அணில் குட்டி அனிதா : அண்ணனுங்க, அக்காங்க யாரும் யாரும் டென்ஜன் ஆகப்பிடாது, நாட்டுல நடக்கறத அப்படியே புட்டு புட்டு வைக்கிறேன் .... ஏதோ என்னால முடிஞ்சது..
ஒரு வருஷம் முன்ன வரைக்கும் நம்ம அக்காஸ் எல்லாரும் அவிங்க கல்யாணம் பண்ணிக்க போறவரு எப்படி இருக்கனும்னு நினைச்சாங்கன்னா...
* ஐடி கம்பெனி யில் ஒரு நல்ல வேலை,
* குறைந்தபட்சம் 50 -70 ஆயிரம் ரூபாய் மாத சம்பளம்,
* சொந்த வீடு, மாமியார் , நாத்தனார் உடன் இருக்கக்கூடாது,
* பிக்கல் பிடுங்கல் இல்லாத தனிக்குடித்தனம்,
* ஆடம்பரமான வாழ்க்கை -
ஆனா இப்ப இம்புட்டும் சேர்த்து.... "சிக்ஸு பேக்" கும் வேணுமாம்.. அதுக்கு பாவம் நம்ம அண்ணனுங்க எங்க போறது......?!!
முதல்ல அண்ணன்களுக்கு "சிக்ஸ் பேக்" னா என்னான்னு தெரியுமான்னு தெரியல.. சரி அதுக்காக தான் இந்த போட்டோ...
ஹி ஹி ஹி....ஆனா நம்ம அண்ணனுங்க கிட்ட வேற ஒரு சிக்ஸ் பேக் எப்பவும் கைவசம் ... இது இருக்க வரை அண்ணங்களை யாரும் அசச்சிக்க முடியாதில்ல..! ஆனா என்ன கல்யாணம் யாருக்கும் இந்த ஜென்மத்தில ஆக போறத்தில்லை ன்னு மட்டும் தெளிவா எனக்கு தெரிஞ்சி போச்சி.. :)
ஆனாலும் அக்காங்கங்க எல்லாம் திடீர்னு வில்லிகளாக மாறிட்ட மாதிரியே தெரியுது எனக்கு..
இந்த வில்லிகளை சமாளிக்க அண்ணன்களுக்கு ஒரு எக்ஸ்ர்ஸைசு விடியோ... அண்ணங்களா ஜிம்'முக்கு போக வேண்டாம், வூட்டுலேயே செய்ங்க... ஏன் ஆபிஸ்ல மேனேஜர் ரூம் ல போய் செய்ங்க.. சீக்கிரம் பிரோமோஷன் கிடைக்கும்..
பீட்டர் தாத்ஸ் :- “A few beers short of a six-pack”
சிக்ஸ் பேக் - (Six Pack) வில்லிகளாக மாறிட்டாங்களோ!!
Posted by : கவிதா | Kavitha
on 15:27
Labels:
அணில் குட்டி
Subscribe to:
Post Comments (Atom)
20 - பார்வையிட்டவர்கள்:
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
டோட்டல் டேமேஜா....???
:)))
//* ஐடி கம்பெனி யில் ஒரு நல்ல வேலை,
* குறைந்தபட்சம் 50 -70 ஆயிரம் ரூபாய் மாத சம்பளம்,
* சொந்த வீடு, மாமியார் , நாத்தனார் உடன் இருக்கக்கூடாது,
* பிக்கல் பிடுங்கல் இல்லாத தனிக்குடித்தனம்,
* ஆடம்பரமான வாழ்க்கை
ஆனா இப்ப இம்புட்டும் சேர்த்து.... "சிக்ஸு பேக்" கும் வேணுமாம்.. அதுக்கு பாவம் நம்ம அண்ணனுங்க எங்க போறது......?!!//
அடி ஆத்தி...!
இம்புட்டுக்கும் எங்க போறது....??? :)))
//"சிக்ஸ் பேக்" னா என்னான்னு தெரியுமான்னு//
கஜினி ஹிந்தி வெர்ஷன் வந்தப்போ என் டீம் மேட்ஸ் சொன்ன கமெண்ட்..
"அவனவன் 6 பேக், 8 பேக்னு போறானுங்க.. நம்மால முடிஞ்சது 6 பாக்கெட்/ 8 பாக்கெட் வைச்சு டிரஸ் போடலாம்.. அம்புட்டுதான் முடியும்" :)))
//
அடி ஆத்தி...!
இம்புட்டுக்கும் எங்க போறது....??? :)))//
அண்ணாச்சி.. அது ஒரு வருஷத்துக்கு முன்னாடி இருந்த நிலைமை.. இப்போ எல்லாம் பையன் ஐடி கம்பெனினு சொன்னாலே ரிஜெக்ட் பண்ணிடறாங்களாம் :))))
//
ஹி ஹி ஹி....ஆனா நம்ம அண்ணனுங்க கிட்ட வேற ஒரு சிக்ஸ் பேக் எப்பவும் கைவசம் ... இது இருக்க வரை அண்ணங்களை யாரும் அசச்சிக்க முடியாதில்ல..!
