நேற்று மதியம் மொபைலில் அழைப்பு வந்தது, நம்பர் புதிது......

ஹல்லோ.....

ஹல்லோ நான் ஜே.கே.. பேசறேன்..

:))) ஹே என்னப்பா தீடீர்னு ஃபோன்? எப்படி இருக்கீங்க..? பூனே ல தானே இருக்கீங்க..?

:)) ஆமா..ஹப்பி எப்படி இருக்காரு. நவீன் எப்படி இருக்கான்..?!!

எல்லாரும் சூப்பர்.. ஹப்பி மும்பை வந்தவுடன் உங்களுக்கு ஃபோன் செய்து சொன்னேனேப்பா.. மறந்துட்டுடீங்களா? சரி என்ன கல்யாணமா.. எவ்வளோ நாள் கழிச்சி பேசறீங்க? :)))

அட ஆமா.. எப்படி ? முன்னவே தெரிஞ்சி கேக்கறீங்களா.. கணேஷ் சொன்னானா..

ம்ம் நீங்களாவது பூனே ல இருக்கீங்க பேசறது இல்ல.. தலைவர் இங்க இருந்துக்கிட்டே பேசறது இல்ல... அவரு எல்லாம் சொல்லல.. எல்லாம் மனசு சொல்லுது.. நீங்க ஹ்ல்லோ சொன்ன சந்தோஷத்துல தெரியுது... :)))

ஹா ஹா ஹா ஹஹா...

(ஜெ.கே எப்பவும் இப்படித்தான் வாய்விட்டு..ஹா ஹா ஹா.. வென்று சிரிப்பார்கள், குரல் ரொம்ப மேன்லியாக இருக்கும், பார்க்க கொஞ்சம் சியான் விக்ரம் மாதிரி இருப்பாங்க..)

சரி வெண்ணிலா எப்படி இருக்காங்க.. ?

யாரு வெண்ணிலா..?

ஓ சாரி பேரை மறந்துட்டேனா?

உதயா'வா? அவங்களுக்கு என்ன சூப்பரா இருக்காங்க..

ஒன்னும் ப்ராப்ஸ் இல்லயே ஜே.கே.. எல்லாம் ஓகே தானே.. என்ன 7 வருஷம் லவ் பண்ணி இருப்பீங்களா?

ஹா ஹா ஹா..... ஆமா ஆமா..7 வருஷம்...ம்ம்..எல்லாரோட சம்மதத்தோட தான்..

ம்ம்...நீங்க ஏழு வருஷம்,அதுல கண்டிப்பா இரண்டு வருஷம் நானும் உங்க கூட சேர்ந்து உதயா வை லவ் செய்து இருப்பேன் இல்ல.... :)) ஸ்ஸ்ஸ் போதும்டா சாமி பயந்து பயந்து பேசினது அந்த பொண்ணு மட்டுமா.. அவங்க அப்பா ஃபோன் எடுத்தாக்க இங்க எனக்கு உடம்பு நடுங்கும்..தெய்வம்ப்பா நீங்க..என்னைய பேச விட்டுட்டு நீங்க கூல் லா இருப்பீங்க........:)

ஹா ஹா ஹா ஹா... ஆமா.. நீங்க இல்லன்னா எங்க காதல் ஏது..? சரி கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துடனும் நானே டிக்கட் புக் பண்ணிடறேன்.. தங்க எல்லாம் ஏற்பாடும் பண்ணிடறேன்.. நம்ம க்ரூப் எல்லாரும் வருவாங்க.. .

ஆமா அப்ப எல்லாம் ரொம்ப நல்லா இருந்தது இல்ல ஜே.கே ?.. நல்லா என்ஜாய் பண்ணோம் இப்ப பிச்சிப்போட்ட மாதிரி எங்க எங்கயோ இருக்கோம்...

ஜனா பேசறானா.. ?

ஹா ஹா.. எங்க ..அவரு ரொம்ப பிசி... ஒய்ஃப் னா வேற பயம்..:) சோ பாவம் னு விட்டுடறது..

