தலைமுடி இதனால் பலருக்கு பல பிரச்சனைகள். குறிப்பாக சின்ன வயதில் முடிக்கொட்டி விடுபவர்கள் படும் பாடு இருக்கிறதே.. அவர்களை கேட்டால் தெரியும் இந்த தலைமுடி அவர்களுக்கு எத்தனை முக்கியம் என்று.
தலைமுடி அதிகமாக கொட்டியிருப்பவர்கள் ஞாபகமறதி அதிகம் உடையவர்களாக இருப்பார்கள் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கபட்டுள்ளது. இது தவிர்த்து குடும்பத்தில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அத்தை, சித்தப்பா, மாமா என்று யாருக்கும் இப்படி இருந்தால் அவர்கள் மேல் பழியை போட்டு உங்களால் தான் எனக்கு இப்படி இருக்கிறது பரம்பரை குறை இது என்று சொல்லிவிடலாம்.
நடிகர் சத்யராஜ் போல "நாங்க எல்லாம் தலைக்கு மேல் இருப்பதை நம்பி வாழ்பவர்கள் இல்லை, தலைக்கு உள் இருப்பதை நம்பி வாழ்பவர்கள் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் திரைபடங்களில் பாவம் விக்'ஐ நம்பி தான் தன் வாழ்க்கைக்கு தேவையானதை அவரும் சம்பாதிக்கிறார்.
என்னுடைய மூன்று வயது போட்டோவில் "பாப்" கட் தலை முடியோடு இருப்பேன். ரொம்ப அழகாக இருக்கும். ஆயாவிற்கு அது பிடிக்காது நன்றாக எண்ணெய் தேய்த்து முடியை எவ்வளவு வளர்க்க முடியுமோ அவ்வளவு வளர்த்து ஒரு காலக்கட்டத்தில் "இவமுடிய எவளால பின்ன முடியும். .பிடித்து சீவ முடியல, போடி போ நீயே பின்னிக்கோ" என்று எல்லோரும் விரட்டும் அளவிற்கு அடர்த்தியாக இருந்தது. ஆயா மட்டுமே என் தலையை தொடுவார்கள். அவர்களை விட்டால் நானே. எனக்கு குழந்தை பிறந்தபோது ஆஸ்பித்திரியில் இந்த தலைமுடியால் நான் பட்ட அவஸ்தை அந்த கடவுளுக்கே வெளிச்சம்.
குழந்தை பெற்ற உடம்பு சிரமம் கொடுக்கக்கூடாது, இந்த மேட்டர் எல்லாம் எனக்கு அப்போது தெரியாது ஆயா சொல்லி தர மறந்துவிட்டார்கள் என்றே நினைக்கிறேன். எப்பவும் போல என் தலைமுடியை யாரும் பின்னிவிட முன்வாராததால், நானே அதை சீவி சிங்காரிக்க முற்பட்டு உடம்பு அலண்டு போக, ஜன்னி வந்தது தான் மிச்சம். தலைகுளித்தால் 2 நாட்களுக்கு உள்ளே ஈரம் இருக்கும், அது ஒரு அவஸ்தை. முடியை லூஸ் ஹேர் ஆக விடமுடியாது, விட்டால் போயிற்று, அச்சு அசல் பிசாசு போலவே இருக்கும்.
இந்த தலைமுடியின் நிஜமான பிரச்சனைக்கு வருகிறேன். இப்போதைய சூழ்நிலையில் உயர் பதவி செல்ல செல்ல ரொம்பவும் எலிகண்ட் ஆக இருக்க வேண்டிய கட்டாயத்திலும் அவசியத்திலும் இருக்கிறோம். சில சமயங்களில் நம் வேலை சம்பந்தப்பட்டு நாம் பழகும் மனிதர்கள், கிளைன்ட்ஸ், பிஸினிஸ் விஷயமாக சந்திக்கும் உயர் அதிகாரிகள் எல்லோருமே முதலில் பார்ப்பது நம் தோற்றத்தை. அதில் முதல் இடம் தலைமுடி, நன்றாக எண்ணெய் தடவி வழித்து சீவி கொண்டு போகும் போதே. ஒரு மாதிரியாக பார்ப்பார்கள், அதற்கு பிறகு தான் நம்முடைய பேச்சு, நம் வேலை சம்பந்தப்பட்ட கோப்புகள், பிரசன்ட்டேஷன் எல்லாமே இதற்காகவே வெளியில் செல்லும் போது லூஸ் ஹேர் ஸ்டைலில் செல்ல வேண்டியுள்ளது.
