எழுதவே தோன்றாத
வெறுமை
எத்தனை மாறினாலும்
மாறாத மனித குணங்கள்
எத்தனை அழுதாலும்
நிற்காத கண்ணீர்
எத்தனை சிரித்தாலும்
போகாத துக்கம்
எத்தனை எழுதினாலும்
திருப்தியே அளிக்காத எழுத்து
எத்தனை பாசம் வைத்தாலும்
வேசமாக போகும் தருணங்கள்
எத்தனை நேசித்தாலும்
புரிதல் இல்லாத உள்ளங்கள்
எத்தனை சுற்றி வந்தாலும்
சேருமிடமோ அதே இடம்
எத்தனை வாழ்க்கை என்னுள்???!!!
ஒன்றுக்கே இத்தனையா??????!!
என்றோடு முடியுமோ...
இந்த வாழ்க்கை
இனியும் தொடருமோ
இந்த வெறுமை...
42 - பார்வையிட்டவர்கள்:
படிச்சிட்டேன்.
தங்களது கவிதையை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்கவிதைகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
!?
எழுத நிறைய இருக்கு போல!
ஒரு நாளைக்கு ரெண்டு போஸ்டு!
கம்ப்யூட்டரை ஆஃப் பண்ணி வெச்சிட்டு சீரியல் பாருங்க!
(கம்ப்யூட்டரே பெட்டர்னு தோணும்)
மனிகண்டன் வந்து கமெண்ட்ஸ்க்கு நடுவுலே கேப் விடணும்னு சொல்லுவாரு!
சோ ஒரு 5 நிமிஷம் கேப் விடுறேன்!
அதுக்குள்ளே கும்ம நினைக்குறவங்க கும்மிக்கலாம்!
//எத்தனை நேசித்தாலும்
புரிதல் இல்லாத உள்ளங்கள்//
:-)) ஏனுங்க இப்படியெல்லாம்...
//"வெறுமை....."
No comments yet. -//
தலைப்புக்குப் பொறுத்தமா இருக்கு!
@ தமிழ்குறிஞ்சி
ரொம்ப நன்றிங்க.. உங்களை இணைய இதழை பார்த்தேன் படித்தேன். சில நல்ல தகவல்கள் காலையிலேயே இன்று கிடைக்கப்பெற்றேன்.
நன்றி ..முடிந்தவரை எழுதியதை அனுப்ப முயற்சி செய்கிறேன்...
/தங்களது கவிதையை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்கவிதைகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.//
:)
உங்களையெல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு!
//நன்றி ..முடிந்தவரை எழுதியதை அனுப்ப முயற்சி செய்கிறேன்...//
ஆனா முழுசா அனுப்புங்கன்னு சொல்றாங்க!
//எழுத நிறைய இருக்கு போல!
ஒரு நாளைக்கு ரெண்டு போஸ்டு!
//
விழித்திருக்கும்
இரவுகளில்
என்
எழுத்துக்களுக்கு
விளிம்புகள்
இல்லை !!
என்
கிறுக்கல்களின்
எண்ணிக்கை
நானறியேன் !!
அத்தனையும்
இங்கே
பதிவிட்டிருப்பின்
உங்களின்
கேள்விகளுக்கு
பதில்
நீங்களே !!
//விழித்திருக்கும்
இரவுகளில்
என்
எழுத்துக்களுக்கு
விளிம்புகள்
இல்லை !!
என்
கிறுக்கல்களின்
எண்ணிக்கை
நானறியேன் !!
அத்தனையும்
இங்கே
பதிவிட்டிருப்பின்
உங்களின்
கேள்விகளுக்கு
பதில்
நீங்களே !!//
இதுக்கு பதிலா திட்டியே இருக்கலாம்!
இதுக்கு பதிலா திட்டியே இருக்கலாம்!
//
அமைதியாக
ஆரம்பிக்கும்
இந்த இனிய
காலை பொழுதை
நாமக்கல் சிபி' யிடம்
சிக்கி
சின்னாபின்னாமாக்கி
கொள்ள இன்னும்
எனக்கு
சித்தம் கலங்கிவிடவில்லை !!!
//எத்தனை நேசித்தாலும்
புரிதல் இல்லாத உள்ளங்கள்//
:-)) ஏனுங்க இப்படியெல்லாம்...
