கேப்பங்கஞ்சி'யில் இன்று தென் சென்னை வேட்பாளர் சரத்பாபு'விடம் தேர்தலில் நிற்பதைப் பற்றியும், அவரின் தேர்தல் அறிக்கை பற்றியும் கேள்விகள் கேட்க வேண்டிய சூழ்நிலையை நம் சக பதிவர்கள் ஏற்படுத்திவிட்டனர். அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று அவரையே கேட்டுவிடலாம் என்று நினைத்து இமெயிலில் தொடர்பு கொண்டு அவரின் அனுமதி கோரி இருந்தேன். இத்தனை வேலைகளுக்கு நடுவில், அவரும் தன்னை தொலைபேசியில் அழைத்து பதிலை பெற்றுக்கொள்ளுமாறு பதில் அனுப்பி இருந்தார்..
இதில் குறிப்பிட வேண்டியது என்னுடைய கேள்விகள் எதற்குமே அவர் முன்னேற்பாட்டோடு இல்லை அல்லது முன் கூட்டி யோசித்து வைத்தும் பதில் சொல்லவில்லை. மிக எளிமையாகவும் தயக்கமே சிறிதும் இன்றி மனதில் உள்ளதை நிதானமாக உணர்ச்சிவசப்படாமல் சொன்னார். தேர்தல் அறிக்கை பற்றி கேட்ட கேள்விகளுக்கு மட்டும் சற்றே யோசித்து பதில் சொன்னதாக உணர்ந்தேன். இதோ நம்மிடையே தென் சென்னை வேட்பாளர் சரத்பாபு.
கவிதா : ஹல்லோ சரத், கவிதா பேசறேன். எப்படி இருக்கீங்க? அம்மா எப்படி இருக்காங்க...?! நீங்கள் இப்போது என்னுடன் பேச இயலுமா?
கவிதா?!! ...................?!ம்ம்ம்ம் !! ஓ... கவிதா சொல்லுங்க.. ! நான் நல்லா இருக்கேன்.. அம்மா நல்லா இருக்காங்க. நீங்க எப்படி இருக்கீங்க?. தாராளமாக பேசலாம், சொல்லுங்க...
கவிதா:- என்னுடைய கேள்விகளை ஆரம்பிக்கிறேன் சரத், அரசியலில் எந்த முன் அனுபவம் இன்றி, இது வரையில் எந்த ஒரு சிறிய பதவியும் வகுத்திராத நீங்கள் எப்படி இந்த தேர்தலில் போட்டி இடுகிறீர்கள்?, ஏழ்மையிலிருந்து வந்தவர், இளைஞர், படித்தவர் என்ற தகுதியை தவிர்த்து அரசியலுக்கு வர வேறு என்ன தகுதி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்.
கவிதா, முதலில் நாம் மக்களின் Basic Concept, Mindset ஐ மாத்தனும். அரசியல் பின்னணி இல்லாமல் ஏன் ஒரு இளைஞர் தேர்தலில் நிற்க கூடாதுன்னு நாம் யோசிக்கவேயில்லை. அதோடு, இந்தியாவில் தேர்தலில் நிற்கும் முதல் இளைஞன் நான் இல்லை. இதுவரையில் எத்தனையோ பேர் நின்றிருக்கிறார்கள். எடுத்துக்காட்டு, ராஜிவ் காந்தி, ராகுல் காந்தி. சச்சின் பைலட், ஜோதி ஆதித்யா சிந்தியா, பிரியா தத், மு.க.ஸ்டாலின் போன்றோர். ஆனால் அவர்களுக்கு எல்லாம் அரசியல் பின்னணி இருந்தது, செல்வாக்கு, குடும்ப பாரம்பரியம், பணம் இருந்தது, அதனால் அவர்களை நாம் இப்படி கேள்விக்கேட்டு கொண்டு இருக்கவில்லை.
அரசியலை விட மோசமான பல விஷயங்களை நான் என் வாழ்க்கையில் கடந்து வந்து இருக்கிறேன். அதனால் அரசியல் எனக்கு பெரிதல்லவே, அரசியலில் சாதிக்க முடியும், எதையும் சமாளிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கை இருக்கிறது, அதற்கான முதிர்ச்சியை என் அனுபவம் எனக்கு கொடுத்துள்ளது.
கவிதா: பசியில்லாத இந்தியா உங்கள் கனவு, தேவைப்படுபவர்களுக்கு உதவ நினைக்கிறீர்கள், அதற்கு அரசியல் அவசியமா? ஏன் தனிப்பட்ட முறையில், சில பிரபலங்கள் செய்து வருகிறார்கள் அப்படி செய்யலாம் இல்லையா? அரசியலை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?
அரசியலில் இருந்தால் மட்டுமே நல்லவிதமான மாற்றங்களை விரைவில், எளிதில் செய்ய முடியும். தனிமனிதனாக என்னால் எவ்வளவு உதவ முடியும் என்று நினைக்கிறீர்கள்? ஒரு... 1 கோடி ரூபாய்? அதுவே நான் அரசியலில் இருந்தால் மக்களுக்கு அதிகப்படியாக உதவ முடியும். உதாரணமாக 5 வருடங்களில் குறைந்தபட்சம் ஒரு 500 கோடி ரூபாய் மதிப்புள்ள உதவிகளை, நலத்திட்டங்களை அரசின் உதவியோடு என்னால் செய்யமுடியும். தனியாக உதவி செய்வதற்கும் அரசியலில் இருந்து உதவுவதற்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்தீர்களா? எவ்வளவு? 500 மடங்கு இல்லையா? இவ்வளவு தனியாக செய்தால் முடியுமா.? நீங்கள் குறிப்பிடும் பிரபலங்கள் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்ற காரணத்தை நீங்கள் எனக்கு சொல்லமுடியுமா? அரசியல் அவ்வளவு எளிதல்ல என்பது அவர்களுக்கு தெரியும் இல்லையா?!
கவிதா: அப்படியென்றால் ஏன் சுயேட்சையாக நிற்கிறீர்கள்? ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து இருக்கலாமே?
