யாருக்கு ??!! என்பது முதல் கேள்வி. FC , BC, MBC, SC, ST இப்படித்தான் நாம் வகைப்படுத்தி பிரிக்கப்பட்டு இருக்கிறோம். இதில் FC பிரிவினருக்கு, அவரை விடவும் மற்றவர்கள் குறைவு என்ற திமிர். அதே போல் BC, க்கு மற்றவர்கள் எல்லோரும் அவரைவிடவும் குறைவு என்ற திமிர், இப்படியே தான் மற்ற சாதி பிரிவினரும் தனக்கு கீழ் உள்ளவர்களை குறைவாக மதிப்பிடுகின்றனர்.
நாம் பொருளாதாரத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு இருந்தால், இப்படிப்பட்ட பிரச்சனைகளை சந்தித்திருக்கவேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது என்று நினைக்கிறேன்.
கணினியில் காலம் கழித்துக்கொண்டு நாம் இருந்தாலும் இன்னமும் சந்தில், தெருவில், தோட்டத்தில், புழக்கடையில் உட்கார்ந்து சாப்பிடும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இப்படி அவர்களை சாப்பிட வைப்பது உயர் சாதியினர். அவர்களை வீட்டிற்குள் வர அனுமதிப்பதில்லை. என்னால் சகித்து க்கொள்ள முடியாத ஒரு பழக்கமாக இதை கருதுகிறேன். ஐயா, அவன் சக மனிதன். நம்மை போன்று ரத்தம், சதை, இதயம், கண்கள் கொண்ட ஒரு மனிதன். விலங்கு அல்ல. ஏன் எத்தனையோ வீடுகளில் நாய்களை கூட வீட்டிற்குள் விடுகிறார்கள், மடியில் வைத்து கொஞ்சுகிறார்கள். இவர்கள் வந்தால் என்ன, உட்கார்ந்து சாப்பிட்டால் என்ன.?
சரி எப்படி இந்த உயர் சாதித் திமிர் நம்மிடையே ஆரம்பிக்கிறது. ஆரம்பிக்கும் இடம் முதலில் வீடு தான். சாப்பாடு ஊட்டும் போதே குழந்தைக்கு இதுவும் சேர்த்து ஊட்டிவிடப்படுகிறது.
இதில் கொடுமை என்னவென்றால் இந்த FC பிரிவில் இருப்பவர்களுக்கு இருக்கிற திமிர் இருக்கிறதே. .என்னவோ கடவுளிடமிருந்து நேராக இறங்கி வந்தவர்கள் போன்று அவர்கள் நடந்து க்கொள்வதும், அவர்களுக்கு மட்டுமே கடவுள் அதிக அறிவையும், பண்பையும் படிப்பையும் கொடுத்தவிட்ட மாதிரி அவர்கள் நடந்து க்கொள்வது மட்டுமே அல்லாது அவரை விட கீழ் சாதியில் பிறந்தவர்களை கொட்டி கொட்டி நீ இதற்கு மேல் எழுந்துவிடக்கூடாது என்பதில் அதிகம் கவனம் வைப்பதும் சகிக்கமுடியாத ஒரு செயல்.
உயர் சாதியினரால் தனிப்பட்ட முறையில் மிக மிக மோசமாக நான் அடிக்கடி பாதிக்கப்பட்டு இருக்கிறேன். அதுவும் இந்த அறிவு, படிப்பு, வேலை, திறமை, வாய்ப்புகள் என்று வரும்போது உழைப்பு, நேர்மை என்ற இந்த இரண்டும் இல்லாமல் வெறும் சாமர்த்தியத்தால் மட்டுமே முன்னுக்கு வர முயன்று அதற்காக என்னை முதுகில் குத்திய நிறைய கேடு கெட்ட உயர் சாதியினர் உள்ளனர். அவர்களின் அந்த பல் இளிக்கும் சாமர்த்தியம் எனக்கு சுட்டு போட்டாலும் வராது என்பது ஒரு தகுதியின்மையாகவே நினைக்கிறேன். அப்படிப்பட்ட தகுதியும் எனக்கு வேண்டாம் என்றும் நினைக்கிறேன்.
எப்போதும் நேர்மையற்ற முறையில் தன்னை முன்னிலை படுத்தும் இவர்களை பின்னுக்கு தள்ள நேர்மையாக போராடி அப்படிப்பட்டவர்களை கண்டாலே மனிதர்களாக எனக்கு மதிக்க தோன்றவில்லை. நிறைய உதாரணங்கள் என்னால் எடுத்துச்சொல்ல முடியும். அதிகம் பாதிப்புக்கு உள்ளாவது அலுவலங்களில். அவர்களை விட அடுத்தவர்கள் முந்தி செல்லுவதை அவர்களால் பொறுத்துக்கொள்ளவே முடிவதில்லை. அதற்காக அவர்கள் எடுக்கும் குறுக்குவழி நடவடிக்கைகள் அருவருப்பை தரக்கூடியவை. என்ன வேண்டுமானலும் சிரித்துக்கொண்டே செய்து முடிக்கும் கேவலமான குணத்தை உடைவர்கள் எனலாம். இந்த சிரிப்பு நம்மை குழித்தோண்டி புதைத்த பின்னும், அந்த குழிக்குள் மேல் நின்று அதற்கு காரணம் அவர்கள் இல்லை என்பது போன்று சிரித்து சிரித்து பேசுவார்கள் பாருங்கள்... தூ என்று முகத்தில் உமிழ தோன்றும்.
அடுத்து வானொலி, தொலைக்காட்சி நிலையங்களில் இவர்களின் அட்டூழியங்களுக்கு அளவில்லை எனலாம். அதற்கு முக்கியக்காரணம் அதே சாதிப்பிரிவை சேர்ந்த ஒட்டுமொத்த கூட்டமும் அங்கேயே இருக்கும். தங்கள் இனத்தை பார்த்தவுடன் அவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுப்பது. அப்படிக்கொடுப்பது மட்டும் இல்லாது நமக்கு திறமை இல்லை என்று சொல்லி வெளியில் அனுப்புவார்கள். வாய்ப்பு கேட்பவனும் ஜால்ரா அடிப்பான், கொடுப்பவனும் ஜால்ரா அடிப்பான். அதை தாண்டி நாம் அங்கு நிற்க வேண்டுமென்றால் பல தியாகங்களை செய்ய வேண்டும். இல்லையேல் பின்னங்கால் வைத்து அப்படியே வந்துவிடவேண்டியதுதான். அதில் முக்கியமானது பல் இளிப்பது.. ... இந்த கருமத்தை எப்படித்தான் இவர்கள் செய்கிறார்கள் என்பது இன்றளவும் எவ்வளவு ஆராய்ச்சி செய்தும் என்னால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.
அடுத்து உணவு முறை, இதில் இன்னமும் பத்து பேருக்கும் முன்.. "அசைவ உணவை சாப்பிடும் போது, அய்யோ.. கடவுளே எப்படித்தான் இந்த கருமத்தை எல்லாம் சாப்பிடுகிறீர்களோ.. ?? ச்சேக்..!! வாந்தி வருது " என்று நாம் ஒரு உணவை சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போதே சிரித்துக்கொண்டே சொல்லும் கேவலமான பிறவிகள். நானும் திருப்பி அவர்கள் நிலைக்கு இறங்கி, நீ திங்கும் கொழ கொழ... தயிருஞ்சாதத்தையும், ஊறுகாயை யும் பார்த்தால் எனக்கும் கூட தான் வாந்தி வருகிறது, எப்படித்தான் இதையே தினமும் தின்னு..சூடு சுருணை என்று எதுவுமே இல்லாமல் இருக்கியோ."ன்னு சிரிக்காமல் சொல்லிவிடுவது உண்டு. அப்படி சொல்லாமல் அமைதியாக அவர்களை பொருட்படுத்தாமல் சாப்பிடும் நம்மவர்களும் உண்டு. அல்லது மற்றவர்கள் எதிரில் இப்படி சொல்லும் போது உடம்பு கூசி, நா பேச எழாது அசிங்கப்படுபவர்களும் உண்டு. இப்படி இருக்க விரும்புவதில்லை..
கூழோ..கஞ்சியோ.. இல்லை நிஜமாகவே அது கருமமோ... ஒருவர் உணவை சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது எதற்கு அப்படி சொல்லவேண்டும். ஒன்று சாப்பிட்டு முடித்தப்பிறகு அதன் நல்லது /கெட்டதை எடுத்து சொல்லி சொல்லலாம், இல்லை சாப்பிடுவதற்கு முன் சொல்லலாம். அதை செய்ய மாட்டார்கள். .ஏனென்றால் அவர்கள் அறிவுஜீவிகள், உயர் சாதியில் பிறந்த வென்றுகள். முட்டை கலந்த கேக், ஐஸ்கீரிம் சாப்பிடுவார்கள், தனியே அசைவ உணவகம் சென்று ஒரு கைப்பார்ப்பவர்களும் உண்டு, வீட்டிலேயே தனியே பாத்திரம் வைத்து சமைத்து சாப்பிடும் வேஷதாரிகளையும் நேரில் பார்த்து இருக்கிறேன்.
