Mr. E. Sarath Babu's Graduation at BITS , Pilani, PGP IIM Ahmedabad. தெற்கு சென்னை தொகுதியில் தேர்தலில் நிற்கும் திரு.சரத்பாபுவிற்கு வாய்ப்பு கொடுங்கள்.
தன் சொந்த வாழ்க்கையில் சாதித்தவர், இனியும் சாதிப்பார். இவரை பற்றி அறியாதவர் இல்லை. உழைப்பு, நல்ல படிப்பு, அன்பு, பன்பு, பொறுப்பு, நேர்மை இத்தனையும் ஒன்று சேர்ந்த இளைஞர்...
உங்கள் வாக்குகளை இவருக்கு அளித்து நமக்கு நாமே ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு கொடுங்கள்.
நம்ம வெட்டி'யின் பதிவை இப்பத்தான் படித்தேன்.. சரி நமக்கு தோன்றிய சிலவற்றை சேர்ப்போம் என்று.......
ஏன் சரத்பாபு ?!
படிப்பை முடித்து தனக்கு கிடைத்த மிக சிறந்த வெளிநாட்டு / உள்நாட்டு வேலை வாய்ப்புகளை தேர்ந்தெடுத்து சுயநலமாக தன் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடாமல், தனெக்கென ஒரு லட்சியத்தை கொண்டு, தனியாக தொழில் தொடங்கி (அதுவும் அவர் அம்மாவின் உழைப்பை பார்த்து), அதில் தற்போது 200 நபர்களுக்கு வேலை வாய்ப்பும் அளித்திருக்கிறார். இது அவருடைய வாழ்க்கை மட்டும் இல்லை, தான் எப்படி இருக்கவேண்டும், தன்னால் எப்படி இருக்க முடியும் என்பதை முடிவு செய்பவராகவும் இல்லாமல் அதை நடைமுறையில் செயற்படுத்தியும் காட்டியுள்ளார்.
இதில் குறிப்பிட்டு நான் சொல்ல ஆசைப்படுவது, ஐ.ஐ.எம் போன்ற உலகத்தரம் வாய்ந்த இன்ஸ்டியூஷனில் படிப்புகளை முடிக்கும் முன்னும், முடித்தவுடனும், மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நான் நேரில் கண்டு வியந்து இருக்கிறேன். என் கணவர், சென்னை ஐ.ஐ.டி, மற்றும் கோழிக்கோடு ஐ.ஐ.எம் இல் வேலை பார்த்திருந்த போது நேரடியாக அந்த மாணவர்களின் பட்டியலையும் அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளும் கண்டு(மாத சம்பளம் உட்பட) வியந்திருக்கிறேன். அதை எல்லாம் எளிதாக புறம் தள்ளியவர் சரத்பாபு என்பது குறிப்பிட தக்கது.
அடுத்து இதுவரையில் ஊழல் செய்து சுரண்டியவர்களையே தேர்ந்தெடுத்து நாம் தோற்று போகாமால், சரத்பாபுவை தேர்ந்தெடுத்து, அவரும் வெற்றிப்பெற்று நாமும் வெற்றி பெற ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே...
மேலும் இவரை பற்றி அறிய
http://sarathbabu.co.in/
http://sarathbabu.co.in/in/
http://kanaguonline.wordpress.com/2009/04/15/good-one-series-3-mresarath-babu/
http://foodkingindia.com/index.html
சரத்பாபுவின் தேர்தல் அறிக்கை :-
நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நமது 'யூத் ஐகான்' சரத்பாபுவின் முக்கிய இலக்கே, 2025-க்குள் 'பசியில்லாத இந்தியா'வை உருவாக்குவதுதான்!
இளைஞர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் துணையோடு தென்சென்னையில் களமிறங்கும் சரத்பாபுவின் 10 முக்கிய அம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை இதுதான்...
1. தென் சென்னையில் 20 ஆயிரத்துக்கும் மேலானோருக்கு அனைத்து வகையான தொழில்துறையிலும் வேலைவாய்ப்பு பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்.
2. அனைத்துப் பகுதியிலும் தூய்மையானதும், சுகாதாரமானதுமான குடிநீர் வசதி. குறிப்பாக குடிசை, குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளிகள் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும். உலக சுகாதார நிறுவனத் தரத்துடன் அவசர சேவைகள் பெறுவதில் எளிதாக்கப்படும். பள்ளிகளின் நிலைகள் மேம்படுத்தப்படும்.
3. மாநில அரசின் உதவித் திட்டங்களுடன் ஏழை மற்றும் ஊனமுற்ற மூத்தக் குடிமக்களுக்கு உணவு, வசிப்பிடம், சுகாதார வசதிகள் பெற வழிவகை செய்யப்படும்.
