எல்லா ஜிம்' களிலும் ஒரு டயட்டீஷியன் இருப்பார், அவர்கள் நினைக்கும் அல்லது நாம் நினைக்கும் அளவிற்கு உடல் எடை குறையவில்லை என்றால், உடனே வந்து உபதேசம் செய்ய ஆரம்பித்துவிடுவார். உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்தவுடன் எனக்கு கொடுக்கப்பட்ட இரண்டு புத்தங்கங்கள்
1. எப்படி / என்ன உணவு சாப்பிடவேண்டும், ஒவ்வொரு உணவின் கலோரி அளவு உள்ள புத்தகம்
இதை ஒரு முறை படித்துப்பார்த்துவிட்டு, இது நமக்கு சரிப்பட்டு வராது என்று ஓரமாக வைத்து விட்டேன். முதலில் எடுத்து படித்தவன் என் அன்பு மகன், புரட்டி பார்த்துவிட்டு என்னை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான். உன்னை பத்தி தெரியாம உங்க ஜிம் ல என்ன என்னவோ செய்ய சொல்றாங்க போல.. ம்ம்.. ஆமா நீ இந்த டயட் லிஸ்ட் எல்லாம் முழுசா படிச்சியா..? படிச்சி இருக்க மாட்டியே.. அப்படியே படிச்சாலும் உனக்கு புரிஞ்சி இருக்காதே..... ...ஹய்யோ ஹய்யோ!! ஏன்ன்ன்ன்ன்ன் உனக்கு இந்த வேலை...?!! என்னவோ போ.. எப்படியும் இந்த ஜென்மத்துல நீ வெயிட் ரெடியூஸ் பண்ண போறது இல்ல.....
அடுத்து என் வீட்டுக்காரர், இவருக்கு எப்பவும் ஒரு நல்ல பழக்கம், எதை படித்தாலும் முதல் வரியிலிருந்து கடைசிவரி வரை படித்துவிடுவது. சோ, இந்த புத்தகம் கையில் கிடைத்தவுடன், படிக்க ஆரம்பித்தவர், நடுவே என்னை திரும்பி பார்த்து நக்கலாக சிரித்தவாறே, இந்த டயட் எல்லாம் நீ செய்தால், ஜிம் க்கு போக வேண்டிய அவசியமே இல்லையே? எடுத்து உள்ள வை! என்றார்.
ம்ஹூம் குடும்பத்தில் நம்மை பார்த்தால் எல்லாருக்குமே நக்கலா போச்சி.. கவனிச்சிக்கிறேன்.. !!
2. தினமும் என்ன சாப்பிடுகிறேன் என்று தேதி போட்டு , நேரம் குறிப்பிட்டு எழுதி டயட்டீஷியனிடம் காண்பிக்கவேண்டும்.
சரி உண்மையாக சத்தியமாக என்ன சாப்பிட்டோமோ அதை எழுத வேண்டும் என்று நானும்
6.30 டீ ஒரு கப்
9.30 இட்லி 3, தேங்காய் சட்னி
1.15 சாதம், அவரைக்காய் சாம்பார்,கருணைகிழங்கு வறுவல்
5.00 டீ ஒரு கப்
7.00 சூப்
8.30 சப்பாத்தி 3 + வெங்காயத்தொக்கு
தண்ணீர் - 3.5 லிட்டர்
இப்படி எழுதிவிட்டு வருவேன், மெனு தினமும் மாறும், நேரமும் மாறும். இதை பார்த்துவிட்டு டயட்டீஷீயன் நீங்க 9.30 லிருந்து 1.15 வரை எதுவுமே நடுவில் சாப்பிடவில்லை அதனால் நடுவே பழச்சாறு, இல்லை சுண்டல், காய்கரி சாலட், இப்படி ஏதாவது சாப்பிடுங்கள், அதே போல் மோர் நிறைய சேர்த்துக்கொள்ளுங்கள் என்று குறிப்பு எழுதிவிட்டு செல்வார். இதில் அந்த கருணைகிழங்கு, தேங்காய் சட்னி யை சிகப்பு கலரால் சுழித்து, வறுவல், கொழுப்பு மிகுந்த உணவுகள் சாப்பிடக்கூடாது என்று குறிப்பு இருக்கும்.
