என்னை சுற்றி உள்ள நண்பர்கள் அனைவரும் எனக்கு ஒரு வரப்பிரசாதம். விலகி விலகி தவிர்த்து விட்டு போகும் என் இயல்பை பொருட்படுத்தாமல் என் மேல் அன்பு செலுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இப்படி எத்தனை பேருக்கு நண்பர்கள் கிடைப்பார்கள். ஒரு நாள் இரு நாள் இல்லை வருடங்களாக, அவர்களின் அக்கறையும், அன்பும் என்னை வியப்படையத்தான் செய்கிறது, அப்படி இருப்பவர்களிடம் கூட இன்னமும் நான் தொடர்ந்து அவர்கள் சொல்லுவதை கேட்டு, நல்ல முறையில் நடந்துக்கொள்வதில்லை என்பது வருத்தமாக த்தான் இருக்கிறது. என்ன செய்வது, யாரிடமும் ஒட்டாத தள்ளி தள்ளி போகும் என் இயல்பை என்னால் பல காரணங்களுக்காக மாற்றிக்கொள்ள முடியவில்லை.இந்த நண்பர்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை.
இப்படி வருடங்களாக என் மீது அன்பும், அக்கறையும் உள்ள ஒரு நண்பர் செயகுமார். அவரின் பெயரை குறிப்பிட்டு எழுதுவதை அவர் விரும்புவாரா என்று தெரியவில்லை, ஆனால் குறிப்பிட விரும்புகிறேன். என் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறார், பின்னூட்டம் இடுவதில்லை. ஏனென்று எனக்கு தெரியவில்லை, நானும் கேட்கவில்லை. எனக்கு தேவையான மாரல் சப்போர்ட்’ஐ எப்போதும் நான் கேட்காமலேயே ஈமெயிலில் அனுப்பிக்கொண்டே இருப்பவர், நான் அவற்றை படிக்கிறேனா இல்லையா என்று கூட அவருக்கு தெரியாது. இவை எல்லாம் பலனை எதிர்பார்க்காத அன்பு. [சிங்கு……இப்ப சொல்லிக்கிறேன்... நீங்க அனுப்புகிற எல்லா ஈமெயிலையும் படிச்சிடுவேன் :)]
தொடர்ந்து முதல் ஆளாக என் பதிவுகளை படிப்பது இவராகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அதில் என் பாடல் பதிவுகளையும் பார்த்து பாடல்களையும் கேட்டு, எனக்கு சில அறிவுரைகளை வழங்கினார். "செய்கின்ற வேலையை சரியாக செய்ய வேண்டும், குரல் நன்றாக இருக்கிறது, நல்ல பாடல்களை நன்றாக பயின்று பாடலாமே ஏன் ஏனோ தானோ என்று பதிவிடுகிறீர்கள்? " என்று சொல்லி, அலைபாயுதே படத்தில் வந்த இந்த பாடலையும் (ஆடியோ), மற்றும் பாடல் வரிகளையும் ஈமெயிலில் அனுப்பி இருந்தார்.
ஆனால் அந்த ஈமெயில் கத்திமுனையில் மிரட்டி அனுப்பப்பட்டிருந்தது. ஒழுங்காக, நன்று பயின்று , தரமாக, சரியாக ரிக்கார்ட் செய்து பதிவிட விருப்பமிருந்தால் மட்டுமே இந்த பாடலை நீங்கள் பாடவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார், எனோ தானோ என்று பாடி நல்ல பாடலை கெடுத்து விடாதீர்கள் என்றும் சொல்லி இருந்தார்.
முதல் முறை கேட்டவுடனேயே அவருக்கு நான் அனுப்பிய பதில், ரொம்ப கஷ்டம் பாஸ், நிறைய பிராக்டீஸ் செய்யனும், ரெக்கார்ட் செய்து உங்களுக்கு அனுப்புகிறேன் நீங்கள் சரி என்றால் பதிவிடுகிறேன் என்று சொல்லி இருந்தேன். ரிக்கார்ட் செய்து அவருக்கு அனுப்பி, "அவர் தயவுசெய்து பதிவிடாதீர்கள்," என்று சொன்ன பிறகு வேண்டுமென்றே பதிவிடுகிறேன்.. சிங்கு எஸ்கியூஸூமீ…. இதை பதிவிட்டே ஆகனும்னு முடிவு செய்துட்டேன்.. :) (எப்பவும் போலவே சொன்ன பேச்சு கேட்கற பழக்கம் இல்லல..)
இதோ பாடல்…
குரல்: சுவர்ணலதா
வரிகள்: வைரமுத்து
படம்: அலைபாயுதே
இசை: ஏ. ஆர். ரஹ்மான்
evno3.mp3 |
அணில் குட்டி அனிதா : சிங்கண்ணே உங்களுக்கு இது அவசியமா??? அம்மணி பாட்டுப்பாடி கொல்றது தாங்காம எத்தனையோ பேரு எழுதறதை விட்டுட்டு ஓடிட்டாங்க.. ..ம்ம் எனக்கேன்ன வரவங்க எல்லாம் உங்களைத்தான் கும்ம போறாங்க... வாங்கிக்கோங்க..
பீட்டர் தாத்ஸ் :“Music speaks what cannot be expressed, soothes the mind and gives it rest, heals the heart and makes it whole, flows from heaven to the soul.
17 - பார்வையிட்டவர்கள்:
நல்லா பாடிருக்கிங்க, ஆனா சின்னதா ஒரு feel மிஸ் ஆன feeling.
ரொம்ப feel ஆகிறேனோ!! இது தான் feelings of india :-)
அடா... !! அடா...!! அடா...!!! கலக்கிபோட்டீங்கோ அம்முனி....!!!!
