அணில் குட்டி அனிதா :- ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்ல, இருந்தாலும் உங்க எல்லாரோட நலன கருதி கவிதாவோட பாஸ்ட் ஹிஸ்டிரிய எழுதறேன்ன்... உஷாரா இருந்துக்கோங்க.. அவ்வளவுதான்..........
*****
ஆன்லைன் சேட் சொல்லிக்கொடுத்தது கனேஷ் & ஜனா. அவர்கள் சேட்டும் போது பின்னால் நின்று வேடிக்கை பார்ப்பேன்.. அதில் என் மேல் பரிதாபப்பட்டு ?!! கனேஷ் தான் (2000 ஆம் ஆண்டு) யாஹூ ஐடி கிரியேட் செய்து கொடுத்து எப்படி சேட்'ட வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார்கள், ஜனாவிற்கு பிடிக்கவில்லை தான் இருந்தாலும் போன போகிறது என்று சொல்லிக்கொடுத்தது மட்டுமில்லாமல் அறிவுரை ;-
"யாரிடமும் உங்களின் நிஜபெயர், ஊர், வேலைசெய்யும் இடம், அலுவலகம் பெயர், உங்கள் போன் நம்பர், போட்டோ போன்ற பர்சனல் தகவல் களை சொல்லக்கூடாது" என்றார்.
"ம்ம்.. சொல்லிட்டீங்க இல்ல.. முதல்ல கடைப்பிடித்துவிட்டு தான் மறுவேலை " என்று மனதில் நினைத்துக்கொண்டு அவரை பார்க்க.... அவருக்கு தான் என்னை நன்றாக தெரியுமே..! " என்ன கவிதா, என்ன லுக்.. ..?! லுக் சரியா இல்லையே... " சொல்றத சொல்லிட்டேன். .ஏதாவது கொடுத்து வைக்காதீங்க அப்புறம் பிரச்சனைன்னு வந்து நிக்காதீங்க. .சரிங்களா? என்றார்
திரும்பவும் நானும். .அதே லுக்'ஐ விட்டவுடன்.. சுந்தரை பார்த்து.... "நீங்க பாத்துக்கோங்க. .". என்று எனக்கு காவலாக சுந்தரை நியமித்துவிட்டார்.. பிறகு என்னை முறைத்து பார்த்துவிட்டு ஏரியாவை விட்டு சென்றுவிட்டார்.
சரி ஸ்டார்ட் த மீயூஸிக்க் னு... முதலில் பப்ளிக் சேட்'டில் தேடி கிடைத்த நண்பர் இலியாஸ்.. என்ற ஒரு இஸ்லாமிய மாணவர். 11 ஆம் வகுப்பு படிக்கும் இவர் இருந்தது பாகிஸ்தான். இவர் தான் என் முதல் ஆன்(ண்) லைன் நண்பர். ரொம்பவும் நன்றாக என்னிடம் பேசினார். இவரை பற்றி முழுசாக சொல்லும் முன் "கிங் ஆஃப் சென்னை" என்பவரை பார்ப்போம்.
அந்த பப்ளிக் சாட் பாக்ஸில் என்னுடைய கவனத்தை ஈர்த்த மற்றொரு பெயர் "கிங் ஆஃப் சென்னை" அவருடைய போட்டோ வேறு இருந்தது. அதை பார்த்தபிறகு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. அவரை என் லிஸ்ட் ல் சேர்த்துவிட்டு பேச ஆரம்பித்தேன்..
"டேய் நீ எந்த ஊரு... "
"அடிங்..!! யாருடா நீ ?!! பொம்பல பேர்ல பேசற "
"டேய் நீ எந்த ஊருன்னு கேட்டேன்... "
"டேய் நீ யாருன்னு முதல்ல சொல்லுடா.."
"கவிதா' னு ஐடி ல இருந்து பேசறேன்.. திருப்பி திருப்பி டேய் ன்னு சொல்ற.. சரி.. முதல்ல உன் ஸ்டேடஸ் மேஸேஜ் ஐ தூக்கு எனக்கு பிடிக்கல... "
" என்ன மெசேஜ் ? "
" கிங் ஆஃப் சென்னை !!" உன் முகரகட்டைய பாத்தேன்... நீ கிங் ஆஃப் சென்னையா? ஒனக்கே கொஞ்சம்ம் ஓவரா தெரியலா.. எடுடா முதல்ல.. மவனே நீ மட்டும் எடுக்கல.. உனக்கு என் கையல தான் டா சாவு........"
