அடர்ந்த இருட்டில்
அடிமனதில் ஓலமிட்டு
ஓவென்று
கத்தும் அந்த சத்தம்
மெளனம்..!!
கண்களை திறந்து
நல்ல வெளிச்சத்தில்
சத்தத்தை நிறுத்த முயன்று
அது சுனாமியாக
பெருக்கெடுக்க
இன்னமும்
மெளனம்..!!
இறைவா
இதுதான்
மெளனமா?!!
அமைதியாக ஆழ்ந்து
அற்பமனிதர்களின் சிந்தனை
அறவே அழித்து
ஆற்றல் அத்தனையும்
ஒருங்கினணத்து
ஒற்றையாக உணர்ந்த
அந்த வினாடி துளிகள் -
வெண்மை படர்ந்த
வானத்திற்கு அடியில்
வெண்ணிற ஆடையிலே
எடையே இல்லாத
உடலுடன்
மலையின் உச்சியில்
அமர்ந்திருக்க...
முகத்தை வருடி
மேகம் கூட்டம் செல்ல
மேகத்தை தழுவிய காற்று
சில்லென்று என்னையும் தழுவ...
ஆராவாராம் இல்லாத
மெல்லிய தென்றல்
பூக்கள் வாசம் அத்தனையையும்
என் மூச்சருகே
கொண்டுவந்து சேர்க்க..
அவ்வாசத்தில் மயங்கி
நானும்
நித்திரை செல்ல
கொஞ்சம் கொஞ்சமாக
தழுவுகிறது
மெளனம்.....!!
நிச்சயமாக
இது தான்
இறைவா
மெளனம்...!!
36 - பார்வையிட்டவர்கள்:
me the first:)))))))))
கவிதாக்கா... இந்த கவிதைல தியானம் பத்தி தானே சொல்லியிருக்கீங்க?கரெக்ட்டா என் யூகம்?
இல்லப்பா... ரீனா..
நாம் மெளனமாக இருக்கிறோம் என்று பலநேரம் நினைப்போம்..
ஆனா.. ஆழ்ந்து பார்த்தால்..அப்படியில்லை..
நாம் எதையாவது உள்ளுக்குள்ளே அசைப்போட்டுக்கொண்டே இருப்போம்..
அது தான் மெளனத்திலும் நம் உள்ளே கேட்கிற சத்தம்..
இந்த சத்தமும் இல்லாமல்
மெளனமாக நாம் இருந்துவிட்டால்
அது தான் உண்மையான் மெளனம்..
:)
தியானம் - இன்னும் முழுமையாக கற்றுகொள்ளவில்லை . :)
மனசு இன்னும் அலைபாய்ந்துக்கொண்டே தான் இருக்கு..அதான் உட்கார்ந்து தியானம் செய்ய முடியவில்லை..
தியானமும் - மெளனமும் ஒன்று அல்ல.. :)
புரியுது... கண்டிப்பா தியானமும் மவுனமும் ஒன்றில்லை தான். அதைத்தான் தியானம் செய்யும் போது உணர்ந்து இப்படி எழுதியிருக்கீங்கனு நெனச்சேன்...
சரி... வாழ்த்துக்கள் கவிதாக்கா... உங்கள் தியானம் முழுமை பெற...அழகிய கவிதை... ம்ம்ம்... முதமுறையா ஒரு கவிதைய ஒழுங்கா புரிஞ்சுக்கிட்டேன்னு சந்தோஷப்பட்டேன்:(((
எப்படியோ.. கொஞ்ச நேரமாச்சும் வாய மூடிட்டு இருந்தீங்களே.. அது போதும்.
தொண்டை வலி தானே இந்த கவிதைக்கு காரணம் ?
அதனாலதான் எங்க ஊருல செம மழை போல..?!
கவிதாயினி கவிதா..
உங்கள் கவிதை சூப்பரு..
வாழ்த்துக்கள்..
//ஒரு கவிதைய ஒழுங்கா புரிஞ்சுக்கிட்டேன்னு சந்தோஷப்பட்டேன்:(((
//
எதுக்கு இந்த சோகம்.. ?!! சிரிங்க சிரிங்க..
மெளனம் என்பது
மெளனம் அல்ல
அதை
உணரும் வரை !!
இது ரீனாக்காக.. இது உங்களுக்கு புரியும்..சோ.. சிரிங்க சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க.. :) சரியா !!
//தொண்டை வலி தானே இந்த கவிதைக்கு காரணம் ?
//
எனக்கு உடம்பு சரியில்லை தான் ஆனா அதை வைத்து நைசா ஒரு போஸ்டு போட்டுட்ட.. இப்ப பின்னூட்டம் போடற.. இதுக்கு எல்லாம் டாக்டர் கிட்ட நான் கட்டின பில்லுக்கு பேமெண்டு முதல்ல நீ அனுப்பு..
//அதனாலதான் எங்க ஊருல செம மழை போல..?!//
தொண்டக்கட்டியும் நான் பேசமா இல்லன்னு இங்க இரண்டு பேரு என்னை திட்டிக்கிட்டு இருக்காங்க.!!
