தன் தீவரவாத வெறி ஆட்டத்தை பாக்' தன் மண்ணிலேயே நிரூபித்துவிட்டது. இனியும் எப்போதும் போல பாக்'குடன் உலக நாடுகள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்குமா? இந்தியாவிற்கு எதிரான திவரவாதத்தை தான் பார்த்துக்கொண்டு எல்லோரும் சும்மா இருந்தார்கள்.. இன்னமும் அப்படியே இருப்பார்களா?
பேச்சுவார்த்தைகளில் திருந்தும் மனமும் குணமுமா அவர்களிடம் இருக்கிறது.. ?!! பேச்சுவார்த்தைக்கு என்று எப்போதுமே ஒரு மரியாதை இருக்கிறது. பேசுபவர்களுக்கும் சரி..கேட்பவர்களுக்கும் சரி.. ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லை என்ற வார்த்தைக்கு எல்லாம் அர்த்தம் புரியாதவர்கள் அவர்கள். இன்னும் இதையேதான் உலக நாடுகள் நம்பிக்கொண்டு இருக்குமா? இந்தியாவையும் சேர்த்து...?!!
எல்லா நாடுகளின் கவனத்தையும் அவர்களாகவே மிக நன்றாக எங்களின் விகார முகத்தை பாருங்கள் என்று எடுத்துக்காட்டி விட்டார்கள். இதைவிட நல்ல சந்தர்ப்பம் உலக நாடுகளுக்கும் கிடைக்குமா?
இன்னமும் அமைதி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளாமல் அவர்களின் விகார முகம் கோழைத்தனமானது என்பதை புரியவைக்க இதை ஒரு நல்ல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அணில் குட்டி அனிதா:- அம்மனி எப்ப என்னவா இருப்பாங்கன்னு.. எனக்கு இன்னைக்கு வரைக்கும் தெரியல.. உங்களுக்கு ஏதாச்சும் தெரிஞ்சா சொல்லுங்கப்பா...
பீட்டர் தாத்ஸ் :- We will continue to fight the scourge of terrorism against humanity and reject the culture of extremism and violence in any form or shape, from whatever source or place, regardless of justifications or motives, being fully aware of their dangers as a plague that threatens the peace and stability of the whole world.”
பாகிஸ்தானின் ரத்தம் சொட்டும் விகார முகம்
Posted by : கவிதா | Kavitha
on 21:23
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
17 - பார்வையிட்டவர்கள்:
//அம்மனி எப்ப என்னவா இருப்பாங்கன்னு.. எனக்கு இன்னைக்கு வரைக்கும் தெரியல.. உங்களுக்கு ஏதாச்சும் தெரிஞ்சா சொல்லுங்கப்பா...//
எனக்கும்தான்....
வாம்மா "விஜயசாந்தி"
நல்லாத்தான் சவுன்ட் விடுற...
சந்தோசம்...
ஹிஹி.. :)
//வாம்மா "விஜயசாந்தி"//
எனக்கு இந்த பேரு எல்லாம் எத்தனையோ வருஷத்துக்கு முன்னே ஆபிஸ்' ல வச்சாச்சு..
நீ வேற ட்ரை பண்ணு..! பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.!!
இந்தியா போன்ற சப்பை நாடுகளுக்கெல்லாம் பாகிஸ்தான் எப்போதுமே சிம்ம சொப்பனம்தான்...!
நாம எப்போதுமே வாய (வாய்) மட்டும்தானே உபயோகிப்போம்...!!
கண்டணம் தெரிவிப்பதற்கே பல பேர்கிட்ட அனுமதி வாங்க வேண்டியிருக்கு, நீங்க வேற...!!!
//பேச்சுவார்த்தைகளில் திருந்தும் மனமும் குணமுமா அவர்களிடம் இருக்கிறது.. ?!! //
மனித மனங்களின் வேதனையையும், வலியையும் புரியாத ஜென்மங்கள்:(
@ சிவாஜி, வருகைக்கு நன்றி.. என்ன செய்யறது நம்ம ஆதங்கத்தையும், கோபத்தையும் இப்படி பதிய வேண்டியதாக இருக்கு.. :(
----------------------------
@ பூரணி - ம்ம்...ஆமாம்..புரியாத ஜென்மங்கள்!! :(
அவர்கள் ஏ.கே 47ல் சுடுவார்கள்...
நாம் வாயிலே வடை சுடுவோம்..அவ்ளோ தான் மேட்டரு..
@ அ.மு.செய்யது - ம்ம் அதான் தெரிஞ்ச கதையாச்சே... !! சொல்லனும்மா இந்தியர்களின் பேச்சாற்றலை பற்றி...?!
//இந்தியாவிற்கு எதிரான திவரவாதத்தை தான் பார்த்துக்கொண்டு எல்லோரும் சும்மா இருந்தார்கள்.. இன்னமும் அப்படியே இருப்பார்களா? //
உங்களுக்கு உலக பாலிடிக்ஸ் தெரியலன்னு பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
@ ராஜ நடராஜன் - இதை சொல்றதுக்கு எதுக்குங்கு பணிவு எல்லாம்.. நிஜமாகவே எனக்கு உலகம் மட்டும் இல்ல உள்நாட்டு பாலிடிக்ஸ் தெரியாதுங்க.. ஏதோ அப்பப்ப படிச்சி தெரிஞ்சிக்க முயற்சி செய்துக்கிட்டு இருக்கேன்.. :)
//இதைவிட நல்ல சந்தர்ப்பம் உலக நாடுகளுக்கும் கிடைக்குமா? //
இதை விட நல்ல சந்தர்ப்பம் அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் படையெடுப்பு."You are with us or not with us" ன்னு புஷ் முஷ்ரஃபை மிரட்டி நண்பனாக்கிகிட்டாரு.
