ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும்...
எப்படி இந்த டாக்டர் மட்டும் இங்கேயிருந்து அங்கேயும், அங்கேயிருந்து இங்கேயும் தாவறாரு? இப்போதய நியூஸ் பா.ம.க, அதிமுக வுடன் இந்த தேர்ந்தலில் இணைகிறது. திமுக வை விட்டு டாக்டர் விலகிவிட்டார்.
வைகோ எப்படி அம்மாவோடு எப்பவும் ஒற்றுமையாக இருக்காரு? அவங்க எப்படி நடத்தினாலும் அங்கேயே இருக்காறே எப்படி?
விஜயகாந்த் எப்படி தனியாவே இன்னும் போட்டி போடறாரு? முதல்ல விஜயகாந்த் எப்படி அரசியல் தலைவர் ஆனாரு?
அதிமுக ஏன் காங்கரஸ் கூட்டணிக்கு முயற்சி செய்தது?
சரத்குமார் ன்னு ஒருத்தர் அவரு என்ன செய்யறாரு? என்ன செய்ய போறாரு?
மூன்றாவது அணி எப்பவும் தேர்தலின் பொழுது கூடுது..அப்புறம் காணபோயிடுது? அதுவும் அதில் இந்த முறை அம்மா'வை காணோம்? ஏன்?
இன்னும் இப்படி நிறைய இருக்குங்க.. தலைய சுத்துது...
ஆனாலும் டாக்டரை நினைச்சா எப்பவுமே ரொம்ப பெருமையா இருக்கும்... உண்மையான சுத்தமான அரசியல்வாதி இவராக மட்டும் தான் இருக்கமுடியும்.
அணில் குட்டி அனிதா :- கவி.. நமக்கு எதுக்கு அரசியல்...?!! உங்க தலைய தொறந்து வச்சாலும் உங்களுக்கு புரிய போறது இல்ல.. எதுக்கு தேவை இல்லாமல் இம்புட்டு கேள்வி?
பீட்டர் தாத்ஸ் :- Politics is the art of postponing decisions until they are no longer relevant.”
அரசியல் சத்தியமாக எனக்கு புரியலைவில்லை..
Posted by : கவிதா | Kavitha
on 15:10
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
40 - பார்வையிட்டவர்கள்:
ஏங்க.. ஏன்...
நல்லாதானே இருந்தீங்க..?
ஏன் புரியாதத பத்தியெல்லாம் பதிவ போட்டு எங்கள கொல்றீங்க.
எதுக்கும் ஒரு நடை கீழ்பாக்கம் போயிட்டு வாங்க.
சரியா போய்டும்.
செம கடுப்புடன்
ரங்கன்
அடுத்த தடவை இந்த மாதிரி பதிவ பாத்தேன்.
டெரராகிடுவேன்..சொல்லிட்டேன்.
க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் X-(
//ஏன் புரியாதத பத்தியெல்லாம் பதிவ போட்டு எங்கள கொல்றீங்க.//
ஹி ஹி..நீங்க யாராச்சும் வந்து புரிய வைப்பீங்கன்னு தான்..
இப்படி எல்லாம் எழுதி என் அறிவை நான் வளர்க்கிறேன்.. :)))
ஆமா நீ ஏன் ரங்கு எப்பவும் ஃபுட்டர் நோட் போடற??
செம எரிச்சலுடன்
கவிதா
//டெரராகிடுவேன்..சொல்லிட்டேன்.//
ஆகீஈஈஈ??!!
எங்கக்கிட்டியேவா..?!! நாங்க எல்லாம் ஓடற ரயிலை ஒரு ஒரு ஒரு கையால நிறுத்தறவங்க....
பீட்டர் தாத்தா கமெண்ட் சூப்பர்
//ஆமா நீ ஏன் ரங்கு எப்பவும் ஃபுட்டர் நோட் போடற??//
மேல சொல்ல வர விஷயம் புரியலைனா இந்த ஃபுட்டர் நோட் வெச்சாவது என்ன சொல்ல வரேன்னு யூகிச்சு தெளிவுபடுத்தி அதுக்கு சரியான பதில் பின்னூட்டம் போட முயற்சி செய்ய உதவியா இருக்கும் என்கிற நம்பிக்கையில் தான் ஃபுட்டர் நோட் போடுறேன் என்பதை தெளிவாக தெரிவித்து கொல்(ள்)கிறேன்.
அளவில்லா தெளிவுடன்
ரங்கன்
அளவில்லா தெளிவுடன்
ரங்கன்
//
ரொம்ப தெளிவு நீனு..
(அய்யோ அய்யோ அய்யோ!! )
//எங்கக்கிட்டியேவா..?!! நாங்க எல்லாம் ஓடற ரயிலை ஒரு ஒரு ஒரு கையால நிறுத்தறவங்க....//
எப்போ ரெயில்வே கார்ட் வேலைக்கு சேர்ந்தீங்க...சொல்லவே இல்ல..