//
ம்ம் ஏனுங்க இப்படியெல்லாம்... ???? :(((
//எனக்கு
சித்தம் கலங்கிவிடவில்லை !//
அது தப்பாச்சே!
//அது தப்பாச்சே!
//
தப்பை
தப்பாக நோக்காமல்
சரியாக நோக்கினால்
தப்பும் தப்பாகாது
சரியும் தப்பாகாது
இருப்பினும்
எப்படி நோக்கினாலும்
தப்பும்
எப்பவும்
தப்புதான்
இதை படித்து
நீங்கள்
துப்பினாலும்
அது
தப்புதான்
என்று
நான் சொன்னால்....
அதுவும்
தப்புதான்...
அதற்காக
பாரபட்சமின்றி
நீங்கள்
துப்பினாலும்
அது
தப்புதான்...
//தப்பை
தப்பாக நோக்காமல்
சரியாக நோக்கினால்
தப்பும் தப்பாகாது
சரியும் தப்பாகாது
இருப்பினும்
எப்படி நோக்கினாலும்
தப்பும்
எப்பவும்
தப்புதான்
இதை படித்து
நீங்கள்
துப்பினாலும்
அது
தப்புதான்
என்று
நான் சொன்னால்....
அதுவும்
தப்புதான்...
அதற்காக
பாரபட்சமின்றி
நீங்கள்
துப்பினாலும்
அது
தப்புதான்...//
ரைட்டு! அண்டர்ஸ்டுட்!
பித்தாஸ்ரமத்துக்கு ஒரு பிரதான உறுப்பினர் தயாராகியாச்சு!
//பித்தாஸ்ரமத்துக்கு ஒரு பிரதான உறுப்பினர் தயாராகியாச்சு!
//
பத்து
வரிகளில்
பித்து 'பிடித்ததென
அர்த்தம் கொண்டு
ஆசிரமத்திற்கு
அழைக்கும்
அற்ப
மானுடனே!!
ஆசைகள்
துறந்தவர்கள்
அங்குண்டோ
சொல்!!
அமைதி 'க்கு
அர்த்தம்
கண்டவர்கள்
அங்குண்டோ
சொல்!
அழகு க்கு
அர்த்தம்
கண்டவர்கள்
அங்குண்டோ
சொல்!
எளிமை'க்கு
அர்த்தம்
கண்டவர்கள்
அங்குண்டோ
சொல்!
இந்த
அற்ப
வாழ்க்கை'க்கு
அர்த்தம்
கண்டவர்கள்
அங்குண்டோ
சொல் !
/இந்த
அற்ப
வாழ்க்கை'க்கு
அர்த்தம்
கண்டவர்கள்
அங்குண்டோ
சொல் !//
பித்தாஸ்ரமத்தைப் பத்தி இன்னும் உங்களுக்குத் தெரியாது போல!
அட்ரஸ் சொல்றேன்! குறிச்சிக்குங்க!
பித்தாஸ்ரமம்,
கீழ்ப்பாக்கம்,
சென்னை!
//பித்தாஸ்ரமத்தைப் பத்தி இன்னும் உங்களுக்குத் தெரியாது போல!
அட்ரஸ் சொல்றேன்! குறிச்சிக்குங்க!
பித்தாஸ்ரமம்,
கீழ்ப்பாக்கம்,
சென்னை!
//
முன்பே
நான்
அறிவேன்
இவ்விடத்தை.. !
பல
சிபி; க்கள்
ஒன்றுகூடி
ஒற்றுமையாக
உளரிக்கொட்டி
கொண்டிருக்கும்
ஒர் இடம்
அதில்
ஓர் சிபி'யாக
நானும்
மாறிவிட
எனக்கு
நாட்டமில்லை
மானுடா !!
//அதில்
ஓர் சிபி'யாக
நானும்
மாறிவிட
எனக்கு
நாட்டமில்லை
மானுடா !!//
மக்கா! எல்லாரும் ஓடியாங்க!
கவிதாக்கா தெய்வாமாயிட்டாங்க!
கவிதாக்கா தெய்வாமாயிட்டாங்க!
//
அன்பே சிவம்
என்பதை
அறியாயோ
மானுடா !!
