சொல்ல வார்த்தைகள் இல்லை... அத்தனை மகிழ்ச்சியுடன் இன்று இருக்கிறேன்..
பார்வையிடும் பதிவுகள் போடுவதற்கு அவரவருக்கு பிடித்த இனிப்புகள் கேட்டு வாங்குவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. இது இப்போது என்று இல்லை.. நானும் திருந்தப்போவதில்லை நீங்களும் திருந்தப்போவதில்லை. எதுக்குன்னு கேட்டு டென்ஷன் பண்ணாதீங்க. . பிடித்த இனிப்பு ஒன்று சொல்லுங்கள் ன்னா சொல்லி த்தொலைக்கலாம் இல்லையா..
பாருங்க சிபி'யை "காராபூந்தி" ன்னு சொல்லி இருக்காரு .அது இனிப்பா?? கேட்கிறேன் அது இனிப்பா? ம்ம்.. பால்கோவா தான் அவருக்கு பிடித்தது... புனிதா சொல்லிவிட்டதால் திரும்ப வேறு கேட்டேன் அதற்கு சொன்ன பதில் தான் காராபூந்தி.. ம்ம்.. என்ன சொல்ல..
இப்படி என் உயிரை அடுத்து வாங்கியது வேற யாரு குசும்பன்.. பிடித்த ஸ்வீட் "ஷ்ரேயா......"!! அவ்வ்வ்வ்வ்வ்!! ஏன்ப்பா ஏன்ன்ன்ன்ன்ன்ன்??
அடுத்து ஆயில்ஸ்... சோமாசு..! அப்புறம் வேறு ஏதோ சொன்னார், ஆனால் எனக்கு ஒன்று போதும் என்று சொன்னவுடன்.. "யக்கா பிடிச்ச கிடைச்ச ஒன்னையும் ஒனக்கு கொடுத்துட்டு நான் என்ன செய்ய " என்கிறார்..
ம்ம்ம். புலி... .இவரு நிஜமாவே பிஸ்தா தான்.. எங்க போறேனோ அங்க என்ன இருக்கோ அது பிடிக்கும்.ன்னு " சொன்னாரு.. ஏன்ன்ன்ன் ?? பிடிச்ச ஸ்வீட் பேரு கேட்டா இது பிடிச்சி இருக்குன்னு ஒரே வார்த்தையில உங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல தெரியாதா? கையில கால் ல விழுந்து.. அப்புறம் சொன்னது பிஸ்தா ரோல்..
அடுத்து பானிப்பூரி சந்தோஷ்.. பானிப்பூரி யா "ஒவ்வேக்" சொல்லுங்க... சாணி என்ன சயனைட்'ஐ அதுக்குள்ள போட்டு கொடுத்தாலும் அப்படியே ஹார்லிக்ஸ் மாதிரி சாப்பிடுவோம்னு சொன்னவரு இந்த நல்லவரு சரி அவ்வளவு பிடிக்குமேன்னு ஸ்வீட் பேரை கேட்காமல் இதையே எடுத்துக்கிட்டேன்..
அடுத்து குட்டி கண்ணம்மா... "ஒரு ஸ்வீட் கிட்ட ஸ்வீட் டை பத்தி கேட்கலாமா. ?" .ன்னு பதில் சொல்றாங்க.... ! சரி வேணாம்... நான் அழுதுடுவேன்... நெக்ஸ்ட்
கவிதாஆஆஆ !! எப்பவும் முல்ஸ் இப்படித்தான் ஸ்டார்ட் கேமெரா ஆக்ஷன்.! ன்னு ஆரம்பிப்பாங்க.... எனக்கு எல்லாமே பிடிக்கும்ப்பா.. என்னால முடியலப்பா.. ஒரு ஒரு மணி நேரம் லக்சர் கொடுத்து அப்புறமா அம்மணி பிடித்த ஸிவீட் பேரை சொன்னாங்க.....
