என் பெயரை பயன்படுத்தி, ப்ளாக் நண்பர்களிடம் உதவி கேட்டு பணம் வாங்குவதாக எனக்கு ஈமெயில் வந்து இருந்தது, இது இரண்டாவது முறை. கொடுத்தவரும், என் பெயரை பயன்படுத்தியதால், யோசிக்காமல் கொடுத்தும் இருக்கிறார். இது எனக்கு தெரியாமல் நடந்து இருக்கிறது. தயவுசெய்து என்னை மன்னிக்கவும்.
இப்படி திரும்பவும் எதுவும் நடக்காமல் இருக்கவே இந்த வேண்டுகோள். என் பெயரை பயன்படுத்தி, யாராவது உதவி கேட்டு வந்தால், என்னிடம் கேட்டுவிட்டு பண உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய ஈமெயில் முகவரி அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். தயவுசெய்து, என்னை ஒரு முறை கேட்டு விட்டு கொடுங்கள். ஏனென்றால் பண உதவி என்பது சரியான இடத்திற்கு, சரியான நேரத்தில், சரியான முறையில் பயன்படவேண்டும். யாரும் தவறாக என் பெயரை உபயோகிக்க கூடாது என்பதால் இந்த வேண்டுகோள். இரண்டு முறையும் தவறாக தன் சுயநலத்திற்காக கஷ்டம் என்று சொல்லி ஏமாற்றி இருக்கிறார்கள்.
தயவுசெய்து யாரும் என் பெயரை சொல்லி கேட்பதால் ஏமாந்து பண உதவி அல்லது பிற உதவிகளை செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அனைவரின் புரிதலுக்கும் மிக்க நன்றி
ஒரு வேண்டுகோள்... .
Posted by : கவிதா | Kavitha
on 13:34
Labels:
கதம்பம்
Subscribe to:
Post Comments (Atom)
24 - பார்வையிட்டவர்கள்:
இது வேறயா?
உங்களுக்குன்னே எப்படிங்க இப்படில்லாம் பல்வேறு பிரச்சினைகள் வரிசை கட்டி நிக்குது?
இதென்ன கூத்து? இதுபோலவும் நடக்கிறதா? :-(
எனக்கு கூட சில லட்சங்கள் கடன் இருக்கிறது, உங்க பேரை சொன்னவுடனே பணம் கொடுத்தவரோட பேரை சொன்னீங்கன்னா .... ஹீ ஹீ!
//இது வேறயா?
உங்களுக்குன்னே எப்படிங்க இப்படில்லாம் பல்வேறு பிரச்சினைகள் வரிசை கட்டி நிக்குது?//
ம்ம் ஆமாம்..என்னோட Attitude, approach எதுவுமே சரி கிடையாது சிபி, அதான் எனக்கு பிரச்சனைகளும் வரிசை கட்டி நிக்குது.. :((
அவ்வ்வ்....இது என்ன கொடுமை!!
//இதென்ன கூத்து? இதுபோலவும் நடக்கிறதா? :-(//
ஆமாம் அவர் பணத்தை கொடுத்து விட்டு பிறகு என்னிடம் வந்து எனக்கு பணம் எடுத்த ரெசிப்ட் வரவில்லை கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள் என்று சொன்னபிறகே தெரிந்தது.
//எனக்கு கூட சில லட்சங்கள் கடன் இருக்கிறது, உங்க பேரை சொன்னவுடனே பணம் கொடுத்தவரோட பேரை சொன்னீங்கன்னா .... ஹீ ஹீ!//
:)) நான் நேரடியாக வேண்டுமானால் உதவி செய்யறேங்க..
//ஆமாம் அவர் பணத்தை கொடுத்து விட்டு பிறகு என்னிடம் வந்து எனக்கு பணம் எடுத்த ரெசிப்ட் வரவில்லை கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள் என்று சொன்னபிறகே தெரிந்தது.
//
பணம் கொடுத்தவரை என்ன சொல்லி திட்டுவது? :-(
ஒரு போன்கால் செய்துகூட உறுதிப்படுத்திக் கொள்ள முனையவில்லையா அவர்?
//அவ்வ்வ்....இது என்ன கொடுமை!!//
ம்ம் ரொம்பத்தான் சிலரை நம்பறோம்.. நம்புவது நம் தவறல்லவா ? அதற்கான பலனை அனுபவித்து தானே ஆகவேண்டும்..
அனுபவி கவிதா அனுபவி ... :))
செல்வா அடுத்தது நீங்க.. இப்படியே தேத்துனா ஒரு ஐரோப்பா டூர் போயிட்டு வரலாம் போல :)
என் பேரை சொல்லி யாரு கேட்டதாலும் கொடுக்கவே வேணாம்னு சொல்லிடுங்க.
//பணம் கொடுத்தவரை என்ன சொல்லி திட்டுவது? :-(
ஒரு போன்கால் செய்துகூட உறுதிப்படுத்திக் கொள்ள முனையவில்லையா அவர்?//
லக்கி பாவம் அவரு, அவரு என்ன செய்வாரு, அவரை நான் ஏங்க இப்படி கொடுத்தீங்க என்று கேட்டவுடன் சொன்ன பதில்... உங்களை ரிஃபவ்ர் செய்யும் போது உண்மையாக உதவி கேட்கிறார்கள் என்று நினைத்துவிட்டேன் என்கிறார்.