கவிதா..:) கவிதா.. :) ! உங்களின் முதல் கேள்விக்கு வாருங்கள், அரசியல் தலைவர்கள் என்னுடைய தகுதிக்கு நாடாளுமன்ற தேர்தலில் நிற்க வாய்ப்பளிக்க சாத்தியக்கூறுகள் இல்லவே இல்லை. :) என்னுடைய qualification எல்லாம் அவர்களின் எதிர்பார்ப்புக்கு எம்மாத்திரம்? அரசியல் கட்சியில் இறங்க என்ன மாதிரியான தகுதிகள், பணம், குடும்ப பின்னணி வேண்டும் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா? எனக்கு அப்படி ஒன்றும் இல்லையே. :)
கவிதா: இதுவரை மக்களுக்கு நீங்கள் தனிப்பட்ட முறையில் ஏதாவது செய்ததுண்டா?
நிறைய உண்டு இந்தியா முழுக்கவும் இது என்னுடைய மொத்த நேரத்தில் 400 நாட்கள் ஏழைக்குழந்தைகளுடன் செலவிட்டு இருக்கிறேன். அவர்களுக்கு கல்வி மற்றும் உழைப்பை பற்றிய விழிப்புணர்வு, விளக்கங்கள், ஊக்கங்கள் (Awareness) கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன். 850 நாட்கள் இளைஞர்கள் தொழில் தொடங்க தேவையான அறிவுரை, தொழில் சார்ந்த அறிவு, மனதளவில் அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து இதுவரை 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் என்னால் தொழில் அதிபர்களாக ஆகியிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திருக்கிறார்கள். 3000 மேற்பட்ட மாணவ மாணவியருக்கு அவர்களின் career பற்றிய விழுப்புணர்வையும், ஊக்கத்தையும், ஆதரவையும் தந்திருக்கிறேன்.
கவிதா: உங்களின் படிப்புக்காக இந்திய அரசு எத்தனை செலவு செய்து இருக்கிறது, துறை சார்ந்த தொழில் செய்யாமல் ஏன் இப்படி ஹோட்டல் தொழில் செய்கிறீர்கள்? உங்கள் படிப்பிற்காக இந்திய அரசு செலவிட்டது எல்லாம் வீணாகி அல்லவா விட்டது?
:) ஓ என்னால் இந்திய அரசின் பணம் வீணாகிவிட்டதா? (சிரிக்கிறார்) சரி எனக்கு நீங்கள் ஒன்று சொல்லுங்கள், துறை சார்ந்த தொழில் தொடங்க முதலீடு தேவை, ஒரு மென்பொருள் கம்பெனி தொடங்க குறைந்தபட்சம் 5 லட்சங்களாவது தேவை இல்லையா?, ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியரின் சம்பளம் என்னவென்பது உங்களுக்கு தெரிந்து இருக்கும். நான் குறைந்த முதலீட்டில் வெறும் 2000 ரூபாயை கொண்டு தொழில் தொடங்கினேன். என்னுடைய முதல் ஆர்டர் 75 டீ, 25 காப்பி. லட்சங்களில் முதலீடு செய்ய இயலவில்லை, அப்படியே முதலீடு செய்தாலும் 100% சக்ஸஸ் ஆகும் என்று சொல்லமுடியாது. Food Industry அப்படி இல்லை. அதனால் என்னால் முடிந்ததை கொண்டும், சாத்தியக் கூறுகளை ஆராய்ந்தும் தொழில் தொடங்கினேன்.
கவிதா மேலும் இப்போது எனக்கு 29 வயது தான் ஆகிறது, என் வாழ்நாள் 60 வயது என்று வைத்துக் கொண்டாலும் எத்தனை வருடங்கள் இன்னும் இருக்கின்றன. இது மட்டுமே என்னுடைய தொழில் இல்லை, என் துறை சார்ந்த மட்டும் இல்லாது குறைந்தபட்சம் 10 இண்டஸ்டீரிஸ் தொடங்கி அதில் என் முத்திரை பதிப்பேன். இன்னும் காலம் இருக்கிறது அல்லவா? கண்டிப்பாக இந்திய அரசாங்கம் எனக்கு செலவிட்ட பணத்தை வீணாக்கமாட்டேன். :)
கவிதா: நீங்கள் அரசியலுக்கு வர நினைப்பது, 1. உங்கள் வியாபாரத்திற்கு விளம்பரம் தேடிக்கொள்ளவும், 2. தேர்தல் நிதி என்று இது வரையில் நீங்கள் சம்பாதிருக்கும் கறுப்புப் பணத்தை எல்லாம் வெளுப்பாக்கிக் கொள்ளவும். - உங்களின் விளக்கம்?!
(வாய்விட்டு சிரிக்கிறார்) எப்படிங்க இப்படி எல்லாம் யோசிச்சி கேள்வி கேட்கறீங்க? விளம்பரமா? யூத் ஜகான் கொடுக்கப்பட்ட போதே எனக்கு தேவையான விளம்பரம் கிடைத்துவிட்டதே? அதையும் தாண்டி என் வியாபரத்திற்கு விளம்பரம் தேவையா?
அடுத்து நிஜமாகவே உங்களின் இரண்டாவது கேள்வியை பற்றி எனக்கு ஒன்றும் தெரியலைங்க. :). நான் சம்பாதிக்கவேண்டும் என்றால் சொன்னேனே 400 நாட்கள், 850 நாட்கள் என்று அந்த நேரங்களை எல்லாம் என் வியாபாரத்தில் மட்டுமே செலவிட்டு இருப்பேன் இல்லையா?. கண் எதிரில் லட்சங்கள் சம்பளத்தில் எனக்கு வேலை கிடைத்த போது அதை புறம் தள்ளிவிட்டு, தொழில் தொடங்கி அதில் என்னால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க எண்ணியவன், கையில் ஒரு 200 ரூபாய் கூட இல்லாமல் மும்பை ரயில் நிலையத்தில் படுத்துகிடந்து இருக்கிறேன். என் அனுபவங்கள் எனக்கு நல்ல விதமான பாடங்களை மட்டுமே கற்று தந்து இருக்கிறது. நான் அதை தவறாக உபயோகிக்க நினைக்கவில்லை. பட்ட அடிமட்ட கஷ்டங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை தான் இருந்தாலும் உங்களின் கேள்வி எனக்கு புரியலைங்க.. அப்படியெல்லாம் செய்ய எனக்கு அவசியம் ஏற்படாதுங்க.