ஜுவிட்டுங்களாஆஆஆஆ ஆளவிடுங்கப்பா... !!
இதுல ரொம்ப நல்ல பிள்ளைகள் - கேட்டவுடன் எதுவுமே மறுகேள்வி கேட்காமல் கொடுத்தவர்கள்
தேவ், ரவி, சிவகுமார்ஜி, வெயிலான், மாதவன், ராஜ்நடராஜன், கைப்பூ, பாலாஜி, மங்கைஜி,
ரொம்ப கெட்ட பிள்ளைகள்
கேட்டும் கண்டுக்காம சொல்லாமே எஸ்கேப் ஆகறவங்க...
சரி.. இந்த விட்ஜிட் சேர்க்கும் வரை அதன் அழகு தெரியவில்லை. .சேர்த்தப்பிறகு பார்க்கவும் படிக்கவும் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கு..
என்னைச்சுற்றி எத்தனை இனிப்பானவர்கள் இருக்கிறார்கள்.. ஒரு ஸ்வீட் ஸ்டாலில் இருப்பது போன்ற ஒரு உணர்வு......
அணில் குட்டி அனிதா : ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் கவி பாத்து பாத்து ஸ்வீட் ஓவராகி சக்கர வியாதி வந்துட போகுது...
பீட்டர் தாத்ஸ் :- “May you have enough happiness to make you sweet, enough trials to make you strong, enough sorrow to keep you human enough hope to make you happy.”
குறிப்பு - விடுப்பட்டவர்கள் ஸ்வீட் நேம் சொன்னால்தான் சேர்த்துக்கொள்ள படுவார்கள்.. :)))) அதுவும் ரீப்பீட்டு ஆகாமல் இருந்தால் நலம்.
என்னைச்சுற்றிலும் எத்தனை இனிப்பானவர்கள் !!
Posted by : கவிதா | Kavitha
on 09:49
Labels:
கதம்பம்
Subscribe to:
Post Comments (Atom)
38 - பார்வையிட்டவர்கள்:
ஹை.. நான் தான் ஃபஸ்ட்டு..
ஆமா.. நீங்க வெச்சிருக்கற லிஸ்ட்ல எங்க பேர் எல்லாம் இல்லையா.. :(((
இது மிகப்பெரிய ஓரவஞ்சனை..
@சுரேஷ் குமார், கண்டிப்பாக உண்டு. .ஆனா ஸ்வீட் பேரை சொல்லுங்க. .அதுவும் இந்த லிஸ்ட் ல இல்லாத உங்களுக்கு பிடித்த ஸ்வீட் சொல்லுங்க. .இல்லன்னா 1, 2, 3 போட வேண்டி வரும்.. :))))
//அடுத்து குட்டி கண்ணம்மா... ஒரு ஸ்வீட் கிட்ட ஸ்வீட் டை பத்தி கேட்கலாமா. .சரி வேணாம்... நான் அழுதுடுவேன்... நெக்ஸ்ட்//
:))))))))))))))))))))))))))
உண்மைய சொன்னேன்.. அதுக்கு ஏன் இந்த அழுவாச்சி?? இதெல்லாம் ரொம்ப ஓவராக்கும் :P
:-) ஏதோ செஞ்சுத்தான் கொடுக்கப் போறீங்க..ன்னு பயந்துக்கிட்டே சொல்லாம் எஸ்கேப் ஆனா, இப்படி விட்ஜெட் போட்டு அசத்தீட்டிங்க! நல்லாருக்குப்பா!