4. ஒவ்வொரு வார்டிலும் ஒரு இளைஞர் நிலையம் (யூத் ஸ்டேஷன்) அமைக்கப்படும். இதுபோல் மொத்தம் 50 நிலையங்கள் அமைக்கப்பட்டு, குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றி எடுத்துரைக்கப்படும். இதன் மூலம் தென்சென்னையில் முறைகேடு, புகார்கள் போன்றவற்றை சரத்பாபுவிடம் நேரடியாக தொகுதி மக்கள் கொண்டு செல்ல வழிவகுக்கப்படும்.
5. செல்பேசி சேவை நிறுவனங்களை அணுகி, இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.2,400 என்ற வாடகைக்கு இரண்டு மொபைல் ஃபோன்களுடன் சேவை வழங்கும் ஜாயின்ட் பேக்கேஜ் திட்டம் கேட்கப்படும். இது, மக்களுக்கு மாதம் ரூ.100 வாடகை செலவு மட்டும் ஆகும் வகையிலேயே வழங்க முயற்சிக்கப்படும்.
6. பாதுகாப்பான போக்குவரத்துக்கு வழிவகை செய்யும் நோக்கத்தில், சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். மக்கள் பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்வதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
7. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்பு உணர்வு ஏற்படும் வகையில், குடியுருப்பு நலச் சங்கங்கள் முதலிய அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்புரிவேன். அதன் வாயிலாக, தென் சென்னை தொகுதியில் நாளொன்றுக்கு 60 மரக்கன்றுகள் நடப்படும். ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 1,08,000 மரங்கள் நடப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
8. மகளிர் மேம்பாட்டுக்கென அனைத்து இல்லத்தரசிகளுக்கும் வங்கிக் கணக்கு துவக்கப்படும். வீட்டில் உள்ள பெண்கள் வருவாய் ஈட்டும் வகையில் நல்ல வாய்ப்புகளும் திட்டங்களும் அறிமுகப்படுத்துவேன். இந்தத் திட்டத்தில் நான் நேரடியாகவே ஈடுபடுவேன்.
9. கணினி போன்ற தொழில் நுட்பத்தின் துணை கொண்டு இளம் தலைமுறையினரின் கல்வித் திறனை மேம்படுத்துவேன். இரண்டு ஆண்டுகளில் 80% கணினி அறிவு எட்டப்படுவதே இலக்கு. இதற்கென பயிற்சி நிலையங்கள் அமைக்கும் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். ஆசிரியர்களின் உதவியுடன் கல்வித் திட்டத்தின் தரம் உயர்த்தப்படும்.
10. இரு வழி தொடர்பு முறை மூலம் நமது தொகுதியிலுள்ள ரேஷன் வினியோக குறைபாடுகள், வேளச்சேரியில் வெள்ளத் தேக்க பிரச்னை, பெருங்குடியில் குப்பை மேடுகள் மிகுதியாவது போன்ற அனைத்து பகுதியிலுள்ள பிரச்னைகளுக்கும் தேர்வு காணப்படும். அதாவது, எல்லா வித பிரச்னைகளையும் என்னிடம் நேரடியாக தெரிவித்து தீர்வு காணப்படும்.
நன்றி :- யூத் விகடன் http://youthful.vikatan.com/youth/sarathbabu17042009.asp
அணில்குட்டி அனிதா : ஆஹா அம்மணி இதை எல்லாம் ஆரம்பிச்சிட்டாங்களா... நானே கொஞ்சம் தள்ளி நின்னுக்கறேன்.. !!!
பீட்டர் தாத்ஸ் :- Leadership: the art of getting someone else to do something that you want done because he wants to do it
மாற்றம் அவசியம் மக்களே சரத்பாபுவை மனதில் வையுங்கள் !
Posted by : கவிதா | Kavitha
on 09:32
Labels:
கதம்பம்
Subscribe to:
Post Comments (Atom)
25 - பார்வையிட்டவர்கள்:
சரத்பாபுவை ஆதரிப்போம்.வாழ்த்துக்கள்.
மாற்றம் வர வாழ்த்துவோம்.. கவிதா
வாழ்த்துக்கள்.
@ராஜநடராஜன், முத்து, சுரேஷ்குமார்
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.. :)
:-)
வாழ்த்துகள். உங்கள் பார்வை சிறப்பாகவே இருக்கிறது.
இயன்றால் இந்தப் பதிவை பார்க்க...
http://globen.wordpress.com/2009/04/14/sarathbabu/
- குளோபன்
நல்ல விசயம்.
சரத்பாபுக்கு வாழ்த்துக்கள்.
பாக்கலாம்..தென்சென்னைத்
தமிழன் என்ன பண்ணப் போறான்னு..?
சரத்பாபுவையும்தான்.....???????
பாப்போம்!
@ புனித்ஸ் - நன்றி
@ சரவணன் - நன்றி
@ தீப்பெட்டி - நன்றி
@ சாக்லேட் - நன்றி
@ டக்ளஸ் - நன்றி
@ சிவா - நன்றி
nalla padhivu Kavitha :) avarathu vaakurithigalai naan padithathilai.. ingu than padikkiren :)
avar jeika vendum enbathe nam ellor ennamum.. mudinthal ungal nanbargal matrum uravinargalukku minnanjal anupunga.. athu avar vetri kku upayogamaaga irukkum :)
matra padhivugalukku naan pinnar padithu vittu pinnuttam podugiren :)
வாங்க கனகு !! எப்படி இருக்கீங்க?!