உங்கள் தேர்தல் அறிக்கையிலிருந்து சில கேள்விகள்
கவிதா : உங்களின் தேர்தல் அறிக்கை முறையே 1, 2, 3, 6 - இவற்றிக்கு நீங்கள் இதுவரையில் ஏதாவது திட்டம் தீட்டி வைத்து இருக்கிறீர்களா ? அப்படி இருப்பின் பகிர்ந்து கொள்ள முடியுமா?
திட்டம் என்றால், முதலில் நான் நேரடியாக மக்களை தனித்தனியாக சந்தித்து அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வை தருவது, அது யூத் பூத்' கள் மூலமாக நடைபெறும். 100 இளைஞர்கள் முதல் கட்டமாக நேரடியாக கேம்ப் அமைத்து இதில் இறங்குவார்கள், ஒவ்வொரு இளைஞரும் குறைந்தபட்சம் 100 பேருக்காவது வேலைவாய்ப்பு அளிக்க தேவையாக வசதிகள், தொழில் பற்றிய ஆலோசனை வழங்கப்படும். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக திட்டத்தை விரிவு படுத்துவேன்.
கவிதா:- மகளிர் மேம்பாட்டுக்கென அனைத்து இல்லத்தரசிகளுக்கும் வங்கிக் கணக்கு துவக்கப்படும். வீட்டில் உள்ள பெண்கள் வருவாய் ஈட்டும் வகையில் நல்ல வாய்ப்புகளும் திட்டங்களும் அறிமுகப்படுத்துவேன். இந்தத் திட்டத்தில் நான் நேரடியாகவே ஈடுபடுவேன். - எப்படிப்பட்ட வேலைவாய்ப்புகள் வழங்கப்படும், இதற்கான உங்களின் திட்டத்தின் தொகுப்பு ஏதாவது இருந்தால் விளக்கமுடியுமா?
கவிதா, முதலில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று பிரித்து, படிக்காத முன்னரே சிறுதொழில் செய்துவரும், அதாவது சின்ன சின்ன தொழில் பூ கட்டுதல், காய்கறி வியாபாரம், போன்றவற்றின் கொள்முதலை ஒவ்வொரு ஏரியாவிலும் மையப்படுத்துவேன். ஒரு பூ கட்டும் பெண் செலவு செய்து கோயம்பேடு சென்று வாங்கிவரும் செலவை குறைப்பேன். 50 பேருக்கு ஒருவர் சென்று வாங்கிவந்தால் போதுமே. எவ்வளவு பணம் மிச்சமாகும். இது போல் ஒவ்வொரு சிறுதொழிலிலும் எளிதான முறைகளை செயற்படுத்த தேவையான அறிவுரையை வழங்குவேன். படித்தவர்களுக்கு அவர்களுக்கு ஏற்றது போன்ற வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பேன். அதற்கான முழு திட்டத்தையும் இன்னும் முடிக்கவில்லை.
கவிதா: வேளச்சேரியில் வெள்ளத் தேக்க பிரச்னை, பெருங்குடியில் குப்பை மேடுகள் மிகுதியாவது போன்ற அனைத்து பகுதியிலுள்ள பிரச்னைகளுக்கும் தேர்வு காணப்படும். - சரத் இதை படித்தவுடன் எனக்கு சிரிப்பு தான் வந்தது, முடியும் என்பதை ஆராய்ந்து கொடுக்கப்பட்ட அறிக்கையா? வேளச்சேரி வெள்ளபிரச்சனைக்கு இதுவரை அரசு செய்துள்ள திட்டம் தோல்வி, அகலமான ரோடுகள் குறுகிவிட்டன. அதுதான் மிச்சம். நீங்கள் இந்த கேள்விக்கு டெக்னிகலாக எப்படி சாத்தியம் என்று பதில் சொல்ல முடியுமா?
கவிதா, நான் ரொம்பவெல்லாம் ஆராயவில்லை. ஆனால் முடியும். துறை சார்ந்த வல்லுநர்களின் உதவியோடு ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்ந்தெடுத்து அங்கே ஒரு ஏரியை உருவாக்கி, நகரில் நீர் நிற்காமல் அதில் வெள்ளநீரை கொண்டு சேர்க்க முடியும்.
80% குப்பை மக்கும் குப்பையாக இருப்பதால், அதற்கென ஒரு ப்ளான்டை ஏற்படுத்தி குப்பைகளை உரங்களாக மாற்றி, அந்த உரங்களையும் சென்னையிலுள்ள செடிகளுக்கும் மரங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
கவிதா : சரத், மிக்க நன்றி ! உங்களின் பதில்கள் உங்களை ஆதரிக்கும், எதிர்க்கும் அனைவருக்குமே நல்ல விதத்தில் பயன்படும் என்று நம்புகிறேன். :)
மை ப்ளஷர் கவிதா. !!
63 - பார்வையிட்டவர்கள்:
நிதானமான பதில்கள்.
சரத்பாவு வெற்றி பெற வாழ்த்துக்கள் ;)
@ Choco !! நன்றி. .நானும் அவரிடம் பேசும் போது அப்படித்தான் உணர்ந்தேன்.. மிகவும் நிதானமாக அதே சமயம் உதாரணங்களுடன்.. (அடிக்கடி உங்களுக்கு புரியுதா கவிதா ன்னு கேட்டுக்கிட்டாரு) பதில் சொன்னார்.
ரெக்கார்ட் செய்து இருந்தால் இன்னும் விவரமாகவே இருந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.. செய்யாமல் விட்டுவிட்டேன்.. :(
ஒரு திறமையான ஆளு.