கூவி
அழைத்து
கூட்டம்
போட்டு
கும்மி
அடித்தாலும்
என்னுள்
இருப்பது
சிவம் !!
உன்னுள்
இருப்பதும்
சிவம் !!
கும்மும்
ஒவ்வோரு
கும்மியிடம்
இருப்பதும்
சிவம் !!
அன்பே சிவம்
என்பதை
அறியாயோ
மானுடா !!
இன்னிக்கு கவிதா தெய்வம் ஃபுல் ஃபார்ம்ல இருக்காங்க போல!
அன்பே சிவம்!
//இன்னிக்கு கவிதா தெய்வம் ஃபுல் ஃபார்ம்ல இருக்காங்க போல!
//
ஆம்
ஆரம்பித்துவிட்டால்
முடிப்பது
கடினம்
அதனால்
தான்
ஆரம்பிப்பதே இல்லை..
எந்த
ஆரம்பித்திற்கும்
ஒரு முடிவுண்டு
என
நினைக்கலாம்
ஆனால்
முடிவில்லாத
ஆரம்பங்கள்
உண்டு
ஆரம்பங்கள்
இல்லாத
முடிவுகள்
இல்லை !!
உணர்ந்தவன்/ள்
மட்டும்
அறிவான்
எதை
ஆரம்பிப்பது
எதை
முடிப்பது
என்பதை......!!
இன்னொரு கவிதாயிணி!
பாலைத்திணை போச்சு!
பார்வைத்திணை வந்துடுச்சு!
இன்னொரு கவிதாயிணி!
தாங்குமா தமிழுலகம் இனி?
மறைக்காம உண்மையைச் சொல்லுங்க!
கண்டிப்பா ஒரு ஆஃப் அடிச்சிருக்கீங்க!
//இன்னொரு கவிதாயிணி!//
சில
சில்லறைகளை
வீசாமல்
சிரிப்புகள்
சிந்தாமல்
சுலபமாய்
கிடைத்துவிட்டது
பட்டம் !!
சிபி க்கு மட்டுமே
தெரியும்
இது
சில்லறைகளை
செலவிட்டு
வாங்கி
வானத்தில்
பறக்கவிடும்
பட்டமென்பது !!
//தாங்குமா தமிழுலகம் இனி?//
எதை
எதையோ
தாங்கிய
தமிழகம்
இதுவென்று
சொல்லி
எனையும்
தாங்கென்று
மன்றாடமாட்டேன்
மனமுருகி
கெஞ்சவும் மாட்டேன்
சிரமம்
ஏதுமின்றி
சீக்கிரம்
எடுத்துச்செல்
என்னையும்
உன்னோடு
சேர்த்து
மண்ணோடு
மண்ணாக்கு
என்று
மட்டுமே
கேட்பேன்..
"லக்கி மேன்" சீட்டிங் சிவராமன் சொல்ற மாதிரிதான் என்ஜாய் பண்ணனும்!
ஆஹா! ஆஹா!
ஊஹூ! ஊஹூ!
:)
//மறைக்காம உண்மையைச் சொல்லுங்க!
கண்டிப்பா ஒரு ஆஃப் அடிச்சிருக்கீங்க!
//
உண்மையை
பேசவும்
உளரிக்கொட்டவும்
காரணமாக
ஊறுகாய்' யையும்
அதனுடன்
உணவாக (நீங்கள்)
அருந்தும்
உன்னத பானத்தை' யோ
சொல்லி
எளிதாக
என்னை நானே
ஏமாற்றிக்கொள்ள
இன்னும் என்னை
பழக்கி
கொ(ல்)ள்ளவில்லை..!!
//படிச்சிட்டேன்.
//
படித்துவிட்டேன்
என்ற
ஒரே வார்த்தையில்
முடித்தும்விட்டான்
சாக்லெட் !!
ரசித்தேன்....
:))
எத்தனை உள்ளங்களின் பார்வை இந்த படைப்பு எனக்குள் புலம்பி கொண்டு இருந்த எனக்குள் ஒரு துள்ளல்....உனக்குள்ளுமா இப்பார்வை என்று ....வாழையடி வாழையாய் இந்த வேட்கை இதற்கு வருங்காலம் உண்டோ என்று ஒரு தேடல் தெளிவில்லாமல் எனக்குள் வருந்திக்கொண்டு இருந்த என்னை உனக்குள்ளுமா என வருந்த வைத்தது இந்த பார்வை...மீண்டும் மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டே இருக்கிறேன்..
