கவிதா: சிபி வெயில் காலம் ஆக ஆக நீங்க ஒரு மாதிரி ஆகிட்டு வரீங்க
எங்களுக்கு எல்லாம் வித்தியாசம் தெரியுது உங்களுக்கு தெரியுதா?
நாமக்கல்: எனக்கு எதுவும் தெரியலையே
என்ன வித்தியாசம்?
கவிதா: கொஞ்சம் கழண்டு போன மாதிரி தெரியுது...
நாமக்கல்: !?
கவிதா : ஓவரா ஆக முன்ன சரி பண்ணிக்கோங்க..இல்லன்னா நாங்க எல்லாம் கழண்டு போயிடுவோம்
நாமக்கல்: எதை வெச்சி சொல்றீங்க?எங்கியாவது ஏடா கூடமா எழுதிட்டனா/
இல்லை நேத்து ரங்காகிட்டே சொன்ன கவுஜையை பார்த்துட்டீங்களா
கவிதா : எதுவும் வெளியில சொல்ற மாதிரியே இல்ல சிபி நீங்களே சரி பண்ணிக்கோங்க..
நாமக்கல்: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சொன்னாதானே எங்க லூசாகியிருக்குன்னு பார்த்து டைட் பண்ணிக்க முடியும்
நாமக்கல்: ஆர் யூ சீரியஸ் ஆர் மேக்கிங் காமெடி?
கவிதா: நான் ஏன் காமெடி செய்ய போறேன்..எல்லாம் சீரியஸ் தான்
நாமக்கல்: அதானே பார்த்தேன் என்கிட்ட இந்த காமெடி பண்ணுற வேலையெல்லாம் வேண்டாம்
கவிதா: சே சே... உங்க கிட்ட நான் காமெடி செய்ய முடியுமா என்ன..நீங்க யாரு
அதுவும் இப்ப இருக்கிற நிலைமையில்... ஒன்னும் சொல்லிக்கறதுக்கு இல்ல..
கொஞ்சம் தள்ளி நின்னு வேடிக்கை பார்க்கலாம்
நாமக்கல்: யம்மா கொஞ்சம் புரியறா மாதிரித்தான் சொல்லுங்களேன்
கவிதா: ஓவரா போச்சின்னா..ஆஸ்பித்திரிக்கு கூட்டிட்டு போலம்னு இருக்கேன்
நாமக்கல்: இப்பவே கண்ணைக் கட்டுதே பீ ஸ்பெசிபிக் ப்ளீஸ்
கவிதா: சொல்றமாதிரியா நீங்க செய்து இருக்கீங்க?
நாமக்கல்: அப்படி என்ன பண்ணிட்டேன் நானு நான் அப்பாவிங்க அல்லது என் பேர்ல யாராச்சும் போலி கெளம்பிட்டாங்களா?
கவிதா: உங்களப்பத்தி வர நீயூஸ் எல்லாம்ம் கேட்டா பயமா இல்ல இருக்கு
நாமக்கல்: !? மீ?
கவிதா: என்ன...போலியா இருக்குமோ..????! ஹய்யோ திருப்பியுமா? சிபி அப்பன்னா மேட்டர் பெரிய லெவல்ல செக் பண்ணனும், உங்களுக்கும் அதுக்கும் அப்ப சம்பந்தமே இல்லையா?
நாமக்கல்: தெளிவா சொல்லுங்க கொஞ்சம் பீதியை கெளப்பீட்டீங்க, நானும் செக் பண்ணணும்
கவிதா : இருங்க வரேன்.. மெயில fwd பண்றேன் wait!
நாமக்கல்: சரி
நாமக்கல்: மெயில்லயா எதாச்சும் பிளாக்கே இருக்கா?
கவிதா : மெயில் தான் ப்ளாக் எல்லாம் இருந்தா உங்களுக்கு இல்ல நியூஸ் முதல்ல வந்து இருக்கும்..
நாமக்கல்: ம்ம்
கவிதா: கொஞ்சம் இருங்கப்பா வந்து அனுப்பறேன். .
நாமக்கல்: என்ன ஆச்சோன்னு திகிலா இருக்கு
கவிதா: உங்களுக்கேவா? சிபி யா இப்படி பயப்படறது??
நாமக்கல்: பின்னே ஏடாகூடாம இருந்தா என்ன ஆகுறது நம்ம இமேஜ் என்ன?
கவிதா : வெயிடீஸ்ப்பா
நாமக்கல்: ஓகே
அணில் குட்டி அனிதா : ஓ அப்ப தள இன்னும் வெயிட்டிங்கா????? ம்ம்.. இதுக்கு தான் கவிக்கிட்ட ரொம்ப வச்சிக்காதீங்கன்னு சொல்றது யாராச்சும் கேட்டாதானே. .அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியில் எங்க தள' கிட்டயேவா????