சொன்னார்களே என்று நானும் மோர் நிறைய சேர்த்துக்கொண்டேன், ஆனால் வெண்ணெய் எடுக்கவில்ல. 2-3 நாளில் ஏதோ கொஞ்சம் இறங்கிய எடை கூட ஆரம்பித்தது. எனக்கு இந்த வெண்ணெய் எடுத்து எல்லாம் மோர் செய்ய தெரியவில்லை அதனால் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். இதை 3 தினம் சென்று கவனித்த டயட்டீஷியன் நோண்ட ஆரம்பித்தார், நான் நடந்ததை சொன்னவுடன் சரி மோர் வேண்டாம் ஆனால் கண்டிப்பாக நீங்க பழங்கள் நிறைய உணவில் சேர்க்க வேண்டும், அப்புறம் ஒவ்வொரு உணவு இடைவெளிக்கும் 2 மணி நேரம் இருக்கவேண்டும். இடைவெளி அதிகமானால் நீங்கள் அதிகம் சாப்பிட ஆரம்பித்துவிடுவீர்கள் என்று அட்வைஸ்.
எப்படி எழுதினாலும் ஏதாவது ஒரு நொட்டு குறிப்பு எழுதிவிட்டு சென்றார்கள், சரி என்னத்தான் செய்வது, உடற்பயிற்சி சொல்லி தரும் அந்த பெண்ணிடம் "ஏம்மா தெரியாமல் உன்கிட்ட பணம் கொடுத்து ஜிம் ல் சேர்ந்துவிட்டேன் அதுக்காக இப்படியா.. இட்லி க்கு சட்னி தொட்டுக்கொள்ள கூடாதுன்னு எப்படி? காலங்காலமாக அதை த்தானே நாம சாப்பிட்டு வருகிறோம்...?!! இப்படி அநியாயத்துக்கு அதை சாப்பிடதே இதை சாப்பிடாதேன்னா... நான் வீட்டிலேயே பட்னி கிடந்து உடம்பை குறைத்துக்கொள்வேனே.. என்று கடுப்பாக சொல்லிவிட்டு ஒரு நாள் மதியம் பசிக்காமல் சாப்பிட மறந்து போய்விட்டதால்,
from 10 - 4.15 - I didnt feel hungry, so I didnt take any food. என்று எழுதிவிட்டு வந்தேன். அடுத்தநாள் சென்றால், டயட்டீஷியன், பயிற்சியாளர்கள் எல்லாம் எனக்காக வெயிட் செய்து கும்ம ஆரம்பித்தார்கள். இது வரைக்கும் யாருமே இப்படி டயட் ஷீட் எழுதியதில்லை.. நீங்க என்ன இப்படி எல்லாம் எழுதறீங்க.. என்றார்கள்.
பின்ன என்னங்க.. இடைவெளி விட்டா அடுத்தநாள்... இடைவெளி விடக்கூடாதுன்னு ஒரு குறிப்பு எழுதறீங்க. .சரி இடைவெளி இல்லாமல் எழுதுணுமேன்னு இப்படி எழுதினேன்.. அது தான் உண்மை என்றவுடன்.. கடுப்பாக இருந்தாலும் சரி லிக்குவுட் டா வாவது ஏதாவது சாப்பிடுங்கப்பா ன்னு சொல்லி விட்டுட்டாங்க...
அதற்கு பிறகு எதக்கு நமக்கும் அவங்களுக்கும் பிரச்சனை என்று ஒரு ஸ்டேன்டர்ட் மெனு எழுதிவிட்டு வருவது வழக்கமாக்கி கொண்டேன்.