பதிவுல இருக்கிற கவிதையை விட பின்னூட்ட கவிதைகள் சூப்பரா இருக்கே :-)
ஆழ்ந்த மன நிலையில் நீங்கள் எழுதி இருப்பதாக உணர்கிறேன். வெறுமையை உணர்தலை பல நல்ல சிந்தனைகளை சிந்திக்க வைக்கும் தூண்டுகோலாக தான் நான் கருதுகிறேன். ஆங்கிலத்தில் introspection என்பார்களே, அதை செய்து பாருங்கள்.
தமிழரசி மிக்க நன்றி..
//எத்தனை உள்ளங்களின் பார்வை இந்த படைப்பு //
ம்ம் நன்றி.. :)
//வாழையடி வாழையாய் இந்த வேட்கை இதற்கு வருங்காலம் உண்டோ என்று ஒரு தேடல் தெளிவில்லாமல் எனக்குள் வருந்திக்கொண்டு இருந்த என்னை உனக்குள்ளுமா என வருந்த வைத்தது இந்த பார்வை...//
ம்ம்ம்ம்ம்...
//மீண்டும் மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டே இருக்கிறேன்..
//
ம்ம்ம்.. எனக்கும் மீண்டும் மீண்டும் படிக்க த்தோன்றுகிறது ஆனால்.. வந்து நிற்கும் இடம் கடைசி வரிகள் தான் :)))
என்றோடு முடியுமோ...
இந்த வாழ்க்கை
இனியும் தொடருமோ
இந்த வெறுமை...
ஒவ்வொரு முறை படிக்கும் போதும் வந்து நிற்பது விடைதெரியாத இந்த கேள்வியோடு தான்....
பதிவுல இருக்கிற கவிதையை விட பின்னூட்ட கவிதைகள் சூப்பரா இருக்கே :-)
//
ராஜ், நன்றி ... கிரடிட் கோஸ் டூ.. சிபி.. :)))) அவர் தான் என்னை எழுத வைத்தார்.. நடுவில் சிபி நிஜமா நான் எழுதறது எனக்கு தாங்க முடியில நிறுத்திக்கோங்கன்னு சொன்னேன்.. ஆனா... இல்லை என்னால் தாங்க முடிகிறது.. என்று இத்தனை எழுதவைத்துவிட்டார் :))
ஆழ்ந்த மன நிலையில் நீங்கள் எழுதி இருப்பதாக உணர்கிறேன். வெறுமையை உணர்தலை பல நல்ல சிந்தனைகளை சிந்திக்க வைக்கும் தூண்டுகோலாக தான் நான் கருதுகிறேன். ஆங்கிலத்தில் introspection என்பார்களே, அதை செய்து பாருங்கள்.
//
மாதவன், நீங்க தான் என்னுடைய ஓவர் உளரல் பதிவுகளை எல்லாம் படிச்சி இருக்கீங்களே...
Introspection :)))) ம்ம்ம்...அடிக்கடி இதை நான் செய்கிறேன்..
என்னை சுற்றியிருப்பவர்கள் எல்லோருமே ஓவராக யோசிக்காதே ன்னு தான் சொல்றாங்க.. பட் இதை யோசனைன்னு சொல்லமுடியாது சொந்த உள் அலசல் ன்னு சொல்லலாம்.. இதை செய்யாத நாட்கள் இருக்காது... மாடு அசைப்போடுவதை போன்று மனம் போக்கில் அல்லாது... மனத்தை என் கட்டுபாட்டில் வைத்து அலசி ஆராய்ந்து நானும் குழம்பி, அடுத்தவர்களையும் குழப்பி ...
சொல்லிக்கிட்டே போகலாம்.. :)
கவிதா கவிதையிலேயே கலாய்ச்சிருக்கீங்க.
பிரமாதம்.
எத்தனை நேசித்தாலும்
புரிதல் இல்லாத உள்ளங்கள்
mmmm sariya solli irukega kavi
@ மகா - நன்றிங்க :)
@ கவிகாயூ - நன்றிப்பா :)
Post a Comment