பீட்டர் தாத்ஸ் :- Advice from your friends in like the weather, some of it is good, some of it is bad.”
இதோடா! சிபி'யிடம் காமெடி செய்ய முடியாதாமாம்!
Posted by : கவிதா | Kavitha
on 13:40
Labels:
அணில் குட்டி
Subscribe to:
Post Comments (Atom)
22 - பார்வையிட்டவர்கள்:
இது தொடர்ச்சி -
கவிதா: போஸ்ட் போட்டு விலாவாரியா விலக்கிட்டேன்
படிங்க.. அது நீங்க இல்ல
நாமக்கல்: ஓ!
இருங்க பார்க்கிறேன்
லிங்க் கொடுத்து தொலைங்க முதல்ல
கவிதா: http://kavithavinpaarvaiyil.blogspot.com/2009/03/blog-post_27.html
என்ன வெச்சி ஏதும் காமெடி கீமேடி பண்ணலையே?
சீரியஸா கேக்கறேன்..
தல என்ன பண்ணீங்க அப்படி..
சொல்லிட்டா பொது மன்னிப்பாச்சும் வாங்கி தர முயற்சி பண்ணுவேன்.
ப்ளீஸ் சொல்லிடுங்க.
அளவில்லா கவலையுடன்
ரங்கன்
இன்னும் 4 நாள் இருக்கே! அதுக்குள்ளயேவா
//இன்னும் 4 நாள் இருக்கே! அதுக்குள்ளயேவா
//
எதுக்கு ஆஸ்பித்திரி போகவா?
சிபி ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவரு..!! :))))))))))
//சீரியஸா கேக்கறேன்..
தல என்ன பண்ணீங்க அப்படி..
சொல்லிட்டா பொது மன்னிப்பாச்சும் வாங்கி தர முயற்சி பண்ணுவேன்.
ப்ளீஸ் சொல்லிடுங்க.
//
இல்ல நானே அதை தனியா ஹேண்டில் செய்துக்குறேன்.. சிபி பாவம் ரொம்ப பயப்படறாரு அதனால் இப்பத்திக்கு மேட்டர் வெளியில தெரியரது அவர் உடம்புக்கு நல்லது இல்ல...
//என்ன வெச்சி ஏதும் காமெடி கீமேடி பண்ணலையே?
//
சே சே உங்களை வச்சி காமெடி எல்லாம் செய்ய முடியுமா.. ஒரு மெகா சீரியல் தான் எடுக்கனும்!!
//சே சே உங்களை வச்சி காமெடி எல்லாம் செய்ய முடியுமா.. ஒரு மெகா சீரியல் தான் எடுக்கனும்!!/
LOL!
:))
இதெல்லாம் எப்பவோ கேட்க வேண்டிய கேள்விகள்.. :)
இதோடா!
//கவிதா | Kavitha said...
//என்ன வெச்சி ஏதும் காமெடி கீமேடி பண்ணலையே?
//
சே சே உங்களை வச்சி காமெடி எல்லாம் செய்ய முடியுமா.. ஒரு மெகா சீரியல் தான் எடுக்கனும்!!//
ஹா ஹா ஹா
கலக்கல்... :-)
ஆஹா கடைசி வரைக்கும் “எதுக்குடா சரிப்பட்டு வரமாட்டேன் வடிவேலு கணக்கா “ எங்க தள’யஃபீல் பண்ண வுட்டுடுவீங்க போலிருக்கு !
அவ்வ்வ்வ்!
\\எதை வெச்சி சொல்றீங்க?எங்கியாவது ஏடா கூடமா எழுதிட்டனா/
இல்லை நேத்து ரங்காகிட்டே சொன்ன கவுஜையை பார்த்துட்டீங்களா
\\
என்கிட்ட சொன்னியளே அது என்ன
இந்த பதிவ பாத்தா சிபி பேசின மாதிரி இல்லையே.. கவிதா ஏதோ வூட்ல உட்கார்ந்து பகல் கனவு கண்ட மாதிரியே இருக்கே !!
@சிபி, அண்ணாச்சி.. அன்னிக்கு அவங்கள கலாய்ச்சது பத்தல போல.. அடுத்த ரவுண்ட் க்ரூப் மெயில் ஆரம்பிச்சிடுவோமா??