எப்படியோ வாழ்த்துக்கள்.
//கவிதா | Kavitha said...
அளவில்லா தெளிவுடன்
ரங்கன்
//
ரொம்ப தெளிவு நீனு..
(அய்யோ அய்யோ அய்யோ!! )//
கவிதாவையே அலற வைத்த ரங்கன் வாழ்க.!!
கவிதாவையே அலற வைத்த ரங்கன் வாழ்க.!!
கவிதாவையே அலற வைத்த ரங்கன் வாழ்க.!!
அளவில்லா கோஷத்துடன்
ரங்கன்
ஏன் இந்த கொலைவெறி ? நான் சொல்றேன் ஏன் உங்களுக்கு புரியலைன்னு...
கவுண்டமணியோட டயலாக் ஒங்களுக்கு தெரியாதா ?
"அரசியல்ல இதெல்லாம் சகஜமடா"
உங்களுக்கு அரசியல் தெரியவில்லையென்று முன்பு பின்னுட்டம் இட்டிருந்தேன்.நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது எனக்கும் சத்தியமாக அரசியல் புரியவில்லை.
இதெல்லாம் கூடப் பரவாயில்லைங்க.ஓட்டுப் போடலாம்ங்கிற நம்பிக்கைக்குன்னு ஒரு ஆள்,ஒரு கட்சி தேறலையேன்னு வருத்தமா இருக்குது.பேசாம ஜெயில்ல இருக்குற ஆட்களாப் பார்த்து பரிதாபப் பட்டாவது ஒரு ஓட்டு போடலாம்.
பதிவில் உங்கள் சந்தேகங்கள் அத்தனையும் நிகழ்கால அரசியலைப் பிரதிபலிக்கின்றன.
பீட்டர் தாத்ஸ் சொல்ற டெக்னிக்தான் நம்ம பழைய பிரதமர் நரசிம்மராவ் செய்வாரு!எந்த விமர்சனத்துக்குரியப் பிரச்சினையென்றாலும் ஆறப்போட்டுருவாரு.சூட்கேஸ் விவகாரம்,காசு கொடுத்த ஆளு புடிச்ச விசயம்ன்னு.ஆனாலும் அரசியல் சாணக்கியன் மனுசன்.சோசலிசப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு டாடா காண்பித்து மன்மோகனை அரசியலுக்கு கொண்டு வந்த நவீன பொருளாதாரவாதி.அணுகுண்டு ஏன் வெடிக்கலைங்கிற அரசாங்க ரகசியத்தை சாக வரைக்கும் யாருக்குமே சொல்லாமலே காப்பாத்துன ரகசியவாதி.
ஏன் கவிதா! இப்ப புரியுதா என் கவிதை எஃபக்ட்! ஜாக்கிரதை ஜாக்கிரதை:-))
//கவுண்டமணியோட டயலாக் ஒங்களுக்கு தெரியாதா ?
"அரசியல்ல இதெல்லாம் சகஜமடா"
//
ம்ம்ம் இப்படித்தான் அரசியல் வாதிகள் நம்மை காமெடியன் களா ஆக்க்கிட்டாங்கனு சொல்லறீங்க :)
//நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது எனக்கும் சத்தியமாக அரசியல் புரியவில்லை.//
:))))))
//பதிவில் உங்கள் சந்தேகங்கள் அத்தனையும் நிகழ்கால அரசியலைப் பிரதிபலிக்கின்றன//
:))))))
//அணுகுண்டு ஏன் வெடிக்கலைங்கிற அரசாங்க ரகசியத்தை சாக வரைக்கும் யாருக்குமே சொல்லாமலே காப்பாத்துன ரகசியவாதி.
//
அவரு பேசவே வாயை தொறக்கல :) அப்புறம் தானே ரகசியத்தை சொல்ல முடியும் :)
//ஏன் கவிதா! இப்ப புரியுதா என் கவிதை எஃபக்ட்! ஜாக்கிரதை ஜாக்கிரதை:-))//
ம்ம்...இதுக்காகவாவது இப்படி கவிதை என்ற பெயரில் எதையும் எழுதமாட்டேன்ன்னு எனக்கு சொல்லுங்க...:)
//கவிதாவையே அலற வைத்த ரங்கன் //
அப்படின்னு சொல்லிக்கிட்டு நீ தான் அலற.... பாத்து ஓவரா கோஷம் போடாதே தொண்டைக்கு பிரச்சனை ஆகிடபோகுது!!
//"அரசியல் சத்தியமாக எனக்கு புரியலைவில்லை..,"//
இப்படி குழப்பத்துடன் இருந்தா எப்படி புரியும்??? ;))
1, பவர் எங்க இருக்குமோ அங்க அவர் இருப்பார்.