//அடுத்து குட்டி கண்ணம்மா... ஒரு ஸ்வீட் கிட்ட ஸ்வீட் டை பத்தி கேட்கலாமா. .சரி வேணாம்... நான் அழுதுடுவேன்... நெக்ஸ்ட்//
ஏன்..இப்படி ஏசி g3-க்கு?!! :-)
//பால்கோவா தான் அவருக்கு பிடித்தது... புனிதா சொல்லிவிட்டதால் திரும்ப வேறு கேட்டேன் //
முதல் தடவை எங்கண்ணன் ஒழுங்கா தானே பதில் சொல்லியிருக்காரு.. சும்மா எங்கண்ணன குறை சொல்லாதீங்க :P
@ குட்டிகண்ணம்மா - அவ்வ்வ்! ஒருத்தர் அழவச்சா பரவாயில்ல.. எல்லாரும் இம்சை பண்ணா என்னத்தான் செய்ய சொல்லுங்க.. ?!! :))
@ முல்ஸ் - இதோடா..!! செய்து தரணுமா. .ஏன் நாட்டுல எல்லாரும் உயிரோட இருக்கறது பிடிக்கலையா உங்களுக்கு.. ?!!
ம்ம்.. நன்றிப்பா எனக்கு கூட இந்த விட்ஜிட் ரொம்ப பிடிச்சி இருக்கு...!! :)))))))
////பால்கோவா தான் அவருக்கு பிடித்தது... புனிதா சொல்லிவிட்டதால் திரும்ப வேறு கேட்டேன் //
முதல் தடவை எங்கண்ணன் ஒழுங்கா தானே பதில் சொல்லியிருக்காரு.. சும்மா எங்கண்ணன குறை சொல்லாதீங்க :P//
வந்துட்டாங்கடா அண்ணனுக்கு சப்போர்ட்டிக்கிட்டு... சரி ஏன் இரண்டாம் தரம் கேட்டா சொல்லக்கூடாதா? அதுவும் யம்மா.. ஒரு 10 மெயில் அனுப்பி நொய் நொய் ன்னு புடுங்கி... கடைசியா கிடைச்சது காராபூந்தி த்தான்.. :)))))))
//வந்துட்டாங்கடா அண்ணனுக்கு சப்போர்ட்டிக்கிட்டு... //
கண்டிப்பா.. எங்கண்ணனுக்கு இல்லாத சப்போர்ட்டா :))))
//சரி ஏன் இரண்டாம் தரம் கேட்டா சொல்லக்கூடாதா? //
அப்பவும் ஸ்வீட் பேரு ஏதாவது சொன்னா நீங்க மறுபடி மூனாவது தடவை வேற சொல்லுங்கனு கேப்பீங்களோன்னு ஒரு எச்சரிக்கை தான் :))))
//ஒரு 10 மெயில் அனுப்பி நொய் நொய் ன்னு புடுங்கி... கடைசியா கிடைச்சது//
அவரு ஊருக்கு போயிருக்கற சமயமா பாத்து நீங்க இம்புட்டு மெயில் அனுப்பினா பாவம் அவர் என்ன பண்ணுவார்.. ஆன்லைன் வர்றப்போ தான் பதில் போட முடியும்.
//ஏன் நாட்டுல எல்லாரும் உயிரோட இருக்கறது பிடிக்கலையா உங்களுக்கு.. ?!! //
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அப்போ இந்த கொலைவெறில தான் என்னை முதல் தடவை பாக்கறப்போ நீங்க ஸ்வீட் செஞ்சு கொண்டு வந்தீங்களா :((((((
//அவரு ஊருக்கு போயிருக்கற சமயமா பாத்து நீங்க இம்புட்டு மெயில் அனுப்பினா பாவம் அவர் என்ன பண்ணுவார்.. ஆன்லைன் வர்றப்போ தான் பதில் போட முடியும்.//
இல்லடா அவரு இங்க இருக்கும் போது வாங்கினது நிறைய பேர் ஸ்வீட் பேரு சொல்லல அதான் இவ்வளவு நாள் கழித்து விட்ஜிட் போடறேன்.. வேற காரணங்களும் உண்டு,... :) (சொன்னேனே!)
