அணில்குட்டி அனிதா:- அம்மணி எவ்வளவு சொன்னாலும் கேட்கற சாதியில்லை'ன்னு ஊரு உலகத்துக்கு தெரியும். அப்படின்னா வீட்டுல இருக்கவங்க கதிய கொஞ்சம் யோசிச்சி பாருங்க.. அய்யோ பாவம் கவிதா வூட்டுக்காரர், அம்மணிய கட்டிக்கிட்டு அவரு படற பாடு இருக்குதே. .அந்த ஆண்டவனுக்கும் பொறுக்காது... அவரு படற பாட்டை பாருங்க தெரியும்....:(
இதுல பிராக்கிட் ல இருக்கறது எல்லாம் அம்மணி மனசுல நினைக்கிறது....
மிஸ்டர் கவி:- ஏண்டி நீ திருந்தவே மாட்டியே..??
கவி: ................................ (என்னா இப்ப தப்பு பண்ணாங்க திருந்த? )
மிஸ்டர் கவி : நீ தப்பு பண்ணா மட்டும் சைல்ன்ட்டா இருப்பியே வாய தொறக்க மாட்டியே....
கவி: ........................... ... (நாங்க எல்லாம் பேச ஆரம்பிச்சா நீங்க பேசமுடியாது இல்ல அதான்........சான்ஸ் கொடுக்கிறோம் பேசுங்க.....)
மிஸ்டர் கவி: ஏண்டி உன்கிட்ட தாண்டி பேசறேன்.. திருந்தவே மாட்டியா?
கவி: ..............(புதுசா ஏதாச்சும் பிரச்சனையா..? யார் கிட்டயும் சண்டை போட்ட மாதிரியே தெரியல..யாருக்கும் ரீசண்டா எந்த ஹெல்பும் செய்த மாதிரியும் தெரியில.. ஏன் அநாவசியமா நம்மள திருந்த சொல்றாரு இவரு....)புள்ள இருக்க பக்கமா திரும்பி.. கண்ணாலேயே "என்னடா மேட்டர்?"..
புள்ள :- :)))))))))))))) மாட்டினியா.... எவ்வளவு மாட்டினாலும் நீ திருந்தமாட்ட. .அனுபவி.....
மிஸ்டர் கவி :- பாரு அவன் கூட திட்டறான்...ஏண்டி எப்படிடி ஒன்னுமே தெரியாத மாதிரியே உட்கார்ந்து இருக்க...
கவி :- ..................... (அடடா மேட்டரை சொல்லாம இப்படி கேள்வி கேட்டுக்கிட்டே இருந்தா எப்படி..கொஞ்சமாச்சம் எதிராளி கஷ்டம் தெரியுதா பாத்தியா இவருக்கு..... )
மிஸ்டர் கவி : ஏண்டி உனக்கு எப்பத்தான் மெச்சூரிட்டி வரும்?
கவி: .................... (எனக்கு வந்துட்டா.. நீங்க இப்படி கேள்வி கேட்க முடியாது இல்ல அதான்.......அவ்வ்வ்வ்வ்வ் மேட்டர சொல்லுங்கப்பா..... )
மிஸ்டர் கவி :- நீயே இப்படி இருந்தா நம்ம பையனுக்கு யாரு சொல்லிதருவா?
கவி: ...................... (உங்களுக்கு இப்படி பேச வாய்ப்பு கொடுக்கறது பெரிய விஷயம்.. அதை பயன்படுத்தி நீங்க எவ்வளவு பேசறீங்க.. அவனுக்கும் அப்படி நானு வாய்ப்பு கொடுப்பேன்..)
கவி அவர் பேச பேச... டிவி'ஐ ஆன் பண்ணி காமெடி டைம் பார்க்க... அதில் கைப்பு (வடிவேலு) வை எல்லாரும் சேர்ந்து அடித்து நொறுக்க..