" ஹேய் யாரு நீ.. பொண்ணுங்க எல்லாம் இப்படி பேசமாட்டாங்க. .நீ கண்டிப்பா ஆம்பளை தான்.. சொல்லு.. யாரூ நீ.. டேய்.. குமார் !! நீதானே.. ?!! ""
" அடச்சே இவனோட என்ன பெரிய இம்சையா இருக்கு.. ஸ்டேடஸ் மெசேஜ் தூக்கபோறியா இல்லையா இப்ப?
" முடியாது... என்ன பண்ணவ... "
"ம்ம். உன் ஃபோன் நம்பர் கொடு.. அப்புறம் பாரு என்ன செய்யறேன் ன்னு"
" xxxxx xxxxx , போன் பண்ணு பாக்கலாம்... "
" டேய் நான் யாருன்னு தெரியுமா உனக்கு?
"அதைத்தானே கேக்கறேன் நீ யாரு? "
"நான் தான் டா.. "குயின் ஆஃப் ஆப் சென்னை"... அதனால தான் நீ கிங் ஆஃப் சென்னனயா இருக்கறது எனக்கு பிடிக்கல... முதல்ல தூக்கு. .இல்ல நிஜமா என்கிட்ட வாங்கிக்கட்டுவ.........."
" என்னது குயினா...?
"ஏன் உன் மூஞ்சிக்கு நீ கிங் ஆ இருக்கும் போது நான் என் மூஞ்சிக்கு குயின் ஆ இருக்கக்கூடாதா? "
"டேய் குமார்..... ஏண்டா.. என்னடா பிரச்சன உனக்கு.... ஏண்டா இப்படி பொண்ணுங்க பேர்ல லாம் வந்து கலாய்க்கற.. "
"டேய் லூசு, உனக்கு எத்தனை வாட்டி சொல்றது.. .நான் கவிதா... ன்னு.. அறிவில்ல.. எருமையா நீ..? புத்தி இல்ல.. ? நீயெல்லாம் கிங் ஆஃப் சென்னையா டா? முதல்ல ஸ்டேடஸை தூக்கு... இல்ல மேட்டர் ஆபிஸ் வரைக்கும் வரும்.... உங்க மேனேஜர் கிட்ட நீ சேட் பண்ற விஷயத்தை போட்டுக்கொடுத்து வேலைய விட்டு தூக்குவேன்.... தூக்குடா சீக்கிரம்.... "
" டேய் குமார்... ஏண்டா... "
" ஹ்ய்யோ.....எவண்டா அது குமாரு. உன்னை மாதிரி அவன் ஒரு வெட்டியா? இவனுக்கு என்ன சொன்னாலும் புரியமாட்டேங்குதே...
"சரி அப்ப உன் ஃபோன் நம்பர் குடு... நீ கவிதா வான்னு நான் செக் பண்ணனும்.. :"
" ஓ அவ்வளவு தானே... இந்தா.... x x x x x x x "
" ஆபிஸ் நம்பரா... "
"ஆமாம்.. சீக்கிரம் பண்ணு.. ஆனா ஸ்டேடஸ் மெஸேஜ் தூக்கு அதுவரைக்கும் உன்னை விடமாட்டேன் நானு..."
டிரிங்.. .டிரிங்....டிரிங்...
(அட கடவுளே போன் வருதே.... அவசரமாக சுந்தரை பார்த்து சுந்தர் இப்ப ஒரு லூசு போன் பண்ணுவான்.. கவிதான்னு இருக்காங்களான்ன்னு கேட்ட்டா இல்லைன்னு சொல்லுங்க.... சரியா... , சுந்தர்... அமைதியாக. ."சரி... " என்றார் )
"ஏங்க அங்க கவிதான்னு யாருமே இல்லைன்னு சொல்றாங்க... "
"ஆமாண்டா லூசு.. யாராச்சும் உண்மையான பேரை நம்பரை கொடுப்பாங்களாடா?..அறிவில்லாத முண்டமே..? நம்பர் கொடுத்தவுடனே. " பல் இளிச்சிக்கிட்டு போன் பண்ணிட்டியா.. ? பாத்துடா யார் கிட்டயாவது அடி வாங்கி தொலைக்க போற... " சரி ஸ்டேடஸ் மேசேஜ் தூக்கு... "
" ஏங்க நீங்க யாருங்க..."