ஹா ஹா ஹா.. ஓ ஒய்ஃப் னா பயம்மா... இது தெரியாதே எனக்கு... :ஹா ஹா..ஹா ஹா...

மொட்ட மோகன் அமெரிக்கா தானா.. கல்யாணம் ஆயிடுத்தா ஜே.கே.? Nift ஐ தாண்டுபோது எல்லாம் எனக்கு மொட்ட மோகன் ஞாபகம் தான் வரும்.. கருமமே கண்ணா பொண்ணுங்களை சைட் அடிச்சிக்கிட்டு நிப்பாங்களே..?!! :))

ஹா ஹா ஹா ஹா.. கல்யாணம் ஆகல லாஸ்ட் வீக் பேசினேன்.. இதே மாதிரி தான் அப்ப நடந்தது.. நம்ம எல்லாரையும் பத்தி பேசிக்கிட்டு இருந்தோம்.. ரொம்ப நல்லா இருந்தது.. நெஜமா ஸ்வீட் டேஸ்......

பிரகாஷ்? .உங்களுக்கு தெரியும் இல்ல நானும் அவனும் அப்பவே பேசறது இல்ல.. செம சண்டை, கணேஷ் எதிர்ல வச்சி நல்லா திட்டிவிட்டுட்டேன். .ரொம்ப பொஸஸிவ் வா இருக்க ஆரம்பிச்சான்.. செமத்தியா வாங்கிக்கட்டினான்.. அதுக்கு அப்புறம் பேசறது இல்ல.. ஆனா கணேஷ் அவனை பத்தி அப்டேட் செய்வாங்க....

ஹா ஹா. .நீங்க வேற நீங்க வேலைய விட்டு போன பிறகு அவன் ரொமபவே மாறிட்டான்.. ரொம்ப இன்டர்ன்ல் பாலிடிக்ஸ்.. தாங்கமுடியல எங்களால.. அவன் கூட எனக்கும் கான்டாக்ட் சுத்தமா இல்ல.. இன்ஃபி ல இருக்கான்னு தெரியும். ஆமா உங்களுக்கு ஆக்ஸிடட் ஆச்சே கால் நல்லா நடக்க வருதா... இப்ப வண்டி எப்படி ஓட்டறீங்க.. சீபீட் குறைஞ்சு இருக்கா.. ?


ஸ்பீட் எல்லாம் குறையுமா? என்னை போய் இப்படி கேள்வி கேட்கறீங்களே...ஜே.கே அதான் நீங்க, ஜனா, கணேஷ், சாவித்திரி வந்து பாத்துட்டு போனீங்களே.. அதுக்கு அப்புறம் இன்னொரு ஆக்ஸிடன்ட் கூட நடந்துடுத்து.. :)) தெரியுமா? ஆனா பழசு பெரிய ஆக்ஸிடன்ட் டா இருந்தாலும் வெளியில சொல்லிக்கிற மாதிரி இல்ல.. இந்த ஆக்ஸிடன்ட் ஆனது தான் ரொம்ப பெருமையா இருக்கு?

????? இது வேறையா ஆக்சிடண்டல என்னங்க பெருமை.. ? :(

பின்ன.. மவுண்டு ரோடு ல இல்ல ஆச்சி..ஆக்ஸிடன்ட் ஆனாலும் அண்ணாசாலை யில் ஆகனும்.. ஆஹா.. என்னா ஒரு மன திருப்தி தெரியுமா..? அந்த ஆக்ஸிடன்ட் க்கு அப்புறம் மவுண்ட் ரோடே எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சி.. எவ்வள்வு டிராபிக், எவ்வளவு வண்டிகளுக்கு நடுவுள, நட்ட நடு ரோடுல சும்மா கும்முன்னு படுத்து எழுந்து வரது சும்மாவா? I enjoyed.. பா...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.. முடியலைங்க.. ஏங்க..?