மிஸ்டர் கவி :- ஏண்டி நான் பாட்டுக்கும் இங்க கத்திக்கிட்டு இருக்கேன்... நீ என்ன அங்க டீவி ய பாத்து இளிக்கற....
கவி :--...............:) ஹ் அஹஹா.. ஹ....ப்பா. இங்க கொஞ்சம் பாருங்களேன்.... இவனோட எப்பவும் இதே காமேடிப்பா... எவ்வளவு அடிவாங்கினாலும் திருந்தாம திருப்பி திருப்பி அடிவாங்கறான்...எத்தன வாட்டி பார்த்தாலும் சிரிப்பு சிரிப்பா வருது..........இங்க பாருங்களேன்.... ஹா ஹா...:)
மிஸ்டர் கவி..: அடச்சீ... தூஉ.... . உன்கிட்ட பேசறதே வேஸ்டுடி..
கவி:(இத தானே ரொம்ப நேரமா நாங்க சொல்றோம்...அப்புறம் எதுக்கு தேவ இல்லாம பேசிக்கிட்டு..... ஏதோ பேச சான்ஸ் கிடைச்சா போதுமே.....)ஓ நீங்க சீரியஸா இருக்கீங்க இல்ல...சாரி......எஸ்..ப்பா.. சொல்லுங்க.. வாட் ஈஸ் யுவர் ப்ராப்ளம்..?
மிஸ்டர் கவி : ம்ம்...வெங்காயம்.. !!
கவி:............... ஹான்..!! நான் வாங்க சொல்லவே இல்லையே....
மிஸ்டர் கவி: ஏண்டி அறிவில்ல ஒனக்கு ஊர் ல யார் எப்படி போனா உனக்கு என்ன...? ஏண்டி ஓவரா போயி உதவி பண்றேன்னு பிரசன்னைய வீட்டு வரைக்கும் கொண்டு வர...
கவி:- .............. (ஓ இன்னும் மேட்டர் முடியலையா... என்ன பிரச்சனை..ஒரே மர்மமாவே இருக்கே....)
மிஸ்டர் கவி: ஒன்னத்தாண்டி கேக்கறேன்...
கவி...: ................. (அடாடா மேட்டர் என்னான்னு தெரியாம என்னத்த பேச...யார் போட்டு கொடுத்து இருப்பா....?! இவருக்கு ஒன்னும் தெரியாம இல்ல மெயின்டெயின் பன்ணிக்கிட்டு இருக்கோம்..ஏன் இப்படி..?!! )
மிஸ்டர் கவி :- எப்படியும் நீ திருந்த போறது இல்ல செய்யறதுக்கு முன்ன சொல்லிட்டு செய்யேண்டி.. ஏண்டி எல்லாத்தையும் மறச்சிட்டு கடைசி நிமிஷம் உயிர வாங்கற..
கவி :- ஹல்லோ ஹோல்ட்.. ஹோல்ட்... என்ன சொல்லனும்.. இப்ப நீங்க என்னை சொல்லிட்டா திட்டறீங்க.? நான் பொறுமையா கேட்டுக்கல.. நான் மட்டும் ஏன் சொல்லிட்டு செய்யனும்?? (எஸ் கவி !! குட் கொஸ்ஸின்.. எப்படி கவி இப்படி எல்லாம்?!! )
மிஸ்டர் கவி :- டேய் இவ க்கூட என்னால முடியலடா.... ஏண்டா இவ இப்படி இருக்கா?
கவி :- (ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ப்பா எப்படியோ மேட்டரை புள்ள பக்கம் திருப்பியாச்சி இனிமே அவன் பாத்துக்குவான்... )
புள்ள :- ம்மா......... ஏன்ம்மா...?!! .....?!!!
ஏண்டி திருந்தவே மாட்டியா நீ?!!
Posted by : கவிதா | Kavitha
on 15:18
Labels:
பழம்-நீ
Subscribe to:
Post Comments (Atom)
40 - பார்வையிட்டவர்கள்:
இதுக்கெல்லாம் எப்படி கமெண்ட் போடரது அக்கா!