"நான் தான் குயின் ஆஃப் சென்னை.. " இதை உனக்கு எத்தனை வாட்டிடா சொல்றது.? .ஏண்டாஆ.. எனக்கு இல்லாத பொறுமைய சோதிக்கற.. " சரி.. நீ ஸ்டேடஸ் மாத்து நானும் நீயும் பிரண்டஸ் ஆ இருக்கலாம்.. ஒகே? "
"................................. அப்ப நீங்க நிஜமா பொண்ணுத்தானே.. "
"அட லூசு பயலே................... குயின் ஆஃப் சென்னை , குயின் ஆஃப் சென்னை ன்னு காட்டு கத்து கத்திக்கிட்டு இருக்கேன்...: பொண்ணான்னு திருப்பி திருப்பி கேக்கற..."
"ஏங்க எந்த பொண்ணும் இப்படி பேசமாட்டாங்கன்ங்க.... "
"அதான் நான் பேசறேன் இல்ல.அப்புறம் என்ன.? .சரி ஸ்டேடஸ் மெசேஜ் மாத்தினியா.. .."
"..............சரி எடுத்திட்டேன்.. உங்க உண்மையான போன் நம்பர் கொடுங்க..."
"..அப்ப கொடுத்தேனே... அது தான் என் உண்மையான நம்பர்... "
"..........................."
************
பீட்டர் தாத்ஸ் : “The Internet: Transforming Society and Shaping the Future Through Chat”
54 - பார்வையிட்டவர்கள்:
அடங்க மாட்டீங்க போல!
இதுல பாகங்கள் வேற வருதா
சரி சரி
நல்ல விடயம் தான்
அடங்க மாட்டீங்க போல!
//
:))) அடங்கிட்டாலும்.. !!
சரி சொல்லுங்க.. அடக்கம் என்பது என்ன?
@ ஜம்மு.. இலியாஸ் பற்றி எழுதுவேன் இல்லையா அப்ப சொல்லுங்க நல்ல விஷயமா கெட்ட விஷயமா என்று.. :)))
//அடக்கம் என்பது என்ன?//
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்!
//சரி சொல்லுங்க.. அடக்கம் என்பது என்ன?//
ஆஹா! வெண்ணிற ஆடை மூர்த்தி மாதிரி ஆயிட்டாங்களே!
நாம சொன்ன வார்த்தைலேர்ந்தே கேள்வி கேக்குறது!
ஹைய்யா! நாந்தான் ஃபர்ஷ்ட்டு!
//@ ஜம்மு.. இலியாஸ் பற்றி எழுதுவேன் இல்லையா அப்ப சொல்லுங்க நல்ல விஷயமா கெட்ட விஷயமா என்று.. :)))//
இந்த பீடிகை வேறயா?
என்ன கொடுமைங்க தம்பி ஜமால் இது!
இது அணில் குட்டி எழுதுற தொடரா?
\\கவிதா | Kavitha said...
@ ஜம்மு.. இலியாஸ் பற்றி எழுதுவேன் இல்லையா அப்ப சொல்லுங்க நல்ல விஷயமா கெட்ட விஷயமா என்று.. :)))\\
அது யாருங்க.
\\கவிதா | Kavitha said...
@ ஜம்மு.. இலியாஸ் பற்றி எழுதுவேன் இல்லையா அப்ப சொல்லுங்க நல்ல விஷயமா கெட்ட விஷயமா என்று.. :)))\\
அது யாருங்க.
//
ம்ஹிம் அப்ப பதிவை படிக்காமேயே கமென்ட் போட்டுட்டு போயிருக்கீங்க ...
//அடக்கம் என்பது என்ன?//
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்!
//
இதிலிருந்து நீங்கள் சொல்லவருவதை பதிவுடன் சம்பந்த படுத்தி விளக்கவும்.. :))
இது அணில் குட்டி எழுதுற தொடரா?//
ம்ம்ம்ம்ம் ...