ஜெ.கே நாம எல்லாரும் இப்படி சிரிச்சி பேசி எவ்வளவு நாள் ஆச்சி... அப்ப எல்லாம் தினம் தினம் இப்படி சிரிச்சி கும்மாளம் அடிப்போம்..

ம்ம்..ஆமாம்.. நம்ம செட் கண்டிப்பா கல்யாணதுக்கு வருவாங்க..நீங்க கண்டிப்பா வந்ததுடனும்.. மறக்க எல்லாம் சான்ஸ் இல்ல.. நான் கல்யாணம் முடியறவரை ஃபோன் போட்டு உங்களுக்கு நினைவு படுத்திக்கிட்டே இருப்பேன்.. விடமாட்டேன்..

ம்ம்..கணேஷ் எதுக்கு இருக்காரு..அவர் கிட்ட சொல்லி வச்சிடறேன். .அவர் போகும் போது என்னையும் கூட்டுட்டு போகட்டும் ஜனா பத்தி எனக்கு தெரியாது.. :) வந்தால் பாத்துக்கலாம்.

சரி...ஆபிஸ் கிளம்பனும்.. டேக் கேர்.. பை..பை

யூ டூ.. உதயா'க்கு என்னோட ஹக்ஸ்... பை பை..!!

***********************

அந்த அலுவலகத்தில் நான் நுழைந்த போது மேல் சொல்லிய நண்பர் முதற்கொண்டு அங்கிருந்த அத்தனை இளைஞர்களும் என்னை கடுகடுவென பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது. நான் non-tech, அவங்க 8 பேரும் tech அதில் ஒரே ஒரு பெண், ஆனா அந்த பெண்ணிற்கும் இந்த 8 இளைஞர்களுக்கும் ட்ர்ம்ஸ் சரி இல்லை. அந்த பெண் வந்து தான் என்னை உள்ளே அழைத்து சென்றாள். கண்ணாடியால் ஆனா அறை. உள்ளேயிருந்து நாங்கள் அவர்களையும், வெளியிருந்து அவர்கள் எங்களையும் பார்க்கமுடியும். அறிமுகமே இல்லை இந்த பெண் வெளியில் இருந்த ஒருவர் ஒருவராக கண்ணாலேயே அடையாளம் சொல்லி சொன்னாள் அதில் அவளுக்கு முதல் எதிரி மொட்ட மோகன் தான். :)

"எல்லாமே திமிரு பிடிச்சதுங்க. .பொண்ணுங்கன்னா அதுங்களுக்கு இளக்காரம்.. மட்டமா நினைக்கற கேசுங்க.. .நம்மாளையும் அதுங்கள மாதிரி இருக்கமுடியும்னு நான் ப்ரூவ் பண்றேன் இல்ல அதான் என்னை கண்டா அதுங்களுக்கு பிடிக்காது ..இப்ப எனக்கு துணையா நீங்க வேற வந்துட்டீங்க இல்ல.. அதான் அப்படி பார்க்கறானுங்க.. "

"...ம்ம்..."

ஜனா தான் முதலில் உள்ளே வந்தார். அவராகவே ஹல்லோ கவிதா வாங்க.. ஹெட் ஆபிஸ் ல சொன்னாங்க நீங்க இனிமே இங்கத்தான் இருப்பீங்கன்னு... வாங்களேன் .எல்லாருக்கும் இன்ரோ கொடுக்கிறென்....

இப்படியாக ஆரம்பித்த எங்கள் நட்பு.. ஒரு காலக்கட்டத்தில் இணைபிரியாத நண்பர்களாக்கி விட்டது. அதில் சில மறக்கமுடியாத நிகழ்வுகள்