உண்ணும் உணவிலிருந்து, உடுத்தும் உடை, கட்டியிருக்கும் வீடு, படுத்துறங்கும் பாய் முதற்கொண்டு ஒரு கீழ்சாதிக்காரன் செய்தது என்று அறியாதவர்களா? கீழ்சாதிக்காரன் உழைப்பில் , வியர்வையில் தானே அன்றாடம் நீங்கள் சுவாசித்து உயிர்வாழ்கிறீர்கள்? பிறகென்ன.. உங்களைவிடவும் கீழ்சாதிக்காரனுக்கு அறிவு உண்டு, திறமை உண்டு, பண்பு உண்டு, மனிதநேயம் நிறையவே உண்டு. அதை புரிந்து, அவர்களுடன் சேர்ந்து நடந்து பழகுங்கள், நடக்க பிடிக்கவில்லை என்றால், ஓரமாக நின்று ஒதுங்கி நின்று பழகுங்கள்.. இல்லையேல் இடித்து த்தள்ளிக்கொண்ட செல்ல எங்களுக்கும் உங்களை படைத்த அதே ஆண்டவன் நல்ல அறிவையும், ஆரோக்கியத்தையும், உடன் உங்களைவிடவும் நல்ல குணத்தையும் கொடுத்து இருக்கிறார்.
அணில் குட்டி அனிதா :- அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!! ரம்பம்பம்ம்ம்ம்..ஆரம்பம்ம்ம்ம்... பம்பம்பம் பேரின்பம்.. 6 , 7 மாசமாச்சி.. அம்மணி நீங்க இப்படி எழுதி... ஆனா..லும் இது ஓவர் சூடு மச்சி...... !!
பீட்டர் தாத்ஸ் :- A community is democratic only when the humblest and weakest person can enjoy the highest civil, economic, and social rights that the biggest and most powerful possess.”
உயர் சாதியில் பிறந்த திமிர்
Posted by : கவிதா | Kavitha
on 19:22
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
56 - பார்வையிட்டவர்கள்:
டாஸ்மாக் கடை க்ளாஸ் மற்றும் பாலியல் தொழிலாளியிடம் செல்லும் போதும், பெண்களை வன்புணரும் போதும் யாரும் சாதி பார்ப்பது இல்லை.
சாதியை ஒரு நிமிடத்துக்கு ஒதுக்கிவைத்து ஒரு கேள்வி.
உங்கள் வீட்டு வேலைகளை செய்பவர்களை உங்கள் அருகிலேயே வைத்து ஒரே மேஜையில் வைத்து ஒன்றாக உண்பீர்களா? நேர்மையான பதில் தேவை.
முதலில் ஒன்று புரிந்து கொள்ளுங்கள். எல்லா சாதியினருக்குமே அந்த திமிர் உண்டுதான். என்ன, அதை தங்களை விட கீழ்நிலையில் இருப்பவர்களிடம்தான் காட்ட இயலும்.
உங்கள் சாதியை விட குறைந்த நிலையில் வரையறுக்கப்ப்பட்டவர்களை உங்கள் சாதியினர் நல்லபடியாக நடத்தி விடுகின்றனரா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாங்க ராகவன் சார், உங்களை முதல் ஆளாக எதிர்பார்த்தேன் :))
//உங்கள் வீட்டு வேலைகளை செய்பவர்களை உங்கள் அருகிலேயே வைத்து ஒரே மேஜையில் வைத்து ஒன்றாக உண்பீர்களா? நேர்மையான பதில் தேவை//
முதலில் யாரையுமே என் வேலையாளாக நான் நினைப்பது இல்லை. அதனால், என்னுடைய வீட்டு வேலைகளை கழிவறை முதற்கொண்டு சுத்தம் செய்வதை நானே செய்து பழகிவிட்டேன். என் சொந்த வேலைகளை செய்ய பிறரை/சக மனிதரை நான் எதிர்ப்பார்க்கவில்லை, அவர்களுடைய ஏழ்மையை நான் எனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள விரும்பியதில்லை. பண உதவு, உடைகள் போன்றவை பக்கத்துவீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு கொடுப்பதை பழக்கமாக்கி வைத்திருக்கிறேன்.
அடுத்து, அலுவலகத்தில், என்னுடைய கடைநிலை ஊழியர் (அதாவது உங்களுக்கு புரியும்படியாக சொன்னால், கழிவறை கழுவுபவர்) என்னுடன் அமர்ந்து சாப்பிடுவார், தினமும் அவரின் உணவையும் எடுத்து சாப்பிடும் பழக்கம் எனக்கு உண்டு. இபபடி நான் இருப்பதால், மேலதிகாரிகளிடம் தனிப்பட்ட முறையில் அடிக்கடி திட்டு வாங்குவதும் உண்டு. அவர்களை சரிக்கு சமமாக நடத்துவதால் உங்களை போன்று அவர்களும் என்னை கேள்வி கேட்பார்கள், சரியில்லை டிஸ்டன்ஸ் தேவை என்று சொல்லுவார்கள். எதில் டிஸ்டன்ஸ் வைக்க வேண்டும் என்ற வரைமுறை என் மனதளவில் வைத்து இருக்கிறேன். :)
அதே போன்று அலுவலகத்திலிருந்து என்னை வீட்டிற்கு வந்து பார்க்கும் என் நண்பர்கள் அதிலும் கடை நிலை ஊழியர்களை எல்லோரையும் போன்று சமமாகவே நடத்திவருகிறேன். சோபாவில் அமரவைத்து, காப்பி கொடுத்து பேசி அனுப்பித்தான் பழக்கம்.
//முதலில் ஒன்று புரிந்து கொள்ளுங்கள். எல்லா சாதியினருக்குமே அந்த திமிர் உண்டுதான். என்ன, அதை தங்களை விட கீழ்நிலையில் இருப்பவர்களிடம்தான் காட்ட இயலும்.//
ராகவன் சார், எனக்கு புரிதல் உண்டு, திமிர் இருந்துவிட்டு போகட்டும், ஆனால் அதை அடுத்தவரை அடிமையாக்க் காட்டாதீர் என்கிறேன். உங்களை போன்ற திறமை எனக்கும் இருந்தால், அதை தட்டிக்கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள்.. ஏன் அமுக்க பார்க்கிறீர்கள்..?? அது தான் என் கேள்வி..
//உங்கள் சாதியை விட குறைந்த நிலையில் வரையறுக்கப்ப்பட்டவர்களை உங்கள் சாதியினர் நல்லபடியாக நடத்தி விடுகின்றனரா?//
இன்னமும் முழுமையாக இல்லை.. ஏன் நானே என் வீட்டாரினால் அப்படி நடத்தப்படுவதில்லை.. :) என்பதுதான் உண்மை.. அம்மா சுத்த சைவம், அப்பா சுத்த அசைவம் இன்றளவும் என் பெரியம்மா க்கள் பிராமணர்களை விடவும் ஆச்சாரமாக இருக்கிறார்கள் என்பது யதார்த்தம். அவர்கள் என்னை சரிக்கு சமமாக நடத்தினாலும், எங்கள் வீட்டில் உணவருந்த சற்றே யோசிப்பவர்கள் தான். ஆனால் என் மன புண்படும் படி நடந்துக்கொள்ள மாட்டார்கள்.
யாரையும் குட்டி, அடிமையாக்கும் புத்தி ரத்தத்தில் இல்லை. சுத்தம் என்பது வேறு, என்னிடமும் ஏராளமாக அது உள்ளது ஆனால், அடுத்தவரை பழிக்கவும், சாதியின் அடிப்படையில் அசிங்கப்படுத்தவும் நினைப்பதில்லை.
சக மனிதனை, மனிதனாக பார்க்கவும் நடத்தவும் மனதை தயார் படுத்திக்கொள்ளுதல் மிக மிக அவசியம்.
அம் ( ம ) or ( மு ) னி . உங் சாய்ஸ் ......
பைனலா என்னதான் சொல்ல வர்ரீங்கோ ??????
//அம் ( ம ) or ( மு ) னி . உங் சாய்ஸ் ......
பைனலா என்னதான் சொல்ல வர்ரீங்கோ ??????//
:))))))))
சக மனிதனை மனிதனாக நடத்தி பழகு !
சாதியின் அடிப்படையில் உன்னை போன்ற மனிதனை தரம் பிரிக்காதே.
யாரிடம் திறமை இருந்தாலும் ஊக்குவை. ஊதாசினபடுத்தி, ஒதிக்கிவைக்காதே.
நமக்குள்ளேயே சுழலும் ஒரு பிரச்சினை என்பதாலும் பலருக்கும் பல வித கருத்துக்கள் இருப்பதாலும் மவுனம் சாதிப்பவர்கள் அதிகம் போல் தெரிகிறது.அல்லது இதுபோன்ற விவாதங்கள் முன்பே பலரால் பேசப்பட்டு இன்னும் அரைத்த மாவையே எதற்கு அரைக்க வேண்டும் என நினைத்தும் கூட்டம் கூடவில்லையோ?