ஆளையும் தெரியும், பணத்தை திரும்ப கொடுக்க சொல்லி பிரஷர் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறேன்.. திருப்பி கொடுக்கும் வரை விடமாட்டேன்..
ஆனால் இவர் என்னிடம் சொல்லிவிட்டார், இன்னும் எத்தனை பேர் இப்படி சொல்லாமல் இருக்கிறார்களோ என்று தான் பதிவு.. :(
//என் பேரை சொல்லி யாரு கேட்டதாலும் கொடுக்கவே வேணாம்னு சொல்லிடுங்க.//
ம்ம்..இதுவும் சரிதான்.. ஆனால் பதிவை படித்து நம் மக்கள் உஷார் ஆகிவிடுவார்கள் என்றே நினைக்கிறேன்.. :)
நமக்குத் தெரிந்தவர் பெயரைச் சொல்லி ஒருவர் உதவி கேட்கும்போது அதை உறுதிப்படுத்திக்கொள்ளத் தோன்றுமா என்ன? ஆச்சர்யமாக இருக்கிறது! : (
இது வேற நடக்குதா
//நமக்குத் தெரிந்தவர் பெயரைச் சொல்லி ஒருவர் உதவி கேட்கும்போது அதை உறுதிப்படுத்திக்கொள்ளத் தோன்றுமா என்ன? ஆச்சர்யமாக இருக்கிறது! : (
//
பணவிஷயம் என்றால் கட்டாயம் உறுதிப்படுத்திக் கொண்டே ஆகவேண்டும். ஏனென்றால் கொடுத்தவர் - வாங்கியவர் மட்டும் இதில் சம்பந்தப்படவில்லை. அவருக்கே தெரியாமல் ‘பெயர் தானம்’ செய்தவரும் இதில் சம்பந்தப்படுகிறார்.
புதுசு புதுசா பிளான் போட்டு வரங்கா போல...
இம்புட்டு நல்லவய்ங்கெ உலகத்துல இன்னும் கெடக்கானுவலா?
சொல்லவே இல்ல.
எனக்குந்தேன் தேவப்படுது. கொஞ்சம் கொடுத்தவர் பேரச் சொன்னீங்கன்னா எனக்கு ஒத்தாசையா இருக்கும், சொல்றயளா?
நான் யாருக்கும் சொல்ல மாட்டேனாக்கும்.
அட இது நல்லா இருக்கே..
அந்த பணம் கொடுத்தவரின் அட்ரஸ் சொல்லுங்கப்பு..
நானும் எதாச்சும் தேத்த முடியுதான்னு பாக்குறேன்.. :D))))
புதுசா வேற யாராச்சும் கொடுத்தாலும் (கெடச்சாலும்) பரவால.. அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.. அட்ரஸ் பிளீஸ்..
என்ன.., அணில காணோம்..! ஆட்டைய போட்டவன தேடிட்டு போயிருக்கா..?
அவ்வ்வ்வ்வவ்வ்...கொடுமை...எப்படி தான் உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் வருதோ!!! ;(
இது போலவே என் பாஸின் நண்பருக்கும் நடந்திருக்கிறது...
காலம் கலி காலம்
உங்க பேரை சொன்னால் அட்லீஸ்ட் பணம் தராங்களே...
எங்க பேரை சொன்னா உதை வேண்டுமானால் தருவார்கள். பணம் தரமாட்டார்கள் ஹி ஹி..
@ ரமேஷ் வைத்யா - உறுதிப்படுத்தி கொள்ளுதல் நல்லது, எதற்காகவென்றால், அந்த உதவிகேட்கும் மனிதருக்கு நிஜமாகவே பணத்தேவை இருக்கிறதா.இருந்தாலும் எதற்கு என்பது போன்ற விபரங்களை ஆராயாமல் கொடுக்கக்கூடாது இல்லையா?
@ ஜம்மு - நடக்குதே.. :(
@ புவனேஷ் - ம்ம்...
@ விஜயராஜா - உங்க தமிழ் சூப்பரா இருக்கு. .எந்த ஊரு நீங்க? உதவி தேவையான சொல்லுங்க. .நானே செய்யறேன்..
@ சுரேஷ் குமார் - கவிதா தான் ..
@ சுரேஷ்குமார் - கவிதா மூட் சரி இல்லன்னா.. அணில் வெளில வராது பாஸ்.. :( அமைதியா இருக்கும்..
@ Choco, நான் அவ்வளவு ராசியான பெண்... :))))))))
@ அமித்தும்மா - ஆமா கலி காலம்..
@ ரவி - :)... அவ்வளவு நல்லவரா நீங்கள்.. :)
உங்க பேர வச்சு ஓட்டு கேட்டு இருந்தாலும் பரவாயில்லை (அந்த கட்சிக்கு டெபாசிட்?)துட்டு கேட்குராங்கய்யா, என்ன கொடுமை கதிரேசா!!
"When you can do the common things of life in an uncommon way, you will command the attention of the world."
Post a Comment