//
சிக்ஸ் பேக் எல்லாம் ச்சும்மா ஜுஜூபி....நாங்கெல்லாம் சிக்ஸ்டி ஃபைவ் பேக்கும் அப்புறம் கொஞ்சம் சில்லறையும் வச்சிருக்கோம் :0))
//ஆனா இப்ப இம்புட்டும் சேர்த்து.... "சிக்ஸு பேக்" கும் வேணுமாம்..//
இப்படியெல்லாம் அக்காஸ் எதிர்பார்கிறார்களா????
அய்யய்யோ..டென்சன கிளப்பறீங்களே!!
உண்மைனா எங்க கதையெல்லாம் மொத்தமா அதோகதிதான்.....:(
பாக்கிறதுக்கு சுலபமாத் தான் இருக்கு.
ஆனா abs exercises எல்லாம் வலி பின்னி எடுக்கும். முதல் மூன்று நாள் வலியைப் பொறுத்துக்கிட்டு தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.
சிங்கிள் பாட் (single pot) வயிறை சிக்ஸ் பேக்கா மாத்திட்டுப் போனாலும் "என்ன இன்னமும் தமிழ் கஜினி சூர்யா மாதிரி சிக்ஸ் பேக்ல இருக்கே, ஹிந்தி கஜினி ஆமீர் மாதிரி எய்ட் பேக்ஸ்ல வாம்மா கண்ணு"ன்னு சொல்லிடுவாங்க, எதுக்கு இவங்களுக்காக கஷ்டப்பட்டுக்கிட்டு....
//தமிழ்மணம் பரிந்துரை : 1/1 //
ஆஹா யாரோ ஒரு சிக்ஸ் பேக் வாண்டட் பார்ட்டீ வந்திட்டு போயிருக்கு போல :)
ஆஆஆஆஆஆஆஆஆஆ........
பசங்களுக்கு கல்யாணம் நடந்த மாறி தான் :(
//டோட்டல் டேமேஜா....???
:)))//
ஹி ஹி..ஆமாம்... அணிலுன்னா ச்சும்மாவா?
//அடி ஆத்தி...!
இம்புட்டுக்கும் எங்க போறது....??? :)))//
சிம்பில் ! கொள்ளைக்காரனா இருக்கனும் !!
-----------------------------------
//"அவனவன் 6 பேக், 8 பேக்னு போறானுங்க.. நம்மால முடிஞ்சது 6 பாக்கெட்/ 8 பாக்கெட் வைச்சு டிரஸ் போடலாம்.. அம்புட்டுதான் முடியும்" :)))//
காயூ... உண்மைய இப்படி புட்டு புட்டு வைக்கறீங்க.. சூப்பர் நிஜமா நம்ம மக்களால அம்புட்டு தான் முடியும்..
------------------------------------
//சிக்ஸ் பேக் எல்லாம் ச்சும்மா ஜுஜூபி....நாங்கெல்லாம் சிக்ஸ்டி ஃபைவ் பேக்கும் அப்புறம் கொஞ்சம் சில்லறையும் வச்சிருக்கோம் :0))//
:))))) அது சரி!!!!
-------------------------------------
//அய்யய்யோ..டென்சன கிளப்பறீங்களே!!
உண்மைனா எங்க கதையெல்லாம் மொத்தமா அதோகதிதான்.....:(//
அதான் அணிலு கிளையரா சொல்லியிருக்கே.. இப்ப ஐடி வேண்டாம் னு சொல்றாங்களாம்.. ஆனா சம்பளம் மத்த விஷயங்கள் குறையாது... :))
-------------------------------------
//பாக்கிறதுக்கு சுலபமாத் தான் இருக்கு.
ஆனா abs exercises எல்லாம் வலி பின்னி எடுக்கும். முதல் மூன்று நாள் வலியைப் பொறுத்துக்கிட்டு தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.//
இல்ல பாஸ், நான் ஏரோபிக் செய்யும் போது டோனிங் ல abs exercises உண்டு, செகண்ட்ஸ் க்கு வலிக்கும் அவ்வளவு தான் ..abs செய்யற அன்னைக்கு (ஒரு நாள் விட்டு ஒரு நாள்) சாப்பாடு எனக்கு சரியா சாப்பிட முடியாது அவ்வளவு தான்...
உங்களுக்கு எங்களவிட கொஞ்சம் ஹெவியா இருக்கும் இல்லையா.. பட் இந்த வீடியோ இருக்கறது எல்லாம் ஈசியா செய்யலாம்... ஒவ்வொன்றும் 10 டைம்ஸ் லிமிட் வைத்து செய்யலாம் ரொம்ப வலி வராது..