விசயகாந்த் மாதிரி திட்டம் இருக்கு, ஆனா என்னான்னு சொல்லமாட்டேன்னு எல்லாம் டபாய்க்காம ரொம்ப எளிதா பேசுறாரு. இவரு மாதிரி ஆளுங்களுக்கு ஒரு வாய்ப்பு கட்டாயம் கிடைக்கணும்.
ஒரு திறமையான ஆளு.
விசயகாந்த் மாதிரி திட்டம் இருக்கு, ஆனா என்னான்னு சொல்லமாட்டேன்னு எல்லாம் டபாய்க்காம ரொம்ப எளிதா பேசுறாரு. இவரு மாதிரி ஆளுங்களுக்கு ஒரு வாய்ப்பு கட்டாயம் கிடைக்கணும்.//
@ ஜோசப் , ஆமாம், அதுவும் என்னை போன்றவர்கள் கட்சி சார்ந்தவர்களை மிக சாதாரணமாக இப்படி தொடர்பு கொண்டு மிக எளிதாக கேள்விகளை கேட்டுவிட முடியுமா?
அதுவும் அந்த வேளச்சேரி பற்றிய கேள்விக்கு அவரிடம் நான் சொன்னது.. சரத் Comedy யா இருக்கு உங்க அறிக்கை ன்னு சிரித்தேன். அவரும் கோபப்படாமல் என் உடன் சேர்ந்து சிரித்துவிட்டு, அட கவிதா நீங்க வேளச்சேரியாங்க.. ன்னு கேட்டுவிட்டு, நிதானமாக பதில் சொன்னார்.
தெளிவான பதில்கள்...
வாழ்த்துக்கள் சரத்பாபுவுக்கும், அவரிடம் பதில் வாங்கிய உங்களுக்கும்..
அவர் ஏதாவது அரசியல் கட்சியில் சேர்ந்தார் என்றாலும் , இவர்களெல்லாம் ஏன் சுயேட்சையாக நிற்க வேண்டியதுதானேன்னு சொல்லுவாங்க....
என்னை பொறுத்த வரையில். அவரால் ஜெயிக்க முடிகிறதோ, இல்லையோ.. முயற்சிக்கு மனம் திறந்து பாராட்ட வேண்டும்...
மற்றபடி நமது இளைஞர்கள் ஊழல் அரசியல் வியாதிகளை சார்ந்திராமல் முன்னேற பழகி கொண்டு விட்டனர்..
ஊழல் மலிந்த அரசியல், ஓன்றுக்கும் உதவாத சட்டங்கள், நியாயத்தை விரைவில் வழங்காத நீதிமன்றம் என எல்லா தடுப்புகளும் இருந்தும் இந்தியா இவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறது என்றால்.....அதெல்லாம் கொஞ்சமாவது நமக்கு உதவியிருந்தால்...
அந்த ஆதங்கம் மட்டும்தான் எனக்கு..
பின்னூட்டம் போடுற இடத்தில உங்க பதிவுக்கு லிங்க் கொடுக்கிறீங்களே?
ஏன் இந்த விளம்பரம்? -ன்னு நெனெச்சேன்.
அப்புறமா தான் சரத்பாபு-வை நீங்க நேர்காணல் செஞ்ச விஷயம் தெரிஞ்சது.
வாழ்த்துக்கள்.
தைரியமா நெறைய கேள்விகள் கேட்டுருக்கீங்க.
அவரும் தெளிவா விரிவா பதில் சொல்லிருக்காரு.
இது வரை, இந்த மாதிரி தீர்க்கமான, தெளிவான பதில்களை எந்த அரசியல்வாதியாவது நமக்கு சொல்லி இருக்கிறார்களா?
நல்ல முயற்சி..
வாழ்த்துகள்...
நல்ல கேள்விகள்..நிதானமான பதில்கள்!
மிக நல்ல முயற்சி!
சரத்பாபுவையும், உங்களையும் சொல்கிறேன் :)
@ கண்ணா
//என்னை பொறுத்த வரையில். அவரால் ஜெயிக்க முடிகிறதோ, இல்லையோ.. முயற்சிக்கு மனம் திறந்து பாராட்ட வேண்டும்...
//
ஆமாம், சரத்'தும் இளைஞர்கள் அரசியலுக்கு முன்னுக்கு வரவேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர், நான் வந்திருக்கிறேன் எனக்கு ஆதரவு அளிக்கட்டுமே என்று கூறினார். :))
//பின்னூட்டம் போடுற இடத்தில உங்க பதிவுக்கு லிங்க் கொடுக்கிறீங்களே?
ஏன் இந்த விளம்பரம்? -ன்னு நெனெச்சேன்.//
@ Joe, உங்களின் மெயில் ஐடி'யை நான் சேமித்து வைக்கவில்லை :)) உங்களின் பதிவுக்கு உங்களின் பின்னூட்டத்தை பிடித்து பின்னால் வந்தேன்.. வேறு எப்படி தெரியப்படுத்துவது என்று தெரியவில்லை. இமெயில் ஐடி தெரிந்தவர்களுக்கு இமெயிலில் தான் தெரியப்படித்தி இருக்கிறேன். தவறாக நினைக்கவேண்டாம். :))
@ தீப்பெட்டி - வாழ்த்துக்களுக்கு நன்றி. :)
@ முல்ஸ் - நன்றிப்பா ! :)
@ வெயிலான்... :))
ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றிங்க.. வாழ்த்துக்களுக்கும், தவறுகளை சுட்டிக்காட்டி திருத்தியமைக்கும்.. :))
எப்பத்தான் நான் தமிழை ஒழங்காக கற்றுக்கொண்டு, பதிவிட போறேனோ தெரியல..