6.30 டீ ஒரு கப்
9.30 நூடுல்ஸ் 1/2 கப்
10.30 வெள்ளரிக்காய் - 2
1.15 சாதம், சாம்பார்,முட்டை
3.00 - காய்கரி சாலட்
5.00 டீ ஒரு கப்
7.00 சூப்
8.30 சப்பாத்தி 3 + தொக்கு
9.00 - பழங்கள்
ம்ம்..ஒரு தொல்லை விட்டது. இப்பவெல்லாம் அந்த டய்ட் டீஷியன் எனக்கு குறிப்புகள் எழுதுவதில்லை அப்படியே எழுதினாலும்..- ஒரே வார்த்தை - Good !! தான்.. ம்ம் எங்க க்கிட்டியேவா?? பணத்தையும் வாங்கிக்கிட்டு இவங்க ஜிம் ல நம்ம செய்யற கொடுமை இருக்கே............ முடியல.... !!
அணில் குட்டி அனிதா : ...... சொல்ல ஒன்னியம் இல்ல.. ..அம்மணிய திருத்தமுடியாது.......!! திருத்த நினைக்கவறங்க எல்லாரும் முட்டைஸ்..!! நான் முட்டையாக விரும்பல.. அப்ப நீங்க??!!
பீட்டர் தாத்ஸ் : “Food is an important part of a balanced diet.”
டயட்டீஷியனை ஏமாற்றுவது எப்படி?!
Posted by : கவிதா | Kavitha
on 10:57
Labels:
பழம்-நீ
Subscribe to:
Post Comments (Atom)
24 - பார்வையிட்டவர்கள்:
:-)))
ada neengalum namma katchi thaana... enakkum gymm la thinamum thittu vizhuthu Trainer kitta aenna naan sathama kurattai viduraenaam mathavanga thoonga disturb a irukkam.... enna panna... ?
டயட் ரொம்ப தப்பு தப்பா இருக்குதே:)எனக்கு இட்லி,தோசை முழுங்காட்டி உடம்பு கோவிச்சுக்கும்.
மெனுவை கொஞ்சம் மாத்திப் பார்ப்போமே.காலை 6.30 சாயா சரிப்படாது.கொஞ்சம் யோகாசனம்,கொஞ்சம் தண்ணீர்.இட்லி சாப்பிட்டா சோறு நிறுத்தனும்.சோறு சாப்பிடனுமின்னா இட்லிய நிறுத்தணும்.இட்லி சாப்பிட்டா அதோட ஒரு கட்டஞ்சாயா குடிக்கலாம்:)தொலைக்காட்சி விளம்பரம் நிறைய வருது.நூடுல எடு அப்படியே சாப்பிடுன்னு.தண்ணியில கலக்கி சூப் பண்ணிடலாம்.அப்ப இட்லி,சாயா கட்.
குஜராத் ஸ்டைல ஒரு சப்பாத்தி,ஒரு கரண்டி சோறு மதியம்.இல்லைன்னா மெக்சிகன் சாலட்,கிரீக் சாலட்ன்னு பேர் வச்சுகிட்டு வெள்ளரி,தக்காளி,கொத்துமல்லியோட ஆப்பிளயும் காய்ன்னு நினச்சிகிட்டு கலந்துடனும்.4 மணி சாயா கட்.31/2 லிட்டர் தண்ணீர்ல கொஞ்சம் அந்த நேரம் பார்த்துக் குடிக்கலாம்.இரவு சூப்,பழங்கள் அல்லது சப்பாத்தி பழங்கள் என பழக்கப்படுத்தலாம்.
(நம்ம ஊர் தட்ப வெட்ப நிலைக்கு நிறைய சாப்பிடனும்.நிறைய உழைக்கணும்.இதுதான் நம்ம பாட்டன்,பாட்டிகளின் மந்திரம்)
very nice.