பசங்க சாப்பிட ஆந்திரா மீல்ஸ் வாங்கிட்டு வருவாங்க என்னோட லஞ்ச் எப்போதும் ஜே.கே இல்ல வேறு யாராவது சாப்பிடுவாங்க.. எனக்கு ஆந்திரா மீல்ஸ் தான் கிடைக்கும்.. அதில் என்ன ஹைலைட் என்றால், எர்த் ஸ்டேஷன் என்பதால் அங்கு தேவையான தட்டுகள் எல்லாம் இருக்காது அதனால், மீல்ஸ் பாக்கெட் டை அப்படியே திறந்து வைத்து 5 பேர் ஒரே இலையில் சாப்பிடுவோம். சாதம் ஒதுக்கி ஒதுக்கி தேவையானதை போட்டு சாப்பிடுவோம். . அதில் அவர்கள் நிறைய சாப்பிடட்டும் என்று நான் குறைவாக எடுப்பேன்.. அதையே ஒவ்வொருவரும் செய்வோம்.. சாதம் குறையாமல் அப்படியே இருக்கும். .கடைசியாக சண்டை போட்டு நீ சாப்பிடு, நான் சாப்பிடறேன் ல வந்து .பிறகு ஓருவழியாக சாப்பிட்டு முடிப்போம்.

என்னை 8 பேரும் கவனிப்பாங்க பாருங்க.. தாங்க முடியாது.. 10 நிமிடம் லேட்டா ஆபிஸ் வந்தா பயப்படுவாங்க. . எல்லோரும் வண்டியல எங்கேயாவது வெளியில் போகலாம் என்றால் வேண்டாம் கவி போற ஸ்பீடுக்கு தேவையில்லாம ரிஸ்க் எடுக்க வேண்டாம் நாம் வேன் அரேன்ஜ் செய்து போலாம் என்பார்கள். கொஞ்சம் சத்தமாக பேசினால்..ஜனா வும் ஜே.கே வும் முதலில் வந்து நிற்பார்கள். .நாங்க பார்க்கிறோம். நீங்க ஏன்.. சத்தம் போடறீங்க நாங்க பாத்துக்கறோம்.. கூல் என்பார்கள்.

இது இல்லாமல் அனைவரும் நவீனுக்கு ரொம்ப க்ளோஸா இருந்தார்கள். மொட்ட மோகன் படிப்பு விஷயமாக எப்பவும் நவீனுடன் பேசுவாங்க. .பாசம்னா அது ஜனா தான். .நவீன் ஜனா ன்னு சொன்னா போதும் அப்படியே உருகிடுவான்...

மாலையில் ஷெட்டில் காக் விளையாடுவோம்.. ஜனா மட்டும் வந்து "கவிதா போதும் குதிச்சது. .கிளம்புங்க, ..ஜே.கே அவங்க தான் குதிக்கறாங்கன்னா அவங்கள பத்தி தெரியும் இல்ல, நீயும் விளையாடிட்டு இருக்க....போதும்.. பேட்டை கொடுங்க நான் அவன் கூட விளையாடிக்கிறேன்.. என்பார். ஜே.கே..வும் ஆமா ஆமா இன்னைக்கு இது போதும் நீங்க கிளம்புங்க என்பார். எனக்கு சிரிப்பு தாங்காது.... சரி விளையாடல..ன்னு வந்துடுவேன்.

எதற்குமே ஏன் னு அவர்கள் யாரையுமே கேட்டது இல்ல. எங்களுக்குள் (பிரகாஷ் தவிர்த்து)இதுவரை சண்டையோ மன வேறுபாடோ வந்தது இல்லை.. 8 பேர் ல யார் எதை செய்ய வேண்டாம் னு சொன்னாலும் செய்ய மாட்டேன். .விட்டுடுவேன். அவங்க பாத்துக்குவாங்க என்ற் நம்பிக்கை.. எனக்கு எப்பவும் அவங்க நல்லது தான் செய்வார்கள் என்ற நம்பிக்கையும்.

அவர்களில் ஒருவராக நான் இருந்தது இப்போது நினைத்தாலும் மறக்கமுடியாத ஒரு வசந்த காலம் தான்.. :))

அணில் குட்டி அனிதா:-.. ஓரு ஃபோனுக்காஆஆ ?????

பீட்டர் தாத்ஸ் : “Many people will walk in and out of your life, but only true friends will leave footprints in your heart”