உங்களுக்காகவே ஒழுங்காக எழுதனும்னு நினைக்கிறேன்.. பார்க்கலாம். !! :))
அருமையான பேட்டிக்கு நன்றி கவிதா... :)
வாங்க முத்து !! மிக்க நன்றி :))
//கவிதா, முதலில் நாம் மக்களின் Basic Concept, Mindset ஐ மாத்தனும். அரசியல் பின்னணி இல்லாமல் ஏன் ஒரு இளைஞர் தேர்தலில் நிற்க கூடாதுன்னு நாம் யோசிக்கவேயில்லை. //
பதிவை படித்து முடிக்கும் முன்பே கவர்ந்த வரிகள்.
நல்ல முயற்சி, பதில்களும் ஒரளவு ஏற்றுக்கொள்ளத்தக்கவையாகவே இருக்கின்றன.
//லட்சங்களில் முதலீடு செய்ய இயலவில்லை, அப்படியே முதலீடு செய்தாலும் 100% சக்ஸஸ் ஆகும் என்று சொல்லமுடியாது. Food Industry அப்படி இல்லை. அதனால் என்னால் முடிந்ததை கொண்டும், சாத்தியக் கூறுகளை ஆராய்ந்தும் தொழில் தொடங்கினேன். //
பேச்சில் உண்மை தெரிகிறது.
என் கேள்விகளை விட உங்க கேள்வி அருமை ... ஆனா எனக்கு நிங்க கொடுத்த லிங் தப்பு, கண்ணா என்று இன்னொரு நன்பர் கொடுத்த லிங்கலில் வந்தேன்.. அருமை..
நான் ரக்கார்ட் செய்து போடலாம் ஒரு ஆடியோவா என்று நினைத்தேன்
உங்க கேள்விகள் ;) அவரின் பதிலும் அருமை, இதை இன்னு நிறைய நன்பர்களிடம் பகிர்ந்து கொள்ளனும்
இவர் ஒரு 50,000 வாக்குகள் வாங்கினாலும், என்னைப் பொறுத்தவரையில், அது பெரிய வெற்றி!
வாழ்த்துகள்.
கண்டிப்பாக வாழ்த்த வேண்டும். சில பேர் இவரையும் லூசு என்றெல்லாம் விமர்சிப்பதும் மற்ற கட்சிகளுக்கு ஜால்ரா பதிவிடுவதும் .. கேவலம்.
தமிழனுக்கு எதிரியே தேவையில்லை. தமிழனே போதும்.
அங்கே கருணா...
சரத்பாபுவிடம் தன்னம்பிக்கையும்,நம்பிக்கையும் தெரிகிறது.
இந்த மாதிரிப் பேட்டிகள் அவர் தொகுதி மக்களைப் போய்ச் சேருமா என எனக்குத் தெரியவில்லை.அதற்கான நண்பர்கள்,தூரப்பார்வை கொண்ட தேர்தல் உழைப்பாளர்கள் இருக்கிறார்களா என்றும் எனக்குத் தெரியவில்லை.பண பலம் கொண்ட மாற்று வேட்பாளர்களை தோற்கடிக்கும் தேர்தல் வியூகங்களை அமைத்தால் மகிழ்ச்சியே.
(தென் சென்னை மற்ற வேட்பாளர்களை கூறுங்கள்)
கவிதா!நல்லா நல்ல கேள்வி கேட்பீங்க போல தெரியுதே?அடுத்த முதல்வன்(ள்) பேட்டி காண தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
பதிவுக்கு நன்றி.
@ ராஜநடராஜன். :) என்னங்க இதுக்கே ?!! அவரோட பேசியிருந்தால் இன்னும் சந்தோஷப்பட்டு இருப்பீங்க.. நான் முதலில் அறிமுகம் செய்து கொண்டபோது
Hey Sarath, I like to meet you mom get her wishes !! னு சொன்னேன்.. கவிதா ஷ்யூர் வந்து பாருங்கன்னு சொன்னாங்க.. பேசும் போது கூட அவருடைய நேரத்தை பற்றி யோசிக்காமல் எனக்கு எதுவும் பிரச்சனையில்லையே என்றும் கேட்டுக்கொண்டார், 40 நிமிடங்கள் இந்த கேள்வி பதில் இருந்தது, என்னால் முடிந்த அளவு வேகமாக நோட்ஸ் எடுத்து, நிறைய விஷயங்களை மனதில் பதியவைத்து பதிவை எழுதினேன். அவர் இன்னமும் நன்றாக பதில் சொன்னதாகவே எனக்குப்படுகிறது :))
//கவிதா!நல்லா நல்ல கேள்வி கேட்பீங்க போல தெரியுதே?அடுத்த முதல்வன்(ள்) பேட்டி காண தயார்படுத்திக் கொள்ளுங்கள்.//
ஆஹா இது வேறையா? நீங்க வேற வெட்டியோட போஸ்ட் பாருங்க.. சில கேள்விகள் அவரின் பதிவிலிருந்தும், அனானிகளின் பின்னூட்டத்திலிருந்தும் படித்ததை நினைவில் வைத்து கேட்டேன்.
அடுத்து ராதாகிருஷ்ணன் அவர்களின் பதிவு, ப்ரூனோ அவர்களின் கேள்விகள் இவற்றை தொகுத்து கேட்டிருக்கிறேன்..
எல்லாம் ஓசி மங்களம்.. !! :)))))))
//நல்ல முயற்சி, பதில்களும் ஒரளவு ஏற்றுக்கொள்ளத்தக்கவையாகவே இருக்கின்றன.//
வாங்க சந்தோஷ் ரொம்ப நாளைக்கு அப்புறம் வீட்டு பக்கம் வரீங்க.. ! :) மிக்க நன்றி :)
********************
//இவர் ஒரு 50,000 வாக்குகள் வாங்கினாலும், என்னைப் பொறுத்தவரையில், அது பெரிய வெற்றி!//
@ வாசு, ம்ம்.. வெற்றிதான்.. அரசியலிலுக்கு வரவேண்டும் என்று நினைத்து வந்ததே பெரிய விஷயம் :)
@ வண்ணத்துப்பூச்சியார் - மிக்க நன்றி
அடுத்தவர்கள் என்ன செய்கிறார்கள் பேசுகிறார்கள் என்று எப்போதும் நம் நேரத்தை அடுத்தவர்களின் குறை கண்டு பிடிப்பதில் செலவிடுவதை விடுடவும்,
பேச்சை குறைத்து நம்மால் என்ன செய்யமுடியும் என்பதை ஒவ்வொருவரும் யோசித்தால் நிறைய செய்ய முடியும் என்று தோன்றுகிறது.