\\அம்மணி எவ்வளவு சொன்னாலும் கேட்கற சாதியில்லை'ன்னு ஊரு உலகத்துக்கு தெரியும். அப்படின்னா வீட்டுல இருக்கவங்க கதிய கொஞ்சம் யோசிச்சி பாருங்க.. அய்யோ பாவம் கவிதா வூட்டுக்காரர், அம்மணிய கட்டிக்கிட்டு அவரு படற பாடு இருக்குதே. .அந்த ஆண்டவனுக்கும் பொறுக்காது... அவரு படற பாட்டை பாருங்க தெரியும்....:(\\
அட அணில இருக்கே வாழ்க வாழ்க.
\\மிஸ்டர் கவி :- நீயே இப்படி இருந்தா நம்ம பையனுக்கு யாரு சொல்லிதருவா?
கவி: ...................... (உங்களுக்கு இப்படி பேச வாய்ப்பு கொடுக்கறது பெரிய விஷயம்.. அதை பயன்படுத்தி நீங்க எவ்வளவு பேசறீங்க.. அவனுக்கும் அப்படி நானு வாய்ப்பு கொடுப்பேன்..)\\
ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா
\\புள்ள :- :)))))))))))))) மாட்டினியா.... எவ்வளவு மாட்டினாலும் நீ திருந்தமாட்ட. .அனுபவி.....\\
வா ராசா - நீயுமா
(சரியானவங்க கூட சேறு சொல்லிட்டேன் - அணிலு)
\\யாருக்கும் ரீசண்டா எந்த ஹெல்பும் செய்த மாதிரியும் தெரியில\\
சிர்ப்பை அடக்கவே முடியலை.
அதுவும் உங்க கனவு மேட்டரையும் நினைச்சு இத படிச்சா ...
ஹா ஹா ஹா
வாழ்க வளமுடன்!
\\(எஸ் கவி !! குட் கொஸ்ஸின்.. எப்படி கவி இப்படி எல்லாம்?!! )\\
சமத்து அக்கா!
ஹையோ ஹையோ
:-))))))))))
ஏங்க எல்லா வீட்டுலையும் இப்படியா இருப்பாங்க?
இந்த மாதிரி பதிலே பேசாம இருந்தா மிஸ்டர்.கவி மிஸ்டர்.பாவம் ஆயிடமாட்டாரா?
//சரியானவங்க கூட சேறு//
என்ன ஜமால், சரியானவங்கள சேறு சகதின்னு சொல்லிக்கிட்டு இருக்கிங்க.
கவிதாவின் பார்வைகள்ல பதிவு போட்டதுமே 10 பின்னூட்டம் வருதுன்னா அதுக்கு நீங்களும் ஒரு பெரிய காரணம். வரிக்கு வரி பின்னூட்டம் போடுறிங்க. உங்களுக்கு நான் "பின்னூட்ட கிங்"ன்னு பட்டம் கொடுக்கலாம்ன்னு இருக்கேன். இனிமே "நட்புடன் ஜமால்"ன்னு பேர் போடாம, "பின்னூட்ட கிங் ஜமால்"ன்னு போட்டுக்கோங்க, அதான் சரியா இருக்கும் ;-).
ஜமால், இன்னொரு மேட்டர் சொல்ல மறந்துட்டேன். நீங்க இப்படி வரிக்கு வரி பின்னூட்டம் போடுறத பாராட்டி நீங்க பின்னூட்டுற பதிவாளர்கள் எல்லோரும் சேர்ந்து உங்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்த இருக்கிறதா காற்று வழியா ஒரு செய்தி கிடைச்சுது. என்ன மாதிரியான பாராட்டா இருக்கும்ன்னு தான் தெரியல, எதுக்கும் ஜாக்கிரதையா இருந்துக்கோங்க.
\\ KVR said...