எனக்கும் இந்த தலைமுடியை என் இஷ்டத்திற்கு வெட்டிக்கொள்ள ஆசை.. ஆனாலும் என்னவோ இன்னும் செய்யவில்லை. ஜிம்'ல் தோழி தென்றல் நான் செல்லும் நேரத்திற்கு வருவார். ஒரு நாள் அவரின் தலைமுடி காதுக்கு மேல் வரை ஏறி, கந்தரகோலமாக வெட்டி இருந்தது. காலையில் அவளை அப்படி பார்த்தவுடன் எனக்கு அதிர்ச்சி. தென்றல் உன் தலைமுடிக்கு என்ன ஆச்சி என்றேன். அதற்கு அவள், அவளின் பெயரை போலவே மென்மையாக சிரித்து.. கவி.. கூல்.. நேத்து ராத்திரி ஒரு 12 மணி இருக்கும் இந்த தலைமுடி எனக்கு வேண்டாம் என்று என் மனசு சொல்லிக்கிட்டே இருந்தது.. எழுந்து..நானே கட கட'ன்னு வெட்டிவிட்டேன்.. ஓவர் ..!! எனக்கு டென்ஷன் குறைஞ்சு போச்சி, நானே வெட்டியதால் இப்படி ஆகிபோச்சி.. We need this kind of changes in our day today life, so better you do dont think more.." இது மாதிரி செய்துடு அப்புறம் தலை எழுத்து பார்லர் போய் சரி பண்ணனும் ' என்றாள்.
எனக்கு ஆச்சரியம், சிரிப்பு எல்லாம் சேர அடக்க முடியாமல் அவளை பார்த்து சிரித்தேன், அவளும் என்னுடன் சேர்ந்து சிரித்தாள். இது தான் மாற்றம் என்பது, அவள் அதற்கு அப்புறமும் சொன்னது, எவ்வளவு நாள் என் முகத்தை இப்படி ஒரே மாதிரியாக பார்த்து கொண்டு இருப்பது.. இப்போது இந்த தலை அலங்காரத்தில், நான் முன்பை விடவும் அழகாக எனக்கு தெரிகிறேன், எனக்கு இன்னும் தன்னம்பிக்கை அதிகம் வந்து இருக்கிறது, நீயும் செய், உனக்கும் வரும் என்றாள். ஆழ்ந்து யோசித்து பார்த்ததில் உண்மையாக இருக்க நிறைய வாய்ப்புகள் இருந்தன.
புது வீடு, புதிய உடைகள், புதிய வண்டி, புதிய நட்பு, புதிய வானம், புதிய மண் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
மாற்றங்கள் அவசியம் தேவை அது எந்த ரூபத்தில் எப்படி இருந்தால் என்ன... ??? மாற்றங்கள் கண்டிப்பாக நமக்கு புதுவிதமான மனதிடத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கத்தான் செய்கின்றன. தலைமுடி'யும் இதில் அடங்கும்.
அணில் குட்டி அனிதா :- .............போச்சி போ?!! தலையில முடி இல்லாதவங்க எல்ல்லாம் இந்த பதிவை படிச்சி எரிச்சல் படணும்னே எழுதின மாதிரி இல்ல?!
பீட்டர் தாத்ஸ் :- Hair brings one's self-image into focus; it is vanity's proving ground. Hair is terribly personal, a tangle of mysterious prejudices. ~Shana Alexander
தலைமுடி
Posted by : கவிதா | Kavitha
on 20:07
Labels:
பழம்-நீ
Subscribe to:
Post Comments (Atom)
24 - பார்வையிட்டவர்கள்:
\\தலைமுடி அதிகமாக கொட்டியிருப்பவர்கள் ஞாபகமறதி அதிகம் உடையவர்களாக இருப்பார்கள் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கபட்டுள்ளது\\
ஓஹ்! அப்படியா!
\\நான் முன்பை விடவும் அழகாக எனக்கு தெரிகிறேன், எனக்கு இன்னும் தன்னம்பிக்கை அதிகம் வந்து இருக்கிறது, \\
நல்ல விடயம்தான்.
///முடியை லூஸ் ஹேர் ஆக விடமுடியாது, விட்டால் போயிற்று, அச்சு அசல் பிசாசு போலவே இருக்கும்.///
வெயிட்டிங் பார் ரங்காஸ் கமெண்ட்டு.. ;-)
முடி கொட்டிடுச்சு. தண்ணி சரி இல்ல. முடி எவ்வளவு நீளமா இருக்கும், இப்ப இப்படி ஆயிடுச்சு. தலைமுடிக்கு தமிழ்நாட்டு பெண்கள் பண்ற அலும்பு இருக்கே! ரொம்ப ஓவரு !