ரத்பாபுவிடம் தன்னம்பிக்கையும்,நம்பிக்கையும் தெரிகிறது.
இந்த மாதிரிப் பேட்டிகள் அவர் தொகுதி மக்களைப் போய்ச் சேருமா என எனக்குத் தெரியவில்லை.அதற்கான நண்பர்கள்,தூரப்பார்வை கொண்ட தேர்தல் உழைப்பாளர்கள் இருக்கிறார்களா என்றும் எனக்குத் தெரியவில்லை.பண பலம் கொண்ட மாற்று வேட்பாளர்களை தோற்கடிக்கும் தேர்தல் வியூகங்களை அமைத்தால் மகிழ்ச்சியே.
//
ராஜநடராஜன், அவர் அப்படி எல்லாம் வியூகம் அமைப்பதாக தெரியவில்லை, நம்பிக்கை இருக்கிறது, குறிப்பாக இளைஞர்கள் மீது நம்பிக்கை இருப்பதாக தெரிகிறது. தன்னால் சாதிக்க முடியும் என்று நினைக்கிறார், தவிர்த்து எனக்கு தெரிந்து தென் சென்னை மக்களுக்கு ஓரளவு இவர் தேர்தலில் நிற்கிறார் என்பது தெரிந்திருக்கிறது. :)
//என் கேள்விகளை விட உங்க கேள்வி அருமை ... ஆனா எனக்கு நிங்க கொடுத்த லிங் தப்பு, கண்ணா என்று இன்னொரு நன்பர் கொடுத்த லிங்கலில் வந்தேன்.. அருமை..//
சுரேஷ், :) நன்றி பாதிக்கு மேல மற்றவர்கள் கேட்க நினைப்பதை கேட்டிருக்கிறேன். :)
தேர்தல் அறிக்கை பற்றிய கேள்விகள் நானாக கேட்கவேண்டும் என்று இருந்தேன். இப்படி எல்லோரிடமும் கேட்டு வாங்கியபிறகே தேர்தலில் நிற்க அனுமதி கொடுக்க வேண்டும் என்பது என் எண்ணம். :)
ஹோ.. லிங்க் தப்பா.. சரியா தப்பா கொடுத்துட்டேனா.. ம்ம்ம் உங்க ஐடி யும் என்னிடம் மிஸ்ஸிங். :)
ஹ்ம்ம்ம்... என்னமோ இருக்கிற மாதிரி தான் இருக்கு. ஆனால், சுயேட்சையாக ஜெயிப்பதெல்லாம் இந்தக் கூட்டணி யுகத்தில் சாத்தியமா?
வெற்றி பெறும் சில வேட்பாளார்களும் கூட ஏதேனும் அரசியல் கட்சியின் ஆதரவிலாகத் தான் வென்றிருக்கிறார்கள். சரத் எந்த இயக்கத்தின் ஆதரவையும் கேட்டதாகவோ பெற்றதாகவோ தெரியலையே.
//எடுத்துக்காட்டு, ராஜிவ் காந்தி, ராகுல் காந்தி. சச்சின் பைலட், ஜோதி ஆதித்யா சிந்தியா, பிரியா தத், மு.க.ஸ்டாலின் போன்றோர்.//
என்ன விமர்சனம் வேணாலும் இருக்கட்டும். இளைஞர்கள் எல்லாம் காங்கிரசில் தான் இருக்கிறார்கள் என்று சொன்னதற்கே என் பொன்னான ஆதரவு நண்பர் சரத்பாபுவிற்கே. :)
ஆனா , தலைவா இந்த லிஸ்ட்ல ஸ்டாலின் எதுக்கு வந்தார்? இப்போ அவர் இளைஞர் அணிக்குத் தான் தலைவர். இளைஞர் இல்லை. தாத்தா ஆய்ட்டார். :)
ஒருவேளை , அவர் இளைஞராக இருக்கும் போதே அரசியலுக்கு வந்ததை சொல்லி இருப்பாரோ. இருக்கலாம். இருக்கலாம்.:)
//ஹ்ம்ம்ம்... என்னமோ இருக்கிற மாதிரி தான் இருக்கு. ஆனால், சுயேட்சையாக ஜெயிப்பதெல்லாம் இந்தக் கூட்டணி யுகத்தில் சாத்தியமா?//
வாங்க சஞ்சய், சாத்தியமில்லை தான் அதுக்காக இப்படி ஆர்வத்தோடு வருகிற ஒருவரையும் விட்டுவிட்டால், என்ன செய்வது ? யார் தான் நம்மை காப்பாற்றுவார்கள் என்ற உணர்வு ஏற்படுகிறது. அவருக்கு ஆதரவு கொடுத்து வெற்றி பெற வைத்தால் நல்ல சில மாற்றங்கள் கண்டிப்பாக வருமென்ற நம்பிக்கை உள்ளது. :)
என்ன விமர்சனம் வேணாலும் இருக்கட்டும். இளைஞர்கள் எல்லாம் காங்கிரசில் தான் இருக்கிறார்கள் என்று சொன்னதற்கே என் பொன்னான ஆதரவு நண்பர் சரத்பாபுவிற்கே. :)//
இதுக்கு பேர்தான் சந்துல சிந்து பாடுவதா? :)))))))
//ஒருவேளை , அவர் இளைஞராக இருக்கும் போதே அரசியலுக்கு வந்ததை சொல்லி இருப்பாரோ. இருக்கலாம். இருக்கலாம்.:)//
இருக்கலாம் இல்லை.. அப்படித்தான் சொன்னார். :)
//வாங்க சஞ்சய், சாத்தியமில்லை தான் அதுக்காக இப்படி ஆர்வத்தோடு வருகிற ஒருவரையும் விட்டுவிட்டால், என்ன செய்வது ? யார் தான் நம்மை காப்பாற்றுவார்கள் என்ற உணர்வு ஏற்படுகிறது. அவருக்கு ஆதரவு கொடுத்து வெற்றி பெற வைத்தால் நல்ல சில மாற்றங்கள் கண்டிப்பாக வருமென்ற நம்பிக்கை உள்ளது. :) //
ஹய்யா.. சரத்துக்கு ஒரு வோட்டு உறுதி ஆய்டிசி.. நீங்க வேளச்சேரியா? நான் சொல்றவங்களுக்கு ஓட்டுப் போட வேளச்சேரில 2 பேர் இருக்காங்க. சொல்லிடவா? :)
யக்கா.. உங்களின் இந்த இடுகை யூத் ஃபுல் விகடனில்..