//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அப்போ இந்த கொலைவெறில தான் என்னை முதல் தடவை பாக்கறப்போ நீங்க ஸ்வீட் செஞ்சு கொண்டு வந்தீங்களா :((((((//
டேய்.....உண்மைய சொல்லுனும்!!. எல்லாரும் சேர்ந்து நல்லா அமுக்கு அமுக்கு ன்னு சூப்பரா இருக்குன்னு அமுக்கனீங்க தானே..அப்புறமென்ன...
கவிதா!பிடிச்ச இனிப்பு கேட்டது எதுக்குன்னு இப்பதான் புரியுதுங்க:)
குசும்பனுக்குப் புடிச்சது கூட ஸ்வீட்டா?அதுசரி:)
கவிதா!பிடிச்ச இனிப்பு கேட்டது எதுக்குன்னு இப்பதான் புரியுதுங்க:)//
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!! இதுக்குத்தான்.. !! :))
widget is so SWEET
//கண்டிப்பா.. எங்கண்ணனுக்கு இல்லாத சப்போர்ட்டா :))))
//
இந்தப் பாசமலருங்க ரவுஸு தாங்க முடியலப்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆ
//ராஜா | KVR said...
//கண்டிப்பா.. எங்கண்ணனுக்கு இல்லாத சப்போர்ட்டா :))))
//
இந்தப் பாசமலருங்க ரவுஸு தாங்க முடியலப்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆ//
உங்களுக்கு ஏங்க பொறாஆஆஆஅமை :P
//உங்களுக்கு ஏங்க பொறாஆஆஆஅமை :P//
இப்படியும் பாசத்தோட இருக்காங்களேன்னு ஒரு சந்தோஷத்திலே சொன்னதுங்க, பொறாமையெல்லாம் இல்லை :-)
:-) ஏதோ செஞ்சுத்தான் கொடுக்கப் போறீங்க..ன்னு பயந்துக்கிட்டே சொல்லாம் எஸ்கேப் ஆனா, இப்படி விட்ஜெட் போட்டு அசத்தீட்டிங்க! நல்லாருக்குக்கா!
யக்கோவ்....!
சோமாசு என்னமோ மாதிரி எபெக்ட்டே இல்ல :(
சோமாஸ் சொல்லுங்க ஒரு ஃபீல் கிடைக்கும் :))))))
@ ஆயில்ஸ், ஏன்.. முல்ஸ் கமெண்டுக்கு ஜஸ்டு ஒரு ரீப்ப்பீட்டு போட்டு இருக்கலாம் இல்லையா. ?!! :)
@ ஆயில்ஸ் - மாத்திட்டேன்..
நானும் என்னடா மெயிலுக்கு பதிலை இன்னும் காணாமேன்னு இருந்தேன்..கலக்கிட்டிங்க ;)))
இனி பதிவர்களை இந்த ஸ்வீட்டு பெயரை வச்சே கூப்பிடலாம் ;))
\\இதுல ரொம்ப நல்ல பிள்ளைகள் - கேட்டவுடன் எதுவுமே மறுகேள்வி கேட்காமல் கொடுத்தவர்கள்\\
ஏன்..ஏன்..ஏன்..
இதுக்கு என்னோட வன்மையான கண்டனங்கள் ;-)
\\ஆயில்யன் said...
யக்கோவ்....!
சோமாசு என்னமோ மாதிரி எபெக்ட்டே இல்ல :(
சோமாஸ் சொல்லுங்க ஒரு ஃபீல் கிடைக்கும் :))))))
12:14 PM
\\
வாங்க மிஸ்டர் சோமாஸ்..
நலமா ;))
@choco - யாரைக்கூப்பிட்டா கோவிச்சிக்க மாட்டாங்கன்னு பாத்து கூப்பிடுங்க.. அப்புறம் கோவம் என்பக்கமா திரும்பிடும் சரியா... உதிரிபால்கோவா ?!! :))))
\கவிதா | Kavitha said...