இடுகையைப் பொறுத்தவரையில் நகர்ப்புறங்களாகவும்,ஹாஸ்டல் வாழ்க்கை எனவும் அதிலும் கல்லூரியில் பெங்காளி,கேரள நண்பர்களோடு அலைந்து திரிந்து நகர்ந்துவிட்டதால் இடுகை பற்றி கருத்துக்கள் தோன்றவில்லை. டோண்டுவுக்கு அளித்த பதில் விளக்கம் எனக்கு பிடித்தது.
Housemaid ஆக இருந்த ஒரு ஆந்திரா பெண் பணிபுரிந்த இடத்தை விட்டு ஓடிவந்து வழியில் கண்ட எங்க வீட்டு அம்மணி வீட்டுக்கு அழைத்து வந்து உதவிக்கு கொண்டு வந்து வச்சுட்டாங்க.பின்பு அந்த பெண் இந்திய தூதரகம் போய் சரணடைந்து விட்டது.முன்பு ஒரு சிங்களப் பெண் குழந்தையை கவனித்துக் கொள்ளவும் உதவிக்காகவும் வீட்டில் இருந்தது.இவர்கள் எல்லாம் வேலைக்காரி என்ற உணர்வு இல்லாமல் பொருளாதார தேடலில் நமக்கு உதவுபவர்கள் என்ற எண்ணத்தில் எங்களுடன் கலந்தே உணவு உண்டார்கள்.
உங்கள் இடுகையைப் படிக்கும் போதுதான் கம்யூனிஸ்ட்கள் சொல்லும் 'பூர்ஷ்வா' மனப்பான்மை நம்மிடமும் உள்ளது என்பது புரிகிறது.
@ கோவி... நன்றி.. :)))) பாருங்க..ராகவன் சார் வந்தவுடன் உங்களை மறந்துவிட்டேன்.. :))
@ ராஜநடராஜன்... - யாரும் பின்னூட்டம் போடலை படிச்சிட்டு போறாங்க.. :)) பின்னூட்டம் அவசியம் என்பது இல்லை, படித்து புரிந்துக்கொண்டால் நலம். :))
//உங்கள் இடுகையைப் படிக்கும் போதுதான் கம்யூனிஸ்ட்கள் சொல்லும் 'பூர்ஷ்வா' மனப்பான்மை நம்மிடமும் உள்ளது என்பது புரிகிறது.//
போச்சிடா... !! :))) ஏங்க... ?!! முன்னமே இல்லாத ஒன்றை எனக்கு இருக்குன்னு ஒருத்தர் சொல்லிக்கிட்டு இருக்காரு அந்த இம்சையே எனக்கு தாங்கமுடியல. .இப்ப இது வேறா?
//***FC பிரிவினருக்கு, அவரை விடவும் மற்றவர்கள் குறைவு என்ற திமிர். அதே போல் BC, க்கு மற்றவர்கள் எல்லோரும் அவரைவிடவும் குறைவு என்ற திமிர், இப்படியே தான் மற்ற சாதி பிரிவினரும் தனக்கு கீழ் உள்ளவர்களை குறைவாக மதிப்பிடுகின்றனர். ****//
மிக சரியாக சொன்னிர்கள்
FC , BC , MBC, SC ஆகியவற்றை ஃபார்வேர்டு காஸ்ட், பேக்வேர்டு காஸ்ட்னு பார்க்க கூடாது அதை ஃபார்வேர்டு க்லாஸ்(Forward class),
பேக்வேர்டு க்லாஸ்(Backward class) தமிழ்ல சொல்லனும்னா
பொருளாதார தரத்தில் உயரந்த வகுப்பினர், பிற்படுத்தபட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்பினர் மற்றும் தாழ்த்தபட்ட வகுப்பினர், இதில் பட்ட பட்டனு முடிவதன் அர்த்தம்
ஒரு சில உயர் சாதியால் அவர்கள் அப்படி ஆக்கபட்டார்கள்
//***உயர் சாதியினரால் தனிப்பட்ட முறையில் மிக மிக மோசமாக நான் அடிக்கடி பாதிக்கப்பட்டு இருக்கிறேன். ***//
நான் அதிகமாக பாதிக்கபடவில்லை என்றாலும் என் நண்பர்கள் பலபேர் பாதிக்கபட்டுள்ளார்கள் அதை நான் கண்கூடாக பார்த்துள்ளேன் இதை தட்டி கேட்கலாம் என்று நண்பனிடம் சொன்னால் நாம என்னடா பண்ண முடியும்னு திரும்ப கேட்கிறான் கடவுள் இருக்கிறான் அவன் பார்த்துப்பான்னு பிதற்றுகிறான் கடவுள் பெயரால் இவர்கள் எந்த அளவுக்கு அடிமையாக இருக்கிறர்கள் என்பதை பார்கும் போது எரிச்சல்த்தான் வருகிறது.
பள்ள இளிக்குறதும், பாய் போடுறதும் ஐயர்ங்களுக்கு கைவந்த கலை தன் இனம் நல்லா இருப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் அப்படி செய்வதற்காக வெக்கபடவும் மாட்டர்கள், முகலாயர்கள் வடநாட்டை ஆண்டபோது அவர்களிடம் பள் இளித்து கொண்டு முக சுதி பாடிகொண்டிருந்தார்கள், பின்பு வெள்ளையனிடம் இந்தியர்கள் அடிமைபட்டிருந்த போது ஆங்கிலம் படித்து அவனிடம் செல்ல பிள்ளையாக வாழ்ந்து வந்தான், இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன்
அந்த அந்த மாநிலத்தில் உள்ள உயர்சாதி வகுப்பினர்கள் ஒன்று கூடி இந்தி மொழியை தேசியமொழியாக அறிவித்தார்கள்
(பின்பு தமிழகமக்களின் ஏதிர்ப்பால் அது திரும்ப பெறபட்டது)இவர்களுக்கு இந்தி தெரியும் என்கின்ற ஒரே காரணத்திற்காக அனைத்து மாநிலமக்கள்மேலும் இந்தியை திணித்தார்கள், இது எவ்வளவு பெரிய ஆதிக்கதன்மை, ஒரு மொழியை கொண்டா இந்தியா சுதந்திரம் அடைந்தது யார் கொடுத்தார்கள் இவர்களுக்கு இந்த அதிகாரம். இந்திகார்கள் 40% பேர் இருக்கிறார்கள் எனபதற்காக அனைவரும் இந்தி படிக்க வேண்டுமா அப்படி அவர்கள் நினைத்தால் அவர்கள் பாக்கிஸ்தான் பிரிந்ததுபோல இவர்களும் பிரிந்து தனிநாடாக போகட்டுமே யார் தடுத்தார்கள்
ஆசியா கண்டம் ஒன்னாயிருக்கனும் என்பதற்காக எல்லோரும் சீன மொழிய படிக்கனும் சொன்ன இந்திகாரனுங்க ஒத்துபானுங்களா உலகம் ஒன்னா இருக்கனும்னு ஆங்கிலத்தை கட்டாய பாடமா வைச்சா எப்படி இருக்கும் அதுபோலதான்.
இன்றைக்கும் அனைத்து மாநிலத்திலும் பிராமிணர்களின் கைதான் ஒங்கி உள்ளது அதனால்தான் தாழ்த்தபட்ட மக்கள் முன்னேற்றம் அடையாமல் தாழ்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்
//***தூ என்று முகத்தில் உமிழ தோன்றும். ***//
தூ என்று காரி அவர்கள் முகத்தில் அல்ல வாயில் துப்ப வேண்டும்.
மனிதர்கள் அனைவரும் சமம் என்பதில் நாம் என்றுமே உறுதியாக இருக்க வேண்டும் அதில் மாற்று கருத்து இருக்க கூடாது. நாம் வெவ்வேறு துறையை சார்ந்தவர்களாக,வேலை செய்பவர்களாக இருந்தாலும் பொது இடங்களில் நாம் அனைவரும் சமம். மொழிபற்றையும், சமத்துவத்தையும் குழந்தையிலிருந்தே கற்பிக்க வேண்டும்
கவிதா..கொஞ்சம் தெக்கே போய் பாருங்க..ஆண்டான்,அடிமை கூட்டம்,இரட்டை டம்ளர் முறை இன்னும் எத்தனையோ இருக்கு.அதில் நீங்கள் குறிப்பிடும் சாதிக்கு தொடர்பு இல்லை..விவேகத்துடன் கூடிய வீரமே சிறந்ததுனு எவ்வளவோ எடுத்து சொன்னாலும் அவர்களுக்கு புரியாது.
there is only one caste.. those with Money and others Not..This is true..