\\
ம்ஹிம் அப்ப பதிவை படிக்காமேயே கமென்ட் போட்டுட்டு போயிருக்கீங்க ...\\
ஆம்! அப்ப படிக்கலை
அது தலைப்புக்கு மட்டுமே அடித்த கமெண்ட்
இந்த பீடிகை வேறயா?
//
பீடிகை எல்லாம் இல்ல சிபி, அவருடன் பேசியது இன்றளவும் என்னால் மறக்கமுடியாத ஒரு விஷயம்.. தேவையற்ற தொடர்பு என்று சொல்லுவார்கள் இல்லையா அப்படி ஒன்று இது.. :)
நல்ல விடயம் என்று சொன்னது ஆன் லைன் நண்பர்கள் பற்றிய பதிவுக்கு
அது இல்யாஸா இருந்தா மட்டும் என் கருத்தை மாத்திகிடுவேன்னு நீங்க நினைச்சி இருந்தா ...
என்ன சொல்ல
(மத்தவங்க புரிஞ்சிக்கிற மாதிரி இன்னும் எனக்கு நடந்துக்க தெரியலை)
@ ஜம்மு, மனம் புண்படியாக என் பதில் இருந்தால் மன்னிக்கனும்.. இலியாஸ் என்ற பெயரை வைத்து அந்த பதிலை சொன்னதாக நினைக்கவேண்டாம்.
அது ஒரு ரமேஷ், ராமு , சுரேஷ், குப்புசாமி யாக இருந்தாலும் அப்படியே சொல்லியிருப்பேன்..
மதம் சார்ந்து கண்டிப்பாக நான் எழுதவில்லை... இனிமேல் எழுதபோவதையும் அப்படியே எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்... :)
:)
ஹா ஹா ஹா
அதெல்லாம் இல்லைங்க
நீங்க என்ன எழுதினாலும் நான் உண்மையான கருத்தை சொல்வேன்.
(நான் முதல் கருத்து உங்க பகுதிக்கு இட்டு - நீங்க கேட்ட முதல் கேள்வி இன்றும் ஞாபகம் உள்ளது)
//இதிலிருந்து நீங்கள் சொல்லவருவதை பதிவுடன் சம்பந்த படுத்தி விளக்கவும்.. :))//
நீங்கள் எழுதியிருந்த இப்பதிவில் அடங்கமாட்டிங்க என்ற பின்னூட்டம் இடப்பட்டது!
அடக்கம் என்பதன் பொருள் என்னவென்று கேட்டதால்
"அடக்கம்" என்ற வார்த்தையில் தொடங்கும் குறள் பின்னூட்டமாக இடப்பட்டது!
இப்போது பதிவோடு சேர்த்து விளக்கி விட்டேன் என்று நினைக்கிறேன்!
குறளின் பொருள் என்னவென்று உரை வாங்கி படிக்கவும்!
நமக்கு அவ்ளோ ஞானம் எல்லாம் இல்லைங்க!
//
நீங்க என்ன எழுதினாலும் நான் உண்மையான கருத்தை சொல்வேன்.//
ஆமாம்! அவர் உண்மையான கருத்தைத்தான் சொல்வார் என்று நான் சான்றளிக்கிறேன்!
(உங்க சான்று எனக்குத் தேவை இல்லைன்னு கவிதா சொல்லுவாங்க, நெவர் மைண்ட், ஜமால் அப்படி சொல்ல மாட்டார்)
//தேவையற்ற தொடர்பு //
இதையெல்லாம் உங்களால பகுத்தறிய முடிகிறதா?
அது சரி! நீங்களாவே தொடர்பு கொண்டு பேசிட்டு, அப்புறம்... தேவை இல்லாதது, தேவையானதுன்னெல்லாம் எப்படி சொல்றீங்க?
சொ.செ.சூ?
//(உங்க சான்று எனக்குத் தேவை இல்லைன்னு கவிதா சொல்லுவாங்க, நெவர் மைண்ட், ஜமால் அப்படி சொல்ல மாட்டார்)//
அப்பாடா! இன்னிக்கு வந்த வேலை முடிஞ்சது!
//(உங்க சான்று எனக்குத் தேவை இல்லைன்னு கவிதா சொல்லுவாங்க, //
சிபி தயவுசெய்து என்னுடைய வார்த்தைகளாக நீங்கள் மாறவேண்டாமே... அது சரியில்லை..