நெம்ப அருமையான வாய்ஸ்ங்கோ உங்குளுக்கு.....!!!!
ஆனா மெய்யெழுத்துக்கள் எல்லா எடத்துலயும் ஆப்சண்ட் ஆகுது... அத மாட்டும் சரி செஞ்சுபோடுங் அம்முனி.... அப்பறம் பாருங்கோ.....
உங்குளுக்கு " சின்ன குயில் கவிதா " ன்னு பட்டம் குடுத்துபோடலாமுங் ...!!!!!
சோக பாட்டுக்கு மேலும் சொகத்த புகுத்துற மாதிரி ஸ்லோவா பாடாதீங்கோ..
சோகப் பாடுனாளுமும் கொஞ்சம் உற்ச்சாகம் இருந்தா.... நல்லாருக்கும்.....!!!!
என்ற வாழ்த்துக்கள்....!!!!!
வாழ்க வளமுடன்....!!!!
நல்லாயிருக்கு...
நம்பர் 1
சிங்கு அவர்களின் முகவரி வேண்டும்;)
நம்பர் 2
\\இந்த நண்பர்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை.
\\
தெரிஞ்சாலும்.........நிருத்தவா போறிங்க!! ;)
நம்பர் 3
\\அம்மணி பாட்டுப்பாடி கொல்றது தாங்காம எத்தனையோ பேரு எழுதறதை விட்டுட்டு ஓடிட்டாங்க\\
நன்றி அணில் ;-))
நம்பர் 4
வழக்கம் போல என்னால இந்த பாட்டை கேட்க முடியல ;)
//
விலகி விலகி தவிர்த்து விட்டு போகும் என் இயல்பை பொருட்படுத்தாமல்
//
ஆஹா அவங்களா நீங்க..?
ரைட்டு..
//
யாரிடமும் ஒட்டாத தள்ளி தள்ளி போகும் என் இயல்பை
//
"பாபா"ல தலைவர் சொல்லிருக்கறதாலயோ..?
கவிதாக்கா இங்க வாய்ஸ் பாக்ஸ் இல்லாததால உங்க பாட்டை கேட்க முடியாம போயிடுச்சு:((
அவர் பெயரை சொல்ல சொல்ல மாட்டேன்னு இத்தனை முறை சொல்லிட்டீங்க?
உங்க வலைப்பூ கொஞ்ச நாள் accessible-ஆ இல்லாம இருந்ததே, ஏன்???
indha laptop la volume option enga irukkune theriyala..
veet la poi kaetutu solren :) epdi irukku nu
@ லவ்டேல்மேடி - நன்றி.ம்ம்..நீங்க சொன்னதை அடுத்தமுறை சரியா செய்ய பழகறேன்..
/உங்குளுக்கு " சின்ன குயில் கவிதா " ன்னு பட்டம் குடுத்துபோடலாமுங் ...!!!!!//
நன்றி ங்க...
//சோக பாட்டுக்கு மேலும் சொகத்த புகுத்துற மாதிரி ஸ்லோவா பாடாதீங்கோ..
சோகப் பாடுனாளுமும் கொஞ்சம் உற்ச்சாகம் இருந்தா.... நல்லாருக்கும்.....!!!!
என்ற வாழ்த்துக்கள்....!!!!!
வாழ்க வளமுடன்....!!!!//
நன்றி'ங்க..
***********************************
@சாரதி - நன்றி..
@Choco :
நம்பர் 1 - சிங்கு முகவரி மெயில்ல அனுப்பி வைக்கிறேன்..
நம்பர் 2 - நிறுத்திட்டாலும்...!!
நம்பர் 3 - ம்ம்..அணிலை கவனிக்கிறேன்..
நம்பர் 4 - வழக்கம் போல மெயில் ல அனுப்பி வைக்கிறேன்..
***************************************
@ சுரேஷ்குமார் - ம்ம் அவங்களே தான்.!! தலைவர் ஐ ரொம்ப பிடிக்கும் ஆனா அதுக்காக அவரோட படத்தின் வசங்களை எல்லாம் ரொம்பவும் நினைவு வைத்துக்கொள்வது இல்லப்பா..
***************************************
@ ரீனா - முடிஞ்சா மெயில் ல அனுப்பறேன் கேளுங்கப்பா
எவர் பெயரை??
டெம்லெட் சேன்ஜ் செய்தேன்.. செமத்தியா சொதப்பிடுச்சு, திருப்பி பழைய டெம்லெட் லோட் செய்யும் போதும் சொதப்பல்.. அதான்.. க்ளோஸ் ஆக்கி வைத்து இருந்தேன்...
Mulz Thanks da
சிங்.(Sing !?) செயகுமாரின் அடுத்த வருகைக்காக கொலைவெறியுடன் காத்திருக்கிறேன்!
@ ராஜ், உங்க பின்னூட்டம் விட்டு போச்சி இப்பத்தான் அப்ரூவ் செய்தேன்..
இருக்கிற ஃபீல் போதும் பாஸ், இதுக்கே தொண்டை கிழிஞ்சி போச்சி... :)
--------------------------------------
@ கனகு, கேளுங்க கேளுங்க.. !
--------------------------------------
@ சிபி... சிங்குக்கு தானே காத்திருங்கள்... எப்படியும் அவரை இப்படி எல்லாம் மாட்டிவிடனும் னு ரொம்ப நாள் ஆசை... ஆசையை நிறைவேற்றியாச்சி... :)
konjam sogamana paata romba sogamaa paaditeenga :(
@ கனகு - சோகம் இல்லைன்னு சொல்லிட்டீங்கன்னா என்ன செய்யறது அதான்.. :)
Post a Comment