அவங்க நல்லது சொன்னா உங்களுக்கு நக்கலா போச்சா? வக்கிலிடமும் டாக்டரிடமும் பொய் சொல்லக் கூடாதுன்னு சொல்வாங்க, இப்போ டயட்டீஷியனையும் சேர்த்துக்கொள்ளலாம்.
என்னத்த வேணா சாப்டலாம், ஆனா சந்தோஷமா சுறுசுறுப்பா இருந்தாலே எந்த நோயும் வராது - இதான் நம்ம பாலிஸி. எதுக்கு டயட்டீஷியனைப் பார்ப்பானேன், பொறவு நோவானேன்
@ முல்ஸ் - என்ன சிரிப்பு தாங்கமுடியலயா?
@ இவின்கோபி - ஆமாம் உங்க கட்சி தான்.. :))))))
@ராஜ நடராஜன்.. - ஏன்ப்பா? இங்க அவங்க இம்சை பத்தாதா? நீங்க வேறையா?.. 6.30 க்கு முன்னே சாயா குடிக்கும் முன், தண்ணீர் நானும் வெறும் வயிற்றில் குடிப்பேன்.. அது எல்லாம் எழுதுறதுஇல்லை.. :)
இந்த சாலட் எனக்கு பிடிக்கறதே இல்லை.. .ஒவ்வேக்..!! அது எல்லாம் வேணாம்ப்பா ஆளை விடுங்க...!!
அதர்வைஸ் உங்க மெனு ஒக்கே.. ட்ரை பண்றேன் சரியா.. :)
@ வினிதா - நன்றி :)
@ ராஜ் - ஏமாத்தலைன்னு வைங்க. .அவங்க சொல்றது சாப்பிட்டு, அவங்க சொல்ற உடற்பயிற்சி ய செய்தால் சர்க்கரை வியாதி வந்த மாதிரி இளைச்சு துரும்பா போயிடுவேன். .அப்புறம் கவி எங்கன்னு நீங்க எல்லாம் தேட வேண்டி இருக்கும்..
வெறும் எலும்பு தான் மிஞ்சும்.. பரவாயில்லையா???? :))
//சர்க்கரை வியாதி வந்த மாதிரி இளைச்சு துரும்பா போயிடுவேன். //
அப்படியெல்லாம் இளைச்சு ஒலக அளகிப் போட்டியிலேயா கலந்துக்கப் போறிங்க. சந்தோஷமா சாப்பிடுங்க.
//அப்புறம் கவி எங்கன்னு நீங்க எல்லாம் தேட வேண்டி இருக்கும்..
//
அப்படியெல்லாம் தேட மாட்டோம். நீங்க சாப்பிடாம விட்டதை எல்லாம் நம்ம அணிலு சாப்ட்டு கொழுகொழுன்னு உங்க கூட சுத்திக்கிட்டு இருக்கும். பொறவு, அதோ அந்த அணிலுக்கு பக்கத்திலே எலும்பும்தோலுமா இருக்காங்கல்ல, அவங்க தான் கவிதா'ன்னு அடையாளம் சொல்லிடுவோம் ;-)
//அப்படியெல்லாம் இளைச்சு ஒலக அளகிப் போட்டியிலேயா கலந்துக்கப் போறிங்க. சந்தோஷமா சாப்பிடுங்க.//
அவ்வ்வ்வ்வ்வ்வ் ! ஏன் இந்த கொலவெறி... (நல்ல வேல அளகி ன்னு போட்டீங்க.. அழுகி ன்னு போடாம... :( )
//அணிலுக்கு பக்கத்திலே எலும்பும்தோலுமா இருக்காங்கல்ல, அவங்க தான் கவிதா'ன்னு அடையாளம் சொல்லிடுவோம் ;-)//
நீங்க ரெம்ப நல்ல்ல்ல்ல்ல்ல்லவரு.. போதுமா?!!