2, எப்பவும் அவர் ஏங்க அங்க இருந்தாரு.. இப்ப இருக்காரு...
3, தனியாகவா னு இன்னும் சரியா முடிவாகவில்லை. இது வரைக்கும் ஒரு தேர்தலில் தான் அவர் போட்டியே இட்டு இருக்கிறார்.
4, தமிழ்நாட்டில் ஆட்சியை புட்டுக்க வைக்க தான்.
5, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி. ராதிகா தேர்தலில் போட்டினு அவரு பிஸியா தான் இருக்காரு.
6, காணாம் போயிடுதா, இரு பிரதமர்கள் கொடுத்தது மூன்றாவது அணி தான். இப்போ அம்மா அதுல காணாம் னு யாரு சொன்னா... எல்லாம் ஒரு கணக்கு இருக்கு. முடிவு பொருத்து தான் எல்லாமே!
//ஆனாலும் டாக்டரை நினைச்சா எப்பவுமே ரொம்ப பெருமையா இருக்கும்... உண்மையான சுத்தமான அரசியல்வாதி இவராக மட்டும் தான் இருக்கமுடியும். //
தவறு... அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர் ! இன்னும் நிறையா இருக்காங்களே!
//
எங்கக்கிட்டியேவா..?!! நாங்க எல்லாம் ஓடற ரயிலை ஒரு ஒரு ஒரு கையால நிறுத்தறவங்க.//
உங்க திறமைக்கு நீங்க சுண்டு விரலால் சுனாமிய நிறுத்தலாம். முயற்சி பண்ணி பாருங்க! ;)
அது மட்டும் புரிஞ்சுட்டா உங்க முகம் உங்களுக்கே மறந்து போனதா புரிஞ்சுக்கோங்க... இப்படியே நீடுழி வாழ வாழ்த்துகிறேன்!
அப்படியே உங்க வீட்டுக்கு வந்த ஆட்களை கை நனைக்க இங்கயும் அனுப்பி வைங்க... பயந்து போயி ஒரு புள்ளையும் அங்கிட்டு வரமாட்டேங்குதுக! :D
கிளம்புங்க போகலாம் ஓட்டுப் போட...
கேப்டன் கட்சிய ஏதோவொரு கட்சி 300 கோடி ரூபா குடுத்து கூட்டணி வெச்சுக்க கூப்டுறதா கேள்வி பட்டனே.., அது மெய்யாக்கா..?
//அப்படியே உங்க வீட்டுக்கு வந்த ஆட்களை கை நனைக்க இங்கயும் அனுப்பி வைங்க... பயந்து போயி ஒரு புள்ளையும் அங்கிட்டு வரமாட்டேங்குதுக! :D
//
:))) தெகாஜி, ஏன் சந்தோஷ் கூடவா??? சந்தோஷை முதல்ல பதில் சொல்ல சொல்லுங்க . அவரு சொன்னா போதும் அவருக்கு சப்போட்டறேன்னு அவரோட கோஷ்டி எல்லாம் அங்க வருவாங்க...
/கேப்டன் கட்சிய ஏதோவொரு கட்சி 300 கோடி ரூபா குடுத்து கூட்டணி வெச்சுக்க கூப்டுறதா கேள்வி பட்டனே.., அது மெய்யாக்கா..?
//
ஹ் ஹி சத்தியமா அது நான் இல்ல.. அதனால எனக்கு தெரியாது.. :)
//அது மட்டும் புரிஞ்சுட்டா உங்க முகம் உங்களுக்கே மறந்து போனதா புரிஞ்சுக்கோங்க... இப்படியே நீடுழி வாழ வாழ்த்துகிறேன்!
//
தெகாஜி, ஏன் என் அரசியல் அறிவை வளர்க்க விட மாட்டீங்க போல.. :)))
// காணாம் போயிடுதா, இரு பிரதமர்கள் கொடுத்தது மூன்றாவது அணி தான். இப்போ அம்மா அதுல காணாம் னு யாரு சொன்னா... எல்லாம் ஒரு கணக்கு இருக்கு. முடிவு பொருத்து தான் எல்லாமே!
//
சிவா, அப்பனா முதல் பிரதமர் மாயாவதி
இரண்டாவது பிரதமர் அம்மா வா?
ஹை நல்லா இருக்கே.. !! :)
//தவறு... அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர் ! இன்னும் நிறையா இருக்காங்களே!