//சிபி தயவுசெய்து என்னுடைய வார்த்தைகளாக நீங்கள் மாறவேண்டாமே... அது சரியில்லை..//
:)
அப்படியே ஆகட்டும்!
அது சரி! நீங்களாவே தொடர்பு கொண்டு பேசிட்டு, அப்புறம்... தேவை இல்லாதது, தேவையானதுன்னெல்லாம் எப்படி சொல்றீங்க?
//
கடவுளே.. சிபியை என்ன செய்வது..?
தொடர்பு ஏற்படும் போதே அவர் எப்படிப்பட்டவர் என்பது நமக்கு தெரியாது.. பேச பேசத்தான் தெரியும்..
அந்த பகுதியை எழுதும் வரை பொறுமையுடன் இருங்கள்.. சரியா
//சிபி தயவுசெய்து என்னுடைய வார்த்தைகளாக நீங்கள் மாறவேண்டாமே... அது சரியில்லை..//
ஆனால் ஜமாலின் வார்த்தைகளாக நான் மாறுவதை ஜமால் ஒருபோதும் ஆட்சேபிக்க மாட்டார்!
(அப்படின்னு நினைக்கிறேன்)
ஆஹா...
ஆஹா,,,,,,,,,
ஆஆஹாஆ,,,,,,,,,,,,,,,
//கடவுளே.. சிபியை என்ன செய்வது..?//
கடவுள் வந்து பதில் சொல்ல அதர் ஆப்ஷனைத் திறந்தா வெச்சிருக்கீங்க!
//அந்த பகுதியை எழுதும் வரை பொறுமையுடன் இருங்கள்.. சரியா//
அப்புறமா கும்மி அடிக்கலாம்னு சொல்றீங்க! சரி!
கடவுள் வந்து பதில் சொல்ல அதர் ஆப்ஷனைத் திறந்தா வெச்சிருக்கீங்க!
//
:)) ஐயா சாமி, ஒரிஜினல் ஐடி யிலேயே உங்க இம்சை தாங்கமுடியல.. இதுல அதர் ஆப்ஷன்வேறையா?
அப்புறமா கும்மி அடிக்கலாம்னு சொல்றீங்க! சரி!
//
:)) ஆமா சீரியாஸா எழுதினாலும், சிரிப்பா எழுதினாலும் எப்படி எழுதினாலும் கும்மி அடிக்கத்தான் போறீங்க... :) இதுல சந்தேகம் வேறையா?
\\
ஆனால் ஜமாலின் வார்த்தைகளாக நான் மாறுவதை ஜமால் ஒருபோதும் ஆட்சேபிக்க மாட்டார்!
(அப்படின்னு நினைக்கிறேன்)\\
சர்வ நிச்சியமாக ...
;-))))))
\\ஏண்டாஆ.. எனக்கு இல்லாத பொறுமைய சோதிக்கற.. " \\
ரைட்டு ;)))
சிபி,,, இனிமே ஜம்மு' க்கு சேர்த்து நீங்களே கமென்ட் போட்டுங்க...
அவருக்கு வேலை மிச்சம் :)
\\கவிதா | Kavitha said...
சிபி,,, இனிமே ஜம்மு' க்கு சேர்த்து நீங்களே கமென்ட் போட்டுங்க...
அவருக்கு வேலை மிச்சம் :)\\
இப்படி ஒரு அர்த்தம் இருக்கா ...
/சிபி,,, இனிமே ஜம்மு' க்கு சேர்த்து நீங்களே கமென்ட் போட்டுங்க...
அவருக்கு வேலை மிச்சம் :)//
அதர் ஆப்ஷன் மட்டும் குடுத்துப் பாருங்க! அவரு பேர்லயே கமெண்டு போடுவேன்!
:)
40 ஆச்சா!
அப்பாடா! மறுமொழி (லெஸ் தென் 40) லிஸ்ட்லேர்ந்து தூக்கியாச்சு!
//சிபி,,, இனிமே ஜம்மு' க்கு சேர்த்து நீங்களே கமென்ட் போட்டுங்க...
அவருக்கு வேலை மிச்சம் :)//
ஜம்முவுக்கு என்ன காஷ்மீருக்கும் சேர்த்தே கமெண்ட் போடுறேன்!
அதர் ஆப்ஷன் மட்டும் குடுத்துப் பாருங்க! அவரு பேர்லயே கமெண்டு போடுவேன்!