//@ ராஜ நடராஜன் - இதை சொல்றதுக்கு எதுக்குங்கு பணிவு எல்லாம்.. நிஜமாகவே எனக்கு உலகம் மட்டும் இல்ல உள்நாட்டு பாலிடிக்ஸ் தெரியாதுங்க.. ஏதோ அப்பப்ப படிச்சி தெரிஞ்சிக்க முயற்சி செய்துக்கிட்டு இருக்கேன்.. :)//
நான் அந்தப் பொருளில் சொல்லவில்லைங்க.பெண்ணாக உலகப் பார்வை நோக்குவது மகிழ்ச்சிக்குரியதுங்க.நான் சொல்ல வந்தது அமெரிக்க இரட்டை கோபுரம்,லண்டன் குண்டுவெடிப்பு,மும்பாய் குண்டுவெடிப்புன்னு அனைத்துக்கும் மூல நோயே பாகிஸ்தான் என்பது அனைத்து நாட்டுக்கும் தெரியும்.முக்கியமாக அமெரிக்காவுக்கு.ஆனால் சுயநல நோக்குகள்,பூகோள ஆதாயங்கள்,அணு ஆயுத நாடு போன்ற காரணங்கள் இன்னும் எத்தனை குண்டுவெடிப்புக்கள் வந்தாலும் பாகிஸ்தானை ஒன்றும் செய்யப் போவதில்லை.
//நான் அந்தப் பொருளில் சொல்லவில்லைங்க.பெண்ணாக உலகப் பார்வை நோக்குவது மகிழ்ச்சிக்குரியதுங்க.//
:) நன்றி...
//இன்னும் எத்தனை குண்டுவெடிப்புக்கள் வந்தாலும் பாகிஸ்தானை ஒன்றும் செய்யப் போவதில்லை.//
ஒன்றும் செய்ய முடியாது என்றா நினைக்கிறீர்கள். தனிப்பட்ட முறையில் நான் யோசித்த பார்த்த வரையில், உலக வரைப்படத்திலிருந்தே பாக்'ஐ எடுக்கும் முடியும் என்பதே.. என் தீவிர நம்பிக்கை. இன்னமும் முழுமையாக யோசித்து முடியுமா முடியாதா என்று நீங்கள் சொல்லிய காரணங்களை ஆராயவில்லை. இருப்பினும் முடியும் என்ற ஒரு கணிப்பு இருக்கிறது என்றாலும் அந்நாட்டு மக்களை பற்றி யோசிப்பேன்...
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் *
பெண்கள்
வயதானவர்கள்
நோயுற்றோர்
வயதானோர்
இவர்களை மட்டும் காப்பாற்றி விட வேண்டும்..
* இதற்கு மேல் குழந்தைகள் இருந்தால், அவர்களுக்குள் பகைமை என்ற தீ எரிந்து கொண்டே இருக்கும், எங்கே இருந்தாலும் அவர்கள் இப்படி எதிர்காலத்தில் தீவிர
வாதிகளாக மாறக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
கவிதா,
இதைப் படித்தீர்களா?
இதை?
@ பாபு நன்றி.. :)
இரண்டையும் படித்துவிட்டென்.. நன்றி..
அம்மனி எப்ப என்னவா இருப்பாங்கன்னு.. எனக்கு இன்னைக்கு வரைக்கும் தெரியல.. உங்களுக்கு ஏதாச்சும் தெரிஞ்சா சொல்லுங்கப்பா...
இதையே தான் நானும் யோசிக்கிட்டு இருக்கேன்.
நீங்க சீரியஸா, காமெடியா, இல்ல காமெடி கலந்த சீரியஸா, இல்ல சீரியஸ் கலந்த காமெடியா...
ஷ் ப்பா முடியலடா சாமி.
@அமித்தும்மா, எல்லா சமயமும் ஒரே மாதிரி இருக்க முடியறது இல்ல.. வீட்டில் சொல்லுவாங்க.. முதிர்ச்சி (மேச்சுருட்டி) சுத்தமா இல்லைன்னு.. :) என்ன செய்யறது எதையும் மறைக்க தெரியாமல் வெளிப்படுத்துவது ஒரு காரணமாக இருக்கலாம்.. :) அதுல அதிக பட்சமாக நீங்க எல்லாரும் மாட்டிக்கறீங்க.. உங்களை எல்லாம் நினைச்சாத்தான் பாவமா இருக்கு :)
//5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் *
பெண்கள்
வயதானவர்கள்
நோயுற்றோர்
வயதானோர்//
இது, பாகிஸ்தானில் இருக்கும் அத்தனை பேரும் தீவிரவாதிகள் அல்லது இந்திய எதிர்ப்பாளர்கள் என்ற கண்ணோட்டத்தைத் தருகிறது. நான் வசிக்கும் சவுதி அரேபியாவில் ஒவ்வொரு நாளும் எத்தனையோ பாகிஸ்தானியர்களைச் சந்திக்கிறேன். அவர்களில் 99% அன்பானவர்கள். இந்தியர்களை சகோதரர்களாக நினைப்பவர்கள். பாகிஸ்தானில் தீவிரவாதம் தாண்டவம் ஆட முக்கியக் காரணம் அங்கிருக்கும் அரசு. அடுத்தது பல மக்களில் படிப்பறிவின்மை. அதனை பயன்படுத்தி தீவிரவாதக் குழுக்கள் பலரையும் மூளைச்சலவை செய்கிறது.
Post a Comment