வாழ்த்துக்கள்.. :)
அக்கா,
நான் கேக்கணும்னு நினைத்தது எல்லாம் இதில் இருக்கிறது. அவருடைய பதிலும் என் மனதிற்கு நேர்மையாக படுகிறது.உங்கள் கேள்விகளிலும் நேர்மை தெரிகிறது.
இனி அவரை ஆதரிப்பதில் எந்த வித தயக்கமும் எனக்கு இல்லை.
மிக்க நன்றி!!!
அசத்தல் வேலை. அந்தப் பகுதியில ஓட்டுப் போடுற எல்லாருக்கும் போய்ச் சேர்ந்தா சரித்தான்.
//ரெக்கார்ட் செய்து இருந்தால் இன்னும் விவரமாகவே இருந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.. செய்யாமல் விட்டுவிட்டேன்.. :(//
நினைச்சேன், எப்படி ஃபோன்ல பேசி வரிக்கு வரி ஞாபகம் வைச்சி எழுத முடியுமின்னு. நிறைய அவரு சொன்ன விசயம் மிஸ் ஆகியிருக்குமோ...
கவிதை அருமையான முயற்சி. offensive கேள்விகள். இருந்தபோதிலும் பதில்களில் நிதானம். அரசியல்வாதிக்கு உரிய முதல் தகுதியை சரத் பெற்றுள்ளார். அதை தவிர, அவருக்கு பலரும் வாக்களித்து வெற்றி பெற வைப்பார்கள் என்று நம்புவோம். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். (லைட் ப்ளூ சட்டையை குறித்து கேட்காவிட்டாலும்)
****
இதுக்கு பேர்தான் சந்துல சிந்து பாடுவதா
*****
lol :)- சஞ்சய் நீங்களும் கலக்கறீங்க.
உங்களின் இந்த இடுகை யூத் ஃபுல் விகடனில்..
வாழ்த்துக்கள்.. :)
சில கேள்விகளுக்கு விசயகாந்து மாதிரி டபாய்ப்பாருன்னு நெனைச்சேன், ஆனா செய்யலை. சரத்பாபுக்கு வாழ்த்துகள். ஜெயிச்சா மகிழ்ச்சி, ஜெயிக்கலைன்னாலும் ஓரளவு நல்ல ஓட்டு வாங்கினாலே ஒரு நல்ல மாற்றத்திற்கான அடித்தளமாக அது அமையும்.
கருத்து மோதல்களை .. கருத்து மோதல்களாகவே கருதி.... தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றில்லாமல் மாற்று கருத்துகளுக்கும் மதிப்பு கொடுத்த வெட்டிபயல் @ பாலாஜிக்கு என் மனமார்ந்த பாரட்டுக்கள்
:-)
//ஹய்யா.. சரத்துக்கு ஒரு வோட்டு உறுதி ஆய்டிசி.. நீங்க வேளச்சேரியா?//
:))) ஹும்...நக்கலு..!! :)))
@ சுரேஷ்குமார் - நன்றி :))
//இனி அவரை ஆதரிப்பதில் எந்த வித தயக்கமும் எனக்கு இல்லை.
மிக்க நன்றி!!!//
எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் !!! பாலாஜி, நான் தான் நன்றி சொல்லனும் :))
@ மணிகண்டன் :)) நன்றி
@ சுரேஷ் :) நன்றி
//சில கேள்விகளுக்கு விசயகாந்து மாதிரி டபாய்ப்பாருன்னு நெனைச்சேன், ஆனா செய்யலை//
ராஜ்..கேள்வி கேட்டது யாரு?!! கவி யாச்சே.. பதில் சொல்லாட்டி விட்டுடுவேனா.. பாவம் சரத்..?! ன்னு ஒரு 40 மினிட்ஸ் ல கேள்வியை முடிச்சிட்டேன்.. :))
அருமையான பதில்கள். அருமையான பதிவு.
நினைச்சேன், எப்படி ஃபோன்ல பேசி வரிக்கு வரி ஞாபகம் வைச்சி எழுத முடியுமின்னு. நிறைய அவரு சொன்ன விசயம் மிஸ் ஆகியிருக்குமோ...//
தெகாஜி,
ம்ஹும் ! ஒவ்வொரு பதிலையும் அவர் சொல்லும் போது முக்கியமான பாயின்ட்ஸ் 'ஐ ஒரு சில வார்த்தைகளால் மட்டுமே குறிக்க முடிந்தது. அவ்வளவு வேகமாக சரத் பேசினார்கள். :)) எனக்கு ஷார்ட்ஹேன்ட் எல்லாம் தெரியாது :)) என்ன செய்ய.. ஒவ்வொரு பதிலையும் ரொம்ப கவனமாக அப்படியே மகப் செய்து வைத்து அடுத்தநாள் எழுதி சரிபார்த்து பதிவிட்டேன்.
அவர் சில உதாரணங்கள், எனக்கு புரிய வேண்டும் என்று உதாரணங்கள் கொடுத்தார். அதை முழுவதுமாக என்னால் இங்கு கொண்டு வர முடியவில்லை..