ம்ம் நீங்க சொன்னபடி செய்யறேங்க...ரொம்ப நன்றிங்க..
matra padhivugalukku naan pinnar padithu vittu pinnuttam podugiren :)
//
ம்ம் சரிங்க.. பொறுமையாக படிங்க.. :)) என்னவோ உங்களுக்கு நேரம் சரியில்லை :))
சரத் பற்றிய உங்கள் விரிவான பார்வை மிகவும் நன்று...!
எடுத்தோம் கவிழ்த்தோம் என இல்லாமல் ..விரிவான ஒரு நல்ல அலசல்.
நன்றி
>பாஸ்கரன் சுப்ரமணியன்
யூத்புல் விகடனில் உங்கள் தளத்தைபார்த்தேன்...
வாழ்த்துக்கள்....
என்னுடைய கருத்தும் இதுதான்...
@ பாஸ்கரன் - நன்றி
உங்க பதிவுகள் சிலவற்றை படித்தேன்.. சிந்தனை நன்றாக இருக்குங்க. .அங்கே பின்னூட்ட வசதி இல்லை.. அதான் இங்கே சொல்கிறேன்..
ரொம்ப நல்லா எழுதறீங்க.. பயனுள்ள பல விஷயங்கள்.. நன்றி :)
@ கண்ணா - ம்ம் ஆமாம் யூத்புல் விகடனில் ஒரே நாளில் என்னுடைய பதிவுகள் இரண்டு வந்து இருந்தன..
வாழ்த்துக்களுக்கு நன்றி.. :)))
பின்னூட்ட வசதி பயன்படுத்த ஆசை உள்ளது...
ஆனால் அதில் நடக்கும் தனிமனித தாக்குதல் மற்றும் அனானி செயல்கள் முகம் சுளிக்கும் படி உள்ளது .
ஆதலால் தோன்றியதை கட்டுரை ஆக்குவதை மட்டுமே செய்கிறோம்,
நன்றி > பாஸ்கரன் சுப்ரமணியன்
நல்ல பதிவு.சிறப்பாக இருந்தது.
//பின்னூட்ட வசதி பயன்படுத்த ஆசை உள்ளது...
ஆனால் அதில் நடக்கும் தனிமனித தாக்குதல் மற்றும் அனானி செயல்கள் முகம் சுளிக்கும் படி உள்ளது .
ஆதலால் தோன்றியதை கட்டுரை ஆக்குவதை மட்டுமே செய்கிறோம்,
நன்றி > பாஸ்கரன் சுப்ரமணியன்
//
பாஸ்கரன், நல்லது தான்! உங்களின் விருப்படி செய்யுங்கள், அனானிகளின் தொல்லை தாங்காமல், நானும் சிறிது காலம் அப்படி எல்லாம் இருந்தேன்.. எப்படி வடிக்கட்டினாலும் தன் காழ்புனர்ச்சியை காட்ட ஜிமெயில் ஐடி கிரியேட் செய்து வந்து பின்னூட்டம் போடுவார்கள்.
ஆனால் என்ன இப்படிப்பட்டவர்களால் நம் சகிப்பு த்தன்மையும், பொறுமையும் அதிகமாவது என்னவோ உண்மை.
ஏன் இப்படி இருக்கிறார்கள் என்பதை விடவும். ஏன் திருந்தவே மாட்டேன் என்கிறார்கள் என்ற கேள்வி எப்போதும் எனக்கும் இருக்கும்.. :(
@ தீப்பெட்டி, நன்றி.. :)
நல்ல பதிவு கவிதா!
சரத்பாபு வெல்வதற்கு வாழ்த்துக்கள்.
ஆமா நிங்க தான் அனில் குட்டி அனிதா ஸாரி கவிதா வா :-) நல்லா இருக்கு உங்க அனில் படம்
நாங்களும் சரத்தை பற்றி சொல்லிருக்கோம் வந்து பாருங்க
வாழ்த்துகள் .. தொடர்ந்து கலக்குங்க
//Joe said...
நல்ல பதிவு கவிதா!
சரத்பாபு வெல்வதற்கு வாழ்த்துக்கள்.
//
Joe :) நன்றி..
***************
//ஆமா நிங்க தான் அனில் குட்டி அனிதா ஸாரி கவிதா வா :-) நல்லா இருக்கு உங்க அனில் படம்
//
சுரேஷ், நீங்கதான் கவிதா வா ன்னு இப்பவாச்சம் கேட்டீங்களே.. :))
//வாழ்த்துகள் .. தொடர்ந்து கலக்குங்க//
நன்றி ....கலக்கறங்க.. :)
Post a Comment