அணில் குட்டி வாழ்க ;-)
பார்ப்பணர்களை குறை கூறத்தேவையில்லை, தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? காங்கிரஸின் ஆட்சி முடிந்து, (பார்ப்பணர்களின் ஆட்சி முடிந்து?)திராவிடர்களின் பொற்காலம் மலர்ந்து 40 திரு ஆண்டுகள் முடிந்து விட்டது, என்ன நிலைமை? நமது ஆட்கள் எல்லாவற்றிற்கும் ஒரு விலை நிர்ணயம் (இந்த வேலை நடக்கணும்ணா இவ்ளோ ஆகும்களே, கூசாமல், கால்மேல் கால் போட்டுகொண்டு நம்ம ஆளுங்க பேசும்போது, அட டா...) செய்ததுதான் சாதனை!வரிசையாக ஒரு குடும்பத்தை ராஜ குடும்பமாக்கி அவர்களிடம் ஏமாந்ததுதான் நம்ம சாதனை! தயாநிதிமாறன் ஓரு ஐபிஎஸ் அதிகாரியால் சுனாமி நேரத்தில் நாகப்பட்டினத்தில் சிறிதளவே தொடப்பட்டதற்கு, சரியான ஒரு அறை வாங்கினார். நானே பார்த்தது!
பதவியும் காசும் இருந்தால் தாழ்ந்த சாதியும் இப்படித்தான் இருப்பார்கள்,எல்லா ஊரிலும் சாதிச்சண்டைகள் நமக்குள்ளேயேதான், பார்ப்பணர்களோடு இல்லை, பார்ப்பண எதிர்ப்பை ஒதுக்கி விட்டு நமக்குள் இருக்கும் குறைகளை பற்றி விவாதித்து மேன்மை அடைவோம்!
ஹையா , கவிதாக்கா கச்சி ஆரம்பிக்க போறாங்கடோய்.
கச்சி சின்னம் அணிலு.
நமக்கு ரெண்டே சாதிதான் கவிதாக்கா.
ஆண் சாதி , பெண் சாதி
இதில் எது உயர் சாதின்னு உங்களுக்கே தெரியும்.
இந்த சாதித் திமிர் தலித்களிடம்கூட உண்டு. கோவையில், நரிக்குறவர் இன குழந்தைகளை தங்கள் வீட்டுத்திருமணப் பந்தியிலிருந்து தலித்கள் அடித்து விரட்டியதாக படித்திருக்கிறேன்.
//நாம் பொருளாதாரத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு இருந்தால், இப்படிப்பட்ட பிரச்சனைகளை சந்தித்திருக்கவேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது என்று நினைக்கிறேன்.//
இந்த வரிகளைத்தவிர மற்றவைகளில் எனக்கு முழு உடன் பாடு உண்டு.
முப்படைகளின் தலைவர் பாதுகாப்பு அமைச்சர் பாபு ஜெகசீவன்ராம் அவர்கள் உ.பி. யில் சம்பூரனநாத் என்னும் பார்ப்பனர் சிலையை திறந்து வைத்தார். உடனே பார்ப்பனர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு ஒரு தாழ்த்தப்பட்டவர் பார்ப்பனர் சிலையைத் திறந்த வைத்ததால் தீட்டாகி விட்டது என்று கூறி தீட்டு கழித்த வரலாறு இங்கு உண்டு.
முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் எந்த ஜாதியால் தாழ்த்தப்பட்டானோ அந்த ஜாதியால் முன்னுக்கு கொண்டு வர வேண்டியதின் அடிப்படையிலேயே பிரிக்கப்பட்டு இடஒதுக்கீடு போன்றவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் அறிந்து கொள்ள http://thamizhoviya.blogspot.com வலைப்பூவை பார்க்க வேண்டுகிறேன்.
நல்லதொரு பதிவு.
நன்றி
//
நம்மை போன்று ரத்தம், சதை, இதயம், கண்கள் கொண்ட ஒரு மனிதன். விலங்கு அல்ல. ஏன் எத்தனையோ வீடுகளில் நாய்களை கூட வீட்டிற்குள் விடுகிறார்கள், மடியில் வைத்து கொஞ்சுகிறார்கள். இவர்கள் வந்தால் என்ன, உட்கார்ந்து சாப்பிட்டால் என்ன.?
//
உங்களின் கருத்தை நானும் ஏற்கிறேன்.. ஆனால் முழுமையாக இல்லை.. காரணம், நீங்கள் சொன்ன அந்த நாயைகூட வீட்டில் உள்ளவர்கள் குளிப்பாட்டி, சுத்தம் செய்து, சரியான நோயெதிர்ப்பு சிகிச்சைகள் எல்லாம் செய்து தான் வீட்டில் கொஞ்சுகிறார்கள்..
ஆனால், நீங்கள் சொன்ன இந்த கீழ்சாதியினர், இன்னமும் எங்கள் ஊரில் அந்த நாய்கூட வாய் வைக்க விரும்பாத சிலவற்றை தின்றும், அதே நாயைவிட கேவலமான சுத்தத்துடனும், வீடுகள் இருந்தும் இரவில் நாடு ரோட்டில் பாயை விரித்து படுத்துக்கொண்டு சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு செய்துகொண்டும் திரிகின்றனர்..
இவர்களை நம்மால் தட்டி கேட்க முடியாது.. மீறினால், சாதியின் பெயரால் நம்மீது வழக்குகள்பாயும்..
ஈரோடு நகருக்கு அருகில் உள்ள திண்டல் என்ற ஊரில் இவர்களின் புகார்களை விசாரிப்பதற்கு என்றே தனி பிரிவு ஒன்று அந்த திண்டல் காவல்நிலையத்தில் உள்ளது. இவர்கள் யார்மீது புகார் கொடுத்தாலும், எந்தவித விசாரணையும் இன்றி உடனடியாக கைது செய்யப்படுவார்கள்..
இந்த உரிமையை அவர்கள் பயன்படுத்துவது, நம்மைபோன்றவர்களை மிரட்டி அதட்டத்தான்..
பெரும்பாலான இவர்கள் அடிப்படையில் ஏழைகளே. எனவே அந்த ஊரில் உள்ள மேல்தட்டு மக்களிடம் ஏகத்துக்கும் கடன் வாங்கி செலவழித்துவிட்டு அவர்கள் திருப்பி கேட்ட்கும்போது, மனித உரிமை ஆணையத்தில் கொத்தடிமைகளாக நடத்துவதாக புகார்கொடுத்த கதையும் எங்கள் ஊரில் உண்டு..
அவசரத்திற்கு பண உதவியும் செய்து விட்டு இப்போது நீதிமன்றத்துக்கும் வீட்டுக்குமாக அலைந்து கொண்டு உள்ளனர்..
நீங்கள் சொன்னது போல், கீழ்சாதியினரும் மனிதர்கள் தான்.. அவர்களை வீட்டுக்குள் அனுமதிக்கலாம்.. எப்போது எனில், அவர்கள் சுத்தமாகவும், சுகாதாமாகவும், நேர்மையாக, தனக்கான சலுகைகளை நியாயமான முறையில், பயன்படுத்தும் போது மட்டும்..
உங்களிடம் ஒரு சின்ன விளக்கம் தேவை..
உதாரணத்திற்கு.. உங்கள் பிள்ளையோ, ரங்கமணியோ, அல்லது நீங்களோ கடையில் முடி வெட்டிக்கொண்டு வந்து, உங்கள் வீட்டின் எல்லா அறைகளிலும் நுழைவீர்களா (பூஜை அறை உட்பட)..? கண்டிப்பாக மாட்டீர்கள் என்று தான் நினைக்கிறேன்..
அந்த சமயத்தில், அப்படி நீங்கள் உங்கள் வீட்டின் எங்காவது ஒரு பகுதிக்கு நுழைய மறுக்கப்படும்போது, அவ்விடத்தில் நீங்களே ஒரு தீண்டத்தகாதவராக தானே உள்ளீர்..
நான் அப்படி வீட்டுக்குள் நுழைய முயலும் போது எல்லாம் என் அம்மாவுடன் ஒரு சின்ன யுத்தமே நடக்கும்.. அந்த சூழ்நிலையில், நானே எங்கள் வீட்டை பொறுத்தவரை தீண்டத்தகாதவன் தான்.. குளித்த பிறகுதான் உள்ளே அனுமதிக்கபடுவேன்.. அப்படி இருக்கும் போது இவர்கள் பேணும் இப்படிப்பட்ட சுகாதார நிலையில் எப்படி உள்ளே அனுமதிப்பது..
(ஒருவேலை, இதெல்லாம் நான் சொன்ன தவறான கருத்தாக கூட இருக்கலாம்..
நீங்களும் என்னை சாதிவெறி பிடித்தவன் என்று கூட எண்ணலாம்.. ஆனால், நான் சொன்ன அதே சேரிபோன்ற இடத்தில் இருந்து என்னோடு படித்த கீழ்சாதி நண்பர்களும் எனக்குண்டு என்பதனையும் இங்கே கூறிக்கொள்கிறேன்.. அவர்களை எங்கள் வீட்டில் எப்போதும் எதிர்த்ததும் இல்லை..)
டிஸ்கி 1 : கருத்துகள் ஏதும் தவறாய் இருப்பின் தயவுசெய்து மன்னித்துவிடுங்கள்..