//@ராஜ நடராஜன்.. - ஏன்ப்பா? இங்க அவங்க இம்சை பத்தாதா? நீங்க வேறையா?.. 6.30 க்கு முன்னே சாயா குடிக்கும் முன், தண்ணீர் நானும் வெறும் வயிற்றில் குடிப்பேன்.. அது எல்லாம் எழுதுறதுஇல்லை.. :)
இந்த சாலட் எனக்கு பிடிக்கறதே இல்லை.. .ஒவ்வேக்..!! அது எல்லாம் வேணாம்ப்பா ஆளை விடுங்க...!!//
நான் காலை சாயாவை கட் பண்ணுங்கன்னு சொல்றேன்.நீங்க தண்ணீர் குடிச்சிட்டுத்தான் டீயே குடிப்பேன்ன்னு சொல்றீங்களே:)
எனக்கும் சாப்பாட்டுடன் சாலட் சாப்பிடணுமின்னா அம்மணிகிட்ட உர்ர்தான்:)இப்ப வளைகுடா தேசிய உணவு குப்புஸ் சாப்பிடறதால குப்புஸ்+பருப்பு+சாலட்,பக்கத்துல சின்ன வறுத்த மீனு செம காம்பினேசன்.
இனிப்பா சாலட் பிடிக்குமுன்னா தக்காளி,வெள்ளரி,ஆப்பிள்.(எங்க வீட்ல சாலட் சீக்கிரமா காணமப் போயிடும்:)
குண்டாக,அதே நேரம் ஸ்லிம்மாக இருக்கணுமுன்னு நினைப்பவர்கள் தக்காளி,வெள்ளரி,ஆரஞ்சு,ஆப்பிள்,லெமன் சாறு,(கோழி,மீன் ஏதாவது)ஆலிவ் ஆயில் அல்லது mayonnaise கலந்து கட்டி ஒரு ரவுண்டு வரலாம்.
//நான் காலை சாயாவை கட் பண்ணுங்கன்னு சொல்றேன்.நீங்க தண்ணீர் குடிச்சிட்டுத்தான் டீயே குடிப்பேன்ன்னு சொல்றீங்களே:)
//
:( ராஜநடராஜன், எனக்கு எனர்ஜி ன்னு நினைக்கற ஒரே ஐடம் அது தான்... அதையுமா? சரி ப்ளாக் டீ குடிக்கலாம் இல்லையா. .மில்க் இல்லாமல்... :)))
//எனக்கும் சாப்பாட்டுடன் சாலட் சாப்பிடணுமின்னா அம்மணிகிட்ட உர்ர்தான்:)இப்ப வளைகுடா தேசிய உணவு குப்புஸ் சாப்பிடறதால குப்புஸ்+பருப்பு+சாலட்,பக்கத்துல சின்ன வறுத்த மீனு செம காம்பினேசன்.
//
குப்புஸ்' ஸாஆ????? ம்ம்.. இப்படி பெயரை மட்டும் சொல்லிட்டு போலாமா? குப்புஸ் னா என்னன்னு சொல்லுங்க..
//இனிப்பா சாலட் பிடிக்குமுன்னா தக்காளி,வெள்ளரி,ஆப்பிள்.(எங்க வீட்ல சாலட் சீக்கிரமா காணமப் போயிடும்:)//
சரி தக்காளி பிடிக்காது. .ஆப்பிள் ம்ம்.. இப்பத்தான் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பித்து இருக்கிறேன்... வெள்ளரி - எஸ் சாப்பிடுவேன்.. சோ.. தனியா வெள்ளரியை மட்டும் சாப்பிட்டுக்குறேன். :)
//குண்டாக,அதே நேரம் ஸ்லிம்மாக இருக்கணுமுன்னு நினைப்பவர்கள் தக்காளி,வெள்ளரி,ஆரஞ்சு,ஆப்பிள்,லெமன் சாறு,(கோழி,மீன் ஏதாவது)ஆலிவ் ஆயில் அல்லது mayonnaise கலந்து கட்டி ஒரு ரவுண்டு வரலாம்.//
அது என்ன குண்டாக ஆனா ஸ்லிம்மாக.. ?!! :)))) எடுத்துக்காட்டு...???? குஷ்பூ, சிம்ரன் அப்படின்னு மட்டும் சொல்லிடாதீங்க.. ப்ளீஸ்.....