நான் தொண்டவலின்னு பேசாமல் அமைதியா இருப்பேன்ன்ன்னு நீயே நினைச்சிக்கிட்டியா? ஹா ஹா.. ஹய்யோ..ஹய்யோ..!!
குழந்தாய் நீ இன்னும் வளரவேண்டும்.. !! :)
----------------------
//கவிதாயினி கவிதா..
உங்கள் கவிதை சூப்பரு..
வாழ்த்துக்கள்..//
முன்னமே ஒரு கவிதாயினி இருக்காங்க.. நீ தேவை இல்லாமல் கன்பியூஸ் பண்ணாத..கிளம்பு...!!
கவிதா இனி - கவிதாயினி
மெளனம் - கற்பிதம்.
\\ஆராவாராம் இல்லாத
மெல்லிய தென்றல்
பூக்கள் வாசம் அத்தனையையும்
என் மூச்சருகே
கொண்டுவந்து சேர்க்க..\\
படிக்கும் போதே வாசம் வருகிறது
\\நானும்
நித்திரை செல்ல
கொஞ்சம் கொஞ்சமாக
தழுவுகிறது\\
நித்திரை - இயல்பு நிலையா?
//இல்லப்பா... ரீனா..
நாம் மெளனமாக இருக்கிறோம் என்று பலநேரம் நினைப்போம்..
ஆனா.. ஆழ்ந்து பார்த்தால்..அப்படியில்லை..
நாம் எதையாவது உள்ளுக்குள்ளே அசைப்போட்டுக்கொண்டே இருப்போம்..
அது தான் மெளனத்திலும் நம் உள்ளே கேட்கிற சத்தம்..
இந்த சத்தமும் இல்லாமல்
மெளனமாக நாம் இருந்துவிட்டால்
அது தான் உண்மையான் மெளனம்..//
கவிஞர் ஆகறதுக்கான முதல் தகுதியிலேயே அடி வாங்கிட்டிங்களே. கவிஞர்ன்னா கவிதை எழுதணும், ஆனா வெளக்கமெல்லாம் சொல்லப்படாது. படிக்கிறவங்க மண்டைய ஒடச்சிக்கிட்டு எதாவது கருத்துச் சொல்லிக்கிட்டு இருக்கணும். கவிஞர் அதை வாய்மூடி "மௌனமா" ரசிக்கணும். அப்போ தான் பெரிய கவிஞர்ன்னு படிக்கிறவங்க நெனைப்பாங்க.
//நித்திரை - இயல்பு நிலையா?//
இது கவிதைக்காக... :)
//கவிஞர் அதை வாய்மூடி "மௌனமா" ரசிக்கணும். அப்போ தான் பெரிய கவிஞர்ன்னு படிக்கிறவங்க நெனைப்பாங்க.//
விளக்கம் சொன்னது என்னவோ தப்பு தான்..சொல்லாமல் இருந்து இருந்தால் ரீனா.. சோகத்தோட. போயிருக்கமாட்டாங்க இல்ல ..!!
//கவிதா இனி - கவிதாயினி//
ஏன்ன்ன்ன்ன்...?!!
ஜமால்..நீங்களுமா..?!!
//படிக்கிறவங்க மண்டைய ஒடச்சிக்கிட்டு எதாவது கருத்துச் சொல்லிக்கிட்டு இருக்கணும்//
அடுத்தவர்களுக்கு நாம் எழுதறது புரியவே கூடாதுன்னு சொல்றீங்க.. ம்ம்ம் நல்லது.. இனிமே ட்ரை பண்றேன்.. :))
//மெளனம் - கற்பிதம்.//
உண்மை.. ரொம்பவும் அனுபவம் தேவை...
இப்படியும் சொல்லலாம்..
அனுபவம் கிடைக்க கிடைக்க...
கற்க கற்க...
மெளனம் பழகும்.. :)
ரைட்டு....நல்லாயிருக்கு குஜீ ;)
சப்தமில்லாத இடம் எது என்று பார்த்தால்... ம்ஹூம்... எங்கென்று தெரியவில்லை... ஏனெனில் அபப்டியொரு இடம் இருப்பதாகவே தெரியவில்லை..
மெளனம் என்பது ஒரு மொழி. அது இருக்குமிடத்தில் நிசப்தத்தை எதிர்பார்த்தலும் கிட்டத்தட்ட தவறுதான்... நிசப்தங்கள் எச்சரிக்கையின் மையமாக இருந்துவிடலாம். மெளனங்கள் அப்படியல்ல.
எனது நிசப்தம் எனும் கவிதையைப் படித்துப் பாருங்களேன்.. இதைப் போன்றதொரு கருவில்.....
http://aadav.blogspot.com/2009/02/blog-post_10.html
ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்?
//ரைட்டு....நல்லாயிருக்கு குஜீ ;)//
சாக்கோ.. கவுஜ.. குஜீ ஆயிடுத்தா.. :))
//எனது நிசப்தம் எனும் கவிதையைப் படித்துப் பாருங்களேன்.. இதைப் போன்றதொரு கருவில்.....
//
ம்ம் ..கண்டிப்பா...படிக்கிறேன்..