டாபிக் கொஞ்சம் சிக்கலானது.. இதில், இந்த இடுகை முல்லை போன்றது.. கருத்து சொன்ன நானோ துணியை போன்றவன்.. ஏதும் எசகு பிசகா ஆச்சுனா, கண்டிப்பா கிழிய போறது நானா தான் இருப்பேன்.. ஆகவே கருணை உள்ளத்துடன் பரிசீலிக்கவும்..
(அடடா.. கம்முனு இதையே ஒரு இடுகையா போட்டு இன்னைக்கின கோட்டாவ முடிச்சிருக்கலாமோ..?)
*முள்ளை
(முந்தய பின்னூட்டத்தில் "முள்ளை" முல்லை என்று எழுத்துபிழையாக போட்டுவிட்டேன்)
இன்னும் படிச்சு முடிக்கலை..
//
இதில் கொடுமை என்னவென்றால் இந்த FC பிரிவில் இருப்பவர்களுக்கு இருக்கிற திமிர் இருக்கிறதே. .என்னவோ கடவுளிடமிருந்து நேராக இறங்கி வந்தவர்கள் போன்று அவர்கள் நடந்து க்கொள்வதும், அவர்களுக்கு மட்டுமே கடவுள் அதிக அறிவையும், பண்பையும் படிப்பையும் கொடுத்தவிட்ட மாதிரி அவர்கள் நடந்து க்கொள்வது மட்டுமே அல்லாது அவரை விட கீழ் சாதியில் பிறந்தவர்களை கொட்டி கொட்டி நீ இதற்கு மேல் எழுந்துவிடக்கூடாது என்பதில் அதிகம் கவனம் வைப்பதும் சகிக்கமுடியாத ஒரு செயல்.
//
ஆம்.. இதுவேண்டுமேனில் எற்றுகொள்ளகூடியதுதான்.. ஆனாலும், நீங்கள் உங்கள் கல்லூரி வாழ்க்கையில் கண்டிப்பாக சில FC மாணாக்கர்களை சந்தித்து இருப்பீர்கள்.. அவர்களும் அப்படியா என்ன.. ஊருக்குள் உள்ள அந்த காலத்து ஆசாமிகள் வேண்டுமானால் அப்படி இருக்கலாம்.. இப்போது உள்ள படித்த தலைமுறை மக்கள் பெரும்பாலும் அப்படி இல்லை என்றே நான் நினைக்கிறேன்..
நீங்கள்..?
//
அதுவும் இந்த அறிவு, படிப்பு, வேலை, திறமை, வாய்ப்புகள் என்று வரும்போது உழைப்பு, நேர்மை என்ற இந்த இரண்டும் இல்லாமல் வெறும் சாமர்த்தியத்தால் மட்டுமே முன்னுக்கு வர முயன்று அதற்காக என்னை முதுகில் குத்திய நிறைய கேடு கெட்ட உயர் சாதியினர் உள்ளனர்.
//
நானும் குத்தப்பட்டேன்.. இப்போதும் குத்தபடுகிறேன்..
ஆனால் அவர்களின் சாதி என்ன என்று ஆராயும் அளவுக்கு எனக்கு சரக்கு இல்லை.. நான் பார்ப்பது அவர்கள் பேசும், அவர்களின் நடவடிக்கைகளை மட்டுமே..
ஆமா..எப்படி அங்க எல்லாம் சாத்திய பாத்து நொந்து நூடுல்ஸ் ஆகிட்டு இருக்கீங்க.. அவங்க என்ன ஜாதின்னு போயி ஆளாளுக்கு கேட்டுட்டு இருபின்களோ..?
இதுக்கெல்லாம் பதில் சொல்லுவிங்களானு தெரியாது..
குறைந்தபட்சம் அப்ரூவ் பண்ணினாலே போதும்..
என்னோட பங்குக்கு கொஞ்சமா என்னோட கருத்த சொன்ன திருப்தி போதும்..
நல்ல பதிவு!
இரண்டாவது மறுமொழிக்கு தாங்கள் வழங்கிய பதில் பொருத்தமானது.
//முதலில் ஒன்று புரிந்து கொள்ளுங்கள். எல்லா சாதியினருக்குமே அந்த திமிர் உண்டுதான். என்ன, அதை தங்களை விட கீழ்நிலையில் இருப்பவர்களிடம்தான் காட்ட இயலும். //
:))))))))
@ தாமிரபரணி - கருத்துக்களுக்கு நன்றிங்க..
@ தண்டோரா.. - ம்ம் இருக்குத்தான் அதற்காக நாம் சொல்ல வேண்டியதை சொல்லாம இருக்க முடியுமா?
@ பாலாஜி - கருத்துக்கு நன்றி
@ Choco - ம்ம்..பீட்டர் விட்டா அணிலு அணிலு விட்டா பீட்டரு.. கவிய மறந்துடுங்க.. :))))
@ சிவாஜி த பாஸ் - நல்ல கருத்து, ம்ம்.. ஒன்றாக இருக்க வேண்டும் என்பது தான் என் விருப்பமும்.. :)
@ பெருசு - ஏன் நான் ஏதோ கொஞ்சம் சுமாரா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா? கட்சி ஆரம்பிக்கவா? தேவையா எனக்கு? ஏன் இந்த கொலவெறி உங்களுக்கு ?
@ நந்தவனத்தான் - யாரிடம் அதிகம் இருக்கிறது என்பது பிரச்சனை இல்லை, எப்படி அதை நிறுத்தவேண்டும் என்பதே. அதற்கான வழி இருந்தால் சொல்லுங்களேன்.
@ தமிழ் ஓவியா - கண்டிப்பாக உங்களின் பதிவை படிக்கிறேன். கருத்துக்களுக்கு நன்றி :)
@ சுரேஷ் குமார்
//ஆமா..எப்படி அங்க எல்லாம் சாத்திய பாத்து நொந்து நூடுல்ஸ் ஆகிட்டு இருக்கீங்க.. அவங்க என்ன ஜாதின்னு போயி ஆளாளுக்கு கேட்டுட்டு இருபின்களோ..?//
யாரையும் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை .அவர்களின் மொழி காட்டிக்கொடுத்துவிடும் :))
@ சுரேஷ் குமார், கல்லூரி யில் மட்டும் இல்லை, பள்ளியிலேயே எனக்கு வில்லி இருந்தாள் :) பெயர் மகாலட்சுமி :), எப்படியோ மாறி மாறி முதல் ரேங்க் எடுத்தாலும் எப்போதுமே நான் தான் க்ளாஸ் லீடர் காரணம் என்ன தெரியுமா? அவள் இருக்கவே மாட்டாள். அவளின் பெற்றோர் ஆசிரியரிடம் வந்து, என் குழந்தை படிக்க வேண்டும் அவளுக்கு அதிக பொறுப்புகள் வேண்டாம், அவளை க்ளாஸ் லீடராக போடாதீர்கள் என்று கேட்டு, எல்லாவற்றையும் என் தலையில் கட்டினார்கள். அது அவர்களின் சாமர்த்தியத்தையே குறிக்கிறது.. இளிச்சவாய், நான் .. யாரு இருக்கா எனக்கு இப்படி எல்லாம் சொல்லி எஸ் ஸாக்க?
//ஆனால், நீங்கள் சொன்ன இந்த கீழ்சாதியினர், இன்னமும் எங்கள் ஊரில் அந்த நாய்கூட வாய் வைக்க விரும்பாத சிலவற்றை தின்றும், அதே நாயைவிட கேவலமான சுத்தத்துடனும், வீடுகள் இருந்தும் இரவில் நாடு ரோட்டில் பாயை விரித்து படுத்துக்கொண்டு சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு செய்துகொண்டும் திரிகின்றனர்..//
சுரேஷ், மிகவும் வன்மையா கண்டிக்கிறேன். முதலில் அவர்களை மனிதர்களாக பார்த்து பழகுங்கள். சாதியை வைத்து ஏன் பார்க்கிறீர்கள், உயர் சாதியினர் எத்தனை பேர் நீங்கள் நினைக்கும் சுத்தத்தில் இருக்கிறார்கள்? யாருடைய வீட்டிற்காவது சென்று பார்த்து இருக்கிறீர்களா?
கிடைப்பதை அவன் சாப்பிடுகிறான் உயிர் வாழ்கிறான், முடிந்தால் நல்ல உணவு கொடுத்து உதவி செய்யுங்கள் அதைவிட்டு சாதியின் அடிப்படையில் அவனை இகழ்ந்து பேசாதீர்கள். நல்ல உணவு நீங்கள் கொடுத்தும் அவர்கள் சாப்பிடவில்லை என்றால் அப்புறம் நீங்கள் பேசலாம் சரிங்களா..
//இவர்களை நம்மால் தட்டி கேட்க முடியாது.. மீறினால், சாதியின் பெயரால் நம்மீது வழக்குகள்பாயும்.. //
முடியும்... அவர்களுக்கு தேவையானவற்றை முதலில் செய்துவிட்டு கேளுங்கள் , அவர்கள் நீங்கள் சொல்லுவதை கேட்பார்கள். சும்மா வெட்டியாக சென்று நீ ஏன் அப்படி செய்கிறாய் என்றால், எரிச்சல் என்ன கொன்றே போடுவார்கள் நம்மை.