//சரியானவங்க கூட சேறு//
என்ன ஜமால், சரியானவங்கள சேறு சகதின்னு சொல்லிக்கிட்டு இருக்கிங்க.\\
என்ன செய்தாலும் தப்பு வருதே
அதுல எத்தன கமெண்ட் போட்டாலும் என்ன பிரயோஜனம்
@வாழவந்தான்.. - நீங்க வேற நான் வாய திறக்காத வரைக்கும் தான் தாங்க.. அவருக்கு நல்லது. .நான் பேச ஆரம்பிச்சாத்தான் அவரு பாவமா ஆயிடுவாரு..
சரி போன போகுதுன்னு பெரிய மனசு பண்ணி நான் பேசாமல் இருக்கேன்.. :)
என் நல்ல மனசு யாருக்கு வரும்.. :))
\\ KVR said...
ஜமால், இன்னொரு மேட்டர் சொல்ல மறந்துட்டேன். நீங்க இப்படி வரிக்கு வரி பின்னூட்டம் போடுறத பாராட்டி நீங்க பின்னூட்டுற பதிவாளர்கள் எல்லோரும் சேர்ந்து உங்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்த இருக்கிறதா காற்று வழியா ஒரு செய்தி கிடைச்சுது. என்ன மாதிரியான பாராட்டா இருக்கும்ன்னு தான் தெரியல, எதுக்கும் ஜாக்கிரதையா இருந்துக்கோங்க\\
அண்ணா ...
என்ன இதெல்லாம் ...
இரசிப்பது தப்பா ...
என்னவோ போங்க
தப்புன்னா திருந்த முயற்சிக்கிறேன்
@ ஜமால் என்ன இது சீரியஸா ஆயிட்டீங்க... ராஜா ச்சும்மா சொல்றாரு....
கோவிச்சிக்க கூடாது.. சரியா.. :)
\\கவிதா | Kavitha said...
@ ஜமால் என்ன இது சீரியஸா ஆயிட்டீங்க... ராஜா ச்சும்மா சொல்றாரு....
கோவிச்சிக்க கூடாது.. சரியா.. :)\\
கோபம் என்ற வார்த்தை எழுத அல்லது தட்டச்சு செய்ய மற்றும் படிக்க தெரியும்
வேற ...
//அண்ணா ...
என்ன இதெல்லாம் ...
இரசிப்பது தப்பா ...//
தப்பே இல்லே.. நீங்க கமெண்டு போடுங்க.. அண்ணனை நாம ஆட்டோ அனுப்பி கவனிப்போம்.. :)
//கோபம் என்ற வார்த்தை எழுத அல்லது தட்டச்சு செய்ய மற்றும் படிக்க தெரியும்
வேற ...//
:) இப்பத்திக்கு இவ்வளவு தான்.. :)
@ தமிழ்பிரியன்.. :) நன்றி
@ முல்லை.. ஏன் இவ்வளவு சிரிப்பு நாங்க திட்டு வாங்கினா உங்களுக்கு சிரிப்பா இருக்குதா? :))))))
உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.. முருகா..
இந்த தங்கமணிகள் தொல்லைதான் தாங்க முடியலைன்னா.. ரங்கமணிகளும் ஆரம்பிச்சாட்டாங்கப்பா..
மனுஷனை பயமுறுத்துறதுலேயே குறியா இருக்காங்க..!
//உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.. முருகா..//
தேவையில்லாம அவரை ஏன் நீங்க டிஸ்டர்ப் செய்யறீங்க.. பாவம் அவரு..!! :)
இந்த தங்கமணிகள் தொல்லைதான் தாங்க முடியலைன்னா.. ரங்கமணிகளும் ஆரம்பிச்சாட்டாங்கப்பா..//
பின்னூட்டத்தில் தங்கமணியும்.. ரங்கமணியும் இடம் மாறிடிச்சோ????
//அண்ணா ...
என்ன இதெல்லாம் ...