@choco - யாரைக்கூப்பிட்டா கோவிச்சிக்க மாட்டாங்கன்னு பாத்து கூப்பிடுங்க.. அப்புறம் கோவம் என்பக்கமா திரும்பிடும் சரியா... உதிரிபால்கோவா ?!! :))))
\\\
இதுக்கு பெயர் தான் வரம் கொடுத்தவன் தலையிலயே கையை வைக்கிறது ;;)))
நாங்களும் ஸ்வீட் சாப்பிடுவோம்ல..
//நாங்களும் ஸ்வீட் சாப்பிடுவோம்ல..//
ஆதவன் நீங்க இப்படி எல்லாம் சொன்னால் எனக்கு நிஜமா கஷ்டமாக இருக்கு இதுக்கு தான் ரொம்ப நாள் இந்த விட்ஜிட் போடாமலேயே இருந்தேன்.. ஆனா எனக்கு படிக்க சிரமமாக இருக்கேன்னு சேர்த்தேன்.. கூகுல் ரீடர் எனக்கு சரிப்பட்டு வரவில்லை. .அவ்வ்..
உங்களையும் லிஸ்ட் ல சேர்க்கிறேன்ப்பா... ம்ம்ம்....
அடடே!! இந்த வீஷுயத்துக்கு இவ்வளவு ரகளை பண்ண முடியுமா?? சே! தெரியாம போனதே!! இல்லானா நானும் முயற்சி பண்ணி இருக்கலாம். சரி! ரொம்ப நல்லவங்க லிஸ்ட் ல என் பேரும் இருக்கறதால, எப்போ என்னோட ஸ்வீட் கிடைக்கும்ம்ன்னு மட்டும் கேட்டுககறேன்
//அடடே!! இந்த வீஷுயத்துக்கு இவ்வளவு ரகளை பண்ண முடியுமா?? //
மாதவன்... முடியுமாவா? இப்படி ஒரு கேள்விய நீங்க நம்ம நண்பர்களை பார்த்து கேட்பது சரியா... ?!!
//எப்போ என்னோட ஸ்வீட் கிடைக்கும்ம்ன்னு மட்டும் கேட்டுககறேன்//
அது சரி....... :))) இவ்வளவு ரகளையில கேட்டு வாங்கி போட்டதுக்கு நீங்க எல்லாரும் அவங்க அவங்களுக்கு பிடித்த ஸ்வீட்டை எனக்கு அனுப்பி வைங்க முதல் வேலையா.. சரியா?!! :))))
super paaaaaaa!
@ அமித்தும்மா... நன்றி..
அவ்வ்வ் இதுக்குதான் கேட்டீங்களா?
சர்வே அது இதுன்னு சொன்னீங்க?
இப்படி என் பதிவுக்கு லிங் கொடுப்பீங்க என்று தெரிஞ்சு இருந்தா நான் ஷ்ரேயா கோசல் தவிர வேற பெயரை சொல்லி இருக்கமாட்டேன்!
ஏன்னா ஷ்ராயா கோசலை கிளிக்கினா நான் வருவேனே:))))
//தேவ், ரவி, சிவகுமார்ஜி, வெயிலான், மாதவன், ராஜ்நடராஜன், கைப்பூ, பாலாஜி, மங்கைஜி,//
நல்லவங்க லிஸ்ட் நோட்டட்! கவனிச்சுடலாம் தனியா!
A h a
@குசும்பன், ஷ்ராயா வா மாத்திட்டா போச்சி... :))) ஆனா உங்களை தவிர எல்லாரும் க்ளுக்குவாங்க பரவாயில்லையா??? :)))))
அன்ட் நல்லவங்களை விடவே விடாதீங்க..
@ தமிழ்நெஞ்சம் - என்னங்க தமிழ் பட டைட்டில சொல்லிட்டு போயிட்டீங்க..
Post a Comment