//உதாரணத்திற்கு.. உங்கள் பிள்ளையோ, ரங்கமணியோ, அல்லது நீங்களோ கடையில் முடி வெட்டிக்கொண்டு வந்து, உங்கள் வீட்டின் எல்லா அறைகளிலும் நுழைவீர்களா (பூஜை அறை உட்பட)..? கண்டிப்பாக மாட்டீர்கள் என்று தான் நினைக்கிறேன்..//
சிறுபிள்ளைத்தனமான வாதம், :))) சுரேஷ், முடிவெட்டிவிட்டு எதையும் தொடக்கூடாது என்று சொல்ல காரணம், வெட்டப்பட்ட முடிகள் சிறு சிறு முடிகளாகவும் துகல்களாகவும் உங்களின் உடல் முழுக்க பரவி கிடக்கும், வீட்டிற்குள் அவை விழுந்துவிடும், அதோடு, சாப்பாட்டில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக எதையும் தொடாமல் சென்று குளிக்க சொல்லுவார்கள்.
சாவு வீட்டிற்கு சென்று வந்தால் கூட அப்படித்தான் நோய் கிருமிகளுக்காக உடனே நாம் குளிக்க வேண்டும் இவற்றை தவிர்த்து அதிலெல்லாம் எந்த தீட்டும் எனக்கு தெரிந்து இல்லைங்க.. :))
பெண்கள் மாதவிடாய் சமயத்திலும் அடிப்படை ஒன்று அவர்களுக்கு ஓய்வு தேவை மற்றபடி வேறொன்றும் இல்லை.
சுத்தம் என்பது வேறு, நான் பேச்க்கொண்டு இருப்பது வேறு. ஏங்க இப்படி இரண்டையும் போட்டு குழப்பிக்கறீங்க..????
//ஆனால், நான் சொன்ன அதே சேரிபோன்ற இடத்தில் இருந்து என்னோடு படித்த கீழ்சாதி நண்பர்களும் எனக்குண்டு //
:)))))) யாருக்கு தான் இல்லை. முதலில் இந்த சேரி, கீழ்சாதி என்ற டெர்ம்ஸ் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். பொதுவாக எனக்கும் எல்லா சாதியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி பழகுங்கள்.. அது தான் சரி.. :)))
//என்னோட பங்குக்கு கொஞ்சமா என்னோட கருத்த சொன்ன திருப்தி போதும்..//
ம்ம்... பதில் போட்டுட்டேன்.. படிச்சிட்டு.. கொஞ்சம் தெளிவாக இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.
:)) வாழ்த்துக்கள் !!
@ ஜோதி பாரதி - நன்றி
:)) ராகவன் சாரை பற்றி தெரியாதா? தெரிந்து தான் அவரிடம் அளவுடன் நிறுத்திக்கொள்வது, நிறுத்தவும் வைப்பது :))))
//
சுரேஷ், மிகவும் வன்மையா கண்டிக்கிறேன். முதலில் அவர்களை மனிதர்களாக பார்த்து பழகுங்கள். சாதியை வைத்து ஏன் பார்க்கிறீர்கள், உயர் சாதியினர் எத்தனை பேர் நீங்கள் நினைக்கும் சுத்தத்தில் இருக்கிறார்கள்? யாருடைய வீட்டிற்காவது சென்று பார்த்து இருக்கிறீர்களா?
கிடைப்பதை அவன் சாப்பிடுகிறான் உயிர் வாழ்கிறான், முடிந்தால் நல்ல உணவு கொடுத்து உதவி செய்யுங்கள் அதைவிட்டு சாதியின் அடிப்படையில் அவனை இகழ்ந்து பேசாதீர்கள். நல்ல உணவு நீங்கள் கொடுத்தும் அவர்கள் சாப்பிடவில்லை என்றால் அப்புறம் நீங்கள் பேசலாம் சரிங்களா..
//
நான் சாதியின் அடிப்படையில் யாரையும் இகழவில்லை..
உண்மையில் அவர்கள் தினமும் எங்கள் கிராமத்தில் உள்ள மற்ற பிரிவினரைவிட அதிக அளவில் சம்பாதிக்கின்றனர்.. அவர்களுக்கு உணவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை..
ஆனாலும், நமக்கு எப்படி அசைவ உணவோ, இல்லை அந்த தயிர் சாதமோ தான் நல்ல உணவோ, அப்படி அவர்களுக்கு அவர்கள் உண்ணுவது நல்ல உணவு.. நான் அதனை குறை சொல்லவில்லை.. அது அவர்கள் விருப்பம்.. அதேபோல் அதனை உண்ணும், சுகாதாரத்தினை பேணாத அவர்களை ஒதுக்குவது நம்மவர் உரிமை..அது எம்மவராக இருப்பினும்.. மீண்டும் சொல்கிறேன்.. நான் அவர்களை சாதி அடிப்படையில் இகழவில்லை.. அவர்களின் செயலை பொறுத்தே பிரித்து பார்கிறேன்..
//
//இவர்களை நம்மால் தட்டி கேட்க முடியாது.. மீறினால், சாதியின் பெயரால் நம்மீது வழக்குகள்பாயும்.. //
முடியும்... அவர்களுக்கு தேவையானவற்றை முதலில் செய்துவிட்டு கேளுங்கள் , அவர்கள் நீங்கள் சொல்லுவதை கேட்பார்கள். சும்மா வெட்டியாக சென்று நீ ஏன் அப்படி செய்கிறாய் என்றால், எரிச்சல் என்ன கொன்றே போடுவார்கள் நம்மை.
//
முழுவதுமாக படிக்கவும்..
நான் சொன்னது அவர்களின் அத்துமீறும் செயல்களை தட்டி கேற்க முடிவதுஇல்லை என்று..
அந்த அத்து மீறும் செயல்களுக்கு எப்படி நான் வேண்டியவற்றை செய்து தர முடியும்..
//
சுத்தம் என்பது வேறு, நான் பேச்க்கொண்டு இருப்பது வேறு. ஏங்க இப்படி இரண்டையும் போட்டு குழப்பிக்கறீங்க..????
//
இரண்டுக்கும் நிச்சயம் சம்பந்தம் உள்ளது என்பது என் கருத்து.. அவர்களின் பெரும்பாலானவர்களின் பழக்கவழக்கம் நம்மவர்களை முகம்சுளிக்க வைப்பதனால் தான் அவர்களிடம் இருந்து விலகியே உள்ளனர்..
தீண்டாமை என்கிற இந்த சாதிவெறிக்கு பின்னால் உள்ள பல சில காரணங்களில் இந்த சுத்தபத்தத்திற்க்கும் ஒரு பங்கு நிச்சயம் உண்டு.
எனக்கு எட்டின அறிவுவரைக்கும் அப்படிதான்..
எதுக்கு வம்பு.. நீங்கள் சொல்வத்தையே சரி என்று ஆமோதித்துவிட்டால் வேலை முடிந்தது.. :)))
//:)) ராகவன் சாரை பற்றி தெரியாதா? தெரிந்து தான் அவரிடம் அளவுடன் நிறுத்திக்கொள்வது, நிறுத்தவும் வைப்பது :))))//
உங்களிடம் அப்படி என்ன அளவை மீறி எப்போது பழகினேன்? நான் இட்ட இந்தப் பின்னூட்டத்தில் ஏதேனும் வரம்பு மீறல்?
//எப்படியோ மாறி மாறி முதல் ரேங்க் எடுத்தாலும் எப்போதுமே நான் தான் க்ளாஸ் லீடர் காரணம் என்ன தெரியுமா? அவள் இருக்கவே மாட்டாள். அவளின் பெற்றோர் ஆசிரியரிடம் வந்து, என் குழந்தை படிக்க வேண்டும் அவளுக்கு அதிக பொறுப்புகள் வேண்டாம், அவளை க்ளாஸ் லீடராக போடாதீர்கள் என்று கேட்டு, எல்லாவற்றையும் என் தலையில் கட்டினார்கள். அது அவர்களின் சாமர்த்தியத்தையே குறிக்கிறது.. இளிச்சவாய், நான் .. யாரு இருக்கா எனக்கு இப்படி எல்லாம் சொல்லி எஸ் ஸாக்க?//
ரேங்கில் வருபவர்கள்தான் கிளாஸ் லீடராக இருக்க வேண்டுமா என்ன? உங்களுக்கு அப்பதவி வேண்டாம் என்றால் மறுத்து விடுவதுதானே? அப்பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளுக்கு எது நல்லது என பார்த்து செய பட்டார்கள் போலிருக்கிறது. அவர்கள் என்ன கவிதா மட்டுமே கிளாஸ் லீடராக இருக்க வேண்டும் என்றா கேட்டார்கள்?