இதோடா! சிபி'யிடம் காமெடி செய்ய முடியாதாமாம்!
ippadi solli neega comedy pannathega kavi
கவி,
நண்பனின் மனைவியை பெயர் சொல்லி அழைக்க முடியாது.
பெண் நண்பர்களை அழகாக இருக்கிறீர்கள் என்று சொல்ல முடியாது.
இன்று உங்களுக்கு இந்த சேலை(உடை ) நன்றாக இருக்கிறது என்று சொல்ல முடியாது.
பெண்ணை சக மனுசியாக நினைத்து பழகவே முடியாது. எப்போதும் பெண் என்ற கண்ணோட்டத்தில் எங்கே தவறாக ஏதும் பேசிவிடுமோ என்று.......தெரிந்தவரின் மனைவி என்றாலும்
அண்ணி எப்படி இருக்காங்க?
அக்கா எப்படி இருக்காங்க ?
தங்கச்சி எப்படி இருக்காங்க?
....என்பது போன்ற பாதுகாப்பான உறவு முறைகள் சொல்லியே அழைக்கவேண்டிய , திணிக்கப்பட்ட நிர்ப்பந்த உலகில் உங்களிடம் நண்பர்கள் இயல்பாக கும்மியடிப்பதும், ஆரோக்கியமான உரையாடல்களாக இருப்பதும் . மகிழ்ச்சியாய் உள்ளது.
கல்வெட்டு வாங்க.. 2, 3 நாட்களாக உங்களை நினைத்து கொண்டே இருந்தேன்.. ஏன் என்று அடுத்த வாரத்தில் சொல்கிறேன்.. :)
//கவி,//
:) நீங்க எப்பவும் என்னை கவி' ன்னு தானே அழைக்கிறீர்கள்..:)
//நண்பனின் மனைவியை பெயர் சொல்லி அழைக்க முடியாது.//
:))))
//பெண் நண்பர்களை அழகாக இருக்கிறீர்கள் என்று சொல்ல முடியாது.
இன்று உங்களுக்கு இந்த சேலை(உடை ) நன்றாக இருக்கிறது என்று சொல்ல முடியாது.
பெண்ணை சக மனுசியாக நினைத்து பழகவே முடியாது. எப்போதும் பெண் என்ற கண்ணோட்டத்தில் எங்கே தவறாக ஏதும் பேசிவிடுமோ என்று.......தெரிந்தவரின் மனைவி என்றாலும்
//
:) அப்படி எல்லாம் இல்லை ..நல்ல புரிதல் இருக்கும் போது சொல்லலாமே...!!!
//....என்பது போன்ற பாதுகாப்பான உறவு முறைகள் சொல்லியே அழைக்கவேண்டிய , திணிக்கப்பட்ட நிர்ப்பந்த உலகில் உங்களிடம் நண்பர்கள் இயல்பாக கும்மியடிப்பதும், ஆரோக்கியமான உரையாடல்களாக இருப்பதும் . மகிழ்ச்சியாய் உள்ளது.//
ரொம்ப நன்றி ..:) உங்களிடமிருந்து இந்த பின்னூட்டம் வந்தது எனக்கு மிகவும் மகழ்ச்சியாக இருக்கிறது..:))
முடியும் போது இந்த பக்கம் வாங்க கல்வெட்டு.. சில பதிவுகளில் உங்களை எதிர்பார்ப்பேன்.. அப்போது எல்லாம் நீங்கள் வராமல் I Miss ur valubale comments :(
@ முல்ஸ், ஜமால், சென்ஷி, ஆயில்யன் நன்றி.. :)
@ காயூ.. பகல் கனவு எல்லாம் இல்லை.. மண்டபத்தில் சொல்லிக்கொடுத்து எழுதியது.. :)
@கவிகாயூ... இந்த பதிவில் சிபி தான் ஹீரோ (ஐ மீன் காமெடியன்) :))
இதெல்லாம் எப்பவோ கேட்க வேண்டிய கேள்விகள்.. :)//
வாங்க தமிழன் கறுப்பி... இப்பவாச்சும் கேட்டேனே சந்தோஷப்படுங்க.. :)
இது தள பத்தி பதிவுன்னு தெரிஞ்சும் வெறும் 20 பின்னூட்டம் தானா..அவ்வ்வ்வ்வவ்வ்வவ்வவ்வ்
//இது தள பத்தி பதிவுன்னு தெரிஞ்சும் வெறும் 20 பின்னூட்டம் தானா..அவ்வ்வ்வ்வவ்வ்வவ்வவ்வ்
//
அதானே.. தள' க்கு வெறும் 20 பின்னூட்டம் தானா? பின்னூட்டம் பின்ன வேண்டாமா?!! :)))
Post a Comment