குப்புஸு - ராச நடராசரே, நீங்க எந்த ஊரு?
கவிதா "குப்புஸ்" ஒரு ரொட்டி வகை.
ஆனா, இவரு சொல்ற மாதிரி மயோனிஸ்ல்லாம் சேர்க்காதிங்க, அநியாய கொழுப்பு உள்ள ஐட்டம் அது. ஆலிவ் ஆயில் சேர்த்துக்கலாம், ஏன்னா சமைக்காத ஆலிவ் ஆயிலின் கொழுப்பு உடலில் தங்காது. சாலட்டே சாப்பிடாத உங்களுக்கு எதுக்கு ஆலிவ் ஆயிலும் மயோனிஸும்...
//அது என்ன குண்டாக ஆனா ஸ்லிம்மாக.. ?!! :)))) எடுத்துக்காட்டு...???? குஷ்பூ, சிம்ரன் அப்படின்னு மட்டும் சொல்லிடாதீங்க.. ப்ளீஸ்.....//
கொஞ்சம் பூசின மாதிரின்னு நம்ம ஊர்ல சொல்லுவாங்கல்ல,அதை தான் சொல்றாரு :-)
குண்டு ஸ்லிம்க்கு ஏன் குஷ்புவ உள்ளே கொண்டு வர்றிங்க? வில்லு பாட்டுப் பார்த்துமா இந்தக் கொலவெறி?
// குப்புஸு - ராச நடராசரே, நீங்க எந்த ஊரு?
//
குவைத் ' அவரோட புரொஃபைல் பார்த்து சொல்றேன்.. :)
// கவிதா "குப்புஸ்" ஒரு ரொட்டி வகை.
ஆனா, இவரு சொல்ற மாதிரி மயோனிஸ்ல்லாம் சேர்க்காதிங்க, அநியாய கொழுப்பு உள்ள ஐட்டம் அது. ஆலிவ் ஆயில் சேர்த்துக்கலாம், ஏன்னா சமைக்காத ஆலிவ் ஆயிலின் கொழுப்பு உடலில் தங்காது. சாலட்டே சாப்பிடாத உங்களுக்கு எதுக்கு ஆலிவ் ஆயிலும் மயோனிஸும்...
//
யம்மா, நான் என்ன குவைத் லியும் துபாயிலும் மாறி மாறி யா இருக்கேன்.. இதையெல்லாம் சாப்பிட..?!!
//அது என்ன குண்டாக ஆனா ஸ்லிம்மாக.. ?!! :)))) எடுத்துக்காட்டு...???? குஷ்பூ, சிம்ரன் அப்படின்னு மட்டும் சொல்லிடாதீங்க.. ப்ளீஸ்.....//
கொஞ்சம் பூசின மாதிரின்னு நம்ம ஊர்ல சொல்லுவாங்கல்ல,அதை தான் சொல்றாரு :-)
//
சரி... :))
//குண்டு ஸ்லிம்க்கு ஏன் குஷ்புவ உள்ளே கொண்டு வர்றிங்க? வில்லு பாட்டுப் பார்த்துமா இந்தக் கொலவெறி?//
ஆமா குண்டு ன்னா அது குஷ்பூ மட்டும் தான்.. :)))))) வில்லு'வை மறக்கமுடியுமா.. ?! அவ்வ்வ்வ்வ்!!