உங்களுக்கு பார்பனர்களை பிடிக்காது, அதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
டோண்டு ராகவன்
//
உண்ணும் உணவிலிருந்து, உடுத்தும் உடை, கட்டியிருக்கும் வீடு, படுத்துறங்கும் பாய் முதற்கொண்டு ஒரு கீழ்சாதிக்காரன் செய்தது என்று அறியாதவர்களா?
/*
முதலில் இந்த சேரி, கீழ்சாதி என்ற டெர்ம்ஸ் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.
*/
//
இதென்ன கொடுமையா இருக்கு.. நீங்க தான் இந்த டெர்ம்ஸ் எல்லாம் வெச்சு இடுகையிட்டு இருக்கீங்க.. அதற்க்கு நான் கருத்து சொல்லிருக்கேன்..
நிறுத்தனும்.. நீங்க மொத்தல்ல நிறுத்தனும்..
இத்த யூஸ் பண்றத நீங்க நிறுத்தனும்..
அப்பரம்.. சொர்கத்த சொர்கம்னு தானே சொல்லமுடியும்..
அவர்கள், அவங்க எடத்த சுத்தமா வெச்சிருந்தா நாங்க ஏன் அதனை சேரின்னு சொள்ளபோறோம்.
யாருக்கும் அவர்களின் கருத்துக்கு எதிர் கருத்து பிடிக்காது தான் என்று நினைக்கிறேன்..
ஆகவே.. அப்பீட்டேய்..
ஆனாலும்.. எந்த கருத்திலுமே சில யதார்த்தமும் சில மாறுபட்ட கருத்தும் இருக்கும்..
அந்த வகையில்,
உங்களின் சில பல கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள கூடியவை..
மற்றும் பல சில கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை..
எனினும் நல்ல கருத்துக்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்..
அற்புதமான பதிவு கவிதா.
//உழைப்பு, நேர்மை என்ற இந்த இரண்டும் இல்லாமல் வெறும் சாமர்த்தியத்தால் //
//அதில் முக்கியமானது பல் இளிப்பது//
எந்த விதமான கூச்ச நாச்சமும் இன்றி அதைச் செய்வார்கள். அடுத்தவர் உழைப்பை தன்னுடையது என்று சொல்ல தயங்காதவர்கள்.
எத்தனையோ விஷயங்களைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். ஆனால் பின்னூட்டத்தில் கேள்வி எதைப் பற்றி வருகிறது பாருங்கள்.
//உங்கள் வீட்டு வேலைகளை செய்பவர்களை உங்கள் அருகிலேயே வைத்து ஒரே மேஜையில் வைத்து ஒன்றாக உண்பீர்களா// வேறு எதுவும் பிரச்சினை இல்லை.
ஜோதி பாரதிக்கு எதற்கு நன்றி என்று சொன்னால் நன்றாக இருக்குமே.
எதற்கு நன்றி என்று இப்போது புரிந்துவிட்டது. அவசரத்தில் ஜோதிபாரதியின் முதல் பின்னூட்டத்தைப் படிக்காமல் விட்டு விட்டேன்.
@ சுரேஷ் குமார்
//இரண்டுக்கும் நிச்சயம் சம்பந்தம் உள்ளது என்பது என் கருத்து.. அவர்களின் பெரும்பாலானவர்களின் பழக்கவழக்கம் நம்மவர்களை முகம்சுளிக்க வைப்பதனால் தான் அவர்களிடம் இருந்து விலகியே உள்ளனர்..//
கண்டிப்பாக இல்லைங்க...
சாதியின் அடிப்படையில் ஒருவரை தள்ளி வைப்பது வேறு, சுத்தம் என்பது வேறு. ஒரு உயர் சாதி் வீட்டில் வேலை செய்யும் ஒரு பெண் எத்தனை சுத்தமாக இருந்தாலும் தோட்டத்து வழியாக சென்று வரவேண்டும், அல்லது எதையும் தொடாமல் இருக்க வேண்டும் அதற்கு மேல் அந்த பெண் சுத்தமாக இருக்கிறாள் என்பதற்காக அவளை சரி சமமாக நடத்துவார்களா என்று சிந்தித்து பாருங்கள்.
நீங்கள் சொல்லும் சுத்தமின்னை எல்லா சாதியினரிடமும் உண்டு, பாகுபாடு இல்லாமல் சரிங்களா... தயவுசெய்து பிஸிக்களாக பல இடங்களை, வீடுகளை சென்று
பார்த்துவிட்டு அப்புறம் முடிவு செய்யுங்கள்
//யாருக்கும் அவர்களின் கருத்துக்கு எதிர் கருத்து பிடிக்காது தான் என்று நினைக்கிறேன்..
ஆகவே.. அப்பீட்டேய்..//
அப்படி எல்லாம் இல்லை, உங்களுக்கு பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன்.. மாற்றுக்கருத்தாக நினைக்கவில்லை.. ராகவன் சாரை விடவுமா??? :))
//உங்களிடம் அப்படி என்ன அளவை மீறி எப்போது பழகினேன்?//
ராகவன் சார், உங்கள் வயதென்ன என் வயதென்ன...??? என்னிடம் நீங்கள் அளவு மீறி பழக என்ன இருக்கிறது? யோசிக்காமலே எப்பவும் பேசுவீங்களோ? முதலில் உங்களிடம் யார் வந்து பழகினாங்க? நீங்களாக நினைச்சிக்கிறீங்களோ? என் வாழ்க்கையில் நான் சந்திக்க கூடாது என்று நினைக்கும் மனிதர் நீங்கள் மட்டுமே இதுவரை. அதை தயவு செய்து மனதில் நிறுத்துங்கள். உங்கள் மனம் புண்படும் படி என் வார்த்தைகள் வருவதற்கு மன்னிக்கவும் வயதானவர் என்பதால் இந்த மன்னிப்பை என்ற வார்த்தையை பயன்படுத்துகிறேன்.
// நான் இட்ட இந்தப் பின்னூட்டத்தில் ஏதேனும் வரம்பு மீறல்?//
அப்படி எல்லாம் எளிதாக நீங்கள் வரம்பை மீறிவிட முடியாது. மீறினாலும் என் வார்த்தைகள் அவற்றை கட்டுப்படுத்தும்.
//ரேங்கில் வருபவர்கள்தான் கிளாஸ் லீடராக இருக்க வேண்டுமா என்ன? உங்களுக்கு அப்பதவி வேண்டாம் என்றால் மறுத்து விடுவதுதானே? //
ஆம் முதல் 2 ரேங்க் வருபவர்கள் மட்டுமே கிளாஸ் லீடராக இருக்க முடியும். இருவருக்குமே பேட்ஜ் கொடுப்பார்கள். குட் ஸ்டூன்ட், கிளாஸ் லீடர் என்று இரண்டு.
வேண்டாம் என்று சொல்லமுடியாது, ஆசிரியர் சொல்லுவது தான். அதுவும் முதல் இரண்டு ரேங்க்குள் என்கிற போது எங்கள் இருவருக்கும் மாறி மாறி வரும். மாணவியால் மறுக்க முடியாது என்பதால் தான் அவளின் பெற்றோர் வருவர்.
//அப்பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளுக்கு எது நல்லது என பார்த்து செய பட்டார்கள் போலிருக்கிறது. அவர்கள் என்ன கவிதா மட்டுமே கிளாஸ் லீடராக இருக்க வேண்டும் என்றா கேட்டார்கள்?//
முதலில் விளக்கம் சொல்லிவிட்டேன். முதல் இரண்டு ரேங்குகள் தான் லீடராக வர முடியும். அதனால் அவர்கள் பெண்ணிற்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு போவார்கள்.
வேறு யார் எப்படி போனால் அவர்களுக்கு என்ன...? :)
//உங்களுக்கு பார்பனர்களை பிடிக்காது, அதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.//
ம்ம் அப்புறம்???? எப்படி ராகவன் சார் இவ்வளவு சரியாக எனக்கு பார்பனர்களை பிடிக்காது என்று சொல்லிவிட்டீர்கள். நீங்கள் பார்பனர் தானே? உங்களை பிடிக்காது என்று என்றுமே நான் சொன்னது இல்லையே?.. :)))))
ஹய்யோ. ஹய்யோ... உங்களோட எப்பவுமே ஒரே காமெடி போங்க....!! :))))
அமரபாரதி - கருத்துக்களுக்கு நன்றி :)
//என் வாழ்க்கையில் நான் சந்திக்க கூடாது என்று நினைக்கும் மனிதர் நீங்கள் மட்டுமே இதுவரை. அதை தயவு செய்து மனதில் நிறுத்துங்கள்.//
The feeling is mutual, I am very happy to say, that too seing your record in Poli episode as aptly pointed out by Senthazal Ravi at that time.
உங்களுக்கு இரண்டாம் பின்னூட்டம் இட்டதன் காரணமே நீங்கள் ஜோதிபாரதியிடம் என்னை பற்றி சொன்ன கருத்துகளுக்குத்தான். நான் கேட்டதற்கு பதில் வெறும் சமாளிப்பாகத்தான் உள்ளது.