வெட்டி'யை பாராட்டிய கண்ணா'விற்கு எனது நன்றிகள் :))
@ சிங்கு... நக்கலு?!! ..... ..":)" இது இந்த பதிவுக்கு ரொம்ப முக்கியமா? ஓவரா தெரியலையா உங்களுக்கு.. ??!! ம்ம் என்னவோ செய்யுங்க...
@ செந்தில்வேலன் - மிக்க நன்றி.. :) முதன் முறையாக பார்வைகளை பார்வையிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.. :))
நாம் அவரிடம் கேட்க தோணும் அனைத்து கேள்விகளையும் கேட்டு பதில் வாங்கிய உங்களின் முயற்சியை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்...
என் ஓட்டு ஸ்லேட்டுக்கே.
இப்படிக்கு
தென்சென்னை வாசி
Yea நிதானமான பதில்கள்.. Give him a chance and see. He may do something. My wishes to Sarath.
Good post Kavith...
சரத்பாபுவுக்கு ஸ்லேட் அருமையான சின்னம்.அரசியலில் அரிச்சுவடி எழுதி வெற்றி காண வந்திருக்கிறார்.அவரை
வாழ்த்தி வரவேற்போம்.
@ Triumph - Thanks !
@ Sarathy - Thanks
@ Goma - Thanks.. :) deleted the wrong one by urself?!! hmm thanks :)
முதல் பின்னூட்டத்தை டெலிட் செய்யக் காரணம் வேறொன்றும் இல்லை .அரிச்சுவடி என்ற வார்த்தையில் ’ரி’ க்கு பதிலாக ,’றி’ விழுந்து விட்டது .யோசித்துப் பார்த்தால் ,அதுவும் சரியான சொல்தான் அறிச்சுவடி...அரசியலை அறியும் சுவடி என்றும் கொள்ளலாம் இல்லையா?[தமிழன்னை என்னைத் தவறிழைக்க விடவே மாட்டாள்]
:)
நல்ல முயற்சி!
வாழ்த்துக்கள்!
@ Goma - ம்ம் எனக்கு தெரியுமே காரணம்.. ஆனா சூப்பரா அதை இந்த பின்னூட்டத்தில் விளக்கி இருக்கீங்க.. ச்சமத்து !! :)))
@ சிவா - வாழ்த்துக்களுக்கு நன்றி
Goma - ம்ம் எனக்கு தெரியுமே காரணம்.. ஆனா சூப்பரா அதை இந்த பின்னூட்டத்தில் விளக்கி இருக்கீங்க.. ச்சமத்து !! :)))
கவிதா நீங்கள்...ச்சமத்து ன்னு அழுத்தமாய் சொல்லும் விதம் என் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளி சொல்வது போலிருக்கிறது
ரொம்ப நன்றி
அவரை முன்னிறுத்துவதற்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்
சரத் சென்னைக் கல்லூரி மாணவர்களைத் தனது முயற்சியில் இணைத்துள்ளாரா? அது நிச்சயமாக நல்ல பயனுள்ளதாக இருக்கலாமே...
//அவரை முன்னிறுத்துவதற்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்//
vaangga Dharumi Sir, Nandri.!! :)
//
தருமி said...
சரத் சென்னைக் கல்லூரி மாணவர்களைத் தனது முயற்சியில் இணைத்துள்ளாரா? அது நிச்சயமாக நல்ல பயனுள்ளதாக இருக்கலாமே...//
enakku avarin Election Ad's approach patri ellam ondrum theriyathu.. romba involve aagala..
Sarath is reading my post I hope, so he will take the necessary action as per our ideas.. I do remind him to read the comments as well I will fwd ur idea to him. ok.
Thanks for the suggestions..
(Sorry ! tamil font sothappal)
I will fwd ur idea to him
thanks. wish it helps him
கவிதா நல்ல மெச்சூர்டா கேள்வி கேட்டு இருக்கீங்க.. வாழ்த்துக்கள்
இவர் ஒருவேளை ஜெயித்து வந்தாலும் இவரை எதுவும் செய்யவிட அரசியல் கட்சிகள் விடமாட்டார்கள் இவர் நல்ல பெயர் வாங்கி விடுவார் என்று.
இருந்தாலும் ஒருவர் மாற்றம் கொண்டு வர முடியும் என்று நம்பி இதை போல முயற்சி எடுக்கும் போது அவரை பாராட்டவில்லை என்றாலும் குறை கூறாமல் இருப்பது நல்லது, இவரை கிண்டலடித்து பதிவுகள் வருவதை பார்க்கும் போது மனதிற்கு சங்கடமாக உள்ளது.
புதிதாக யாரும் தைரியமாக வரமாட்டார்கள் ஆனால் வருகிறவர்களையும் விட மாட்டார்கள், இதை போல நொள்ளை நொட்டை என்று குறை கூறுவார்கள். நாட்டில் இவர்கள் மட்டுமே புத்திசாலிகள்...என்ன செய்வது !
இவர் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது மிக சிரமமே என்றாலும், இந்த தேர்தல் இவருக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்து அடுத்த தேர்தலில் இன்னும் சிறப்பாக வருவார் என்று கண்டிப்பாக நம்பலாம்.
முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார்!
சரத் பாபுவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
பின் குறிப்பு
உங்கள் பேட்டி ஒரு சிலரின் மனதையாவது அவருக்கு சாதகமாக மாற்றி இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
@ கிரி
வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி... எல்லோருடைய நன்மைக்காகவும் மாற்றம் வர ஆதரவு தருகிறோம். நல்லதே நடக்கும் என்றும் நம்புவோம். :)
நிதானமான பதில்கள்.
சரத்பாவு வெற்றி பெற வாழ்த்துக்கள்.
உங்களுடைய இந்த கேள்வி, பதில் முயற்சி நல்ல பாதிப்பை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
என்னுடைய நண்பர் வட்டாரத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன்,
நன்றி,
சஹ்ரிதயன்
இது ஒரு நல்ல முயற்ச்சி.. (இருவருக்குமே) கேள்விகளும் அதற்கான சரத்தின் பதில்களும் உண்மையானவை.. யோசிக்கவேண்டியவைகளும் கூட..
Post a Comment