:)
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!! :(
@ ஜம்மு ஜாக்கறதை அவ்வளவுதான் சொல்லுவேன்.. :))
\\@ ஜம்மு ஜாக்கறதை அவ்வளவுதான் சொல்லுவேன்.. :))\\
நீங்க அதர் ஆஃப்ஷன் ஓப்பன் பன்னாதீங்க ...................
:) :)
மொத நாள் சாட்'கே இப்டினா.. ??
வருடங்கள் பல உருண்டோடின பிறகு இப்போஓஓஓஓ..??
ஆத்தி.. நெனச்சாவே சும்மா அதிருதுல்ல..
சுரேஷ், இப்ப எல்லாம் சேட் 'டறதே இல்ல... :) இது ச்சும்மா கலாய்ப்பதற்குத்தான். .கடைசி வரை அவர் எனக்கு நண்பர் ஆகவில்லை என்பது தான் உண்மை :))
ஒரு நல்ல நாளில் சுந்தரிடம் செமத்தியாக திட்டு வாங்கி அப்புறம் பேசுவதையே நிறுத்திவிட்டேன்.. :))
அதுவுமில்லாமல் எல்லோரிடமும் இப்படி பேசுவதில்லை..
//\\@ ஜம்மு ஜாக்கறதை அவ்வளவுதான் சொல்லுவேன்.. :))\\
நீங்க அதர் ஆஃப்ஷன் ஓப்பன் பன்னாதீங்க ...................//
ஆமா! தயவுசெஞ்சி ஓப்பன் பண்ணாதீங்க!
எங்க சிபி அண்ணாத்தே எபப்டியும் என் பேர்ல கமெண்ட் போட்டுடுவாரு, இந்த மாதிரி
//ஆமா! தயவுசெஞ்சி ஓப்பன் பண்ணாதீங்க!
எங்க சிபி அண்ணாத்தே எபப்டியும் என் பேர்ல கமெண்ட் போட்டுடுவாரு, இந்த மாதிரி//
ஆமாம்! பார்த்தீங்கள்ள!
//
அதுவுமில்லாமல் எல்லோரிடமும் இப்படி பேசுவதில்லை..
//
ஊரில் உங்களைவிட உஷாரானவர்கள் அதிகமாகிவிட்டர்களா?
இது தொடரா?அய்யய்யோ........ கதையல்ல நிஜம், குற்றம் நடந்தது என்ன? இந்த நிகழ்ச்சியில் எல்லாம் வரமாதிரி அடுத்து வருவதுனு ஒரு ப்ரிவியு போட்டிருக்கலாம்
எப்படிங்க அவ்வளவு தைரியமா உண்மையான நம்பர கொடுத்தீங்க?அவ்வ்வ்
@வெயிலான், சுரேஷ், பவனேஷ் நன்றி
@ வாழவந்தான், நம்ம சுத்தி இருக்கவங்க எல்லாருமே சூப்பர் சூப்பர் அறிவாளிகள், ப்ரிவியூ எல்லாம் கொடுத்தா அவங்க இலாபரேட் செய்து பதிவாக போட்டுடுவாங்க.. அதான் கொடுக்கல... :)))
@ தமிழ்மாங்கனி - என்னவோ பயமறியாது... இருக்கிறேன்.. :)
எவ்ளோ மோசமான ஆளுங்க நீங்க? :((
இருங்க நானும் ஒரு சாட் ஹிஸ்ட்ரி பார்க்க வேண்டி இருக்கு.. பார்த்துக்கிறேன். :))
aiyo paavam antha guy.....
No other comments!! ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிரேன், அப்பாவி ஆன்களே உஷார்.
@ இவின்கோபி.. - அவன் பாவம் இல்ல நாங்க எல்லாம் பாவம் !!
@ ஷஃபி - அடடா ஒரு முடிவோட இருக்கீங்கங்களா. .இப்பத்தான் ஒரு ஒரு போஸ்டா படிக்கறீங்களா? ஏன்ன் இப்படி.?!! :)
ஆமாம் அம்மனி, பழைய பிலாகயெல்லாம் தூசி தட்டி வையுங்க, எப்பொ வேனும்னாலும் வந்து அட்டேக் பன்னுவோம்!!
Post a Comment