//ங்கிள் பாட் (single pot) வயிறை சிக்ஸ் பேக்கா மாத்திட்டுப் போனாலும் "என்ன இன்னமும் தமிழ் கஜினி சூர்யா மாதிரி சிக்ஸ் பேக்ல இருக்கே, ஹிந்தி கஜினி ஆமீர் மாதிரி எய்ட் பேக்ஸ்ல வாம்மா கண்ணு"ன்னு சொல்லிடுவாங்க, எதுக்கு இவங்களுக்காக கஷ்டப்பட்டுக்கிட்டு....//
ராஜ் ஆமா கண்டிப்பா சொல்லுவாங்க நம்ம பொண்ணுங்க எல்லாம் தெய்வங்க.. நீங்க எல்லாம் தான் ரொம்பவும் பாவம் !! :(((
//ஆஹா யாரோ ஒரு சிக்ஸ் பேக் வாண்டட் பார்ட்டீ வந்திட்டு போயிருக்கு போல :)//
ஹி ஹி....அது அணிலு.. ஆனா அதுக்கு சிக்ஸ் பேக் எல்லாம் இல்ல பாஸ் !!
//ஆஆஆஆஆஆஆஆஆஆ........
பசங்களுக்கு கல்யாணம் நடந்த மாறி தான் :(//
ஆமா நடந்த மாதிரி தான்.. அப்படியே நடந்தாலும்.. இரண்டு நாள்'ல டைவர்ஸ்.. :))))))))
இந்த வீடியோ பார்த்த ஆர்வத்தில இன்னைக்கி காலைலேருந்து செய்ய ஆரம்பிச்சிட்டேன்.
ஒரு மாசத்துக்குள்ள, six packs வரலைன்னா உங்க மேல வழக்கு தொடரப்படும்.
என்னைக் கேட்டா best abs exercise, என் நாலு வயசு பையனை காலிலே ஒக்கார வைச்சிட்டு "ஊஞ்சாலே உருமாலே" விளையாடுறது தான்.
@ கிருபா
//You Are Posting Really Great Articles... Keep It Up...//
இதே மாதிரி தான் எல்லாருக்கும் போடுவீங்களா????
@ Joe - அணிலு மேல வேணும்னா கேச போடுங்க. .ஆனா அணிலு ஒரு மாசம் டைம் எல்லாமா சொல்லி இருக்கு... :) ???
ம்ம்.. எனக்கு கூட abs exercise பிடிக்கும் compare to leg, and arms.. அதுவும் arms சுத்தமா பிடிக்காது செம கடி அது !! :(
யக்கோவ் நீங்க நல்லவாங்களா!! இல்ல....!!!!
இப்படி ஒரு பதிவை போட்டு ஆப்பு அடிக்கிறிங்க...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வவ்
//* ஐடி கம்பெனி யில் ஒரு நல்ல வேலை,
* குறைந்தபட்சம் 50 -70 ஆயிரம் ரூபாய் மாத சம்பளம்,
* சொந்த வீடு, மாமியார் , நாத்தனார் உடன் இருக்கக்கூடாது,
* பிக்கல் பிடுங்கல் இல்லாத தனிக்குடித்தனம்,
* ஆடம்பரமான வாழ்க்கை -//
ரொம்ப கம்மிய இருக்கே :)
அணில்குட்டி, ஆட்டுக்குட்டி மேலேயெல்லாம் என்னாலே வழக்கு தொடுக்க முடியாது. (என்ன பெரிய பிரச்சினை, என்ன பண்ணினாலும் நம்ம நாட்டில தீர்ப்பு சொல்றதுக்குள்ள உங்க கொள்ளுப்பேரன் கூட உயிரோட இருக்க மாட்டாங்க!)
கொஞ்சம் வலி இருக்கணும், அப்போ தான் அந்த தசைகள் இறுக்கமாகி வளரதுன்னு அர்த்தம். வலிக்காமே செய்றீங்கன்னா, பலன் கிடைக்க ரொம்ப நாளாகும்.
Didn't you read Aamir Khan's trainer's interview, after the release of Ghajini, that Aamir cried once or twice, unable to bear the pain, after the abs exercises?
@ Joe - உங்களுடைய கடைசி பின்னூட்டத்திற்கு பதில் சொல்லாம விட்டுட்டேன்.
ஆமா வலி இருக்கும் தான்... செய்யும் போது ரொம்பவே இருக்கும் செய்து முடித்தவுடன் போய்விடும்... திரும்ப அதன் வலி வீட்டிற்கு வந்த பிறகு அல்லது அடுத்தநாள் நன்றாகவே தெரியும்.. ஆனால் தொடர்ந்து செய்ய அதுவும் குறைய த்தான் செய்கிறது.
ம்ம்..அமிர்கான் பற்றி படிக்கலை... :)
Post a Comment