இரசிப்பது தப்பா ...//
ஜமால், உங்களை கலாய்க்கிறேங்கிற ஒரே காரணத்துக்காக இப்படி ஆப்பு வெக்கிறிங்களே இது நியாயமா?
நிறைய சகோதரிகள் உள்ளவங்க எல்லோருமே எனக்கு எப்பவும் மச்சான் தான். அதனால, இனிமே மச்சான்னு கூப்டுங்க.
\\KVR said...
//அண்ணா ...
என்ன இதெல்லாம் ...
இரசிப்பது தப்பா ...//
ஜமால், உங்களை கலாய்க்கிறேங்கிற ஒரே காரணத்துக்காக இப்படி ஆப்பு வெக்கிறிங்களே இது நியாயமா?
நிறைய சகோதரிகள் உள்ளவங்க எல்லோருமே எனக்கு எப்பவும் மச்சான் தான். அதனால, இனிமே மச்சான்னு கூப்டுங்க.\\
உங்க ஆசை ஞாயம் தான் அங்கிள்
ஆனா நான் ஒரு நல்ல சகோதரன், என்னை நம்பும் சகோதரிகளுக்கு நான் ஒரு கேடயம், அதனால இந்த பில்டப்பல்லாம் நம்மகிட்ட ஆவாது அங்கிள்
//நிறைய சகோதரிகள் உள்ளவங்க எல்லோருமே எனக்கு எப்பவும் மச்சான் தான். அதனால, இனிமே மச்சான்னு கூப்டுங்க.//
ம்ம்....இதோ..தங்கமணிக்கு மெயில் அனுப்பறேன். .வீட்டுல அன்பா அவங்க யாரு மச்சான்.. சொல்லி தருவாங்க... அப்புறம்.. எல்லாரும் உங்களுக்கும் ஆட்டோமேட்டிக்கா அக்கா ஆயிடுவாங்க...
//ஆனா நான் ஒரு நல்ல சகோதரன், என்னை நம்பும் சகோதரிகளுக்கு நான் ஒரு கேடயம், அதனால இந்த பில்டப்பல்லாம் நம்மகிட்ட ஆவாது அங்கிள்//
@ ஜமால் - :) வெல் செட்!!
@ ராஜா - இது தேவையா?
//ஆனா நான் ஒரு நல்ல சகோதரன், என்னை நம்பும் சகோதரிகளுக்கு நான் ஒரு கேடயம், அதனால இந்த பில்டப்பல்லாம் நம்மகிட்ட ஆவாது அங்கிள்//
அன்பு ஜமால், நான் கிண்டலாகச் சொன்னதை நீங்கள் சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. உங்களை போன்ற கேடயங்களை கொண்டவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
மற்றபடி, மச்சானும் வேண்டாம் அண்ணாவும் வேண்டாம், பெயர் சொல்லியே அழைக்கலாம். அது தான் எனக்கும் பிடித்தமானது. நன்றி.
//ம்ம்....இதோ..தங்கமணிக்கு மெயில் அனுப்பறேன். .//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், எங்கே அடிச்சா இவன் ஆட்டம் அடங்கும்ன்னு நல்லாவே தெரிஞ்சி வச்சிருக்காங்கப்பா...
\\KVR said...
அன்பு ஜமால், நான் கிண்டலாகச் சொன்னதை நீங்கள் சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. உங்களை போன்ற கேடயங்களை கொண்டவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
மற்றபடி, மச்சானும் வேண்டாம் அண்ணாவும் வேண்டாம், பெயர் சொல்லியே அழைக்கலாம். அது தான் எனக்கும் பிடித்தமானது. நன்றி.\\
ஹையோ ஹையோ
நான் கிண்டலினேங்கோ ...
நல்ல நண்பர்களாகவே இருப்போம்
வாழ்க நண்பர்
கே.வி.ஆர்
இப்படிக்கு
கொஸப்பேட்ட குப்ஸாமி
@ ஜமால் & ராஜா
நீங்க இரண்டு பேரும் நிறுத்தல..