அது மட்டும் போதாதுன்னு நீங்க அறிவியல்பூர்ணமா நிருபீக்கரீங்க. யப்பா ~!
அணில்குட்டி சொல்றது உண்மையா இருக்குமோ:)
நான் கிரி வீட்டுக்குப் போகும்போது தினமும் தலைக்கு எண்ணெய் தேய்ச்சா கண் சம்பந்தப் பட்ட நோய் வராதுன்னு சொல்லிட்டு வந்தா இங்கே முடியே வேண்டாம்ன்னு கேன்வாஸ் செய்றீங்களே!
தலைமுடி கொட்டிய என்னுடைய நண்பனும், '**** போச்சு'ன்னு எவனாவது சொல்லட்டும்... அப்புறம் இருக்குதுடா... அது போனா எப்படி இருக்கும்னு எனக்குதான்டா தெரியும்'னு சொல்வான்... :))
**** - உதிர்ந்த முடியை குறிக்கும் அந்த கெட்டவார்த்தை.
ஓ அப்ப முடிகொட்டறதுக்கு என் ஞாபகமறதி தான் காரணமா.. ஆனா முடிகொட்டுதுங்கறத மட்டும் மறக்கமாட்டேங்கறேனே.. :))
சந்தோஷம்...நல்லாயிருங்க...கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
\\முத்துலெட்சுமி-கயல்விழி said...
ஓ அப்ப முடிகொட்டறதுக்கு என் ஞாபகமறதி தான் காரணமா..
\\\
ரீவர்ஸ்ல படிச்சிங்களா பதிவை!!!?
@ஜமால் ! ம்ம் அப்படித்தான்..!! எங்கேயோ எப்பவோ படித்தது.. :)
----------------------------------
//வெயிட்டிங் பார் ரங்காஸ் கமெண்ட்டு.. ;-)//
தமிழ்பிரியன், ரங்கன்
வருவாரு ஆனா........ வரமாட்டாரு...... :))
---------------------------------
//தலைமுடிக்கு தமிழ்நாட்டு பெண்கள் பண்ற அலும்பு இருக்கே! ரொம்ப ஓவரு !//
மணிகண்டன், ஆமாம் ரொம்ப முக்கியத்துவம் தருவாங்க.. :))
-----------------------------------
அணில்குட்டி சொல்றது உண்மையா இருக்குமோ:)
//
ராஜநடராஜன்ன், , ஹி ஹி..அணிலு எனக்கு தெரிஞ்சி பொய் பேசியது இல்லை.. :)))
--------------------------------
//அப்புறம் இருக்குதுடா... அது போனா எப்படி இருக்கும்னு எனக்குதான்டா தெரியும்'னு சொல்வான்... :))
//
வாங்க ஜி, அய்யோ பாவம் ரொம்ப நொந்து நூடுல்ஸ் ஆகி இருப்பாரு போலவே ?! :))
-----------------------------------
@ முத்து, அப்படியெல்லாம் சொல்லிவிடமுடியாது, கலைஞர்'ஐ பாருங்கள், எனக்கு நினைவு தெரிந்து அவர் தலையில் முடி இருந்து நான் பார்த்ததில்லை. .ஆனால் அவரின் நினைவாற்றல் !!
எனக்குமே முன்பு போல் இல்லை 4 இல் ஒரு பகுதி தான் இப்போது, சென்னை தண்ணீர் அவ்வளவு நல்ல தண்ணீர். !! .. முடிக்கொட்டிவிட நிறைய பிஸிக்கல் காரணங்களும் உண்டு.. :)
---------------------------------
//சந்தோஷம்...நல்லாயிருங்க...கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//
Choco, :))))))))))
(உங்களுக்கு மட்டும் தான் ஸ்மைலி போட தெரியுமா? ம்ம்??!! :)
//Choco//
பெயர்காரணம் ப்ளீஸ்?? ;))
போனா **** போச்சுன்னு வெட்டிகிட்டி தொலசிடாதிங்க..
வெட்டினதுக்கு அப்புறம் மீதி இருக்கற தலமுடியால பிரச்சினையே வராதுன்னு நினைகிறிங்களா..? கண்டிப்பா இல்ல..
உங்க மண்டைக்கு உள்ள எதாச்சும் இருக்கானு எனக்கு தெரியாது.. Aleast, வெளிய இருப்பதயாச்சும் வுட்டு வைங்க..
//Choco//
பெயர்காரணம் ப்ளீஸ்?? ;))
//
புள்ளைய கொஞ்ச விடமாட்டாறங்கப்பா.. :))
Choco = Chocolate (smooth sweet brown food)
போதுமா?!! :))
//போனா **** போச்சுன்னு வெட்டிகிட்டி தொலசிடாதிங்க..