//குப்புஸ்' ஸாஆ????? ம்ம்.. இப்படி பெயரை மட்டும் சொல்லிட்டு போலாமா? குப்புஸ் னா என்னன்னு சொல்லுங்க..//
நீங்க இப்படியெல்லாம் கேள்வி கேட்பீங்கன்னுதான் பதிவர் ஆயில்யன் 2007ல் குப்புஸ் படம் புடிச்சு வச்சிருக்காரு.
http://kadagam.blogspot.com/2007/10/blog-post.html
(சாப்பாட்டு விசயம்ன்னா 3 வருசம் ஆனா கூட மறக்காதே:)ன்னு கமெண்டாதீங்க.புகைப்படப் போட்டிக்கு போகும்போது மனுசன் இந்தப் படத்தையும் தயிர் டப்பாவையும் போட்டது சிரிப்போட ஞாபகத்துலயும் ஒட்டிகிச்சி)
கவிதா, அடுத்த ஜென்மத்துல ஒல்லியா இருக்கற genes உள்ள குடும்பத்துல மட்டும் தான் பொறக்க உம்மாச்சி கிட்ட வேண்டிக்கோங்க. ! அது தான் பெஸ்ட் வழி. ஈசியும் கூட.
@ராஜநடராஜன், ஆயில்ஸ் படம் வரலை, அப்புறம் மெயில் ல நொய் செய்து வாங்கி பார்த்துட்டேன்... ம்ஹூம் என்ன என்னவோ சாப்பிட்டு உடம்ப நீங்க எல்லாம் தேற்றிக்கிட்டு இருக்கீங்க போலவே... மும்பை ல பாவ் பஜ்ஜி என்று ஒன்றை கொடுத்து கொல்றாங்களே அது மாதிரி.. :(
@ மணி - இந்த ஜென்மத்திலேயே எங்க வீட்டில் யாருமே குண்டா இல்லையேம்மா !!... அப்புறம் ஏன் வேண்டிக்கனும்.. ஹிஹி,,என்னையும் சேர்த்து த்தான்.. :)))))))
யோகா, தியானம், ஜிம் எல்லாம் போவது டாக்டர் கிட்ட போய்விடுவோமோ என்ற பயத்தில்ல்ல்ல்ல்!! :(
பதிவுக்கு வந்தேன் தலைப்பை பார்த்தேன் பின்னூட்டம் போட்டுட்டேன் ;))
@ Choco, வர வர அநியாயம் செய்துக்கிட்டு இருக்க நீ.. பதிவை படிக்கறதே இல்ல. .:(
இந்த டயட்டெல்லாம் சாப்பாட்டுக்கு முன்னாடியா பின்னாடியா?
//இந்த டயட்டெல்லாம் சாப்பாட்டுக்கு முன்னாடியா பின்னாடியா?//
ஆஹா சிபி வந்தாச்சா? எப்படி இருக்கீங்க..?
லாங் டைம் நோ சி..
ம்ம்.எனக்கு டயட்டே அது தான்.. உங்களுக்கு வேணும்னா சாப்பாட்டுக்கும் முன்னாடி பின்னாடி எப்படி வேண்டுமோ டிசைட் செய்துக்கோங்க... :)
//இந்த டயட்டெல்லாம் சாப்பாட்டுக்கு முன்னாடியா பின்னாடியா?//
ஆஹா சிபி வந்தாச்சா? எப்படி இருக்கீங்க..?
லாங் டைம் நோ சி..
ம்ம்.எனக்கு டயட்டே அது தான்.. உங்களுக்கு வேணும்னா சாப்பாட்டுக்கும் முன்னாடி பின்னாடி எப்படி வேண்டுமோ டிசைட் செய்துக்கோங்க... :)
இந்த கார்ட்ஸ் விளையாடும் போது ஒரு கை குறையுதுன்னு சொல்லுவாங்க தெரியுமா அது மாதிரி நீங்க இல்லாம ப்ளாக் செம போரூ.. :( அதுவும் என் பதிவுல கும்மி அடிக்க ஆள் இல்லாமல் போச்சி.. :)
Post a Comment