நான்
ஆரம்பிப்பேன்..
எப்படி வசதி.....?!
\\கவிதா | Kavitha said...
@ ஜமால் & ராஜா
நீங்க இரண்டு பேரும் நிறுத்தல..
நான்
ஆரம்பிப்பேன்..
எப்படி வசதி.....?!\\
யம்மாடியோவ் மீ எஸ்கேப்பூ ...
ஏங்க!.....ஏங்க!
இப்படி முரட்டுத்தனமா!!
பாவங்க!! விட்டுடுங்க!!
நல்லதொரு குடும்பம் பல்கழைக்க(ல)ழகம்.....
வீட்டுல நடக்குற மேட்டர "கிசுகிசு" மாதிரி வெளிய விடுற அணில் வாழ்க..
//இவனோட எப்பவும் இதே காமேடிப்பா... எவ்வளவு அடிவாங்கினாலும் திருந்தாம திருப்பி திருப்பி அடிவாங்கறான்...எத்தன வாட்டி பார்த்தாலும் சிரிப்பு சிரிப்பா வருது..........இங்க பாருங்களேன்.... ஹா ஹா...:)
//
சான்சே இல்ல:)))
ஹா ஹா ஹா:)))
நல்லா வயிரு வலிக்க சிரிதேன்
//ஏங்க!.....ஏங்க!
இப்படி முரட்டுத்தனமா!!
பாவங்க!! விட்டுடுங்க!!//
வாங்க ஜீவன் கண்டிப்பா உங்களை ஒன்றும் செய்ய மாட்டேங்க.. பயப்படாதீங்க.. :)
//வீட்டுல நடக்குற மேட்டர "கிசுகிசு" மாதிரி வெளிய விடுற அணில் வாழ்க..//
அதையும் படிச்சிட்டு..கமென்ட்ற ஆதவன் வாழ்க வாழ்க...!! :)
//
கவிதா | Kavitha said...
@வாழவந்தான்.. - நீங்க வேற நான் வாய திறக்காத வரைக்கும் தான் தாங்க.. அவருக்கு நல்லது. .நான் பேச ஆரம்பிச்சாத்தான் அவரு பாவமா ஆயிடுவாரு..
சரி போன போகுதுன்னு பெரிய மனசு பண்ணி நான் பேசாமல் இருக்கேன்.. :)
என் நல்ல மனசு யாருக்கு வரும்.. :))
//
அணிலு, நீ இந்த கமெண்ட்ட பாத்தியா இல்லியா?
நீங்க ரொம்ப நல்லவங்க கவி மேடம்.
ஆனா ரங்கமணியை இத சொல்ல சொன்னாதான் ஸ்கூலுல ரைம்ஸ் சொல்ற பாப்பா மாதிரி அழுதுகிட்டு சொல்லுவாரில்ல? ;-)
மிஸ்டர் கவி ரெம்ப நல்லவரு, பாவம் பூனை கிட்ட மாட்டின கிளியாகிட்டாரு
//நீங்க ரொம்ப நல்லவங்க கவி மேடம்.
ஆனா ரங்கமணியை இத சொல்ல சொன்னாதான் ஸ்கூலுல ரைம்ஸ் சொல்ற பாப்பா மாதிரி அழுதுகிட்டு சொல்லுவாரில்ல? ;-)//
சான்ஸே இல்லை.. !! :)))
-------------------------------------
@நசரேயன்..:) ஆமா அவரு ரொம்பவே பாவம்.. :)
//சான்சே இல்ல:)))
ஹா ஹா ஹா:)))
நல்லா வயிரு வலிக்க சிரிதேன்//
@ பூரணி.... இதை மட்டும் என் ஹப்பி படிச்சாரு... டென்ஷன் ஆயிடுவாரு.. :) டென்ஷன்.. :))))))
Post a Comment