வெட்டினதுக்கு அப்புறம் மீதி இருக்கற தலமுடியால பிரச்சினையே வராதுன்னு நினைகிறிங்களா..? கண்டிப்பா இல்ல..
உங்க மண்டைக்கு உள்ள எதாச்சும் இருக்கானு எனக்கு தெரியாது.. Aleast, வெளிய இருப்பதயாச்சும் வுட்டு வைங்க..
//
:))) அடடா!! இப்படி ஒரு அட்வைஸ் செய்ய ஆள் இல்லாமல் இருந்தேனே.. !! நல்ல அறிவுரை அப்படியே செய்கிறேன்.. நீங்க சொன்ன அதே மேட்டர் தான் நானும் நினைச்சேன்.. இருக்கறதையும் வெட்டிவிட்டுடு, சுத்தமா வழுக்கையா போச்சின்ன்ன்ன்னா??
இப்பவே நம்மள பார்த்தா மக்கள் பயந்து ஓரங்கட்டராங்க!! இதுல தலையில முடி இல்லாம இருந்தா??
அவ்வ்வ்வ்வ்வ் !! நினைத்தால் எனக்கே கொஞ்சம் பயமாத்தான் இருக்கு!! :(
ஓ..ஏதாவது மேக் ஓவர்?
யக்கா என்னதிது தலைமுடிக்கும் தன்னம்பிக்கைக்கும் என்ன சமந்தம்? ஒரு சோப்பு விளம்பரத்துல ஒரு அம்மா அவங்க பொண்ணு வேற சோப்பு உபயோகிச்சா அழஅகு போய் தன்னம்பிக்கை இழந்திடுவாங்கனு சொல்லுவாங்க அந்த மாதிரி காமெடி செய்றீங்க
@முல்லை - இன்னும் இல்லை :)
@ வாழவந்தான் - கண்டிப்பாக தன்னிபிக்கை இருக்கு. பொதுவாக வெளித்தோற்றத்திற்கும் தன்னம்பிக்கை க்கும் நிறைய தொடர்பு உண்டு. இதில் தலைமுடி இல்லாதவர்களை கொஞ்சம் வாட்ச் செய்து பாருங்கள்,அவர்களின் உடல் மொழியே காட்டும் அவர்கள் தன்னம்பிக்கையின் அளவை...
விளம்பரத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லைப்ப்பா.. :))
அமாம், வெளிப்புற தோற்றத்தோட impact self confidence la இருந்தாலும் அது பெரிய பாதிப்பா ஏற்படுத்தாது தானே
\\கவிதா | Kavitha said...
//Choco//
பெயர்காரணம் ப்ளீஸ்?? ;))
//
புள்ளைய கொஞ்ச விடமாட்டாறங்கப்பா.. :)) \\
ஆமா..ஆமா..;))
\\Choco = Chocolate (smooth sweet brown food)
போதுமா?!! :))
\\
கூட்டத்துல கட்டு சோத்தை அவுத்திட்டிங்களே..இனி நான் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வவ்தான்!
//Choco = Chocolate (smooth sweet brown food)
போதுமா?!! :))//
அது தெரியுது... அண்ணனுக்கு 'துபாய் துப்பாக்கி', 'அமீரக அணுகுண்டு', பம்பாய் பீரங்கி'னு டெரரான பல டைட்டில்கள் இருக்கும்போது சின்னப் புள்ளத்தனமா என்னாதிது??
//மாற்றங்கள் அவசியம் தேவை அது எந்த ரூபத்தில் எப்படி இருந்தால் என்ன... ??? மாற்றங்கள் கண்டிப்பாக நமக்கு புதுவிதமான மனதிடத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கத்தான் செய்கின்றன. தலைமுடி'யும் இதில் அடங்கும்.//
சரியா சொன்னீங்க...!!
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
எவ்வளவு நாள் என் முகத்தை இப்படி ஒரே மாதிரியாக பார்த்து கொண்டு இருப்பது.. இப்போது இந்த தலை அலங்காரத்தில், நான் முன்பை விடவும் அழகாக எனக்கு தெரிகிறேன், எனக்கு இன்னும் தன்னம்பிக்கை அதிகம் வந்து இருக்கிறது, நீயும் செய், உனக்கும் வரும் என்றாள்//
இதை நான் கொஞ்ச நாளுக்கு முன்னாடி செய்து பார்த்தேன். நீள முடி குட்டையா போனது. இப்ப மறுபடியும் மாற்றம் தேவைப்படுது,
குட்டை முடி இன்னமும் குட்டையா போனா மொட்டைதான்.
என்னா செய்யறதுன்னு திங்கிங்க்.
Post a Comment