கிளாஸ் லீடர் விஷயத்தில் இப்போதுதான் யோசித்து மீதி கண்டிஷன்களை சொல்கிறீர்கள். இருக்கட்டும், அதிலும் என்ன பிரச்சினை இருக்க முடியும்? முதல்/இரண்டாம் ரேங்கில் இல்லாமல் பார்த்து கொண்டிருக்க வேண்டியதுதானே.
பை தி வே மகாலட்சுமியின் பெற்றோர்கள் அவளுக்கு கெடுதிதான் செய்துள்ளனர். அப்பெண்ணுக்கு பொறுப்புகளை சமாளிக்கும் அனுபவங்கள் இல்லாமல் போனது அவளுக்குத்தான் நஷ்டம். கண்டிப்பாக அந்த அனுபவங்கள் இப்போதும் உங்கள் அலுவலக வாழ்வில் ஒரு விதத்தில் உதவியாகத்தான் இப்போதும் இருந்திருக்கும்.
ஓக்கே, டென்ஷன் ஆகாதீர்கள், இனிமேல் உங்களுக்கு என்னிடம் இருந்து பின்னூட்டங்கள் வராது.
டோண்டு ராகவன்
//The feeling is mutual, I am very happy to say, that too seing your record in Poli episode as aptly pointed out by Senthazal Ravi at that time.//
இது தான் உங்கள் புத்தி என்பது ராகவன் சார், எப்படி பிரச்சனையை திசை திருப்புகிறீர்கள் பார்த்தீர்களா, போலி பிரச்சனையை எடுத்தால் நான் பேசமுடியாது என்று நினைத்தீர்களா? என்னை பற்றி போலியுடன் தொடர்பு படுத்தி பேசியவர்களை அத்தனை பேருக்கும் எதிராக என்னாலும் தேவையான ஆக்ஷன் எடுத்து இருக்க முடியும். உங்களை போன்று தேவையில்லாமல் உணர்ச்சிவசப்பட்டு என்னை நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை. யார் மனதையும் அவசரப்பட்டு கஷ்டப்படுத்த விரும்பவில்லை.
ஏன் ரவியிடம் நான் சொல்லிய ரெக்கார்ட் எதுவும் உங்களிடம் இல்லையோ..
எழுதப்பட்டது சாதியை பற்றிய பதிவு. போலியை பற்றிய பதிவு இல்லை. பேச்சைமாற்றி ரொம்ப நல்லவராகவும் மிக பெரிய புத்திசாலியாகவும் காட்டிக்கொள்ளாதீர்.
//ஓக்கே, டென்ஷன் ஆகாதீர்கள், இனிமேல் உங்களுக்கு என்னிடம் இருந்து பின்னூட்டங்கள் வராது.//
ஆஹா யார் டென்ஷன் ஆனா.. நீங்களா நானா?
இந்த மாதிரி பதிவுகள் போட்டால் மட்டும் டென்ஷன் ஆகி ஓடி வருவது நீங்கள் தானே?
வயதான காலத்தில் இப்படி சரிக்கு சரியாக பேசிக்கொண்டு இருக்காமல் பொறுமையாகவும், நிதானமாகவும், தேவையானவற்றை மட்டுமெ பேசியும் பழகுங்கள் உங்கள் உடம்புக்கு அது தான் நல்லது.
சரிங்களா? :)))))))
SABAASH ARUMAIYANA PATHIVU,
இப்பொழுது நகரங்களில் இந்த நிலை குறைந்துவிட்டது என்று நினைக்கின்றென்... ஏனெனில் நான் இந்த மாறி ஒரு நிலைமையை இதுவரை சந்திதது இல்லை..
ஆனால் ஒரு விஷயம்.. இதை நான் இல்லை என்று சொல்ல மாட்டேன்.. நீங்கள் சொல்லும் FC, BC, SC and ST எல்லாம் ஏன் உருவாக்கபட்டது என தெரியுமா?? சமூகத்தில் அனைவரும் சம அந்தஸ்த்தில் வர வேண்டும் என்பதற்காக.... ஆனால் நமது அரசியல்வாதிகள் அதை வெற்றிகரமாக தடுத்து காலா காலத்துக்கும் இட ஓதுக்கீடு இருக்குமாறு செய்துவிட்டனர்... மனிதர்கள் அனைவரும் ஒரே குலத்தவரே என்ற எண்ணம் வரும் பொழுது மட்டுமே நாம் கனவு காணும் சமமான சமூகம் இங்கு உண்டாகும் :)
//
"அசைவ உணவை சாப்பிடும் போது, அய்யோ.. கடவுளே எப்படித்தான் இந்த கருமத்தை எல்லாம் சாப்பிடுகிறீர்களோ.. ?? ச்சேக்..!! வாந்தி வருது " என்று நாம் ஒரு உணவை சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போதே சிரித்துக்கொண்டே சொல்லும் கேவலமான பிறவிகள். நானும் திருப்பி அவர்கள் நிலைக்கு இறங்கி, நீ திங்கும் கொழ கொழ... தயிருஞ்சாதத்தையும், ஊறுகாயை யும் பார்த்தால் எனக்கும் கூட தான் வாந்தி வருகிறது, எப்படித்தான் இதையே தினமும் தின்னு..சூடு சுருணை என்று எதுவுமே இல்லாமல் இருக்கியோ."ன்னு சிரிக்காமல் சொல்லிவிடுவது உண்டு.
//
சரியான சாட்டையடி.
இங்குள்ளவர்களை விட, வடநாட்டில், இந்த ஜாதித் திமிர் ரொம்பவே அதிகமுண்டு.
என்னிடம் "அசைவ உணவு சாப்பிடும் நீங்கள் நடமாடும் கல்லறைகள்" என்றார் xyz மிஸ்ரா. "அப்போ நீங்கள் எல்லாம் இலை, தழை தின்று வாழும் கால்நடைகளா?" என்றேன் பதிலடியாக.
@ Joe
கருத்துக்களுக்கு நன்றி..
மதிப்புக்குரிய கவிதா அவர்களுக்கு!
வணக்கம்.
தமிழன் மாத்திரமல்ல எல்லோரிலுமே இந்த சாதித் தடிப்பு இருக்கிறது!
இவ்வளவு அக்கிரமங்களுக்குப் பிறகும் ஈழத்திலும் இது முற்றாக ஒழிந்தபாடில்லை.
நான் - இங்கிருக்கும் நாடுகளில் எந்த வேற்றுமையும் யாரும் பார்ப்பது கிடையாது. எல்லா நாட்டினருடனும் நாம் சமமாகவே பழகுகிறோம்.
முக்கியமான ஒரு விடயம் சாதி பார்ப்பவர்கள் அனேகமாக பிறருடன் பழகத் தெரியாதவர்கள் - கிணற்றுத் தவளைகள் என்பதுதான் எனது - கருத்து. மனிதம் சாதியையோ - மொழியையோ - இனத்தையோ - சமயத்தையோ சார்ந்தது அல்ல!
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் என்று மூவாயிரம் தமிழ் பாடிய திருமூலர் செப்புகிறார். சாதி இரண்டொழிய என்று தமிழ்ப்பாடல் சொல்கிறது.
தன்னைப் போலச் சகலமும் ஓம்புக
விண்ணைப் போல வியாபகமாகுக
கண்ணைப் போலக் காக்க அறத்தை
என்று யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகளும் சொல்லியிருக்கிறார்!யாதும் ஊரே யாவரும் கேளீர்!
நண்பர் சுரேஷ்குமாரின் பின்னூட்டங்களை இப்போதுதான் பார்த்தேன். இவரும் ஒரு ‘அம்பி’ என்பது தெரியாமல் இவரோடு போய் தேர்தல்நேரத்தில் வாதிட்ட என் முட்டாள்தனத்தை பாட்டா செருப்பில் தான் அடித்துக் கொள்ள வேண்டும் :-(
@ தங்க முகுந்தன் - வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி
@ லக்கி - அவர் அம்பி யா என தெரியவில்லை.. .ஆனால் விஷயத்தை பற்றிய தெளிவில்லாமல் பின்னூட்டம் இடுகிறார்.
@ கனகு - நன்றிப்பா..
@ தேவேந்திர பூபதி - நன்றிங்க..
//@ லக்கி - அவர் அம்பி யா என தெரியவில்லை..//
முன்பு ஹரிஹரன் என்ற அம்பி தீண்டாமைக்கு கட்டிய அதே சப்பைக்கட்டு என்பதால் அம்பி என்றே நினைக்கத் தோன்றுகிறது.
பிறப்பால் எவரும் உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ இல்லை கவி, அவர் அவர்களுக்கு உள்ள உரிமையையும், மரியாதையையும் கொடுத்துவிட்டால் அதுவே காயம்பட்டோர் மனதிற்க்கு மருந்து தடவியது போல், தங்களின் உயர்ந்த உள்ளத்திர்க்கு பாராட்டுக்கள். நல்ல பதிவு (தில்லுதான் உங்களுக்கு) பாராட்டுக்கள்.
@ ஷஃபி - பாராட்டுக்களுக்கு நன்றி...:)
Post a Comment