//மெளனம் என்பது ஒரு மொழி. அது இருக்குமிடத்தில் நிசப்தத்தை எதிர்பார்த்தலும் கிட்டத்தட்ட தவறுதான்... நிசப்தங்கள் எச்சரிக்கையின் மையமாக இருந்துவிடலாம். மெளனங்கள் அப்படியல்ல.
//
:) மெளனத்திற்கு நல்ல விளக்கம்.& .புரிதல்.. நன்றி :)
//ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்?//
:) :) கூல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல். :)
/நாம் எதையாவது உள்ளுக்குள்ளே அசைப்போட்டுக்கொண்டே இருப்போம்..
அது தான் மெளனத்திலும் நம் உள்ளே கேட்கிற சத்தம்..//
ஆமாம்! யார்கிட்டயும் பேசாம வாய்க்குள்ளே மிக்சரையோ சிப்ஸையோ போட்டு நொறுக்கிகிட்டிருந்தா அப்பவும் சப்தம் வரத்தான் செய்யும்!
/கவிஞர் ஆகறதுக்கான முதல் தகுதியிலேயே அடி வாங்கிட்டிங்களே. கவிஞர்ன்னா கவிதை எழுதணும், ஆனா வெளக்கமெல்லாம் சொல்லப்படாது. படிக்கிறவங்க மண்டைய ஒடச்சிக்கிட்டு எதாவது கருத்துச் சொல்லிக்கிட்டு இருக்கணும். கவிஞர் அதை வாய்மூடி "மௌனமா" ரசிக்கணும். அப்போ தான் பெரிய கவிஞர்ன்னு படிக்கிறவங்க நெனைப்பாங்க.//
ரிப்பீட்டேய்!
மௌனம் எனக்குப் பிடித்த மொழி :-) கவிதை நல்லாயிருக்கு கவிதா!!!
movnam azakiya mozi kadhalilum
naan potta commets relece pannuga
நான் சோகமா ஒண்ணும் போகல கவிதாக்கா:)))) dont worry... எனக்கு ஒரு விளக்கம் சொன்னது யாருக்கும் பொறுக்கலையாப்பா? என்ன உலகம் டா...
//ஆமாம்! யார்கிட்டயும் பேசாம வாய்க்குள்ளே மிக்சரையோ சிப்ஸையோ போட்டு நொறுக்கிகிட்டிருந்தா அப்பவும் சப்தம் வரத்தான் செய்யும்!//
சிவா என்னை கேட்ட அதே ஏன்? ஐ.. சிபியையும் கேளுங்க ப்ளீஸ்..
தாங்கமுடியல..!!
சிபி உங்களை மாதிரியே எல்லாரும் நொறுக்கு தீனிய தின்னுக்கிட்டே இருக்க மாட்டாங்க.. எப்பவும் அதே நினைப்போடு இருக்கீங்க போல..?!
//மௌனம் எனக்குப் பிடித்த மொழி :-) கவிதை நல்லாயிருக்கு கவிதா!!!//
புனித்... நன்றி.. :)
--------------------------
// movnam azakiya mozi kadhalilum//
:) ஆமாம்...:)
// naan potta commets relece pannuga/
நேத்திக்கு சன்டே இல்லையா லீவு, எப்பவும் ஆன்லைன் ல இல்ல.. சோ உங்க பின்னூட்டம் ரீலிஸ் (சினிமா வா என்ன? ) கொஞ்சம் காலதாமதம் ஆயிடுத்துப்பா... :)
//நான் சோகமா ஒண்ணும் போகல கவிதாக்கா:)))) dont worry...//
ச்சோஓ...ச்சூவீட் ரீனா... :) ஷ்யூர் நோ ஓரீஸ்.. :)
//எனக்கு ஒரு விளக்கம் சொன்னது யாருக்கும் பொறுக்கலையாப்பா? என்ன உலகம் டா...//
ஆமா.. என்ன உலகம் இது.. ?!!
கவிதை சூப்பர்! ;-) g3 எங்கம்மா இருக்கே!!
//ஆமாம்! யார்கிட்டயும் பேசாம வாய்க்குள்ளே மிக்சரையோ சிப்ஸையோ போட்டு நொறுக்கிகிட்டிருந்தா அப்பவும் சப்தம் வரத்தான் செய்யும்!//
ஹஹ்ஹா!!
//கவிதை சூப்பர்! ;-) g3 எங்கம்மா இருக்கே!! //
ஏன்..?? அவங்க பாட்டுக்கும் நிம்மதியா எங்கயோ இருக்காங்க..
அவங்களை இங்க கூப்பிட்டு.. இளநீர் குடிக்க வைக்கனுமா...
வேணும்னா சொல்லுங்கப்பா. இரண்டு பேருக்கும் தினமும் ஒன்னு அனுப்பி வைக்கிறேன்.. இப்படி அடிக்கடி எனக்கு பயங்காட்டாதீங்க... !!
(திகில் படம் பாக்கறமாதிரியே ஒரு பீலிங்கு...அவ்வ்வ்வ்வ்!! )
Post a Comment