ன்னு கேட்டமா! அந்த மாதிரி இதுவும்!\\
அண்ணே நான் ஒரு பதிவே எழுதிக்கிட்டு இருக்கேன் இத பற்றி
//சமத்துவம் பேசிய அண்ணன் சிபிக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்...//
மாப்பி என்ன இது? என்னைப் போயி அண்ணன்னு சொல்லிகிட்டு!
//நாமக்கல் சிபி said...
.....
இப்படி போட்டாத்தான் சந்தனமுல்லைன்னு ஒத்துக்குவோம்!
அண்ணே ..ஏன் இந்த கொலவெறி?!
பாம்பின் கால்? :-)
//சிபி உங்களுக்கு வேற வேலையே இல்லையா.. இப்படி கொளுத்தி போட்டே காலத்தை ஓட்டுங்க.. ம்ம். .நல்லாயிருங்க.. !!//
கொளுத்திப் போடுதல் நம் தொழில்!
அடித்துக் கொள்ளுதல் அடுத்தவர் தொழில்!
//
"rofl" லை விட்டுட்டீங்களே?!!//
அது rofl இல்லை..ROTFL! ok vaa! யப்பா..வயசானவங்க தொல்லஒ தாங்க முடியலைப்பா..நவீன் எப்படிப்பா சமாளிக்கறே!! :-)
//நாமக்கல் சிபி said...
//சமத்துவம் பேசிய அண்ணன் சிபிக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்...//
மாப்பி என்ன இது? என்னைப் போயி அண்ணன்னு சொல்லிகிட்டு!//
அண்ணனு சொல்லாம.. அக்கானு சொன்னா ஓக்கேவா?
அளவில்லா (கவிதா மன்னிக்க)கேள்வியுடன்..
ரங்கன்
//அது rofl இல்லை..ROTFL! ok vaa! யப்பா..வயசானவங்க தொல்லஒ தாங்க முடியலைப்பா..நவீன் எப்படிப்பா சமாளிக்கறே!! :-)//
ஆமா டி விட்டுபோச்சி.. :)
நீங்க எல்லாம் எப்படி சமாளிக்கறீங்களோ அப்படித்தான் நவீனும் சமாளிக்கறான்.. :)
\அது rofl இல்லை..ROTFL! ok vaa! யப்பா..வயசானவங்க தொல்லஒ தாங்க முடியலைப்பா..நவீன் எப்படிப்பா சமாளிக்கறே!! :-)\\
ஆஹா! ஆஹா!
வயசானவங்களா!
ஆமா எனக்கு 53 முடியபோகுது அதான் முல்லை அப்படி சொன்னாங்க..
ஜமால்.. 53 முடிஞ்சா வயசானவங்க தானே?!! :)
நான் 4+3ன்னு 43தானே நினைத்தேன் ...
ஞாபகம் இருக்கா ...
நான் 4+3ன்னு 43தானே நினைத்தேன் ...
ஞாபகம் இருக்கா ...//
அடப்பாவி!! அப்ப கேட்கும் போது சொல்லவே இல்ல.. அப்ப பல்பா?!!
சரி சரி.. இப்ப சொல்றேஎன் 5 + 3 = 53 ஒகே... :)
\\அடப்பாவி!! அப்ப கேட்கும் போது சொல்லவே இல்ல.. அப்ப பல்பா?!! \\
லேஸா பயம் தான் அப்போ!
//லேஸா பயம் தான் அப்போ! /
ஓ இப்ப பயம் போச்சா???? நானே வயசை சொல்லிட்டதால்?? :)
ம்ம் நடத்துங்க.. :)
இந்த முறை அணில்குட்டி,பீட்டர் தாத்ஸ் விட காந்தி தாட்ஸ் அசத்தல்.
(பாராளுமன்றத்துல மட்டும் 30% உரிமைகள் கேட்டாப் போதாது.பதிவு திசையிலும் பெண்கள் நிறைய எழுத வரவேண்டும் என்ற வாழ்த்துக்களுடன்
ஒவ்வொரு பெண் பதிவர் வீட்டுக்கா போய் வாழ்த்து சொல்ல நேரம் இல்லாமல் அனைத்து பெண் பதிவர்களுக்கும் மகளிர் தினம் வாழ்த்துக்கள்.)
Post a Comment