//
ஏன் இப்படி சொன்னேனா.. ஒவ்வொரு முறையும் எது மாறுதோ இல்லையோ இவரு தாவுவது மட்டும் மாறவே மாட்டேங்குது. .:))
உங்க திறமைக்கு நீங்க சுண்டு விரலால் சுனாமிய நிறுத்தலாம். முயற்சி பண்ணி பாருங்க! ;)
//
:))) ஏன் இந்த கொலை வெறி உங்களுக்கு.. சென்னை வரும் போது வேண்டுமான நாலு அடி அடிச்சிடுங்க.. இப்படி எல்லாம் என் திறமையை மட்டும் பப்ளிக்கா சொல்லி பாராட்டாதீங்க.. நான் அப்புறம் அழுதுடுவேன்..!!
\\கவிதா | Kavitha said...
உங்க திறமைக்கு நீங்க சுண்டு விரலால் சுனாமிய நிறுத்தலாம். முயற்சி பண்ணி பாருங்க! ;)
//
:))) ஏன் இந்த கொலை வெறி உங்களுக்கு.. சென்னை வரும் போது வேண்டுமான நாலு அடி அடிச்சிடுங்க.. இப்படி எல்லாம் என் திறமையை மட்டும் பப்ளிக்கா சொல்லி பாராட்டாதீங்க.. நான் அப்புறம் அழுதுடுவேன்..!!
\\\
;-)))))))
Choco, எப்பவும் போல சிரிப்பான் போட்டாச்சா..?!! :)))
//ஆனாலும் டாக்டரை நினைச்சா எப்பவுமே ரொம்ப பெருமையா இருக்கும்... உண்மையான சுத்தமான அரசியல்வாதி இவராக மட்டும் தான் இருக்கமுடியும். //
டாக்டர் விஜய்க்கும் இந்த தேர்தலுக்கும் என்ன சம்பந்தம் ?? அவரு 2011 னு தானே கேள்வி பட்டேன்??
- அரசியல் சுத்தமா புரியாதவன்
//சென்னை வரும் போது வேண்டுமான நாலு அடி அடிச்சிடுங்க..
நாகை சிவா சார்.. நான் சென்னை தான்!! எனி ஹெல்ப் ?
//சென்னை வரும் போது வேண்டுமான நாலு அடி அடிச்சிடுங்க..
நாகை சிவா சார்.. நான் சென்னை தான்!! எனி ஹெல்ப் ?
//
கடவுளே... சிவா' வை இந்த பக்கம் வராமல் பார்த்துக்கோ!!
//டாக்டர் விஜய்க்கும் இந்த தேர்தலுக்கும் என்ன சம்பந்தம் ?? அவரு 2011 னு தானே கேள்வி பட்டேன்??
- அரசியல் சுத்தமா புரியாதவன்
//
ஏன்.. இருக்கிற கிறுக்கனுங்க பத்தாதா? அவரு வேறையா?
//சென்னை வரும் போது வேண்டுமான நாலு அடி அடிச்சிடுங்க..
நாகை சிவா சார்.. நான் சென்னை தான்!! எனி ஹெல்ப் ?
//
பவனேஷ், சிவா ஆள் வைத்து அடிக்கும் அளவிற்கு மோசம் இல்லை... :)))
(சிவா... நெஜமா சொன்ன படி கமரகட் வாங்கிதருவேன்)
//ஏன்.. இருக்கிற கிறுக்கனுங்க பத்தாதா? அவரு வேறையா?//
ஒரு தாட்டி முடிவு பண்ணிட்டா அவரு பேச்ச அவரே கேக்க மாட்டாரு!! தெரியும் இல்ல ? 2011 க்கு கமிட் ஆகிட்டாரு!!
//பவனேஷ், சிவா ஆள் வைத்து அடிக்கும் அளவிற்கு மோசம் இல்லை... :)))
(சிவா... நெஜமா சொன்ன படி கமரகட் வாங்கிதருவேன்)//
சிவா ஆள் எல்லாம் வெக்க வேண்டாம்.. உன் நண்பன் நான் இருக்கேன்!!
(நாகைக்கு ரெண்டு கமரகட் பார்சல்!!)
//நாகைக்கு ரெண்டு கமரகட் பார்சல்!!)
//
ம்ம்..சரிதான் அவரு எங்க இருக்காருன்னே தெரியாத நண்பரா நீங்கள்...
ஊர் 'ருடன் பேரை சூட்டி இருக்கிறார்.
ஆனால்
இருக்கும் இடமோ "சூடான்..."
//இருக்காருன்னே தெரியாத நண்பரா நீங்கள்... //
அதான் ஆரம்பமே "நாகை சிவா சார்" என்று அழைத்தேனே..
//எங்கக்கிட்டியேவா..?!! நாங்க எல்லாம் ஓடற ரயிலை ஒரு ஒரு ஒரு கையால நிறுத்தறவங்க....//
அந்த எமர்ஜென்ஸி செயினைப் பிடிச்சி இழுத்துதானே?
Post a Comment